- Joined
- Jan 10, 2023
- Messages
- 93
- Thread Author
- #1
ராகவியை மருத்துவமனையில் சேர்த்தாயிற்று.. விஷயம் கேள்விப்பட்டு அவசரமாக வெளியூரிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான் சேத்தன்.. தகுந்த நேரத்தில் உதவி செய்து தாய் சேய் உயிரை காப்பாற்றி தந்திருந்த கமலியின் கைகளை பற்றி கண்ணீரோடு தன் கண்களில் ஒற்றி கொண்டான்..
மாலினியால் கமலியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவும் முடியவில்லை..
அத்தனை குற்ற உணர்ச்சி.. கூச்சம்..
அதற்கு மேல் அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாது கமலியை தனதறைக்கு அழைத்துச் சென்று விட்டான் சூர்யதேவ்..
முதலுதவி செய்து அடிப்பட்ட இரண்டு கைகளிலும் அவளே மருந்து போட்டு விட்டாள்..
காயம் பட்ட கரங்களை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தவள்.. பலத்த சோர்வோடு அவன் நெஞ்சில் சாய்ந்து விழுந்த போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது..
பதறிப் போனான் சூரியதேவ்..
"கமலி.. கமலி என்னடா ஆச்சு.." என்ற கேள்விக்கு அவளிடமிருந்து பதில் இல்லை..
முதுகோடு சேர்த்து அணைத்துக் கொள்ள முயன்ற போது.. "அம்மாஆஆ.." என்று தேகம் அதிர்ந்து ஈனஸ்வரத்தில் முனங்கினாள்..
ஐயோ கடவுளே.. ராகவியை கட்டையால் அடிக்க வந்த போது அந்த அடியை கமலி தாங்கிக்கொண்டதை எப்படி மறந்து போனேன்.. வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்து வெளிப்பட்டதே..!
மெதுவாக அவள் சுடிதார் சிப்பை பின்புறமாக திறந்து அடிப்பட்ட இடத்தை ஆராய்ந்தான்..
மேற்புறத்தோல் வீக்கத்தோடு கன்றி சிவந்து போயிருந்தது.. அடிப்பட்ட இடத்தை இரு விரல்களால் வருடி கொடுக்க கமலியின் தேகம் உதறலெடுத்தது..
உள்ளே முதுகெலும்பு ஏதாவது உடைந்திருக்குமோ..! வேறு எங்கேயும் அடிபட்டு இருக்கிறதா.. பயத்தோடு பரிசோதித்தபடி அலைபேசியில் தன் மருத்துவமனைக்கு வெகு அரிதாக விசிட்டிங் செய்யும் எலும்பு முறிவு மருத்துவரை உடனடியாக அழைத்திருந்தான்..
ஸ்கேன் எக்ஸ்ரே அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.. காயம்பட்ட இடத்தில் மருந்து போடப்பட்டது.. மருத்துவமனையின் பிரத்தியேக விஐபி படுக்கையறையில் புரண்டு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் கமலி..
மருந்துகளின் வீரியத்தில் மனைவி ஆழ்ந்த உறங்குவதை சிறு நிம்மதியோடு கண்டவன் தலை குனிந்து கவிழ்ந்து படுத்திருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தான்..
"பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல சூர்ய தேவ்.. அவுட்டர் ஸ்கின்ல கொஞ்சம் பாதிப்பு.. இரண்டு நாள் மருந்து போட்டுக்கிட்டாங்கன்னா சரியா போயிடும்..! போன்(Bone) எதுவும் பிராக்சர் இல்லை.. வேற எந்த இடத்திலும் அடிபடல.. அடிபட்ட வேகத்துல வாயிலிருந்து ரத்தம் வந்திருக்கலாம்.. வேற எந்த பாதிப்பும் இல்லை.. பயந்திருப்பாங்க.. அதனால ஜுரம் வர வாய்ப்பு உண்டு.. கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க..!" எலும்பு முறிவு மருத்துவர் பயப்பட ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகுதான் போன உயிர் திரும்பி வந்ததாக உணர்ந்தான் சூர்யதேவ்..
மறுநாள் காலையில் மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்..
சொன்னது போல் அதிர்ச்சியின் விளைவாக காய்ச்சல் கண்டாள் கமலி..
சூடாக ரசம் சாதமும்.. அரிசி கஞ்சியும்.. மிதமான சூட்டில் பாலும்.. வாய் மிகுதியாக கசந்து போகும் நேரத்தில் டோஸ்டிங் செய்த பிரட் துண்டுகளும்.. வேளா வேளைக்கு புகட்டி சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகள் தந்து அருகிலிருந்து தன் மனைவியை கவனமாக பார்த்துக் கொண்டான் சூர்ய தேவ்..
"என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்..!"
"ஷட்டப்.. இந்த டேப்லெட்டை போட்டுகிட்டு நிம்மதியா படுத்து தூங்கு.. அது மட்டும் தான் உன்னோட வேலை..!" தண்ணீர் குவளையோடு மாத்திரைகளை அவள் கையில் தந்தான்..
எதிர்பாராத அதிர்ச்சியும் காய்ச்சலும் அவள் தேக சத்துக்களை உறிஞ்சி எடுத்திருக்க.. நடப்பதற்கும் கூட சற்று சிரமப்பட்டாள்..
"பாத்ரூம் போகணும்னா நான் தூங்கிட்டா கூட என்னை எழுப்பு.. தனியாக போக வேண்டாம்..!" திட்டவட்டமாக அழுத்தி சொல்லி இருந்தான் சூர்யதேவ்..
ஒவ்வொரு முறையும் கைத்தங்கலாக அவளை பாத்ரூம் வரை அழைத்துச் சென்றான்..
"தூக்கிட்டு போக மாட்டீங்களா..?" மூக்கை சுருக்கி அவள் கேட்கும்போது மெலிதாக சிரிப்பான்..
"தூக்கிட்டு போனா ரொமான்டிக்கா இருக்கும்.. ஆனா நீ கொஞ்சமாவது நடந்து பழகனுமே..! இந்த நேரத்துல உன்னால சகஜமா எழுந்து நடமாட முடியாது.. சாப்பாடு மருந்தும் உள்ள போய் வேலை செய்யணும்னா.. இப்படி எழுந்து நடப்பதற்கான ரெண்டு மூணு வாய்ப்பையாவது நீ பயன்படுத்திக்கணும்.."
பாத்ரூம் கதவோரத்தில் கைகட்டி நின்று அவன் பாடம் எடுத்துக் கொண்டிருக்க..
"தெரியாம கேட்டுட்டேன் சாமி.." என்று சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வெளியே வந்தாள் கமலி..
சிரித்துக் கொண்டே அவளை கையிலேந்தி கொண்டான் சூர்யதேவ்..
"தூக்கிக்க மாட்டேன் என்று சொன்னீங்க..!"
நடக்கனும்னு சொன்னேன்.. தூக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே..! என்றவன் அவளை கையிலேந்தி கொண்டு அந்த அறையை ஒருமுறை சுற்றி வந்து பிறகு அவள் குலுங்கி சிரிப்பதை கண்ட திருப்தியோடு கட்டிலில் படுக்க வைத்து நெற்றியில் முத்தமிட்டு.. முகத்திற்கு நெருக்கமாய் குனிந்து நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
"இப்படியே படுத்துகிட்டே இருந்தா நோய் சரியாகாது.. நாளையிலிருந்து நான் ஏதாவது வீட்டு வேலை செய்யும்போது.."
"நானும் வேலை செய்யணுமா..?"
"என் பக்கத்துல வந்து நின்னா போதும்.. நீ இல்லாம போர் அடிக்குதுடி.." மூக்கை சுருக்கி கண்சிமிட்டினான்..
கமலிக்கு எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்கள் கலங்கி போனது..
ஓய்ந்து விழும் இந்நேரத்தில்தான் ஒரு மனைவி.. கணவன் தன் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்..
இந்த வாழ்க்கை பாடம் அக்காலத்தில் தெரியவில்லை..
அஷோக்கோடு வாழ்ந்த நாட்களில்.. கமலி தான் அவனை தாய்க்கு தாயாக.. தன் குழந்தையாக அக்கறையாக பார்த்துக் கொண்டாள்.. அவன் அக்கறையெல்லாம் வார்த்தைகளில் மட்டும்தான்..
"மருந்து சாப்பிடு கமலி.. டேக் கேர்.. நீ ஆரோக்கியமா இருந்தாதான் என்னை கவனிச்சுக்க முடியும்.. அடிக்கடி இப்படி காய்ச்சல்ன்னு படுத்துக்கிட்டா மனசு கஷ்டமா இருக்குது இல்ல.. இந்த நேரத்துல உன் கூட இருக்கணும்னு ஆசைதான் ஆனா வேலை இருக்குதே..! எனக்கும் காய்ச்சல் வந்துட்டா ஆடிட்டிங் வேலை எல்லாம் அப்படியே நின்னு போயிடும்.." தலைவருடி கொடுத்து அவள் ஏக்கத்தை சரி கட்டுவான்..
அப்போது புரியவில்லை.. அது போலி பாசம் என்று..! யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றின் உள்ளர்த்தங்களும் இப்போது விளங்குகிறது..
கமலி எது பெஸ்ட் என்று ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை.. ஆனால் கண்மூடித்தனமான காதலில் மூழ்கி அவன் உண்மை முகத்தை புரிந்து கொள்ளாமல் போனோமே என்று விளங்கிக் கொண்ட யதார்த்தம் அவ்வப்போது மனதில் அறைந்து சொல்கிறது..
அவளை அணைத்த படி பக்கத்தில் படுத்துக்கொண்டான் சூர்ய தேவ்..
"தள்ளிப் போங்க சூர்யா.. என் காய்ச்சல் உங்களுக்கு வந்துட போகுது..!"
"வந்தா வந்துட்டு போகட்டும்.. உன்னை கட்டிப்பிடிச்சு படுக்கலைன்னாலும் என்னுடைய இம்மியூன் சிஸ்டம் வீக்கா இருந்தா கண்டிப்பா காய்ச்சல் வந்தே தீரும்.. காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் பயந்து என் பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க முடியாது.."
"ஐயோ நான் அதுக்காக சொல்லல.. நீங்க பேஷண்ட்ஸ் பாக்கணும்.. உங்களால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது..! சில விஷயங்கள்ல நம்ம அவேர்னஸ்ஸா இருக்க வேண்டியது அவசியம்னு நீங்கதானே சொல்லி இருக்கீங்க..!" அவன் பக்கம் திரும்பாமல் முதுகு காட்டி படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் கமலி..
"என்னடி பேசுற.. நான் எமர்ஜென்சி கேஸ் மட்டும்தான் அட்டென்ட் பண்றேன்.. ஒருவேளை போக வேண்டிய அவசியம் வந்தாலும் அப்படியே எழுந்து ஹாஸ்பிடல் போக போறதில்ல.. குளிச்சிட்டுதான் கிளம்ப போறேன்.. அதோட பேஷன்ட்ஸ் கிட்ட போகும்போது அதுக்கான பிரிகாஷன்ஸ் எடுக்காம அவங்களை நெருங்க போறதில்ல..!
நாங்களும் கொஞ்சம் யோசிப்போம் மேடம்.. அதனால கண்டதையும் மூளைக்குள்ள போட்டு குடையாம திரும்பி என் முகத்தை கொஞ்சம் பாருங்க.." என்று அவள் தோள் பற்றி தன் பக்கம் திருப்பிக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்..
"உடம்பு சரி ஆகற வரைக்கும் தான் என் நெஞ்சில் இடம் கொடுப்பேன்.." சூர்ய தேவ் சொன்னதில் கமலியின் முகம் மாறியது..
"அப்புறம் என்ன செய்வாராம்.. தள்ளி விட்டுடுவாரா..?"
"அப்புறம் நீ தான் என்னை நெஞ்சில் தாங்கிக்கணும்..! என் இடத்தில் படுத்து எவ்வளவு நாளாச்சு.. உடம்பு சரியில்லாத பிள்ளையை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன்..!" கழுத்திலிருந்து அவள் மார்பு வரை மென்மையாக வருடியபடி சொல்லவும்.. கோபத்தில் சுருங்கியிருந்த கமலியின் முகம் மலர்ந்து இதழில் அடக்க முடியாத புன்னகை தேங்கி நின்றது..
நெருங்கி அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு தோள் பட்டையில் அழுத்தமாக கடித்து வைத்து.. தன் இருப்பிடம் இதுதான் என அங்கேயே முகத்தை புதைத்துக் கொண்டாள் கமலி..
அடுத்த மூன்று நாட்களில்.. கணவனின் அன்பான கவனிப்பில் பூரண குணமடைந்திருந்தாள்.. முதுகில் காயமும் முழுமையாக ஆறியிருந்தது.. மீண்டும் பணிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்..
பூரிப்போடு அடிக்கடி கண்கள் சுருக்கி சிரிக்கும் அவள் முகத்தை கண்டதும் உள்ளத்தில் ஒதுங்கியிருந்த உணர்ச்சிகள் மீண்டும் விழித்துக் கொண்டன அவனுக்கு..
உடல்நிலை குறைவு.. மருந்து மாத்திரைகளின் விளைவால் சற்று முன்பாகவே வந்து விட்ட மாதவிடாய்.. என மொத்தமாக பத்து நாட்கள் கடும் பசியிலும் பட்டினியிலும் தவித்தவன்.. ஆரோக்கியமாக மீண்டெழுந்து துள்ளி குதித்து ஓடிக்கொண்டிருக்கும் மனைவியை கண்டதும் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டான்..
கமலி தினமும் பணிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் சூர்ய தேவ்.. காலை ஒன்பது மணியிலிருந்து இரவு மாலை 6:00 மணி வரை அவளுக்காக வெயிட்டிங் டியூட்டி பார்த்தான்..
அதற்கு முன்பான காலகட்டங்களில் காலையும் மாலையும் ஒரு மணி நேரம் மருத்துவமனை வந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு ஒரு முறை ரவுண்ட்ஸ் சென்று நோயாளிகளை விசாரித்துவிட்டு.. அவர்கள் மெடிக்கல் ரிப்போர்ட் சரி பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று அந்த இருட்டு குகைக்குள் அடைந்து கொள்வான்..
அல்லது வாசலில் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தடிமனான புத்தகம் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பான்.. அத்தோடு சேர்த்து எமர்ஜென்சி கேஸ் மற்றவர்களால் கையாள முடியவில்லை என்ற சூழ்நிலையில் மட்டும் தயாராகி புறப்பட்டு மருத்துவமனை செல்வது வழக்கம்..
இப்போது சராசரி ஊழியன் போல் எட்டு மணி நேரம் மருத்துவமனையில் தவம் கிடப்பது கமலிக்காக மட்டும்தான்..
அவள் இல்லாமல் அந்த வீட்டிற்குள் நுழைய முடிவதில்லை.. கிளாஸ்ட்ரோஃபோபிக்(claustrophobic) பேஷன்ட் போல் மூச்சு முட்டுகிறது..
இன்று மாலை ஆறு மணிக்கு டியூட்டி முடிய 5.55 க்கெல்லாம் பார்க்கிங் வந்து காரை எடுத்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான்..
அவஸ்தை புரியாமல் தோழிகளோடு பேசிவிட்டு.. ஆற அமர நிதானமாக வந்து சேர்ந்தாள் அவன் மனைவி..
அதிலும் அவன் காரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வருபவள் இன்று சோதிப்பதற்காகவே பொறுமையாக நடந்து வந்ததில் பற்களை கடித்து அமைதி காத்தான் சூர்யதேவ்..
காருக்குள் ஏறிய அடுத்த கணம்.. "எவ்வளவு நேரம் வெயிட் பண்றது சீக்கிரமா வர்றதுக்கு என்ன கேடு உனக்கு.." பற்களை கடித்துக் கொண்டு அடி குரலில் மிரட்ட.. சிரித்த முகத்தோடு வந்தவள்.. வாடிப் போய்விட்டாள்..
காரை எங்கும் நிறுத்தாமல் அதிவேகத்தில் வீட்டை நோக்கி செலுத்தினான் சூர்யதேவ்..
"பயங்கர கோபமா இருக்காரு போலிருக்கே.. அப்படி என்ன செஞ்சுட்டேன் நான்.. கேட்கவே முடியாதே..! சிரிச்சா தான் குழந்தை.. கோபமா இருக்கும்போது அப்படியே அரக்கன் தான்.." மனதுக்குள் புலம்பிக்கொண்டே ஏக்கமாக அவன் முகம் பார்ப்பதும் மறுபக்கம் திரும்புவதுமாக இருந்தாள் கமலி..
கேட் வாசலில் நின்று கொண்டு அவன் அடித்த ஹாரனில் செக்யூரிட்டி மூர்த்தியின் காது சவ்வு கிழிந்து போயிருக்கும்..
"ஐயோ ரெண்டு செகண்ட் கூட ஆகலையே அதுக்குள்ள ஐயாவுக்கு என்ன கோபம்.." நெஞ்சை பிடித்துக் கொண்டு கதவை திறந்தார் செக்யூரிட்டி..
காரை விட்டு இறங்கியவன் தனக்கு முன்னால் நடந்தவளை தள்ளிக் கொண்டும்.. இடித்துக் கொண்டும் வீட்டை நோக்கி சென்றான்..
டி நகர் ரங்கநாதன் தெருவில் நடந்து செல்கையில் அலைமோதும் கூட்டமே அந்தந்த கடை வாசலில் நம்மை ட்ராப் செய்வது போல்.. முன்னோக்கி தள்ளி வந்து அவளை கதவருகே சேர்த்திருந்தவன்.. சட்டென்று அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக முத்தமிட்டான்..
அதிர்ந்து போனவளாக நிமிர்ந்து பார்த்தாள் கமலி..
வெளியில் இருந்து யார் பார்த்தாலும் தெரியாத படிக்கு அவன் பரந்த மார்புக்குள் அடக்கமாக பதுங்கி இருந்தாள்..
நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கன்னங்களில் உதடுகளில் முத்தங்கள் சராமாரியாக விழுந்து கொண்டிருந்தன.. அவன் வேக மூச்சுகளையெல்லாம் கமலியின் பின்கழுத்து வாங்கிக் கொண்டு திணறிப் போனது..
கதவின் துவாரத்தில் சாவியை சரியாக நுழைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவன்.. கிறங்கிய போதை விழிகளோடு ஆர்வமாக கமலியின் உதடுகளை துரத்திக் கொண்டிருந்தான்.. முகத்தை அங்குமிங்குமாக நகர்த்திக் கன்னத்திலும் கழுத்திலும் கடி வாங்கினாள் கமலி..
சூரிய தேவ் கதவை திறப்பதாக தெரியவில்லை.. அவன் கையிலிருந்த சாவியை பிடுங்கி கதவை திறக்க முயற்சித்தாள்..
நல்லதாக போயிற்று என்று அவள் இடுப்பில் கை கொடுத்து இறுக்கிப் பிடித்தவன் காது மடலை உதடுகளால் கவ்வி பிடித்தான்..
இப்போது கமலியால் கதவை திறக்க முடியவில்லை.. கன்னங்களில் படர்ந்த உஷ்ணமும் சிவப்பும் செவி மடலை நோக்கி பாய்ந்திருந்தது..
"சூ.. சூர்யா.. பிளீஸ்.. !" கமலி நெளிந்தாள்..
"கதவைத் திறடி சீக்கிரம்.." அவன் குரல் கர்ஜித்தது..
ஒரு வழியாக கதவை திறந்தாயிற்று.. முதுகில் அவன் அழுத்திக் கொண்டிருந்ததில் உள்நோக்கி கதவு திறக்கப்பட்டதும் முன்பக்கமாக விழப்போனவளை வயிற்றோடு தாங்கி பிடித்து அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் சூர்யா..
கதவை சாத்திவிட்டு வருவதற்குள் அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்து.. ஜன்னல் திரையை திறக்க.. ஆயாசமாக கண்களை மூடி திறந்தவன்.. விளக்குகளை அணைத்துவிட்டு ஜன்னல் திரையை மூடிவிட்டு அவள் பக்கம் வந்தான்..
பின்னோக்கி நகர்ந்தாள் கமலி..
"இப்ப ஏன் லைட்டை எல்லாம் ஆஃப் பண்றீங்க..! உங்க பார்வையே சரியில்லையே.."
"மேல்நோக்கு பார்வையாக இருந்தா எப்படி..? கொஞ்சம் கீழேயும் பார்க்கணும்.." அவன் விஷம பேச்சில் கீழே பார்த்துவிட்டு அதிர்ந்தாள் கமலி..
"என்னது..!"
"என் கண்ணை மட்டும் பாக்க தெரிஞ்ச உனக்கு என் இதயத்துடிப்பை உணர தெரியலையே..! பார் கமலி கமலின்னு உன் பேர் சொல்லி தான் துடிக்குது.." நெஞ்சை தொட்டுக் காட்டினான்..
"ஓஹோ.. அதைத்தான் சொன்னீங்களா?" சுவற்றில் மோதி நின்றாள் கமலி..
"நீ வேற எதை நினைச்ச..!" அவள் தேகத்தோடு ஒட்டி நின்றான் சூர்யதேவ்..
"நான் எதையும் நினைக்கல..!" என்பதற்குள் பட்டும் படாமலும் ஒரு முத்தம் அவள் உதட்டில் விழுந்தது.. இரண்டு கைகளையும் மேல் நோக்கி தூக்கிப் பிடித்து.. மீண்டும் அவள் உதடுகளை சிறையெடுத்து அழுத்தமாக முத்தமிட்டு கொண்டிருந்தான்..
கிடைத்த இடைவெளியில்.. "இப்ப நான் உங்க நெஞ்சில கை வச்சு தள்ளறதே இல்லை ஆனாலும்.. இப்படி இரண்டு கையையும் அரெஸ்ட் பண்றது சரியே இல்லை.." என்றாள் கமலி உதடுகளை குவித்து..
குவிந்த உதடுகளை தனக்குள் எடுத்துக்கொண்டு முத்தமிட்டவன்.. "பழகிப்போச்சுடி மாத்திக்க முடியல.." என்றபடி தன் இன்னொரு கரத்தால் அவள் சுடிதார் டாப்புக்குள் கை நுழைத்து இடுப்பை வருடினான்..
"கை வலிக்குதே..!"
அவள் இரு கரங்களையும் தன் கரங்களோடு கோர்த்துக் கொண்டு கமலியின் பின்பக்கமாக வளைத்து அணைத்துக் கொண்டு முத்தமிட துவங்கியிருந்தான் சூர்யதேவ்.. ஆக மொத்தம் அவள் கைகளை விடுவதாய் இல்லை..
"நீங்க கையை அழுத்தி பிடிக்கிற விதமே எனக்கு பயமா இருக்கு.. !" அவள் மிரட்சியான கண்களில் மென்மையாக முத்தமிட்டு..
"எஸ்.. அப்படித்தான்" என்று கண்ணடித்தான்..
கமலியின் மேலாடையை.. தலைவழியாக கழற்றி எடுத்து தூக்கி வீச.. "எப்பவும் மொதல்ல உங்க ஷர்ட் தான கழட்டுவீங்க..?" கண்களை விரித்து அவள் கேட்டவிதத்தில் சில்லென்று புன்னகைத்தான்..
"ஆமா.. ஆனா அதுக்கு முன்னாடி முக்கியமான வேலைகள் கொஞ்சம் இருக்கே" உதடு கடித்து சொன்னவன்.. கமலியை சோபாவில் தள்ளி இருந்தான்..
அவள் மார்பில் முழுதாக முகத்தை புதைந்து முட்டி மோதி முன்னும் பின்னுமாக ஏறி இறங்கினான்..
தன் நெஞ்சில் முகந்தெரியாமல் கவிழ்ந்திருக்கும் போது.. அவன் அடர்ந்த கேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும் வெள்ளி முடிகள் அதிகமாய் போதையூட்டுகிறதே..!
மேலும் கீழுமாய் அவளுள் மூழ்கியிருந்த வரை தன் வஸ்திரத்தை இழக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது அவனுக்கு..
வெற்று தேகங்கள் பின்னி பிணைந்து தீப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் மனைவிக்கு கட்டளையிட்டு அவள்மூலம் தன்னை துகிலுரித்துக் கொண்டான்..
அவர்கள் வேகத்திற்கு சோபா ஒத்துழைக்காமல் போனதில் இருவருமாக கீழே உருண்டு.. டீபாயின் மீதிருந்த பூச்சாடியை கீழே தள்ளி.. ஐயோ அம்மா..ஆஆஆ.. ஊஊஊ.. சத்தங்களோடு மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் படத்தில் வரும் ஏஞ்சலினா ஜோலி.. பிராட் பிட் தம்பதியர் போல் முட்டி மோதி மோகித்து கொண்டனர்.. அதிரடியாய் சண்டை போட்டு காயப்படுத்திக் கொள்ளும் வயலன்ஸ் இல்லை.. ஒருவரை ஒருவர் வீழ்த்திக் கொள்ளும் காதல் போரில் ஆங்காங்கே அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பீங்கான் பொருட்கள் சாய்ந்து உடையத்தான் செய்தன.. அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இருவரும் இல்லை..
போர் முடிந்த பிறகுதான் சேதாரம் கண்களுக்கு தெரிந்தது.. உடைந்த பொருள் ஒவ்வொன்றையும் வாரி எடுத்து சுத்தம் செய்யும் போதும் அந்தந்த இடத்தில் அதற்கு தகுந்த சம்பவங்கள் நினைவில் வந்து போக.. வெட்கப்பட்டு உதட்டை கடித்து சில்மிஷங்களோடு.. வீட்டை சுத்தம் செய்தனர் இருவரும்..
"இனி ஹால்ல கூடவே கூடாது..! உங்களை கட்டுப்படுத்தவே முடியல.. எல்லா பொருளையும் கண்ணா பின்னான்னு உடைக்கறீங்க..!"
"இனி உடையறதுக்கு என்ன இருக்கு அதான் எல்லாத்தையும் உடைச்சிட்டோமே.. இந்த மர சாமான்களையும் எடுத்துட்டா இடைஞ்சல் இல்லாமல் தாராளமா ரெண்டு பேரும் உருளலாம்..!" என்றான் அவன்.. கமலி வெட்கம் தாளாமல் எழுந்து உள்ளே ஓடியிருக்க.. அவளைப் பின்தொடர்ந்து சென்றான் சூர்யதேவ்.. முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணமே இல்லாமல்..
தொடரும்..

Last edited: