• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 35

Member
Joined
Jul 28, 2025
Messages
35
மத்தவங்க சந்தோஷத்துல நம்மளும் மகிழ்ந்தா உனக்கும் தன்னால சந்தோஷம் கூடும்.. இங்கே தான் அது கிடையாதே.. அப்புறம் இப்படி தான் சுத்தனும்..
 
Member
Joined
Mar 14, 2023
Messages
54
தனது அறைக்குள் வந்த வெண்மதி கட்டிலின் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருக்க..

"அ..க்கா.. அக்கோவ்.. அக்காயி.." என்றொரு குரல்..

அழைப்பது யார் என்று தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் கண்ணீரைத் துடைத்தபடி முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் வெண்மதி..

"எ..க்கோவ்..!" மீண்டும் அழைத்து தலையை மட்டும் உள்ளே நீட்டி எட்டிப் பார்த்து இஇஇஇ.. சிரித்து வைத்தான் வருண்..

"அக்காச்சி உள்ள வரட்டுமா..?"

"வராத அப்படியே போயிடு.."

"அப்ப கண்டிப்பா வருவேன்.." வீரநடை போட்டு உள்ளே வந்தவன் அவள் காலடியில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டு நிமிர்ந்து அக்காவை பார்த்தான்..

"நானும் குழந்தைகளும் நாளைக்கு ஊருக்கு கிளம்பறோம்.. துணிமணியெல்லாம் பேக் பண்ணி வச்சாச்சு. அப்பா கிட்ட டிக்கெட் போட சொல்லியிருக்கேன்.. இனிமே என்னால உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது நீ சந்தோஷமா இருக்கலாம்."

அழுகையும் விசும்பலுமாக சொன்னதை கேட்டபடி காலை எடுத்து மடியில் வைத்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான் வருண்..

"அ..க்கா..! ஏதோ ஒரு கோவத்துல தெரியாம சொல்லிட்டேன் விடேன்.. அத போய் பெருசு படுத்தி ஊருக்கு கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம்.?"

"மனசுல என்ன இருக்குதோ அதுதான் கோபத்துல வார்த்தைகளா வெடிச்சு வெளிய வரும். நீ உண்மையைத்தான் சொல்லி இருக்க.. பொம்பளைங்க கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போயிட்டா பொறந்த வீடு அன்னியம்தான்.. என் தம்பி என் வீடு என் அம்மா அப்பா எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன் பாரு.. அதுதான் என் தப்பு.. இனி யாரு எப்படி போனா எனக்கென்ன வந்துச்சு. அடிச்சாலும் புடிச்சாலும் புருஷன் வீடு தான் பொம்பளைங்களுக்கு சாஸ்வதம். நான் போறேன்.. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க.." சேலை தலைப்பால் மூக்கை சிந்திக்கொண்டு விசும்பியவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.

"வெண்மதி இப்படி அழாதே மனசுக்கு கஷ்டமா இருக்கு இல்ல.!"

"அழ வெச்சவனே நீதானடா அப்புறம் ஏன் நடிக்கற.. போய் சமாதானப்படுத்துன்னு அம்மா அப்பா சொல்லி அனுப்பிச்சாங்களா.?"

"இல்ல நானேத்தான் வந்தேன்.." சிறு குழந்தை போல் அவன் முகத்தை வைத்துக்கொள்ள வெண்மதியின் மனம் கரையத்தான் செய்தது ஆனாலும் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு.

"சின்ன வயசுல அம்மா உன்னை பெத்து போட்டதோடு சரி.. தூங்காம இருந்தா தொட்டில் ஆட்டிவிட்டு தாலாட்டு பாடினதும் தூக்கி வளர்த்து சோறூட்டினதும் நான்தான்.. வளர்த்த கடா மார்ல பாயுற மாதிரி இப்ப இந்த அக்கா உனக்கு பாரமா போயிட்டேன்ல..!" மீண்டும் அழுகை..

"ஐயோ என் தெய்வமே..! நான் என்னைக்குமே உன்னை அப்படி நினைச்சதில்ல வெண்மதி. தயவுசெஞ்சு என்னை புரிஞ்சுக்கோ. என் மனசு எவ்வளவு போராட்டத்தில் இருந்திருந்தா அப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பேன். உன் மேல எனக்கு இல்லாத உரிமையா. நீயே சொல்லு இதுவரைக்கும் நான் யாரையாவது திட்டி பார்த்துருக்கியா நீ. நான் வம்பிழுத்து விளையாடுவதும் அதிக உரிமை எடுத்துக்கிட்டு பேசறதும் உன்கிட்ட மட்டும்தான்."

"அதான் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா பேசிட்டியே.. அட போடா..! இப்படியெல்லாம் பேசி ஐஸ் வைக்க வேண்டாம்." உதட்டை சுழித்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் வெண்மதி.

"சத்தியமா சொல்றேன்க்கா.. எனக்கு அம்மாவை விட உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும்."

"சும்மா கதை விடாதடா.. என்னை சமாதானப்படுத்த உன் வாய்க்கு வந்ததை அடிச்சு விடாதே..?"

"அடிப்பாவி உண்மையத்தான் சொல்றேன். சத்தியமா ஒரு பேச்சுக்குத்தான் இந்த வீட்டை விட்டு போன்னு சொன்னேன். போன வாரம் உன்னை கூட்டிட்டு போக வந்த மாமாவை வந்த ட்ரெயின்லேயே ஏத்தி திருப்பி அனுப்பினது நான்தான்.. உன் புருஷன் ஃபோன் அடிச்சு சொல்லலையா உனக்கு.?"

"என்னடா சொல்ற.. இது எப்ப நடந்துச்சு. அந்த மனுஷன் என்கிட்ட எதுவுமே சொல்லலையே..?" வெண்மதி அதிர்ச்சியாகி விழித்தாள்..

"விட்டது சனியன்.. என் பொண்டாட்டி தொல்லை.. இனி இல்லைன்னு மனுஷன் ஜாலியா இருந்திருப்பார் விடு." என்றவன் வெண்மதி கொலை வெறியோடு தன்னை முறைப்பதை கண்டு. "ஹிஹி..அப்படி இல்லக்கா.. நான்தான் அக்கா கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும்.. ஒரு வாரம் கழிச்சு பசங்கள மட்டும் கொண்டு வந்து விட சொல்றேன். உங்கள பார்த்த உடனே மனசு தாங்காம நானும் கூடவே வரேன்னு புறப்பட்டு நின்னுக்குவா.. அதனால அப்படியே போயிடுங்கன்னு திருப்பி அனுப்பிட்டேன்."

"ஏண்டா இப்படி..?"

"பின்ன.. அங்க போய் மாமனார் மாமியார் நாத்தனார்ன்னு சேவை செய்யணும். பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி புருஷன தயார் பண்ணி ஒரு நிமிஷம் கூட ஓய்வில்லாமல் உழைக்கணும். பொண்ணுங்க பொறந்த வீட்ல இருக்கற மாதிரி வேற எங்கேயும் சந்தோஷமா சுதந்திரமா இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் நீ ஓய்வெடுத்து சந்தோஷமா இருக்கணும்னுதான் அவரை திருப்பி அனுப்பிட்டேன்."

"நிஜமாவாடா சொல்ற..?"

"பின்ன.. பொய்யா..? வேணும்னா நீயே உன் புருஷனுக்கு போன் பண்ணி கேட்டுப்பார். ஏதோ கோவத்துல சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வாய்க்கு வந்தபடி பேசுற. உனக்கு மட்டும்தான் என் மேல பாசமா. எனக்கு உன் மேல அன்பில்லையா.. பாசம் இல்லையா.? மனசாட்சி இல்லாம பேசாத வெண்மதி."

"அப்படி இல்லடா இதுவரைக்கும் நீ அவ்வளவு கோவமா எடுத்தெறிஞ்சு பேசினதே இல்லை. அதனாலதான் எங்க நீ என்னை வெறுத்துட்டியோனு பயந்துட்டேன்."

"நான் உன்னை வெறுக்கறதா..? நெவர்.. நீ என்னை அடிச்சு விரட்டினாலும் மறுபடி மறுபடி உன்கிட்டதான் ஓடி வருவேன்."

தம்பியின் தலையை வருடி கொடுத்தாள் வெண்மதி.

"அப்புறம் ஏண்டா நான் சாதாரணமா ஜாலியா பேசினதை பெருசு படுத்தி அவ்வளவு கோவப்பட்ட.? மனசெல்லாம் எவ்வளவு பதறி போச்சு தெரியுமா."

"ஐயோ அக்கா உனக்கு புரியல. தேம்பாவணி ரொம்ப பாவம். ஏற்கனவே அவ வாழ்க்கையில பலமா அடிபட்டுருக்கா.." என்று ஆரம்பித்து தேம்பாவணியின் உண்மை வரலாற்றை எதையும் மறைக்காமல் வெண்மதியிடம் சொன்னான் வருண்..

வெண்மதியின் கண்களில் அதிர்ச்சியும் கண்ணீரும்.

"அடக்கடவுளே இந்த சின்ன வயசுல அந்த பொண்ணுக்கு வாழ்க்கையில இப்படி ஒரு கஷ்டமா..? யாருக்கும் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது. இவ்வளவு பிரச்சினையை மனசுல வச்சுக்கிட்டு அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கற மாதிரி நடிச்சிருக்கா பாரேன்."

"அதைத்தான் நானும் சொல்றேன்.. அவ ஏற்கனவே நொந்து போயிருக்கா.‌ அம்மா அப்பாவோட அன்பு கிடைக்காம ரொம்பவே ஏங்கிப் போயிருக்கா.. இந்த லட்சணத்துல நீயும் வேற எனக்கு அன்பு காட்ட அம்மாவும் அப்பாவும் இருக்காங்கன்னு வெறுப்பேத்தற மாதிரி நடந்து அவளை அழ வச்சா எப்படி..?"

"ஐயோ சத்தியமா எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதே.. தெரிஞ்சிருந்தா நான் ஏன்டா அப்படி செஞ்சிருக்க போறேன். நான் வேணும்னா அவகிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா வருண்.."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. விடு நான் பாத்துக்கறேன்.. நீ என்னை மட்டும் மன்னிச்சா போதும்"
அவள் மடியில் படுத்துக்கொண்டான் வருண்..

"உன்னை மன்னிக்க என்னடா இருக்கு. நீ என்ன பேசினாலும் எவ்வளவு திட்டினாலும் என் மண்டையில உரைக்காது. கொஞ்சம் கோவமா பேசினதால அழுகை வந்துருச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாத்தையும் தொடச்சு தூக்கி போட்டுட்டு நானே உன் கிட்ட வந்து பேசியிருப்பேன்."

"அடக்கடவுளே இது தெரியாம மானே தேனே பொன்மானேன்னு உன்னை வந்து சமாதானப்படுத்திக்கிட்டு இருக்கேனே. டைம் வேஸ்ட்.." என்றவனை தலையில் கொட்டினாள் வெண்மதி.

"டேய் கண்ணா. மறுபடி கோபப்பட்டு திட்டிடாத.. அக்கா கிட்ட எதையாவது மறைக்கறியாடா..? அந்த பொண்ணுக்கு ஏதாவது ஒன்னுனா இப்படி உருகறியே..! உன் பொண்டாட்டி மேல கூட இவ்வளவு பாசம் இருக்கிறதாட்டம் தெரியலையே..! எதுவானாலும் வெளிப்படையா என்கிட்ட சொல்லுடா.. மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு வெதும்பாதே.. உள்ளுக்குள்ள அழுத்தி வைக்கிற உணர்ச்சிகள் எப்பவும் மறைஞ்சு போகாது.. அது பூகம்பமா வெடிக்கும். உனக்குள்ள ஏதாவது மனக்குமுறல் இருந்தா இந்த அக்காகிட்ட கொட்டி தீர்த்திடு.."

வருண் இதமான பார்வையுடன் வெண்மதியின் கைபிடித்துக் கொண்டான்..

"இப்போதைக்கு என்னால எதுவுமே சொல்ல முடியாதுக்கா.. ஆனா நிச்சயமா ஒரு நாள் உன்கிட்ட வருவேன். என் மனசுல இருக்கிறதையெல்லாம் உன்கிட்டதான் முதல்ல சொல்லுவேன். அந்த சமயத்துல நீ தான் என்னை வழி நடத்தணும்."

வருணின் நிம்மதியற்ற விழிகளில் தவிப்பை கண்டு கலவரத்தோடு அவன் தலையை வருடி தந்தாள் வெண்மதி.

"அ.. அக்கா..!" வாசலில் தேம்பாவணியின் குரல்..

அக்கா தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள..

"உள்ள வாடியம்மா.." என்றாள் வெண்மதி தலை சாய்த்து எட்டி பார்த்து..

தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..

வெண்மதியின் காலடியில் வருண் அமர்ந்திருப்பதை கண்டு..

"ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா..? அக்கா எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான்தான்.. என் மேல உங்களுக்கு கோபம் ஒன்னும் இல்லையே." கைகோர்த்து பள்ளி மாணவி போல் தேம்பாவணி நின்ற தோரணையில் வெண்மதி சிரித்து கைநீட்டி அவளை அழைத்தாள்.

ஓடிவந்து வருணுக்கு மறுபக்கம் அவள் காலடியில் அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி.

"உன் மேல எனக்கென்ன கோபம்.. நீ என்ன தப்பு செஞ்ச..! நான்தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். இப்பதான் வருண் எல்லாத்தையும் சொன்னான். உனக்குன்னு யாரும் இல்லன்னு நினைக்காத. இது உன் குடும்பம்.. உன் வீடு. உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம். நான் ஏதாவது தப்பா பேசி உன் மனசை காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடு கண்ணம்மா." அவள் தாடையைப் பிடித்துக் கொஞ்ச.

"ஐயோ அக்கா நீங்க ஏன் மன்னிப்பு கேக்கறீங்க. நீங்க எந்த தப்பும் செய்யல. சொல்லப்போனா நீங்க உங்க அப்பாவோட கொஞ்சி பேசறது அரட்டை அடிக்கிறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க உருவத்தில் நான் என்னைத்தான் பார்த்தேன். இன்னைக்கு என்னவோ தெரியல.. கொஞ்சம் மூட் அவுட் அதனாலதான் அழுதுட்டேன். மத்தபடி உங்க மேல எந்த வருத்தமும் இல்லை.. உங்களால யாரையும் காயப்படுத்தவே முடியாது."

"எவ்ளோ அழகா பேசறா பாத்தியா..? அழும்போது கூட அப்படியே பொம்மை மாதிரியே இருக்காடா.." வெண்மதி அவள் கன்னத்தைக் கிள்ள.. வருண் தேம்பாவணியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் வருண் பேசாம இவளை என்கூட ஊருக்கு அனுப்பிடு. இவளை நானே பாத்துக்கறேன். எனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும் அவளுக்கு மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கும் இல்ல.."

"ஏன்..? இங்க என்ன குறைச்சல் அம்மாவும் நானும் அவள நல்லாத்தான் பாத்துக்கறோம். ட்ரீட்மென்ட் முடியாம அவளை எங்கேயும் அனுப்ப முடியாது."

"அதில்லடா ஊருக்கு போயிட்டா இந்த செல்லத்தை பாக்காம எப்படி இருக்க போறேன்னு தெரியல அதனாலதான்." என்று மீண்டும் அவள் கன்னத்தைக் கிள்ள தேம்பாவணி நாய் குட்டி போல் வெண்மதியின் மடியில் தன் தாடையை பதித்துக் கொண்டாள்.

"போதும் கன்னத்தை கிள்ளி விளையாடினது. அவள பாக்கணும்னு தோணுச்சுன்னா நேரா புறப்பட்டு இங்க வா.. எட்டு மணி நேர டிராவல். சின்னதா ஒரு தூக்கம் போட்டு எழுந்தா வீட்டுக்கு வந்துடலாம். அதுக்காக அவள கூட்டிட்டு போய் நிரந்தரமா அங்கேயே வச்சுக்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம். இன்னொரு வாட்டி இப்படி பேசாதே.!"

"உனக்கென்னடா பிரச்சனை அப்படியே எண்ணெயில் போட்ட கடுகாட்டம் பட்டு பட்டுன்னு வெடிக்கற. அவளே அமைதியாத்தான் இருக்கா."

"அவளுக்கென்ன ஜாலியாத்தான் இருப்பா. கஷ்டப்பட போறது நான்தானே.! இவளை நீ கூட்டிட்டு போய்ட்டா இவளோட அப்பனுக்கும் அந்த வீணா போன சத்தியாவுக்கு யார் பதில் சொல்றது.?"

"கொண்டு போய் அவனுங்கள அடுப்புல போடு. நாசமா போனவனுங்க.. புள்ளைய என்ன பாடு படுத்தி வச்சிருக்கானுங்க. கம்பிளைன்ட் கொடுத்து இந்த மாதிரி ஆளுங்கள உள்ள தள்ளனும்." என்றபடி தேம்பாவணியின் கையை எடுத்து மென்மையாக வருடி கொடுத்தாள் வெண்மதி.

"விடுங்க அக்கா.. அவங்கள பத்தி பேச வேண்டாம் இப்ப நான் சந்தோஷமா இருக்கேன்.. எனக்கு அது போதும்.‌ அக்கா இன்னைக்கு ராத்திரி நான் உங்க கூட படுத்துக்கட்டுமா.?"

"இதெல்லாம் கேட்கணுமாக்கும்.. தாராளமா வந்து படு.. ரெண்டு பேரும் விடிய விடிய கதை பேசிட்டே இருப்போம்."

"நல்லா பேசுவீங்க.. காலேஜ்ல போய் தூங்கி வழிவா.! படிப்பு கெட்டுப் போகும்."

"ஒரு நாள்ல தூங்காம போனா ஒன்னும் கெட்டுப் போயிடாது. நீ ரொம்ப குதிக்காதடா.!"

"ஆமாக்கா நல்லா கேளுங்க.. அதை செய்யாதே இது செய்யாதன்னு எப்ப பாரு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காரு."

"அடிப்பாவி. எக்கா இவ என்ன சொன்னா தெரியுமா. நீ டைனோசர் மாதிரி குறட்டை விடுறியாம். பேய் பிசாசை விட உன்ன பார்த்தா தான் ரொம்ப பயமா இருக்குதாம். உன் பக்கத்துல மனுஷன் படுத்து தூங்குவானான்னு சொல்றா..உன் புருஷன் ரொம்ப பாவமாம்"

"அடிப்பாவி அப்படியா சொன்ன..?"

"ஐயோ சத்தியமா இல்லக்கா.. டாக்டரா இருந்துகிட்டு இப்படி பொய் சொல்லலாமா பொய் சொல்ற வாயில போலியோ சொட்டு மருந்து தான் விடனும்."

"இல்லக்கா.. உன்மேல சத்தியமா இவ சொன்னா.!"

"இல்ல இல்ல நான் சொல்லவே இல்ல.! அக்காவோட குறட்டை சத்தம் கூட குயில் கத்துற மாதிரி ரம்யமா இருக்கும்னு தான் சொன்னேன்."

"பாத்தியா பாத்தியா உண்மை கொஞ்சங் கொஞ்சமா வெளியே வருது."

"அடச் சீ ரெண்டு பேரும் நிறுத்துங்க.!
அம்மாஆஆஆ.. இதுங்க ரெண்டும் சேர்ந்து என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுதுங்க.. அம்மாஆஆ.. இங்க வாயேன்." வெண்மதி சின்ன குழந்தை போல் தாயை அழைக்க.

வெளியே நின்றிருந்த சாரதாவிற்கும் ராஜேந்திரனுக்கும் உதட்டோரம் சிரிப்பு.

நான் சொல்லல. இதுங்க சண்டையெல்லாம் பத்து நிமிஷம் கூட தாக்கு பிடிக்காது. அதனாலதான் நீங்க போய் தலையிடாதீங்க அவங்களே பேசி சமாதானமாகட்டும்னு சொன்னேன்."

"எப்படியோ எல்லாரும் சந்தோஷமா இருந்தா சரிதான்." ராஜேந்திரனும் சிரித்தார்.

"ஆமாமா இந்த வீட்ல எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கீங்க என்னை தவிர." சொல்லிவிட்டு அந்த இடத்தை கடந்த திலோத்தமாவின் எரிச்சல் குரலில் இருவரும் அதிர்ச்சியாக திரும்பினர்.

தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Member
Joined
Jan 26, 2024
Messages
111
அருமையான பதிவு
 
Member
Joined
Jan 29, 2023
Messages
55
💗💖💗💖💗💖💗💖
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
172
intha kosu tholla thanga mudiyalaye............ :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
Top