Super super 👌பல வாரங்களுக்கு முன்பே ராகவி டிஸ்சார்ஜ் ஆகி சென்றிருந்தாள். மருத்துவமனையில் இருந்தவரை கமலி ராகவி இருவரையும் சந்திக்க விடவில்லை சூர்ய தேவ்..
ராகவியும் மாலினியும்.. செய்த உதவிக்காக நன்றி உணர்வோடுதான் இருந்தார்கள் என்றாலும் கூட சிறு வார்த்தையோ அல்லது.. பழசை கிளரும் ஏதேனும் ஒரு செய்தியோ கமலியின் நெஞ்சில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் சூர்ய தேவ் கவனமாக இருந்தான்..
ராகவி டிஸ்சார்ஜ் ஆவதற்கு ஒரு நாளைக்கு முன்பு ஒரு தலைமை மருத்துவராக அவள் உடல் நலனை பரிசோதிக்க வந்திருந்தான் சூர்யதேவ்..
குழந்தையை அருகில் போட்டுக் கொண்டு படுத்திருந்தவள் டாக்டரை கண்டதும் எழுந்து அமர்ந்தாள்..
"பரவாயில்லை படுத்துக்கோங்க நோ ப்ராப்ளம்.." என்றவன் டாக்டர் மீராவிடமிருந்து ராகவியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தான்..
கமலி என்று ஆரம்பித்தவள் சூரிய தேவ் விழி தூக்கி பார்க்க "கமலி சிஸ்டர் வரலையா..?" என்றாள் தயக்கத்தோடு..
ஆழ்ந்த மூச்செடுத்து.. "அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல லீவுல இருக்காங்க.." என்றான் இயந்திர குரலில்..
சில கணங்கள் தயங்கியபடி அமர்ந்திருந்தாள் ராகவி..
"நானும் அம்மாவும் கமலியோட மனசை நிறையவே காயப்படுத்தி இருக்கோம்.. ஆனா எதையுமே மனசுல வச்சுக்காம.. ஆபத்தான அந்த சூழ்நிலையில தன் உயிரை கூட பொருட்படுத்தாம என்னையும் என் குழந்தையும் காப்பாத்த நினைச்ச அவங்க மனசுக்கு முன்னாடி நாங்க வெறும் குப்பைகளா நிக்கறோம்.."
குரல் தழுதழுத்து ராகவி சொல்லிக் கொண்டிருக்க.. சூழ்நிலையை புரிந்து கொண்டு மீரா அங்கிருந்து வெளியேறி இருந்தார்..
"கமலி ஒரு நர்ஸ்.. அவ எப்பவுமே தன்னோட கடமையில் சரியா இருப்பா..!" என்றான் சூர்ய தேவ்..
"விரோதத்தை மனசுல வச்சுக்காம ஒரு நர்ஸா அவங்க தன் கடமையை செஞ்சது வேணா .. உங்களைப் பொறுத்த வரைக்கும் சாதாரண விஷயமாய் இருக்கலாம்.."
"ஆனா என்னையும் என் குழந்தையும் காப்பாத்த.. தன்னோட உயிரைப் பொருட்படுத்தாமல் குறுக்க புகுந்து அந்த அடியை அவங்க வாங்கிக்கிட்டதும்.. பிள்ளையை நெஞ்சோடு கட்டி அணைச்சுக்கிட்டு அவங்க தாய்மை உணர்வோடு சிந்திய கண்ணீரும்.. சாதாரண விஷயம் இல்ல டாக்டர்.. அவங்க நல்ல மனசும் சுயநலமில்லாத கருணை உள்ளமும்தான் என் குழந்தையை காப்பாத்தி குடுத்திருக்கு.. நாங்க செஞ்ச பாவத்துக்கு அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்.. அவங்க செஞ்ச உதவிக்கு ஆயுசு முழுக்க அவங்களுக்கு நாங்க நன்றி கடன் பட்டிருக்கோம்.."
ராகினி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.. சூர்ய தேவ் அழுத்தமான பார்வையோடு அமைதியாக நின்றிருந்தான்..
"கமலி இடத்துல வேற யாராவது இருந்திருந்தா.. அவங்க கடமை உணர்வையும் நல்ல மனசையும் மீறி.. இந்த பொண்ணுக்கு இது தேவைதாங்கற கோபமும் பழி உணர்ச்சியும் கண்டிப்பா மனசில இருந்திருக்கும்.."
"ஆனா.. கமலி? எப்படி.. எந்த எதிர்பார்ப்புமில்லாம அவளுக்கு துரோகம் செஞ்சவங்களுக்கு உதவி செய்ய முடியுது..!"
சூர்யதேவ் சிரித்தான்..
"தட் இஸ் கமலி..! என் கமலிக்கு நன்மை செய்ய மட்டும் தான் தெரியும்.. யாரையும் வெறுக்க தெரியாது.. ஆனா அவளோட நல்ல மனசை நிறைய பேர் தப்பா மிஸ் யூஸ் பண்ணிக்கிறாங்க..!" என்று ஓரக் கண்ணால் ராகவியை பார்க்க.. குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்தாள் அவள்..
"நீங்க கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை..! கமலிக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல.. நீங்க எப்படி இருக்கீங்க குழந்தையோட ஹெல்த் எப்படி இருக்குன்னு நேத்து கூட என்கிட்ட விசாரிச்சா.. எதைப் பத்தியும் யோசிக்காம நல்லா ரெஸ்ட் எடுங்க.." புன்னகையோடு அங்கிருந்து வெளியேறி இருந்தான் சூர்யதேவ்..
அதற்கு அடுத்த நாள் ராகவி மருத்துவமனையை விட்டு டிஸ்டார்ஜ் ஆகி சென்றிருந்தாள்.. சேத்தனுக்கு அலுவலகத்தின் பக்கத்திலேயே குவாட்டர்சில் வீடு தந்திருப்பதாகவும்.. ராகவி குடும்பத்தார் அங்கே இடமாறி விட்டதாகவும் செய்தி வந்தது..
ராகவியும் மாலினியும் இனி கமலியின் கண்களில் படப்போவதில்லை என்பதில் சூர்யதேவ்க்கு நிம்மதி.. இருவரும் தவறை உணர்ந்து மனமாறிய போதிலும் அவர்களோடு தொடர்புடைய கடந்த கால சம்பவங்கள் மன உளைச்சலைத்தான் தர போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..!
மாயாவின் கணவன் விஷ்ணு அயல் நாட்டுக்கு நிரந்தரமாக டாட்டா பை பை சொல்லிவிட்டு சொந்த நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்..
மாயாவை கையில் பிடிக்கவே முடியவில்லை..! எந்த நேரம் அழைத்தாலும் முழுதாக ரிங் போய் கட்டானது.. பிறகு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கழித்து "சாரிடி பாக்கல..!" என்று அசடு வழிந்து வெட்கத்தோடு சொல்லும் குரலில் கமலியால் மீதி கதையை உணர்ந்து கொள்ள முடிந்தது.. ஒருமுறை வீடியோ காலில் பேசிய போது கூட கூடுதல் சோபையுடன் கன்னங்கள் சிவந்து பூரிப்போடு தெரிந்தாள் மாயா..
கணவனின் அருகாமை ஒரு பெண்ணுக்கு இத்தனை அழகையும் வனப்பையும் தருமா..? இதற்கு நீயே சிறந்த உதாரணம் தானே கமலி.. சந்தேகம் ஏன்..? மனசாட்சி கேட்டுக் கொண்டது..
"நல்லா பளபளன்னு அழகா தெரியுற கமலி..!" இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஷீலாவும் விஜயலட்சுமியும் அவள் கன்னத்தை தடவி பார்த்து ஒரே கலாட்டா..!
"உன் கன்னத்தை பார்த்தா எங்களுக்கே கடிக்கணும்னு தோணுது.. டாக்டர் எப்படி விட்டு வச்சிருக்கார்.. காயம் எதுவும் இல்லையே..!" தொடர்ந்து அடல்ட் ஒன்லி விமர்சனங்களாக தந்து.. கமலியின் கன்னங்கள் சிவக்க சிவக்க வெட்கப்பட வைத்திருந்தார்கள் இருவரும்..
இன்னும் இரண்டு நாட்களில் தன் கணவனோடு வீட்டுக்கு வருகிறாளாம் மாயா..
சொல்லப்போனால் கமலி சூர்யா இருவரையும்.. ஒருமுறை சென்னை வந்து போகும்படி மாயா அழைத்திருந்தாள்..
ஆனால் 24 மணி நேரமும் ஆன் டியூட்டியில் இருக்கும் டாக்டருக்கும்.. டாக்டரை பிரிய முடியாத நர்சுக்கும் அது சாத்தியமில்லை என்பதால் மாயா தன் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு கணவனோடு புறப்பட்டு வருவதான தகவல் தெரிவித்திருந்தாள்..
போன முறை அவள் வந்தபோது கமலியோடு மேல் போர்ஷனில் தங்கி கொண்டாள்..
இப்போது கணவனோடு விருந்தாளியாக வருபவளை அப்படி தங்க வைப்பது சரியல்ல என்பதால் கமலி சூர்ய தேவ் இருவரும் தங்கள் வீட்டு உட்புற மாடியிலிருக்கும் அறையை சுத்தம் செய்து அவர்களுக்கு தரலாம் என்ற முடிவோடு மாப் பக்கெட் துடைப்பம் என எடுத்துக்கொண்டு படியேறினர்..
போர் அடித்தால் கூட வீட்டின் கீழ்ப்பகுதியை சுற்றி சுற்றி வரும் கமலி இதுவரை மாடி ஏறியதே இல்லை..
மாடியிலிருக்கும் அந்த சந்திரமுகி அறைக்கு மட்டும் போகவே கூடாது என்பதைப் போல்.. கீழிருந்து மேற்புறம் பார்க்கும் போதே ஏனென்று தெரியாமல் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும்.. பயன்படுத்துவதில்லை என்பதால் மேல் பகுதி இருளாகத்தான் இருக்கும்..
"மேல என்ன இருக்கு?" என்று ஒருமுறை கமலி கேட்டதற்கு..
"மாடியில ரெண்டு ரூம் இருக்கு.. ஒரு ரூம்ல பழைய புக்ஸ் எல்லாம் போட்டு வச்சிருக்கேன்.. இன்னொரு ரூம் காலியாதான் இருக்கு.. உபயோகம் இல்லாமல் இருக்கிறதால ரெண்டு ரூமையும் பூட்டி வச்சிருக்கேன்.. ஏன் உனக்கு பாக்கணுமா..?" என்றான் அவன்..
"இல்ல வேண்டாம்.. தேவைனா மேல போய் பாத்துக்கலாம்.. இப்ப அவசியம் இல்ல" என்ற நாசுக்காக மறுத்து விட்டாள்..
இன்று அந்த அவசியம் வந்ததால் கணவனோடு மாடியேறி செல்கிறாள்...
ஒவ்வொரு அறையாக திறந்து காட்டினான் சூர்யா..
இரண்டு அறைகளின் எந்த ஜன்னலை திறந்தாலும் கமலி வசித்த பழைய போர்ஷன் தெரிந்தது..
ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தன் பழைய போர்ஷனை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..
சுவாரசியமான சம்பவங்கள் அவள் நினைவில் தேங்கி நின்றன..
கிறுக்குத்தனமாக டாக்டரோடு சண்டை போட்டு.. எனக்கு பிடித்ததை செய்யத்தான் போறேன் என்று ஏட்டிக்கு போட்டியாக நின்ற நாட்கள் எல்லாம் அந்த போர்ஷனின் ஜன்னல் திரைகளில் கவிதைகளாக தெரிய.. அவள் இதழ்களில் கூடுதல் புன்னகை..
கமலியை பின்புறமிருந்து அணைத்துக் கொண்டான் சூர்யா..
"என்ன சிரிப்பு..!"
"ம்ம்.. சத்தம் போடக்கூடாது.. பாட்டு கேக்க கூடாது.. மாடியில் இருந்து குதிச்சு இறங்கி வரக்கூடாது.. கடுகு தாளிக்கக்கூடாது.. மீன் வறுக்க கூடாது.. கோலம் போடக்கூடாதுன்னு எட்டு பக்கத்துக்கு கண்டிஷன் போட்ட ஒரு ஹிட்லரை காணுமாம்.. அவரை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.." என்றாள் கமலி உதட்டுக்குள் புன்னகையுடன்..
"தேடாதே கிடைக்க மாட்டாரு.. அவர்தான் ஒரு அழகான பொண்ணு கிட்ட சரண்டர் ஆயிட்டாரே.. உனக்கு தெரியாது..?" இதழ்களை சிரிப்பை அடக்கிக்கொண்டு குறும்போடு அவள் பக்கம் குனிந்தான்..
"அதான் இந்த ட்ராஸ்டிக் சேஞ்ச் எப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன்.."
சீறலான மூச்சோடு அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தான்..
"என்னவோ.. அதெல்லாம் யாருக்கு தெரியும்.. உன்னை பார்த்த முதல் நாள்லருந்து என்னோட பிரைன் சிஸ்டம்.. நர்வ் சிஸ்டம்.. ஹார்ட் பங்க்ஷன் எல்லாம் கொலாப்ஸ் ஆகி.. எல்லாம் வேற மாதிரி செயல்பட ஆரம்பிச்சிட்டது போல..!"
அவன் பக்கம் திரும்பினாள் கமலி..
"அது எப்படி..?"
"உன்னை பார்த்தாலே ரேஸ் குதிரை போல ஹார்ட் வேகமா துடிக்கும்.. எலும்பே இல்லாத இடத்தில் நரம்பு புடைச்சு நின்னு தன்னோட வேலையை காட்டும்.."
"ஹான்..?" என்று கண்களை விரித்தாள் கமலி..
"அப்புறம் இந்த பொண்ணு கிட்ட என்னதான் இருக்குன்னு மூளை ஆராய்ச்சி பண்ண சொல்லும்.. எல்லாத்துக்கும் நீதான்டி காரணம்.. நீதான் என்னை ஏதோ பண்ணி வச்சிருக்க.. ஜெகன் மோகினி..!" அவள் தோள் வளைவில் தன் முகத்தை புதைத்தான் சூர்ய தேவ்..
சட்டென அவனிடமிருந்து விலகினாள் கமலி..
"போதும்.. போதும்.. வீட்டை சுத்தம் பண்ணலாம்னு வந்துட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம்.."
"நான் என்னடி செஞ்சேன்.. நீதான் பழசை கிளறி.. என் ரொமான்டிக் பீலிங்ஸை தூண்டி விட்டுட்ட.. இப்ப ஆரம்பிச்சதை முடிக்கலைனா அது ஏமாந்து போகுமா இல்லையா..?"
பீலிங்ஸ் என்று சொல்லிவிட்டு நெஞ்சை தொட்டு காட்டாமல் கிறக்கமான கண்களை கீழிறக்கி காட்டியபடி நெருங்கியவனை கண்டு கலவரமானாள் கமலி..
"அதெல்லாம் ஏமாந்து போகாது.. தேவையில்லாத நேரத்துல இங்கிதமில்லாம வெகுண்டெழுந்துக்கற உங்க ரொமான்டிக் ஃபீலிங்சை தலையில தட்டி தூங்க வைங்க.. வேலையை பார்ப்போம்.." என்று அவன் நெஞ்சின் மேல் கை வைத்து தள்ளிவிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினாள் கமலி..
அவளோடு இணைந்து கொண்டான் சூர்ய தேவ்..
சுத்தம் செய்யும் பணியைத் தவிர மற்ற பணிகள் அனைத்தும் ஜரூராக நிகழ்ந்தன..
தலையில் ஒட்டடை கிரீடங்களுடன் தூசியில் புரண்டு.. அழுக்கை ஆடையாக பூசிக் கொண்ட மன்மதனும் ரதியுமாக.. ஆடைகளை அரைகுறையாக அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர் இருவரும்..
"ஒரு டாக்டர் பண்ற வேலையா இது..?" கமலி வெட்கப்பட்டாள்..
"நர்ஸ் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும்.." என்றபடியே படியிலிருந்து இறங்கி ஓடியவளை பின்தொடந்தான் சூர்ய தேவ்..
"கடைசில எதுக்காக போனோமோ அந்த வேலை நடக்கல.. மேல்மாடியில் சுத்தம் பண்ணவே இல்ல..!"
"நான் எதுக்காக வந்தேனோ அந்த வேலை நடந்துச்சே..!" கண் சிமிட்டி சிரித்தவனை செல்லமாக முறைத்தாள் கமலி..
இருவரும் ஒன்றாகவே சேர்ந்து குளித்தனர்.. அப்போதும் கூட அவளை விட்டு வைக்க மனமின்றி சோப்பை விட அதிகமாக அவள் தேகத்தில் வழுக்கிச் சென்றான் சூர்யதேவ்..
"இப்படியே போனா என் நிலைமை என்னாகறது..?" பொய்யாக கவலைப் பட்டவளை செல்லமாக அணைத்துக்கொண்டு முத்தங்களால் ஆறுதல் சொன்னான் அவள் கணவன்..
அடுத்த நாள் ஆள் வைத்துதான் மேல் மாடியில் சுத்தம் செய்தனர்.. "இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்.." பெருமூச்சு விட்டாள் கமலி..
"மேல்மாடி கொஞ்சம் ஸ்பேஸ் அதிகம்.. அதனாலதான் நம்மளால கிளீன் பண்ண முடியல.. வேணும்னா நீ தங்கியிருந்த போர்ஷன்.. அதை போய் கிளீன் பண்ணிட்டு வருவோமா.." என்று கேட்டவனை கொலை வெறியோடு முறைத்தாள்..
மாயா விஷ்ணு இருவரும் வீட்டுக்கு வந்தாயிற்று.. சந்தோஷமும் கும்மாளமுமாக சிரித்துக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்து ரசிப்பதை தவிர பெரிதாக வேலை ஒன்றும் இல்லை அவனுக்கு..
மாயாவை போல் விஷ்ணுவும் கலகல டைப் என்பதால்.. கலாட்டா கச்சேரிக்கு பஞ்சமில்லாமல் போனது..
ஆனால் அவர்கள் நால்வரில் அந்த ஒருவன் மட்டும் வாயை திறப்பதற்கு பத்து பணம் கேட்டான்.. விஷ்ணு சூரியதேவ் இருவருக்குமான உரையாடலில் விஷ்ணு நிறைய பேசினான்.. சூர்ய தேவ் அளந்து பேசினான்..
"டாக்டர் இன்ட்ரோவர்ட்(introvert) போலிருக்கு.. நான் பத்து வார்த்தை பேசினா அவர் ரெண்டு வார்த்தை தான் பேசுறாரு.." விஷ்ணு மாயாவிடம் சொல்ல..
"யாரு அவரா..? மத்தவங்க கிட்ட தான் அப்படி.. அவர் பொண்டாட்டி கிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேசுவார்.."
"ஏன் அப்படி..!"
"ம்ம்.. இப்படி கேட்டா என்ன சொல்றது.. ஹிந்தி இங்கிலீஷ் மலையாளம் அப்படின்னு ஏகப்பட்ட லாங்குவேஜ் கற்று வச்சிக்கிட்டாலும் எமோஷன்ஸ் வரும் போது தாய் மொழியில் தானே கொட்டி தீக்கறோம்.. அந்த மாதிரி எத்தனை பேர் சுத்தியிருந்தாலும் கமலி கிட்ட மட்டும் தான் கம்ஃபர்டபிலா ஃபீல் பண்றார் போல இருக்கு.."
"இன்ட்ரஸ்டிங்.. அவனவன் பொண்டாட்டி கிட்ட பேசி பேசி போர் அடிச்சு தன்னோட மனக் குறைய சொல்லி தீர்க்க ஆள் இல்லாம அலையறான்.. ஆனா டாக்டர் அதற்கு நேர்மாறா இருக்காரே.." என்று வாய் தவறி உளறி கொட்டி மாயாவின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.
விஷ்ணுவும் கமலியும் ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றி தீவிரமாக பேசி அரட்டை அடித்துக் கொண்டிருக்க.. பால்கனியின் ஓரத்தில் தேநீர் அருந்திய படி தனியாக நின்று கொண்டிருந்தனர் மாயாவும் சூர்யதேவ் இருவரும்..
சற்று தூரத்தில் நின்றாலும் வழக்கம் போல் தன் மனைவியை பார்த்துக் (சைட் அடித்துக்) கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
"டாக்டர் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே..!"
பேச்சு குரலில் கவனம் சிதறி மாயா பக்கம் திரும்பினான் சூர்யா..
தேநீர் ஒரு மிடறு விழுங்கியவனின் கண்கள் என்ன என்ற கேள்வியை தாங்கி நின்றன..
பெருமூச்செறிந்து தயக்கத்துடன் ஆரம்பித்தாள் மாயா..
"அ..து.. எப்படி சொல்றதுன்னு தெரியல..! இந்த விஷயத்தில் நான் தலையிடறது அநாகரீகம்னு நீங்க நினைக்கலாம்.. ஆனா என்னால பேசாம இருக்க முடியல.."
"கமலியோட மெடிக்கல் ரிப்போர்ட் படி அவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. ஆனா இன்னொரு முறை நீங்க ஏன் பரிசோதனை பண்ணி பார்க்க கூடாது.. நான் ஏன் இதைச் சொல்றேன்னா குழந்தையே பிறக்காதுன்னு கைவிடப்பட்ட எத்தனையோ தம்பதிகள் உங்க ஃபெர்டிலிட்டி கிளினிக் வந்த பிறகு.. உங்க சிகிச்சையினால குழந்தையோட திரும்ப போயிருக்காங்க..! நம்பிக்கையோடு வர்றவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்த நீங்க உங்க மனைவி விஷயத்துல இன்னும் ஏன் மனசு வைக்காம இருக்கீங்கன்னு எனக்கு புரியல.."
"நீங்க என்ன சொல்ல வர்றீங்க..?" கூர்மையான கேள்வியினால் இடை மறித்தான் சூர்ய தேவ்..
"உங்க மனைவியோட குறையை தீர்க்கதுக்காக..!"
"குழந்தை இல்லாததை ஒரு குறையாவே நான் நினைக்கலையே..!"
"டாக்டர்..?"
"ஐ அம் சாரி.. இதைப் பத்தி நான் அவ கிட்ட பேச போறதே கிடையாது.. குழந்தை வேணுங்கற எண்ணமோ ஆசையோ இதுவரை எனக்கு இருந்ததில்ல.. அவளைவிட எதுவுமே எனக்கு முக்கியமில்லை.. எனக்கு என் கமலி மட்டும் போதும்.. ஒருவேளை அவளுக்கு குழந்தை வேணும்னு ஆசை இருந்தா.. அவளா என்கிட்ட வந்து கேட்கட்டும்.. அதுக்கப்புறம் ஃபர்தரா ப்ரொசீட் பண்ணலாம்.. ஆனா நானா இந்த குழந்தை விஷயமா அவசரப்பட்டு கேட்டு என் கமலியோட மனசை புண்படுத்த விரும்பல.."
மாயா அவனை பிரமிப்போடு பார்த்தாள்..
"நீங்க சிடுசிடுன்னு எப்பவும் எரிஞ்சு விழறதை பார்த்து கமலியோட வாழ்க்கையை நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேன்.. குழந்தை இல்லாததை குறையா நினைக்காம மனைவியோட மனச பத்தி கவலைப்படுறீங்க பாத்தீங்களா.. யூ ஆர் ரியலி கிரேட் டாக்டர்.. ஆனால் நான் கேட்க வேண்டிய விஷயத்தை கேட்டுடறேன்.. எதுவானாலும் தகுந்த நேரத்தில் செய்யறது தானே முறை.. காலம் கடந்து போன பிறகு அதற்கான வாய்ப்பு இல்லாம போயிட்டா..?"
"அதனால என்ன ஆகிட போகுது.. இந்த உலகத்துல எத்தனையோ குழந்தைகள் அம்மா அப்பா இல்லாமல் இருக்காங்களே.. அவங்க யாராவது ஒன்னு ரெண்டு பேர் எங்களை தத்தெடுத்துக்கட்டுமே..!" என்றவன் மாயாவின் மனதில் உயர்ந்து நின்றான்..
மூன்று நாட்கள் அவர்களோடு இருந்துவிட்டு மாயா விஷ்ணு இருவரும் விடை பெற்றுக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டனர்..
மாயாவை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் கமலி..
அழவே கூடாது என்று அவளை கண்களால் மிரட்டினான் சூர்யதேவ்..
"என் ஃபிரண்டு ஊருக்கு போகும்போது கையை கட்டி வேடிக்கை பார்க்கனுமா..? அழக் கூட உரிமை இல்லையா..! உங்களை மாதிரி எமோஷன்சை கட்டுப்படுத்திக்கிட்டு என்னால வாழ முடியாது.." உதடு பிதுக்கினாள் கமலி..
"அவங்க என்ன அயல்நாட்டுக்கா போறாங்க.. இங்க இருக்கற சென்னை.. ஃபிளைட்ல ஏறுனா ஒருமணிநேரம்..
"ஆமா.. அப்படியே கூட்டிக்கிட்டு போய்ட்டாலும்.. இனி எப்ப பார்க்கறதோ.." மீண்டும் கண் கலங்கினாள்..
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ அழக்கூடாது அவ்வளவுதான்.." என்றவன் அவசரமாக அவள் கரம் கோர்த்து கொண்டான்..
மோக முத்தாடும் நேரங்களில் மட்டுமல்ல.. தடுமாறும் நேரங்களிலும்.. பதட்டத்தோடு துணையை நாட துடிக்கும் சமயங்களிலும் அவள் கையை கோர்த்துக் கொள்வது வழக்கமல்லவா.. கமலிக்கு தான் அவனைப் பற்றிய ஆதி அந்தம் அனைத்தும் தெரியுமே.. தன் கண்ணீரில் சூர்யா தவிக்கிறான் என்பதை இறுக்கமாக தன்னோடு பிணைத்துக் கொண்டிருந்த அவன் கரத்தின் மூலம் உணர்ந்து கொண்டு கண்களை துடைத்துக்கொண்டாள் கமலி..
"கப்பிள்ஸ் ஃபைட்.. சோ ஸ்வீட்.. பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு இல்ல.." மாயா அவர்களைப் பார்த்தபடி மெய் மறந்து விஷ்ணுவிடம் கேட்க..
"ஆமாம்.." என்றான் அவன்..
சூர்ய தேவ் கண்களுக்கு கமலியை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை போலிருக்கிறது..
"எக்சஸ் ஆஃப் லவ்.. ஏதாவது பிரச்சனையில் முடியுமாடா..?" வருணிடம் அழைத்து கேட்டு வைத்தான்..
"என்னது..?" பாவம் திடீர் திடீரென்று குட்டையை குழப்பினால் அவனுக்கும் என்ன தான் தெரியும்..
"அது இல்லடா கண்மூடித்தனமான காதல் ஏதாவது பிரச்சனையில் கொண்டு போய் விடுமா.. எல்லாம் ஓவர் ஃப்ளோல போயிட்டு இருக்குற மாதிரி ஃபீல்.. அளவா காதலிக்க உன்கிட்ட ஏதாவது ஆலோசனை உண்டா நண்பா..?"
"ராங் நம்பர்..!" அழைப்பு துண்டிக்கப்பட்டது..
"என்னது..?" ஃபோன் திரையை பார்த்தான் சூர்யதேவ்.. சரியான நம்பர் தானே.. எதுக்கு ராங் நம்பர்னு ஃபோன வெச்சுட்டான்.. திரும்ப அழைத்தான் சுவிட்ச் ஆஃப்..
அடுத்து ஃபோன் போட்டு கிளினிக் எண்ணுக்கு அழைத்தான்..
"டாக்டர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் போயிருக்காரு.. அப்படின்னு சொல்ல சொன்னாரு.."
"இல்ல இல்ல நான் தான் சொல்றேன்.. சரிதானா டாக்டர்.."
"இல்லை இல்லை டேவிட்.. டேவிட் டேவிட்.." வாய்க்கு வந்ததை உளறி கொட்டினாள் வருணின் காரியதரிசி..
"என்னவோ தப்பா இருக்கு.." யோசனையோடு ஃபோனை வைத்தான் சூர்யதேவ்..
நாட்கள் அழகாக நகர்ந்து கொண்டிருந்தன.. கதைகளில் கூட சந்தோஷ அத்தியாயங்களே வந்து கொண்டிருந்தால் யார் படிப்பது.. டிவிஸ்ட்.. டர்னிங் பாயிண்ட் என பக்கத்துக்கு பக்கம் பரபரப்பாக சுவாரசியமாக கதை செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பது இயல்பு தானே..
அதுவே வாழ்க்கை என்றால்..?
"இப்படியே சந்தோஷமா இருந்தா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்.. அதீத சந்தோஷத்தை நீங்க அனுபவிக்க வேண்டாமா..!" கடவுள் ஜாலி மூடில் இருந்திருக்க வேண்டும்..
அன்று மருத்துவமனையில் பணியிலிருந்தபோது தலை சுற்றி மயங்கி விழுந்தாள் கமலி..
நாலா பக்கங்களிலும் சுற்றி வளைத்து படம் பிடிக்கும் கேமராக்களை காட்டிலும் கூர்மையானதல்லவா அவன் கண்கள்..
மனைவி மயங்கி விழுந்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான் சூர்ய தேவ்..
அவளை கையில் அள்ளிக் கொண்டு சென்றவன் காலியாக இருந்த ஒரு படுக்கையில் படுக்க வைத்தான்..
பதட்டத்தையும் பயத்தையும் ஓரங்கட்டி வைத்து அவள் நாடித் துடிப்பை பரிசோதித்தவனுக்கு கண்கள் விரிந்து போயின..
மயக்கத்தில் இருந்தவளை முதுகில் கை கொடுத்து தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான் சூர்யதேவ்..
அவன் இறுகிய அரவணைப்பில் மெல்ல கண்விழித்தாள் கமலி..
ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை.. பிறகு கணவனின் கைவளைவில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து..
"என்னாச்சு.. எப்படி மயங்கி விழுந்தேன்.. காலையில ப்ரேக்பாஸ்ட் கூட நல்லா தானே.." சோர்வோடு அவள் வார்த்தைகளை கோர்த்துக் கொண்டிருக்க..
"கங்கிராஜுலேஷன்ஸ் பொண்டாட்டி.. வி ஆர் பிரகனண்ட்.." எச்சில் விழுங்கி கரகரத்த குரலில் சொன்னான் சூர்ய தேவ்..
காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப மறுத்து ரிவர்சில் அனுப்பிக் கொண்டிருந்தது மூளை..
"எ.. என்ன..?"
"எஸ்.. வி மேட் இட்.. உன் வயித்துல என் குழந்தை வளருதுடி.. நான் அப்பாவாகிட்டேன்.. நீ.. என் குழந்தையோட அம்மா.." அவனால் பேச முடியவில்லை.. தொண்டை அடைத்தது.. அவள் கழுத்துக்குள் தன் முகத்தை அழுத்தி புதைத்துக் கொண்டான்..
எத்தனையோ தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தந்த போது கூட தோன்றாத மகிழ்ச்சி.. பரவசம்.. பெருமை.. கண்ணீர்.. அவனை வாரிச் சுருட்டியது..
சீரற்ற மூச்சுகளோடு அசையாமல் அமர்ந்திருந்தவள்.. விழிகளிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது..
கமலியின் முகத்தை கையிலேந்தினான் சூர்ய தேவ்..
"நெஜமாவா.. நான் பிரக்னண்டா இருக்கேனா..!" கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த பெரும் பாக்கியம் தன்னை வந்து சேர்ந்ததில் வார்த்தைகள் தடுமாறின.. மூச்சு வாங்கியது..
"எஸ்.." என்றவன் அவள் வயிற்றில் தன் கரத்தை பதித்தான்.. அந்த கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தபடி அவன் முகம் பார்த்தாள் கமலி..
உணர்ச்சிவசப்பட்டு போயிருந்த இருவருக்கும் இடையில் கண்ணீர் மட்டுமே பேசியது..
இங்கே எதுவும் சாத்தியம்.. எதிர்பாராததை எதிர் பாருங்கள்.. கடவுளின் துகள் வாழ்த்தியது..
என்னை ஆணாக்கி என் ஆண்மையை நிரூபித்தவள் நீ.. கலங்கிய கண்களோடு அவள் நெற்றியிலும் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்..
என்னை பெண்ணாக்கி தாய்மை தந்தவன் நீ.. ஆவேசமாக அவன் முகமெங்கும் முத்தமிட்டாள் கமலி..
அனுபவித்த வலிகளுக்கும் பட்ட துயரங்களுக்கும்.. முத்தாய்ப்பாக இந்த இனிய செய்தி அமைந்து போனதில்.. இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு தோளில் சாய்ந்து வாய் விட்டு சத்தமாக அழ துவங்கினர்..
தொடரும்..
👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😘😘😘பல வாரங்களுக்கு முன்பே ராகவி டிஸ்சார்ஜ் ஆகி சென்றிருந்தாள். மருத்துவமனையில் இருந்தவரை கமலி ராகவி இருவரையும் சந்திக்க விடவில்லை சூர்ய தேவ்..

Congratulations Surya and Kamaliபல வாரங்களுக்கு முன்பே ராகவி டிஸ்சார்ஜ் ஆகி சென்றிருந்தாள். மருத்துவமனையில் இருந்தவரை கமலி ராகவி இருவரையும் சந்திக்க விடவில்லை சூர்ய தேவ்..