- Joined
- Jan 10, 2023
- Messages
- 93
- Thread Author
- #1
கலவரங்களை ஒடுக்கி ரவுடிசத்தை அடியோடு ஒழித்திருந்தது மாநில அரசு.. நகர வாழ்க்கை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது..
நாளொரு மேனியும் இப்பொழுதொரு வண்ணமுமாக.. கமலியின் வயிற்றிலிருந்த கரு வளர்ந்து கொண்டே இருக்க.. கணவனும் மனைவியும் சொல்ல முடியாத பேரானந்தத்தில் திளைத்திருந்தனர்..
இது கமலிக்கு எட்டாவது மாதம்..
புத்தாண்டை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளே அனைவர் வீட்டு வாசலிலும் கூட்டி பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட ஆயத்தமாகினர்..
நிறை மாத கர்ப்பிணியாக வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் கமலி..
"இங்க ரெட் கலர் தானே குடுக்கணும்.."
"இல்ல அங்கிள் எல்லோ.. பாருங்க ஆப்போசிட்ல எல்லோ கலர் தான் குடுத்திருக்கு.."
"சரி" என்று வெள்ளை கோலமாவில் இழையாக இழுத்து வைத்திருந்த செம்பருத்தி பூ அவுட்லைனினுள் கலந்து வைத்திருந்த சிகப்பு கலர் பொடியை தூவிக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..
நாலா புறமும் சின்ன வாண்டுகள் ரங்கோலி மலர்களில் வர்ணப் படிகளை தூவி கொண்டிருந்தனர்..
கமலி கன்னத்தில் கை வைத்து தன் கணவன் கோலம் போடும் அழகை சிரிப்பும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவ்வப்போது அடங்காமல் நெற்றியில் புரளும் தலை முடியை சிலுப்பிக்கொண்டு கத்தையாக கோலப் பொடியை கையில் எடுத்து பூக்களுக்குள் தூவிக் கொண்டிருந்தான்..
"இந்த பக்கம் நீ வரவே கூடாது.. என்ன செய்யணுமோ சொல்லு.. நான் செஞ்சுகிறேன் என்று ஆணையிட்டு விட்டானே..!"
"இதுக்கு மேல இன்னொரு அவுட்லைன் இழுக்கணுமா கமலி.."
"ம்ம்.. ஆமா.. முதல்ல முழுசா கலர் குடுத்து முடியட்டும்.. அப்புறம் இன்னொரு முறை அது மேலேயே அவுட்லைன் போட்டுக்கலாம்.." என்றாள் கமலி..
உட்கார்ந்த மேனிக்கு நடுப்புறத்திற்கு சற்று தள்ளியிருந்த பூக்களில் வண்ணங்களை நிரப்பிக் கொண்டிருந்தவன் கோலத்திற்குள் விழுவது போல் தடுமாறி பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பாதங்களை வலிமையாக தரையில் ஊன்றிக் கொண்டான்..
"ஐயோ அங்கிள்.. உங்க கையிலிருந்து கோலப்பொடி கீழே விடமாட்டேங்குதே..! இப்படி போடணும்.." என்று சின்ன வாண்டு ஒன்று அவனுக்கு கோலம் போட கற்று தந்து கொண்டிருந்தது..
"எனக்கு அவ்வளவு தான் வருது..! மிச்சத்தை நீங்களே முடிச்சிடுங்க.." என்று எழுந்து நின்று இடுப்பில் கை வைத்து நிமிர்ந்தான் சூர்ய தேவ்..
கோலம் போட்டதில் இடுப்பு வலியாம்..
ஏற்கனவே கோலத்தின் அவுட்லைனை கமலி பேப்பரில் வரைந்து காட்டியதைப் போல் தரையில் அழகாக கோலமாக இழுத்து விட்டிருந்தான்.
வர்ணங்கள் தீட்ட மட்டுமே குழந்தைகள் உதவிக்கு வந்திருந்தனர்..
இப்போது முழு பொறுப்பையும் தங்களிடமே விட்டு விட்டதில் பொடிசுகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை..
"என்ன அதுக்குள்ள எழுந்தாச்சா..! முழு கோலத்தையும் போட்டு முடிங்க.. எத்தனை முறை நான் போட்ட கோலத்தை தண்ணீ ஊத்தி அழிச்சிருக்கீங்க.. இப்ப தெரியுதா கோலம் போடறது எவ்வளவு கஷ்டம்னு.." கமலி நாக்கை துரத்தி ஒழுங்காக காட்ட
மூச்சு வாங்கியபடி அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான் சூர்ய தேவ்..
மீண்டும் வெளியே வந்தவன் ஒரு பெரிய சால்வையை குளிருக்கு இதமாக அவள் மீது போர்த்தியவாறு அணைத்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்தான்..
"ஷு.. பசங்க இருக்காங்க.. தள்ளி உட்காருங்க.." கமலி நெளிந்தாள்..
"குழந்தைகள் கோலம் போடுவதில் கவனமா இருக்காங்க.. நம்மள யாரும் பாக்கல.." அவள் காதோரம் கிசுகிசுத்தான் சூர்யா..
"என்ன..? போய் கோலத்தை கம்ப்ளீட் பண்ணலையா..?"
"அதான் பசங்க போடுறாங்களே, அப்புறம் நான் வேற எதுக்கு..?"
"சின்ன குழந்தைகளுக்கு என்ன தெரியும் அவங்க கோலத்தை ஸ்பாயில் பண்ணிட்டா..?"
"பண்ணட்டுமே.. நாம போட்டு வைக்கற அழகான கோலத்தை விட அவங்க கோலமே போடத் தெரியாம அங்கங்க கலைச்சு வைக்கிறது இன்னும் கூடுதல் அழகில்லையா..!"
"ப்பா.. கவித கவித.." கமலி மெச்சுதலாக உதட்டை பிதுக்கினாள்..
"எல்லாம் உன்கிட்டருந்து கத்துக்கிட்டது தான்.." அவள் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
கோலம் போட்டு முடித்த குழந்தைகளை பொறுப்பாக அவரவர் வீட்டில் கொண்டு போய்விட்டு.. பிறகு தன் வீட்டு வாயிலுக்குள் நுழைந்தவன் கேட்டை சாத்திவிட்டு முன்னோக்கி நடந்தான்..
மூர்த்தி புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்றிருந்தார்..
அதே இடத்தில் அமர்ந்திருந்த கமலி கணவன் கம்பீரமாக நடந்து வரும் டக்.. டக் பாட்ஷா.. நடையழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
"என்னடி இப்படி பாக்கற.." அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது..
"சும்மாதான்" என்றவன் கண்கள் குறுக்கி.. உதடு குவித்து முத்தமிட்டாள்..
அவள் கொஞ்சலிலும் சிரிப்பிலும் ஆசை முத்தத்திலும் தன்னை மறந்து கோலத்தின் மீது நடக்கப் போனவனை.. "அய்யோ கோலம்.." என்ற கமலியின் குரல் உசுப்பி எழுப்பியது..
புருவங்களை மேல்நோக்கி உயர்த்தியவன்.. "உன்னை பார்த்துக்கிட்டே வேகமாக வந்தேனா கோலத்தை பார்க்க மறந்துட்டேன்" என்று உதடு கடித்தான்..
"கோலம் ரொம்ப நல்லா வந்திருக்குல்ல..!" இடுப்பில் கைவைத்து அவன் போட்ட கோலத்தை அவனே ரசித்து பாராட்டிக் கொண்டான்..
கமலியின் அளவிற்கு பிரமாதமாக கோலம் வரவில்லை என்றாலும் குழந்தைகளும் அவனும் சேர்ந்து போட்ட இந்த கோலத்தையும் ஒரு மாதிரியான அழகு என்று வைத்துக் கொள்ளலாம்..
"கோலம் எப்படி இருக்குன்னு நீ சொல்லவே இல்லையேடி..!" தலைசாய்த்து தன் கோலத்தை பார்த்தபடியே கேட்டான்..
"ரொம்ப அழகா இருக்கு.." ஒரு மாதிரியாக சிரித்து வைத்தாள் கமலி..
"என்னடி உன் முழியே சரியில்ல..!"
"ரொம்ப அழகா குழந்தை தனமா இருக்கு உங்கள மாதிரி..!"
"நல்லா இல்லைன்னு சொல்லாம சொல்ற.." அவன் முறைத்தான்..
"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றேன்.."
"சரி போதும் பனி பெய்யுது.. வா வீட்டுக்குள்ள போகலாம்.." அவளைக் கைப்பற்றி எழுப்பி நிற்க வைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான் சூர்யா..
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா..
பாடலை ஒலிக்க விட்டு அலைபேசியை மேஜையில் வைத்தான் சூர்யா..
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
அவள் தோள் வளைவில் ஆழ்ந்த முத்தமிட்டு இருக்கையில் அமர வைத்தான்..
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்..
கூடவே சேர்ந்து பாடிக்கொண்டு சமையலறைக்குள் சென்றான்..
கன்னத்தில் கை வைத்து சூர்யா அங்குமிங்குமாக நகர்ந்து தக்காளிகளை கழுவி எடுப்பதையும் வெங்காயம் உரிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..
பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் மின்னும்..
ரேபிட் ஃபயர் வேகத்தில் சமைத்துக் கொண்டே கமலியை பார்த்து கண்ணடித்தான் சூர்யா..
சூல் தாங்கிய வயிற்றை பிடித்துக் கொண்டு எழுந்து வந்தாள் கமலி..
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
அன்ன நடையோடு மேடிட்ட வயிற்றில் கை வைத்து நடந்து வரும் மனைவி பக்கத்தில் வந்து சேரும் வரை கண் எடுக்கவில்லை சூர்ய தேவ்..
கண்ணுக்கு நேராக பறந்த சின்னஞ்சிறு பூச்சியால் இமை சிமிட்டி.. பாவப்பட்ட பூச்சியை திட்டியவன்.. பக்கத்தில் வந்து நின்ற மனைவியிடம்.. "என்னடி ஏதாவது வேணுமா..? பால் காய்ச்சி தரவா.." என்றான் ஆழ்ந்த பார்வையோடு..
"நான் எங்க வந்தேன்.. தக்காளி சட்னியோட வாசனை என்னை இழுத்துட்டு வந்துருச்சு.." என்று அடுப்பில் வைத்திருந்த வாணலியை எட்டிப் பார்த்தாள் கமலி..
எண்ணெயிலிருந்து பிரிந்து கெட்டியாக கொதித்து கொண்டிருந்த தக்காளி தொக்கை பார்த்ததும்.. புளிப்பின் ருசியை உணர்ந்த சுவை மொட்டுக்கள் உமிழ் நீரை சுரக்க ஆரம்பித்திருந்தன..
"அப்ப நீ என்னை பாக்க வரல..! தக்காளி சட்னியை தேடி வந்திருக்க.. அப்படித்தானே.."
"தூரத்திலிருந்து பார்த்தாலும் நீங்க தெரிவீங்க.. ஆனா கிரேவியை பக்கத்துல வந்து தானே பார்க்க முடியும்.." ஒரு ஸ்பூன் தக்காளி தொக்கை எடுத்து ஒரு சொட்டு வாயில் வைத்தவள் கண்கள் மூடி சுவையில் சிலாகித்தாள்..
"சமையல்ல பயங்கரமா தேறிட்டீங்க சூர்யா.." அவன் தோளை தட்டிக் கொடுத்தாள்..
"இரு வந்துடறேன்..!" என்றவன் கூடத்திலிருந்து ஒரு இருக்கையை கொண்டு வந்து சமையல் கட்டில் ஓரத்தில் போட்டு அவளை அமர வைத்தான்.
தோசை சுட்டு அவள் தட்டில் போட போட ருசித்து உண்டு கொண்டிருந்தாள் கமலி..
"இன்னும் ஒன்னு..!"
"வேண்டாம்மா.. ஆயிலி ஃபுட்.. நெஞ்சு கரிக்கும்.. நைட்டு தூங்க முடியாது.. பால் குடிச்சிட்டு படு.."
"இன்னும் ஒன்னே ஒன்னுப்பா ப்ளீஸ்.. தக்காளி கிரேவி ரொம்ப நல்லா இருக்கு.. அதனால தானே கேட்கறேன்.." அவள் பாவப்பட்ட முகத்தை பார்த்த பிறகு இரண்டு தோசைகளை சுட்டு அவள் தட்டில் போட்டிருந்தான் சூர்யா..
உண்டு முடித்து இருவருமாக வீட்டுக்கு முன்புறமிருந்த நடைபாதையில் சிறிது நேரம் நடந்து விட்டு.. பிறகு வந்து கட்டிலில் படுத்தனர்..
கர்ப்ப காலத்தில் குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை அவன் விளக்கிக் கொண்டிருக்க.. 75 வது முறையாக அதைக் கேட்டுக் கொண்டே கண்கள் மூடி உறங்கிப் போயிருந்தாள் கமலி..
"க..கமலி.. எழுந்துரு.." அவளை மென்மையாக தட்டி எழுப்பினான் சூர்யா..
லேசான திடுக்கிடலுடன் எழுந்து அமர்ந்தாள் கமலி..
"என்னங்க ஆச்சு..!" உறக்க கலக்கத்தோடு விழிகளை திறந்து அவனை தெளிவாக பார்க்க..
"ஹாப்பி நியூ இயர்.." என்று அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் சூர்யா..
முகம் மலர்ந்து புன்னகைத்தாள் கமலி..
புத்தாண்டு பிறந்துவிட்டதை அறிவிக்கும் விதமாக தூரத்தில் எங்கெங்கோ வரிசையாக வான வேடிக்கைகள் படபடவென வெடித்துக் கொண்டிருந்தன..
"ஹாப்பி நியூ இயர்..!" அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..
இருவரும் கைகோர்த்து வயிற்றிலிருந்த குழந்தையை தொட்டு..
"ஹாப்பி நியூ இயர் பேபி..!" என்று சந்தோஷத்தோடு சொல்ல.. புத்தாண்டு வாழ்த்துக்களை எட்டி உதைத்து தன் அசைவின் மூலம் வெளிப்படுத்தினாள் அவர்களின் செல்ல தேவதை..
இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.. குனிந்து வயிற்றிலிருந்த குழந்தைக்கு முத்தமிட்டான் சூர்யா..
"ஹாப்பி நியூ இயர் கண்ணம்மா.. அடுத்த வருஷம் இந்நேரம் நீ எங்க கையில தவழ்ந்துட்டு இருப்ப.." என்றபடி அவள் வயிற்றை தடவி கொடுத்தான்..
"தவழறதா..? உங்க பொண்ணு நடக்கவே ஆரம்பிச்சிடுவா.." கமலி சிரித்துக் கொண்டே சொல்ல அவள் வயிற்றின் மீது எடையை சாய்க்காது அப்படியே படுத்துக்கொண்டான் சூர்யா.. அவன் தலையை வருடி கொடுத்தாள் கமலி..
"ஒரு காலத்துல நியூ இயர் வர்றது கூட தெரியாம இருட்டறையில் அடைஞ்சு கிடந்தேன்.. இந்த ரெண்டு வருஷத்துக்குள்ள என் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் நடந்துருக்கு.."
"ஐ ஃபீல் எக்ஸ்ட்ரீம்லி பிளஸ்ட்.. இல்லையா கமலி.." நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்..
மென்மையாக சிரித்தாள் கமலி..
"நானும் தான்.. அடுத்து என்ன செய்யப் போறோம்னு தெரியாம மனசு உடைஞ்சு போயிருந்தேன்.. இப்பதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்ச மாதிரி இருக்கு.." என்றபடி இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டாள்..
இருவருமாக சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு புத்தாண்டை மகிழ்வோடு கொண்டாடினர்..
பிறகு சாமி படத்தின் முன்பு நின்று தங்களுக்காகவும் தங்கள் குழந்தைக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டு வந்து படுத்துக் கொண்டனர்..
கமலி ஓய்வாக வீட்டில் தான் இருக்கிறாள்.. சூர்ய தேவ் மட்டும் அவ்வப்போது மருத்துவமனை சென்று வருகிறான்..
சிங்காரம் இந்த நேரத்தில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூடமாட உதவியாக இருக்குமே என்று சூர்ய தேவ் நினைக்கத்தான் செய்தான்..
ஆனால் கடவுள் புண்ணியத்தில் சிங்காரம் தனது மகன் மருமகள் பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக செட்டில் ஆகிவிட்டாராம்..
அப்பாவின் அருமையை புரிந்து கொண்டு இனி எங்கேயும் போய் வேலை செய்ய வேண்டாம் எங்களுடனே இருந்து விடுங்கள் என்று அவரது மகன் அன்பு கட்டளை விதித்து விட்டானாம்..
போனில் அழைத்து சூர்ய தேவ்வுடன் சந்தோஷமாக பேசினார்..
சிங்காரம் ஊருக்கு சென்றதிலிருந்து அவ்வப்போது சூர்யதேவ்விற்கு அழைத்து தன் நிலைமையை தெரியப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்..
ஆமாம் இல்லை என்று மட்டுமே சொல்பவன்.. ஒரு கட்டத்தில் கமலியை திருமணம் செய்து கொண்டதைப் பற்றி சொல்லி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான்..
கமலியும் டாக்டரும் திருமணம் செய்து கொண்டதை விட.. தன் முதலாளி தன்னிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீண்ட நேரம் சகஜமாக பேசுகிறார் என்ற உண்மைதான் சிங்காரத்தை ஆச்சரியப்படுத்தியது..
இதோ கமலி கர்ப்பம் தரித்து எட்டு மாதங்கள் வரை நடந்த அத்தனை விஷயத்தையும் ஒன்று விடாமல் சிங்காரத்திற்கு தெரியப்படுத்தியாயிற்று.. சிங்காரம் கமலியிடமும் சில நேரங்களில் பேசுவார்..
குழந்தை பிறந்தவுடனே வந்து பார்க்கிறேன் டாக்டர் என்று சொல்லியிருந்தார் சிங்காரம்.. மூர்த்தியிடம் கூட ஒன்றிரண்டு முறை பேசியிருந்தான் சூர்யா..
சிங்காரத்தைப் போல் ஒரு எஜமான விசுவாசம் கொண்ட உண்மையான ஊழியன் கிடைப்பது மிக கடினம்.. அந்த இடத்தில் வேறு யாரையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள சூர்ய தேவ்வுக்கு இஷ்டமில்லை.. என் மனைவியை நானே பார்த்துக் கொள்வேன் என்று முடிவெடுத்து விட்டான்..
இடையில் ஒரு நாள் வருண் வீட்டுக்கு வந்திருந்தான்..
"போன் பண்ணும் போதெல்லாம் ஆள் இல்லைன்னு உன் செகரட்டரி விட்டு சொல்ல சொல்லி அவாய்ட் பண்ணிட்டு.. இப்ப எதுக்குடா என் வீட்டுக்கு வந்த.. வெளிய போடா.." வாசலில் கை வைத்து வழி மறித்து நின்றான் சூர்ய தேவ்..
"ஏய்.. உன்ன பாக்க யாருடா வந்தா.. நான் கமலியை பார்க்க வந்தேன்.." அவன் கையைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்து சோபாவில் ஜம்பமாக அமர்ந்து கொண்டான் வருண்..
"வாங்க வருண்..' கமலி அவனை இன்முகமாக வரவேற்றாள்..
வழக்கமான விசாரிப்புகள் உரையாடல்கள்..
"வாடா வாடா நான் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டேன்.. உள்ள வந்து உட்காரு.." வருண் அழைக்க.. முறைத்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தவன் உள்ளே வந்து வருணை குனிய வைத்து முதுகில் ஒரு அடி போட்டு பக்கத்துல அமர்ந்து கொண்டான்..
"ஆமா மாடி படிக்க பக்கத்துல என் இடுப்பு உயரத்துக்கு ஒரு பெரிய பூச்சாடி இருந்ததே அது எங்க போச்சு..!"
"அது உடைஞ்சு போச்சு.." தடுமாற்றத்துடன் பிடரியை வருடியபடி சொன்னவன் கமலியை ஓரக்கண்ணால் பார்த்தான்..
"என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்ற.. உங்க வீட்ல இருந்த நிறைய ஆண்டிக் பீஸ் எதையும் காணுமே..! எல்லாத்தையும் வித்து தீர்த்துட்டியா இல்ல எடைக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கி தின்னுட்டியா.. காஸ்ட்லி பொருள்டா.. அதெல்லாம் பிரெஸ்டிஜியஸ் ரேர் பீஸ் தெரியுமா.."
"அப்படி இல்லைடா.. அதைவிட ப்ரஷியஸ்ஸா ஒரு விஷயம் நடந்துச்சா..! அதுல எல்லா பொருளும் உடைஞ்சு போச்சு.."
"அப்படி என்ன நடந்துச்சு..?" வருண் புரியாமல் கேட்க இருவரும் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தனர்..
"என்னடா ரெண்டு பேரும் முழிக்கறிங்க.."
"அதாவது மச்சான் பொருட்களை யூஸ் பண்ணனும்.. மனிதர்களை நேசிக்கணும்.."
"இப்ப எதுக்கு நீ சம்பந்தமே இல்லாம பேசுற.." வருண் குழம்பினான்..
"அது.. இந்த பொருட்களை எல்லாம் பத்திரமா பாத்துக்கணுங்கற கான்ஷியஸ் என்னை டிப்ரஷன்ல கொண்டு போய் விட்டுட கூடாது இல்ல.. அதனாலதான்.."
"அதனால..?"
"நானே எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உடைச்சிட்டேன்.."
"அடப்பாவி என்னடா இது லாஜிக்.."
"அத விடுடா.. என்ன சாப்பிடுற.. பிரியாணி.. பாஸ்தா.. நூடுல்ஸ்.. பிஸிபேளாபாத்.. பகாளாபாத்.. வாங்கிபாத்?"
"இத்தனையும் செய்ய போறியா நீ..?" வருண் விழிகளை விரித்தான்..
"ஏதாவது ஒன்னு சொல்லுடா.."
"பிரியாணி..!" வருண் கண்களில் ஸ்டார் மின்னியது..
"சரி வா சமைப்போம்.." வருணை இழுத்துக் கொண்டு சூர்ய தேவ் சமையலறைக்குள் சென்றுவிட.. கமலி சிரித்துக் கொண்டே தலையிலடித்துக் கொண்டாள்..
அன்று மருத்துவமனையில் கமலிக்கு பிரியமான தோழிகளான செவிலியர்களும்.. கூடவே ஷீலாவும் மூன்று நான்கு பெண் மருத்துவர்களும் முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று சூர்ய தேவ் அறைக்குள் ஆஜராகி இருந்தனர்..
இத்தனை பேர் எதுக்காக வந்திருக்காங்க அப்படி என்ன பேச வேண்டி இருக்கு..! ஒருவேளை மேனேஜ்மென்ட்ல ஏதாவது பிரச்சனையோ என்று பலவிதமான யோசனைகளோடு புருவங்கள் இடுங்கி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..
"டாக்டர்.. நாங்க எல்லாரும் சேர்ந்து கமலிக்கு வளைகாப்பு பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.." தயங்கி பேச்சை ஆரம்பித்தாள் ஷீலா ..
என் மனைவிக்கு சீமந்தம் பண்ண நீங்கள் யார் என்று டாக்டர் மறுத்துவிடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு..
சூர்ய தேவ் புருவங்கள் ஆச்சரியத்தோடு ஏறி இறங்கின..
"ஓ அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல.. தாராளமா பண்ணலாமே..!" என்று அவன் சொல்ல அங்கிருந்த அத்தனை பேருக்கும் முகம் கொள்ளா புன்னகை..
"ஆனா எனக்கு இதையெல்லாம் பத்தி பெருசா எதுவும் தெரியாது.. என்னென்ன ஏற்பாடு செய்யணும்னு என்கிட்ட சொல்லுங்க.. நான் அரேஞ்ச் பண்றேன்.. என் வீட்டுலயே கமலிக்கு வளைகாப்பு பண்ணிக்கலாம்.. முழுக்க முழுக்க செலவு மட்டும் என்னுடையது.. மத்த விஷயங்களை நீங்க பாத்துக்கோங்க.. ஏதாவது உதவி வேணும்னா கண்டிப்பா என்னை கூப்பிடுங்க.."
டாக்டர் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்று தோன்றியது அவர்களுக்கு..
"ஓகே டாக்டர்.." அங்கிருந்த அனைவருமே தலையசைத்தனர்..
"கமலிக்கு இப்போதைக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்..!" என்று சொல்ல அதற்கும் சரி என்று ஆமோதித்தனர்..
அதன்படி கமலியை அன்று செக்கப்காக மருத்துவமனை அழைத்து வந்திருந்தான் சூர்யா..
"என்ன முக்கியமான ஸ்டாஃப் நர்ஸ் டாக்டர்ஸ்.. யாரையுமே காணோம்..!" கமலி விழித்தாள்..
"முக்கியமான கான்பிரன்ஸ் மீட்டிங்.. விஜே ஹாஸ்பிடலுக்கு எஃபிசியன்ட்டான எக்ஸ்பீரியன்ஸ்டான டாக்டர்ஸ் நர்ஸையும் மட்டும் அனுப்பி வச்சிருக்கேன்.." எதையோ சொல்லி சமாளித்தான்..
"கொஞ்சம் வேலை இருக்கு கமலி.. இப்படியே உட்காரு.. ஒரு ரெண்டு மணி நேரத்துல வீட்டுக்கு போயிடலாம்.." என்று அவளை தன்னோடு நிறுத்தி வைத்துக்கொண்டான்..
பிறகு போனில் குறுஞ்செய்தி வந்த பிறகு கமலியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினான்..
வீடு விழாக்கோலம் கொண்டிருந்தது.. வாசலில் மாக்கோலத்தோடு அலங்கார விளக்குகளும் பூத்தோரணங்களும் வீட்டை அலங்கரித்தன.. ஒன்றும் புரியாமல் கேள்வியாக சூர்யதேவ்வை பார்த்தாள் கமலி..
வா போகலாம்.. கமலியை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான் சூரியதேவ்..
வீட்டு வாசலில் வழிமறித்து மாயா.. சர்ப்ரை...ஸ்"
என்று கண்கள் உருட்டி புன்னகைக்க.. கமலி ஆனந்த அதிர்ச்சியோடு.. என்ன நடக்குது என்ற ரீதியில் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்..
அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த மருத்துவமனை தோழிகள்.. "வா கமலி நேரமாச்சு" என்று அவளை கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றனர்..
அவளால் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.. கமலியை அலங்கரித்து ஜடை பின்னி.. ஒப்பனையோடு தேவதையாக மாற்றி அழைத்து வந்து கூடத்தில் அவளுக்காக அமைக்கப்பட்டிருந்த திவான் போன்ற பீடத்தில் அமர வைத்தனர்..
அதற்குள் வேட்டி சட்டையோடு புது மாப்பிள்ளை போல் தயாராகி வந்திருந்தான் சூர்யதேவ்.. மனைவியை விழுங்குவது போல் பார்த்தபடி அவளருகே வந்து அமர்ந்தான்..
இளம் மஞ்சள் வண்ணத்தில் பாக்கு நிற பார்டரில் ஓரமாக மெல்லிய தங்க சரிகை.. ஆங்காங்கே தங்க நிற புட்டாக்கள் பதித்திருந்த பட்டு புடவையை அணிந்திருந்தாள்..
ஒட்டியானம்.. கம்மல் ஜிமிக்கி.. கழுத்தில் நகைகள் கையில் வளையல்.. கால்களில் கொலுசு.. என அனைத்துமே தங்கம்.. சூர்ய தேவ் உதவிக்காக ஷீலாவை அழைத்துக் கொண்டு.. தன் மனைவிக்காக இத்தனை நகைகளை பார்த்து பார்த்து வாங்கியிருந்தான்..
மருத்துவமனைக்கு வந்த பிறகு சூர்ய தேவ் கமலிக்காக வாங்கியிருந்த நகைகளை பற்றி பிரமிப்போடு சொல்லி வாய் வலித்துப் போனாள் ஷீலா.. எல்லோருக்கும் கொஞ்சம் பொறாமை தான்.. ஆனால் அதையும் மீறி சந்தோஷித்தனர் அவள் தோழிகள்..
இப்போது அத்தனை அழகோடு மிளிர்ந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு..
"அழகு பொண்டாட்டி.. சர்ப்ரைஸ் எப்படி..? இன்னைக்கு உனக்கு சீமந்தம்.." கண் சிமிட்டினான் சூர்யா..
"அது கூட தெரியாமலா..?" கண்கலங்கி போனாள் கமலி..
அம்மா அப்பா வாசனை தெரியாத தனக்கு உண்மையான அன்புள்ளம் கொண்ட இத்தனை தோழிகளும் கண்ணிறைந்த கணவனும் கிடைத்தது வரமல்லவா.. இப்போது குட்டியாய் ஒரு பாப்பாவும் கிடைத்திருப்பதில் சந்தோஷ குற்றாலம் கண்களில் பெருகியது..
அவள் விழிகளை துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட்டான் சூர்யதேவ்..
டாக்டரின் அழகை நிதானமாக பருகி முடிப்பதற்குள்.. "டாக்டர் வேஷ்டி சட்டையில செமையா இருக்காரு.." பின்புறமிருந்து கேட்ட குரல்களில் பொறாமையாக முகத்தை சுருக்கி அவனைப் பார்த்தாள் கமலி..
புருவம் உயர்த்தி என்ன என்று அவன் கேட்ட தோரணையில் கோபம் எங்கோ பறந்து போனது..
அக்கம் பக்கத்து வீட்டு குட்டி பிள்ளைகளின் பெற்றோர்களை நேரில் சென்று அழைத்திருந்தான் சூர்யதேவ்..
வயதான பெண்மணி ஒருவர் மஞ்சள் குங்குமம் இட்டு.. சந்தனம் பூசி பன்னீர் தெளித்து மலர் தூவி பூ முடிக்கும் விழாவை துவங்கி வைத்தார்..
வரிசையாக ஒவ்வொரு பெண்களுமாய் வந்து இருவருக்கும் நலுங்கு வைத்தனர்..
வளைத்து வளைத்து மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோக்களில் சிரித்த முகமாய் அழகாய் விழுந்தான் சூர்யா..
"நீ நலுங்கு வைக்கலையா டி..!" தோழியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் கமலி..
"நான் வைக்க கூடாது.."
"ஏன்..?" கமலின் முகம் சுருங்கியது..
"டூ மந்த்ஸ் பிரக்னன்ட்.. மாசமா இருக்கும்போது நலுங்கு வைக்க கூடாதுன்னு அந்த பாட்டி தான் சொன்னாங்க.. இப்பதான் கேட்டுட்டு வந்தேன்.." வெட்கத்தோடு சொன்னவளை.. இழுத்து அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் கமலி..
வருண் வேட்டி சட்டையில் அட்டகாசமாய் வந்திருந்தான்.. கூடவே அந்த தேம்பாவணியை அழைத்துக்கொண்டு..
கமலியும் மாயாவும் உறுத்தலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"என்னடா உன் மனைவிய கூட்டிட்டு வரலையா.. வீட்டுக்கு வந்து அவங்களையும் சேர்த்து தானே இன்வைட் செஞ்சேன்.." சூர்யதேவ் பரபரத்தான்..
"அதை ஏன்டா கேக்கற.. அவள கூப்பிட்டா இவ வர முடியாது.. இவ வந்தா அவளை கூப்பிட முடியாது.."
"என்னடா ரெண்டு பொண்டாட்டிகாரன் மாதிரி பேசற.."
"அப்படிதாண்டா என் நிலைமை போகுது.." சலித்துக் கொண்டான் வருண்..
"இந்த பொண்ணு உன்னோட பேஷண்ட் தானே.." சூர்ய தேவ் சந்தேகமாக கேட்க..
"ஆஆஆ.. அப்படித்தான்" என்றான் வருண்.. அதற்கு மேல் சூர்யா பெரிதாக எதையும் தோண்டி துருவி கேட்டுக் கொள்ளவில்லை..
தேம்பாவனி சகஜமாக இருவரோடும் ஒட்டிக்கொண்டாள்.. குழந்தைகளோடு சேர்ந்து குதூகலித்து குத்தாட்டம் போட்டாள்..
ஆரஞ்சு வண்ண சோளி.. பச்சை வண்ண பாவாடை.. ஒரு பக்கமாக வழிய விட்ட துப்பட்டாவோடு வீடெங்கிலும் துருதுருவென ஓடிக் கொண்டிருந்தாள்..
கமலியை நோக்கி ஏதோ பேச குனியும் போது தேம்பாவணியின் கழுத்து தாலி வெளியே வந்து விழுந்தது.. சாதாரணமாக அதை எடுத்து ஜாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு வேலையை பார்த்தாள்..
"யார் இந்த பொண்ணு ரொம்ப க்யூட்டா அழகா இருக்கே..!" என்று மற்றவர்கள் ஆர்வமாக ஆராயும் விதத்தில் நடந்து கொண்டாள் தேம்பாவணி..
"கமலி.. வருண் இந்த பொண்ண பாக்கற பார்வையே சரியில்ல.." மாயா அவள் காதுக்குள் கிசுகிசுக்க நிமிர்ந்து பார்த்தாள் கமலி..
அவளுக்கென்னவோ வருண் அந்த பெண்ணை எரிச்சலாக முறைத்துக் கொண்டிருப்பது போல் தான் தோன்றியது..
"இல்லடி.. சரியாத்தான் பாக்கறாரு உனக்கு தான் பிரமை.." என்றாள் கமலி..
"ஐயோ..! எனக்கு தலையே சுத்துது" என்று மாயா கணவனின் தோள் மீது சாய.. அவளை தனியே அழைத்துச் சென்று அமர வைத்தான் விஷ்ணு..
சூர்யா மாயாவிற்கு மாதுளம் பழச்சாறு கொண்டு வந்து பருகக் கொடுத்தான்..
அருமையான விருந்துக்கு பின் வந்தவர்களுக்கு சின்ன பரிசுப் பொட்டலம் கொடுக்கப்பட்டது..
குழந்தைகளுக்கு பொம்மை பென்சில் பாக்ஸ்.. போன்ற அன்பளிப்புகள் வழங்கப்பட்டன..
வருணோடு கைகோர்த்துக்கொண்டு விடைபெற்று சென்றாள் தேம்பாவணி..
மாயாவும் விஷ்ணுவும் மேல் அறையில் ஓய்வெடுப்பதற்காக சென்றுவிட்டனர்..
விழா முடிந்து வீடே அமைதியாகியது..
அறைக்குள்..
கமலியின் அணிகலன்கள் ஒவ்வொன்றாய் கழற்றி விட்டு பூ போல் ஆடையை களைந்து.. மெட்டர்னிட்டி கவுனை அணிவித்தான் சூர்யா..
"சந்தோஷமா..?" புருவங்களை ஏற்றி இறக்கி குறுகுறுப்போடு கேட்க.. கண்ணீர் வடிந்த விழிகளோடு அவனை அணைத்துக் கொண்டாள் கமலி..
முகமெங்கும் முத்தம்.. இதழில் முத்தம்.. அடுத்ததாக அவள் கரங்கள் அவன் ஆடைகளை மெதுவாக களைந்து கொண்டிருக்க..
"ஏய்.. நோ.. இப்ப கூடாது கமலி..!" அவளிடமிருந்து விலகினான் சூர்யதேவ்..
போடா..!" என்றவள் அவனை இழுத்து படுக்கையில் தள்ளி இருந்தாள்..
"கமலி.. வேண்டாம்டா.."
"க...மலி.. ஏய் விடுடி.. அது என்னோடது..!"
"இப்ப என்னோடது.. ஷூ.. பேசக்கூடாது.."
"க..க.. க.."
"என்ன வார்த்தை திக்குது.."
கமலி குறும்பு சிரிப்போடு கேட்க.. இன்பத் திணறலோடு மூச்சு வாங்கி கண்ணுக்கு முன் தெரிந்த சொர்க்க சிலையை கண்டு பிரமித்து அமர்ந்திருந்தவன்.. அதன்பிறகான வேலைகளை தனதாக்கிக் கொண்டான்..
மென்மையாக.. மிக மென்மையாக.. இதைவிட ஒரு அருமையான தாம்பத்தியம் அவர்களுக்கிடையே நிகழ்ந்திருக்கவே முடியாது..
வழக்கம்போல் அவள் கைகோர்த்துக்கொண்டு இத்தனை நாள் தவிப்பை தீர்த்து வைத்தவளுக்கு "தேங்க்ஸ் கமலி.." நெற்றியில் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் சூர்யா..
பிரசவ அறை..
"கமலி உனக்கு வலிக்கவே இல்லையா.." ஆச்சரியமாக கேட்டான் சூர்ய தேவ்..
"வலிக்குதுங்க.."
"ஆனா முகத்தை பார்த்தா ஒண்ணுமே தெரியலையே..?"
"வலியை என்ஜாய் பண்றேன்.. ஒவ்வொரு முறை வின் வின்னு வலிக்கும் போது குழந்தை பிறக்கப்போகுதுன்னு சந்தோஷமா இருக்குது.."
"கமலிமா..!"
"எவ்வளவு அவமானம்.. எத்தனை பேச்சு.. எவ்வளவு அழுகை.. அதையெல்லாம் கம்பேர் பண்ணும் போது இந்த வலியெல்லாம் ஒன்னுமே இல்லை.. இது மாதிரி சிரிச்சுகிட்டே நாலு குழந்தை கூட பெத்துக்குவேன்.." என்றவளை நெற்றி முட்டி சிரித்தான் சூர்யதேவ்..
"கூலா இரு கமலி.. பயப்படாதே.."
"யோவ்.. நான் ஒன்னும் பயப்படல.. உனக்கு பயமா இருந்தா வெளியே போ.. மீரா பாத்துக்குவாங்க.." கமலியின் அதிரடி பேச்சில் திகைத்துப் பார்த்தான் சூர்ய தேவ்..
நல்ல வேலை ஷீலாவும் சாந்தியும் மாஸ்க் அணிந்திருந்ததால் அவர்கள் சிரித்தது இவனுக்கு தெரியவில்லை..
"அதெல்லாம் முடியாது.. என் பொண்டாட்டிக்கு நான் தான் பிரசவம் பார்ப்பேன்.. நான் இல்லாம எப்படி.." என்று அவள் பக்கத்திலேயே நின்று கொண்டான் சூர்யா..
பொறுக்க முடியாத வலியில் மட்டும் கமலியின் லேசாக கத்தினாள்..
இதோ கமலியின் சாயலை உரித்துக் கொண்டு தாமரை போல் பெண் குழந்தை சூர்ய தேவ் கைகளில்..
குழந்தையை சுத்தம் செய்யும் வரை கூட பொறுக்க முடியாமல் இரத்ததிட்டுகளோடு தன் மகளுக்கு முத்தமிட்டான்..
எத்தனையோ பெண்களுக்கு பிரசவம் பார்த்து.. பிறந்த சிசுக்களின் தொப்புள் கொடியை இயந்திரத்தனமாக கத்தரித்தவன்.. இன்று அழுகையும் சிரிப்புமாக உணர்ச்சிகளோடு கலந்து குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரித்தான்..
அன்பான மகள் வந்தாள்..
அம்பானி நான் ஆகிறேன்…
இந்த இன்ப மகாராஜா
பெற்ற புது ரோஜா…
எலிசபெத் ராணியின் பேத்தியே…
தாயே தாயே மகளென வந்தாய்…
தந்தை சிந்தை நலமுற வந்தாய்…
கண்ணீர் தேங்கிய விழிகளோடு குழந்தையை கமலியின் மார்பில் படுக்க வைத்தான்..
மீண்டும் ஒரு ஆனந்த கண்ணீர் சங்கமம்.. குழந்தையை அணைத்துக் கொண்டாள் கமலி..
"தேங்க்ஸ் கமலி.."
"தே.. தேங்க்யூ சூர்யா.."
அவள் நெற்றியில் தன் உதடுகளை பதித்து கண்களை மூடினான் சூர்யா..
சாந்தியும் ஷீலாவும் டாக்டரின் புது புது பரிமாணங்களை பார்த்து வியந்து கொண்டிருந்தவர்கள்.. அவன் தந்தையாக மாறிய இந்த காட்சியையும் கண்டு மெய் மறந்து நின்றனர்..
மறுபடி சூர்ய தேவ் டாக்டராய் மாறி அவர்கள் இரண்டு பேரையும் அதட்ட வேண்டியதாய் போனது.. அப்போதும் கூட அவன் முகத்தில் சிரிப்பு மாறவில்லை..
மகள் பிறந்திருக்கிறாளே..! கோபம் மிரட்டல் கடுமை இதற்கெல்லாம் என்ன ஸ்பெல்லிங் என்று கூட மறந்து போனது..
அவன் தனிமையை மனைவி பறித்துக் கொண்டாள்..
இனி இருவருக்குமான தனிமையை மகள் பறித்துக் கொள்வாள்..
அழுகையும் சிரிப்பும் கூச்சலுமாய் இனி சந்தோஷத் தொல்லைகள் மட்டுமே..!
ஐந்து வருடங்கள் கழித்து..
"அதோ அதோ அந்த கடை தான்.. பத்தாயிரம் ரூபாய் கிரே கலர் பட்டுப்புடவையை அங்கதான் பார்த்தேன்.. பக்கத்து வீட்டு ரோஷினி கூட கட்டி இருந்தாளே..!" ராஜேஸ்வரி கடையை கை காண்பித்து கேட்க.. சலிப்போடு பெருமூச்சு விட்டான் அஷோக்..
குழந்தையை கூட கையில் பிடிக்காமல் பொறுப்பற்று நின்று கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி..
சாலையை நோக்கி ஓடிய தன் மகளை இழுத்து வைத்துக் கொண்டவன்..
"புடவை.. நகை பணம்.. சினிமா.. ஊர் சுத்துறது இதையெல்லாம் விட்டா வேற ஒண்ணுமே தெரியாதா உனக்கு.. உடம்பு சரி இல்லாத என் அம்மாவை பாத்துக்காம மகளோட வீட்டுக்கு துரத்தி அனுப்பியாச்சு.. என்னையும் குழந்தையையும் கூட சரியா கவனிச்சுக்கிறது இல்ல.. அதைவிட முக்கியமான வேலை என்ன இருக்கு உனக்கு..!" என்று காய்ந்தான்..
"சும்மா வாய் பேசாதீங்க பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்க துப்பில்லை.. பேச்சு மட்டும் நீளுது.. ஆரம்பத்துல வாரிசு கொடுத்தவ.. குடும்ப பெருமையை காப்பாத்தினவனு ஆசை ஆசையா பேசுறது.. அப்புறம் ஆச தீந்த பிறகு வள்ளு வள்ளுன்னு எரிஞ்சு விழறது.. ச்சீ.. என்ன புத்தியோ.. நன்றி கெட்ட ஜென்மம்.." முகத்தை சுளித்தாள்..
ஒவ்வொரு வேலைக்கும் வீட்டில் ஆள் இருக்கிறது.. உடலுக்கு அதிகமான உழைப்பு தராமல் நன்றாக உண்டு கொழுத்து.. படுத்து படுத்து தூங்கி மூன்று மடங்காக பருத்திருந்தாள் ராஜேஸ்வரி..
எடையை குறைத்தால் தான் அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்று டாக்டர் கூறிவிட்டார்..
அதுவும் இல்லாமல்.. கணவன் மீது கொஞ்சமும் அன்பு கரிசனமோ கிடையாது.. அவன் சம்பாதித்து கொண்டுவரும் பணம் பொழுதுபோக்கு.. தோழிகளுடன் அரட்டை.. நகை ஷாப்பிங்.. இதுதான் அவளுக்கு பிரதானம்..
சொல்லிச் சொல்லி பார்த்தவன் அவள் திருந்தாமல் போனதில் நொந்து போயிருந்தான்.. மோகம் வடிந்து விட்டது..
"நான் ஒன்னும் உங்க முதல் மனைவி மாதிரி குறையுள்ளவளோ அனாதையோ கிடையாது.. என்கிட்ட உங்க வேலைய காட்டாதீங்க.. அப்புறம் குழந்தையை தூக்கிட்டு என் பிறந்து வீட்டுக்கு போயிட்டே இருப்பேன்.. விவாகரத்தோடு சேர்த்து நீங்க ஜீவனாம்சமும் கொடுக்க வேண்டியது வரும்.. நீங்க சம்பாதித்து சேர்த்து வைச்ச பணத்தை மொத்தமாக உருவிடுவேன் ஞாபகம் இருக்கட்டும்.." ரோட்டிலேயே அவள் சண்டையை ஆரம்பித்து விட.. நிம்மதி இல்லாமல் பெருமூச்சு விட்டான் அஷோக்..
எப்படியாவது இவளிடமிருந்து தப்பித்து ஓடினால் போதும் இப்போதெல்லாம் அவனுக்கு இப்படி தான் தோன்றுகிறது.. ஆரம்பத்தில் இவள் குணமென்ன.. இப்போது நடந்து கொள்ளும் விதமென்ன.. கமலியை பற்றி பேச இவளுக்கு என்ன தகுதி இருக்கிறது.. அவள் கால் தூசி வருவாளா இவள்..!
யோசித்துக் கொண்டே தற்செயலாக எதிர் திசையை பார்க்க.. ஐந்து மாத வயிற்றோடு பூரித்து பேரழகியாக தன் கணவனோடு ஒட்டி உறவாடி கொஞ்சிக் கொண்டிருந்தாள் கமலி..
கனவுதானா.. கண்களை கசக்கினான்.. இல்லையே உண்மைதான்..
அடேங்கப்பா என்ன அழகு..!
அஷோக்கிற்கு இதயம் எகிறி குதித்தது.. அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஃபோட்டோ பார்த்து தெரிந்து கொண்ட பிறகு ஏமாற்றத்திலும் கோபத்திலும் துவண்டவன் அவளை மேற்கொண்டு தொந்தரவு செய்வதை விட்டிருந்தான்.. அதன்பிறகு இப்போதுதான் அவளை பார்க்கிறான்..
ராகவியும் மாலினியும் கூட கோயம்புத்தூரில் கமலியை பார்த்ததாக அஷோக்கோடு பகிர்ந்து கொள்ளவில்லை.. அதில் எந்த சுயநலமும் இல்லை.. கமலி சந்தோஷமாக வாழட்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே..
பக்கத்தில் நிற்பது அவள் கணவனா.. போட்டோவில் பார்த்த ஞாபகம்..
போட்டோவை விட நேரில் இன்னும் கூடுதல் வசிகரமாக தெரிகிறானே..!
பொறாமை தீ மூண்டது அவனுள்..
இளநீர் கடையில் நின்றிருந்தனர் அவர்கள்..
அவள் இரு பக்கத்திலும் கொஞ்சி நிற்கும் இரண்டு பெண் குழந்தைகள்..
ஒன்று அப்படியே கமலியின் ஜாடையை உரித்து வைத்திருந்தது.. இன்னொன்று வேறு ஜாடை..
ஓஹோ இது மூன்றாவதா..! மேடிட்டிருந்த அவள் வயிற்றைப் பார்த்தான்..
கமலி இளநீரை குடித்துக் கொண்டிருக்க.. சூர்யதேவ் ஸ்ட்ராவை இழுத்து அவனும் கொஞ்சம் உறிஞ்சினான்..
கமலி வெட்கப்பட்டு கன்னம் சிவந்து போக அவளை காதலோடு பார்த்தான் சூர்ய தேவ்..
பார்த்துக் கொண்டிருந்த அஷோக்கிற்கோ அடிவயிறு பற்றி எரிந்தது..
பக்கத்திலிருந்த காரிலிருந்து இறங்கி மாயாவும் விஷ்ணுவும் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டனர்..
இவங்கள பாக்க தான் சென்னை வந்திருக்காங்களோ..! அவனுக்குள் கேள்வி..
கமலியோடிருந்த இரண்டில் ஒரு பெண் குழந்தை விஷ்ணுவோடு ஒட்டிக்கொண்டது..
இது அவங்க குழந்தை போலிருக்கு.. பதில் கிடைத்தது..
கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள் கமலி..
அவளின் இந்த சந்தோஷ சிரிப்பை இப்போதுதான் பார்க்கிறான் அஷோக்..
அதைவிட அதிகமாக சிரித்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்.. ஏதோ அரட்டைக் கச்சேரி போலிருக்கிறது.. சந்தோஷ அலைகள் மட்டுமே அங்கே அடித்துக் கொண்டிருக்க அதற்கு நேர் மாறாக இங்கே முகம் கருத்து நின்றான் அஷோக்..
"என்னத்த அப்படி ஆஆன்னு பார்த்துட்டு இருக்கீங்க.. போகலாம் வாங்க..!" ராஜேஸ்வரி அதட்டி அழைக்க.. கை நழுவ விட்ட சொர்க்கத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டு ராஜேஸ்வரியை பின்தொடர்ந்தான் அஷோக்..
இரண்டு வருடங்கள் கழித்து..
இரவின் சாம்ராஜியத்தில்.. நிலவை கூட தொலைத்துவிட்டு நட்சத்திர விருந்தாளிகளை திருப்பி அனுப்பி வைத்துவிட்டு வானம் வெறுமையாக காட்சி அளித்தது.. ஒரு குளிரான இதமான இரவு பொழுது..
உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…
ஆளுக்கொரு பக்கமாக ப்ளூடூத் இயர் போனை மாட்டிக் கொண்டு கணவனும் மனைவியும் கைகோர்த்தபடி வீட்டு படிக்கட்டுகளை தாண்டி அந்த நடைபாதையில் கைகோர்த்து நடந்து கொண்டிருந்தனர்..
ஏழு வயது ஸ்ரீநிதி கையை வீசி லெப்ட் ரைட் லெப்ட் ரைட் என்றபடி அவர்கள் பின்னால் நடந்து கொண்டிருக்க.. இரண்டு வயதான இஷாந்த் அம்மா அப்பாவை போல் நானும் வாக்கிங் செல்கிறேன் பேர்வழி என்று தத்தி தத்தி அழகுநடையோடு அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தான்..
பெற்றவர்களுக்கு சிரிப்புதான்..
முத்தம் கொடுத்தானே…
இதழ் முத்துக்குளித்தானே…
இரவுகள் இதமானதா…
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்…
வெட்கம் என்ன சத்தம் போடுதா…
மயக்கத்தில் அவன் தோள்களில் சாய்ந்தாள் கமலி.. அவனை முத்தமிட வேண்டும் என்ற தவிப்பு..
எங்கிருந்து..?
முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் காவலர்கள் போல் லெப்ட் ரைட் மார்ச் பாஸ்ட் ஓடிக்கொண்டிருக்கிறதே..!
உலகம் எனக்கென்றும் விளங்காதது…
உறவே எனக்கின்று விலங்கானது…
அடடா முந்தானை சிறையானது…
இதுவே என் வாழ்வில் முறையானது…
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…
உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…
கமலியை ஆழ்ந்து பார்த்தான் சூர்ய தேவ்..
"குட்டிமா தம்பி கூட போ.." அவன் மகளை தூக்கி மகனோடு நிற்க வைத்துவிட்டு.. அவர்கள் கண்களை ஏமாற்றி இரவின் தனிமையை பயன்படுத்திக் கொண்டு மனைவியை கட்டியணைத்து அவள் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்..
ஒரு நொடிக்கும் குறைவான முத்தம்.. பெரிய பெரிய மீன்களை விட சின்ன சின்ன மீன்கள்தான் சாப்பிடுவதற்கு ருசி அதிகமாம்..
அதுபோல் பட்டுப்படாமலும் திருட்டுத்தனமாக வைக்கப்படும் இந்த சின்ன சின்ன முத்தங்கள்தான் போதையேற்றுகின்றதோ..
மருத்துவன் முத்தமிட்டு விலகி.. மீசையை திருகியபடி அவளை மையலோடு பார்த்தான்..
சின்ன சின்ன ஊசிகளாய் மழைத்துறல்கள் அவர்கள் மீது விழுந்தன..
"ஏய்.. சின்ன குட்டிகளா வீட்டுக்குள்ள போங்க.. மழை வருது.." சூர்ய தேவ் கத்தவும் குழந்தைகள் தலையில் கை வைத்துக் கொண்டு அவசரமாக வீட்டுக்குள் ஓடின..
மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த நேரத்தில் அவனிடமிருந்து பிரிந்து ஓடியவளை இழுத்து அணைத்து உதட்டோடு உதடு சேர்த்து ஆழ்ந்த முத்தம் வைத்தான் சூர்யா..
நீண்ட முத்தங்கள் மட்டும் ருசி இல்லையா என்ன.. இது வேறுவிதமான பேரின்பம்.. அனுபவித்து கண்கள் மூடினாள்
கமலி..
"டாடி மம்மி.. சீக்கிரம் வாங்க.." உள்ளே ஓடி மறைந்த தலைகள் மீண்டும் எட்டிப் பார்த்தன..
சிரித்துக் கொண்டே கைகோர்த்து படி இருவரும் வீட்டை நோக்கி ஓடினார்கள்..
குழந்தைகளை அணைத்துக் கொண்டு இருவரும் உள்ளே சென்று விட கதவு சாத்தப்பட்டது..
இதற்காகவே காத்திருந்தது போல் மழைத்துளிகள் இன்னும் அதிகமாக வேகமெடுக்க.. வருண பகவானின் ஆவேச முத்தங்களை தங்களுக்குள் அமைதியாக உள்வாங்கிக் கொண்டன தோட்டத்து ரோஜா மலர்கள்..
சுபம்..

Last edited: