- Joined
- Jan 10, 2023
- Messages
- 32
- Thread Author
- #1
முதலிரவில் இயல்பான தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்கள் போல் எதுவும் இல்லை..
"எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" கண்களோடு கலந்து கேட்கப்பட எந்த கேள்வியும் இல்லை.. தேகங்கள் சங்கமிக்கும் முன் உனக்கு சம்மதமா என்ற சம்மதம் கோரல் வார்த்தைகளும் இல்லை..!! நேரடியாக அவளோடு இழைந்தான்.. இணைந்தான்.. இருவருக்கும் இடையேயான உறவு இப்போது வரை அப்படித்தானே சென்று கொண்டிருக்கிறது..!!
ஆனால் அவள் தம்பி தங்கை இருவரையும் வெளியூர் ஹாஸ்டல் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுவதாக சொன்ன வாக்கை மட்டும் நிறைவேற்றி இருந்தான்..
கணவன் மனைவி இருவருமாக பிள்ளைகளை காரில் அழைத்துச் சென்று கொடைக்கானலில் ஒரு உயர்தர கான்வென்டில் சேர்த்து விட்டு வந்தனர்.. அவன் உணர்ச்சிகளற்ற இறுகிய முகம் கண்டு பிள்ளைகள் இருவரும் அவனோடு பெரிதாக ஒட்டி உறவாடவில்லை..
ரதியை முன்னிருக்கையில் அமர வைத்துக் கொண்டாலும்.. அக்காவோடு தம்பி தங்கைகள் அவ்வப்போது கலகலத்துக் கொண்டுதான் வந்தனர்.. ரதி சிரித்து பேசினாலும் தம்பி தங்கையை பிரிய போகும் சோகம் அவள் முகத்தில் இழையோடியதை கண்கள் சுருக்கி கூர்ந்து நோக்க தவறவில்லை அவன்.. புதிய இடம் புதிய சூழல் எப்படி ஜீவிக்க போகிறோம் என்ற கலக்கம் பிள்ளைகளின் முகத்திலும் தெரிந்தது..
ஆனந்திக்கு பதினான்கு வயது.. ஹரிஷ் பனிரென்டு வயது சிறுவன்.. உலகம் தெரியாத வயதில் தன் வீட்டில் தப்பிதவறி காண நேரும் கீழ்த்தர காட்சிகள் எதுவும் மனதில் ஆழ்ந்து பதிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு..
பள்ளி கட்டிடம் ஹாஸ்டல் சூழ்நிலை அங்கே தங்கும் வசதி.. வார்டன் பழகும் விதம் அனைத்திலும் ரதிக்கு பரம திருப்தி..
"உனக்கு ஓகே தானே..? அட்மிஷன் போட்டுடலாமா..?" லேசாக தலை சாய்த்து புருவங்களை நெறித்து கேட்டான் அவன்..
இதைப்போல் மத்த விஷயங்களிலும் சம்மதம் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என தோன்றிய எண்ணங்களை ஓரம் தள்ளிவிட்டு "ஓகே தான்.." என்று வேகமாக தலையசைத்தாள்..
"உங்களுக்கு பிடிச்சிருக்கா..? ஏதாவது பிரச்சனைனா இப்பவே சொல்லிடுங்க..!!" பிள்ளைகளிடம் குரலில் கடுமை பிரதிபலித்த போதிலும் அதிலிருந்து அக்கறையை உணர முடிந்தது..
"எங்களுக்கு ஓகே..!!" என்றாள் ஆனந்தி..
"நாங்க இங்கேயே படிக்கிறோம்.. இந்த ஸ்கூல் ஹாஸ்டல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்றான் ஹரிஷ்.."
"ஒழுங்கா படிக்கணும்..!!" என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினான்..
"டெரர் மாமா.." அக்காவிடம் மெல்லிய குரலில் கேலி செய்தான் ஹரீஷ்..
அட்மிஷன் முடித்து தம்பி தங்கைகளை ஹாஸ்டலில் சேர்த்த பிறகு.. கண்ணீரோடு இருவருக்கும் முத்தமிட்டு.. ஆயிரம் அறிவுரைகள் சொல்லி அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டாள் ரதி.. ஐரா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை..
"ஒழுங்கா படிக்கணும்.." அதே வார்த்தையை மிரட்டலாக அழுத்திச் சொன்னவன்..
"நேரமாச்சு.. இருட்டும் முன்னாடி டவுனிலிருந்து கீழே இறங்கணும்.." என்று அவளை அவசரப்படுத்தி காரில் ஏற செய்திருந்தான்..
மொத்தமாக இருவருக்கும் கல்வி கட்டணமாக எழுபதாயிரம் ரூபாய் செலவு .. !! கட்டு கட்டாக பணம் எடுத்து வைத்து கையெழுத்து போட்டதை அவனோடு நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. பற்றாக்குறைக்கு போக்குவரத்து உணவு.. காருக்கு டீசல் என்ன மொத்தமாக எண்பதாயிரம் ரூபாயை தன் வங்கி கணக்கிலிருந்து கரைத்திருந்தான் ஐரா..
ஆனால் அதற்கு பிரதிபலனாக அவள் கொடுத்த விலை சற்று அதிகம் தான்..
அந்த வாரம் முழுக்க அவன் அதிகப்படியான தேவைகளை தீர்க்க வேண்டியிருந்தது.. அவன் தொல்லைகளை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது..
நேரங்காலமில்லாமல் படுக்கையறை கதவு மூடப்பட்டு உள்ளுக்குள் முனகலும் சிணுங்கலுமாக காம போர் நிகழ்ந்து கொண்டிருக்க.. பணம் கொடுத்து படிக்க வைப்பதற்காக வட்டி வசூலித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மட்டுமே அவள் நெஞ்சை சூழ்ந்திருந்தது..
ஒருவேளை இந்த பணத்தை செலவழிக்காமல் போயிருந்தாலும் அவளிடம் கணவன் என்ற உரிமையோடு எப்படித்தான் நடந்து கொள்வானா தெரியவில்லை..!!
மூன்று வேளை ஆகாரம் போல்.. ஒரு நாளைக்கு நான்கு முறை தாம்பத்தியமும் புது கணவன் மனைவி இடையே சகஜம் என்ற விஷயம் அவளுக்கு புரியவில்லையோ என்னவோ..!!
எப்படி இந்த உடலுறவில் என்னதான் இருக்கிறதோ..!! சலிக்கவே சலிக்காதா..
பீறிட்டு கிளம்பும் ஆசைகள் அலுக்கவே அலுக்காதா..?
இந்த ஆண்களுக்கு உள்ளுக்குள் புதைந்திருக்கும் தன் மிருகத்தனமான வெறியை தீர்த்துக் கொள்ள ஒரு பெண் தேவை..!! அவன் சிவந்த கண்களும் காய்ச்சல் கண்டது போல் கொதிக்கும் தேகமும் உரசுகையில் அவளுக்கு இப்படித்தான் தோன்றும்..
சிறு வயதிலிருந்து ஆண்களை இந்த கோணத்திலேயே பார்த்த அவளால் வேறு எப்படி சிந்திக்க முடியும்..!!
அவளைப் பொறுத்தவரை சமைப்பது.. துணி துவைப்பது அவனுக்கான கடமைகளை செய்வது போல் தாம்பத்தியமும் ஒரு பணி..!!
அவன் விருப்பம் போல் வளைவாள்.. நெகிழ்வாள்.. ஆனால் உள்ளார்ந்த அன்புடன் எதையும் செய்வதில்லை.. வெறும் நன்றிக்கடன்.. கொடுக்கல் வாங்கல்..!!
காதல் இருந்திருந்தால் தாம்பத்தியத்தின் அருமை புரிந்திருக்கலாம்.. அவன் முரட்டு தோலுக்குள் ஒளிந்திருக்கும் கையளவு இதயம் இனிமையானதா கடுமையானதா என்று ஆராய்ந்திருக்கலாம்..
அவள் கூற்றுப்படி ஒட்டுமொத்த ஆண்களும் கெட்டவர்கள்.. சதை மோகம் கொண்ட மிருக ஜென்மங்கள்..
தங்களை நிராதரவாக விட்டு ஓடிப் போன தந்தையிலிருந்து ஆரம்பித்த இந்த வெறுப்பு.. அன்னையை தேடி வரும் ஆண்கள் தன்னையும் லச்சையின்றி பார்ப்பதில் நீடித்து.. தற்போது தன்னை ராட்சசன் போல் பிச்சி தின்று கொண்டிருக்கும் ஐராவதன் வரை தொடர்கிறது..
"எந்த காலேஜ்ல சேரனும்.. என்ன படிக்கணும் எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டியா..?" அன்று அவளோடு முட்டி மோதிக்கொண்டே கேட்டான்..
இருவரும் பொறுமையாக அமர்ந்து பேசிக்கொள்ளும் நேரம் மிகக் குறைவு.. பின்னிப்பிணைந்து உருளும் நேரம் தான் அதிகம்..
கேட்டு முடித்துவிட்டு கர்மமே கண்ணாக அவன் தேடலை தொடர்ந்து கொண்டிருக்க.. பதில் சொல்ல சக்தியும் இல்லை வார்த்தைகளும் இல்லை.. அத்தோடு அந்த பேச்சு முடிந்து போனது..!! சொல்ல வேண்டிய விஷயம் அவளுக்கு மறந்தும் போனது...
இரவில் அவனுக்காக தோசை சுட்டு வேர்கடலை சட்னி அரைத்து பரிமாறும் போது மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்..
உணவோடு சேர்த்து அவளையும் பார்வையால் விழுங்கினான்..
ரப்பர் பேண்டுக்குள் அடங்காமல் வெளியே வந்து விழுந்த முடிகளும் சோர்ந்த முகமும்.. தூக்கத்துக்கு ஏங்கும் விழிகளும் உலர்ந்த உதடுகளுமாக.. சத்து கெட்டு போய் அகோரமாக தெரிகிறேன் என்னை போய் இப்படி பார்க்கிறானே..? ரசனை கேட்ட ஜென்மம் என்று உள்ளுக்குள் நொந்தாள்..
ஆனால் அந்த நிலையிலும் அவன் கண்ணுக்கு தான் அழகாகத்தான் தெரிகிறோம் என்ற விஷயம் அவளுக்கு புரியவில்லை.. அழகாக தெரிகிறாள் என்பதை விட அழகாக இருந்தாள்.. கண்ணில்லாதவன் கூட தொட்டு தீண்டி பெண்ணவளின் பேரழகை தெரிந்து கொள்வான்..
"ஜி வி கே இன்ஜினியரிங் காலேஜ்.. பி டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ்.." அவள் சொன்னதை காதில் வாங்காமல்..
கலைந்து முகத்துக்கு நேராக தொங்கிக் கொண்டிருந்த கற்றை கூந்தலை ஓரமாக ஒதுக்கிவிட்டு.. கன்ன கதுப்பையும் அவள் உதட்டையும் விரலால் கட்டை விரலால் அழுத்தமாக தேய்த்தான்..
"என்ன சொன்ன?" என்றவன் அவள் இடுப்போடு கை போட்டு தன்னருகே இழுத்து அமர்த்தி கொண்டான்..
"இல்ல நீங்க சாப்பிடுங்க..!!" அவன் மீது அக்கறை ஒன்றும் இல்லை.. சாப்பிடும் போது அமைதியாக இருப்பான்.. ஆனால் பேசும்போது அப்படி இருப்பதில்லையே..!! முரட்டு கரங்களால் மார்பை அழுத்தும் போது இதயத்துடிப்பும் கூட நின்றுவிடுமோ என்ற பயம்..
"சொல்ல வந்த விஷயத்தை சொல்லு.." அவள் கழுத்தில் புதைந்து ஆழ்ந்து மூச்சிழுத்தான்..
சங்கரேஸ்வரி சுகர் மாத்திரை போட்டு அறையில் படுத்து விட்டாள்.. "உன் புருஷனுக்கு மட்டும் நீ சமைச்சுக்கோ.. என் பக்கத்துல வரக்கூடாது.. எனக்கு எதுவுமே செய்ய வேண்டிய அவசியமில்லை.. உன் கை தொட்டாலும் பாவம்.." என்று மருமகளை தள்ளியே வைத்திருந்தாள்..
அவன் அணைப்பில் நெளிந்து கொண்டே.. மீண்டும் கல்லூரியின் பெயரையும் படிக்க வேண்டிய பாடப்பிரிவையும் அழுத்தமாக சொல்லி முடித்தாள் ரதி மஞ்சரி..
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை..
எப்போதும் அவனுக்கு முன்பாக ரதி சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும்..!! அவள் உணவருந்திய பிறகு தான் அவனுக்கு பரிமாற வேண்டும்.. இது அவள் கணவனின் உத்தரவு எழுதப்படாத சட்டம்..
"எல்லார் வீட்லயும் புருஷனுக்கு பின்னாடி தான் பொண்டாட்டி சாப்பிடுவா..!! இங்கதான் எல்லாம் தலைகீழா நடக்குது.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ..!!" சங்கரேஸ்வரி ரதிக்கு மட்டும் கேட்கும் படி தலையில் அடித்துக் கொள்வாள்..
இன்றும் அப்படித்தான்.. அவளை அமர வைத்து சாப்பிட வைத்து வெறிக்க வெறிக்க பார்த்திருந்தவன் ரதி உண்டு முடித்த பிறகே தனக்கு பரிமாறச் சொல்லி இருந்தான்..
ஆனால் உணவுக்கு பதில் அவன் இதழ்கள் அவளை தின்று கொண்டிருந்தன..
கூடத்தில் தொடங்கிய ஆட்டம் படுக்கையறையில் முடிவு பெற்றது.. தோசை காய்ந்து போனது.. சட்னி ஊசி போனது..
சங்கரேஸ்வரியின் சுப்ரபாதத்தில்தான் பொழுது விடிந்தது..
அவன் வலிய கரங்களிலிருந்து தப்பித்து ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்..
"சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்காம அப்படி என்ன..? நல்ல குடும்பத்தில பிறந்திருந்தா ஒரு வீடான வீட்டுல எப்படி குடும்பம் நடத்தணும்னு தெரிஞ்சிருக்கும்.. கழிசடை குடும்பத்திலிருந்து பொண்ணு எடுத்தா இதோ இப்படித்தான இருக்கும்.. படிச்சு படிச்சு சொன்னேனே.. எங்க கேட்டான்.. வெள்ள தோல பார்த்ததும் மகுடிக்கு ஆடற நாகம் மாதிரி மயங்கி விழுந்துட்டானே..!! சிங்கம் மாதிரி ஒத்த பிள்ளைய பெத்தேன்.. கண்ணுக்கு நிறைவா ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கலாம்னா அதுவும் என் ஆசையை நிறைவேத்தாம கழிசடையை கட்டிக்கிட்டு வந்து வீணா போய் நிக்குதே..!!" சங்கரேஸ்வரி கூடத்தில் புலம்பிக்கொண்டே அமர்ந்திருக்க.. ரதி அவசர அவசரமாக சமையல் அறையை சுத்தம் செய்தாள்..
"என்னம்மா என்ன ஆச்சு..?" இடுப்பில் லுங்கியை முடிந்து கொண்டே வந்து நிற்பான்..
அவன் கணீர் குரலில் ஈஸ்வரியின் கதறல் வார்த்தைகள் அப்படியே கம்மிய குரலோடு அடங்கிப் போகும்..
இத்தனை உயரமானவன் எந்த கடையில் லுங்கி வாங்குவானோ என்ற சந்தேகம் அவளுக்கு எப்போதும் உண்டு.. இரவில் அந்த கைலிக்கு பதில் அவளை தான் உடுத்திக் கொள்கிறான்.. காலையில் குறைந்த நேரம் மட்டுமே அந்த லுங்கி..
அதிலும் மொட்டை மாடியில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு.. கர்லாக்கட்டையை உருட்டுவதும் சுழற்றுவதும் தம்பிள்சை.. புடைத்த புஜங்களோடு மேலும் கீழுமாக ஏற்றி இறக்குவதையும்.. ஒரே ஒருமுறைதான் பார்த்திருக்கிறாள்..
ஆனால் அந்த ஒரு முறையில் அவள் கண்டு கொண்டது.. என்னவோ இவன் உலக பேரழகன் போல் நாலா பக்கம் மாடிகளிலும் பெண்கள்.. துணி காய போடுவதைப் போல் ஓரக்கண்ணால் இவனை பார்த்து ரசிக்கும் லட்சணத்தைதான்..!!
அதன் பிறகான அந்த நேரங்களில் மாடி பக்கம் போவதே இல்லை..
இந்த பெண்கள் பார்க்க வேண்டுமென்றே மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்கிறானா..? தலையிலடித்துக் கொண்டு விறுவிறுவென கீழே இறங்கி விட்டாள்..
அதன் பிறகு அந்த நேரங்களில் மாடி பக்கம் போவதே இல்லை..
அவன் கீழே இறங்கி வந்த பிறகுதான் துவைத்த துணி காயப்படுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்..
சவாரி செல்லும்போது பேண்ட் சட்டை.. மீண்டும் இரவு வீடு வந்ததும்.. உடை கூட மாற்றாது அவளை இழுத்து அணைத்து தன் பரந்த மேனியில் சுருட்டிக் கொள்வான்..
அன்றும் கைவளைவில் அவளை வைத்துக் கொண்டு அந்த விஷயத்தை சொன்னான்..
"அந்த காலேஜ்ல பேசிட்டேன்.. நீ எடுத்த மார்க்குக்கு மெரிட்ல சீட் கிடைக்க வாய்ப்பு இருக்காம்.. டொனேஷன் கிடையாது.. ஆனா பீஸ் கட்டணும்.. எப்படியும் காலேஜ் பீஸ்.. புக்ஸ் எல்லாம் சேர்த்து 40லருந்து 50 ஆயிரம் வந்துடும்..!! என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்..
"இருந்த பணத்தை வச்சு இந்த வீடு கட்டினேன்.. மிச்சமிருந்தது உன் தம்பி தங்கச்சிங்க படிப்புக்காக செலவு பண்ணியாச்சு.. இனி நான் சம்பாதிச்சுதான் உன்னை படிக்க வைக்கணும்.." என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்..
"பரவாயில்லை எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் நான் கவர்ன்மென்ட் காலேஜ்ல சேர்ந்து படிச்சுக்குறேன்.."
"கவர்மெண்ட் காலேஜ் கோட்டா எல்லாம் ஃபுல்.. விசாரிச்சு பார்த்துட்டேன்.. அதுவும் இல்லாம இந்த காலேஜ்ல கம்யூட்டர் கோர்ஸ் படிச்சா தான் நல்ல எதிர்காலம் இருக்குமாம்.. ஏதோ கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் பண்ணி வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்புவாங்களாம்.. எனக்கென்ன தெரியும் ஐஜிதான் சொன்னார்.. எப்பாடுபட்டாவது உன்னை அங்கு சேர்த்து படிக்க வைக்கணுமாம்.. ஆனா அதனால எனக்கென்ன லாபம்..?" அவன் உதடுகள் எகத்தாளமாக வளைந்தன..
அவள் பதில் சொல்லவில்லை..!! என்ன கேட்கப் போகிறான் அடுத்து என்ன செய்யப் போகிறான் அனைத்தும் அவளுக்கு அத்துபடி..
முட்டி மோதிக் கொண்டிருந்த அவன் உடன்பிறப்பு.. மிச்ச விஷயங்களை சொல்லாமல் சொல்லியது..
நாளையில இருந்து ஒரு வாரத்துக்கு நான் வீட்டுக்கு வரமாட்டேன்.. வெளியூர் சவாரி..!! அத்தோடு முடித்துக் கொண்டவன் அவள் இதழோடு இதழ் பொருத்தினான்..
விடிய விடிய அவளை உறங்கவிடாமல் வித விதமான தேடல்கள்..
"ஏன் இப்படி ஒரு சலிப்பு.. நாளையிலிருந்து என் தொல்லை இல்லாம நிம்மதியா தானே இருக்க போற..!! இன்னைக்கு ஒரு நாள் எனக்காக கஷ்டப்படறதுல என்ன குறைஞ்சிட போகுது..?" எரிச்சலும் மோகமும் உறுமலும் அவனிடம்..
பரவாயில்லை கஷ்டம் என்ற வரை புரிகிறதே அதுவரை சந்தோஷம்..
ஒரு வாரத்திற்கான வலியையும் சோர்வையும் ஒரே நாளில் தந்திருந்தான்..
அவன் விட்டுச்சென்ற இந்த ஒரு வாரம் கூட வழக்கமாக அவன் விலகியிருக்கும் நாட்கள்தான்.. சரியான தந்திரவாதி.. ஏன் மாதத்தில் பத்து நாட்கள் மட்டும் ஆழ்ந்த தேடல்கள் இல்லாமல் விலகி இருக்கிறான்.. அவளுக்கு புரிவதே இல்லை..
வீட்டில் இருந்தால் விலகி இருக்கும் இந்த நாட்களிலும் அவளை தொடாமல் இருப்பதில்லை.. அதுவரை இந்த ஒரு வாரம் அவளுக்கு பூரண ஓய்வு..
ஏழு நாட்கள் கழித்து கண்கள் ஜிவ்வென்று சிவந்து சோர்வாகத்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்..
சரியான சாப்பாடு.. தூக்கம் இல்லாத ஓய்வில்லாத சவாரி.. தனக்காக தான் இந்த உழைப்பு என்றவரை அவளுக்கு புரிந்திருந்தது.. அவன் கோலம் கண்டு ஏதோ இனம் புரியாத உறுத்தல் அவளை கசக்கி பிழிந்தது..
ஐம்பதாயிரம் ரூபாய் பணக்கத்தையை அவள் கையில் திணித்தான்.. "பத்திரமா வை நாளைக்கு காலேஜ் போகணும்.. அட்மிஷன் போடணும்" என்றான் உறங்க தவித்த சோர்வான கண்களோடு..
"ஏண்டா அடிக்கடி வெளியூர் பயணம்னு ஓய்வில்லாம உறக்கமில்லாம இப்படி உடம்பை கெடுத்துக்கணுமா.. உள்ளூர்ல வேலை செஞ்சா ஆகாதா..!! ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கேன்.. இரும்பு மாதிரி நின்ன புள்ள இப்படி கண்ணு சிவந்து.. சோர்ந்து போய் வீட்டுக்கு வர்றியே பெத்தவ மனசு தாங்குமா.." சங்கரேஸ்வரி தன் புலம்பலை ஆரம்பித்து விட..
"அம்மா பேசாதே.. வாய மூடு..!! வெளியூர் சவாரி போனாதான் நிறைய பணம் கிடைக்கும்.." என்பதோடு நிறுத்திக்கொண்டான்.. மகனிடம் செல்லுபடியாகாமல் அடுத்து அவள் வார்த்தை தாக்குதல்கள் அனைத்தும் ரதியை நோக்கி பாய்ந்தன..
"இப்படி உடம்பை கெடுத்துகிட்டு சம்பாதிச்சு கொண்டு வந்து இவகிட்ட கொட்டனுமா.. ஆத்தாளும் மகளும்.. பல ஆம்பளைங்க கிட்ட சம்பாதிக்க வேண்டியதை நல்லா வக்கனையா ஒருத்தன பிடிச்சுக்கிட்டு அவன்கிட்ட இருந்து உறிஞ்சி எடுக்குறாளுங்க..!! என் சாபம் இவளுங்களை சும்மா விடாது நாசமா போயிடுவாளுங்க.." சங்கரேஸ்வரியின் விஷம் தோய்த்த வார்த்தைகளில் கூனி குறுகிப்போனாள் ரதி..
இப்படி மானங்கெட்டு மரியாதை இழந்து படித்து தான் ஆக வேண்டுமா..!! என்ற விரக்தி நெஞ்செங்கும் காடியின் கசப்போடு பரவியது.. சங்கரேஸ்வரியின் பேச்சுக்கள் தன்னை துவள செய்யும் நேரங்களில் எல்லாம் அழுது அழுது ஓய்ந்து போவாள் ரதி..
அவள் மனநிலை புரியாமல் ஒரு வாரத்திற்கான தேடலை.. தனக்குள் அடைந்து கிடக்கும் தாபத்தை தன் மனைவியிடம் தீர்த்துக் கொள்வதில் மட்டுமே குறியாக இருப்பான் ஐரா..
தன் விருப்பப்படி படிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாது அவள் எண்ணங்களை கூட தன் வசப்படுத்தி கொள்வான்..
மஞ்சு.. மஞ்சு. மஞ்சு.. முத்தங்களுக்கு இடையே அவன் குரல் கொஞ்சி குழையும்..
அவன் கடுமையை கூட சகித்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சலும் குழைவும் அவளுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை..
அதிலும் மார்பில் புதையும்போதும் அந்த மென்மையின் கிறக்கத்தில் உதடுகள் உரசும்போது அடிக்கடி அப்படி அழைப்பான்..
மோகங்களில் தகித்திருக்கும் இரவுகளில் அவள் மனம் மட்டும் அனலில் வெந்து புழுங்கி கொண்டிருக்கும் நிலை ஆரம்ப கட்ட இரண்டொரு நிமிடங்கள் மட்டுமே.. அடுத்தடுத்த நொடிகளில் வேறு எதையும் யோசிக்க முடியாத படிக்கு அவளை கருந்துளையாக தனக்குள் இழுத்துக் கொள்வான் ஐரா.. இந்த நேரத்தில் மட்டும் அவள் கவன சிதறல் எங்கே தொலைந்து போகும் என்று புரிவதே இல்லை.. அவளை தனக்குள் சுழற்றி இழுத்துக் கொள்ளும் கைதேர்ந்த வித்தையை எங்கே பயின்றானோ..
பிரிவு தேடல்களின் வேகமும்.. முத்தங்களின் ஆவேசமும்.. எல்லை மீறும் காம கலைகளும் அவளுக்கு வேறு மாதிரியான புரிதலை தந்திருக்கிறது..
கல்லூரியில் சேர்த்ததிலிருந்து.. ஒவ்வொரு முறையும் செலவை சரிகட்ட.. இப்படித்தான் வெளியூர் பயணம் மேற்கொள்கிறான்..
அவன் உழைப்பு புரிகிறதோ இல்லையோ.. அந்த உழைப்புக்கு ஈடாக அவளிடமிருந்து அவன் வசூலித்துக் கொள்ளும் தாம்பத்திய சுகம்.. கண்களில் புரையோடுவதைப் போல் உறுத்துகிறது..
இதோ இப்போது செமஸ்டர் பீஸ் 25 ஆயிரம் ரூபாய்க்காக.. இரண்டு நாட்கள் வெளியூர் சவாரி முடித்து நேரடியாக அவளை தேடி வந்திருக்கிறான்..
பெரிய பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகளும்.. அல்ட்ரா மாடன் யுவதிகளும் படிக்கும் அந்த கல்லூரியில்.. காரில் சாய்ந்து பொருந்தாமல் நின்று அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான் அந்த டாக்ஸி டிரைவர்..
தொடரும்..

Last edited: