• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
55
திருமலை செல்வம் சிறுவயதில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் சேர்ந்து டூவீலர்களை பழுது பார்க்க பழகியிருந்தான்..

கற்றுக்கொண்ட கலை மறந்து விடக்கூடாது என்பதற்காக வளர்ந்து வேலையில் சேர்ந்த பின்னும் சின்னதாக வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மெக்கானிக் கடை வைத்து அவ்வப்போது அங்கு வரும் இரு சக்கர வாகனங்களை பழுது பார்த்து தருவான்..!

செல்வம் வேலைக்கு சென்று விடுவதால் பெரும்பாலும் கடை பூட்டியே தான் கிடக்கும்.. விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் கடையில் உட்காருவான்.. "ஆமா இந்த கடையில பெருசா என்ன வருமானம் கொட்டுதுன்னு வேலை மெனக்கெட்டு ஞாயித்துக்கிழமையானா இங்க வந்து உட்கார்ந்து கிடக்கறீங்களோ தெரியல..! வாரத்தில் ஒரு நாள் தானே லீவு.. வீட்டுல நிம்மதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல..!" நதியா ஆதங்கமாய் நொடித்துக் கொள்வாள்.

என்னவோ அவனுக்கு ஓய்வெடுப்பதை விட இந்த கடையில் வந்து அமர்ந்தால் ஏதோ ஒரு நிம்மதி.. தேவையான உபகரணங்களை வாங்கி போட்டு கடையை கொஞ்சம் விஸ்தரிக்க வேண்டும் என்பது அவன் எண்ணம்..! அதை செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

வீட்டுக்கும் மதில் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கைவசமிருந்த உபகரணங்களை வைத்து சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப் அது..

பஞ்சர் ஒட்டுவது..‌ டியூப் மாற்றுவது..‌ ஆயில் மாற்றுவது..‌ மேலும் சின்ன சின்ன ரிப்பேர் ஏதாவது இருந்தால் பார்த்து தருவான்..!

பெரிய ரிப்பேர் என்றால் "இங்க பண்ண முடியாதுண்ணா.. வேற கடை பாத்துக்க..! என்கிட்ட டூல்ஸ் இல்லண்ணா புரிஞ்சுக்கோ.." என்று வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவான்..

இப்போது கூட்டாளியாக காளி வந்து சேர்ந்து விட்டதில் இன்னும் உற்சாகமாக உணர்ந்தான் செல்வம்.. ஓய்வு நேரங்களில் இருவருமாக கடையில் சென்று அமர்ந்து கொள்வது வழக்கம்.. தனக்குத் தெரிந்த ரிப்பேர் சம்பந்தப்பட்ட வேலைகளை காளிக்கும் கற்றுத் தந்தான்..! ஒருமுறை சொல்லித் தந்தால் போதும் பக்கென பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் காளியின் திறமை கண்டு செல்வத்துக்கு வியப்புதான்..

"உன் மூளை ரொம்ப ஷார்ப்பு காளி..! எனக்கென்னமோ நீ ரொம்ப பெரிய ஆளா வருவேன்னு தோணுது.. எப்படியாவது கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணி இந்த மெக்கானிக் ஷெட்டை பெருசாக்கி உன் கிட்டயே தந்துடறேன்..! பொறுப்பா பொழைச்சுக்கோ.." பீடியை ஊதி தள்ளியபடி செல்வம் சொன்னபோது கூட அமைதியாக இருந்தான் காளி..

அன்றொரு நாள் வீட்டில் தண்ணீர் மோட்டர் ரிப்பேராகிவிட.. தெருக்குழாயிலிருந்து தண்ணீர் தூக்கி வந்த அனு கால் இடறி கீழே விழுந்து குடத்தையும் தவற விட..‌ செல்வத்தோடு மெக்கானிக் செட்டில் அமர்ந்திருந்த காளி அண்ணனுக்கு முன் வேகமாக எழுந்து ஓடினான்..

அவன் வருவதற்குள் அனு சுதாரித்து எழுந்து விட்டாள்.. தண்ணீர் குடத்தை அவள் தூக்கும் முன் அவன் எடுத்து தன் தோளில் சுமந்து கொண்டு அவளோடு சேர்ந்து நடந்தான்..

செல்வத்தை நச்சரித்து இரவோடு இரவாக மோட்டாரை ரிப்பேர் செய்ததெல்லாம் வேறு கதை..

அனுவுக்கு காளி இப்படி ஒட்டி உரசி உதவி செய்வதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை..

செல்வம் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறான்..‌

நதியாவோ அல்லது பவித்ராவோ தண்ணீர் பிடிக்க வெளியே சென்றாலோ அல்லது கடைக்கு சென்றாலோ உதவி செய்கிறேன் வேறு வழி என்று அவர்கள் முன்னால் சென்று இவன் நிற்பதேயில்லை..!

அனு என்றால் மட்டும் ஊருக்கு முன்னால் ஓடிப்போய் அவளிடம் உரசுகிறான்..

கடைக்கு போய் வந்தாலும் வேலைக்கு புறப்பட்டாலும் அவளை பின்தொடர்ந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்..

"அண்ணா இவன் ஏன் வெறி புடிச்ச நாய் மாதிரி என் பின்னாடியே வரேறானாம்..! கொஞ்சம் என்னன்னு கேளு..!" கொதித்துப் போய் அண்ணனிடம் வெடித்தாள் அனு..

"பாதுகாப்புக்காக வர்றானோ என்னவோ..?"

"என்னை பாதுகாத்துக்க எனக்கு தெரியாதா..! இத்தனை நாள் இவன்தான் எனக்கு செக்யூரிட்டி வேலை பார்த்தானா..! உனக்காகதான் பாக்கறேன்.. இனிமே என் பின்னாடி வந்தா மரியாதை கெட்டுப் போயிடும்.. சொல்லி வை..!" அனுபமா அண்ணனிடம் சீறி விட்டு சென்றாள்..

"ஏண்டா காளி.. அவதான் கன்னா பின்னான்னு கத்தறாளே தேவையில்லாம எதுக்காக அவ பின்னாடி போய் வாங்கி கட்டிக்கற.. நீ அவ நல்லதுக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றேன்னு எனக்கு தெரியுது.. ஆனா அவளுக்கு புரியலையே..! நீ என்ன செஞ்சாலும் அவ உன்னை தப்பாத்தான பார்க்கறா.. விட்டு தொலைச்சிட்டு உன் வேலைய பாரு.." என்று கூட சொல்லிப் பார்த்து விட்டான்.. காளி அடங்குவதாய் இல்லை..

ஒரு விஷயம் மட்டும் செல்வத்திற்கு நன்றாகவே புரிந்தது..! காளிக்கு அனுபமா மீது விருப்பம் இருக்கிறது.. அவளை நேசிப்பதன் பிரதிபலிப்புதான் இந்த பார்வையும் பின்தொடரலும்..! அக்கறையை அன்பை அவனுக்கு தெரிந்த வகையில் காட்டுகிறான் என்று செல்வம் புரிந்து கொண்டிருந்தான்..

ஆனால் அனுபமாவோ அவனை வேறு மாதிரியாக பார்க்கிறாள்..

செல்வம் வேலைக்கு சென்ற பின் நாளெல்லாம் அந்த மெக்கானிக் ஷெட்டில் அமர்ந்து கொண்டு ஏதாவது இயந்திரத்தை உருட்டி கொண்டிருப்பான்..

அனுபமா வேலைக்கு கிளம்பியவுடன் போட்டது போட்டபடியே அவளை ‌ பின் தொடர்வான்.. அவள் பேருந்தில் ஏறினால் அவனும் ஏறிக்கொள்வான்..

இரண்டு கைகளையும் மேல் நோக்கிய கம்பிகளில் கோர்த்துக்கொண்டு அரனாய் யாரும் அவளை நெருங்க முடியாதபடிக்கு நின்று பாதுகாப்பான்..

"என்ன சார் இப்படி தூண் மாதிரி நிக்கிறீங்க.. ஒன்னு உள்ள போங்க இல்ல வழி விடுங்க..!" ஆண்கள் எரிச்சல் பட்டால் அவர்களை அடக்க அந்த ஒரு பார்வையே போதும்.. கேட்டவர்கள் ரிவர்ஸில் செல்ல வேண்டும்.. அல்லது அவனை இடித்துக் கொண்டு பின்பக்கமாக உள்ளே செல்ல வேண்டும்.. ஆனால் இருவருக்கும் இடையே யாரும் நுழையவே முடியாது..‌

அவனுக்கும் சேர்த்து அவள்தான் பயண சீட்டு வாங்குவாள்.. அக்கறையெல்லாம் கிடையாது.. டிக்கெட் பரிசோதரிடம் அகப்பட்டு அவன் கீழே இறக்கப்பட்டால் அபராதம்.. தண்டனை என்று அண்ணனின் தலைதான் உருளுமென்ற கூட பிறந்தவனின் மீதான பாசம்..! இவன் மீது ஒரு தூசி துரும்பு பட்டாலும் அவன் தான் பதறி துடிக்கிறானே..! அந்த முட்டாள் தனத்திற்கு தரும் தண்ட செலவு என்று நினைத்துக் கொள்வாள்..

காலையிலிருந்து மாலை வரை வெறிக்க வெறிக்க அவள் வேலை செய்யும் கடையை பார்த்துக்கொண்டு எதிர் டீக்கடையில் அமர்ந்திருப்பான்..! அவள் புறப்படும் போது அவனும் சேர்ந்து புறப்படுவான்.. மறுபடி பேருந்து பயணம்.. அவள் வீடு வந்து சேர்ந்ததும் மெக்கானிக் செட்டில் போய் அமர்ந்து கொள்வான்..

"ஏம்மா அந்த பையன் உன்னை இப்படி பாக்குது.. தெரிஞ்ச புள்ளையா..!" பேருந்தில் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி இப்படி கேட்க.. திணறிப் போய் ஆமாம் என தலையசைத்தாள் அனுபமா..!

"அதானே பார்த்தேன் ஒட்டி உரசி நிக்கும் போதே நினைச்சேன் புருஷன் பொண்டாட்டியாத்தான் இருக்கணும்னு..! இருந்தாலும் இதையெல்லாம் வீட்ல வச்சுக்க கூடாதா..?" மடியில் கொட்டி கிடந்த உதிரிப்பூக்களை நாரில் இரண்டிரண்டாய் நெருக்கமாய் சேர்த்து தொடுத்தபடியே அந்த பெண்மணி தனக்குள் முனங்கிக் கொள்ள.. ஆயிரம் கம்பளி பூச்சிகள் தனக்குள் சுருள்வதைப் போல் அருவருப்பானாள் அனுபமா..

உண்மைதான் காணாதது கண்டதைப் போல் அப்படி ஒரு பார்வை..!

"என்னங்க என்ன நடக்குது காலையில் அனு புறப்படும்போது கூடவே அவனும் சேர்ந்து கிளம்பி போறான்..‌ அதோட சாயந்திரம் அனு வரும்போது தான் திரும்பி வர்றான்.. வீட்டோட சேர்த்து இந்த காயலாங்கடை ஓட்டை உடைசல் சேர்ந்த மெக்கானிக் செட்டையும் நான் தான் காவல் காக்க வேண்டியதா இருக்குது..! எதுக்காக இவன் அனு பின்னாடியே சுத்தறானாம்..! பாவம் அவ.. சொல்லி ரொம்ப வேதனைப்பட்டா.. என்னன்னு கேளுங்க..!" நதியா கூட ஒரு முறை புகார் பத்திரம் வாசித்தாள்..

இது போதாதென்று அவள் புழுக்கத்திற்காக திறந்து வைத்திருக்கும் படுக்கையறை ஜன்னலின் வழியே பிரம்ம ராட்சசன் போல் பெரிய உருவமாய் நின்று அந்த சிவந்த கண்களோடு தன்னை வெறித்து பார்ப்பதை ஒரு நாள் பார்த்துவிட்டு அலறி..‌ அடுத்த நாள் அண்ணனிடம் புகார் சொல்ல பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்..!

"பொம்பள பிள்ளை எதுக்காக ஜன்னலை திறந்து வைச்சுட்டு படுக்கனும்..! ராத்திரி முழுக்க அவன்தான் பேய் மாதிரி வீட்டை சுத்தி வருவான்னு தெரியுமில்ல..! காளிய என்னால் அடக்க முடியாது.. அவன் அப்படித்தான்.. ‌ உனக்கு தொந்தரவு இல்லாம இருக்கணும்னா ஜன்னல சாத்தி வச்சிட்டு படு..‌" என்று முடித்துவிட்டான்.

நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க ஒரு நாள் செல்வம் காளியிடம் அனுவை மணந்து கொள்கிறாயா என்று கேட்டிருக்க..‌ வழக்கத்திற்கு மாறாக அவன் முகத்தில் சின்னதாய் புன்னகை..!

அவன் சம்மதத்தைச் சொல்ல அந்த புன்சிரிப்பே போதுமானதாக இருந்தது..

ஆனால் அனு வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தாள்.. கத்திக் கூப்பாடு போட்டு அழுது தீர்த்தாள்..

"அண்ணா.. அவன் வேண்டாம்..‌ அவன பார்த்தாலே எனக்கு பிடிக்கல.. அவனோட பார்வை நடவடிக்கை எதுவுமே சரி இல்லை..‌ தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ அண்ணா.. அவன் நார்மலா இல்ல..!"

"நீ நார்மலா இருக்கியா..!" அந்த ஒரே கேள்வியில் அழுகை நின்று போக விக்கித்து போய் செல்வத்தை பார்த்தாள் அனு..

"இங்க பாரு அனு.. இதை நான் உன்னை குத்தி காட்டணும்னு சொல்லல.. நான் உனக்கு எத்தனையோ இடத்தில மாப்பிள்ளை பார்த்துட்டேன்.. ஒன்னு வர்றவன் ஏதோ உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன்னு அதிகபட்ச தொகையை வரதட்சணையா கேட்கறான்.. இல்லைனா குறையுள்ள பொண்ணுன்னு உன்னை வேண்டாம்ன்னு நிராகரிக்கறான்.. இப்படியே போனா உனக்கு எப்ப தான் கல்யாணம் நடக்கும்? யோசிச்சு பாரு.!"

"அதுக்காக என்னை பாழுங் கிணத்துல பிடிச்சு தள்ள போறியா.. இப்படி ஒரு ஆள கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் காலம் முழுக்க கன்னியா இந்த வீட்டிலேயே இருந்துட்டு போயிடுவேன்."

"நீ இருந்துருவே.. ஆனா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண வக்கில்லாத அண்ணன்னு நாளைக்கு நாலு பேரு என்ன பேசும்போது ‌ நான்தான் நாக்க பிடுங்கிக்கிட்டு சாகனும்..! இங்க பாரு.. நான் சொல்றது உனக்கு புரியல..‌ காளி ரொம்ப நல்லவன்..‌ உன்னை தங்கமா பாத்துக்குவான்.. இந்த அண்ணனோட வார்த்தை இப்ப உனக்கு புரியாது.. என்னைக்காவது ஒரு நாள் நான் சொன்னது சரின்னு நீ உணருவே.. அவன் நார்மல் மனுஷன் கிடையாதுதான்..‌ மத்தவங்க மாதிரி அவனுக்கு துரோகம்..‌ நன்றி கெட்ட தனம் சூழ்ச்சி கெட்ட எண்ணம் இதெல்லாம் தெரியாது.. தன்னை நம்பினவங்களை பத்திரமா பாத்துக்குவான்.. ஒருத்தர் மேல பாசம் வச்சுட்டா அவங்களுக்காக சாக கூட தயங்க மாட்டான்..! அவனுக்கு என்ன குறை..?"

இந்த கேள்வியில் ‌செல்வத்தை அடிபட்ட பார்வை பார்த்தாள் அனு..

"அப்ப எனக்குதான் குறைன்னு சொல்ல வர்றியா..?"

"நான் அப்படி சொல்ல வரல..‌ நல்ல அறிவுள்ள பையன். திறமைசாலி பலசாலி.. பாக்க நல்லாத்தானே இருக்கான்.."

அனு கசப்பாக சிரித்துக் கொண்டாள்..

"வக்கிர பார்வை.. கேவலமான நடத்தை.. இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே இல்லையா..!"

"ஒரு பொண்ணு கிட்ட நடந்துக்கிற முறையே தப்பா இருக்குது இதை யாரும் புரிஞ்சுக்கவே மாட்டீங்களா..!"

"அவர் உடம்பூ பசிக்கு தீனி வேணும்.. நிரந்தரமா அவன் இளமைக்கு ஒரு வடிகால் வேணும்.. நாதியில்லாத என்ன மாதிரி நொண்டி பொண்ணை விட்டா அவனுக்கு வேற வழியும் இல்லை.. அதனாலதான் சரியா டார்கெட் பண்ணி என்னை எடுத்துக்க முடிவு பண்ணிட்டான்.." மனதுக்குள் இந்த மாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன..!

அனுபமா எவ்வளவு மறுத்து பார்த்து விட்டாள்..

"இந்த அண்ணன் மேல மதிப்பு மரியாதையும் வெச்சிருந்தா நான் சொல்றத கேளு.." இல்லனா உன் இஷ்டம்..! செல்வம் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல.. அனு சோர்ந்து போனாள்..

செல்வம் காளியை பற்றி சொன்ன விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்த்திருந்தால் ஒரளவேனும் உண்மை புரிந்திருக்க வாய்ப்புண்டு..

உண்மைதான்.. காளியை பொருத்தவரை மென்மையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியவில்லை..

பார்க்க வேண்டும் போல் தோன்றினால் பார்த்துக் கொண்டே இருப்பான்.. மோகம் வந்தால் நெருங்குவான்.. தன் ஆசைகளை அவளிடம் தீர்த்துக் கொள்ள முயலுவான்.. அக்கறையாக இருப்பான்..‌ அவளை சுற்றி சுற்றி வருவான் அவள் மீது தூசி துரும்பு படாமல் பாதுகாத்துக் கொள்ள துடிப்பான்.. இவ்வளவுதான் அவனுக்கு தெரிந்த காதல்.. இதில் பெண்ணின் விருப்பம்.. அவள் எதிர்ப்பு இதெல்லாம் அவன் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்..

பல வருடங்களாக பெண் வாசனையே தெரியாமல் மனநல மருத்துவமனையில் வாழ்ந்த காளீஸ்வரனுக்கு அனுபமா மீது அதீத ஈர்ப்பு.. மோகம்.. கிளர்ச்சி.. சொல்லத் தெரியாத இளமையை ஆட்டங்காண வைக்கும் மெல்லிய உணர்வு..

என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறியா..! என்று செல்வம் கேட்டதிலிருந்து அனுவின் மீதான அவன் பார்வையும் செயல்களும் அடுத்த கட்டத்தை தாண்டி விட்டதாக தோன்றியது..

உறங்கும்போது அத்துமீறி அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்து கொள்வதும் அவள் வளைந்த பாதத்தை தடவி தருவதும்.. இடுப்பைத் தொட்டுவிட்டு அவளிடம் அடி வாங்கிக் கொள்வதும் சேலையை பிடித்து இழுத்து.. ஏதோ பேச முயற்சித்து பிறகு அமைதியாக செல்வதும்..! கன்னத்தில் முத்தமிட்டு அவளை அழ வைத்து திருத்திருவென விழிப்பதும்.. சில நேரங்களில் எங்கிருந்தோ முளைத்து வந்து ஆக்ரோஷமாக அவளை கட்டியணைத்து உதட்டில் மூர்க்கமாக முத்தமிட்டு அவளிடம் இருந்து நகக்கீறல்களை பெற்றுக்கொள்வதும்..‌ என நாளுக்கு நாள் அவன் தொல்லை அதிகமாகியதில் அனு செத்துப் பிழைத்தாள்..

செல்வத்திற்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்..

"இங்க பாரு காளி.. அனு உனக்கு சொந்தமானவதான்.. நீ கட்டிக்க போற பொண்ணுதான்.. ஆனா எதுக்கும் ஒரு எல்லை உண்டு..‌ கல்யாணம் வரையிலும் நீ காத்திருக்கத்தான் வேணும்.. இப்படி முரட்டுத்தனமா அவளிடம் நடந்துக்கறது இன்னும் அதிகமா உன் மேல வெறுப்பை வரவழைக்கும்.." என்றும் கூட சொல்லி பார்த்து விட்டான்..‌ காளீஸ்வரன் இந்த வார்த்தைகளை மூளையில் ஏற்றுக் கொண்டானா தெரியவில்லை.. அவன் நடவடிக்கையில் ஏதும் மாற்றம் இல்லை..!

இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் நகை வாங்க வேண்டும் என்று ஏகப்பட்ட திட்டங்களோடு மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தவன்..‌ திடீரென்று ஒரு நாளில் யாரும் எதிர்பாராத வேலையில் தூக்கில் தொங்கி செத்துப் போனான்..

நதியா அழக் கூட மறந்து திக் பிரமை பிடித்து சிலையானாள்..! அனு நெஞ்சடைத்து மூலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதறி தீர்த்தாள்..‌ நல்ல வேலையாக குழந்தை இந்த காட்சியை காணவில்லை பள்ளிக்கு சென்றிருந்தாள்..! போலீஸ் வருவதற்கு முன்பே காளீஸ்வரன் செல்வத்தின் உடலை கீழே இறக்கி கிடத்தியிருக்க அதற்கும் சேர்த்து காவல்துறை அந்த குடும்பத்தை உண்டு இல்லையென ஒரு வழியாகிவிட்டது..!

"எவிடென்ஸ் எல்லாம் அழிஞ்சு போயிடுமே..! நீயே அவனை அடிச்சு கொன்னு தூக்குல ஏத்திட்டியா..‌ அதனாலதான் ஆளுங்க வர்றதுக்கு முன்னாடி அவசர அவசரமா அவனை இறக்கி கீழே படுக்க வச்சிருக்கியா.." என ஏகப்பட்ட கேள்விகள்.. எதற்குமே பதில் சொல்லவில்லை அவன்..! செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.. இறுதி காரியம் வரைக்கும் அனைத்திற்கும் முதல் ஆளாய் நின்றவன் காளீஸ்வரன் தான்..

பணத்தால் அவனால் எந்த உபகாரமும் செய்ய முடியவில்லை சரீரத்தால் அந்த குடும்பத்திற்கு பலமாய் ஒத்தாசையாய் இருந்தான்..

காரிய செலவுகளுக்கு பணம் வேண்டுமென்று தனித்தனியாய் பிரித்து சொல்லி ஆட்கள் வந்து நின்றபோது.. அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலவுகளைப் பிரித்துக் கொடுத்து செல்வத்தின் இறுதி ஊர்வலத்தை நடத்த வேண்டியதாய் போனது..

அந்த நிலையிலும் கூட காளீஸ்வரனின் மீது அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..!

அண்ணன் சாவுக்கு ஒருவேளை இவன் காரணமாக இருப்பானோ என்ற சந்தேகம் லேசாய் முளைத்து தடித்த வேராய் வலுத்துப்போனது..

எதிர்பாராத நிலையில் இப்படி ஒரு இழப்பு குடும்பமே இடிந்து போனது.. ஆதார சுவர் இல்லாமல் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது..

இறுதியில் செல்வத்தின் இறப்புக்கான காரணத்தை காவல்துறையை கண்டுபிடித்து அவன் குடும்பத்திடம் தகவல் சொன்னது..

ஆன்லைன் சூதாட்டம்..! ஏகப்பட்ட கடன் தொல்லை தாங்காமல் வீட்டிலும் தன் நிலைமையை சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல் அதிகாரி சொன்னதை நம்ப முடியாமல் சோர்ந்து போனாள் அனு..

"ஏம்மா வீட்ல ரெண்டு பொம்பளைங்க இருக்கீங்க..! ஒரு ஆம்பள எந்நேரமும் ஃபோனை வச்சுக்கிட்டு என்ன செய்யறான்னு பார்க்க மாட்டீங்களா.. அப்பவே பார்த்து கண்டிச்சிருந்தா தேவையில்லாம இவ்ளோ பெரிய இழப்பு வந்திருக்காது..! இந்த காலத்துல பொம்பளைங்களுக்கும் பொறுப்பு இல்ல ஆம்பளைங்களுக்கும் அக்கறை இல்ல..! அவனவன் தன்னோட சந்தோஷத்துக்குன்னு வாழ ஆரம்பிச்சிட்டான்.. அப்புறம் எதுக்கு இவனுங்களுக்கெல்லாம் குடும்பம் குழந்தையின்னு.." அவர் முணுமுணுத்துக் கொண்டே சென்றதில்.. உண்மையை ஜீரணிக்க முடியாமல் சோர்ந்து போனாள் அனு..

எந்நேரமும் செல்வம் மெக்கானிக் ஷெட்டில் தவமிருப்பதால் பெரும்பாலும் ஃபோனை வைத்துக்கொண்டு ரம்மி ஆடுவதெல்லாம் வீட்டு பெண்களுக்கு தெரிந்திருக்கவில்லை..!

எங்களுக்கு தெரியாது.. ஆனா அந்த பிரம்ம ராட்சசனுக்கு தெரிந்திருக்குமே.. அவனாவது தடுத்து நிறுத்தியிருக்கலாமே..! ஒருவேளை அவன்தான் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை பழக்கி விட்டானா என்ன.. அப்பதான் என் அண்ணன் எதையும் கண்டுக்காம இருப்பான்னு..

"என் அண்ணனை கெடுத்து குட்டி சுவராக்கி தற்கொலை பண்ணிக்க வச்சு என் குடும்பத்தை சீரழிச்சு நடு ரோட்டுக்கு கொண்டு வரத்தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பி வந்திருக்கானா..!" அவள் நெஞ்சமெல்லாம் தீப்பற்றி எரிந்தது..

அனுபமாவிற்கு தெரியாது..

ஆன்லைன் சூதாட்டம் பற்றிய பொதுவான அறிவு காளீஸ்வரனுக்கு இல்லை என்றாலும்.. எந்நேரமும் செல்வம் அலைபேசியில் மூழ்கியிருந்ததை கண்டு.. அவன் போனை பிடுங்கிக்கொண்டு.. "இ..‌இ..‌இது தப்பு.. வே.. வேண்டாம்" என்று திக்கும் வார்த்தைகளால் அவனை தடுத்து நிறுத்த முயற்சித்து இருக்கிறான்..!

"ஒன்னும் இல்லடா சும்மா பொழுதுபோக்கு.. ஃபோன குடு..!" என காளீஸ்வரனை சமாளித்து அவனிடமிருந்து அலைபேசியை வாங்கி விளையாடுவான் செல்வம்..

தன்னருகே இருக்கும்போது செல்வத்தை காளீஸ்வரனால் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் ஃபாக்டரியில் ஜெய்க்க வேண்டுமென்ற வெறியில் வேலையில் அலட்சியம் காட்டி.. மிஷின் பழுதாகி பொருட்கள் சேதமடைந்து.. அதற்கான நஷ்ட ஈட்டை செல்வத்தின் மாத சம்பளத்தில் எடுத்துக் கொண்டு நிர்வாகம் அவனை வேலையை விட்டு நீக்கிய விஷயமெல்லாம் தாமதமாகத்தான் அந்த குடும்பத்திற்கு தெரிய வந்தது..

பரவாயில்லை வேலை போனால் என்ன.. இழந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் மீட்டெடுத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு.. கடன்மேல் கடன் வாங்கி அதுவும் நஷ்டமாகி.. எல்லா கதவுகளும் அடைத்த நிலையில் இறுதி கட்டத்தில் போய் நின்றவன்.. வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டான்..

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு..!

"என் குடும்பத்தை பத்திரமா பாத்துக்கோ காளி..‌ அனு ரொம்ப பாவம் அவளை விட்டுடாதே..!" கரத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க சொன்னபோது காளி பெரிதாக எதையும் உணரவில்லை..‌ அடுத்த நாள் கண்கள் நிலைகுத்தி அவன் தூக்கில் தொங்குவதை பார்க்கும் வரையில்..

இன்னும் எத்தறை குடும்பங்களை பலி வாங்க போகிறதோ இந்த ஆன்லைன் சூதாட்டம்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Feb 15, 2025
Messages
33
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
39

சனா டியர் உங்க கற்பனை திறன் ரொம்ப அபாரமா இருக்கு டா வெறும் கதையா மட்டும் சொல்லாமல் சமூக பிரச்சினை ஐ ரொம்ப அழகா கொண்டு வந்து இருக்கீங்க 🙋🙋🙋
உண்மை தான் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பாதிக்கப்படுவது இந்த நடுத்தர வர்க்கம் தான் 😔😔😔
காளி ஐ அனு எப்படி தான் புரிஞ்சுக்க போறாளோ 🤷🤷🤷
 
Active member
Joined
May 3, 2025
Messages
34
😯😯 Yes most important message for the one who addicted to online rummy,😯😯😯.... ஆசைகளை அழகாக தூண்டி விடும் விளையாட்டுகள்...

1000 selvam வந்தாலும் திருந்த மட்டும் மாட்டார்கள்.....

எனக்கென்ன...ன்னு நீ போய்ட்ட செல்வம்.... யாரோட responsibility இனி உன்னோட குடும்பத்தை பார்த்துகறது..

காளி but நீ பண்றதும் தப்பு.... அவளுக்கு பிடிக்கலன பிடிக்கிற வரைக்கும் wait பண்ணு..... அவ உன்ன சுத்தம வெறுக்க வெச்சிராத...already வெறுத்துடா....

அனு ma கொஞ்சம் உன்னோட thinkings லா இருந்து வெளிய வந்து காளி side la இருந்து அவன புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்.....
Very different plot asusual....it's really impressive and having good messages about society problems....keep going sana baby....
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
31

Konja naal Munna Inga kooda oruthar iranthu poitaar. Sana ma
 
Member
Joined
Sep 9, 2023
Messages
32
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Member
Joined
Jul 19, 2025
Messages
20
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jul 16, 2025
Messages
21
உண்மைதான் online சூதாட்டம் பல குடும்பங்களின் பொருளாதாரம் மட்டும் அல்ல மனரீதியான பிரச்சினைகளுக்கும் காரணமா இருக்கிறது 🥺
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
43
சமூகத்தில் நடக்கும் பிரச்சனையையும் அழகா கதைல சொல்லிட்டீங்க. உண்மை தான் இந்த விளையாட்டில் அடிமையாகி நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

செல்வம் அனுகிட்ட இவ்வளவு பேசின நீ இதனால குடும்பம் பாதிப்படையும்ன்னு யோசிக்கலையா. நீ பாட்டுக்கு போய் சேர்ந்துட்ட. இப்ப கஷ்டப்படறது யாரு.

காளி கொஞ்சம் உன் முரட்டுதனத்தை மாத்திக்கவேன். அனு உனக்கு இருக்கிற தெளிவு மாதிரி காளி இல்லைதான். கொஞ்சம் அவன் நிலையில யோசனை பண்ணி பாரேன்.
 
Joined
Mar 14, 2023
Messages
12

Nice
 
Top