• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 40

Active member
Joined
Jul 10, 2024
Messages
74
அடப்பாவிங்களா மனுஷ ஜென்மங்களாடா நீங்க ரெண்டு பேரும். 😡😡😡😡😡😡😡😡 நல்லா இருந்த புள்ளய என்ன பண்ணி வச்சிருக்கீங்க. உன் வாயில நல்ல வார்த்தையே வராதாடா நாறபயலே. 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 நீயெல்லாம் அப்பன்னு சொல்லறதுக்கே தகுதி இல்லாதவன்.

வருணே கொஞ்சம் தேம்ஸ் மேல கவனமா இரு. அவளை காப்பாத்திரு. பாவம் புள்ள வெளிய சொல்ல முடியாம என்ன நிலைக்கு ஆளாகி இருக்கு. 😱😱😱😱😱😱😱 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அடேய் விளங்காத பயலுங்களா வருணுக்கு உண்மை தெரியட்டும் அப்புறம் இருக்குடா உங்க ரெண்டு பேருக்கும். 🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛 ✂️✂️✂️✂️✂️ 🔨🔨🔨🔨🔨🔨
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
62
தூரத்தில் அவர்களை பார்த்திருந்தால் கூட அப்படியே ரிவர்ஸ் எடுத்து தலை தெறிக்க ஓடியிருக்கலாம்..

ஒருவேளை வருண்தான் தன்னை பார்க்க வந்திருக்கிறானோ என்ற அளவு கடந்த ஆர்வத்தில் அந்த மரத்தின் பின்னால் ஒளிந்திருந்தவர்களை பார்க்க தவறி விட்டாள் தேம்பாவணி..

"ஹாய் வனி.. எப்படி இருக்க..?" வன்மம் சுமந்த குரலோடு வெளியே வந்தவனை கண்டதும் முகம் வெளிறி விட்டது..

கண்களில் குரோதத்துடன் அவனை பின்தொடர்ந்து வந்து நின்றான் கேஷவ்குமார்..

வாய் ஈரப் பசையற்று உலர்ந்து போக கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.. கால்கள் பாறையாக இறுகிப்போக ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை அவளால்..

"ஹலோ மை டியர் டாட்டர்.." இனிப்பில் விஷத்தை கலந்து கேஷவ் சிரிப்போடு அழைக்க.. எச்சில் விழுங்கியபடி முதுகுத்தண்டு சில்லிட்டு நின்றாள் தேம்பாவனி..

பெற்றவன் என்ற போர்வையில் தன் கண்முன்னே நிற்கும் அந்த கொடூரனை கண்டு பய வேர்களில் குளிர் பரவியது..

"என்னம்மா இது..! நீ பண்றதெல்லாம் கொஞ்சமாவது சரியா.. குடும்பத்துக்குள்ள ஆயிரம் இருக்கும்.. அதுக்காக வீட்டை விட்டு ஓடிப் போகலாமா..?" கேசவ் பொறுமையான குரலில் கேட்க.. சிலையாக நின்றிருந்தாள் தேம்பா..

"ஏதோ ட்ரீட்மென்ட் எடுக்கணும்.. உங்க மகளை கூட்டிட்டு போறேன்.. ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் திருப்பி அனுப்பிடுவேன்னு அந்த டாக்டர் தகவல் சொன்னான்.. ஆனா நீ என்னமோ அவன் வீட்ல தங்கியிருக்கியாம்.. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு அழகா தேனுமா.. கல்யாணமான பொண்ணு இன்னொரு ஆம்பள வீட்ல போய் தங்கியிருந்தா இந்த ஊர் உலகம் நம்ம குடும்பத்தை பத்தி தப்பா பேசாதா..? ஏற்கனவே உங்கம்மா என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டா.. இப்ப நீயும் அவளுக்கு தப்பாம புருஷனை விட்டுட்டு இன்னொருத்தனோட ஓடிப்போய் தாயைப் போல் பிள்ளை நூலைப்போல் சேலைன்னு நிரூபிக்கறியே..? இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா.. இப்படி நீ தறி கெட்டு போய்ட கூடாதுனு தானே உன்னை அடிச்சு கண்டிச்சு வளர்த்தேன். அப்பவும் எங்களை ஏமாத்திட்டு இப்படி ஊர் மேய போனா நான் என்ன பண்ணட்டும் சொல்லு..?" நல்லவன் போல் அவன் கேள்வி கேட்க தேம்பாவணிக்குள் ஏதோ ஒரு மூலையில் குவிந்து கிடந்த குற்ற உணர்ச்சி நெஞ்சுக்கு ஏறியதில் தொண்டை குழி அடைத்தது..

"தப்பு தேனுமா.. பெத்த தகப்பனையும் கட்டுன புருஷனையும் விட்டுட்டு இன்னொருத்தர் வீட்ல போய் தங்கியிருக்கிறதெல்லாம் என்ன பழக்கம்.. நீ என்ன பண்ற.. இப்பவே எங்க கூட புறப்பட்டு வீட்டுக்கு வர்ற..!"

"இ.. இல்ல.. நா அங்க வரமாட்டேன்.." குரல் நடுங்க வேகமாக தலையசைத்தாள் தேம்பாவணி.

"ஐயோ முடிவேடுக்கற அதிகாரத்தை உனக்கு யாரு தந்தா.. நீ வர்றியானு உன்கிட்ட பர்மிஷன் கேட்கல.. எங்க கூட வரனும்னு சொல்றோம்.."

"வரமாட்டேன்.. போதும்.. உங்க கூட இருந்து நான் அனுபவிச்ச கொடுமையெல்லாம் போதும். மறுபடி அங்க வந்து கஷ்டப்பட நான் தயாரா இல்லை. நீங்க என்னை கட்டாயப்படுத்த முடியாது. மிரட்டி வரவழைக்கணும்னு நினைச்சீங்கன்னா.."

அவள் முடிப்பதற்குள்..

"ஐயோ புரியுது.. நீ மேஜர் பொண்ணு உன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி சத்யா கூட வாழ வைக்க முடியாதுன்னு எனக்கும் தெரியுமே.! இதெல்லாம் புரியாமலா இங்கே வந்து நிக்கறேன். நீ தாராளமா அந்த டாக்டர் வீட்ல தங்கி அவன் கூட ரகசியமாக குடும்பம் நடத்தலாம்.. அது உன் இஷ்டம். ஆனா அதுக்கப்புறமா என்ன வேணாலும் நடக்கலாம். டாக்டரோட அம்மா காய்கறி வாங்க போகும்போது ஆக்சிடென்ட்டாகி செத்துப் போகலாம்..

ஆஆஆ.. உடம்பு நடுங்க தன் வாயை பொத்திக் கொண்டாள் தேம்பாவணி..

டாக்டரோட அப்பா முகந் தெரியாத திருட்டு கும்பலால நகை பணத்துக்காக கொலை செய்யப்படலாம். அப்புறம் அந்த வீட்ல டாக்டரோட அக்கா ஒருத்தி இருக்காள்ல.. அவளை யாராவது மான பங்க படுத்தலாம். டாக்டர் ஹிப்னாடிசம் தெரபியை தப்பா பயன்படுத்தி பெண்களை வசியம் பண்ணி சல்லாபம் பண்றாருன்னு நாலு பொண்ணுங்கள வச்சு அவர் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளலாம்.. அவர் பொண்டாட்டிய நடுரோட்டுக்கு வரலாம்.. இப்படி எது வேணாலும் நடக்கலாம்.. ஆனா இதுக்கெல்லாம் சத்தியமா நாங்க காரணமா இருக்க மாட்டோம்.. நீ அங்க போய் சேர்ந்த நேரம்.. விதி.. அந்த குடும்பத்தை இப்படி எல்லாம் ஆட்டி படைக்குதுன்னு உலகம் பேசும்.. உதட்டைப் பிதுக்கி போலி பரிதாபத்துடன் சொன்னான் கேசவன்..

தேம்பாவணிக்கு வேகமாக மூச்சு வாங்கியது.. இரு கைகளால் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு..

"ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்படியெல்லாம் செஞ்சுராதீங்க.. அ. அவங்க ரொம்ப பாவம்.. அவங்க எந்த தப்பும் செய்யல.. உங்கள கெஞ்சி கேட்கிறேன்.. வருண் சார் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதீங்க.. உங்களுக்கு கோவம் என் மேல தானே.. என்னை அடிங்க கொல்லுங்க.. ஆனா ப்ளீஸ் அவங்கள விட்டுடுங்க.." குரல் நடுங்க கைகூப்பி கதறினாள்..

"ஐயோ தேனுமா.. ஏன் அழற.. காலேஜ்ல யாராவது பார்த்தா என்ன ஆகறது. ஒரு அப்பாவி பொண்ண நாங்க கொடுமை படுத்தி அழ வைக்கற மாதிரி நினைச்சுக்க மாட்டாங்க.. முதல்ல கண்ணத் துடை.. அழறதை நிறுத்து.." எகத்தாளமான குரலில் அவன் சிரித்துக் கொண்டே சொல்ல அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டாள் தேம்பாவணி..

"நீ ஒழுங்கா எங்க கூட வந்துட்டா நாங்க எதுக்காக அந்த குடும்பத்தை தொந்தரவு பண்ண போறோம் இல்லையா சத்யா..?" என்று திரும்பி அவனிடம் கேட்க தோள் குலுக்கி சிரித்தான் அவன்..

அவள் பக்கம் திரும்பிய கேஷவ் குமாரின் முகத்தில் இப்போது சிரிப்பு மறைந்து தீவிரம் குடி கொண்டிருந்தது..

"நீ இப்போ இந்த நிமிஷம் எங்க கூட வரலைனா கண்டிப்பா இதெல்லாம் நடக்கும்.. கலாட்டா பண்ணாம எங்க கூட நட.."

கையை பிசைந்து அழுகையில் துடிக்கும் தன் இதழ்களை இறுகக் கடித்துக் கொண்டு.‌

"ப்ளீஸ் எனக்கு ஒரே ஒரு நாள் டைம் கொடுங்க.. அவங்களோட ஒரே ஒரு நாள் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நாளைக்கு சாயந்தரம் உங்களோட வந்துடுவேன்.. தயவு செஞ்சு என்னை நம்புங்க" என்றாள் கண்ணீருடன்..

"என்ன தப்பிக்க பிளான் பண்றியா..?" சத்யா குருரமாய் சிரித்தான்..

"சத்தியமா இல்ல.. நா.. நான் தப்பிக்க எந்த பிளானும் பண்ணல.. என்னை இத்தனை நாள் பத்திரமா பாத்துக்கிட்ட அந்த குடும்பத்தோட இன்னும் ஒரே ஒரு நாள் என் ஆசை தீர சந்தோஷமா வாழ்ந்துட்டு மறுபடி உங்க கூட வந்துடறேன்.. சத்தியமா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்.." அவள் அவசரமாக வார்த்தைகளை உதிர்த்து சொன்ன த்வனியில்

கேஷவ் சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

"சரி.. உனக்கு ஒரு நாள் தான் டைம்.. ஆனா நான் சொல்றத நல்லா கேளு தேம்பாவணி.. நாங்க இங்க வந்தையோ உன்கிட்ட பேசினதையோ வருண் கிட்ட சொல்லி எங்களை மாட்டி விடலாம்னு நினைக்காத.. அது அவ்வளவு ஈசி இல்லை .. நாங்க ஈசியா தப்பிச்சிடுவோம் ஆனா அதுக்கப்புறம் அந்த வருணையும் அவன் குடும்பத்தையும் மொத்தமாக கொக்கி போட்டு தூக்கிடுவோம்..
உனக்கு அடைக்கலம் கொடுத்த பாவத்துக்கு அந்த குடும்பம் நிர்மூலமாகனுமான்னு நீயே முடிவு பண்ணிக்க.. நாங்க வரோம்.."

மிருகங்கள் இரண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல.. விம்மி துடிக்கும் இதயத்தோடு திக்பிரமை பிடித்தவளாய் நின்றிருந்தாள் தேம்பாவணி..

மாலை வருண் காரோடு வந்து நின்றிருந்தான்..

எப்போதும் துள்ளலாக ஓடி வருபவள் சோர்ந்து போனவளாய் தலையை தொங்க போட்டு நடந்து வந்த தோரணையை வித்தியாசமாய் பார்த்தான்..

காரில் ஏறி அமர்ந்தவள் வழக்கமான முத்து பற்கள் தெரியும் அந்த வசீகர புன்னகையை அவனை நோக்கி வீசாமல் போனது பெரிய குறை..

"என்னம்மா இன்னும் கோவம் போகலையா..?" என்று கேட்டவனுக்கு நன்றாகவே புரிந்தது இது அவன் மீதான கோபத்தின் தாக்கம் அல்ல.. வேறு ஏதோ ஒரு பிரச்சனை..

தேம்பாவணி பதில் சொல்லவில்லை.. மறுபக்கம் திரும்பியிருந்தாள்..

அவள் கரத்தை எடுத்து தன் தொடையில் வைத்து அழுத்திக் கொண்டான் வருண்..

தேம்பாவணி உதறி கொண்டு விலகவில்லை அமைதியாக இருந்தாள்.. அந்த அமைதியும் அசையாத பாவனையும் அவனுக்குள் ஏதோ செய்தது..

"தேம்ஸ்" என்று அழைத்தான்.. அழைத்து முடிக்கும் முன்னே இமைகள் சிறகடிக்க பக்கத்தில் நெருங்குபவள் இன்று காது கேளாதவளை போல் அமர்ந்திருந்தாள்..

சில நிமிடங்கள் கழித்து அவன் கையிடுக்கில் தன் கரத்தை நுழைத்துக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள்‌‌..

அந்த நெருக்கம் அவனுக்கு பிடித்திருந்தது.. தன் தோள் சாய்ந்திருப்பது ஒரு இனிமையான சுகத்தை தந்தாலும் சோகத்தில் வழிந்த அந்த கண்களை பார்த்து பரிதவித்துப் போனான்..

"என்னமா உடம்பு சரியில்லையா..?"

"ஏன் இப்படி இருக்க..!"

"என் மேல கோபம்னா ஒரு நாலு அடி அடிச்சிடு.. இப்படி இருக்காதடி..!"

"அவன் பேச்செதுவும் வேலைக்காகவில்லை.. ஜீவனில்லாத கண்களும் வெளிறி போயிருந்த முகமும் அவனுக்குள் கலக்கத்தை உண்டு பண்ணின..

வீடு வந்ததிலிருந்து சாரதாவோடு பசை போட்டதை போல் ஒட்டிக் கொண்டிருந்தாள்‌‌.. சிறிது நேரம் கழித்து வெண்மதியின் மடியில் படுத்து கொண்டிருந்தாள்..

ராஜேந்திரனோடு உயிர்ப்பில்லாத சிரிப்புடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தாள்..

உணவு உண்ணும் போது கூட வழக்கமான அவள் குறும்புகளும்.. ரகசிய சீண்டல்களும் இன்று மிஸ்ஸிங்..

"என்னடா பிள்ளை என்னவோ மாதிரி இருக்கு.. நீ ஏதாவது சொன்னியா..?" சாரதாவும் வெண்மதியும் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளை அவனால் சமாளிக்க முடியவில்லை..

மிகக் கூர்மையாக அவள் முகத்தை ஆராய முற்பட்டான்.. எதையும் கண்டறிய இயலவில்லை..

"அக்கா.. இன்னிக்கு ஒரு நாள் அவளை உன் கூட படுக்க வச்சுக்கோ.." வருண் செல்லவும் சரி என்றவள் தேம்பாவணியை தன்னோடு உறங்க அழைத்தாள்..

"இல்ல வேண்டாம் அக்கா.. ரொம்ப தூக்கம் வருது நான் என் ரூமுக்கே போறேன்.." பதிலை கூட எதிர்பாராமல் தேம்பாவணி தனது அறைக்கு சென்றுவிட.. யோசனையாக அவள் முதுகை வெறித்துப் பார்த்தான் வருண்..

அறைக்குள் வந்தவனிடம்..

"டாக்டர் சார்.. இன்னைக்கு எனக்கு ரொம்ப தூக்கம் வருது.. நீங்க போங்களேன்.. நான் தூங்கணும்.." அவன் கண்களை சந்திக்காமல் சொல்ல..

"அப்ப நான் வேண்டாமா?" என்றான் ஆழ்ந்த குரலில்..

தேம்பாவணி மெளனமாக அவனை ஏறிட்டாள்..

"நான் தூங்கற வரைக்கும் உன் பக்கத்துல இருக்க வேண்டாமா..!"

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொள்ள.. அவளையே பார்த்தபடி பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு நின்றிருந்தான் வருண்..

உறங்க முடியாமல் ஏதோ ஒன்று தொந்தரவு செய்கிறது என அவன் உள்ளறிவுக்கு எட்டியதில் பெருமூச்செறிந்து பக்கத்தில் வந்து அமர்ந்தான்..

அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு..

"தேம்ஸ்.. என்னடா ஆச்சு உனக்கு.. ஏன் இந்த அசாத்தியமா மௌனம்.. உன் போக்கு என்னை பயமுறுத்தது.. ஏதாவது பிரச்சனையாடா.." என்று கேட்க..

மெல்ல நகர்ந்து வந்து அவன் மடியில் படுத்துக்கொண்டாள் தேம்பா..

அவன் கரத்தை எடுத்து தன் தலையில் அழுத்திக்கொண்டாள்..

சிறிய புன்னகையோடு அவள் தலையை வருடிக் கொடுத்தான் வருண்..

"பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்ல கூடாதா..?"

"தூக்கம் வருது டாக்டர்.."

"சரி தூங்கு..!" குழந்தை போல் அவளை தட்டிக் கொடுக்க.. தூங்கினாளா.. விழித்திருக்கிறாளா தெரியவில்லை ஆனால் சீரான மூச்சோடு விழிகளை மூடியிருந்தாள்..

அவள் போக்கும் நடவடிக்கையும் புதிராக இருக்கவே பலமான யோசனையுடன் மனம் குழம்பியபடி அவளை தலையணையில் படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான் வருண்..

அவன் சென்ற பத்தாவது நிமிடத்தில் எழுந்து அமர்ந்து கொண்டாள்..

விடிவெள்ளி விளக்கு தாராளமாகவே வெளிச்சத்தை தந்தது..

பூனை போல் எழுந்து நகர்ந்து டிராயரை திறந்து தனியாக ஒரு மாத்திரையை மட்டும் ஒளித்து வைத்திருந்த அந்த சின்னஞ்சிறு பெட்டியை எடுத்தாள்..

தண்ணீர் பாட்டிலை தன் பக்கம் இழுத்தவாறு அந்த பெட்டியை வெறித்துப் பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள் ஏதோ படபடத்தது..

"வேண்டாம் தேம்பா.. இந்த மாத்திரையை முழுங்கிட்டு நீ பாட்டுக்கு போய் சேர்ந்துட்டா பிரச்சனை தீர்ந்திடுமா.. உன்னோட சாவுக்கு இந்த குடும்பம் தான் காரணம்னு உன் அப்பனும் அந்த சத்யாவும் இவங்க எல்லாரையும் பெரிய வம்புல இழுத்து விட்டுடுவானுங்க.. உன்னால இவங்க கஷ்டப்படனுமா.. உன்னை நல்லா பாத்துக்கிட்டதுக்கு நீ காட்டற நன்றி கடன் இதுதானா..?"

இதயத்தின் நியாயமான வாதத்தில் நடுங்கிப் போனவளாய் மீண்டும் அந்த பெட்டியை டிராயருக்குள் வைத்து பூட்டினாள்..

தளர்ந்துபோனவளாய் மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தவள்.. அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு திக்கு தெரியாத காட்டில் நின்றதைப் போல் பயத்தோடு உடல் உதறலெடுத்து வாயை மூடிக்கொண்டு சத்தம் வராமல் கதறிக் கொண்டிருந்தாள்..

தனது அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்திருந்த போதும் தேம்பாவணியை பற்றிய யோசனையில் உறக்கம் விழிகளை தழுவிக் கொள்ள மறுத்தது..

பேசாம அவளை அம்மா கூட இல்லனா அக்கா கூட படுக்க வச்சிருக்கணும்.. இல்ல நானாவது கூட இருந்திருக்கணும்.. இவளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலையே ஏன் இப்படி இருக்கா..? நிம்மதி இல்லாமல் நெற்றியை தேய்த்துக் கொண்டான்..

ஆனாலும் அவளோடு இரவை தனியாக கழிக்க தயக்கமாக இருந்தது..

ஒரு மணி நேரம் போன பின்னும் உறக்கம் வரவில்லை.. இதயம் படபடவென அடித்துக் கொண்டது..

இது வேலைக்காகாது.. என்ன ஆனாலும் பரவால்ல பேசாம விடியற வரை அவ கூடவே இருந்துடலாம்.. என கதவை திறந்து கொண்டு வெளியேறி சென்று விட்டான்..

அந்த அறையிலேயே பக்கத்துல இருக்கும் சோபாவில் படுத்துக் கொள்ளலாம் அவளை அடிக்கடி விழித்து பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.. என்று நினைத்துக் கொண்டான்..

"இதெல்லாம் நல்லதா வருண்.. காலையில யாராவது கேட்டா என்ன செய்வ..?"

"என்ன செய்யணும்..? கேட்டா விளக்கம் சொல்லிக்கலாம்.. அவளை விட எதுவும் எனக்கு முக்கியமில்லை.." உள் குரலுக்கு பதில் சொல்லியபடி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்கள் விரிய அதிர்ந்து
தேம்ஸ்.. என்று கத்திக் கொண்டு ஓடினான்..

மூச்சுக்கு திணறி வாயை திறந்தபடி கண்கள் நிலை குத்தி.. வெட்டி வெட்டியிழுக்கும் விம்மலோடு அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..

"என்னாச்சு.. என்னாச்சுமா.." பதறிப் போய் அவள் கன்னத்தை பற்றி உலுக்கியவன்..

பதில் சொல்ல முடியாத நிலையில் வாயை அகலமாக திறந்து காற்றை இழுத்தபடி.. அவள் கருவிழிகள் உருளுவதை கண்டு..

"ஓ மை காட் ஆன்சைட்டி அட்டாக்.." (Anxiety attack) என்றபடி அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு முதுகை மெல்ல தடவி கொடுத்தான்..

"எதை இப்படி மனசுக்குள்ள போட்டு தவிச்சிட்டு இருக்க தேம்பாவணி.. கமான் ஸ்பீக் அப்.." உதடுகள் தவிப்போடு முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும் அவன் கரங்கள் கருணையோடு அவளை அணைத்துக் கொண்டிருந்தன..

தொடரும்..
Thembaa varun kitta sonna ethaachum seivaan. இப்படியே இருந்தால் என்ன செய்வாங்க.. அவனுக்கும் தெரியாது. வருண் தான் இன்னும் முயற்சி பண்ணனும். வருண் கல்யாணம் பொய் தான்னு தேம்பா தெரிஞ்சுகிட்டா எல்லாம் சரியாகிடும்.
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
140
Aiyooo enna aga pogutho..... Epidiyum pirichu Anga anupa thana poringa neenga......vera option illa pesama antha visatha avanga rendu perukum kuduthutu thems poi tholaiyattum avanga......aparam unakku mental disorder una veliya eduthuruvar doctor
 
New member
Joined
Aug 30, 2025
Messages
2
அடேய் பாவி பன்னாட பரதேசிகளா பண்றது கேப்மாரி மொல்லமாரித்தனம் இதுல பெத்தவன் கட்னவன்னு பேரு வேறு உங்களுக்கு நாதாரிகளா உன் பொண்டாட்டி உன்ன விட்டு போனதுக்கு காரணம் நீயா தான்டா இருப்ப கண்டிப்பா மானங்கெட்ட மரமண்ட பயலே 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊
மாத்திரைய போட்டு சாக நெனச்ச புள்ளைய பயத்துலயே கொன்னுடுவீங்க போலயே 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Enna pa next part post panra idea illaya… romba yenga vaikireenga
 
Top