- Joined
- Jan 10, 2023
- Messages
- 107
- Thread Author
- #1
கேசவ் சத்யா இருவரும் விபத்தில் சிக்கி எலும்பு கூட கிடைக்காமல் அகால மரணமடைந்த செய்தி காவல்துறை மூலமாக தேம்பாவணிக்கு தெரிவிக்கப்பட்டது..
கார்ல பிரேக் ஃபெயிலியர் ஆகி.. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் எதிரே நின்னிருந்த டேங்கர் லாரியோட போய் மோதி விபத்துக்குள்ளாகிடுச்சு.. என்று ரிப்போர்ட் எழுதி கேஸ் முடித்து வைக்கப்பட்டது..
சில ஃபார்மாலிட்டிஸ்.. விதிமுறைகளுக்காக தேம்பாவணி காவல் நிலையம் அரசு மருத்துவமனை என்று அலைய வேண்டியிருந்தது.. வருண் அவளோடு நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டான்..
அந்த ஒரு வாரம் மட்டும் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தாள் தேம்பாவணி..
அப்பாவை இழந்த வருத்தம் என்றெண்ணி சாரதாவும் வெண்மதியும் அவளை மடியில் போட்டு தாலாட்டி தலை வருடி கொடுத்து ஆறுதல் சொல்லி தேற்ற முயன்றனர்..
"நடந்த எதுக்கும் நீ காரணம் இல்லை தேம்ஸ்.. மனச போட்டு குழப்பிக்காதே..! தப்பு யார் செஞ்சாலும் கர்மா சும்மா விடாது.. இப்படி நடக்கணும்னு விதி.. யாரும் ஒன்னும் செய்ய முடியாது.. உன்னை கொடுமைப்படுத்தினவங்களுக்காக நீ இவ்வளவு வருந்த தேவையில்லை.. உன்னோட கண்ணீருக்கும் இரக்கத்துக்கும் கொஞ்சம் கூட அருகதை இல்லாதவங்க அவங்க.. விட்டு தள்ளு.." என்றான் வருண்..
"அவங்க இழப்பு என்னை பாதிக்கல.. ஆனா இதுவரைக்கும் அப்பாங்கற பேர்ல ஒருத்தன் இருந்தான். இனி எனக்கு யாருமில்லையே நான் ஒரு அனாதை தானே..!" தேம்பாவணியின் குரலில் அளவுக்கு மீறிய வருத்தம்..
"எங்க திருப்பி சொல்லு..!" புருவங்கள் இடுங்க தீவிர பாவனையுடன் அவளைப் பார்த்தான் வருண்..
"நான்.. ஒரு.. அனா.." எனும் போதே சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்.. "உனக்கு ஒன்னுன்னா மனசால துடிக்கிறதுக்கும் கவலைப்படறதுக்கும் இத்தனை பேர் இருக்கோம்.. நாங்க யாரும் உன் கண்ணுக்கு தெரியலயா.. ஒரு நாள் கூட உன்னை பத்தி நெனச்சு பாக்காத உன் அப்பன் செத்துப்போனது உனக்கு அவ்ளோ பெரிய சோகத்தை தருதா..?" என்றான் உரிமை கோபத்துடன்..
"அவங்க செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கும்னு நினைச்சேன் ஆனா செத்துப் போகணும்னு நான் நினைக்கவே இல்ல டாக்டர் சார்.." கண்களில் நீர் தழும்பி நின்றது..
"இவ்வளவு இரக்க சுபாவம் ஆகாது.. நீ கவலைப்படற இந்த நேரத்துல அவனுங்க செத்ததுக்காக எத்தனை பேர் சந்தோஷப்படுறாங்களோ, யாருக்கு தெரியும்.. இங்க பாரு.. உன்னால வீட்ல எல்லாரும் சோகமா இருக்காங்க.. உன் கவலை அவங்க முகத்தில் பிரதிபலிக்குது.. நான் கூட ரெண்டு நாளா தூங்கல.. சரியா சாப்பிடல.. உன்னை நினைச்சு நினைச்சு உருகி உருகி இரண்டு கிலோ குறைஞ்சு போயிட்டேன்.." என்றவனைக் கூர்ந்து பார்த்தாள் தேம்பாவணி..
"பாத்தா அப்படி தெரியலையே.. ஆள் வாட்ட சாட்டமா அப்படியேத்தான் இருக்கீங்க.. சும்மா ஹீரோ மாதிரி..!"என்று கண் சிமிட்டினாள்..
"ஹீரோ மாதிரியா..? அவ்ளோ அழகாவா இருக்கேன்.." முகத்தில் வெட்கத்தோடு ஜொலிப்பும் சேர்ந்துகொள்ள அடர்த்தியான கேசத்தை கோதியபடி சிப்பி வேலைபாடுகளோடு எதிர் சுவரில் மாட்டப்பட்டிருந்த அலங்கார கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டான் வருண்..
"பேசாம நீங்க ஏதாவது ஹேர் ஆயில் விளம்பரத்துக்கு மாடல்லா போய்டுங்க.. இந்த காலத்துல இருபது வயசுலயே முடி கொட்ட ஆரம்பிச்சுடுது.. உங்களுக்கு மட்டும் எப்படி முடி வெட்ட வெட்ட அடர்த்தியாக வளர்ந்துகிட்டே இருக்கு..! ஒருவேளை டோப்பா ஏதாவது வச்சிருக்கீங்களா.." என இரு கையால் அவன் தலைமுடியை பிடித்து இழுக்க..
"ஆஆஆஆ.. வலிக்குதுடி" என அலறினான் வருண்..
"ஒரிஜினல்மா.. இன்னும் எதையெல்லாம் செக் பண்ண போறியோ தெரியல.." என்றபடி மீண்டும் கலைந்திருந்த தன் சிகையை சரி செய்து கொள்ள உதடு மடித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
'முதல்ல நம்மள நாமே நேசிக்கணும்னு என் பேஷன்ட்ஸ் கிட்ட சொல்லுவேன்.. ஆனா அதையும் தாண்டி என்னை எனக்கே பிடிக்க வைக்கறியே நீ.." சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான் வருண்..
வீட்டின் ஏதோ ஒரு மூலையில் ரகசிய காதலர்கள் போல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்..
"அப்போ உங்களுக்கு நான்தான் டாக்டரா..?"
"ஆமா என் ஹார்மோன்ஸுக்கு உயிர் கொடுத்த டாக்டர்..!"
"லவ் ஹார்மோன்சா? இல்ல செக்ஸ் ஹார்மோன்சா..?"
"லவ் இல்லாமல் செக்ஸ் இல்ல..! ரெண்டும் ஒன்னு சேரனும்.. அப்பதான் வாழ்க்கை மஜாவா இருக்கும்.."
"அப்ப என்னை லவ் பண்றீங்களா டாக்டர்..?"
"ஏன் லவ் பண்ண கூடாதா..?" கீழ்க் கண்ணால் அவள் முகத்தை குனிந்து பார்த்து கேட்க.. அடிவயிற்றிலிருந்து படபடவென மேலெழுந்து சிறகு விரித்து பறந்த பட்டாம்பூச்சிகள் மீண்டும் அதே வேகத்தில் செயலிழந்து பட் பட்டென கீழே விழுந்த உணர்வு..
"ஆனா உங்க வைஃப் இருக்காங்களே அப்புறம் என் மேல எப்படி காதல் வரும்..!"
"ஒருத்தர் ஒருத்தரை தான் காதலிக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன.. மனசு விஸ்தாரமா இருந்தா ஒரு ஆள் எத்தனை பேரை வேணாலும் உண்மையாக காதலிக்கலாம்.." சொல்லிவிட்டு
"என் மனசு முழுக்க பட்டா போட்டு நீதான் குடியிருக்கேன்னு இந்த மங்குனிக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது.." என்று நினைப்போடு உதடு மடித்து சிரித்துக்கொண்டான் அவன்..
"அய்யே..! இதென்ன கேவலமான லாஜிக்.. அப்ப நானும் எனக்கு பிடிச்ச வேற யாரையாவது காதலிக்கட்டுமா..?" முதலில் முகத்தை சுழித்தவள் வீம்புக்காக கேட்க..
"ஓஹ்..! காதலிச்சுதான் பாரேன்.." அவன் வார்த்தைகளில் தெரிந்த கடுமை தேம்பாவணிக்கு உரைக்கவில்லை.. விளையாட்டாக சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..
"இருந்தாலும் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க.. எனக்கு எதுவும் சரியா படல.. என்ன ஆச்சு டாக்டர் உங்களுக்கு..?" அவன் போக்கு இப்போது வரை புரியவில்லை..
"அது உன் மேல விரகதாபம்டி.." என்றான் கிறங்கடிக்கும் கண்களோடு..
"என்ன விரதம் இருந்தீங்களா.. தாகம் எடுக்குதா . நான் வேணா போய் தண்ணி கொண்டு வரட்டுமா..!"
"சுத்தம்..! ஆமா.. அதுதான்.. இத்தனை நாள் விரதத்தையும் முழுசா முடிச்சுக்கலாம்னு பார்க்கறேன்.."
"ஆங்.. கரெக்ட்.. சாப்பிடாம இருக்க கூடாது.. உடம்பு வீக் ஆயிடும்.." தேம்பாவணி அவன் காதல் மொழி புரியாமல் தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தாள்..
"எஸ்.. உடம்பு வீக்காகறதுக்கு முன்னாடி.. எனர்ஜி இருக்கும்போதே மொத்தமா முழுங்கிடனும்.."
"எனர்ஜி இருக்கும்போது சாப்பிடனுமா..! சாப்பிட்டாதான எனர்ஜி வரும்.." குழப்பமாக விழித்தாள் அவள்..
அவள் உணவைப் பற்றி பேச அவனோ உணர்ச்சியை பற்றி பேசிக் கொண்டிருந்தான்..
அவன் பார்வையிலிருந்த பேதத்தை கொஞ்சமும் அறியவில்லை தேம்பாவணி..
வருண் தேம்பாவணியை தன் வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதென முடிவெடுத்து விட்டான்.. இனி உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி அவளை பிரிந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை..
ஆனால் புலி வாலை பிடித்த கதையாய் நாடகத் திருமணம் மூலம் மனைவியாய் நடிக்க வீட்டிற்கு அழைத்து வந்திருக்கும் திலோத்தமாவிற்கு முதலில் ஒரு வழி செய்ய வேண்டும்.. அதன் பிறகு மெல்ல தன் விஷயத்தை வீட்டில் சொல்லி தேம்பாவணியை தன் வாழ்க்கைத் துணையாய் பக்கத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்..
குழந்தையாய் மடியில் தூக்கி வைத்து கொஞ்ச.. குமரியாய் மோகிக்க.. தாயாய் தன்னை பார்த்துக்கொள்ள.. கலகலக்க.. குறும்புகள் செய்ய.. தன்னை இம்சிக்க.. எல்லாமுமாய் அவள் வேண்டும்..
இதுவரை திருமணத்தை அறவே வெறுத்திருக்கும் பெண்கள் பற்றிய அவன் எண்ண கோட்பாடுகளை உடைத்தெறிந்த ஒரே பெண் இந்த தேம்பாவணி..
இப்போதும் திருமணத்தைப் பற்றிய கலக்கம் அவனுள் இல்லாமல் இல்லை.. ஆனாலும் "பாத்துக்கலாம்" என்ற கண்மூடித்தனமான தைரியத்தை அவள் மீதான காதல் தந்திருக்கிறது..
திருமணம் செய்து கொள்ள அப்படி என்னதான் தயக்கம் அவனுள்.. அவனுக்கே வெளிச்சம்.. வாய் திறந்து சொல்லும் வரை அந்த ரகசியம் யாருக்கும் தெரியப்போவதில்லை..
தேம்பாவணி அந்த வீட்டில் சந்தோஷமாக வலம் வருகிறாள்..
விருந்தாளியாக வந்தவள் எப்போது வீட்டை விட்டு வெளியேறுவாளென யாரும் யோசிக்கவில்லை அவர்களைப் பொறுத்தவரை அவளும் அந்த வீட்டில் ஒருத்தி.. ஒருவேளை அவளாகவே வீட்டை வீட்டு புறப்படுகிறேன் என்று பையோடு வந்து நின்றாலும் போய் வா என்று விடை கொடுத்து அனுப்பி வைக்க இங்கு யாரும் தயாராய் இல்லை..
"என்ன.. அந்த பொண்ணு இங்கேயே டேரா போட்டாச்சா..! அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பனும்னு யாருக்கும் ஐடியா இல்லை போலிருக்கு.. என்ன நடக்குது இங்க.. உங்க புள்ள அவகிட்ட கொஞ்சி கொஞ்சி பேசறதும் நீங்க எல்லாரும் அவளை தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடறதும் எதுவும் சரியில்ல.. இந்த வீட்ல நான் ஒருத்தி இருக்கேன்.. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா..!" இப்படி புளித்துப்போன அதே வசனங்களால் தேம்பாவணி ஒரு விருந்தாளியென அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொண்டிருப்பவள் திலோத்தமா மட்டும்தான்..
முதலில் கலங்கி தடுமாறி தேம்பாவணி அந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்க நினைத்தவர்கள் போகப்போக அவள் வார்த்தைகளை காது கேட்காதவர்கள் போல் கண்டும் காணாமலும் விட்டுவிட்டனர்..
அதில் இன்னும் ஆக்ரோஷம் அவளுக்கு.. ஏதோ தன் பிரதான பதவி பறிபோனதைப் போல் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறாள்..
அன்று இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வேளையில் வழக்கம்போல் தேம்பாவணியை தன் அருகில் நிறுத்திக் கொண்டான் வருண்..
உணவை குறைத்துக் கொண்டு பழத் தட்டிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து கடித்து உண்டான்.. மீண்டும் இன்னொரு ஆப்பிளை எடுத்து முழுதாக கடித்து விழுங்க குடும்பத்தார் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்..
"புதுசா ஏதோ டயட் ஆரம்பிச்சிருக்கான் போலிருக்கு.. சாப்பாட்ட குறைச்சிட்டு பழமா திங்கறான்.." வெண்மதி மிருதுவான சப்பாத்தியை விள்ளல் பிட்டு கிரேவியில் தோய்த்து ஒரு கன சதுர கட்டி பனீரோடு சேர்த்து விழுங்கினாள்..
"என்ன அதிசயமா ஃப்ரூட்ஸ் சாப்பிடறீங்க..? அதுவும் ரெண்டு..!" தேம்பாவணி கேட்க..
"இரண்டையும் சாப்பிடுவேன்.. இரண்டும் எனக்குத்தானே" உள் பொருள்பட சொல்லி ஆப்பிளை மீண்டும் கடித்தான்.. அதுவும் அவளை பார்த்துக் கொண்டே..
"சரி இல்ல..! என்னை பாத்துகிட்டே ஆப்பிள் கடிக்கறீங்க..! ஏதோ தப்பா இருக்கு.. எல்லாரும் பாக்கறாங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க.." என்றபடி அவசரமாக திலோத்தமாவை பார்க்க.. அவளோ பஞ்சத்தில் அடிபட்டவள் போல் சப்பாத்தியை அடுக்கடுக்காய் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள்..
"உனக்கு புரியல தேம்ஸ்..இப்போ.. பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குன்னு வச்சுக்க.. ஆனா பிரியாணி கிடைக்கல.. கையில தயிர் சாதம்தான் இருக்கு.. அப்ப என்ன பண்ணுவ..?" வருண் கேள்விக்கு..
"தயிர் சாதத்தை பிரியாணினு நினைச்சு சாப்பிட வேண்டியதுதான்..!" தோள்களைக் குலுக்கி சொன்னாள்..
"அப்படித்தான்.. அது சாப்பிட கிடைக்கல.. அதனால இது..! பேச்சிலும் பார்வையிலும் கன்னங்கள் கூசி போக.. கன்னத்தில் கை வைத்து முறைப்பாக அவனைப் பார்த்தாள்.
அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவனாய்.. "உன் கன்னத்தை கடிக்கிறதுல எனக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை.. நான் வேற ஒன்னு பத்தி பேசுறேன்.. இல்ல ரெண்டு..! கொஞ்ச நாளா என்னை பாடா படுத்துது. நான் என்ன செய்யட்டும் சொல்லு.." பரிதாபமாய் கேட்க..
இப்போது தேம்பாவணிக்கு புரிந்து போக..
"டாக்டர்..!" என்று பற்களை கடித்தாள்..
"கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே..?"
"ம்ம்.. வாய மூடுங்க.."
"அதான் ஆப்பிள் சாப்பிட்டு என் விரகதாபத்தை.. சாரி சாரி விரதத்தையும் தாகத்தையும் தணிச்சுக்கிறேன்.." சிரித்துக் கொண்டே அவன் சொல்ல..
"நீங்க ரொம்ப மோசம்.. உங்கள போய் நல்லவன்னு நினைச்சேனே.." முகம் சுருக்கி கோபித்தாள் தேம்பாவணி .
"நீதான் ஹீரோன்னு சொன்ன..!"
"நீங்க ஹீரோ இல்ல.. வில்லன்.. நான் உங்க பக்கத்துல உட்கார மாட்டேன்.." தட்டை எடுத்துக்கொண்டு வெண்மதியின் பக்கத்தில் போய் அமர்ந்தாள்..
"அப்படி என்னதான் ரகசியமா பேசிக்குவாங்களோ?" என குறுகுறு கண்களோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி தேம்பாவணி தன் பக்கத்தில் வந்து அமர்ந்ததும்..
"என்ன ஆச்சு?" என்றாள் கண்களை கூர்மையாக்கி..!
"உங்க தம்பிகிட்டயே கேளுங்க.."
"நான் ஆப்பிள் சாப்பிடறதுல இவளுக்கு என்ன பிரச்சனை..?" என்றான் வருண்..
"அதானே அவன் பழம் சாப்பிட்டு டயட் எடுக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை..?" வெண்மதியும் அதே கேள்வியை கேட்க தேம்பாவணி வருணை முறைத்தான்..
அவனும் புருவங்களை உயர்த்தி வெறுப்பேற்றும் பாவனையுடன் ஒரு மாதிரியாக தலையசைக்க.. தேம்பாவணிக்கு பதில் சொல்ல முடியாத நிலை..
"சொல்லேன்.." நீ தான் தைரியமான ஆளாச்சே.. என்ற ரீதியில் அவளை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு எச்சில் விழுங்கினாள் தேம்பா..
இப்போதெல்லாம்.. இரவில் பக்கத்தில் அமர்வது அவளை மடியில் தாச்சிக் கொள்வது.. கரங்களைப் பிடித்துக் கொள்வது நெற்றியில் முத்தமிடுவது.. இதழ்களை சிறை பிடிப்பது என்பதெல்லாம் மாறி.. கணவன் மனைவி போல் அருகருகே படுத்துக் கொண்டு.. கரங்களை பிணைத்தபடி ஏதேதோ கதை பேசி அவள் உறங்கிய பிறகுதான் அங்கிருந்து எழுந்து வருகிறான்..
இன்னைக்கு நான் இங்கேயே தூங்கலாம்னு இருக்கேன்.. என்று சில நேரங்களில் அவள் மீது கையையும் காலையும் போட்டு தோளோடு முகம் புதைத்துக் கொண்டு வீம்பாக குறும்புகள் செய்வதும் உண்டு..
சின்ன குழந்தை போல் அவன் செய்யும் சேஷ்டையில்.. டாக்டரா இது..? என தேம்பாவணிக்குள் ஆச்சரியங்கள் எழும்..
அன்பிலும் காதலிலும் மூழ்கி திளைத்து போனாலும் மனதோடு குற்ற உணர்ச்சி நிரடிக் கொண்டே இருக்கிறது..
பெரிய துரோகம் பண்றேன்..! ஒரு பொண்ண அவ புருஷன் ஏமாத்துறதுக்கு துணையா இருக்கேன்.. கடவுளே இந்த பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே இல்லை..! எங்கோ ஒரு மூலையில் அவள் மனம் அழுது கொண்டுதான் இருக்கிறது..
ஆனாலும் ஆசையாக நெருங்கும் வருணை விலக முடிவதில்லை.. அவன் காதல்.. அந்த அக்கறை நேசம் அவளை கட்டி போட்டு வைத்திருக்கிறது.. தப்புதான் ஆனா கொஞ்ச நாள் இந்த அன்பை அனுபவிச்சிக்கறேனே..! என்று தன் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறாள்..
முரண்பட்ட தவறான நேசம் என்ற ரீதியில் அவள் மனம் யோசிக்க மறுக்கிறது.. தன் மீது வருண் காட்டும் இரண்டாம் பட்ச பரிதாபம்.. நேசமாய் இதை பார்க்க முடியவில்லை..
ஒரு ஆணுக்குள் புத்தம் புதிதாய் உருவான பிரஷ்ஷான காதல் முழுவதும் தனக்கு மட்டுமே கிடைப்பதாய் எண்ணிக்கொள்கிறாள்.. அதுதான் உண்மையும் கூட.. வருணின் ஒட்டுமொத்த காதலும் அவளுக்கு மட்டுமே சொந்தமானது..
வருண் உண்மையை எடுத்து சொல்லி இருக்கலாம்.. அவளுக்கு புரிய வைத்திருக்கலாம்.. ஆனால் சாரதாவிற்கும் வெண்மதிக்கும் மிக நெருக்கமான தேம்பாவணி ரகசியங்களை அவர்களிடம் போட்டு உடைத்து விடுவாளோ என்ற சந்தேகம்..
வருண் நீ இப்படிப்பட்டவனா..ச்சே..! என் தன் குடும்பத்தாரிடம் வெளிப்படும் ஒரு சின்ன முகச்சுழிப்பை கூட அவனால் தாங்க இயலாது..
திலோத்தமாவை பேசி சரிகட்டி விட்டு விஷயத்தை அவன் தான் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும்.. அதன் பிறகு தன் காதலை அவர்களிடம் தெரியப்படுத்தி தேம்பாவணியை தனக்கானவளாய் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிறைய திட்டங்களை வைத்திருக்கிறான்..
ஆனால் அதற்குள்..
இதோ தன் முடிவை தேடி.. தேம்பாவணி சைனைட் முலாம் பூசப்பட்ட அந்த மாத்திரை கொண்ட சின்ன பெட்டியை திறக்கிறாள்..
தொடரும்..

Last edited: