- Joined
- Jan 10, 2023
- Messages
- 127
- Thread Author
- #1
எதிர்புறத்தை வெறித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் வெண்மதி..
அவளுக்கு நேர் எதிராக சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் தேம்பாவணி..
"அக்கா தண்ணி குடிக்கறியா..?"அருண் வாட்டர் பாட்டிலை அவளிடம் நீட்ட..
"சைலன்டா கன்னி வெடிய வச்சுட்டு தண்ணி குடிக்கிறியான்னா கேட்கற பாவி.. என்னடா பொய் மேல பொய்யா சொல்லி வச்சிருக்க..!" வெண்மதிக்கு முழி பிதுங்கியது..
"பின்ன என்ன பண்ண சொல்ற.. கல்யாணம் வேண்டாம்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. நீயும் அம்மாவும் கேக்கல.. அதான் வேற வழி தெரியாம இப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டியதா போச்சு..!" என்றான் சலிப்பாக க்ஷ.
"அடப்பாவி முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கறதா சொல்லுவாங்க நீ பூசணிக்காய் மரத்தையே உள்ள வச்சு மூடியிருக்க.."
"பூசணிக்காய் மரத்துல காய்க்காது.. கொடியில வளரும்.."
"ரொம்ப முக்கியம்..! திலோத்தமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னது பொய்.. சரி அப்போ குழந்தை பிறக்காதுன்னு சொன்னது..?"
"அது கிளை பொய்..!" வருண் சிரித்தபடி சொல்ல வாயில் கை வைத்து விழி விரித்து அவனை பார்த்தாள் வெண்மதி..
"வீட்லயே ஒரு எமகாதகனை ஏழடி உயரத்துக்கு வளர்த்து வச்சிருக்கோம்னு இத்தனை நாள் தெரியாம போச்சே..!"
"இங்க பாரு மதி.. நான் பொய் சொன்னதே உங்களாலதான்.. நீங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தாம இருந்திருந்தா நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு சந்தோஷமா இருந்திருப்பேன்.. வீதியில போற ஓணானை எடுத்து சட்டைக்குள்ள போட்டுகிட்ட கதையா திலோத்தமாவே கூட்டிட்டு வந்து இவ்வளவு அவஸ்தை பட்டுருக்க மாட்டேன்.."
"இதையெல்லாம் ஏன் நீங்க முன்னாடியே சொல்லல..!" தேம்பாவணி கோபமாக கேட்டாள்..
வருணுக்கு திருமணமாகவில்லை என்ற செய்தி அளவு கடந்த சந்தோஷத்தை தந்திருந்தாலும்.. அவனை முழுமனதாய் சொந்தம் கொண்டாட முடியாமல் அவள் அனுபவித்த வேதனைகளும் குற்ற உணர்ச்சியும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கிளறி விட்டிருந்தது..
வருண் அவளை கனிவாய் பார்த்தான்..
"எல்லா பிரச்சனைகளையும் சரி பண்ணிட்டு உன்கிட்ட வந்து உண்மையை சொல்லி அப்பா அம்மா முன்னாடி கொண்டு போய் நிறுத்தணும்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள நீ இப்படி ஒரு முடிவெடுப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. அடிப்பாவி ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.." என்றவன் வேகமாக அருகில் வந்து தேம்பாவணியின் முகத்தை கையிலேந்தினான்..
"ஒரு நிமிஷம்" என்றவன் வெண்மதியின் பக்கம் திரும்பி.. "அக்கா நீ போய் ஒரு காபி குடிச்சுட்டு வர்றியா.. அதுக்குள்ள நான் இவளை பேசி சமாதானம் பண்ணி வைக்கறேன்" என்று சொல்ல..
"என் பிபியை எகிற வச்சுட்டு காபி குடிக்க அனுப்பறியா நீ..! இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது.." என தலையணையை தூக்கி அவன் மீது அடிக்க.. துள்ளிக் கொண்டு தள்ளிப் போனான்..
"இப்ப ஏன் வெண்மதி இவ்வளவு டெரரா பிஹேவ் பண்ற.. எப்படி இருந்தாலும் பிரச்சனையை சமாளிக்க போறது நான்தானே..! உனக்கேன் இவ்வளவு டென்ஷன்..?" என்றான் தோள்களை குலுக்கி..
"டேய் வளர்ந்து கெட்டவனே.. புரியாம பேசாத..! அம்மாவும் அப்பாவும் உன்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க.. திடகாத்திரமாக இருக்கற எனக்கே ஹார்ட் பட்டுனு வெடிக்கற மாதிரி போயிடுச்சு திடீர்னு நீ போய் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னா அவங்க எப்படி தாங்குவாங்கன்னு வேண்டாம்.." என்றாள் படபடப்பாக..
"இப்ப என்னதான் பண்ணனுங்கற..! உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்.."
"எப்பா டேய் அரிச்சந்திரா.. நீ பேசறதையெல்லாம் கேட்கும் போது அப்படியே எனக்கு புல்லரிக்குதுடா.. ஒரு நிமிஷம் இரு.. நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. மறுபடி ஏதாவது சொதப்பிட்டா வில்லங்கமா போயிடும்.. அப்பா அம்மாகிட்ட நானே எல்லா விஷயத்தையும் பேசறேன்.. நீ அமைதியா வாய மூடிக்கிட்டு பக்கத்துல நில்லு.. அது போதும்"
என்று வெண்மதி முன்னால் செல்ல.. தேம்பாவணியை நெருங்கினான் வருண்..
"அடேய் முதல்ல பிரச்சனையை தீர்ப்போம் வாடா.. இவன் ஒருத்தன்.. நேரங்கெட்ட நேரத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு..!" இருவரையும் இழுத்துச் சென்றாள் வெண்மதி..
வருண் தேம்பாவணி இருவரும் குற்றவாளிகளை போல் இரு கைகளை கோர்த்து தலை தாழ்ந்து நின்றிருக்க திலோத்தமாவோ விஷயம் எதுவும் புரியாமல் யோசனையோடு விழித்தபடி நின்றிருந்தாள்..
ராஜேந்திரனின் முகம் இறுகிப் போயிருந்தது..
விஷயத்தை நடு சபையில் போட்டு உடைத்திருந்தாள் வெண்மதி..
"ஐயோ என் செல்லமே..!" என எழுந்து ஓடி வந்த சாரதா
"அம்மாஆஆஆ.. நான் எதையும் வேணும்னு செய்யலம்மா.." என்று கைநீட்டி ஓடி வந்த மகனை "போடா அந்த பக்கம்" என ஓரமாய் தள்ளிவிட்டு தேம்பாவணியை அணைத்துக் கொண்டார்..
தடுக்கி விழுந்து தாயை திரும்பி பார்த்தான் வருண்..
"என்னம்மா இப்படி ஒரு முடிவெடுத்துட்ட.. உனக்காக நாங்க இத்தனை பேர் இருக்கோமே எங்கள பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பாக்கலையா நீ..!"
"ஆன்ட்டி..!" தேம்பாவணி கண்கலங்கி ஏதோ சொல்ல வர..
"அவனை கல்யாணம் பண்ணிக்கலைனா என்ன இப்ப..! காலம் முழுக்க இந்த வீட்ல எனக்கு மகளா என்கூடவே உன்னை வச்சுக்க மாட்டேனா..! இந்த அயோக்கிய பைய உனக்கு வேண்டாம்.." என்று மகனை முறைக்க..
"ம்மாஆஆஆ..!" என்று கத்தினான் அவன்..
"பொய் பொய்யா சொல்லிக்கிட்டு திரியறான்.. புளுகான்டி.. உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல வருண்.." சாரதா இப்படி சொல்ல அவன் முகம் வாடிப்போனது.. இந்த நிலையில் இவர்கள் முன் குற்றவாளியாக தலை குனிந்து நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான் பிரச்சனையை பொறுமையாக கையாள நினைத்தான்..
ஆனால் விஷயம் கை மீறி போய்விட்டதே..!
திலோத்தமா அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.. இனி தன் கதி..? நெஞ்சுக்குள் பந்தாய் ஏதோ உருள அடி வயிறு கலக்கியது..
நிகழ்ந்து கொண்டிருக்கும் களேபரத்தில் அவளை யாரும் கவனிப்பார் இல்லை..
"சாரதா நீ இப்படி வா..!" கடுமையான குரலோடு அழைத்தார் ராஜேந்திரன்..
சாரதா அமைதியாக அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்ள நிமிர்ந்து வருணை ஒரு பார்வை பார்த்தார்..
"என்ன வருண் இதெல்லாம்.. உன்கிட்ட இதை எதிர்பார்க்கல.. நீ ஒரு டாக்டர்.. ஒவ்வொரு விஷயத்தையும் பக்குவமா ஹேண்டில் பண்ண வேண்டிய நீ, சின்ன பிள்ளைத்தனமா இப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. உன்னை எவ்வளவு நம்பினோம்.. இப்படி ஏமாத்திட்டியே..?" என்றார் ஆதங்கமாக..
"அப்பா ப்ளீஸ் நான் சொல்றத.."
"ஒரு நிமிஷம் இரு.. நீ செஞ்சு வெச்சிருக்கற காரியத்தால எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா.. இதோ உன் பொண்டாட்டியா நடிக்க வந்திருக்கற இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போற.. அவ எதிர்காலம் என்ன ஆகும்..?"
"அப்பா..!"
"வாய மூடுடா.. உன் கூட பிறந்தவங்க ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.. நீ இப்படி ஒரு பொய் கல்யாணத்தை அரங்கேத்தி நாடகமாடி இருக்கேன்னு அவங்க வீட்ல தெரிஞ்சா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க.. உன் அக்கா தங்கச்சி வாழ்க்கை என்ன ஆகும்.. நாங்க எப்படி அவங்க முகத்தில முழிப்போம்னு யோசிச்சு பாத்தியா..!"
"ஐயோ அப்பா..!"
"பேசாத..! இதோ உன் மேல ஆசையை வளர்த்திருக்கிற இந்த பொண்ணு.. அந்த மாத்திரையை முழுங்கி ஏதாவது ஆகிப் போயிருந்தா என்ன பண்றது..?"
வருண் அமைதியாக இருந்தான்..
"ஏண்டா இத்தனை கேள்வி கேக்கறேன்.. வாயை திறந்து பேச மாட்டியா நீ..!" ராஜேந்திரன் கொதிப்பாக எழுந்து நின்று கத்த..
"யோவ்.. தகப்பா எங்கய்யா என்ன பேச விட்ட..?" என்ற ரீதியில் பாவமாக அவரைப் பார்த்தான் வருண்..
மீண்டும் அவரே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு குரலை செருமியபடி சோபாவில் அமர்ந்தார்..
"சரி நடந்தது நடந்து போச்சு.. அடுத்து என்ன நடக்கணும்னு யோசிப்போம்.. பேசாம நீ திலோத்தமாவை உண்மையாவே கல்யாணம் பண்ணிக்க.." ராஜேந்திரன் சைலண்டாக அவன் தலையில் குண்டை தூக்கி போட
"எப்பா.. யோவ்.. தகப்பாஆஆஆ..!" என அலறினான் வருண்..
"என்னடா மரியாதை குறையுது..?"
"பின்ன என்னய்யா.. தப்பு தப்பா கோர்த்து விட்டுகிட்டு.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு.." அவன் அழாத குறை..
"திலோத்தமா கூட மூணு நாலு வருஷம் வாழ்ந்தாச்சு.. இப்ப வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்..?"
"நான் எங்கப்பா வாழ்ந்தேன்.. இதுவரைக்கும் அவ நிழல கூட நான் தொட்டதில்ல.. அவகிட்ட கண்ணியமாத்தான் நடந்திருக்கேன்.. ஒரே ரூம்ன்னு பேரு.. அவ உள்ள, நான் வெளியே.. சத்தியமா அவள நான் அந்த மாதிரி எண்ணத்துல பார்த்ததே இல்லப்பா.. நீங்க வில்லங்கமா எதையாவது இழுத்து விட்டுறாதீங்க.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க"
"அப்புறம் எதுக்குடா அவளை நடிக்க கூட்டிட்டு வந்த.. நீ பொய்யா நாடகம் போட்டாலும் ஊர் உலகத்துக்கு அவதான உன் பொண்டாட்டி..! நாளைக்கு நீ பாட்டுக்கு இன்னொருத்தியை கட்டிக்கிட்டா அவளோட எதிர்காலம் என்னடா ஆகும்..?"
"அப்பா நான் இதை பத்தியெல்லாம் யோசிக்காம இருப்பேனா..! திலோத்தமாவோட எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.. இன்னும் கொஞ்ச நாள்ல அவளை ஃபாரினுக்கு அனுப்பிடுவேன்.. அவ மகனோட எதிர்காலத்துக்கு ஏதாவது வழி பண்ணிடுவேன்.."
"மகனா..?"
அனைவரும் ஒரு சேர வாயை பிளந்தனர்..
"ஆமா.. அவளுக்கு ஏழு வயசுல ஒரு பையன் இருக்கான்.. ஷீ இஸ் மேரிட்.. ஆனா புருஷன் கூட இல்லை..! அது ஒரு பெரிய கதைப்பா.."
"என்னடா தோண்ட தோண்ட பூதம் கிளம்பின மாதிரி.. இன்னும் எத்தனை விஷயத்தை மறைச்சு வைச்சிருக்க.." வெண்மதி முழி பிதுங்க..
"இல்ல இதோட அவ்வளவுதான்..! வேற எதையும் நான் மறைக்கல" என்றான் வருண் பரிதாபமாக..
"சரி இப்ப அடுத்து என்னதான் பண்ணலாம்னு சொல்றீங்க..?" ராஜேந்திரன் மலையிறங்கி வந்தார்..
தேம்பாவணியின் கரத்தைப் பிடித்துக் கொண்டான் வருண்..
"நான் தேம்பாவணியை விரும்பறேன்.. அவள கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படறேன்.. எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க.." அவன் உறுதியான குரலில் சந்தோஷத்தில் மலர்ந்து நிறைவாக புன்னகைத்தனர் சாரதாவும் ராஜேந்திரனும்..
"ஓஹோ அப்ப ஏன் கதி..?" இடையே குறுக்கிட்டு வந்தாள் திலோத்தமா..
"உனக்கு என்னம்மா..! உன்னை அப்படியே விட்டுட மாட்டோம் உனக்கு தேவையானதை கண்டிப்பா செய்வோம்.." ராஜேந்திரன் பொறுமையாக பதில் சொன்னார்..
"என்ன செஞ்சுருவீங்க.. நிவாரண நிதி மாதிரி கொஞ்சமா பணம் தருவீங்க.. அத வச்சுட்டு நான் சிறு தொழில் செஞ்சு பிழைச்சுக்கணுமா..? எனக்கு இந்த வீட்டோட மருமகங்கற அந்தஸ்து வேணும்.. வருணோட பொண்டாட்டியா நான் இந்த வீட்லதான் இருப்பேன்.."
"என்னமா பேசுற.. இது ஒரு நாடக கல்யாணம்.. வருண் உன்னை அந்த கோணத்துல பார்க்கவே இல்லைன்னு சொல்றானே.. என் புள்ள பொய் சொல்ல மாட்டான்.." ராஜேந்திரன் சொன்னதும்..
"ஏன் வருணே..! நீ பொய்யை தவிர வேற எதுவுமே சொல்லலையே.. நம்ம அப்பாரு ஏன் இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு உனக்கு சர்டிபிகேட் கொடுக்கறார் .." வெண்மதி காதை கடிக்க ஓங்கி அவள் காலை மிதித்தான் வருண்..
"இங்க பாருங்க நான் இங்கதான் இருப்பேன்.. இந்த உலகத்தை பொறுத்தவரைக்கும் இந்த வீட்டு மருமக நான்தான்.. இதை மாத்தி என்னை வெளியே துரத்தனும்னு நினைச்சீங்க அப்புறம் பத்திரிக்கை மீடியான்னு கூட்டம் போட்டு நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தினதா சொல்லி உங்க குடும்பத்தை கிழி கிழின்னு கிழிச்சுருவேன்.." திலோத்தமா ஆக்ரோஷமாக கத்தவும் அனைவரும் திகைத்துப் போயினர்..
"என்னம்மா இப்படி பேசற..! இதை நாங்க உன்கிட்டருந்து எதிர்பார்க்கலை.." ராஜேந்திரன் வருத்தப்பட்டார்..
"நான் கூடதான் எதிர்பாக்கல.. எல்லாரும் சேர்ந்து எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வீங்கன்னு..!"
"என்ன செஞ்சுட்டோம்..! என் புள்ள உன்னை அப்படி ஒரு ஸ்தானத்துல வைக்கலைன்னு சொல்லும்போது வலுக்கட்டாயமா அவனை உன் கூட சேர்த்து வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்..?" என்றார் சாரதா..
"நான் ஒன்னும் அவரை என் கூட சேர்த்து வைக்க சொல்லல.. இந்த வீட்டோட மூத்த மருமகள்ங்கற அங்கீகாரத்தோட நான் இந்த வீட்ல இருப்பேன்னுதான் சொன்னேன்.."
"நீ சொல்றதோட அர்த்தம் எங்களுக்கு புரியல.. வருண்கூட வாழறதை பத்தி நீ யோசிக்கல.. ஆனா உனக்கு இந்த செல்வாக்கும் கௌரவமும் வேணும்னு சொல்றியா..? ராஜேந்திரன் சரியாக அவள் எண்ணங்களை கேட்ச் பிடித்து சொல்ல..
"அதேதான் இத்தனை வருஷமா டாக்டர் வருண் பிரசாத்தோட மனைவியா கவுரவமா மரியாதையோட இந்த சமுதாயத்தில வாழ்ந்துட்டேன்.. இனியும் எனக்கு அந்த அந்தஸ்து வேணும்.. அதைக் கெடுக்கணும்னு நினைச்சீங்கன்னா நான் சும்மா விடமாட்டேன்.." என்றாள் ஆணவமாக..
"என்ன ஓவரா பேசிக்கிட்டே இருக்கா.. எல்லாரும் அமைதியா இருக்கீங்க.. இவள..!" என்று புடவையை இழுத்து சொருகிக்கொண்டு வெண்மதி ஒரடி முன்னே எடுத்து வைக்க..
"நிறுத்துங்க.. யாரும் திலோத்தமாவ ஒரு வார்த்தை சொல்லக்கூடாது.. இது என் பிரச்சனை.. நான் பாத்துக்கறேன்.." என்றான் வருண் அதிகார குரலில்..
"என்னடா பாத்துக்குவ.. என்னவோ இந்த வீட்டுக்கே அவ தான் எஜமானி மாதிரி எப்படி பேசறா பாத்தியா..! அதான் உனக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லைன்னு ஆகிப்போச்சே.. மரியாதையா அவள வீட்டை விட்டு விரட்டு.." வெண்மதி அடிக் குரலில் கத்திக் கொண்டிருக்க..
"தப்பு என் மேல.. உங்க எல்லாரையும் திருப்திப்படுத்த அவளை இங்க நடிக்க அழைச்சிட்டு வந்தது நான்தான்.. அவ சொல்றது நியாயமான பாயிண்ட் தானே.. திலோத்தமாவுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தருவேன்னு வாக்கு தந்திருக்கேன் .. அதுக்கான நேரம் வர்ற வரைக்கும் அவ இங்கதான் இருப்பா.. அவளை யாரும் தப்பா பேசக்கூடாது மரியாதை குறைவா நடத்தக்கூடாது.. இவ்வளவு நாள் அவகிட்ட எப்படி நடந்துக்கிட்டீங்களோ இனியும் அவகிட்ட அப்படித்தான் பழகணும்.." என்றுவிட்டு வருண் அங்கிருந்து சென்றுவிட..
"என்னடி..? இவன் தப்பு செஞ்சிட்டு நமக்கு ஆர்டர் போட்டுட்டு போறான்.." என்ற ரீதியில் மனைவியை பார்த்து விழித்தார் ராஜேந்திரன்..
தொடரும்..

Last edited: