• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 47

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
127
திருமண வைபவம் நிறைவாக முடிந்து வெண்மதியின் கணவன் நந்தகோபால் மற்றும் நிவேதாவின் கணவன் சுந்தரோடு நின்று பேசிக் கொண்டிருந்தான் வருண்..

பேச்சுக்கு நடுவில் அடிக்கடி அவன் பார்வை தன் கண்மணியை தேடி களைத்துப் போயிருந்தது..

மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் நிலவாக கூட்டத்துக்குள் மறைந்து போயிருந்தாள் தேம்பாவணி..

"பட்டுப் புடவையில் அட்டகாசமா இருந்தாளே..! இருந்த டென்ஷன்ல ஆசை தீர என் செல்லத்தை ரசிக்க முடியல" எங்க போனா மை பியாரி..? என கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க..

தூணுக்கு மறைவில் வளைக்கரம் அசைந்து சினுங்க எதிரே நின்ற நிவேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி.. அவள் கரங்கள் மட்டும் தான் அவனுக்கு விசிபில் ஆகியது..

"என்ன மச்சான்..! கல்யாண பந்தியில உட்கார்ந்துட்டு சாம்பார் சோத்தை வழிச்சு தின்னுட்டு அடுத்து ரச வாளிக்காரன் எங்கே நிக்கறான்னு ஆளா பறந்து தேடறாப்பல உன் கண்ணு இப்படி மேயுது.." வெண்மதியின் கணவன் நந்தகோபால் கிண்டல் செய்ய இஇஇஇ.. என இளித்து வைத்தான் வருண்..

"அதானே.. ஏன் இப்படி திருட்டுத்தனமா பாக்கணும்.. உங்கள கடத்திட்டு வந்து தாலி கட்ட வச்சிருக்கோம்.. அதான் கல்யாணம் ஆகிப்போச்சே.. தைரியமா உங்க பொண்டாட்டிய பாருங்க மச்சான்.." என்று சுந்தரும் சேர்ந்து கொண்டான்..

"எங்க பாக்கறது அவதான் தூணுக்கு மறைவுல நின்னு ஆட்டங் காட்டறாளே.!" வருண் சலித்தான்..

மறைந்திருந்து டார்ச்சர் செய்யும் மர்மமென்ன..!

மைண்ட் வாய்சோடு பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் சகோதரிகளின் கணவர்களை தயக்கத்தோடு பார்த்தான் வருண்..

"உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் சாரி கேட்டுக்கறேன்.. எதையும் மறைக்கணும்னு இல்லை.. என் சிச்சுவேஷன் அப்படி..! நான் செஞ்ச தப்புக்கும் குளறுபடிக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு.. இதை மனசுல வச்சுக்கிட்டு என் சிஸ்டர்சை எதுவும் காயப்படுத்திடக் கூடாது.."

"அட நீங்க வேற..! இந்த விஷயத்தை பத்தி என் தம்பிகிட்ட கேட்டு அவனை சங்கட படுத்திட கூடாதுன்னு.." வீடியோ கால் போட்டு கற்பூரம் அடிச்சு சத்தியம் வாங்கின பிறகு தான் உன் அக்கா என்னை இங்க வர வச்சுருக்கா.."

"ஆமா மச்சான்..! என் அண்ணன்கிட்ட இத பத்தி ஏதாவது பேசி அவனை சங்கடப்படுத்தினீங்க அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்னு உங்க தங்கச்சி என்னை மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டி விட்டுட்டா.. அதனால நாங்க இந்த விஷயத்தை பற்றி ஜென்மத்துக்கும் வாய் திறக்க போறதில்லை.." என்றான் சுந்தரும் சேர்ந்து கொண்டு..

அப்போதும் தெளிவடையாத நிலையில் வருண் குற்ற உணர்ச்சியோடு நின்று கொண்டிருந்தான்..

தான் செய்த தவறை காரணமாக வைத்து வருங்காலத்தில் தன் சகோதரிகளை அவர்கள் கணவரோ அல்லது கணவரின் உறவுகளோ காயப்படுத்தி விடக் கூடாதென்ற கவலை அவனுக்கு..

"அட ஃபீல் பண்ணாதீங்க மச்சான்..! உங்களை எவ்வளவு நாளா பார்க்கறோம்.. அவசரப்பட்டு தப்பு பண்ணி பிரச்சனையை இழுத்து விட்டுக்கற ஆள் இல்ல நீங்க. நீங்க எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்..! நடந்து முடிஞ்சதை நெனச்சு வருத்தப்பட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம அடுத்து நடக்க போறத பாருங்க.." என்ற சுந்தர் அவனை இயல்புக்கு கொண்டு வர முயற்சித்தான்..

"நடக்க போறதா..?"வருண் புரியாமல் கேட்க

"ஆமா..! தெரியாத மாதிரி கேக்கற.. புது மனைவியை கூட்டிகிட்டு உல்லாசமா ஹனிமூன் போய் என்ஜாய் பண்ணு மாப்ள.." நந்தகோபால் கண் சிமிட்ட வருண் பெருமூச்சு விட்டான் ‌‌

"அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு மாம்ஸ்.. அதுக்கு முன்னாடி சில வேலைகளை முடிக்கணும்.." என்றான் நிதானமான குரலில்..

"முன்னாடி ரெண்டு வெள்ளை முடி பல்ல இளிச்சுக்கிட்டு நிக்குது.. வயசை தொலைச்சுட்டா திரும்பி வராது தம்பி.. முதல்ல சந்தோஷமா இருக்கற வழிய பாருங்க.. டாக்டருக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.. சொன்னா கிளுகிளுப்பா தான் இருக்கும் இருந்தாலும் சொல்றேன்.. குழாயில தண்ணி வரும் போதே பக்கெட்டை வச்சிடனும்..! என்று சந்தானம் டயலாக்கை உருவி விட வருண் தலையிலடித்துக் கொண்டான்..

"ஹனிமூன்தான் வேண்டாம்னு சொன்னேன்.. மத்ததெல்லாம் இல்லைன்னு நான் எப்ப சொன்னேன்.. எல்லாம் நடக்கும் போது நடக்கும்.." என்றான் வருண் கூச்சத்தோடு..

"என்ன மச்சான்.. எவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே உங்களுக்கு.." என்றான் சுந்தர்..

"கல்யாணம் பண்ணி வச்சீங்களா.. பாவிகளா கொஞ்சம் விட்டிருந்தா எல்லாருமா சேர்ந்து அன்ன குண்டான்னு நினைச்சு அக்னி குண்டத்துல தள்ளிவிட்டுருப்பீங்க.."

"வேறென்ன பண்றது.. நாங்க சொல்றத நீங்க கேக்கல நீங்க சொல்றத கேக்கற நிலைமையில நாங்க இல்ல.. கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அது மட்டும் தான் எங்களோட ஒரே டாஸ்க்கா இருந்துச்சு.. எப்படியோ நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுது இனி நீங்களாச்சு.. உங்க பொண்டாட்டியாச்சு.. எங்களுக்கு பசிக்குது நாங்க சாப்பிட போறோம்.." என்று சகலைகள் இருவரும் தோள் மீது கை போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்..

பக்கத்து பக்கத்தில் அமர்ந்து உணவருந்தினர் தேம்பாவணியும் வருணும்..

"அப்பாடி.. இப்பதான் என் பொண்டாட்டிய ஆசை தீர ரசிக்க முடியுது.." என தேன் வண்ண பட்டுப்புடவையில் தங்கமாய் தகதகத்தவளை தலை முதல் கால் வரை பேரழகை அள்ளிப் பருகினான் வருண்..

தாமரையாய் விரித்து வைத்திருந்த மருதாணியில் குளித்திருந்த அவள் உள்ளங்கை மருத்துவனை போதையேற்றியது..

"இப்படி ஒரு பேரழகை என் லைஃப்ல இதுவரை பார்த்ததில்லைடி பொண்டாட்டி.. யூ லுக் அமேசிங்.." அவள் காதுக்குள் சொன்னான் வருண்..

பதிலாக பரிசாக முறைப்பு மட்டும்தான் கிடைத்தது..

"உங்க பொண்டாட்டிக்கு ஊட்டுங்க.." என சொந்தங்கள் வற்புறுத்த.. பாதுஷாவை எடுத்து பாதி ஊட்டிவிட்டு மிச்சத்தை தன் வாயில் போட்டுக் கொண்டான்..

"உன் எச்சில் பட்ட பாதுஷா இவ்வளவு இனிப்பா இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.." என்று சொல்லும்போதே வருணே..‌ நடத்து நடத்து என மனசாட்சி நக்கலாய் சிரித்தது..

"என் எச்சில் படாமல் போனாலும் பாதுஷா இனிப்பாத்தான் இருக்கும்.." என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் தேம்பாவணி..

அவளும் வருணுக்கு லட்டு ஊட்டிவிட முழுவதையும் வாய்க்குள் இழுத்துக் கொண்டு அவள் விரல்களையும் சேர்த்து கடித்து வைத்தான் வருண்..

"தேம்ஸ்.. ஏய்.. பொண்டாட்டி என்னை பாரடி.. இன்னைக்கு நமக்கு கல்யாணம் நடந்திருக்கு.. நம்ம வாழ்க்கையில மிக முக்கியமான நாள்.. அறுபது வருஷம் கழிச்சு இந்த நாளை நினைச்சு பார்க்கும்போது கூட மனசுக்குள்ள நினைவுகள் இனிப்பா நிலைச்சிருக்கணும்.. இப்படி முகத்தை தூக்கி வச்சுக்காதேடி.. வேண்டாதது எல்லாத்தையும் மறந்துடலாம்.. லெட்ஸ் எஞ்சாய்.. please don't ruin the precious moment" என்றான் மிக மென்மையான குரலில்..

"மறக்கணுமா..? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கீங்க.. வீட்ல இருக்கறவங்க கிட்ட சொல்லாம இருக்க உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனா என்கிட்ட ஏன் மறைச்சீங்க.. உண்மையிலேயே நீங்க என்னை லவ் பண்ணியிருந்தா என்னை ஏமாத்தணும்னு தோணியிருக்காது.. இப்ப கூட உங்களை மிரட்டி தூக்கிட்டு வந்துதான தாலி கட்ட வச்சிருக்காங்க.. உங்க மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்னு எனக்கே புரியல.. எனக்கு பயமா இருக்கு வரூண்.." தேம்பா யாருக்கும் தெரியாமல் கலங்கிய விழிகளை துடைத்துக் கொள்ள வருண் வாடினான்..

புது மனைவிக்கு தன் நிலையை புரிய வைத்து எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனான்..

வீரம் படத்தில் சிறுவயது அஜித்.. அந்த சின்ன பெண்ணிடம் எங்கு போனாலும் கோப்பு.. கோப்பு.. என்று ஆசை தீர அழைத்து வைப்பதை போல்..

சமயம் வாய்க்கும் போதெல்லாம்.. பொண்டாட்டி பொண்டாட்டி என்று அழைத்து குதுகலித்தான் வருண்..

தூணுக்கு மறைவில் நின்றிருந்த தேன்நிற சேலையை பார்த்து பொண்டாட்டி என ஆசையாய் அழைக்க..

"நான் பொண்டாட்டி இல்ல பொன்னம்மா பாட்டி.. கோவில்ல கூட பொம்பளைங்கள நிம்மதியா சாமி கும்பிட விட மாட்டீங்களா..? இந்த நாட்டுல ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை.. கொஞ்சம் அழகா பொறந்துட்டேன் அது என் தப்பா? என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள் அந்த அம்மா..

"ஐயோ பாட்டி.. நான் என் பியூட்டின்னு நினைச்சுட்டேன்.." வருண் திணறி போக..

"என்னங்க?" என்று அந்த பாட்டி அழைக்க தாத்தா ஹீரோ வருவதற்கு முன் எஸ்கேப் ஆகியிருந்தான் அவன்..

அவன் மனைவியிடம் சிணுங்கி கொஞ்சுவதை வெண்மதியும் கூட கண்டுவிட்டு.. "அந்த புள்ள மேல இவ்வளவு ஆசைய வச்சுக்கிட்டு.. தேவையில்லாத வேலை பார்த்து ஒரு ராங்கி சிறுக்கிய வீட்டுக்கு கொண்டு வந்து.. இவன் வாழ்க்கையை இவனே சிக்கலாகிட்டான்.. பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்ச கதைதான்.." என தலையிலடித்துக் கொள்ள..

"ஆமா மதி.. உங்க அம்மா பெத்தது ஒன்னு கூட சரியில்ல எல்லாம் மரம் கழண்ட கேசு.." வெள்ளை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெண்மதியின் புருஷன் கேஷுவலாக சொல்ல.. அவன் உச்சி முடி மட்டும் கொத்தாக வெண்மதியின் கைக்குள் அகப்பட்டு அந்தரத்தில் மேல் நோக்கி நின்றது..

அக்கா தங்கை அம்மா அப்பா வருணை தனியே அழைத்து ரகசிய மாநாடு நடத்திக் கொண்டிருந்தனர்..

"இங்க பாரு வருணே..! இப்போதைக்கு இந்த கல்யாணத்தை பத்தி உன் டூப்ளிகேட் பொண்டாட்டி திலோத்தமாவுக்கு சொல்ல வேண்டாம்.."

"ஏன்..?" வருண் கண்களை சுருக்கினான்..

"என்ன கேள்வி இது? அவதான் சொல்லிட்டாளே நம்ம வீட்ல நிரந்தரமா வாழறதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு.. உன்னையும் தேம்பாவணியையும் பிரிச்சு உன் பொண்டாட்டியா சொகுசா வாழறதுக்காக அவ தந்திரமா ஏதாவது பிளான் பண்ணி உனக்கோ தேம்பாவுக்கோ அது ஆபத்தா முடிஞ்சிட்டா..?" வெண்மதியின் குரல் நடுங்கியது..

"அக்கா அவ அந்த அளவுக்கு போக மாட்டா..!"

"ம்ஹும்.. எனக்கு அவ மேல நம்பிக்கை இல்லை.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டின கதையா.. அந்த திலோத்தமாவால தேம்பாவணிக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்யறது.. எங்களுக்கு பயமா இருக்கு.. அதனாலதான் சொல்றோம்.. முதல்ல அவளுக்கு வேண்டியத செஞ்சு வீட்டை விட்டு அனுப்புற வழியை பாரு.. அதுவரைக்கும் இந்த கல்யாண விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம்.." என்றாள் வெண்மதி விடாப்பிடியாக..

"இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படிக்கா மறைக்க முடியும்..?"

"நீ அடக்க ஒடுக்கமா இருந்தா.. கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை அவளுக்கு தெரியாம மறைக்க முடியும்.. எப்பவும் போல நீ உன் ரூம்லயும் தேம்பாவணி அவ ரூம்லயும் இருக்கட்டும்.."

"அக்காஆஆஆ.." வருண் அலறினான்..

"என்ன நொக்கா..! இவருக்கு கல்யாணம் வேண்டாமாம்‌‌.. ஆனா பொண்டாட்டி மட்டும் வேணுமாக்கும்.. உனக்குத்தான் குடும்ப வாழ்க்கையில இன்ட்ரஸ்ட் இல்லையே..!"

"அடியே வெண்மதி நான் எப்ப அப்படி சொன்னேன்..?" வரூண் சீறினான்..

"இவ்வளவு நாள் அப்படித்தானே போச்சு.. 38 வருஷம் பிரம்மச்சரிய விரதம் காத்தவனால இன்னும் ரெண்டு வருஷம் பொறுக்க முடியாதா..?" என்றார் ராஜேந்திரன்..

"ரெண்டு வருஷமா..?" வருணுக்கு மயக்கம் வராத குறை..

"இருக்கற பிரச்சினையை கிளியர் பண்ணி அந்த திலோத்தமாவை முதல்ல வீட்டை விட்டு அனுப்பு.. அப்புறம் நாங்களே ஒரு நல்ல நாளா பார்த்து உனக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்றோம்.. அதுவரைக்கும் எப்பவும் போல ரெண்டு பேரும் தனித்தனியா இருங்க.." என்றார் சாரதா..

"அம்மா நீ கூடவா..!" அன்னையை பாவமாய் பார்த்தான் வருண்..

"கம் ஆன் அண்ணா..! உன்னால முடியும்.." என்றாள் நிவேதா..

"என்னால முடியாது..!"

"அதான் அவனே ஓகே சொல்லிட்டானே.. வாங்க போவோம்.." குடும்பமே அவனை பழிவாங்கும் வைபில் இருந்தது..

"நான் எப்படா ஓகே சொன்னேன்..நான் முடியாதுன்னு சொன்னேன்..!" அவன் கத்தினான்..

"என்ன முடியாதாம்.." தேம்பாவணி அழகு பதுமையாய் அங்கு வந்து நிற்க..

ல..ல லா.. என இதமாய் வீசிய குளிர் காற்றில் அவன் முகம் மலர்ந்தது..

"கல்யாணம் ஆனாலும் உன் கூட சேர்ந்து வாழ முடியாதாம்.." வெண்மதி வேறு மாதிரியாக கொளுத்தி போட..

"அய்யோ.. இல்ல.. நான் அப்படி சொல்லல..!" வருண் தலையில் கை வைத்து அவசரமாக மறுக்க.. தேம்பாவணி பற்களை கடித்துக் கொண்டு பெரிய விழிகளால் அவனை முறைத்திருந்தாள்..

"இவ வேற என் நிலைமை புரியாம இப்படி அழகா முறைச்சு தொலையுறாளே.. நான் என்ன செய்வேன்.. பேச்சு வர மாட்டேங்குதே.. வாய தொறந்து எஸ்பிளைன் பண்ணுடா வருணே..!" மனம் தான் பேசியது வாய் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டதைப் போல் மௌன விரதம் காக்க கண்களோ எனக்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் பெண் வடிவத்தை கபளிகரம் செய்து கொண்டிருந்தது..

"சரி நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தா அவளுக்கு சந்தேகம் வந்துடும்.. நிவேதா அவ புருஷன் பிள்ளைகளோட ஊருக்கு போகட்டும்.. மாப்ள நீங்களும் கிளம்புங்க" என்று நந்தகோபாலனை பார்த்து சொன்னார் ராஜேந்திரன்..

"ஆமாங்க நானும் அப்படியே அவங்க கூட கிளம்பி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வரேன்.." கணவனை தனியே அழைத்து சொன்னாள் வெண்மதி..

"அப்ப நான் அப்படியே பரதேசம் போயிடவா.." நந்தகோபாலன் கேட்க அவள் திருதிருவென விழித்தாள்‌‌..

"ஏண்டி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. பிறந்த வீட்டுக்கு போனா ரெண்டு நாள் இருக்கலாம்.. ரெண்டு வாரம் கூட இருக்கலாம் இப்படி ரெண்டு மாசமா அங்கேயே டேரா போட்டுட்டு அடுத்த ரெண்டு மாசத்துக்கு அசால்டா அனுமதி கேக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷியா.. உனக்கு மனசாட்சி இல்லையா..?" நந்தகோபால் எகிறியதில் வெண்மதி கண்களை விரித்து பயத்தோடு பார்க்க..

"இஇஇஇஇ.. இப்படியெல்லாம் நான் கேட்க மாட்டேன்.. உனக்கு எத்தனை நாள் அங்க இருக்கணும்னு தோணுதோ இருந்துட்டு வா செல்லம்.. நான் பசங்கள பாத்துக்கறேன்.. ஒன்னும் அவசரம் இல்லை.." என்று குரலில் இனிப்பையும் உதட்டில் சிரிப்பையும் பூசிக்கொண்டு அவன் சொல்லவும். இடுப்பில் கை வைத்து தன் கணவனை முறைத்தாள் வெண்மதி..

"யோவ் என்னை இந்த பக்கம் அனுப்பி வச்சுட்டு அந்த பக்கம் நீ ஏதாவது தப்பு பண்றியா..! புருஷன் அளவுக்கு மீறி கொஞ்சி பேசினாலே அதுக்கு பின்னாடி ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம் எங்க எடு உன் ஃபோனை.. உன் ஆபீஸ்ல வேலை செய்றாளே ஒருத்தி அவ பெயர் என்ன..?" என்று தன் என்கொயரியை ஆரம்பிக்க.. அவள் முகத்தைப் பற்றி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு ஓடினான் நந்தகோபால்..

வெண்மதி ஃப்ரீசாகி விட்டாள்..

"என்ன மாம்ஸ் முத்தத்தை கொடுத்து அக்காவை ஆஃப் பண்ணிட்டியா.. இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப யூத் கப்பிள்தான்.. அடேங்கப்பா என்ன ரொமான்ஸ்.." வருணின் கேலியில் முகம் சிவந்து..

"ஏன் நாங்கல்லாம் ரொமான்ஸ் பண்ண கூடாதா.. இன்னும் இருபது வருஷம் கழிச்சு கூட என் பொண்டாட்டியை இப்படித்தான் கொஞ்சுவேன்.. இப்ப என்னங்கற..!" காலரை நிமிர்த்து விட்டுக் கொண்டான் நந்தகோபால்..

"அப்புறம் எதுக்காக பொண்டாட்டியை இங்க விட்டுட்டு ஊருக்கு போய் ஜாலியா இருக்கீரு..!"

"உனக்கே தெரியும்ல மச்சான்.. வெண்மதி வீட்ல இருந்தா அம்மா ஒரு துரும்ப கூட தூக்கி போட மாட்டாங்க.. என்னாலயும் அவங்களை எதுவும் கேட்க முடியாது பிரச்சனை வரும்.. நிம்மதி போகும்.. இவளும் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும் பெரியவங்க தானே.. விட்டு தள்ளுங்கன்னு என்னை சமாதானப்படுத்திட்டு அட்ஜஸ்ட் பண்ணி எல்லா வேலையும் செய்வா.. வீட்டு வேலை குழந்தைகள்ன்னு செக்கு மாடு மாதிரி தினமும் ஒரே வேலையை செய்யற பொம்பளைங்களுக்கு ஒரு சேஞ்ச் வேண்டாமா.. ஆம்பளைங்க நாம வாரத்துக்கு ஒரு முறை இல்ல மாசத்துக்கு ஒரு முறை பிரெண்ட்ஸ் பார்ட்டி.. டூர்ன்னு கிளம்பிடறோம்.. பொம்பளைங்க என்ன செய்வாங்க.. இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ அம்மா வீட்ல வந்து மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வெடுத்து நிம்மதியை தேடிக்கிட்டாத்தான் உண்டு..!

வருண் தன் மாமனை நெகிழ்வாக பார்த்தான்..

"அதுக்காக ரெண்டு மாசம் நாலு மாசம் ரொம்ப அதிகம்ல மாமா..!"

உன் அக்கா ரெண்டு மாசமெல்லாம் "இங்க இருக்க மாட்டா.. நீ வேணும்னா பாரு இன்னும் பத்து நாள்ல பொட்டிய கட்டி வச்சுக்கிட்டு என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு ஃபோன் அடிச்சு புலம்பி தள்ளலைன்னா என் பேரை மாத்திக்கறேன்.. என்னைக்காவது உங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேல தங்கி இருந்திருக்காளா..? என்னவோ இந்த முறைதான் கொஞ்சம் அதிகமா பிறந்த வீட்ல டேரா போட்டுட்டா.. சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே..‌ ஏன் மாப்ள என் பொண்டாட்டி உன் வீட்டுல இருக்கறதுனால உனக்கு ஏதாவது பிரச்சனையா..?"

"என்ன மாம்ஸ் இப்படி கேக்கறீங்க.. அக்கா எங்க வீட்ல இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு வந்தவரை ட்ரெயினோட சேர்த்து ரிட்டன் அனுப்புனது நான்தானே மறந்து போயிட்டீங்களா..!"

"மறக்க முடியுமா அந்த நாளை.. டிக்கெட் கூட வாங்கி தராம வித்தவுட்ல என்னை அப்படியே அனுப்பி வச்சியே..! அதுவும் அன் ரிசர்வேஷன்ல.. எம்புட்டுக் கூட்டம் தெரியுமா.. திடீர்னு தல கனக்குது.. என்னன்னு பார்த்தா ரெண்டு இந்திகாரனுங்க ஏறி என் தலை மேல உக்காந்திருக்கானுங்க.. ஊர் போய் சேர்றதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன்." இதழ் குவித்து ஊதி பெருமூச்சு விட வருண் சிரித்தான்..

திருத்தணியிலேயே பெண்களும் ஆண்களும் தனித்தனியே ரூம் போட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு குளித்து உடைமாற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்..

வருண் பலவித வர்ண கனவுகளுடன் தேம்பாவணியை தன் காரில் ஏற்றிக் கொள்ள பின் கதவை திறந்து கொண்டு வரிசையாக ஏறினார்கள் ராஜேந்திரன் சாரதா வெண்மதி மூவரும்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111
திருமண வைபவம் நிறைவாக முடிந்து வெண்மதியின் கணவன் நந்தகோபால் மற்றும் நிவேதாவின் கணவன் சுந்தரோடு நின்று பேசிக் கொண்டிருந்தான் வருண்..

பேச்சுக்கு நடுவில் அடிக்கடி அவன் பார்வை தன் கண்மணியை தேடி களைத்துப் போயிருந்தது..

மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் நிலவாக கூட்டத்துக்குள் மறைந்து போயிருந்தாள் தேம்பாவணி..

"பட்டுப் புடவையில் அட்டகாசமா இருந்தாளே..! இருந்த டென்ஷன்லாம் ஆசை தீர அவளை ரசிக்க கூட முடியல" எங்க போனா..? என்று கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க..

தூணுக்கு மறைவில் வளைக் கரம் அசைந்து சினுங்க எதிரே நின்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி.. அவள் கரங்கள் மட்டும் தான் அவனுக்கு விசிபில் ஆகியது..

"என்ன மச்சான்..! கல்யாண பந்தியில உட்கார்ந்துட்டு சாம்பார் சோத்தை வழிச்சு தின்னுட்டு அடுத்து ரச வாளிக்காரன் எங்கே நிக்கறான்னு ஆளா பறந்து தேடறாப்பல உன் கண்ணு இப்படி மேயுது.." வெண்மதியின் கணவன் நந்தகோபால் கிண்டல் செய்ய இஇஇஇ.. என இளித்து வைத்தான் வருண்..

"அதானே.. ஏன் இப்படி திருட்டுத்தனமா பாக்கணும்.. உங்கள கடத்திட்டு வந்து தாலி கட்ட வச்சிருக்கோம்.. அதான் கல்யாணம் ஆகிப்போச்சே.. தைரியமா உங்க பொண்டாட்டிய பாருங்க மச்சான்.." என்று சுந்தரும் சேர்ந்து கொண்டான்..

"எங்க பாக்கறது அவதான் தூணுக்கு மறைவுல நின்னு ஆட்டங் காட்டறாளே.!" வருண் சலித்தான்..

மறைந்திருந்து டார்ச்சர் செய்யும் மர்மமென்ன..!

மைண்ட் வாய்சோடு பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் சகோதரிகளின் கணவர்களை தயக்கத்தோடு பார்த்தான் வருண்..

"உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் சாரி கேட்டுக்குறேன்.. எதையும் மறைக்கணும்னு இல்லை.. என் சிச்சுவேஷன் அப்படி..! நான் செஞ்ச தப்புக்கும் குளறுபடிக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு.. இதை மனசுல வச்சுக்கிட்டு என் சிஸ்டர்சை எதுவும் காயப்படுத்திடக் கூடாது.."

"அட நீங்க வேற..! இந்த விஷயத்தை பத்தி என் தம்பிகிட்ட கேட்டு அவனை சங்கடத்தை படுத்த கூடாதுன்னு.." வீடியோ கால் போட்டு கற்பூர அடிச்சு சத்தியம் வாங்கின பிறகு தான் உன் அக்கா என்னை இங்க வர வச்சுருக்கா.."

"ஆமா மச்சான்..! என் அண்ணன்கிட்ட இத பத்தி ஏதாவது பேசி அவனை சங்கடப்படுத்தினீங்க அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்னு உங்க தங்கச்சி என்னை மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டி விட்டுட்டா.. அதனால் நாங்க இந்த விஷயத்தை பற்றி ஜென்மத்துக்கு வாய் திறக்க போறதில்லை.." என்ற சுந்தரும் சேர்ந்து கொண்டு..

அப்போதும் தெளிவடையாத நிலையில் வருண் குற்ற உணர்ச்சியோடு நின்று கொண்டிருந்தான்..

தான் செய்த தவறை காரணமாக வைத்து வருங்காலத்தில் தன் சகோதரிகளை அவர்கள் கணவரோ அல்லது கணவரின் உறவுகளோ காயப்படுத்தி விடக் கூடாதே என்ற கவலை அவனுக்கு..

"அட பீ6ல் பண்ணாதீங்க மச்சான்..! உங்களை எவ்வளவு நாளா பார்க்கறோம்.. அவசரப்பட்டு தப்பு பண்ணி பிரச்சனையை இழுத்து விட்டுக்கற ஆள் இல்ல நீங்க. நீங்க எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்..! நடந்து முடிஞ்சதை நெனச்சு வருத்தப்பட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம அடுத்து நடக்க போறத பாருங்க.." என்ற சுந்தர் அவனை இயல்புக்கு கொண்டு வர முயற்சித்தான்..

"நடக்க போறதா..?"வருண் புரியாமல் கேட்க

"ஆமா..! தெரியாத மாதிரி கேக்கற.. புது மனைவியை கூட்டிகிட்டு உல்லாசமா ஹனிமூன் போய் என்ஜாய் பண்ணு மாப்ள.." நந்தகோபால் கண் சிமிட்ட வருண் பெருமூச்சு விட்டான் ‌‌

"அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு மாம்ஸ்.. அதுக்கு முன்னாடி சில வேலைகளை முடிக்கணும்.." என்றான் நிதானமான குரலில்..

"முன்னாடி ரெண்டு வெள்ளை முடி பல்ல இளிச்சுக்கிட்டு நிக்குது.. வயசை தொலைச்சுட்டா திரும்பி வராது தம்பி.. முதல்ல சந்தோஷமா இருக்கற வழிய பாருங்க.. டாக்டருக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.. சொன்னா கிளுகிளுப்பா தான் இருக்கும் இருந்தாலும் சொல்றேன்.. குழாயில தண்ணி வரும் போதே பக்கெட் வச்சிடனும்..! என்றதும் வருண் தலையிலடித்துக் கொண்டான்..

"என்ன மச்சான்.. எவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே உங்களுக்கு.." என்றான் சுந்தர்..

"கல்யாணம் பண்ணி வச்சீங்களா.. பாவிகளா கொஞ்சம் விட்டிருந்தா எல்லாருமா சேர்ந்து அன்ன குண்டா நினைச்சு அக்னி குண்டத்துல தள்ளிவிட்டுருப்பீங்க.."

"வேறென்ன பண்றது.. நாங்க சொல்றத நீங்க கேக்கல நீங்க சொல்றத கேக்கற நிலைமையில நாங்க இல்ல.. கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அது மட்டும் தான் எங்களோட ஒரே டாஸ்கா இருந்துச்சு.. எப்படியோ நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுது இனி நீங்களாச்சு.. உங்க பொண்டாட்டியாச்சு.. எங்களுக்கு பசிக்குது நாங்க சாப்பிட போறோம்.." என்று சகலைகள் இருவரும் தோள் மீது கை போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்..

பக்கத்து பக்கத்தில் அமர்ந்து உணவருந்தினர் தேம்பாவணியும் வருணும்..

"அப்பாடி.. இப்பதான் என் பொண்டாட்டிய ஆசை தீர ரசிக்க முடியுது.." என தேன் வண்ண தங்கமாய் தகதகத்தவளை தலை முதல் கால் வரை பேரழகை அள்ளிப் பருகினான் வருண்..

மிக மீது தாமரையாய் விரித்து வைத்திருந்த மருதாணியில் குளித்திருந்த அவள் உள்ளங்கை அவனை போதையேற்றியது..

"இப்படி ஒரு பேரழகை என் லைஃப்ல இதுவரை பார்த்ததில்லைடி பொண்டாட்டி.. யூ லுக் அமேசிங்.." அவள் காதுக்குள் சொன்னான் வருண்..

பதிலாக பரிசாக முறைப்பு மட்டும்தான் கிடைத்தது..

"உங்க பொண்டாட்டிக்கு ஊட்டுங்க.." என சொந்தங்கள் வற்புறுத்த.. பாதுஷாவை எடுத்து பாதி ஊட்டிவிட்டு மிச்சத்தை தன் வாயில் போட்டுக் கொண்டான்..

"உன் எச்சில் பட்ட பாதுஷா இவ்வளவு இனிப்பா இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.." என்று சொல்லும்போதே வருணே..‌ நடத்து நடத்து என மனசாட்சி நக்கலாய் சிரித்தது..

"என் எச்சில் படாமல் போனாலும் பாதுஷா இனிப்பா தான் இருக்கும்.." என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் தேம்பாவணி..

அவளும் வருவனுக்கு லட்டு ஊட்டிவிட முழுவதையும் வாய்க்குள் இழுத்துக் கொண்டு அவள் விரல்களையும் சேர்த்து கடித்து வைத்தான் வருண்..

"தேம்ஸ்.. ஏய்.. பொண்டாட்டி என்னை பாரடி.. இன்னைக்கு நமக்கு கல்யாணம் நடந்திருக்கு.. நம்ம வாழ்க்கையில மிக முக்கியமான நாள்.. அறுபது வருஷம் கழிச்சு இந்த நாளை நினைச்சு பார்க்கும்போது கூட மனசுக்குள்ள நினைவுகள் இனிப்பா நிலைச்சிருக்கணும்.. இப்படி முகத்தை தூக்கி வச்சுக்காதேடி.. வேண்டாதது எல்லாத்தையும் மறந்துடலாம்.. லெட்ஸ் எஞ்சாய்.. please don't ruin the precious moment" என்றான் மிக மென்மையான குரலில்..

"மறக்கணுமா..? எவ்வளவு பெரிய பெரிய விஷயத்தை மறைச்சிருக்கீங்க.. வீட்ல இருக்கறவங்க கிட்ட சொல்லாம இருக்க ஏதாவது காரணம் இருக்கலாம்.. ஆனா என்கிட்ட ஏன் மறைச்சீங்க.. உண்மையிலேயே நீங்க என்னை லவ் பண்ணியிருந்தா என்னை ஏமாத்தணும்னு தோணியிருக்காது.. இப்ப கூட உங்களை மிரட்டி தூக்கிட்டு வந்து தான் தாலி கட்ட வச்சிருக்காங்க.. உங்க மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்னு எனக்கே புரியல.. எனக்கே பயமா இருக்கு வரூண்.." தேம்பா யாருக்கும் தெரியாமல் கலங்கிய விழிகளை துடைத்துக் கொள்ள வருண் வாடினான்..

புது மனைவிக்கு தன் நிலையை புரிய வைத்து எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனான்..

வீரம் படத்தில் சிறுவயது அஜித்.. அந்த சின்ன பெண்ணிடம் எங்கு போனாலும் கோப்பு.. கோப்பு.. என்று ஆசை தீர அழைத்து வைப்பதை போல்..

சமயம் வாய்க்கும் போதெல்லாம்.. பொண்டாட்டி பொண்டாட்டி என்று அழைத்து குதுகலித்தான் வருண்..

தூணுக்கு மறைவில் நின்றிருந்த தேன்நிற சேலையை பார்த்து பொண்டாட்டி என ஆசையாய் அழைக்க..

"நான் பொண்டாட்டி இல்ல வயசான பாட்டி.. கோவில்ல கூட பொம்பளைங்கள நிம்மதியா சாமி கும்பிட விட மாட்டீங்களா..? இந்த நாட்டுல ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை.. கொஞ்சம் அழகா பொறந்துட்டேன் அது என் தப்பா? என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள் அந்த அம்மா..

"ஐயோ பாட்டி.. நான் என் பியூட்டின்னு நினைச்சுட்டேன்.." வரும் திணறி போக..

"என்னங்க?" என்று அந்த பாட்டி அழைக்க தாத்தா ஹீரோ வருவதற்கு முன் எஸ்கேப் ஆகியிருந்தான் அவன்..

அவன் மனைவியிடம் சிணுங்கி கொஞ்சுவதை வெண்மதியும் கூட கண்டுவிட்டு.. "அந்த புள்ள மேல இவ்வளவு ஆசைய வச்சுக்கிட்டு.. தேவையில்லாத வேலை பார்த்து ஒரு ராங்கி சிறுக்கிய வீட்டுக்கு கொண்டு வந்து.. இவன் வாழ்க்கையை இவனே சிக்கலாகிட்டான்.. பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குக்ஷற பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்ச கதைதான்.." என்ற தலையிலடித்துக் கொள்ள..

"ஆமா மதி.. உங்க அம்மா பெத்தது ஒன்னு கூட சரியில்ல எல்லாம் மரம் கழண்ட கேசு.." வெள்ளை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெண்மதியின் புருஷன் கேஷுவலாக சொல்ல.. அவன் உச்சி முடி மட்டும் கொத்தாக வெண்மதியின் கைக்குள் அகப்பட்டு அந்தரத்தில் மேல் நோக்கி நின்றது..

அக்கா தங்கை அம்மா அப்பா வருணை தனியே அழைத்து ரகசிய மாநாடு நடத்திக் கொண்டிருந்தனர்..

"இங்க பாரு வருணே..! இப்போதைக்கு இந்த கல்யாணத்தை பத்தி உன் டூப்ளிகேட் பொண்டாட்டி திலோத்தமாவுக்கு சொல்ல வேண்டாம்.."

"ஏன்..?" வருண் கண்களை சுருக்கினான்..

"என்ன கேள்வி இது? அவதான் சொல்லிட்டாளே நம்ம வீட்ல நிரந்தரமா வாழறதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு.. உன்னையும் தேம்பாவணியையும் பிரிச்சு உன் பொண்டாட்டியா சொகுசா வாழறதுக்காக அவ தந்திரமா ஏதாவது பிளான் பண்ணி உனக்கோ தேம்பாவிற்கும் அது ஆபத்தா முடிஞ்சிட்டா..?"

"அக்கா அவ அந்த அளவுக்கு போக மாட்டா..!"

"ம்ஹும்.. எனக்கு அவ மேல நம்பிக்கை இல்லை.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டின கதையா.. அந்த திலோத்தமாவால அந்த திலோத்தமாவால தேம்பாவணிக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்யறது.. எங்களுக்கு பயமா இருக்கு.. அதனாலதான் சொல்றோம்.. முதல்ல அவளுக்கு வேண்டியத செஞ்சு வீட்டை விட்டு அனுப்புற வழியை பாரு.. அதுவரைக்கும் இந்த கல்யாண விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம்.." என்றாள் வெண்மதி விடாப்பிடியாக..

"இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படிக்கா மறைக்க முடியும்..?"

"நீ அடக்க ஒடுக்கமா இருந்தா.. கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை அவளுக்கு தெரியாம மறைக்க முடியும்.. எப்பவும் போல நீ உன் ரூம்லயும் தேம்பாவணி அவ ரூம்லயும் இருக்கட்டும்.."

"அக்காஆஆஆ.." வருண் அலறினான்..

"என்ன நொக்கா..! இவருக்கு கல்யாணம் வேண்டாமாம்‌‌.. ஆனா பொண்டாட்டி மட்டும் வேணுமாக்கும்.. உனக்குத்தான் குடும்ப வாழ்க்கையில இன்ட்ரஸ்ட் இல்லையே..!"

"அடியே வெண்மதி நான் எப்ப அப்படி சொன்னேன்..?" வரூண் சீறினான்..

"இவ்வளவு நாள் அப்படித்தானே போச்சு.. 38 வருஷம் பிரம்மச்சரிய விரதம் காத்தவனால இன்னும் ரெண்டு வருஷம் பொறுக்க முடியாதா..?" என்றார் ராஜேந்திரன்..

"ரெண்டு வருஷமா..?" வருணுக்கு மயக்கம் வராத குறை..

"இருக்கிற பிரச்சினையை கிளியர் பண்ணி அந்த திலோத்தமாவை முதல்ல வீட்டை விட்டு அனுப்பு.. அப்புறம் நாங்களே ஒரு நல்ல நாளா பார்த்து உனக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்றோம்.. அதுவரைக்கும் எப்பவும் போல ரெண்டு பேரும் தனித்தனியா இருங்க.." என்றார் சாரதா..

"அம்மா நீ கூடவா..!" அன்னையை பாவமாய் பார்த்தான் வருண்..

"கம் ஆன் அண்ணா..! உன்னால முடியும்.." என்றாள் நிவேதா..

"என்னால முடியாது..!"

"அதான் அவனே ஓகே சொல்லிட்டானே.. வாங்க போவோம்.." குடும்பமே அங்கிருந்த நகர்ந்தது..

"நான் எப்படா ஓகே சொன்னேன்..நான் முடியாதுன்னு சொன்னேன்..!"
வருண் இங்கிருந்து கத்தினான்..

"என்ன முடியாதாம்.." தேம்பாவணி அழகு பதுமையாய் அங்கு வந்து நிற்க..

ல..ல லா.. என இதமாய் வீசிய குளிர் காற்றில் அவன் முகம் மலர்ந்தது..

"கல்யாணம் ஆனாலும் உன் கூட சேர்ந்து வாழ முடியாதாம்.." வெண்மதி வேறு மாதிரியாக கொளுத்தி போட..

"அய்யோ.. இல்ல.. நான் அப்படி சொல்லல..!" வருண் தலையில் கை வைத்து அவசரமாக மறுக்க.. தேம்பாவணி பற்களை கடித்துக் கொண்டு பெரிய விழிகளால் அவனை முறைத்திருந்தாள்..

"இவ வேற என் நிலைமை புரியாம இப்படி அழகா முறைச்சு தொலையுறாளே.. நான் என்ன செய்வேன்.. பேச்சு வர மாட்டேங்குதே.. வாய தொறந்து எஸ்பிளைன் பண்ணுடா வருணே..!" மனம் தான் பேசியது வாய் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டதைப் போல் மௌன விரதம் காக்க கண்களோ எனக்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் அவளை கபளிகரம் செய்து கொண்டிருந்தது..

"சரி நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தா அவளுக்கு சந்தேகம் வந்துடும்.. நிவேதா அவ புருஷன் பிள்ளைகளோட ஊருக்கு போகட்டும்.. மாப்ள நீங்களும் கிளம்புங்க" என்று நந்தகோபாலனை பார்த்து சொன்னார் ராஜேந்திரன்..

"ஆமாங்க நானும் அப்படியே உங்க கூட கிளம்பி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வரேன்.." கணவனை தனியே அழைத்து வெண்மதி சொல்லவும்..

"அப்ப நான் அப்படியே பரதேசம் போயிடவா.." நந்தகோபாலன் கேட்க அவள் திருதிருவென விழித்தாள்‌‌..

"ஏண்டி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. பிறந்த வீட்டுக்கு போனா ரெண்டு நாள் இருக்கலாம்.. ரெண்டு வாரம் கூட இருக்கலாம் இப்படி ரெண்டு மாசமா அங்கேயே டேரா போட்டுட்டு அடுத்த ரெண்டு மாசத்துக்கு அசால்டா அனுமதி கேக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷியா.. உனக்கு மனசாட்சி இல்லையா..?" நந்தகோபால் எகிறியதில் வெண்மதி கண்களை விரித்து பயத்தோடு பார்க்க..

"இஇஇஇஇ.. இப்படி எல்லாம் நான் கேட்க மாட்டேன்.. உனக்கு எத்தனை நாள் அங்க இருக்கணும்னு தோணுதோ இருந்துட்டு வா செல்லம்.. நான் பசங்கள பாத்துக்கறேன்.. ஒன்னும் அவசரம் இல்லை.." என்று குரலில் இனி பையன் உதட்டில் சிரிப்பையும் பூசிக்கொண்டு அவன் சொல்லவும். இடுப்பில் கை வைத்து தன் கணவனை முறைத்தாள் வெண்மதி..

"யோவ் என்னை இந்த பக்கம் அனுப்பி வச்சுட்டு அந்த பக்கம் நீ ஏதாவது தப்பு பண்றியா..! புருஷன் அளவுக்கு மீறி கொஞ்சி பேசினாலே அதுக்கு பின்னாடி ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம் எங்க எடு உன் ஃபோனை.. உன் ஆபீஸ்ல வேலை செய்றாளே ஒருத்தி அவ பெயர் என்ன..?" என்று தன் என்கொயரியை ஆரம்பிக்க.. அவள் முகத்தைப் பற்றி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு ஓடினான் நந்தகோபால்..

வெண்மதி ஃப்ரீசாகி விட்டாள்..

"என்ன மாம்ஸ் முத்தத்தை கொடுத்து அக்காவை ஆஃப் பண்ணிட்டியா.. இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப யூத் கப்பிள்தான்.. அடேங்கப்பா என்ன ரொமான்ஸ்.." வருணின் கேலியில் முகம் சிவந்து..

"ஏன் நாங்கல்லாம் ரொமான்ஸ் பண்ண கூடாதா.. இன்னும் இருபது வருஷம் கழிச்சு கூட என் பொண்டாட்டியை இப்படித்தான் கொஞ்சுவேன்.. இப்ப என்னங்கற..!" காலரை நிமிர்த்து விட்டுக் கொண்டான் நந்தகோபால்..

"அப்புறம் எதுக்காக பொண்டாட்டியை இங்க விட்டுட்டு ஊருக்கு போய் ஜாலியா இருக்கீரு..!"

"உனக்கே தெரியும்ல மச்சான்.. வெண்மதி வீட்ல இருந்தா அம்மா ஒரு துரும்ப கூட தூக்கி போட மாட்டாங்க.. என்னாலயும் அவங்களை எதுவும் கேட்க முடியாது பிரச்சனை வரும்.. நிம்மதி போகும்.. இவளும் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும் பெரியவங்க தானே.. விட்டு தள்ளுங்கன்னு என்னை சமாதானப்படுத்திட்டு அட்ஜஸ்ட் பண்ணி எல்லா வேலையும் செய்வா.. வீட்டு வேலை குழந்தைகள்ன்னு செக்கு மாடு மாதிரி தினமும் ஒரே வேலையை செய்ற பொம்பளைங்களுக்கு ஒரு சேஞ்ச் வேண்டாமா.. ஆம்பளைங்க நாம வாரத்துக்கு ஒரு முறை இல்ல மாசத்துக்கு ஒரு முறை பிரெண்ட்ஸ் பார்ட்டி.. டூர்ன்னு கிளம்பிடறோம்.. பொம்பளைங்க என்ன செய்வாங்க.. இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ அம்மா வீட்ல வந்து மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வெடுத்து நிம்மதியை தேடிக்கிட்டா தான் உண்டு..!

வருண் தன் மாமனை நெகிழ்வாக பார்த்தான்..

"அதுக்காக ரெண்டு மாசம் நாலு மாசம் ரொம்ப அதிகம்ல மாமா..!"

உன் அக்கா ரெண்டு மாசமெல்லாம் "இங்க இருக்க மாட்டா.. நீ வேணும்னா பாரு இன்னும் பத்து நாள்ல பொட்டிய கட்டி வச்சுக்கிட்டு என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு ஃபோன் அடிச்சு புலம்பி தள்ளலைன்னா என் பேரு மாத்திக்கறேன்.. என்னைக்காவது உங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேல தங்கி இருந்திருக்காளா..? என்னவோ இந்த முறைதான் கொஞ்சம் அதிகமா பிறந்த வீட்ல டேரா போட்டுட்டா.. சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே..‌ ஏன் மாப்ள என் பொண்டாட்டி உன் வீட்டுல இருக்கறதுனால உனக்கு ஏதாவது பிரச்சனையா..?"

"என்ன மாம்ஸ் இப்படி கேக்கறீங்க.. அக்கா எங்க வீட்ல இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு வந்தவரை ட்ரெயினோட சேர்த்து ரிட்டன் அனுப்புனது நான்தானே மறந்து போயிட்டீங்களா..!"

"மறக்க முடியுமா அந்த நாளை.. டிக்கெட் கூட வாங்கி தராம வித்தவுட்ல என்னை அப்படியே அனுப்பி வச்சியே..! அதுவும் அன் ரிசர்வேஷன்ல.. எம்புட்டுக் கூட்டம் தெரியுமா.. திடீர்னு தல கனக்குது.. என்னன்னு பார்த்தா ரெண்டு இந்தியக்காரன் ஏறி என் தலை மேல உக்காந்திருக்கானுங்க.. ஊர் போய் சேர்றதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன்." இதழ் குவித்து ஊதி பெருமூச்சு விட வருண் சிரித்தான்..

திருத்தணியிலேயே பெண்களும் ஆண்களும் தனித்தனியே ரூம் போட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு குளித்து உடைமாற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்..

வருண் பலவித வர்ண கனவுகளுடன் தேம்பாவணியை தன் காரில் ஏற்றிக் கொள்ள பின் கதவை திறந்து கொண்டு வரிசையாக ஏறினார்கள் ராஜேந்திரன் சாரதா வெண்மதி மூவரும்..

தொடரும்..
வரூணே உனக்கு வில்லன்கள் வெளியே இல்ல சொந்த வீட்ல தான் இருக்காங்க 🤣🤣🤣
பாவம் டாக்டரே நீங்க கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி விரதம் இருக்க போறீங்க 😜😜😜
இப்போவே நீ தேம்ஸ் மேல இப்படி பாயுற இனி வீட்டுக்கு போனா எப்படி அடக்க ஒடுக்கமா இருக்க போற அந்த சூனிய பொம்மை ஐ எப்படி மேனேஜ் பண்ண போற வரூணே 😂😂😂
 
Member
Joined
Jul 19, 2025
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jun 26, 2025
Messages
33
மதி அக்காதான் சூப்பர்னு பாத்தா நந்து மாம்ஸ் சூப்பரோ சூப்பரு.....😍😍
வருணே குடும்பம்மா சேந்து உன்ன பழிவாங்க அரமிச்சுடாங்கடோய்.....😂😂
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
69
திருமண வைபவம் நிறைவாக முடிந்து வெண்மதியின் கணவன் நந்தகோபால் மற்றும் நிவேதாவின் கணவன் சுந்தரோடு நின்று பேசிக் கொண்டிருந்தான் வருண்..

பேச்சுக்கு நடுவில் அடிக்கடி அவன் பார்வை தன் கண்மணியை தேடி களைத்துப் போயிருந்தது..

மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் நிலவாக கூட்டத்துக்குள் மறைந்து போயிருந்தாள் தேம்பாவணி..

"பட்டுப் புடவையில் அட்டகாசமா இருந்தாளே..! இருந்த டென்ஷன்ல ஆசை தீர என் செல்லத்தை ரசிக்க முடியல" எங்க போனா மை பியாரி..? என கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்க..

தூணுக்கு மறைவில் வளைக்கரம் அசைந்து சினுங்க எதிரே நின்ற நிவேதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் தேம்பாவணி.. அவள் கரங்கள் மட்டும் தான் அவனுக்கு விசிபில் ஆகியது..

"என்ன மச்சான்..! கல்யாண பந்தியில உட்கார்ந்துட்டு சாம்பார் சோத்தை வழிச்சு தின்னுட்டு அடுத்து ரச வாளிக்காரன் எங்கே நிக்கறான்னு ஆளா பறந்து தேடறாப்பல உன் கண்ணு இப்படி மேயுது.." வெண்மதியின் கணவன் நந்தகோபால் கிண்டல் செய்ய இஇஇஇ.. என இளித்து வைத்தான் வருண்..

"அதானே.. ஏன் இப்படி திருட்டுத்தனமா பாக்கணும்.. உங்கள கடத்திட்டு வந்து தாலி கட்ட வச்சிருக்கோம்.. அதான் கல்யாணம் ஆகிப்போச்சே.. தைரியமா உங்க பொண்டாட்டிய பாருங்க மச்சான்.." என்று சுந்தரும் சேர்ந்து கொண்டான்..

"எங்க பாக்கறது அவதான் தூணுக்கு மறைவுல நின்னு ஆட்டங் காட்டறாளே.!" வருண் சலித்தான்..

மறைந்திருந்து டார்ச்சர் செய்யும் மர்மமென்ன..!

மைண்ட் வாய்சோடு பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் சகோதரிகளின் கணவர்களை தயக்கத்தோடு பார்த்தான் வருண்..

"உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் சாரி கேட்டுக்குறேன்.. எதையும் மறைக்கணும்னு இல்லை.. என் சிச்சுவேஷன் அப்படி..! நான் செஞ்ச தப்புக்கும் குளறுபடிக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு.. இதை மனசுல வச்சுக்கிட்டு என் சிஸ்டர்சை எதுவும் காயப்படுத்திடக் கூடாது.."

"அட நீங்க வேற..! இந்த விஷயத்தை பத்தி என் தம்பிகிட்ட கேட்டு அவனை சங்கட படுத்திட கூடாதுன்னு.." வீடியோ கால் போட்டு கற்பூரம் அடிச்சு சத்தியம் வாங்கின பிறகு தான் உன் அக்கா என்னை இங்க வர வச்சுருக்கா.."

"ஆமா மச்சான்..! என் அண்ணன்கிட்ட இத பத்தி ஏதாவது பேசி அவனை சங்கடப்படுத்தினீங்க அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்னு உங்க தங்கச்சி என்னை மிரட்டோ மிரட்டுன்னு மிரட்டி விட்டுட்டா.. அதனால நாங்க இந்த விஷயத்தை பற்றி ஜென்மத்துக்கும் வாய் திறக்க போறதில்லை.." என்றான் சுந்தரும் சேர்ந்து கொண்டு..

அப்போதும் தெளிவடையாத நிலையில் வருண் குற்ற உணர்ச்சியோடு நின்று கொண்டிருந்தான்..

தான் செய்த தவறை காரணமாக வைத்து வருங்காலத்தில் தன் சகோதரிகளை அவர்கள் கணவரோ அல்லது கணவரின் உறவுகளோ காயப்படுத்தி விடக் கூடாதென்ற கவலை அவனுக்கு..

"அட ஃபீல் பண்ணாதீங்க மச்சான்..! உங்களை எவ்வளவு நாளா பார்க்கறோம்.. அவசரப்பட்டு தப்பு பண்ணி பிரச்சனையை இழுத்து விட்டுக்கற ஆள் இல்ல நீங்க. நீங்க எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்..! நடந்து முடிஞ்சதை நெனச்சு வருத்தப்பட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம அடுத்து நடக்க போறத பாருங்க.." என்ற சுந்தர் அவனை இயல்புக்கு கொண்டு வர முயற்சித்தான்..

"நடக்க போறதா..?"வருண் புரியாமல் கேட்க

"ஆமா..! தெரியாத மாதிரி கேக்கற.. புது மனைவியை கூட்டிகிட்டு உல்லாசமா ஹனிமூன் போய் என்ஜாய் பண்ணு மாப்ள.." நந்தகோபால் கண் சிமிட்ட வருண் பெருமூச்சு விட்டான் ‌‌

"அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு மாம்ஸ்.. அதுக்கு முன்னாடி சில வேலைகளை முடிக்கணும்.." என்றான் நிதானமான குரலில்..

"முன்னாடி ரெண்டு வெள்ளை முடி பல்ல இளிச்சுக்கிட்டு நிக்குது.. வயசை தொலைச்சுட்டா திரும்பி வராது தம்பி.. முதல்ல சந்தோஷமா இருக்கற வழிய பாருங்க.. டாக்டருக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.. சொன்னா கிளுகிளுப்பா தான் இருக்கும் இருந்தாலும் சொல்றேன்.. குழாயில தண்ணி வரும் போதே பக்கெட்டை வச்சிடனும்..! என்றதும் வருண் தலையிலடித்துக் கொண்டான்..

"ஹனிமூன்தான் வேண்டாம்னு சொன்னேன்.. மத்ததெல்லாம் இல்லைன்னு நான் எப்ப சொன்னேன்.. எல்லாம் நடக்கும் போது நடக்கும்.." என்றான் வருண் கூச்சத்தோடு..

"என்ன மச்சான்.. எவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே உங்களுக்கு.." என்றான் சுந்தர்..

"கல்யாணம் பண்ணி வச்சீங்களா.. பாவிகளா கொஞ்சம் விட்டிருந்தா எல்லாருமா சேர்ந்து அன்ன குண்டான்னு நினைச்சு அக்னி குண்டத்துல தள்ளிவிட்டுருப்பீங்க.."

"வேறென்ன பண்றது.. நாங்க சொல்றத நீங்க கேக்கல நீங்க சொல்றத கேக்கற நிலைமையில நாங்க இல்ல.. கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அது மட்டும் தான் எங்களோட ஒரே டாஸ்க்கா இருந்துச்சு.. எப்படியோ நல்லபடியா கல்யாணம் முடிஞ்சுது இனி நீங்களாச்சு.. உங்க பொண்டாட்டியாச்சு.. எங்களுக்கு பசிக்குது நாங்க சாப்பிட போறோம்.." என்று சகலைகள் இருவரும் தோள் மீது கை போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்..

பக்கத்து பக்கத்தில் அமர்ந்து உணவருந்தினர் தேம்பாவணியும் வருணும்..

"அப்பாடி.. இப்பதான் என் பொண்டாட்டிய ஆசை தீர ரசிக்க முடியுது.." என தேன் வண்ண பட்டுப்புடவையில் தங்கமாய் தகதகத்தவளை தலை முதல் கால் வரை பேரழகை அள்ளிப் பருகினான் வருண்..

மேஜை மீது தாமரையாய் விரித்து வைத்திருந்த மருதாணியில் குளித்திருந்த அவள் உள்ளங்கை மருத்துவனை போதையேற்றியது..

"இப்படி ஒரு பேரழகை என் லைஃப்ல இதுவரை பார்த்ததில்லைடி பொண்டாட்டி.. யூ லுக் அமேசிங்.." அவள் காதுக்குள் சொன்னான் வருண்..

பதிலாக பரிசாக முறைப்பு மட்டும்தான் கிடைத்தது..

"உங்க பொண்டாட்டிக்கு ஊட்டுங்க.." என சொந்தங்கள் வற்புறுத்த.. பாதுஷாவை எடுத்து பாதி ஊட்டிவிட்டு மிச்சத்தை தன் வாயில் போட்டுக் கொண்டான்..

"உன் எச்சில் பட்ட பாதுஷா இவ்வளவு இனிப்பா இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல.." என்று சொல்லும்போதே வருணே..‌ நடத்து நடத்து என மனசாட்சி நக்கலாய் சிரித்தது..

"என் எச்சில் படாமல் போனாலும் பாதுஷா இனிப்பாத்தான் இருக்கும்.." என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் தேம்பாவணி..

அவளும் வருணுக்கு லட்டு ஊட்டிவிட முழுவதையும் வாய்க்குள் இழுத்துக் கொண்டு அவள் விரல்களையும் சேர்த்து கடித்து வைத்தான் வருண்..

"தேம்ஸ்.. ஏய்.. பொண்டாட்டி என்னை பாரடி.. இன்னைக்கு நமக்கு கல்யாணம் நடந்திருக்கு.. நம்ம வாழ்க்கையில மிக முக்கியமான நாள்.. அறுபது வருஷம் கழிச்சு இந்த நாளை நினைச்சு பார்க்கும்போது கூட மனசுக்குள்ள நினைவுகள் இனிப்பா நிலைச்சிருக்கணும்.. இப்படி முகத்தை தூக்கி வச்சுக்காதேடி.. வேண்டாதது எல்லாத்தையும் மறந்துடலாம்.. லெட்ஸ் எஞ்சாய்.. please don't ruin the precious moment" என்றான் மிக மென்மையான குரலில்..

"மறக்கணுமா..? எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கீங்க.. வீட்ல இருக்கறவங்க கிட்ட சொல்லாம இருக்க உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனா என்கிட்ட ஏன் மறைச்சீங்க.. உண்மையிலேயே நீங்க என்னை லவ் பண்ணியிருந்தா என்னை ஏமாத்தணும்னு தோணியிருக்காது.. இப்ப கூட உங்களை மிரட்டி தூக்கிட்டு வந்துதான தாலி கட்ட வச்சிருக்காங்க.. உங்க மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்னு எனக்கே புரியல.. எனக்கு பயமா இருக்கு வரூண்.." தேம்பா யாருக்கும் தெரியாமல் கலங்கிய விழிகளை துடைத்துக் கொள்ள வருண் வாடினான்..

புது மனைவிக்கு தன் நிலையை புரிய வைத்து எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனான்..

வீரம் படத்தில் சிறுவயது அஜித்.. அந்த சின்ன பெண்ணிடம் எங்கு போனாலும் கோப்பு.. கோப்பு.. என்று ஆசை தீர அழைத்து வைப்பதை போல்..

சமயம் வாய்க்கும் போதெல்லாம்.. பொண்டாட்டி பொண்டாட்டி என்று அழைத்து குதுகலித்தான் வருண்..

தூணுக்கு மறைவில் நின்றிருந்த தேன்நிற சேலையை பார்த்து பொண்டாட்டி என ஆசையாய் அழைக்க..

"நான் பொண்டாட்டி இல்ல பொன்னம்மா பாட்டி.. கோவில்ல கூட பொம்பளைங்கள நிம்மதியா சாமி கும்பிட விட மாட்டீங்களா..? இந்த நாட்டுல ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை.. கொஞ்சம் அழகா பொறந்துட்டேன் அது என் தப்பா? என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தாள் அந்த அம்மா..

"ஐயோ பாட்டி.. நான் என் பியூட்டின்னு நினைச்சுட்டேன்.." வரும் திணறி போக..

"என்னங்க?" என்று அந்த பாட்டி அழைக்க தாத்தா ஹீரோ வருவதற்கு முன் எஸ்கேப் ஆகியிருந்தான் அவன்..

அவன் மனைவியிடம் சிணுங்கி கொஞ்சுவதை வெண்மதியும் கூட கண்டுவிட்டு.. "அந்த புள்ள மேல இவ்வளவு ஆசைய வச்சுக்கிட்டு.. தேவையில்லாத வேலை பார்த்து ஒரு ராங்கி சிறுக்கிய வீட்டுக்கு கொண்டு வந்து.. இவன் வாழ்க்கையை இவனே சிக்கலாகிட்டான்.. பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்ச கதைதான்.." என தலையிலடித்துக் கொள்ள..

"ஆமா மதி.. உங்க அம்மா பெத்தது ஒன்னு கூட சரியில்ல எல்லாம் மரம் கழண்ட கேசு.." வெள்ளை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெண்மதியின் புருஷன் கேஷுவலாக சொல்ல.. அவன் உச்சி முடி மட்டும் கொத்தாக வெண்மதியின் கைக்குள் அகப்பட்டு அந்தரத்தில் மேல் நோக்கி நின்றது..

அக்கா தங்கை அம்மா அப்பா வருணை தனியே அழைத்து ரகசிய மாநாடு நடத்திக் கொண்டிருந்தனர்..

"இங்க பாரு வருணே..! இப்போதைக்கு இந்த கல்யாணத்தை பத்தி உன் டூப்ளிகேட் பொண்டாட்டி திலோத்தமாவுக்கு சொல்ல வேண்டாம்.."

"ஏன்..?" வருண் கண்களை சுருக்கினான்..

"என்ன கேள்வி இது? அவதான் சொல்லிட்டாளே நம்ம வீட்ல நிரந்தரமா வாழறதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு.. உன்னையும் தேம்பாவணியையும் பிரிச்சு உன் பொண்டாட்டியா சொகுசா வாழறதுக்காக அவ தந்திரமா ஏதாவது பிளான் பண்ணி உனக்கோ தேம்பாவுக்கோ அது ஆபத்தா முடிஞ்சிட்டா..?" வெண்மதியின் குரல் நடுங்கியது..

"அக்கா அவ அந்த அளவுக்கு போக மாட்டா..!"

"ம்ஹும்.. எனக்கு அவ மேல நம்பிக்கை இல்லை.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டின கதையா.. அந்த திலோத்தமாவால தேம்பாவணிக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன செய்யறது.. எங்களுக்கு பயமா இருக்கு.. அதனாலதான் சொல்றோம்.. முதல்ல அவளுக்கு வேண்டியத செஞ்சு வீட்டை விட்டு அனுப்புற வழியை பாரு.. அதுவரைக்கும் இந்த கல்யாண விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம்.." என்றாள் வெண்மதி விடாப்பிடியாக..

"இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படிக்கா மறைக்க முடியும்..?"

"நீ அடக்க ஒடுக்கமா இருந்தா.. கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை அவளுக்கு தெரியாம மறைக்க முடியும்.. எப்பவும் போல நீ உன் ரூம்லயும் தேம்பாவணி அவ ரூம்லயும் இருக்கட்டும்.."

"அக்காஆஆஆ.." வருண் அலறினான்..

"என்ன நொக்கா..! இவருக்கு கல்யாணம் வேண்டாமாம்‌‌.. ஆனா பொண்டாட்டி மட்டும் வேணுமாக்கும்.. உனக்குத்தான் குடும்ப வாழ்க்கையில இன்ட்ரஸ்ட் இல்லையே..!"

"அடியே வெண்மதி நான் எப்ப அப்படி சொன்னேன்..?" வரூண் சீறினான்..

"இவ்வளவு நாள் அப்படித்தானே போச்சு.. 38 வருஷம் பிரம்மச்சரிய விரதம் காத்தவனால இன்னும் ரெண்டு வருஷம் பொறுக்க முடியாதா..?" என்றார் ராஜேந்திரன்..

"ரெண்டு வருஷமா..?" வருணுக்கு மயக்கம் வராத குறை..

"இருக்கற பிரச்சினையை கிளியர் பண்ணி அந்த திலோத்தமாவை முதல்ல வீட்டை விட்டு அனுப்பு.. அப்புறம் நாங்களே ஒரு நல்ல நாளா பார்த்து உனக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்றோம்.. அதுவரைக்கும் எப்பவும் போல ரெண்டு பேரும் தனித்தனியா இருங்க.." என்றார் சாரதா..

"அம்மா நீ கூடவா..!" அன்னையை பாவமாய் பார்த்தான் வருண்..

"கம் ஆன் அண்ணா..! உன்னால முடியும்.." என்றாள் நிவேதா..

"என்னால முடியாது..!"

"அதான் அவனே ஓகே சொல்லிட்டானே.. வாங்க போவோம்.." குடும்பமே அங்கிருந்த நகர்ந்தது..

"நான் எப்படா ஓகே சொன்னேன்..நான் முடியாதுன்னு சொன்னேன்..!"
குடும்பமே அவனை பழிவாங்கும் வைபில் இருந்து..

"என்ன முடியாதாம்.." தேம்பாவணி அழகு பதுமையாய் அங்கு வந்து நிற்க..

ல..ல லா.. என இதமாய் வீசிய குளிர் காற்றில் அவன் முகம் மலர்ந்தது..

"கல்யாணம் ஆனாலும் உன் கூட சேர்ந்து வாழ முடியாதாம்.." வெண்மதி வேறு மாதிரியாக கொளுத்தி போட..

"அய்யோ.. இல்ல.. நான் அப்படி சொல்லல..!" வருண் தலையில் கை வைத்து அவசரமாக மறுக்க.. தேம்பாவணி பற்களை கடித்துக் கொண்டு பெரிய விழிகளால் அவனை முறைத்திருந்தாள்..

"இவ வேற என் நிலைமை புரியாம இப்படி அழகா முறைச்சு தொலையுறாளே.. நான் என்ன செய்வேன்.. பேச்சு வர மாட்டேங்குதே.. வாய தொறந்து எஸ்பிளைன் பண்ணுடா வருணே..!" மனம் தான் பேசியது வாய் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டதைப் போல் மௌன விரதம் காக்க கண்களோ எனக்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல் பெண் வடிவத்தை கபளிகரம் செய்து கொண்டிருந்தது..

"சரி நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தா அவளுக்கு சந்தேகம் வந்துடும்.. நிவேதா அவ புருஷன் பிள்ளைகளோட ஊருக்கு போகட்டும்.. மாப்ள நீங்களும் கிளம்புங்க" என்று நந்தகோபாலனை பார்த்து சொன்னார் ராஜேந்திரன்..

"ஆமாங்க நானும் அப்படியே அவங்க கூட கிளம்பி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வரேன்.." கணவனை தனியே அழைத்து சொன்னாள் வெண்மதி..

"அப்ப நான் அப்படியே பரதேசம் போயிடவா.." நந்தகோபாலன் கேட்க அவள் திருதிருவென விழித்தாள்‌‌..

"ஏண்டி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. பிறந்த வீட்டுக்கு போனா ரெண்டு நாள் இருக்கலாம்.. ரெண்டு வாரம் கூட இருக்கலாம் இப்படி ரெண்டு மாசமா அங்கேயே டேரா போட்டுட்டு அடுத்த ரெண்டு மாசத்துக்கு அசால்டா அனுமதி கேக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷியா.. உனக்கு மனசாட்சி இல்லையா..?" நந்தகோபால் எகிறியதில் வெண்மதி கண்களை விரித்து பயத்தோடு பார்க்க..

"இஇஇஇஇ.. இப்படியெல்லாம் நான் கேட்க மாட்டேன்.. உனக்கு எத்தனை நாள் அங்க இருக்கணும்னு தோணுதோ இருந்துட்டு வா செல்லம்.. நான் பசங்கள பாத்துக்கறேன்.. ஒன்னும் அவசரம் இல்லை.." என்று குரலில் இனிப்பையும் உதட்டில் சிரிப்பையும் பூசிக்கொண்டு அவன் சொல்லவும். இடுப்பில் கை வைத்து தன் கணவனை முறைத்தாள் வெண்மதி..

"யோவ் என்னை இந்த பக்கம் அனுப்பி வச்சுட்டு அந்த பக்கம் நீ ஏதாவது தப்பு பண்றியா..! புருஷன் அளவுக்கு மீறி கொஞ்சி பேசினாலே அதுக்கு பின்னாடி ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம் எங்க எடு உன் ஃபோனை.. உன் ஆபீஸ்ல வேலை செய்றாளே ஒருத்தி அவ பெயர் என்ன..?" என்று தன் என்கொயரியை ஆரம்பிக்க.. அவள் முகத்தைப் பற்றி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு ஓடினான் நந்தகோபால்..

வெண்மதி ஃப்ரீசாகி விட்டாள்..

"என்ன மாம்ஸ் முத்தத்தை கொடுத்து அக்காவை ஆஃப் பண்ணிட்டியா.. இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப யூத் கப்பிள்தான்.. அடேங்கப்பா என்ன ரொமான்ஸ்.." வருணின் கேலியில் முகம் சிவந்து..

"ஏன் நாங்கல்லாம் ரொமான்ஸ் பண்ண கூடாதா.. இன்னும் இருபது வருஷம் கழிச்சு கூட என் பொண்டாட்டியை இப்படித்தான் கொஞ்சுவேன்.. இப்ப என்னங்கற..!" காலரை நிமிர்த்து விட்டுக் கொண்டான் நந்தகோபால்..

"அப்புறம் எதுக்காக பொண்டாட்டியை இங்க விட்டுட்டு ஊருக்கு போய் ஜாலியா இருக்கீரு..!"

"உனக்கே தெரியும்ல மச்சான்.. வெண்மதி வீட்ல இருந்தா அம்மா ஒரு துரும்ப கூட தூக்கி போட மாட்டாங்க.. என்னாலயும் அவங்களை எதுவும் கேட்க முடியாது பிரச்சனை வரும்.. நிம்மதி போகும்.. இவளும் குடும்பம்னா அப்படித்தான் இருக்கும் பெரியவங்க தானே.. விட்டு தள்ளுங்கன்னு என்னை சமாதானப்படுத்திட்டு அட்ஜஸ்ட் பண்ணி எல்லா வேலையும் செய்வா.. வீட்டு வேலை குழந்தைகள்ன்னு செக்கு மாடு மாதிரி தினமும் ஒரே வேலையை செய்யற பொம்பளைங்களுக்கு ஒரு சேஞ்ச் வேண்டாமா.. ஆம்பளைங்க நாம வாரத்துக்கு ஒரு முறை இல்ல மாசத்துக்கு ஒரு முறை பிரெண்ட்ஸ் பார்ட்டி.. டூர்ன்னு கிளம்பிடறோம்.. பொம்பளைங்க என்ன செய்வாங்க.. இந்த மாதிரி வருஷத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ அம்மா வீட்ல வந்து மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வெடுத்து நிம்மதியை தேடிக்கிட்டாத்தான் உண்டு..!

வருண் தன் மாமனை நெகிழ்வாக பார்த்தான்..

"அதுக்காக ரெண்டு மாசம் நாலு மாசம் ரொம்ப அதிகம்ல மாமா..!"

உன் அக்கா ரெண்டு மாசமெல்லாம் "இங்க இருக்க மாட்டா.. நீ வேணும்னா பாரு இன்னும் பத்து நாள்ல பொட்டிய கட்டி வச்சுக்கிட்டு என்னை வந்து கூட்டிட்டு போங்கன்னு ஃபோன் அடிச்சு புலம்பி தள்ளலைன்னா என் பேரை மாத்திக்கறேன்.. என்னைக்காவது உங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேல தங்கி இருந்திருக்காளா..? என்னவோ இந்த முறைதான் கொஞ்சம் அதிகமா பிறந்த வீட்ல டேரா போட்டுட்டா.. சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே..‌ ஏன் மாப்ள என் பொண்டாட்டி உன் வீட்டுல இருக்கறதுனால உனக்கு ஏதாவது பிரச்சனையா..?"

"என்ன மாம்ஸ் இப்படி கேக்கறீங்க.. அக்கா எங்க வீட்ல இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு வந்தவரை ட்ரெயினோட சேர்த்து ரிட்டன் அனுப்புனது நான்தானே மறந்து போயிட்டீங்களா..!"

"மறக்க முடியுமா அந்த நாளை.. டிக்கெட் கூட வாங்கி தராம வித்தவுட்ல என்னை அப்படியே அனுப்பி வச்சியே..! அதுவும் அன் ரிசர்வேஷன்ல.. எம்புட்டுக் கூட்டம் தெரியுமா.. திடீர்னு தல கனக்குது.. என்னன்னு பார்த்தா ரெண்டு இந்திகாரனுங்க ஏறி என் தலை மேல உக்காந்திருக்கானுங்க.. ஊர் போய் சேர்றதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன்." இதழ் குவித்து ஊதி பெருமூச்சு விட வருண் சிரித்தான்..

திருத்தணியிலேயே பெண்களும் ஆண்களும் தனித்தனியே ரூம் போட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு குளித்து உடைமாற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்..

வருண் பலவித வர்ண கனவுகளுடன் தேம்பாவணியை தன் காரில் ஏற்றிக் கொள்ள பின் கதவை திறந்து கொண்டு வரிசையாக ஏறினார்கள் ராஜேந்திரன் சாரதா வெண்மதி மூவரும்..

தொடரும்..
Super
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
115
டாக்டரே உன் நிலைமை ரொம்ப ரொம்ப மோசம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நீ தான் டாக்டரே. 🤣🤣🤣🤣🤣 🤪🤪🤪🤪🤪🤪🤪

உன் அக்கா மட்டுமில்லை உன் மாமனும் சூப்பர் கேரக்டர். 👌👌👌👌👌👌👌 எவ்வளவு அழகா புரிஞ்சு நடந்துக்கிறாங்க.

டாக்டரே சீக்கிரம் அந்த மேனாமினுக்கிய பேக் பண்ணி விடு. இல்லை தேம்பாவை கண்ணுல பார்க்க மட்டும் தான் முடியும். 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 🤪🤪🤪🤪🤪 🫢🫢🫢🫢🫢🫢
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
😂 ஹாஹா வருணே இதுக்கு கல்யாணம்
பண்ணாமலே இருந்திருக்கலாம் 😂😂
2 years ku பிரம்மாசாரியா இருக்கணுமாமே...

பொண்டாட்டி பொண்டாட்டி..ன்னு வாயால மட்டும் இப்போ சொல்லிக்க வேண்டியது தான் 🫢🫢🫢🫢..
நல்ல வேலை வருணே
பொண்டாட்டின்னு பொன்னமா பாட்டி கைய பிடுச்சு இழுக்காம விட்டாயே....😅😅😅😅..

மதி மா புருஷனுக்கும் CID வேலை பாப்பிங்கா போல....haha sudden ah husband Ku love overflow ஆன இப்படி தான் 😁😁😁😁...பட் மதி வேணுகோபால் best couples than... இவ்வளவு புரிஞ்சு வெச்சுரகாங்க...

அந்த திலோ அவ்ளோ worth ah.... இவளோ பயப்படராங்களே...🤔🤔🤔🤔
 
Last edited:
Member
Joined
Jun 27, 2025
Messages
25
வரூணே உனக்கு வில்லன்கள் வெளியே இல்ல சொந்த வீட்ல தான் இருக்காங்க 🤣🤣🤣
பாவம் டாக்டரே நீங

இன்னைக்கு ஓரே என்டேர்டைன்மெண்ட் தான் 😂🤣குழாய் தண்ணீர் பக்கெட் நல்லா எக்ஸாம்பிள் 🙈🤫மதி அக்கா அவங்க வீட்டுக்காரர் நல்லா அண்டர் ஸ்டாண்டிங் கப்பிள் ❤️✨உங்க நிலைமை தான் மோசம் டாக்டரே 😂🤣புள்ளைய ஒன்னும் பண்ணிராதீங்க 🤭வீட்டுக்கு போய் அந்த பேய் கிட்ட என்ன சொல்ல போறீங்கலோ
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
170
ஒரு உண்மையை மறைத்ததற்கு குடும்பமே ஒன்னு சேர்ந்து வருணுக்கு ஆப்பு வைக்கிறார்கள் ....🤣🤣🤣🤣🤣🤣 மதி சிஸ்டர் நந்து ஜோடி perfect ஜோடியா இருக்கிறது.... 👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மொத்தத்தில் 👌👌👌👌👌👌👌👌😘
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
68

Varun parents Soldrathum sari thaan. Illati thilo va varun anuppa mataan. Ipo kooda avan muyarchi seiyyave ila. So irukattum . Eppadiyum kalyaanam mudinju pochchu. So athu issue illa. Ini thilo enna plan vachu irukko.. 🤔..
 
Member
Joined
Jul 28, 2025
Messages
34
உனக்கு வாய்ச்சது அவ்வளவு தான் வருணே.... என்ஜாய்...
 
Top