- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
காலை நேரம் பரபரப்பாக துவங்குவதற்கு முன் அடுக்களைக்குள் நுழைந்திருந்தாள் அகலிகா.. வேலைகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன.. அதே வீடு அதே குடும்பம்.. ஆனால் அவள் நிலை தலைகீழாக மாறிவிட்டது..
அன்று மகாராணியாக வலம் வந்த வீட்டில் இன்று இந்த சமையலறைக்குள் வேலைக்காரியாக அடைந்து கொண்டிருக்கிறாள்..
அடையாளமிழந்து மதிப்பிழந்து..!! தூசி போல் கண்களை உருத்திய சபலம் அவள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது..
வேறு வழியில்லாமல் திரும்பி வரவில்லை.. திருந்தி வந்திருக்கிறாள்.. மன்னிப்பை யாசித்து தண்டனைகளை ஏற்றுக்கொண்டு.. அவமானங்களை தாங்கிக்கொள்ள தயாராக.. மீண்டும் தன் புகுந்த வீட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்..
இரண்டாவது மருமகள் கௌதமனின் மனைவி.. ஸ்வேதாவின் தாய் என்ற அடையாளங்கள் மாறி.. இப்பொழுது ஓடிப்போனவள்.. குடும்ப மானத்தை கப்பலேற்றியவள்.. அரிப்பெடுத்தவள் என்ற பெயர் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.. தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் தவறு அவளுடையது..
"அகலி.. டிபன் ஆச்சுதா..? லஞ்ச் பேக் பண்ணிட்டியா..!! பெரியவனுக்கு பிரட் ஆம்லெட் மட்டும் இன்னொரு பாக்ஸ்ல பேக் பண்ணி வச்சுடு.." வேலைக்கு செல்வதற்காக கச்சிதமாக தயாராகி அங்கு வந்து நின்றாள் சிவரஞ்சனி..
"சரிக்கா.." சோர்வாக வந்தது அகலியின் குரல் முந்தைய நாள் இரவு சரியாக தூங்க வில்லை .. கண்களும் தேகமும் ஓய்வுக்காக கெஞ்சியது..
தினமும் இரவு சிவராத்திரிதான்.. கட்டில் கதறும் தாம்பத்யம்.. தடுமாறி போகிறாள்.. அவள் ஒருகாலத்தில் எதிர்பார்த்து விரும்பிய ஒன்று.. இப்போது இனிக்கவில்லை.. அவள் விருப்பங்களை பொருட்படுத்தாமல் பெண்மையை கசக்கி சூறையாடுகிறான்.. காமநெடி நிறைய உண்டு.. காதல்.. அன்பு.. கருணை மருந்துக்கும் இல்லை.. அவன் மனத் துயரங்களுக்கு மருந்து இந்த மூர்க்கத் தேடல்.. விட்டுக் கொடுத்து போகிறாள் அகலி..
இரவின் வன்மை பகல் பொழுதில் பெண்ணை களைப்பாக்கி.. பலவீனமாக்கி விடுகிறது..
"உன் பெரிய மாமா சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கார்.. கொஞ்சம் சீக்கிரமா தோசை சுட்டு எடுத்துட்டு வா..!!" சிவரஞ்சனியிடம் அதிகாரம் தூள் பறந்தது.. சொன்னவள் ஒரு துரும்பை கூட தூக்கிப் போடுவதில்லை..
பெரிய மாமா என்பவர் சிவரஞ்சனியின் கணவர் உத்தமன்.. தன் கணவனுக்காக தானே மாங்கு மாங்கென்று வேலை செய்த காலங்கள் மலையேறிவிட்டது.. இப்போதுதான் சம்பளம் இல்லாத புது வேலைக்காரி வந்துவிட்டாளே.. இனி அனைத்தையும் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற மிதப்பு..
அகலிகாவை அந்த குடும்பமே பந்தாடுவதை சிவரஞ்சனி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வசதியாக குளிர் காய்கிறாள்..
அந்நாட்களில் பெண்கள் மூவருமாக வரிசை கட்டி வேலை செய்த அந்த வீட்டில் இப்போது இவள் ஒருத்தி மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கிறாள்..
தோராயமாக ஒரு 15 தோசைகளை மனசாட்சி இல்லாமல் விழுங்கிக் கொண்டிருந்தான் உத்தமன்..
அகலி சமையலறை பக்கமே எட்டி பார்க்காத அந்த காலகட்டங்களில்.. கார்த்திகா தோசை சுடுவாள்.. அதை ஹாட் பாக்சில் மொத்தமாக அடுக்கி ஒரே முறையாக சிவரஞ்சனி எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்து விடுவாள்..
சூடா ஒரு முட்டை தோசை.. என்று கூடுதலாக விருப்பப்பட்டு ஒன்று கேட்டாலும் முறைப்பு மட்டுமே பதிலாக கிடைத்து அந்த காலம்..
இப்போது முட்டை தோசை நெய் தோசை பொடி தோசை என்று எது கேட்டாலும் உத்தமனுக்கு உடுப்பி ஓட்டல் போல் உடனே கிடைத்து விடுகிறது.. சிவரஞ்சனிக்கு சிரமம் ஒன்றும் இல்லை.. வாயால் அது வேண்டும் இது வேண்டும் என்று ஆர்டர் செய்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டம் வந்துவிடப் போவதில்லை..
கூந்தலை கொண்டையாக அள்ளி முடிந்து.. பழைய காட்டன் புடவையை தூக்கி சொருகிக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க தட்டில் தோசையோடு ஓடி வந்த அகலிகாவை பார்க்கும் போது சிவரஞ்சனிக்கு எத்தனை ஆனந்தம்..
புடவை முந்தானையை சுழற்றி கொண்டு தேவசேனா போல் ஒயிலாக நடந்து வந்த அகலிகா.. இப்போது பைத்தியக்கார கோலத்தில் கிழிந்த உடையுடன் பாகுபலி கைதியாக அரண்மனை வாயிலில் வலம் வரும் தேவசேனா போல் உருமாறி இருந்தாள்.. அவள் உழைப்பிலும் கஷ்டத்திலும் சிவரஞ்சனி மெருகேறி இருக்கிறாள்..
தோசையை கொண்டு வந்து உத்தமனின் தட்டில் போட..
"ஏம்மா ஒரு தோசை சுட இவ்வளவு நேரமா..? எவ்வளவு நேரம் காத்திருக்கிறது..!!" என்று முகத்தை சுளித்தான் அவன்..
அடுத்து தோசை கருகி விடுமே என்ற அவசரத்தோடு சமையலறைக்குள் ஓடினாள் அகலிகா..
இரண்டு குழந்தைகளுக்கும் இட்லி ஊட்டி கொண்டிருந்த சிவரஞ்சனி கணவனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..
குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் எச்சில் தட்டுகளைக் கொண்டு வந்து மித்தத்தில் போட்டுவிட்டு.. கையை மட்டும் கழுவிக் கொண்டாள் சிவரஞ்சனி..
"காலையில கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்கணும் அகலிகா.. உன்னால எல்லாருக்கும் லேட் ஆகுது.. நான் வேலைக்கு போவேனா இல்ல வீட்டை பார்ப்பேனா..!! "
"அத்தை இருந்த வரைக்கும் எல்லா வேலைகளும் சரியா நடந்துட்டு இருந்துச்சு.. யாரு கண்ணு பட்டுதோ நல்லா நடமாடிட்டு இருந்த மனுஷி திடீர்னு படுத்த படுக்கையாகிட்டாங்க..!! பாவம் அவங்களுக்கு நேரம் சரியில்லை.." அகலிகாவை பார்த்து படி பெருமூச்சு விட்டாள் சிவரஞ்சனி..
அகலிகா வாயே திறக்கவில்லை.. உணர்ச்சிகளை தொலைத்த முகத்துடன் குழந்தைகளுக்கும் சிவரஞ்சனிக்கும் லஞ்ச் பேக் பண்ணி கொண்டிருந்தாள்..
வீட்டின் மருமகள்களில் ஒருத்தி நன்றாக அலங்கரித்துக் கொண்டு மிடுக்காக நின்று கொண்டிருக்க இன்னொருத்தியோ வேலைக்காரி கோலத்தில் அவள் ஆணையிட்ட வேலைகளை அடிபணிந்து செய்து கொண்டிருந்தாள்.. காலச்சக்கரம் அனைத்தையும் மாற்றி விடுகிறது..
"அகலி.. இந்த பசங்க என்னத்த சாப்பிட்டுட்டு படுக்கையில் கொட்டி வச்சாங்க தெரியல.. ஒரே எறும்பு.. படுக்கை விரிப்பை கொஞ்சம் துவைச்சு போட்டுடு.. அப்புறம் அழுக்கு துணி சேர்ந்து போச்சு.. நாளைக்கு உடுத்திக்க கூட புடவை இல்லை.. எல்லாத்தையும் வாஷ் பண்ணி மடிச்சு வச்சுரு.." உத்தரவுகள் வரிசையாக பிறப்பிக்கப்பட்டதில்
"ம்ம்.. சரிக்கா.." சோர்வாக வந்தது அவள் குரல்..
"இந்த பையன் யூனிபார்மை கரித்துணி போல அழுக்காக்கி வெச்சிருக்கு.. அழுக்கு போக நல்ல வெளுப்பா துவச்சு போட்டுடு.." என்று விட்டு முன்னே நடந்தவள் ஒரு கணம் நின்று
"அகலி.. கீழ இந்த புடவை மடிப்பை கொஞ்சம் எடுத்து விடேன்.." என்று குனிந்து மடிப்பை உதறினாள்.. அகலி வேகமாக வந்து கீழே அமர்ந்து அவள் புடவை மடிப்பை சரியாக நீவி விட்டாள்..
அந்த நேரம் அறைக்குள்ளிருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் கௌதமன்..
முழங்காலிட்டு அமர்ந்து பெரியவளின் புடவையை நீவி விட்டுக் கொண்டிருந்த தன் மனைவியை கண்டு அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.. ஒரே ஒரு பார்வை தான்.. அத்தோடு தலையை திருப்பிக் கொண்டு உணவு மேஜையை நோக்கி நடக்க தொடங்கினான்..
அகலிகாவின் பார்வை அவனை விட்டு அகல மறுத்தது..
இழந்துவிட்ட சொர்க்க போக வாழ்க்கையை எண்ணி இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்.. இனி மதிப்பு வாய்ந்த மனைவியாக வாழ எந்தவித உரிமையும் இல்லை.. இதுதான் உன் இடம் என்று அவன் தெளிவாக உணர்த்திவிட்ட பிறகு.. உரிமைக்காக போராடுவதற்கு தனக்கென்ன தகுதி இருக்கிறது..!! பாவப்பட்ட பெண்ணாக இருந்திருந்தால் தன் மீதே சுய பச்சாதாபம் கொண்டிருக்கலாம்.. நான் பாவம் செய்த பெண்..!! நம்பிக்கை துரோகி.. தன் தவறை எண்ணி எண்ணி தன் மீது கோபம் தான் வருகிறது.. தினம் கொன்று தின்னும் குற்ற உணர்ச்சிக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அல்பமான வாழ்க்கை மருந்தாகி போகிறது..
"ப்ச்.. அகலிகா எவ்வளவு நேரம்..?" சிவரஞ்சனி கத்திய பிறகு உணர்வு தெளிந்து அவசர அவசர அவசரமாக அவள் புடவையை சரி செய்து விட்டு எழுந்தாள்...
சினேகமாக உரிமையாக உதவி கேட்டால் எதுவும் செய்யலாம்.. ஆனால் தன் அதிகாரத்தை நிலை நாட்ட வேண்டுமென்றே வேலை ஏவுகிறாள் என்று புரிகிறது..
ஆனாலும் இங்கே யாரையும் பகைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை அகலிகா.. அவள் ஒரு அகதி..
அகதிகள் சொன்ன வேலையை செய்யத்தான் வேண்டும்.. அகதி என்பதைவிட தண்டனைக்குரிய கைதி.. தப்பை உணர்ந்து திருந்திய கைதி என்று சொல்லலாம்..
உத்தமன் சிவரஞ்சனி.. அவர்களின் இரண்டு குழந்தைகள் எனக்கு நால்வரும் புறப்பட்டு செல்வதற்குள் பம்பரமாக சுழன்றாள் அகலி..
புயலடித்து ஓய்ந்ததை போல் ஆசுவாசப் படவும் நேரமின்றி.. உணவு மேஜையில் அமர்ந்திருந்த தன் கணவனிடம் சென்று நின்றாள் அடுத்ததாக..
காலை பனித்துளியாக கௌதமனினின் மடியில் அமர்ந்திருந்த தன் மகளை அகலிகாவின் பார்வை ஏக்கமும் வாஞ்சையுமாக அணைத்துக்கொண்டது..
பிஞ்சு குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சி முத்தமிட ஆசை.. இப்போது ஆசைப்பட்டு என்ன பயன்? என்ன பலன்..?
"உங்களுக்கும் சூடா தோசை போட்டு எடுத்துட்டு வரட்டுமா..!!" ஆர்வமாக கேட்டாள்..
"ஒரு நாளாவது நீ சமைச்சு உன் கையால சாப்பிடணும்.." எத்தனை ஆசையாக சொல்லியிருப்பான் அன்றைய நாட்களில்..
அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை..!! அடுப்படியில அனல்ல வெந்து சாக என்னால முடியாது.. உதாசீனங்களால் அவன் ஆசைக்கு கொள்ளி வைத்திருந்தாள்..
இப்போது விதவிதமாய் சமைத்து பரிமாற தயாராக இருக்கிறாள்.. அவனுக்கு விருப்பமில்லை.. வாழ்க்கையே பிடிப்பற்று போன பின்பு சாப்பாட்டு ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பானேன்..!!
"வேண்டாம் இட்லி சாப்பிட்டுக்கறேன்..!!" ஹாட் பாக்சிலிருந்து இட்லியை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டான்..
"குழந்தை கொடுங்க அவளுக்கு நான் ஊட்டறேன்.." என்று இரு கைகளை நீட்டினாள்..
என்றாவது ஒருநாள் இந்த சந்தோஷம் தனக்கு கிட்டி விடாதா என்று ஆசை.. அந்த சந்தோஷம் ஒரு காலத்தில் கிட்டிய போது நழுவ விட்ட முட்டாள் அவள்..
அவன் விழிகள் நிமிர்ந்து அவளை அழுத்தமாக ஏறிட்டன.. அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்..
ஆசையோடு குழந்தையை அள்ளிக் கொள்ள.. அகலிகா அருகே வரவும் ஸ்வேதா குட்டி தந்தையோடு ஒட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் புதைந்து கொண்டது..
"வா.. அம்மா உனக்கு சாப்பாடு ஊட்டறேன்.." அகலிகா புன்னகையோடு சைகையில் புரிய வைக்க முயற்சி செய்ய.. அவன் பரந்த மார்புக்குள் புதைந்திருந்த ஐந்து வயது ஸ்வேதாவின் கண்கள் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்தன..
"குட் மார்னிங் மாமா" என்று கௌதமனின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் இந்திரஜா..
"குட் மார்னிங்" என்றவனின் முகம் இறுகித்தான் கிடந்தது.. குழந்தையிடம் மட்டும் தான் அவன் இதழ்கள் சிரிக்கின்றன..
"பாப்பாவ கொடுங்க நான் அவளுக்கு ஊட்டறேன்.." ஸ்வேதாவை தன் பக்கம் இழுத்து நாற்காலியில் அமர வைத்துக் கொண்டு.. இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டினாள் இந்திரஜா..
அகலிகாவை பார்த்ததும் பம்மி பதுங்கியதைப் போல் அல்லாமல் இந்திரஜாவிடம் சமத்தாக சாப்பிட்டாள் ஸ்வேதா.. அகலிகாவின் முகமும் மனமும் வாடிப்போனது..
திரும்பிப் புருவங்களை உயர்த்தி கௌதமன் பார்த்த பார்வை அகலிகாவை நெருப்பாக சுட்டது..
இந்திரஜா ஸ்வேதா இருவரும் காற்றில் கைகளை அலாவி என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தனர்.. அகலிதாவிற்கு அவர்கள் சம்பாஷணையின் நிறைய விஷயங்கள் புரியவில்லை..
கௌதமன் கூட உணவருந்தியபடி இதழில் கீற்றாக முளைத்த புன்னகையுடன் அவர்கள் இருவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. காணக் காண சலிக்காத காட்சி அது..
அந்த இடத்தில் தான் இருந்திருக்க வேண்டியது..!! தொலைந்து போன சந்தோஷங்களை எண்ணி பெருமூச்சு மட்டும் தான் விட முடிகிறது..!!
என்னமா அப்படி பாக்கற..? நீ பாக்கற பார்வையில குழந்தைக்கு திருஷ்டி விழுந்திடும் போலிருக்கே.. பூங்கொடியின் விகற்பமான வார்த்தைகளில் சுதாரித்து தெளிந்தாள் அகலிகா..
"பெத்த தாய் கண் பட்டு திருஷ்டி விழாது.." அவளையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.. இது போதாதா பூங்கொடிக்கு அவளை குத்தி பேச..
"அடடா பெத்த தாய்..? பெத்ததுனால மட்டும்தான் நீ தாய்..!! மத்தபடி சகல விதங்களிலும் ஸ்வேதாவுக்கு இந்திரஜாதான் தாய்.. கடமையை உதறிட்டு குழந்தையை தூக்கி போட்டுட்டு போனவங்க தன்னைத் தானே பெருமையா சொல்லிக்கலாமா..? நான் மட்டும் இல்லை, நீ பெத்த குழந்தை கூட உன்னை தாயா ஏத்துக்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரைக்கும் இந்திரஜாதான் தாய்.. பாரு ஸ்வேதா குட்டி என் பொண்ணு கிட்ட எவ்வளவு சமத்தா சாப்பிடுறான்னு..!!" பூங்கொடி சமயம் வாய்த்ததென்று இப்படி வார்த்தைகளால் குத்தி கிழிக்க.. உள்ளுக்குள் சுருண்டு போனாள் அகலி..
மீண்டும் தன் மகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வீட்டுக்குள் நுழைந்த அகலிகாவை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மட்டம் தட்டி அவமானப்படுத்துவதில் பூங்கொடிக்கு ஒரு அலாதி ஆனந்தம்..
"கண்கள் கலங்கி நின்றிருந்தவளை எனக்கு தோசை வேணும்.." கௌதமனின் அழுத்தமான குரல் அவளை ஏவியது..
சட்டென ஒட்டிக்கொண்ட மெல்லிய சிலிர்ப்போடு "இதோ வந்துட்டேன்.." அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு அடுப்பறைக்குள் ஓடினாள்..
ஒரு காலம் வரை இந்த அடுப்பங்கரை வாசம் அவளுக்கு பழக்கமே இருந்ததில்லை.. அந்த காலங்களில் தன் கணவனுக்கு உணவை சூடு படுத்தி கொடுத்ததில்லை.. சமையலறை சமாச்சாரங்களை கார்த்திகா தேவியே பார்த்துக் கொள்வாள்.. கூட மாட ஒத்தாசை மட்டும் சிவரஞ்சினியும்.. இந்திராஜாவும்..
அகலிகா சமையலறை பக்கமே வராமல் இருப்பதில் இருவருக்குமே வயிற்றில் புகை கிளம்பும்..
"ஏன் அத்தை.. நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் இப்படி மாங்கு மாங்குன்னு வேலை செய்யறோம். உங்க ரெண்டாவது மருமக ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாளா..!! இருந்தாலும் இவ்வளவு சொகுசு ஆகாது.." என்று இந்திரஜா முகத்தை சுழிப்பாள்..
"பிறந்த வீடு மாதிரியே புகுந்த வீட்டிலயும் மகாராணியா வாழற யோகம் எத்தனை பேருக்கு கிடைச்சிடும்.. அகலிகா கொடுத்து வச்சவ..!! நமக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கல.." சிவரஞ்சனி மறைமுகமாக குத்தி காட்டுவாள்..
"பாவம் தாயில்லாமல் வளர்ந்த பொண்ணு.. அவ வீட்ல எந்த வேலையும் செஞ்சு பழக்கப்படாதவ.. முதல்ல அவளுக்கு இந்த வீடு பழகட்டும்.. அப்புறம் அவளாகவே வந்து எல்லா வேலையும் செய்வா.. அதுக்கு முன்னாடி என் மாமியார் அதிகாரத்தை காட்டி அவளை நான் பயமுறுத்த மாட்டேன்.. நீங்களும் கூட இஷ்டம் இருந்தா வேலை செய்ங்க இல்லனா விட்டுடுங்க.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் எல்லாத்தையும் நானே பார்த்துக்குவேன்.." நிதானமான குரலில் சொல்லுவாள் கார்த்திகா தேவி..
வீட்டின் மூத்த மருமகள் சிவரஞ்சனி.. மாமியார் நடமாடிக் கொண்டிருந்த நாட்களில் அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.. தடையின்றி வேலைக்கு செல்ல தன் குழந்தைகளை மாமியார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சில சுயநல தேவைகளுக்காக வீட்டு வேலைகளில் உபகாரம் செய்து கொண்டிருந்தாள்.. இனி அந்த அவசியம் இல்லையே..
கார்த்திகா தேவி தெம்பு வற்றி ஓய்ந்து படுக்கையில் விழுந்த பின்.. கேள்வி கேட்க ஆளில்லாமல் அனைத்து பொறுப்புகளும் அகலிகாவின் தலையில் சுமத்தப்பட்டிருந்தன..
சுமத்தப்பட்டிருந்தன என்பதை விட அவளாகவே பொறுப்புகளை தன்வசம் எடுத்துக் கொண்டாள் என்று சொல்வதே சரியாக இருக்கும்..
காரணம் கார்த்திகா தேவியை பெயரளவில் பராமரிக்க அங்கே ஆட்கள் உண்டு.. அக்கறையாக பார்த்துக் கொள்ள அகலியை தவிர யாரும் இல்லை..
ஆனால் தன் மகனை அவமானப்படுத்திய ஒருத்தியின் பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள கார்த்திகா தேவி தயாராக இல்லை..
தொடரும்..

Last edited: