• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 5

New member
Joined
May 27, 2025
Messages
4
Super sis 🥰
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
39
வருணோட நண்பன் சூர்யாக்கு தான குறை இருந்ததுனு தாமதமா திருமணம் நடந்தது, இவன் ஏன் இத்தன வயசு வரைக்கும் சிங்கிளா இருக்கான், இவனுக்கு பின்னாடி என்ன கதை இருக்கும்🤔
அதே அதே சந்தேகம் சிஸ்
 
Member
Joined
Jul 19, 2024
Messages
24
"ஐ திங்க் தட் கேர்ள் ஹேஸ் பேஸிங் சம் சீரியஸ் இஸ்யூஸ்.." தீவிரமான முகத்துடன் தலையை இடம் வலமாய் அசைத்தபடி ஸ்டியரிங்கில் விரல்களால் தட்டிக் கொண்டே சொன்னான் வருண்..

தேம்பாவணியை அவன் தேடி அலைவதற்கான காரணம் இது தான்..

அந்தப் பெண் ஏதோ தீவிரமான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று அவள் பேச்சிலேயே தெரிந்து கொண்டவனுக்கு அது என்னவேன்று அறிந்து தீர்வு காணும் எண்ணம்.. ஒருவேளை தேம்பாவணியின் இடத்தில் வேறொரு ஆணோ பெண்ணோ இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பான்.. வருணை பொருத்தவரை அவனிடம் வரும் நோயாளிகள் 100% மன தெளிவோடு வெளியே செல்ல வேண்டும்..

பிரச்சனையை வெளிப்படையாக சொல்லும் நோயாளிகளின் மத்தியில் குழம்பி தவித்து தன் மனதிலிருப்பதை சொல்ல முடியாமல் அவஸ்தையோடு திரும்பிச் சென்ற தேம்பாவணி இதுவரை தன்னிடம் வந்தவர்களுள் வித்தியாசமான ஒருத்தியாய் அவன் மனதில் நின்று விட்டாள்..

தன்னை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்த பிறகு எக்கேடும் கெட்டுப் போ என்று விட முடியவில்லை.. வாய் திறந்து தன் பிரச்சினையை சொல்லியிருந்தால் கூட பேச்சுவாக்கில் ஒரு தீர்வையோ தெரபியோ தந்து கவலை மன அழுத்தங்களிலிருந்து வெளியே கொண்டு வந்திருப்பான்..

தேம்பாவணிதான் வெளிப்படையாக எதையும் பேசவில்லையே.. அவள் தன் பிரச்சினைகளை சொல்ல தயங்கினாலும் ஒரு மனநல மருத்துவனாக தன்னிடம் வந்த நோயாளியின் மீது அக்கறை கொண்டு அவளுக்கு உதவி செய்யும் பொருட்டுதான் தான் கிருஷ்ணமூர்த்தியை பரிந்துரை செய்தான்.. கிருஷ்ணமூர்த்தியின் மூலம் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தான்.. அவனைப் பொறுத்தவரை அவனிடம் வரும் ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு அனுபவம்..

தேம்பா அங்கும் செல்லாத நிலையில் அவனுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு கவலை ஆட்கொண்டது..

பிடிவாதமாக ஒரு கற்பனைத் தோழனை தேடுமளவிற்கு ஒரு பத்தொன்பது வயது பெண்ணுக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்கக்கூடும் என்ற யோசனை அவன் மூளையை குடைந்து கொண்டிருக்க.. மிஸ்டரி கேர்ள் போல் அவள் மறைந்து போன நிலை வேறு கலக்கத்திற்குள்ளாக்கி ஒட்டுமொத்த கவனத்தையும் அவள் மீது குவித்திருந்தது..

தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் அவனுக்கொரு ஆத்ம திருப்தி.. தேம்பாவணியை பொருத்தவரை பாவம் என்ன மன அழுத்தத்தில் எப்படி தவிக்கிறாளோ என்ற கவலையே முழுமையாக அவனை மூழ்கடித்திருந்தது..

"இந்த பொண்ணு எங்க போச்சு..! ப்ச்.. நானே பேசுற விதத்தில் பேசி அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..!" மனதுக்குள் புலம்பியபடி வீடு வந்து சேர்ந்திருந்தான்..

"வருண்.. டேய்.. வருண்..!" சாரதா அழைத்தது கூட காதில் விழாதவனாய் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான் அவன்..

"என்ன ஆச்சு இவனுக்கு..? நான் கூப்பிட்டது காதுல விழலையா..! இல்ல கேட்காத மாதிரி போறானா தெரியலையே..?"

"அட விடுடி.. நீ கூப்பிட்டு அவன் கண்டுக்காம கூட போவானா.. வேலையில ஏதாவது டென்ஷனா இருக்கும்..! அவன் முகத்தை பார்த்தாலே தெரியலையா.. வந்து இப்படி உட்காரு..!" ராஜேந்திரன் சாரதாவை ஆசுவாசப்படுத்த முயன்றார்..

"இருங்க புள்ள முகமே சரியில்ல என்னன்னு கேட்டுட்டு வரேன்."

"அவன பாக்கத்தான் திலோத்தமா இருக்காளே..! நீ வேற எதுக்கு நடுவால.. பொண்டாட்டி முகத்தை பார்த்ததும் அவன் டென்ஷனெல்லாம் கொறஞ்சு ரிலாக்ஸ் ஆகிடுவான்.."

"அப்படியா சொல்றீங்க..!"

"ஆமா இல்லையா பின்ன..! ஆனா நான் மட்டும் அதுல விதிவிலக்கு.."

"என்னது..!"

"உன்ன பாத்தா தான் என் பி பி எக்கச்சக்கமா ஏறுது.. என்ன காரணமா இருக்கும் சாரு.." ராஜேந்திரன் குறும்பாக பார்க்க.. சாரதா மேல்மூச்சு வாங்கினார்..

"ஏன் பேச மாட்டீங்க வேளா வேலைக்கு ஆக்கி போட்டு உங்களுக்கு என்ன தேவை எது பிடிக்கும்னு பார்த்து பாத்து செய்றேன் பாருங்க.. இதுவும் சொல்லுவீங்க.. இதுக்கு மேலயும் சொல்லுவீங்க.. இந்த ஆம்பளைங்களுக்கு எப்பவுமே திருப்தி கிடையாது.. பொண்டாட்டியை ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கணும்..!"

"ஏய் சும்மாதானடி சொன்னேன்.."

"சும்மா கூட எப்படி சொல்லலாம் மனசுல இருக்கிறதுதானே வெளியே வரும்.."

"ஐயோ ஆத்தா..! மலையேறிடாதே..! இப்படி வாடி.. ஏன் இவ்வளவு டென்ஷன் உனக்கு.. வயசானாலே கோபத்தை குறைச்சுக்கணும்.."

"ஓஹோ எனக்கு வயசாகுதுன்னு குத்தி காட்டறீங்களோ..

"என்னடி நான் எது பேசினாலும் தப்பாவே எடுத்துக்கற.."

"நான் தப்பா எடுத்துக்கல.. நீங்கதான் வாயை திறந்தாலே என்னை நோகடிக்கணும்னு பேசுறீங்க.."

அறைக்குள் நுழைய போன வருணின் காதுக்குள் தாய் தந்தையின் உரையாடல்கள் அனுமதியின்றி நுழைய.. கண்களை மூடி சாத்தியிருந்த கதவில் நெற்றியை முட்டிக்கொண்டு அப்படியே நின்றான் அவன்..

"யாரு..!" உள்ளிருந்து திலோத்தமாவின் குரல் கேட்ட பிறகுதான் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்..

"சரி வாய் வலிக்க என்னை கிண்டல் பண்ணி சிரிச்சதெல்லாம் போதும்.. தலை வலிக்குதுன்னு சொன்னிங்களே காபி போட்டு எடுத்துட்டு வரட்டுமா.." சாரதா அதையும் அதிகாரமாகவே கேட்டார்..

"போ.. தாயி அத முதல்ல செய்..!"

"சக்கரை இல்லாம தான் தருவேன்.. போன வாரம் முந்நூறா ஏறி போச்சுன்னு அந்த கத்து கத்தறான் உங்க பையன்.. நானா சர்க்கரை அள்ளி போட்டு காபி குடிக்க சொன்னேன்.."

"சரி..! ரொம்ப திட்டாதடி சண்டக்கோழி.. பாவம் மாமா.." ராஜேந்திரன் உதட்டை குவித்து கண்ணடிக்க.. வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு "இந்த வயசுல இது ஒன்னு தான் குறைச்சல்.. பேரம்பேத்தி எடுத்தாச்சு இன்னும் லொள்ளு அடங்கல.." என்றபடியே சமையலறையை நோக்கி சென்றார் சாரதா..

வருண் உள்ளே நுழைய கட்டிலில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஏதோ சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா..

"என்ன இங்க உட்கார்ந்துருக்க..!"

"ஏன் இங்கே உட்கார கூடாதா..?"

"இல்ல வெளிய அம்மாவும் அப்பாவும் தனியா இருக்காங்களே.. இந்நேரத்துக்கு அவங்க கூட தானே இருப்ப.. அதனால கேட்டேன்.."

"உங்க அக்கா வந்திருக்காங்களே நீங்க பாக்கலையா..!"

சட்டை பட்டனை கழட்டிக் கொண்டிருந்தவனின் கரம் அப்படியே நின்று விட்டது.. சட்டென திரும்பியவன் "அக்கா வந்திருக்காளா" என்றான் ஆச்சரியமாக..

"ம்ம்..! நான் வெளியே போனா அது குத்தம் இது தப்புன்னு உங்கக்கா ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க.. எனக்கு பிபி எகிறிடும்.. அதான் பிரச்சனை வேண்டாம்ன்னு ரூமுக்குள்ளயே அடங்கிட்டேன்.."

"வீட்ல எல்லார் கூடவும் சிரிச்சு பேசி அவங்கள சந்தோஷமா வச்சுக்கத்தான் உன்னை நடிக்க கூட்டிட்டு வந்தேன்.. நீ என்னடான்னா உண்மையான பொண்டாட்டி மாதிரி நாத்தனார் தொந்தரவு தாங்கலன்னு ரூமுக்குள்ள உட்கார்ந்து கதை சொல்ற..?"

"நானும் அதையே தான் சொல்றேன்.. நடிக்கத்தான் வந்திருக்கேன்.. உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டு வரல.. தேவையில்லாத உங்க அக்கா தங்கச்சி தொந்தரவையெல்லாம் என்னால சமாளிக்க முடியாது.. இதுக்கெல்லால் வேறு ஆளை பாருங்க..!" திலோத்தமாவின் பேச்சில் அவன் முகம் இறுகியது.

"எல்லாத்துக்கும் சேர்த்து தான் நான் உனக்கு பே பண்றேன் திலோத்தமா.."

"நடிக்கிறதுக்கு தான் காசு கொடுக்கறீங்க.. இவங்க இம்சையெல்லாம் தாங்கிக்கிட்டு இந்த வீட்ல இருக்கணும்னா நீங்க தான் எனக்கு எக்ஸ்ட்ராவா காசு தரணும்.."

அவள் பேச்சில் எரிச்சல் அடைந்தவனாக எதுவும் பேசாமல் இதழ் குவித்து ஊதியபடி கபோர்ட்டை திறந்து தனது மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்..!

உதட்டை சுழித்தபடி மீண்டும் தொலைக்காட்சியில் கவனத்தைப் பதித்தாள் திலோத்தமா..

கதவு தட்டும் ஓசையில் கடுப்பாக பெருமூச்சு விட்டவள் தன் முகத்தை சடுதியில் மாற்றிக் கொண்டு வந்து கதவை திறந்தாள்..

எதிரே சாரதா..!

"என்னம்மா வருண் எங்க..?"

"குளிக்கிறாரு அத்தை என்ன ஆச்சு..?" என்றாள் புன்னகையுடன்..

"இல்ல ஒரு மாதிரி டென்ஷனா வந்தானே அதான்.. என்ன விஷயம்னு கேட்கலாம்னு.." அவர் தவித்தார்..

"அதெல்லாம் ஒன்னும் இல்லையே அத்தை நார்மலா தான் இருந்தாரு.."

"அப்படியா சொல்ற.!"

"ஆமா அத்தை இப்ப கூட என்கிட்ட நல்லா பேசிட்டுதான் குளிக்க போனாரு.." என்னும்போதே குளியலறை கதவை திறந்து கொண்டு வருண் வெளியே வந்தான்..

"ம்மா..!" என்றபடி சிரித்துக் கொண்டே வந்த மகனை கண்ட பிறகு தான் சாரதாவின் மனம் நிம்மதி அடைந்தது..

"பிரச்சனை ஒன்னும் இல்லையே வருண்.."

"எனக்கென்னம்மா பிரச்சனை நீங்க இருக்கும் போது.." என்று தாயின் இரு தோள்களிலும் தன் கைகளை போட்டுக்கொள்ள..

"ஓஹோ அப்ப நான்தான் உன் பிரச்சனைன்னு சொல்றியா..?" என்றார் அவர் முறைப்புடன்..

"ஆத்தா மம்மி.. உன் சண்டக்கோழி மோட் எல்லாத்தையும் டாடியோட நிறுத்திக்கோ.. நான் பாவம்" என்றபடியே வெளியே வந்து சோபாவில் அமர்ந்தான் அவன்..

"ஏண்டா இப்ப இவ்வளவு பேசுறவன் நான் கூப்பிட கூப்பிட எதுக்குடா கண்டுக்காம போன" பக்கத்தில் அமர்ந்து மறுபடியும் ஆரம்பித்தார் சாரதா.

"ஐயோ அம்மா நான் கவனிக்கலமா.. ஏதோ ஒரு ஞாபகத்துல போயிட்டேன் விடேன்.." என்றபடி தாயின் மடியில் படுத்துக்கொண்டான் அவன்..

"என்னவோ உன் முகம் வாடி போனா என் மனசெல்லாம் ஒரு மாதிரி தவிக்குது.. வேலையே ஓட மாட்டேங்குது.." கவலையோடு சொன்னவளின் கால்களை இரு கையால் கட்டிக் கொண்டான் வருண்..

"என்ன அங்க உன் பொண்டாட்டிய தனியா விட்டுட்டு வந்து இங்க அம்மா மடியில குழந்தை மாதிரி படுத்து கிடக்க.. எழுந்து போடா.." ராஜேந்திரன் அவன் காலில் ஒரு அடி வைக்க..!

மடியில் படுத்தபடியே கண்களை மட்டும் கீழிறக்கி.. "உங்களுக்கு ஏம்பா வயித்தெரிச்சல்.. என் அம்மா.. நான் படுக்கறேன்.." என்ற படியே நிமிர்ந்து படுக்கவும் அவன் கால்களை எடுத்து தன் தொடை மீது வைத்துக் கொண்டார் ராஜேந்திரன்..

"உனக்கு அம்மாவாகறதுக்கு முன்னாடியிலிருந்து அவ என் பொண்டாட்டி.. அதுவும் இல்லாம அவளுக்கு நீ மட்டும் புள்ள இல்ல.. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.. ஞாபகம் இருக்கட்டும்.." என்றார் அவர்..

இன்னும் ரெண்டு பொண்ணுங்க என்ற பிறகுதான் திலோத்தமா சொன்ன அக்கா வந்திருக்காங்க என்ற வார்த்தை நினைவுக்கு வர.. "ஆமா அக்கா வந்திருக்கிறதா திலோத்தமா சொன்னாளே.. மறந்து போயிட்டேன். எங்க அவ..!" என்றபடியே எழுந்து அமர்ந்தான் வருண்..

"தோட்டத்துலதான் பசங்களோட இருந்தா.. வரும்போது நீ அவளை பாக்கலையா..! ஆமா வரும்போது தான் உன் மனசு இங்கே இல்லையே.. எங்கேயோ ஆகாசத்துக்கும் பூமிக்குமால்ல பறந்துட்டு இருந்துச்சு..!" சாரதா இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்து சேர்ந்திருந்தாள் வருணின் அக்கா வெண்மதி..

"மா...மா.." ஓடிவந்து அவன் மேலே விழாத குறையாக அமர்ந்து கொண்டன 10 வயது சுகுனேஷ் 8 வயது சாருமதி.. வெண்மதியின் பிள்ளைகள் இரண்டும்..

"ஹோஓஓஓஓ.." அவர்களின் உற்சாக கூச்சலுக்கு இணையாக கத்தியவன் 'எங்கடா இருந்தீங்க உங்க ரெண்டு பேரையும் ஆள பாக்கவே இல்லையே..!" என்றான் ஆச்சரிய குரலில்..

"இங்கதான் தோட்டத்துல விளையாடிக்கிட்டு இருந்தோம் நாங்க உங்கள பார்த்தோம்.. மாமா மாமான்னு கூப்பிட்டோம், நீங்கதான் வீட்டுக்குள்ள வேகமா வந்துட்டீங்க..!"

"அடடா எப்படி உங்களை கவனிக்காம விட்டேன்..!"

'ஏன்டா அக்கான்னு ஒருத்தி வந்து இருக்கேனே! என்னை கண்டுக்காம வந்ததும் வராததுமா ரூமுக்குள்ள போய் அடைஞ்சிக்கிட்டா என்ன அர்த்தம்.. சரியில்ல தம்பி நீ" உரிமை கோபத்தோடு அவன் பக்கத்தில் எதிர்ப்புற இருக்கையில் அமர்ந்தாள் வெண்மதி..

"நீ வந்ததே எனக்கு தெரியாதுக்கா..!" திலோத்தமா சொன்னதும் குளிச்சிட்டு வந்து அம்மா கிட்ட கேட்டுகிட்டே இருந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட.." பிள்ளைகளை அணைத்தபடி சொன்னான் அவன்..

"சும்மா பொய் சொல்லாதடா கல்யாணமான பிறகு எங்க எல்லாரையும் மறந்துட்ட நீ.. உனக்கு உன் பொண்டாட்டி தான் முக்கியம்.. எல்லா அண்ணந் தம்பிகளும் இப்படித்தான் போல.." என பெருமூச்சு விட்டாள்..

"லூசு மாதிரி உளராதக்கா..!"

"ஆமா நா லூசு தான்.. தம்பி மேல உள்ள பாசத்துல உன்ன பாக்கறதுக்காக திருச்சியிலிருந்து புள்ள குட்டிங்கள கூட்டிட்டு புறப்பட்டு வந்திருக்கேன் பாரு நான் லூசு தான்டா..!"

"அய்யோ.. உடன்பிறப்பே.. நீ வந்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.. அம்மாகிட்ட கூட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் கேட்டு பாரு.. சொல்லி வாய மூடல.. அதுக்குள்ளே நீ.."

"ஐயோ உன் சந்தோசத்தை பத்தி எனக்கு தெரியாதாடா..! அக்கா வந்திருக்கான்னு தெரிஞ்சதுமே பேயறைஞ்ச மாதிரி உன் முகமே மாறி போயிருக்கும் அதான் பார்த்தாலே தெரியுதே..!"

"ஏய் போதும்டி வந்ததும் வராதுமா பிள்ளையை வம்பிழுக்கிறதுலயே குறியா இருப்பியா..! உன் சண்டையெல்லாம் அப்புறம் வச்சுக்க..! இப்பதான் கிளினிக்கிலருந்து வந்தான்.. ஆள விடு.. முதல்ல அவன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.." சாரதா மகனுக்காக பரிந்து கொண்டு வந்தார்.

வருணுக்கு ஒரு அக்காவும் ஒரு தங்கையும் உண்டு..

அக்கா வெண்மதி வருணை விட இரண்டு வயது மூத்தவள்.. வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளையான தம்பி மீது அதிக பாசம் உண்டு.. சிடுசிடுப்பாக கறாராக பேசுவது போல் தெரிந்தாலும் அவள் கண்டிப்பான வார்த்தைகளில் அளவு கடந்த அக்கறை மிகுந்திருக்கும்..

தங்கை நிவேதா வருணை விட நான்கு வயது இளையவள்.. திருமணமாகி கணவனுடன் மதுரையில் இருக்கிறாள்.. அவளுக்கும் ஏழு வயதில் ஷாலினி என்ற ஒரு பெண் குழந்தை உண்டு.. அக்கா தங்கை இருவருக்குமே சகோதரன் வருண் மீது பேரன்பு உண்டு.. தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொண்டது மட்டும்தான் அவர்களின் ஒரே வருத்தம்..!

வருணை இரு பக்கமும் பிலு பிலுவென பிடித்துக் கொண்டனர் பிள்ளைகள் இருவரும்..

"மாமா குவார்ட்டலில நான் தான் ஃபர்ஸ்ட் மார்க்.. PS 5 வாங்கி தரேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க மறந்துடாதீங்க..!" இது சுகுனேஷ்..

"மாமா நான் ஃபஸ்ட் ரேங்க் வாங்கல.. செகண்ட் ரேங்க் தான் ஆனா பஸ்ட் மூணு ரேங்க்குள்ள வாங்கினா அம்மா கிட்ட பேசி பியோனா சேர்த்து விட்டதா சொல்லி இருக்கீங்க ஞாபகம் இருக்கட்டும்.." இது சாருமதி..

"சரி சரி.. சூப்பர்.. கண்டிப்பா எல்லாத்தையும் பண்ணிடலாம் டோன்ட் வரி..! இப்ப மூணு பேரும் ஏதாவது விளையாடலாமா.."

"என்ன விளையாடலாம்..?"

"கிரிக்கெட்.."

"ஹைடன் சீக்.."

"ஓடிப் பிடிச்சு விளையாடலாம்.."

"கேரம்.."

"முதல்ல எழுந்து வெளியே வாங்கடா..!" என இரு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு வெளியே ஓடினான் வருண்..

"இருங்கடா நானும் வரேன்.. உங்க மாமா வந்ததும் தாத்தாவ கழட்டி விட்டுட்டு போறீங்களே..! அவனை விட நான் தான் நல்லா பௌலிங் போடுவேன் தெரியுமா.." என்றபடியே வருண் குழந்தைகளை பின்தொடர்ந்து சென்றார் ராஜேந்திரன்..

நால்வரும் செல்லும் திசையை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தாள் வெண்மதி..

"என்னமா ஏதாவது நல்ல செய்தி உண்டா..!" அவள் கேட்ட கேள்வியில் சாரதாவின் முகம் மாறிப்போனது..

"அப்படி எதையும் எதிர்பாத்திடாதீங்கன்னு அவன் தான் ஏற்கனவே தலையில பெரிய குண்ட தூக்கி போட்டுட்டானே..!" என்று கலங்கிய கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்..

"கவலைப்படாதமா..! நாம கும்பிடற தெய்வம் நம்மள கைவிடாது.. கண்டிப்பா குலம் தழைக்கும்.. வேண்டுதல் நிறைவேறிட்டா எல்லாருமா சேர்ந்து ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்..!"

சாரதா பெருமூச்சு விட்டபடி தலையசைத்தார்..

"அது சரி மகாராணி அறையை விட்டு வெளியே வர மாட்டாளாமா.. நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஆள பாக்கவே முடியலையே!" வெண்மதி வருணின் அறையை காண்பித்து திலோத்தமாவை பற்றி விசாரிக்க அவளை முறைத்தார் சாரதா..

"உன் வாய்க்கு பயந்து தான் அவ வெளியவே வர மாட்டேங்குறா.. முதல்ல தேவையில்லாம அவளை வம்பிழுக்கறதை விடு.. ஏடாகூடமா பேசி குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்தா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.." என்றபடியே அங்கிருந்து எழுந்து சென்றார் சாரதா..

இங்கே தோட்டத்தில் நால்வருமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.. வருண் வீசிய பந்தை சுகுனேஷ் தன் மட்டையால் அடிக்க ஃபீல்டிங்கில் நின்றிருந்த ராஜேந்திரன் அதை கேட்ச் பிடித்து விட்டார்..

அவுட் என்று இருக்கைகளை தூக்கி அவர் ஆரவாரம் செய்ய இல்லை என்ற பேரன் மறுக்க.. இருவருமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..

அம்பையராக நின்றிருந்த சாருமதி ஒற்றை விரலை தூக்கி காட்டியும் சுகுணேஷ் ஒப்புக் கொள்வதாய் இல்லை..

இடுப்பில் கைவைத்து இழுத்து மூச்சு விட்டு அவர்களை அலுப்பாய் பார்த்தான் வருண்..

அந்த நேரத்தில் அவன் பாக்கெட்டிலிருந்த அலைப்பேசி சத்தமெழுப்ப.. அவர்கள் சண்டையை பார்த்தவாறு போனை எடுத்து காதில் வைத்தான்..

"சொல்லு மாலினி.."

"சார் அந்த பொண்ணு ஆபீஸ் லேன்ட்லைன்ல எனக்கு கால் பண்ணியிருந்தாங்க.."

"எந்த பொண்ணு..?"

"அதான் தேம்பாவணி..!"

பெயரை கேட்டதும் அவன் கண்களில் ஒரு மின்னல் தெறிக்க.. "ஓஓஓ.. சொல்லு சொல்லு" என்றான் ஆர்வமாக..

"உங்களை இப்பவே பாக்கணும்.. டாக்டர் அவைலபிலானு கேட்டாங்க..‌ டாக்டர் கிளம்பி போய்ட்டாங்கன்னு சொல்லிட்டேன்."

"ஓகே என் நம்பர் கொடுக்க வேண்டியதுதானே?"

"அனாவசியமா உங்க பர்சனல் நம்பரை யாருக்கும் கொடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்களே."

போனை நெஞ்சில் வைத்துக்கொண்டு ஆகாயத்தை பார்த்து மூச்சு விட்டான் வருண்..

"ஓ காட்.. உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மாலு..‌ மறுபடி அந்த பொண்ணு எப்ப வர்றதா சொன்னா..?"

"அந்த பொண்ணு அப்படி எதுவும் சொல்லல ஆனா அவளோட நம்பர் குடுத்துருக்கா..!" டாக்டர் வந்தது இன்ஃபார்ம் பண்ண சொல்லியிருக்கா.."

"சரி நம்பர் குடு.."

"டாக்டர்..?"

"நான் சொன்னது காதுல விழலையா..!"

"ஒன் மினிட்.." என்றவள் தேம்பாவணியின் அலைபேசியின் எண் இலக்கங்களை ஒவ்வொன்றாய் சொல்ல மனதில் சேகரித்துக் கொண்டு பிறகு அலைபேசியில் சேமித்து உடனடியாக அவளுக்கு அழைத்தான்..

பந்து ஒன்று பறந்து வந்து அவன் மீது விழுந்தது..

"மாமா..! வருண்.. என்னன்னு கேளு..'

"டேய் வருண் பாருடா இதுங்க நான் சொல்றத ஒத்துக்கவே மாட்டேங்குதுங்க.."

அவர்களின் கூச்சலை சட்டை செய்யாமல் வெயிட் பண்ணுங்க என்பதை போல் கையை காட்டி விட்டு சற்று தள்ளி வந்தான் அவன்..

சேமித்து வைத்த எண்ணுக்கு அழைத்துவிட்டு காத்திருக்க.. அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் எதிர்முனையில் தகவல்..!

மீண்டும் முயற்சித்தான்.. மறுபடியும் அதே தகவலை கம்ப்யூட்டர் குரல் பிசிறின்றி சொல்லவும் தலையை கோதியபடி யோசனையோடு நின்று கொண்டிருந்தவனின் தோளில் பதிந்தது ஒரு கரம்..

திரும்பி பார்க்க திலோத்தமா நின்றிருந்தாள்..

"யாரு போன்ல..?" அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் "என்ன வேணும்..!" என்றான் சற்று சிடுசிடுப்பான குரலில்..

"காபி பலகாரம் தயாராக இருக்குதாம் உங்களையும் குழந்தைகளையும் அழைச்சிட்டு வர சொன்னாங்க உங்கம்மா.." என்றாள் அவள்..

"சரி பசங்கள கூட்டிட்டு போ நான் வரேன்.." அவன் மீண்டும் அலைபேசியை பார்க்க..

"அதுக்கு நான் ஆள் இல்லை.. உங்க அக்கா பசங்கள நீங்களே கூட்டிட்டு வாங்க.." என்று விட்டு வீட்டை நோக்கி நடந்தவளை முறைத்தபடியே நின்றிருந்தான் வருண்..

தொடரும்..
Super
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
31

Go with the flow
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
93
❤️❤️❤️❤️❤️❤️🥭🥭🥭❤️❤️🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎😅😅😅🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈😅🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️🌈🌈🌈🌈❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍😍🌈🌈🌈🌈🌈🌈
 
Top