• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
76
தன்னை நோக்கி நகர்ந்து வந்தவனை கண்டு கால்களை மடக்கி மேலேறி தள்ளி சென்றாள் அவள்.. "ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால முடியல..!! டாக்டர் ஒரு வாரத்துக்கு எதுவும் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க..!!" அவள் பேசியது அவள் காதுகளையே சென்றடையவில்லை..

கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தவாறு மென்மேலும் முன்னேறியவன் அவளைக் கடந்து சென்று குனிந்து கட்டிலுக்கு அடிப்புறத்திலிருந்து
சுத்தியலை எடுத்துக் கொண்டு முழங்காலிலேயே நின்றவனை கண்டு இதயம் நின்று துடித்தது.. "ஐயோ முரடன்.. ரவுடி பையன்னு பார்த்தா இவன் பயங்கரமான சைக்கோ போலிருக்கே.. வேலை முடிஞ்சதுன்னு என்னை கொல்லப் போறானா..!! அம்மா.. அப்பா.. இப்படி ஒரு ராட்சசன் கிட்ட என்னை தனியா விட்டுட்டு போயிட்டீங்களே.. என்னை காப்பாற்ற யாருமே இல்லையா.." உள்ளுக்குள் பயத்தில் அழுது புலம்பி.. வெளிப்புறம் முகம் வெளிறி முழங்கைகளை தரையில் ஊன்றியபடி முதுகு வரை தேகத்தை உயர்த்தியவள் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் மரண பீதியுடன் கதி கலங்கி போயிருக்க.. சுத்தியலை கட்டிலின் பக்கவாட்டில் ஓங்கி அடித்தவன் அங்கிருந்து நகர்ந்து சென்று உடைந்து போயிருந்த கட்டிலின் காலடிக்கு இடம் மாறியிருந்தான்..

சாய்ந்திருந்த அத்தனை பெரிய தேக்கு மரக் கட்டிலின் ஒருபக்க காலை ஒற்றை கையால் உயர்த்தி.. என்ன பழுதென்று ஆராய்ந்து.. அதை ஏதோ சரி செய்ய முயன்று கொண்டிருந்தவனை விழி விரித்துப் பார்த்தாள் அவள்..

"அடக்கடவுளே இதுக்காக தான் சுத்தியலை எடுத்துட்டு போனானா..!! ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.." நெஞ்சில் கை வைத்து அவனுக்கு முகம் காட்டாமல் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள் அன்பரசி..

டங்.. டங்கென்று ஏதோ சத்தம்.. கட்டிலை சரி செய்கிறான் என்று மட்டும் தெரிகிறது.. ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை.. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக்குள் இடி விழுவது போல் அதிர்வைத் தர கண்களை இறுக மூடியிருந்தாள் அன்பு..

சற்று நேரத்திற்கு பின் "ஏய்.. ஏய்இஇ.." அவன் தான் மாடு விரட்டுவது போல் அழைத்துக் கொண்டிருந்தான்.. "என்னையா கூப்பிடறாரு" சந்தேகத்துடன் விழிகளை சற்றே திறந்து பார்க்க.. மின்விசிறியை தொட்டுவிடும் உயரத்தில் நின்று கொண்டிருந்தான் அவன்..

அவள் கண்களை திறந்தவுடன்.. "போய் மேல படு.." என்றான் கண்ணாடித் துண்டுகளை விழுங்கியதை போல் கரகரத்த குரலில்..

சொன்ன சொல் மீறாதவளாய் எழத்தான் முயன்றாள்.. ஆனால் முடியவில்லையே.. "உன்னை எழுந்து கட்டில் மேல படுக்க சொன்னேன்.." அவள் ஏதோ வீம்பிற்காக தரையில் படுத்திருப்பதை போல் மீண்டும் கனத்த குரலில் அதட்டி சொல்ல அவசரத்தில் ஒன்றும் ஓடாமல் தேகம் அதிர்ந்தாள்..

எழத்தான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று வார்த்தையால் கூட சொல்ல முடியாத அளவிற்கு அவன் விழிகள் தன்னையே பயங்கரமாக கூறுபோடுவது போல் பிரமை..

அவளை கட்டிலில் படுக்கச் சொல்ல வேண்டும் என்று தெரிகிறது.. ஆனால் பலவீனமான மனைவியை அன்பாக அரவணைத்து கையிலேந்தி கட்டிலில் படுக்க வைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லையே..!!

"ப்ச்.. எழுந்து கட்டில்ல படுனா என்ன சர்க்கஸ் காட்டிட்டு இருக்க.." என்றவன் ஏதோ மரச் சாமானை தூங்குவது போல் ஒற்றை கையால் அவள் கைப்பற்றி தூக்கி கட்டிலை நோக்கி நகர்த்த.. அவன் வேகத்தில் சரக்கென இழுத்து செல்லப்பட்டவள் "அம்மாஆஆஆஆ.." என்று அலறியதில் ஒரு நொடி நின்று அவள் முகம் பார்த்தான் குரு..

"ப்ச்.. எதுக்கு கத்தற..!!" அவன் முகத்தில் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே..!!

"வலிக்குது.." இதழ் கடித்து கண்ணீர் சிந்தியவளின் முகத்தையே ஒரு சில கணங்கள் உற்றுப் பார்த்தவன் தன் கைப்பிடியில் துவண்டு பிடிமானம் இல்லாத கொடியாக சரிந்து நின்றவளை கட்டில் மெத்தையில் இறக்கி விட்டான்..

மிரட்சியோடு அவனைப் பார்த்தபடி கட்டிலில் நகர்ந்து படுத்துக் கொண்டாள் அவள்.. இரு கைகளால் கேசத்தை கோதியபடி தலை முதல் கால் வரை அவளை நிதானமாக பார்க்கவும் இதயத்திற்குள் பயப்பந்து உருண்டது..

மீண்டும் கட்டில் மீது ஏறியவன்.. அவளின் இரு பக்கமும் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி ஓநாய் போல் நின்றான்.. அச்சத்தில் இதயத்தின் படபடப்பு கூடி தாறுமாறாக மூச்சு வாங்கியது..

"தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.. எனக்கு உடம்பு சரியில்லை.. இதுக்கு மேல என்னை ஏதாவது செஞ்சீங்கன்னா நான் செத்தே போயிடுவேன்.." பலவீனமாக பயக் குரலில் சொன்னவளை முகச் சுழிப்போடு பார்த்தவன்.. "ப்ச்.. ஏய்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு.. கட்டில் உடையுதான்னு பாக்கணும்.." என்று அவள் மீது தன் தேகம் படாமல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடியவனை "ஆங் பைத்தியமா இவன்" என்ற ரீதியில் பார்த்திருந்தாள் அவள்.. ஆடும் ஆட்டத்திற்கு மாமிச மலையாக எங்கே தன்மீது விழுந்து விடுவானோ என்ற பயம் வேறு!!..

"ஹ்ம்ம்.. இனி கட்டில் உடையாது.." என்று விலகி நின்றவன் இனி கட்டிலின் தேவை அதற்காக மட்டுமே என்று எண்ணி விட்டான் போலும்.. அத்தோடு அவன் வெளியேறி சென்று விட.. புயல் கரையை கடந்தது போல் சற்று அமைதியாகி ஆசுவாசப்பட்டாள் அன்பரசி.. அடுத்த பத்தாவது நிமிடம் வலியை பொறுத்துக் கொண்டு கழிவறை சென்று வந்தவள் மருத்துவர் கொடுத்த அந்த களிம்பை ரணமான இடத்தில் பூசி கொண்டாள்..

ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி விழித்தவளுக்கு வலியின் சுவடுகள் ஏதும் தெரியாமல் போனதில்.. எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"விருந்து சாப்பிட வேண்டிய நேரத்தில் இப்படி பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டியதா போச்சே.." புலம்பிக்கொண்டே ரசம் சாதத்தை கரைத்து எடுத்து வந்திருந்தாள் வடிவு..

"வேண்டாம் பாட்டி எனக்கு பசிக்கல.." அன்பரசி முகத்தை திருப்பிக் கொள்ள.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. "வயித்த காயப்போடாதே.. கொஞ்சமா சாப்பிடு.. இப்படி பட்டினி கிடந்தா உடம்புக்கு நல்லது இல்ல.." அவர் வற்புறுத்தியதில் வேறு வழியில்லாமல் பெயருக்காக கொஞ்சமாக உண்டு விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்..

முழு ஓய்வு அவளை ஓரளவு குணமாக்கி இருந்தது.. மாலை நேரத்தில் வடிவு சொன்னபடி வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு.. ஜார்ஜட் புடவை ஒன்றை உடுத்திக் கொண்டாள்..

விநாயகமும் கீதாவும் மகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.. அவர்களிடம் இரவு நடந்த கூத்தை பற்றி வாய் திறக்கவில்லை அவள்..
வடிவு ஏதோ சொல்ல வாயெடுக்க கண் ஜாடையில் வேண்டாம் என்று தடுத்து விட்டாள் அன்பரசி.. நடப்பது தன்னோடு போகட்டும்.. இனி அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம்..

மகள் புத்தாடை உடுத்தி புத்துணர்வோடு இருப்பதாக உணர்ந்த கீதா "நல்லா இருக்கியாம்மா மாப்பிள்ளை ஒன்னும் கஷ்டப்படுத்தலையே.." முந்தைய நாள் வரை அவன் இவன் என்றும் மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருந்த கீதா மாப்பிள்ளை என்று மரியாதையோடு அழைத்ததில் அன்பரசிக்கே வியப்புதான்..

"இல்லம்மா அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. ஒரே நாள்ல எதுவும் மாறிடாதே..!! எனக்கு தான் கொஞ்சம் பழகிக்க நேரம் தேவைப்படும்.." உண்மையை மறைக்கவும் இல்லை பொய்யாக எதையும் சேர்க்கவும் இல்லை இதுதான் நிதர்சனம்.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று சூசகமாக பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்தாள் அன்பு..

"வாங்க வாங்க" என்று வரவேற்று சம்பிரதாயத்தின் பொருட்டு சில வார்த்தைகள் பேசினார் ஆச்சார்யா.. எங்கே மருமகள் அழுது புலம்பி புகார் செய்து வந்தவர்கள் இருவரையும் வேதனைப்படுத்தி விடுவாளோ என்ற கலவரம் அவருக்குள்..

ஆனால் அன்பரசி அதற்கான எந்த சுவடுகளையும் முகத்தில் காட்டாது இன்முகத்தோடு பேசி இருவரையும் அனுப்பி வைத்ததில் நெஞ்சோரம் லேசான நிம்மதி..

அன்று இரவு வெகு நேரமாகியும் குருக்ஷேத்ரா வீட்டுக்கு வரவில்லை..

"ஏன்டா இன்னும் வீட்டுக்கு வரல.. கல்யாணமாகி புது பொண்டாட்டியை வீட்ல விட்டு நீ வெளியே சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்.." என்றுமில்லாத திருநாளாக ஆச்சார்யா என்று அதிகமாகவே கோபப்பட்டார்..

"வீட்டுக்கு வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்னு அர்த்தம்.. அப்புறம் என்னை குறை சொல்ல கூடாதுன்னு அர்த்தம்.." எகத்தாளமான பேச்சு அவனிடமிருந்து.. தந்தைக்கு மட்டும் மரியாதை கொடுப்பவன்தான்.. ஆனால் சில நேரங்களில் இப்படி பதிலடியும் கொடுத்து பழக்கம்..

"நீ முதல்ல புறப்பட்டு வீட்டுக்கு வா.." அப்பாவின் அதிகாரக் குரலுக்கு அடங்காதவனாய்..

முக்கியமான வேலை இருக்குப்பா.. முடிச்சுட்டு தான் வருவேன்.." இந்த பக்கம் பேசி முடிப்பதற்குள்.. "அதோ அதோ.. வர்றான் குரு.. புடிங்கடா அவன.. அந்த கத்தியை குடுடா.." கூச்சலும் இரைச்சலுமாய் அடிதடி சத்தம்.. எதிர்முனையில் கேட்டுக் கொண்டிருந்த வன்முறை குரல்களில் அலைபேசியை அணைத்து விட்டு விழிகள் மூடி திறந்தார் ஆச்சார்யா..

"கல்யாணம் செஞ்சு வச்சும் பயனில்லாமல் போச்சே..!! ஒரு பெண்ணோட வாழ்க்கை வீணாகிப் போனதுதான் மிச்சமா..? இந்தப் பாவம் என்னை சும்மா விடுமா லஷ்மி..!!" ஆற்றாமையோடு மனைவியிடம் மனம் விட்டு புலம்பினார்..

"ஏன்யா.. ரொம்ப கலக்கமா தெரியறீங்க.." வடிவு கவலையோடு வந்து நின்றாள்..

"தப்பு பண்ணிட்டேன்னு தோணுது.. குரு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் கூட அவன் மாறிடுவான்னு நிச்சயமா நம்பிக்கை இருந்தது.. ஆனா இன்னைக்கு அந்த பொண்ணு நிலைமையை பார்த்த பிறகு.. இப்ப பேசின பேச்சைக் கேட்ட பிறகு அந்த நம்பிக்கை சுத்தமா நீர்த்து போச்சு.." என்றார் இதயம் கனக்க..

"நீங்களே இப்படி பேசினா எப்படி..!! கல்யாணமாகி ஒரு வருஷமா முடிஞ்சு போயிருக்கு.. இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகலையே..!! பிறந்த 32 வருஷமா இரும்பா வளர்ந்தவன் கல்யாணம் ஆகி ஒரே நாள்ல புடம் போட்ட தங்கமா மாறனும்னு நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம் ஐயா..!!" வடிவு குரல் இறைஞ்சியது..

"ஐயோ..!! வடிவம்மா நீங்களும் என்னை புரிஞ்சுக்காம பேசுறீங்களே.. ஒரே நாள்ல அவன் முழுசா மாறனும்னு நானும் ஆசைப்படல.. ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்கும்போது அவன் கிட்ட சின்ன சின்ன மாற்றங்கள் இன்னையிலிருந்து தொடங்கும் நெனச்சேன்.. அப்படி எதுவும் நடக்கல.. பாறாங்கல் மாதிரி அவன் அப்படியேதானே இருக்கான்.. அந்த பொண்ணோட நிலைமையை பார்த்து கூட கொஞ்சம் கூட இரக்கம் வரலையே..!! இனி எப்ப மாற போறான்.. நினைக்கும் போதே மனசெல்லாம் கலங்குது வடிவும்மா..!!"

"மகன் வாழ்க்கையில் நல்லது நடக்கனும்ங்கிற ஏக்கமும் ஆசையும் தான் உங்களை எப்படி அவசரப்பட வைக்கிறது.. ஆனா பூ பூக்கவும் காய் கனியவும் ஒரு நேரம் வரனும்.. அந்த மாதிரி தானே இதுவும்.. ஆசாபாசம் தெரியாம வளர்ந்த உங்க மகனுக்கு பொண்டாட்டி மேல ஆசை வர கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும்.. நீங்க மனசை போட்டு வருத்திக்காம தைரியமா இருங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அந்த பொண்ணு கொஞ்சம் புத்திசாலியாட்டம் தெரியுது.. நிச்சயமா ராசா மாறிடுவார்.. நம்புங்க.." வடிவின் தேற்றுதலில் சற்று மனம் சாந்தி அடைந்தார் அவர்..

"இன்னைக்கு குரு தம்பி வீட்டுக்கு வர மாட்டாராம்" வடிவு சொல்லிப்போன செய்தியில் அத்தனை நிம்மதி அன்பரசிக்கு.. கணவன் வீட்டுக்கு வரமாட்டான் என்பதில் சந்தோஷம் கொள்ளும் முதல் புது மனைவி அவளாகத்தான் இருக்கக்கூடும்.. எவ்வித சஞ்சலங்களுமின்றி அன்று இரவு நிம்மதியாக உறங்கினாள் அன்பரசி..

நன்றாக ஓய்வெடுத்திருந்ததில் மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டாள் அவள்..
முந்தைய நாள் போல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை.. குளித்து முடித்து எளிமையான கிரேப் சில்க் புடவையை உடுத்திக் கொண்டு சாமி கும்பிடும் எண்ணத்தோடு பூஜை அறைக்கு வந்தவள் தூசியும் ஒட்டடையுமாக கிடந்த அறையும் எண்ணெய் பிசுக்கோடு கிடந்த பித்தளை விளக்கும்.. அழுக்கு படிந்த சாமி படங்களையும் கண்டு திடுக்கிட்டு "என்ன சாமி அறையை இப்படி வச்சிருக்காங்க..!!" ஒரு கணம் முகம் சுருக்கினாள்..

பிறகு அவளே புடவை முந்தானையை இழுத்து சொருகிக்கொண்டு வடிவிடம் சுத்தம் செய்ய தேவையான உபகரணங்களை வாங்கி வந்து பூஜை அறையை சுத்தம் செய்து விளக்குகளை தேய்த்து கழுவி.. படங்களைத் துடைத்து.. தோட்டத்திலிருந்து வடிவு பறித்து வந்து கொடுத்த முல்லைப் பூக்களை சரமாக தொடுத்து சாமி படங்களுக்கு போட்டு.. விளக்கேற்றி பூஜை செய்து கொண்டிருக்க அப்போதுதான் கூடத்தில் ஊஞ்சலில் வந்தமர்ந்த ஆச்சார்யா சாம்பிராணி ஊதுபத்தி நறுமணத்தோடு மணியோசை வந்த திசையில் வியப்போடு விழிகளை செலுத்தினார்..

அன்பரசி மந்திரங்களை முணுமுணுவென உச்சரித்த படி சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருக்க வடிவு பக்கத்தில் நின்று கொண்டிருந்ததை கண்ட நொடி மீண்டும் வீட்டிற்கு பழைய தெய்வீக களை வந்து விட்டதாய் கண்கள் கலங்கி போனது அவருக்கு..

"பாட்டி இனி நானே சமைக்கிறேன்" என்று சமையலறைக்குள் நுழைந்து கொள்ள காலை உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து குருவுக்கு எப்படி சமைத்தால் சரியாக இருக்கும் என்ற பக்குவத்தை சொல்லிக் கொடுத்தார் வடிவாம்பாள்..

பார்த்து பார்த்து சமைத்த போதிலும் சில பிழைகள் நேர்ந்து விட்டது.. சாராயமும் போதை மருந்துகளும் உட்கொண்டு மரத்துப்போன அந்த நாக்கிற்கு காரமும் உப்பும் சுள்ளென உரைக்க வேண்டுமாம்.. அவளோ மிதமான உப்பு காரத்துடன் ருசியாக சமைத்திருந்தாளே..!!

ஆச்சார்யா வந்து உணவருந்தி விட்டு ஆஹா ஓஹோவென மருமகளின் சமையலை வாய் வலிக்க பாராட்டி விட்டு சென்றார்..

காலையில் தான் வீடு வந்திருந்தான் குரு.. கூடத்திலேயே நிற்க வைத்து அப்பா பொழிந்த அறிவுரை மழையை புறக்கணித்துவிட்டு தன்னறைக்கு சென்றவன் குளித்து முடித்து காலை உணவுக்காக சமையலறையில் வந்து அமர்ந்தான்..

அடுப்புத் திண்டு பக்கத்தில் மயில் தோகை போல் கூந்தல் விரித்து ஒடிசலாக நின்றிருந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் "கிழவி.. பசிக்குது.." என்ற வழக்கம்போல அவன் கத்தலுக்கு செவி சாய்த்து நெஞ்சுக்குள் நடுக்கத்துடன் தட்டை வைத்து உணவை பரிமாறியவள் யாரென உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அவன்.. புத்தம்புது பூவாக கண்முன்னே பளிச்சென நின்றவளை கண்டு அவனுள் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் தான் ஆச்சர்யம்..

"கிழவி எங்கே..!!" இடுங்கிய விழிகளுடன் அவன் கேட்ட கேள்விக்கு.. "பா.. பாட்டி" தோட்டத்துல கருவேப்பிலை பறிச்சிட்டு வர போயிருக்காங்க.." நான்கு வார்த்தை பேசுவதற்குள் பெரும் போராட்டமாய் போனது..

"இதுவரை வடிவு சுட்டு வைத்த கல் போன்ற இட்லிகளை காரப்பொடியுடன் விழுங்கி பழகியவனுக்கு மல்லிகை பூ இட்லியும் கெட்டி சட்னியும் செட்டாகவில்லை..

"ஏய்.. என்னது இது..? இட்லி மாவு ஊத்துனியா.. இல்ல இலவம்பஞ்ச தூக்கி இட்லி சட்டிக்குள்ள வச்சு அவிச்சியா.." அவன் உறுமலில் "இட்லி இப்படித்தானே இருக்கனும்.. பாட்டி இட்லிங்கிற பேர்ல என்னத்த போட்டு தொலச்சதுன்னு தெரியலையே.." பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள் அவள்..

அவளை முறைத்தபடி ஒரு இட்லியை யானை வாயில் சோளப் பொறியாக விழுங்கி இருந்தான் குரு..

இட்லியும் சட்னியுமாக தொண்டைக்குள் வழுக்கிச் செல்ல தேவ ருசி அசுரனுக்கு தெரியவில்லை.. கொலைப் பசி தீராத கடுங்கோபத்தோடு விழிகளால் அவளை சுட்டெரித்தவன் தட்டை படாரென சுவற்றில் வீசி எறிந்திருந்தான்..

"தெரியாத விஷயத்துல எதுக்குடி மூக்க நுழைக்கிற.. பசி நேரத்துல எரிச்ச மயி* கிளப்பிக்கிட்டு.." பற்களை கடித்து கர்ஜித்தவன்.. அவளை அடிப்பதற்காக கை ஓங்கி இருந்தான் அடுத்த கணம்..

"அய்யோ.." என்று இரு கைகளால் அவள் முகத்தை மூடிக்கொண்டு சில கணங்களாக எதுவும் நிகழவில்லையே என்ற யோசனையோடு விழிகளை திறந்து பார்க்க அங்கே அவன் இல்லை..

அவன் நடந்து கொண்ட முறையில் கண்ணீர் முனுக்கென எட்டிப் பார்க்க "காட்டான்.." இதழோரம் கோபமாக முணுமுணுத்தாள் அன்பரசி..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
தன்னை நோக்கி நகர்ந்து வந்தவனை கண்டு கால்களை மடக்கி மேலேறி தள்ளி சென்றாள் அவள்.. "ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால முடியல..!! டாக்டர் ஒரு வாரத்துக்கு எதுவும் கூடாதுன்னு சொல்லி இருக்கார்..!!" அவள் பேசியது அவள் காதுகளையே சென்றடையவில்லை..

கண்கள் சுருக்கி வினோதமாக பார்த்தவாறு மென்மேலும் முன்னேறியவன் அவளைக் கடந்து சென்று குனிந்து கட்டிலுக்கு அடிப்புறத்திலிருந்து
சுத்தியலை எடுத்துக் கொண்டு முழங்காலிலேயே நின்றவனை கண்டு இதயம் நின்று துடித்தது.. "ஐயோ முரடன்.. ரவுடி பையன்னு பார்த்தா இவன் பயங்கரமான சைக்கோ போலிருக்கே.. வேலை முடிஞ்சதுன்னு என்னை கொல்லப் போறானா..!! அம்மா.. அப்பா.. இப்படி ஒரு ராட்சசன் கிட்ட என்னை தனியா விட்டுட்டு போயிட்டீங்களே.. என்னை காப்பாற்ற யாருமே இல்லையா.." உள்ளுக்குள் பயத்தில் உள்ளுக்குள் அழுது புலம்பி.. வெளிப்புறம் முகம் வெளிறி முழங்கைகளை தரையில் தோன்றியபடி முதுகு வரை தேகத்தை உயர்த்தியவள் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் மரண பீதியுடன் கதி கலங்கி போயிருக்க.. சுத்தியலை கட்டிலின் பக்கவாட்டில் ஓங்கி அடித்தவன் அங்கிருந்து நகர்ந்து சென்று உடைந்து போயிருந்த கட்டிலின் காலடிக்கு இடம் மாறியிருந்தான்..

சாய்ந்திருந்த கட்டிலின் காலை ஒற்றை கையால் உயர்த்தி.. என்ன பழுதென்று ஆராய்ந்து.. அதை ஏதோ சரி செய்ய முயன்று கொண்டிருப்பதை போல் தோன்றியது..

"அடக்கடவுளே இதுக்காக தான் சுத்தியலை எடுத்துட்டு போனானா..!! ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.." நெஞ்சை கை வைத்து அவனுக்கு முகம் காட்டாமல் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள் அன்பரசி..

டங்.. டங்கென்று ஏதோ சத்தம்.. கட்டிலை சரி செய்கிறான் என்று மட்டும் தெரிகிறது.. ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை.. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக்குள் இடி விழுவது போல் அதிர்வைத் தர கண்களை இறுக மூடியிருந்தாள் அன்பு..

"ஏய்.. ஏய்இஇ.." அவன் தான் மாடு விரட்டுவது போல் அழைத்துக் கொண்டிருந்தான்.. "என்னையா கூப்பிடறாரு" என்ற சந்தேகத்துடன் விழிகளை சற்றே திறந்து பார்க்க.. மின்விசிறியை தொட்டுவிடும் உயரத்தில் நின்று கொண்டிருந்தான் அவன்..

அவள் கண்களை திறந்தவுடன்.. "போய் மேல படு.." என்றான் கண்ணாடித் துண்டுகளை விழுங்கியதை போல் கரகரத்த குரலில்..

சொன்ன சொல் மீறாதவளாய் எழத்தான் முயன்றாள்.. ஆனால் முடியவில்லையே.. "உன்னை எழுந்தது கட்டில் மேல படுக்க சொன்னேன்.." அவள் ஏதோ வீம்பிற்காக தரையில் படுத்திருப்பதை போல் மீண்டும் கனத்த குரலில் அதட்டி சொல்ல அவசரத்தில் ஒன்றும் ஓடாமல் தேகம் அதிர்ந்தாள்..

எழத்தான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று வார்த்தையால் கூட சொல்ல முடியாத அளவிற்கு அவன் விழிகள் தன்னையே பயங்கரமாக கூறுபோடுவது போல் பிரமை..

அவளை கட்டிலில் படுக்கச் சொல்ல வேண்டும் என்று தெரிகிறது.. ஆனால் பலவீனமான மனைவியை அன்பாக அரவணைத்து கையிலேந்தி கட்டிலில் படுக்க வைக்க வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லையே..!!

"ப்ச்.. எழுந்து கட்டில்ல படுனா என்ன சர்க்கஸ் காட்டிட்டு இருக்க.." என்றவன் ஏதோ மர சாமானை தூங்குவது போல் ஒற்றை கையால் அவள் கைப்பற்றி தூக்கி கட்டிலை நோக்கி நகர்த்த.. அவன் வேகத்தில் சரக்கென இழுத்து வரப்பட்டவள் "அம்மாஆஆஆஆ.." என்று அலறியதில் ஒரு நொடி நின்று அவள் முகம் பார்த்தான் குரு..

"ப்ச்.. எதுக்கு கத்தற..!!" அவன் முகத்தில் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே..!!

"வலிக்குது.." இதழ் கடித்து கண்ணீர் சிந்தியவளின் முகத்தையே ஒரு சில கணங்கள் உற்றுப் பார்த்தவன் தன் கைப்பிடியில் துவண்டு பிடிமானம் இல்லாத கொடியாக சரிந்து நின்றவளை கட்டில் மெத்தையில் இறக்கி விட்டான்..

மிரட்சியோடு அவனைப் பார்த்தபடி கட்டிலில் நகர்ந்து படுத்துக் கொண்டாள் அவள்.. இரு கைகளால் கேசத்தை கோதியபடி தலை முதல் கால் வரை அவளை நிதானமாக பார்க்கவும் இதயத்திற்குள் பயப்பந்து உருண்டது..

மீண்டும் கட்டில் மீது ஏறியவன்.. அவளின் இரு பக்கமும் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி ஓநாய் போல் நின்றான்.. அச்சத்தில் இதயத்தின் படபடப்பு கூடி தாறுமாறாக மூச்சு வாங்கியது..

"தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.. எனக்கு உடம்பு சரியில்லை.. இதுக்கு மேல என்னை ஏதாவது செஞ்சீங்கன்னா நான் செத்தே போயிடுவேன்.." பலவீனமாக பயக் குரலில் சொன்னவளை முகச் சுழிப்போடு பார்த்தவன்.. "ப்ச்.. ஏய்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு.. கட்டில் உடையுதான்னு பாக்கணும்.." என்று அவள் மீது தன் தேகம் படாமல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடியவனை "ஆங் பைத்தியமா இவன்" என்ற ரீதியில் பார்த்திருந்தாள் அவள்.. ஆடும் ஆட்டத்திற்கு மாமிச மலையாக எங்கே தன்மீது விழுந்து விடுவானோ என்ற பயம் வேறு!!..

"ஹ்ம்ம்.. இனி கட்டில் உடையாது.." என்று விலகி நின்றவன் இனி கட்டிலின் தேவை அதற்காக மட்டுமே என்று எண்ணி விட்டான் போலும்.. அத்தோடு அவன் வெளியேறி சென்று விட.. புயல் கரையை கடந்தது போல் சற்று அமைதியாகி ஆசுவாசப்பட்டாள் அன்பரசி.. அடுத்த பத்தாவது நிமிடம் வலியை பொறுத்துக் கொண்டு கழிவறை சென்று வந்தவள் மருத்துவர் கொடுத்த அந்த களிம்பை ரணமான இடத்தில் பூசி கொண்டாள்..

ஒரு மணி நேரம் நன்றாக தூங்கி விழித்தவளுக்கு வலியின் சுவடுகள் ஏதும் தெரியாமல் போனதில்.. எழுந்து குளியலறை சென்று முகம் கழுவி வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

"விருந்து சாப்பிட வேண்டிய நேரத்தில் எப்படி பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டியதா போச்சே.." புலம்பிக்கொண்டே ரசம் சாதத்தை கரைத்து எடுத்து வந்திருந்தாள் வடிவு..

"வேண்டாம் பாட்டி எனக்கு பசிக்கல.." அன்பரசி முகத்தை திருப்பிக் கொள்ள.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. "வயித்த காயப்போடாதே.. கொஞ்சமா சாப்பிடு இப்படி பட்டினி கிடந்தா உடம்புக்கு நல்லது இல்ல.." அவர் வற்புறுத்தியதில் வேறு வழியில்லாமல் பெயருக்காக கொஞ்சமாக உண்டு விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்..

முழு ஓய்வு அவளை ஓரளவு குணமாக்கி இருந்தது.. மாலை நேரத்தில் வடிவு சொன்னபடி வெது வெது நீரில் குளித்து விட்டு.. ஜார்ஜட் புடவை ஒன்றை உடுத்திக் கொண்டாள்..

விநாயகமும் கீதாவும் மகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.. அவர்களிடம் இரவு நடந்த கூத்தை பற்றி வாய் திறக்கவில்லை அவள்..
வடிவு ஏதோ சொல்ல வாய் எடுக்க கண் ஜாடையில் வேண்டாம் என்று தடுத்து விட்டாள் அன்பரசி.. நடப்பது தன்னோடு போகட்டும்.. இனி அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம்..

"நல்லா இருக்கியாம்மா மாப்பிள்ளை ஒன்னும் கஷ்டப்படுத்தலையே.." முந்தைய நாள் வரை அவன் இவன் என்றும் மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டிருந்த கீதா மாப்பிள்ளை என்று மரியாதையோடு அழைத்ததில் அன்பரசிக்கே வியப்புதான்..

"இல்லம்மா அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. ஒரே நாள்ல எதுவும் மாறிடாதே..!! எனக்கு தான் கொஞ்சம் பழகிக்க நேரம் தேவைப்படும்.." உண்மையை மறைக்கவும் இல்லை பொய்யாக எதையும் சேர்க்கவும் இல்லை இதுதான் நிதர்சனம்.. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று சூசகமாக பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்தாள் அன்பு..

"வாங்க வாங்க" என்று வரவேற்று சம்பிரதாயத்தின் பொருட்டு சில வார்த்தைகள் பேசினார் ஆச்சார்யா.. எங்கே மருமகள் அழுது புலம்பி புகார் செய்து வந்தவர்கள் இருவரையும் வேதனைப்படுத்தி விடுவாளோ என்ற கலவரம் அவருக்குள்..

ஆனால் அன்பரசி அதற்கான எந்த சுவடுகளையும் முகத்தில் காட்டாது இன்முகத்தோடு பேசி இருவரையும் அனுப்பி வைத்ததில் நெஞ்சோரம் லேசான நிம்மதி..

அன்று இரவு வெகு நேரமாகியும் குருக்ஷேத்ரா வீட்டுக்கு வரவில்லை..

"ஏன்டா இன்னும் வீட்டுக்கு வரல.. கல்யாணமாகி புது பொண்டாட்டியை வீட்ல விட்டு நீ வெளியே சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்.." என்றுமில்லாத திருநாளாக ஆச்சார்யா என்று அதிகமாகவே கோபப்பட்டார்..

"வீட்டுக்கு வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்னு அர்த்தம்.. அப்புறம் என்னை குறை சொல்ல கூடாதுன்னு அர்த்தம்.." எகத்தாளமான பேச்சு அவனிடமிருந்து.. தந்தைக்கு மட்டும் மரியாதை கொடுப்பவன்தான்.. ஆனால் சில நேரங்களில் இப்படி பதிலடியும் கொடுத்து பழக்கம்..

"நீ முதல்ல புறப்பட்டு வீட்டுக்கு வா.." அப்பாவின் அதிகாரக் குரலுக்கு அடங்காதவனாய்..

முக்கியமான வேலை இருக்குப்பா.. முடிச்சுட்டு தான் வருவேன்.." இந்த பக்கம் பேசி முடிப்பதற்குள்.. "அதோ அதோ.. வர்றான் குரு.. புடிங்கடா அவன.. அந்த கத்தியை குடுடா.." கூச்சலும் இரைச்சலுமாய் அடிதடி சத்தம்.. எதிர்முனையில் கேட்டுக் கொண்டிருந்த வன்முறை குரல்களில் அலைபேசியை அணைத்து விட்டு விழிகள் மூடி திறந்தார் ஆச்சார்யா..

"கல்யாணம் செஞ்சு வச்சும் பயனில்லாமல் போச்சே..!! ஒரு பெண்ணோட வாழ்க்கை வீணாகிப் போனதுதான் மிச்சமா..? இந்தப் பாவம் என்னை சும்மா விடுமா லஷ்மி..!!" ஆற்றாமையோடு மனைவியிடம் மனம் விட்டு புலம்பினார்..

"ஏன்யா.. ரொம்ப கலக்கமா தெரியறீங்க.." வடிவு கவலையோடு வந்து நின்றாள்..

"தப்பு பண்ணிட்டேன்னு தோணுது.. குரு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் கூட அவன் மாறிடுவான்னு நிச்சயமா நம்பிக்கை இருந்தது.. ஆனா இன்னைக்கு அந்த பொண்ணு நிலைமையை பார்த்த பிறகு.. இப்ப பேசின பேச்சைக் கேட்ட பிறகு அந்த நம்பிக்கை சுத்தமா நீர்த்து போச்சு.." என்றார் இதயம் கனக்க..

"நீங்களே இப்படி பேசினா எப்படி..!! கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தானே முடிஞ்சு போயிருக்கு.. இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகலையே..!! பிறந்த 32 வருஷமா இரும்பா வளர்ந்தவன் கல்யாணம் ஆகி ஒரே நாள்ல புடம் போட்ட தங்கமா மாறனும்னு நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம் ஐயா..!!" வடிவு குரல் இறைஞ்சியது..

"ஐயோ..!! வடிவம்மா நீங்களும் என்னை புரிஞ்சுக்காம பேசுறீங்களே.. ஒரே நாள்ல அவன் முழுசா மாறனும்னு நானும் ஆசைப்படல.. ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்கும்போது அவன் கிட்ட சின்ன சின்ன மாற்றங்கள் இன்னையிலிருந்து தொடங்கும் நெனச்சேன்.. அப்படி எதுவும் நடக்கல.. பாறாங்கல் மாதிரி அவன் அப்படியேதானே இருக்கான்.. அந்த பொண்ணோட நிலைமையை பார்த்து கூட கொஞ்சம் கூட இரக்கம் வரலையே..!! இனி எப்ப மாற போறான்.. நினைக்கும் போதே மனசெல்லாம் கலங்குது வடிவும்மா..!!"

"மகன் வாழ்க்கையில் நல்லது நடக்கனும்ங்கிற ஏக்கமும் ஆசையும் தான் உங்களை எப்படி அவசரப்பட வைக்கிறது.. ஆனா பூ பூக்கவும் காய் கனியவும் ஒரு நேரம் வரனும்.. அந்த மாதிரி தானே இதுவும்.. ஆசாபாசம் தெரியாம வளர்ந்த உங்க மகனுக்கு பொண்டாட்டி மேல ஆசை வர கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும்.. நீங்க மனசை போட்டு வருத்திக்காம தைரியமா இருங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அந்த பொண்ணு கொஞ்சம் புத்திசாலியாட்டம் தெரியுது.. நிச்சயமா ராசா மாறிடுவார்.. நம்புங்க.." வடிவின் தேற்றுதலில் சற்று மனம் சாந்தி அடைந்தார் அவர்..

"இன்னைக்கு குரு தம்பி வீட்டுக்கு வர மாட்டாராம்" வடிவு சொல்லிப்போன செய்தியில் அத்தனை நிம்மதி அன்பரசிக்கு.. கணவன் வீட்டுக்கு வரமாட்டான் என்பதில் சந்தோஷம் கொள்ளும் முதல் புது மனைவி அவளாகத்தான் இருக்கக்கூடும்.. எவ்வித சஞ்சலங்களுமின்றி அன்று இரவு நிம்மதியாக உறங்கினாள் அன்பரசி..

நன்றாக ஓய்வெடுத்திருந்ததில் மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டாள் அவள்..
முந்தைய நாள் போல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை.. குளித்து முடித்து எளிமையான கிரேப் சில்க் புடவையை உடுத்திக் கொண்டு சாமி கும்பிடும் எண்ணத்தோடு பூஜை அறைக்கு வந்தவள் தூசியும் ஒட்டடையுமாக கிடந்த அறையும் எண்ணெய் பிசுக்கோடு கிடந்த பித்தளை விளக்கும்.. அழுக்கு படிந்த சாமி படங்களையும் கண்டு திடுக்கிட்டு "என்ன இப்படி வச்சிருக்காங்க..!!" ஒரு கணம் முகம் சுருக்கினாள்..

பிறகு அவளே புடவை முந்தானையை இழுத்து சொருகிக்கொண்டு வடிவிடம் சுத்தம் செய்ய தேவையான உபகரணங்களை வாங்கி வந்து பூஜை அறையை சுத்தம் செய்து விளக்குகளை தேய்த்து கழுவி.. படங்களைத் துடைத்து.. தோட்டத்திலிருந்து வடிவு பறித்து வந்து கொடுத்த முல்லைப் பூக்களை சரமாக தொடுத்து சாமி படங்களுக்கு போட்டு.. விளக்கேற்றி பூஜை செய்து கொண்டிருக்க அப்போதுதான் கூடத்தில் ஊஞ்சலில் வந்தமர்ந்த ஆச்சார்யா சாம்பிராணி ஊதுபத்தி நறுமணத்தோடு மணியோசை வந்த திசையில் வியப்போடு விழிகளை செலுத்தினார்..

அன்பரசி மந்திரங்களை முணுமுணுவென உச்சரித்த படி சுவாமி படங்களுக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருக்க வடிவு பக்கத்தில் நின்று கொண்டிருந்ததை கண்ட நொடி மீண்டும் வீட்டிற்கு பழைய தெய்வீக களை வந்து விட்டதாய் கண்கள் கலங்கி போனது அவருக்கு..

"பாட்டி இனி நானே சமைக்கிறேன்" என்று சமையலறைக்குள் நுழைந்து கொள்ள காலை உணவு சமைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து குருவுக்கு எப்படி சமைத்தால் சரியாக இருக்கும் என்ற பக்குவத்தை சொல்லிக் கொடுத்தார் வடிவாம்பாள்..

பார்த்து பார்த்து சமைத்த போதிலும் சில பிழைகள் நேர்ந்து விட்டது.. சாராயமும் போதை மருந்துகளும் உட்கொண்டு மரத்துப்போன அந்த நாக்கிற்கு காரமும் உப்பும் சுள்ளென உரைக்க வேண்டுமாம்.. அவளோ மிதமான உப்பு காரத்துடன் ருசியாக சமைத்திருந்தாளே..!!

ஆச்சார்யா வந்து உணவருந்தி விட்டு ஆஹா ஓஹோவென மருமகளின் சமையலை வாய் வலிக்க பாராட்டி விட்டு சென்றார்..

காலையில் தான் வீடு வந்திருந்தான் குரு.. கூடத்திலேயே நிற்க வைத்து அப்பா பொழிந்த அறிவுரை மழையை புறக்கணித்துவிட்டு தன்னறைக்கு சென்றவன் குளித்து முடித்து காலை உணவுக்காக சமையலறையில் வந்து அமர்ந்தான்..

அடுப்புத் திண்டு பக்கத்தில் மயில் தோகை போல் கூந்தல் விதித்து ஒடிசலாக நின்றிருந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் "கிழவி.. பசிக்குது.." என்ற வழக்கம்போல அவன் கத்தலுக்கு செவி சாய்த்து நெஞ்சுக்குள் நடுக்கத்துடன் தட்டை வைத்து உணவை பரிமாறியவள் யாரென உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அவன்.. புத்தம்புது பூவாக கண்முன்னே பளிச்சென நின்றவளை கண்டு அவனுள் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் தான் ஆச்சர்யம்..

"கிழவி எங்கே..!!" இடுங்கிய விழிகளுடன் அவன் கேட்ட கேள்விக்கு.. "பா.. பாட்டி" தோட்டத்துல கருவேப்பிலை பறிச்சிட்டு வர போயிருக்காங்க.." நான்கு வார்த்தை பேசுவதற்குள் பெரும் போராட்டமாய் போனது..

"இதுவரை வடிவ சுட்டு வைத்த கல் போன்ற இட்லிகளை காரப்பொடியுடன் விழுங்கி பழகியவனுக்கு மல்லிகை பூ இட்லியும் கெட்டி சட்னியும் செட்டாகவில்லை..

"ஏய்.. என்னது இது..? இட்லி மாவு ஊத்துனியா.. இல்ல இலவம்பஞ்ச தூக்கி இட்லி சட்டிக்குள்ள வச்சு அவிச்சியா.." அவன் உறுமலான "இட்லி இப்படித்தானே இருக்கனும்.. பாட்டி இட்லிங்கிற பேர்ல என்னத்த போட்டு தொலச்சதுன்னு தெரியலையே.." பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்..

அவளை முறைத்தபடி ஒரு இட்லியை யானை வாயில் சோளப் பொறியாக விழுங்கி இருந்தான் குரு..

இட்லியும் சட்னியமாக தொண்டைக்குள் வழுக்கிச் செல்ல தேவ ருசி அசுரனுக்கு தெரியவில்லை.. கொலைப் பசி தீராத கடுங்கோபத்தோடு விழிகளால் அவளை சுட்டெரித்தவன் தட்டை படாரென சுவற்றில் வீசி எறிந்திருந்தான்..

"தெரியாத விஷயத்துல எதுக்குடி மூக்க நுழைக்கிற.. பசி நேரத்துல எரிச்ச மயி* கிளப்பிக்கிட்டு.." பற்களை கடித்து கர்ஜித்தவன்.. அவளை அடிப்பதற்காக கை ஓங்கி இருந்தான் அடுத்த கணம்..

"அய்யோ.." என்று இரு கைகளால் அவள் முகத்தை மூடிக்கொண்டு சில கணங்களாக எதுவும் நிகழவில்லையே என்ற யோசனையோடு விழிகளை திறந்து பார்க்க அங்கே அவன் இல்லை..

அவன் நடந்து கொண்ட முறையில் கண்ணீர் முனுக்கென எட்டிப் பார்க்க காட்டான்.. இதழோரம் கோபமாக முணுமுணுத்தாள்..

தொடரும்..
👍👍👍👍
 
Member
Joined
Mar 12, 2024
Messages
11
Kattil pazhudhu paarthu sodhanai seiyya therindhavaruku thannaal kaayappatta pennidam kanivaaga naangu vaarthaigal pesanum nu theriyalaye..

Idli kuda ivarai polave irukanumna eppadi? Anyways, suvarasyamana subaavam ulla manidhar dhan. Ivaruku anbuna ennanu solli tharanum nu ninachaa Idlinale enna nu solli tharanum poliruke..

Interesting episode, sister.. Nicely written.. I enjoyed reading.. Thank you...
 
New member
Joined
Jun 27, 2024
Messages
2

👍👍👍
 
Top