- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக்கொண்டு கார்த்திகா தேவியின் அறைக்குள் நுழைந்தாள் அகலிகா..
முன்பிருந்த சோபை இழந்து.. வதங்கிய வதனத்தோடு கலைந்த ஓவியமாக கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார் கார்த்திகா தேவி.. பாரிச வாயு தாக்கி ஒரு கையும் காலும் செயலிழந்து விட்டது.. எழுந்து அமரலாம்.. அவராக உணவு உண்ண முயற்சிக்கலாம்.. மற்றபடி பிற பணிகளை செய்ய மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை..
இரவு நேரங்களில் மனைவியை நரேந்திரன் பார்த்துக்கொள்வார்.. பகல் நேரங்களில் அவர் பட்டறைக்கு சென்று விடும் சமயங்களில்.. இந்திரஜா.. பூங்கொடி இருவரும் தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் நிஜம் வேறு..!!
வெண்ணீர் பாத்திரத்தையும் பூ துண்டையும்.. மேஜை மீது வைத்து விட்டு.. கார்த்திகா தேவியை மென்மையாக கன்னம் தொட்டு எழுப்பினாள் அகலிகா..
"அ.. அத்தை.. எழுந்திரிங்க.. டவல் பாத் கொடுக்கணும்..!!"
மெல்ல விழிகளை திறந்த கார்த்திகா தேவிக்கு கண்முன்னே நின்ற கார்த்திகாவை கண்டதும் வழக்கம் போல் முகம் மாறியது..
மெல்ல அதிகரித்து பின் சீறலாக உருவெடுத்த வேக மூச்சோடு "எதுக்காக நீ வந்து தொலையுற..? பூங்கொடியை அனுப்பு.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் என் கண் முன்னாடி வராதேன்னு.. கேட்கவே மாட்டியா..!! " மாமியாரின் வாயிலிருந்து காலை கச்சேரி ஆரம்பமாகியது..
வழக்கமான அர்ச்சனை.. வெறுப்பு கங்குகள் என்றாலும் மனம் வாடத்தான் செய்கிறது..
"பெரியம்மா வேலையா இருக்காங்க.. இந்திரஜா குழந்தைக்கு சோறு ஊட்டிட்டு இருக்கா.. அதனாலதான் நான் வந்தேன்.." அமைதியான குரலில் சொல்லி அகலிகா அவரை எழுப்பி அமர வைக்க முயற்சித்தாள்..
சர்ப்பம் ஊர்வதாக அறுவறுப்பு பட்டு.. "ச்சீ.. என்னை தொடாதே..!!" என்று வலது கரத்தால் அவளை தள்ளிவிட்டார்.. அகலிகா மௌனமாக அடிபட்ட பார்வை பார்த்தாள்..
"சாகசக்காரி.. உன்னை அவன் நம்பலாம் ஆனா நான் நம்ப மாட்டேன்.. அடுத்து என்ன திட்டத்தோட இந்த வீட்டுக்குள்ள நுழைச்சிருக்கே.. ஏதோ என் புள்ள அவமானங்களை தாங்கிகிட்டு ஜடமா நடமாடிட்டு இருக்கான்.. அது பொறுக்கலையா உனக்கு.. மொத்தமா அவன் உயிரை குடிச்சு.. உன் தாகத்தை தீர்த்துக்க வந்திருக்கியா..!! " குரல் இரைந்தது..
"சத்தியமா அப்படி இல்லை அத்தை நான்.."
"உன்னோட அர்த்தம் இல்லாத விளக்கங்கள் எனக்கு தேவையே இல்லை..!! துள்ள துடிக்க பெத்த குழந்தையை விட்டுட்டு ஓடி போனவ தானே நீ..!! ரெண்டு வருஷம் கழிச்சு எதுக்காக மறுபடி வந்த.. ஓடிப்போனவன் சலிச்சு போய்ட்டானா..!!"
இன்னும் எத்தனை முறை இந்த கேள்விகளோ..!!
கண்ணீரோடு அமைதியாக.. பூத்துண்டை தண்ணீரில் நனைத்து அவளுக்கு துடைத்து விட முன்வந்தபோது.. மீண்டும் அவள் கரத்தை தட்டி விட்டாள் கார்த்திகா..
"நான் சொல்றது உனக்கு புரியலையா..? என் மகன் உன்னை மன்னிச்சு வீட்டுக்குள்ள சேர்த்திருக்கலாம்.. ஆனா என்னைக்குமே என்கிட்ட இருந்து உனக்கு மன்னிப்பே கிடைக்காது.. மரியாதையா இங்கிருந்து போயிடு.. பூங்கொடி.. இந்திரஜா..!! யாராவது வாங்களேன்.." கார்த்திகா தேவி பலவீனமான குரலில் கத்தியதில் சத்தம் கேட்டு.. கௌதமனும் பூங்கொடியும் வேகமாக உள்ளே வந்தனர்..
நுழைந்தகணம் கௌதமனின் பார்வை கேள்வியாக அகலிகாவை தீண்டி சென்றது..
"என்னம்மா என்ன ஆச்சு..!!" கட்டிலில் அமர்ந்து கனிவாக அன்னையின் தோள் தொட்டான் கௌதமன்..
"இந்த கேடுகெட்டவளை இங்கிருந்து போக சொல்லு.. இவளை பார்க்கவே பிடிக்கல.. இப்ப என்ன காரியம் ஆகணும்னு என்கிட்ட வந்து நாடகம் ஆடுறா..? இந்த பணிவிடைகளை செய்ய சொல்லி நான் அழுதேனா..!!" கார்த்திகா மூச்சரைக்க பேசியதில்.. கௌதமன் உன்னை யார் இங்க வர சொன்னா என்ற அன்னையின் அதே கேள்விகளை தாங்கி அனல் விழிகளால் அகலிகாவை எரித்தான்..
அகலிகா அவன் பார்வையில் நிலை குலைந்து போனாள்..
"அம்மா அமைதியா இருங்க.. நான் அவளைப் போக சொல்றேன்..!!" என்று அன்னையை வருடிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன்.. மீண்டும் உஷ்ண பார்வையோடு அகலிகாவின் பக்கம் திரும்பினான்..
"நீ எதுக்காக இங்க வந்த..!! அவங்கதான் உன்னை பார்த்த உடனே டென்ஷனாகி கத்துறாங்கன்னு தெரியுது இல்ல.. எல்லாத்தையும் வேணும்னே பண்றியா..?" அழுத்தமான குரலில் குற்றஞ்சுமத்தும் பார்வை பார்த்தான்..
"இல்ல அவங்கள பிரஷ் பண்ண வச்சு டவல் பாத் கொடுத்து சாப்பிட வைக்கலாம்னு..!!" என்று அவள் முடிப்பதற்குள்..
"அடடா.. அண்ணிக்கு வேலை செய்ய வீட்ல ஆளுங்களா இல்ல..!! என்னமோ நாங்க அண்ணியை கவனிக்காத மாதிரியும் நீ தான் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யற மாதிரியும் காமிச்சுக்கணும்.. அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு?" என்றாள் பூங்கொடி கழுத்தை நொடித்துக் கொண்டு..
அகலிகா பூங்கொடியை இயலாமையோடு பார்த்தாள்.. சொன்னாலும் இல்லையென்றாலும் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் தானே செய்கிறாள்..!!
விடியற்காலையில் மரச்சாமான்கள் செய்வதற்கு தேவையான பலாமரக்கட்டைகளின் லோடு வந்து இறங்கியதால்.. கண்காணிப்புக்காக பட்டறை சென்றிருந்த நரேந்திரன் இப்போதுதான் வீடு திரும்புகிறார்..
தங்களது அறைக்குள் சத்தமும் கூச்சலுமாக இருப்பதில்.. பதட்டத்தோடு உள்ளே நுழைந்திருந்தார்..
வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து அறைக்குள் வரும் வரை அங்கு நடந்த சம்பாஷனைகளை ஓரளவு புரிந்து கொண்டிருந்தவர்.. மனைவியின் பக்கம் கவலையாக திரும்பினார்..
"கார்த்திகா.. இப்படி பதட்டப்படறதும் கோபப்படுறதும் உடம்புக்கு நல்லது இல்ல அமைதியா இரு.." என்று தன் மனைவியை கண்டித்தவர்.. வெறுப்பு படர்ந்த கண்களோடு அகலிகாவின் பக்கம் திரும்பினார்..
"நீ எதுக்காக இங்க வந்த..? உன்னை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது.. முதல்ல வெளியே போ.." என்றார் கடுமையான குரலில்..
அகலிகா கலங்கிய விழிகளோடு அங்கிருந்து வெளியேறி இருந்தாள்..
கௌதமன் ஆழ்ந்த மூச்செடுத்து ஒரு கணம் கண்களை மூடி திறந்தான் வேறு எதுவும் பேசவில்லை..!!
"பூங்கொடி.. கார்த்திகாவுக்கு தேவையானதை நீயே பார்த்துக்கோ.. வேற யாரையும் உள்ள விட வேண்டாம்.. என் மனைவியோட இந்த நிலைக்கு காரணமாகிட்டு இப்ப எதுக்காக வந்து நடிக்கிறாளாம் அவ.. என்னைக்கு அவ வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாலும் அன்னைக்கே எங்க எல்லாரோட நிம்மதியும் போயிடுச்சு.." என்றவர் கௌதமனை கண்டன பார்வை பார்த்தார்..
அவன்தானே மனைவியை மன்னித்து வீட்டுக்குள் அனுமதித்தது..!!
இந்திரஜா கௌதமனின் திருமணத்தன்று தாலி கட்டு முன் கண்ணெதிரே வந்து நின்றவளை ஒரு சில விதிமுறைகளோடு ஏற்றுக் கொண்டான் கௌதமன்..
ஆனால் பழையபடி அகலிகா அவன் மனைவியாக வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததில் இங்கே யாருக்கும் விருப்பமில்லை.. அந்த குட்டி குழந்தையும் கூட அவளை வெறுத்து ஒதுக்குமளவிற்கு மலையளவு குற்றசாட்டுகளுக்கு சொந்தக் காரியாய் இருக்கிறாள் அகலி..
வீட்டிலிருந்த அனைவராலும் ஏன் கணவனால் கூட ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள். அகலிகா.. அத்தனை உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு அவள் வாழ்வதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு..
"பலாமரக்கட்டைகளை கணக்கு போட்டு எடுத்து வச்சாச்சு.. நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன் கௌதமா.. நீ பட்டறைக்கு போய் மத்த வேலைகளை பாரு.." என்றார் மகனிடம்..
"இல்லப்பா எனக்கு கடைக்கு போற வேலை இருக்கு.. முடிச்சுட்டு பட்டறைக்கு போய் என்னன்னு பார்க்கிறேன்..!!" என்றவன் கட்டிலில் சாய்வாக அமர்ந்து.. வேதனையும் ஆற்றாமையுமாக வார்த்தைகள் வராமல் புலம்பிக் கொண்டிருந்த கார்த்திகா தேவியின் அருகே வந்து அவர் தோள் தொட்டான்..
"அம்மா.. தயவு செஞ்சு மனச கஷ்டப்படுத்திக்காதீங்க.. இனிமே அவ உங்க கண் முன்னாடி வராத மாதிரி நான் பாத்துக்கறேன்.." என்றான் இளகிய குரலில்..
கார்த்திகா தேவிக்கு மனம் சமாதானமடைய மறுக்கிறது..
"ஏன் கௌதமா..? ஏன் மறுபடி அவளை வீட்டுக்குள்ள விட்ட..!! ஏற்கனவே அவளால நாம பட்டதெல்லாம் பத்தாதா.. எல்லாம் மறந்து போச்சா உனக்கு..? தயவுசெஞ்சு அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடு.. இவ நமக்கு வேண்டாம்.." பாதி வார்த்தைகளை விழுங்கி தளர்வோடு சொன்னாள் கார்த்திகா..
"அம்மா நிதானமா இருங்க..!! எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.." அவன் சொல்லி முடிக்கும் முன்..
"என்ன பாத்துக்குவ.. எவன் கூடவா ஓடிப்போய் ரெண்டு வருஷம் குடும்பம் நடத்திட்டு திரும்பி வந்துருக்கா.. குடும்ப உறவுகளோட மதிப்பு தெரிஞ்ச எவளாச்சும் இப்படி ஒரு காரியத்தை செய்வாளா..? போறவன் வர்றவன் எல்லாம் என் காது படவே அசிங்கமா பேசுறான்.." நரேந்திரன் ஆற்றாமையோடு கொதித்தார்..
"அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டா மட்டும் இந்த பேச்சுக்கள் வராதா..? விடுங்கப்பா.. இது என்னோட பிரச்சினை.. நான் பாத்துக்கறேன்.." உணர்ச்சி இல்லாத கண்களோடு சொன்னான் கௌதமன்.. நரேந்திரனுக்கு அவன் முகம் பார்க்கவே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது..
"கௌதமா.. இவளால அசிங்கப்பட்டதெல்லாம் போதாதா.. இருக்கிற கொஞ்சநஞ்ச மானத்தையும் விட்டு தொலைக்கனும்னு முடிவு பண்ணிட்டியா.. பொம்பள புள்ளைய பெத்து வச்சிருக்க கௌதமா..!! அதுலயும் வாய் பேச முடியாத குழந்தை.. நாளைக்கு இவளால அந்த குழந்தையோட எதிர்காலம் பாழாகணுமா..?" என்றார் நரேந்திரன் கோபமாக..
"அப்பா தயவுசெஞ்சு.. இந்த விஷயத்தை இத்தோடு விட்டுடுங்க.. அவளை வீட்டுக்குள் அழைச்சிட்டு வந்தது நானு.. முடிவு என்னுடையது.. அதை நீங்க ஆதரிப்பீங்கன்னு நம்பினேன்.."
"எங்களால உங்க முடிவை ஆதரிக்க முடியல கௌதமா.. ஆனா உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நாங்க உன் முடிவை எதிர்க்கல.. ஏதாவது ஒரு தருணத்தில் உன் முடிவு தப்பாகிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு.. இவ விஷப் பாம்பு..!! கூட பிறந்த அண்ணன் கூட இவளை தலைமுழுக்கிட்டான்.. நீயும் தலையில தூக்கி வச்ச சுமக்கற"
"ஆமா கௌதமா.. அண்ணன் சொல்றது சரிதானே..!! இந்த ஒழுக்கங்கெட்ட சிறுக்கி பிறந்த வீட்டு பெருமையையும் புகுந்த வீட்டு மானத்தையும் காத்துல பறக்க விட்டுட்டு ஓடிப்போயிட்டா.. அந்த அவமானம் தாங்க முடியாம அவளோட அப்பா செத்தே போயிட்டான்.. இந்த வீட்ல மறுபடி இவ காலடி எடுத்து வச்ச நேரம்.. அண்ணிக்கு இப்படி ஒரு நிலைமை.. என் பொண்ணோட வாழ்க்கையும் வீணா போச்சுது.. இதுக்கு மேலயும் அவ இங்கதான் இருக்கனும்னு நீ பிடிவாதம் பிடிக்கறது எங்களுக்கு சரியா படல.." என்றாள் பூங்கொடி..
பதில் சொல்லாமல் கௌதமன் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டிருந்தான்..
அந்த குடும்பத்திலிருந்த அத்தனை பேருக்கும் ஒரு விஷயம் புரியவில்லை..
அவளால் கவுதமனுக்கு எத்தனை அவமானம்.. எத்தனை துயரங்கள்..
"கட்டின பொண்டாட்டி புருஷனை விட்டு இன்னொருத்தனோட ஓடி போறான்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.. அவனால அந்த பொண்ணை படுக்கையில திருப்தி படுத்த முடியல.. ஹாஹாஹா"
"குழந்தை இருக்கே சகல..!!"
"அடேய் குழந்தை உருவாக ரெண்டு நிமிஷ உழைப்பு போதும்.. இந்த உலகத்துல ஒரு பொண்ண முழுசா திருப்தி படுத்தினாத்தான் குழந்தை பிறக்கும்னா.. இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் வாரிசு இல்லாம அசிங்கப்படத்தான் வேணும்..!! "
அவன் காது கேட்கவே பேசிக் கொண்டார்கள்..
திருமணமான பின் கணவனால் கைவிடப்பட்டு தனித்து வாழும் பெண்ணுக்கு மட்டுமல்ல.. ஒரு ஆணையும் கூட இந்த சமூகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் வேதனையோடு உணர்ந்து கொண்டிருந்தான் கௌதமன்..
"நம்ம கௌதமன் சார் பெண்கள் விஷயத்துல எவ்வளவு கண்ணியமா ஒழுக்கமா நடந்துக்கிறார்.. நீயும் இருக்கியே..?"
"அவருக்கு பொண்டாட்டிய ஒழுங்கா பாத்துக்கவே துப்பு இல்ல.. வக்கில்லாத மனுஷன் அப்படித்தான் நடிச்சாகணும்..!! நான் சிங்கம்டி இஷ்டம் போல பூந்து விளையாடுவேன்.."
கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் பெண்ணுக்குள்ளான இப்படி ஒரு உரையாடலை அவன் கேட்க நேர்ந்தது.. இருவரையும் அழைத்து கண்டிக்க முடியும்..
இவனால முடியாதது என்னால முடியுது. அதான் வயித்தெரிச்சல்.. என்று இன்னொரு பேச்சு பரவும்.. வேலை விஷயத்தில் தவறு நேர்ந்தால் மட்டுமே அவர்களை கண்டிக்க முடியும்.. அவன் பிரச்சினையே இதயத்தை அறுத்துக் கொண்டிருக்க இவர்களிடம் எகிறுவதில் என்ன பயன்..
நல்லது கெட்டது காரியங்களுக்கு தலை காட்ட முடியாமல் அவன் மட்டுமல்ல அந்த குடும்பமே கூட்டுக்குள் அடைந்து கொண்டது..
பங்காளி வீட்டில் ஒரு பிரச்சனை என்று அவர்கள் வீடு தேடி வந்து நரேந்திரனிடம் பிரச்சனை செய்த போது.. குறுக்கே புகுந்து ஓங்கிய குரலோடு அவர்களை அடக்கி இருந்தான் கௌதமன்..
அவன் ஓங்குதாங்கான உடற்கட்டின் காரணமாய் அடங்கி.. அவ்விடம் விட்டு சென்றவர்களில் பங்காளியோ பகையாளியோ எவனோ ஒருவன் .. ஒரு கணம் நின்று.
"பொண்டாட்டிய ஒழுங்கா வச்சு காப்பாத்த துப்பில்லாத பொட்ட பைய.. இவனெல்லாம் எனக்கு அறிவுரை சொல்ல வந்துட்டான்.. நானா இருந்திருந்தா பொண்டாட்டி ஓடிப் போன அன்னைக்கே தூக்குல தொங்கியிருப்பேன்..!!" என்று அவன் காதில் விழ வேண்டும் என்று சத்தமாக பேசிய வார்த்தைகளும் அதனால் ஏற்பட்ட கைகலப்பும்..
என இந்த மூன்று வருடங்களாய் போராட்டங்களும் அவமானங்களும் வேதனைகளும்.. அவன் மனதை இறுக செய்து கல்லாக்கி இருந்தன..
அகலிகா வீட்டை விட்டு சென்றதால் அவன் பட்ட இன்னல்களை கண்கூடாக பார்த்தவர்கள் அந்த குடும்பத்தினர்..
இத்தனை மனக்காயங்களுக்கு பின்பும் அவளை எப்படி ஏற்றுக் கொண்டான் கௌதமன் என்பது அவர்களுக்கும் புரியாத புதிர்..!! அதற்கான பதிலை கேட்டு கேட்டு ஓய்ந்து போயினர்..
கண்ணீரோடு வந்து நின்றவளை துரத்தி விடாமல் மீண்டும் ஏற்றுக் கொண்டதற்கான காரணம் அவனுக்கே தெரியாத போது அவர்களுக்கு எப்படி விளக்க முடியும்..
அவள் மீதான அளவு கடந்த காதலா..? நிச்சயம் இல்லை.. தன்னை வேண்டாம் என்று அவமானப்படுத்தி உதறி தள்ளி சென்றவளின் மீது காதல் கரை கடந்து காணாமல் போயிருந்தது..
பிறகு அவளை ஏற்றுக் கொள்ள வேறென்ன காரணம் இருக்க முடியும்..
நேரடியாக அவன் பாதங்களில் விழுந்து சரணாகதி அடைந்திருந்தாளே..!!
அதுதான் காரணமா..!!
அன்றைய நாளில்..
தாலியை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று விட்டான் கௌதமன்.. கண்முன்னே நிற்பவளின் மென்னியை நெரித்து கொல்லுமளவிற்கு வெறியிருந்த போதிலும் இடைப்பட்ட சிலுவை காலங்களில் உணர்ச்சிகளை அடக்க பழகியிருந்த மனது.. அவனை சமன்படுத்தி நிதானமாக நிற்க வைத்தது..
அவன் கண்களின் அனலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் அகலிகா..
"இப்ப எதுக்காக இங்க வந்துருக்கா..!! புருஷனோட சின்ன குழந்தைய விட்டுட்டு இன்னொருத்தனோட ஓடிப்போனவளுக்கு இங்க என்ன வேலை.. இவளை திரும்பி போக சொல்லுங்க.. !!"
"அப்படியெல்லாம் போக சொல்ல முடியாது முறையா விவாகரத்து வாங்கல.."
"முத பொண்டாட்டி அனுமதி இல்லாம இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது.."
"அவதான் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே.. இப்ப வந்து கேஸ் கொடுத்தா செல்லுமா என்ன..?"
"புருஷன் கொடுமை படுத்துனதுனால வீட்டை விட்டு ஓடிப் போனேன்னு இந்த பொண்ணு ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. இந்த காலத்துல பொம்பளைங்க என்ன சொன்னாலும் உலகம் நம்புது. ஆம்பளைங்களுக்கு ஏதுய்யா மரியாதை.."
"முகூர்த்த நேரம் முடிய போகுது பேசி முடிவெடுங்க.."
"ஏம்மா எதுக்காக இங்க வந்த..? உன்னை கூட்டிட்டு போனவன் என்ன ஆனான்..?"
"இப்படி வரக்கூடாத நேரத்தில் வந்து கழுத்தறுக்கிறியே.. இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா..? போனவ அப்படியே போய் தொலைய வேண்டியதுதானே..!!"
"சரி வந்தது தான் வந்த.. உனக்கும் கௌதமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துட்டு இங்கிருந்து போயிடு.. அவனாச்சும் நல்லபடியா வாழ்ந்துட்டு போகட்டும்.."
"அதெப்படி..? அந்த பொண்ணு திரும்பி வந்திருக்கு.. அது என்ன சொல்லுதுன்னு முதல்ல கேளுங்க.. உங்க இஷ்டத்துக்கு ஆளாளுக்கு பேசாதீங்க..!!"
கூட்டத்தில் பெருந்தலைகள் சலசலத்துக் கொண்டிருக்க.. கௌதமன் மாலையை கழற்றி வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தான்..
"உள்ளே வா உன் கிட்ட பேசணும்.." என்றபடி தனி அறைக்கு செல்ல மௌனமாக அவன் பின்னால் நடந்தாள் அகலிகா..
நினைத்து பார்க்க முடியாத மிகப் பெரும் துரோகத்தால் கழுத்தறுத்துவிட்டு சென்றவளிடம் எப்படி நிதானமாக பேச முடிகிறது இவனால்.. மற்றவர்களுக்கு கௌதம் விளங்காத ஆச்சரியமாக தெரிந்தான்..
அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்திவிட்டு அவளை அழுத்தமாக பார்த்தான் கௌதம்..
உணர்ச்சிகளை தொலைத்த வறண்ட பார்வை.. கோபம் இல்லை.. சோகம் இல்லை.. கண்ணீர் இல்லை.. அந்த பார்வை அவளை வதைத்தது..
அகலிகா தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்..
பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறான் அழுத்தம் அதிகமாக இருக்கும்.. விளைவுகள் இந்த வகையில் வேண்டுமானாலும் வெளிப்படலாம்.. அனைத்திற்கும் தயாராகத்தான் வந்திருந்தாள்.. தலை தாழ்ந்து நின்றிருந்தாள்..
உணர்ச்சி துடைத்த முகத்தோடு ஒரே ஒரு கேள்வி..
"எதுக்காக இங்க வந்த..?"
"திரும்பி போய்டு.." என்று முடிக்கும் முன்னே.. முழங்காலிட்டு அவன் கால்களை பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள் அகலிகா..
"தப்பை உணர்ந்துட்டேன்.. கையில கிடைச்ச பொக்கிஷத்தை என் முட்டாள் தனத்தால இழந்துட்டேன்.. அருமை இப்ப புரியுது" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை நிர்மலமான கண்களோடு வெறித்துப் பார்த்தான்..
"முதல்ல எழுந்திரு" என்றான் அழுத்தமான குரலில்..
அகலிகா எழுந்து நின்றாள்..
அவன் கூர்மையான விழிகள் அகலிகாவை சில வினாடிகளாய் ஊடுருவின..
ஒரு காலத்தில் கண்மூடித்தனமாக மனைவியை நம்பி இருந்தவன் இப்போது அவள் வார்த்தைகளை தோற்றத்தை அளவிட்டான்.. ஆராய்ந்தான்..
"காலம் கடந்து போச்சு.. என் மனசுலயும் சரி இந்த வீட்லையும் சரி உனக்கு இடம் இல்லை.. நீ போகலாம்.." என்றான் என்றான் இறுகிய குரலில்..
சுற்றி இருந்தவர்கள் என்னென்ன பேசினார்களோ ஆனால் அவளை வதைக்கும்படி ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்..
அவ்வளவு ஏன்..? இத்தனை நாட்களாக யாரோடு இருந்தாய் எப்படி இருந்தாய்..? போன்ற என்ன விசாரணையும் இல்லை..
கையெடுத்து கும்பிட்டாள் அகலிகா..
"மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லைன்னு தெரியும்.. என் தரப்பை நியாயப்படுத்தி நான் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பல.. நான் செஞ்சது மிகப்பெரிய தப்பு.. அந்த தப்புக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்.. ஆனா அதுக்காக என்னை வீட்டை விட்டு அனுப்பிடாதீங்க.. எனக்கு என் குழந்தையோடு இருக்கணும்.." அவள் உதடுகள் நடுங்கின..
" பெத்த குழந்தை மேல ரொம்ப சீக்கிரம் அக்கறை வந்துருச்சே.. பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.." புருவங்களை வளைத்து நக்கலாக பார்த்தான்..
அவன் கேட்டதன் அர்த்தம் புரியாமல் இல்லை அவளுக்கு..
வறண்ட புன்னகை அவள் இதழ்களில்.. "காலம் கடந்து வந்த ஞானோதயம்.. என்ன செய்யறது அந்த பாழாய் போன மனசுக்கு ஜிகினா பேப்பர் எது வர்ணங்களை காட்டுற வானவில் எதுன்னு இப்பதானே தெரியுது.. எனக்கு தெரியும் உங்க மனைவியா வாழ எனக்கு எந்த தகுதியும் இல்லை.. சத்தியமா உங்களுக்கும் இந்துவுக்கும் கல்யாணம் நடக்க போற விஷயம் எனக்கு தெரியாது.. நான் இந்த கல்யாணத்தை நிறுத்த வரல.. எப்ப நான் தடம் மாறி போனேனோ அப்பவே உங்க கூட வாழறதுக்கான தகுதியை இழந்துட்டேன்.. சாகத்தான் போனேன்.. ஆனா.. ஒரு நம்பிக்கை துரோகியை.. யாருக்கும் உபயோகமில்லாத இந்த பாவியை மரணம் கூட மன்னிச்சு ஏத்துக்காது.." அகலி பேச முடியாமல் விம்மினாள்.. கௌதமன் அமைதியாக நின்றிருந்தான்..
"உ.. உங்க மனைவியா வேண்டாம்.. இந்த வீட்ல ஒரு வேலைக்காரியா ஒரு அடிமையா.. !! என் குழந்தையை பார்த்துக்கிட்டே.. வாழ்ந்துட்டு போயிடறேன்.." கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டாள் அவள்..
மார்பின் குறுக்கே கைகட்டிக்கொண்டு இறுகிய முகத்தோடு அவளை அழுத்தமாக பார்த்தான் கௌதமன்..
"என் குழந்தைக்கு அஞ்சு வயசு.. அவகிட்ட உன்னை நான் என்னன்னு அறிமுகப்படுத்தறது சொல்லு..?" என்று கேட்க பதில் சொல்ல இயலாமல் தடுமாறினாள் அகலிகா..
குழந்தைக்கு தாயின் முகம் பழகும் முன்னே வீட்டை விட்டு சென்றிருந்தாளே..!! இப்போது நன்கு வளர்ந்திருக்கும் விவரம் தெரிந்த பிள்ளையிடம் இவளை என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்த முடியும்..? அப்படியே அறிமுகப்படுத்தினாலும் அந்த குழந்தையின் மனதில் இடும் ஆயிரம் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது..!!
"நான் நல்ல புருஷனா இல்லாம இருந்திருக்கலாம் ஆனா.. என் குழந்தைக்கு நல்ல தகப்பன்.. எந்த விஷயமும் என் பாப்பா மனச பாதிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. அதனால நீ இங்கிருந்து போயிடு.." என்றான் சலனம் இல்லாத குரலில்..
அழுகையை விழுங்கியபடி அமைதியாக நின்றிருந்தாள் அகலிகா..
எத்தனை அமைதியாக சீற்றமில்லாமல் பேசுகிறான்.. இன்னொருத்தனாய் இருந்திருந்தால் வெட்டி கூறு போட்டிருப்பான்..
இந்த அமைதியும் பண்பும்தானே ஆண்மைக்கு இலக்கணமல்ல என்று உதறித் தள்ளிவிட்டு போனாய்.. அதே நிதானம் இப்போது இனிக்கிறதோ..!!" மனசாட்சி எள்ளி நகையாடுகிறது..
"நீ உன் வீட்டுக்கு போய்டு.. அதுதான் எல்லோருக்கும் நல்லது" என்றான் அமைதியான தொனியில்..
அகலிக்கு வேதனையிலும் சிரிப்பு.. உற்றவனே சேர்க்கவில்லை எனும்போது உடன்பிறந்தவன் எங்கனம் இரக்கம் காட்டுவான்.. அதுவும் அப்பாவும் தன்னால் மரித்துப் போன நிலையில் அண்ணன் தன்னை வெட்டிப் போட்டாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை..
சாக பயமில்லை.. ஆனால் தரங்கெட்டவள்.. வேசி.. துரோகி என்ற அவப் பெயரோடு மரணிக்க மனமில்லை.. அவளுக்கான நோக்கம் ஒன்றிருக்கிறது..
தன்னைப் போன்ற நம்பிக்கை துரோகியை ஏற்றுக் கொள்வது கடினம் தான்.. தான் செய்து வைத்திருக்கும் காரியம் சாதாரணமானது அல்ல.. எல்லாம் புரிகிறது.. ஆனாலும் கெளதமன்தான் அவள் கடைசி வெளிச்சப் புள்ளி.. என்று நம்பி வந்த நிலையில் அதுவும் பொய்த்து போனதே..!!
கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் அகலிகா.. வாழ்வதற்கான ஒரே நோக்கமும் மறுக்கப்பட்ட நிலையில் இனி செய்ய முடியும்.. வேறு வழியில்லை.. தன் கடைசி முடிவை தேடிக் கொள்வதாக உத்தேசம்..
தளர்ந்த நடையோடு சென்றவளை ஒரு நிமிஷம் என்று தடுத்து நிறுத்தினான் அவன்..
மறுபடி சாகப் போறியா..? அவன் கேள்விக்கு அமைதியாக இருந்தாள்..
எப்போதும் சரியான முடிவெடுக்கறதா உத்தேசமே இல்லையா..!!
அதற்கும் அவளிடம் பதிலில்லை..
சீறலான மூச்சோடு அவளருகே வந்தான்..
என்னோட வீட்டுக்கு வந்தாலும்.. என் மனைவிங்கற உரிமையோட உனக்கு பழையபடி எந்த மரியாதையும் கிடைக்காது.. பழைய சொகுசு வாழ்க்கை உனக்கு சொந்தமில்லை.. எல்லாரோட வெறுப்புகளுக்கும் ஆளாக நேரிடும்.. முக்கியமா என்கிட்ட இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்க கூடாது.. ஏன்னா என் மனசுலருந்து எப்பவோ உன்னை தூக்கி போட்டுட்டேன்.. என்று அவன் சொல்ல.. முதுகு காட்டி நின்றிருந்தவள் விழிகளை அழுத்தமாக மூடி திறந்தாள்..
நீ தந்த அவமானம் உள்ளுக்குள்ள எரிமலையா கொதிக்குது..!! அந்த கோபத்தோட தாக்கம் எப்ப வேணும்னாலும் உன் மேல வெடிக்கலாம்..
என்னால் ஏற்பட்ட கோபத்துக்கும் அவமானத்துக்கும்.. நானே வடிகால அமையறதுல எனக்கு சம்மதம்
நீ சொன்ன மாதிரி என் வீட்ல நீ ஒரு வேலைக்காரியா அடிமையாத்தான் வாழ முடியும்.. உனக்கு எந்த சம உரிமைகளும் கிடைக்காது.. சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் அப்படி வாழ விரும்ப மாட்டா.. உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.. அதுக்காக நான் உன்னை வதைக்க விரும்பல.. என்றான் அழுத்தமான குரலில்..
சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் இப்படி ஒரு தப்பு செஞ்சு தலை குனிஞ்சு நிக்க மாட்டா..!! நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன்..!! பக்கவாட்டாக திரும்பி பேசியவளை ஆழ்ந்து பார்த்தான் கௌதமன்..
இப்ப கூட உன்னை என் வீட்டுல சேர்த்துக்கறதா சொன்னதுக்கு காரணம்.. நீ எங்கேயாவது போய் உயிர மாச்சிக்கிட்டா அந்த குற்ற உணர்ச்சி கடைசி வரைக்கும் என்னை கொல்லாமல் கொல்லும்.. உன்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ள எனக்கு மனசு இல்ல.. அதே நேரத்தில் முழு மனசோடு உன்னை ஏத்துக்கல.. என்னை பொறுத்த வரைக்கும் ஒரு அகதிக்கு ஆதரவு தர்றேன் அவ்வளவுதான்..
அது போதும் என்றாள் அகலிகா..
இந்த நொடி வரை வரைக்கும் அவளது இரண்டு வருட சுயபுராணத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை.. அது அவனுக்கு தேவையும் இல்லை.. அவள் திருந்தி விட்டாள்.. வேறு வழியில்லாமல் நிற்கதியாக நிற்பவளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான் அவள் எண்ணம்..
வெளியே வந்தவன் அவலிக்காவை மனதார ஏற்றுக்கொண்டதாக அனைவரும் முன்னிலையிலும் சொன்னான்.. ஆனால் அது உண்மை இல்லை.. வேறு வழியும் இல்லை அப்படித்தான் சொல்லியாக வேண்டும்..
சண்டை சச்சரவுகளை தாண்டி இது என் முடிவு யாரும் தலையிட உரிமை இல்லை.. என்று இறுதியாக கூறி முடித்திருந்தவன்.. இந்திரஜாவிடம மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..
பூங்கொடி அழுதாள்..
என்ன செய்வது என்று தெரியாத நிலையில் குடும்பத்தின் ஒட்டுமொத்த கோபமும் அகலிகாவை உருக்கியது..
தொடரும்..

Last edited: