பாதியோட சொன்னா வருண் என்ன நினைப்பான்?.. தேம்பாக்கு ஹெல்ப் பண்ண வருண் நினைக்கும் போது, அதை அவ புரிஞ்சுகிட்டா தானே சொல்ல முயற்சிப்பா..தோட்டத்தில் வெண்மதி அவள் குழந்தைகள் ராஜேந்திரன் வருண் என அனைவரும் வட்ட மேஜையின் நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. திலோத்தமா அனைவருக்கும் பலகார தட்டுகளை எடுத்து வந்து கொண்டிருந்தாள்..
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பலகார தட்டுகளை விநியோகித்த திலோத்தமாவை வெண்மதி கவனிக்கத்தான் செய்தாள்..
திருமணமான புதிதில் வருணின் சகோதரிகள் இங்கு வரும்போது "வாங்க எப்படி இருக்கீங்க?" என்று சகஜமாக ஓரிரு வார்த்தைகள் பேசத்தான் செய்தாள்..
அக்கா தங்கை இருவரும் அடிக்கடி அடிக்கடி வந்து போன நிலையில்.. ஒருகட்டத்தில் அவள் முகம் கடுகடுவென்று நிறம் மாறிவிட்டது.. நடிப்பை தொடர முடியாமல் உண்மை குணம் வெளிப்பட எது கேட்டாலும் எரிந்து விழுவது வழக்கமாய் போனது..
சின்னவள் நிவேதா எதையும் பெரிது படுதுவதில்லை.. ஆனால் வெண்மதி அப்படியில்லை.. மனதிலிருப்பதை படபடவென கொட்டி தீர்த்து விடும் குணம் கொண்டவள்..
"ஏன் உன் பொண்டாட்டி நாங்க வந்தாலே முகத்தை தூக்கி வச்சுக்கறா..! அப்படி நாங்க என்ன பண்ணிட்டோம் அவளை.. இந்த வீட்டுக்கு நானும் நிவியும் வந்து போறது அவளுக்கு பிடிக்கலையா..! இதுதானே எங்க பிறந்தவீடு.. அம்மா வீட்டுக்கு வர எங்களுக்கு உரிமையில்லையா..? எது கேட்டாலும் முகத்துக்கு நேரா எடுத்தெறிஞ்சு பேசினா அப்புறம் எங்க மேல அவளுக்கு என்ன மரியாதை இருக்குது சொல்லு..!" வெண்மதி பிரச்சனையை ஊதி வெடிக்க முயல அதை புஸ்வானமாக்கும் பொறுப்பெல்லாம் சாரதாவையும் வருணையும் மட்டுமே சாரும்..
"அவளை விடுக்கா நீ என்னை மட்டும் பாரேன்..! பாவம் அவளுக்கு உடம்பு சரியில்லை போலிருக்குது. தலைவலியாம்..! ஐயோ அக்கா அவ குணமே அப்படித்தான்.."
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சமாதானங்கள்..!
திலோத்தமா தன் தம்பியின் மனைவியாக தங்களோடு வந்து சகஜமாக சிரித்து பேசி நெருக்கமாக பழக வேண்டும் என்று வெண்மதி விரும்புகிறாள்.. திலோத்தமா அவள் எண்ணத்திற்கு என்றுமே ஒத்துழைத்ததில்லை..
அக்கா தங்கை இருவருமாக வந்து வீடு களைகட்ட ஆரம்பித்தாலே நாசுக்காக அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்வாள்..
வந்திருக்கும் மகள்கள் இருவரும் தன் மருமகளை தவறாக நினைத்து குடும்பத்திற்குள் ஏதும் மனக்கசப்பு வந்துவிடக் கூடாதென சாரதா தான் திலோத்தமாவை வெளியே இழுத்து வந்து ஏதேனும் வேலை சொல்லி அவர்களோடு பழக வைத்து சூழ்நிலையை சகஜமாக முயலுவாள்..
அன்றும் அப்படித்தான்.. "இந்த தட்டையெல்லாம் அங்க வச்சுட்டு நீயும் போய் அவங்களோட உட்கார்ந்து சாப்பிடு..!" என்றுதான் சொல்லி அனுப்பி வைத்தாள்..
ஆனால் பலகார தட்டுகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்கு சென்று விட்டாள் திலோத்தமா.. வெண்மதியிடம் வந்த போது வாங்க என்று சொன்னதோடு சரி.. அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை..
"என்னடா இது? உன் பொண்டாட்டிக்கு என்னதான் பிரச்சனை.." வெண்மதி கேள்வியில் தீவிரமாக போனை பார்த்துக் கொண்டிருந்த வரூண் நிமிர்ந்தான்..
"நான் வர்றது அவளுக்கு பிடிக்கலையா.. உனக்கும் பிடிக்கலைன்னா சொல்லிடு.. நான் இனிமே இங்க வரவே மாட்டேன்.." கண்களில் நீர் தழும்பியது வெண்மதிக்கு..
வருண் அயர்ந்து போனான்.. எவ்வளவு சொன்னாலும் குடும்ப உறவுகளோடு ஒட்டாமல் சுயநலமாக தான் விருப்பப்பட்டதை மட்டுமே செய்யும் திலோத்தமா மீது கோபமாக வந்தது..
"அக்கா நான் தான் ஏற்கனவே சொன்னேனே அவளுக்கு உடம்பு சரியில்லை.. தவிர இங்க என்ன பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்குன்னு உனக்கு தெரியும் தானே.. பாவம் எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேக்கறதுனால அவளே நொந்து போயிருக்கா.. எங்க நீங்களும் ஏதாவது பேசி அவ மனசை நோகடிச்சிடுவீங்களோன்னு பயம்.. அதனாலதான் வெளியே வர மாட்டேங்கறா.."
"என்னடா இப்படி பேசற.. நான் எதுக்காக அவளை நோகடிக்க போறேன்.. நீங்க ரெண்டு பேரும் குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோஷமா வாழனும்னுதானே நானும் ஆசைப்படுறேன்..!"
"நான் சந்தோஷமா இருக்கணும்னு ஆசைபடுறதானே.. அப்ப சும்மா சும்மா அவளை பத்தி எதையாவது கேட்டு என்னை எரிச்சல் படுத்தறதை நிறுத்து..! அவ குணமே அப்படித்தான்.. நீ அவளை விட்டுட்டு உன் தம்பிய மட்டும் பாரு.. இதை எத்தனையோ முறை சொல்லிட்டேன்.." என்றபிறகு வெண்மதி வாய் திறக்கவில்லை..
இரவு அக்கா குழந்தைகள் அரட்டை என்று குடும்பத்தோடு நேரத்தை கழித்தான் வருண்..
தன் கணவனை பற்றி ஆயிரத்தெட்டு புகார்களை சொல்லி புலம்பி தள்ளினாள் வெண்மதி..
"விடுமுறையானா வீட்ல தங்கறது இல்ல.."
"சொல்லச் சொல்ல கேக்காம புது பிசினஸ் தொடங்கியிருக்கார்.. அதுல லாபமும் இல்ல ஒன்னும் இல்ல.. போட்ட பணத்தை எடுக்க முடியல.. நீ ஃபோன் அடிச்சு என்னன்னு கேளு வருண்.."
நன்றி கெட்ட அண்ணனுக்கு திரும்ப ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்திருக்கார்.. கேட்டதுக்கு கூட பிறந்தவனுக்கு உதவி செய்றது அவர் கடமைன்னு சொல்றார்.."
என்று தாய் தந்தையோடு தன் தம்பியையும் இழுத்து வைத்து புகார் சொல்லிக் கொண்டிருக்க.. ஏற்கனவே பலமுறை கேட்டு காதே புளித்து போன கதைகளை கேட்க சுவாசியமில்லாமல் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கடுப்பாய் அமர்ந்திருந்தான் வருண்..
"மாமாவை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுக்கா.. பாவம் அவரும் என்ன பண்ணுவார்.." என்று பரிந்து பேசிவிட்டால் போதும்.. மூக்கை சிந்திக் கொண்டு பழைய புகார்கள் அனைத்தும் தொல்பொருள் ஆராய்ச்சியாக தோண்டி எடுக்கப் படும்..
மனநல மருத்துவனாய் அவன் சிகிச்சை தெரப்பியெல்லாம் வெளியில் தான் செல்லுபடியாகிறது..
வீட்டுக்குள் உனக்கு ஒண்ணுமே தெரியல.. நான் சொல்றதை கேளு அப்பதான் உருப்படுவ என்று டாக்டருக்கே அறிவுரை சொல்லும் வினோத குடும்பம் இது..
இவள் ஒருவகை என்றால் நிவேதா வேறு வகை..!
மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணவனோடு சண்டை போட்டுக் கொண்டு வந்து பிறந்து வீட்டில் டேரா போட்டு செல்வாள்..
ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம்.. யாரும் சமாதானப்படுத்தி.. பஞ்சாயத்து வைத்து மன்னிப்பு கேட்டு அவளை திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமிருக்காது..
அவளே வருவாள்.. சில நாட்களுக்கு பின் கணவனோடு சமரசமாகி கோபம் தணிந்து அவறே திரும்பி சென்று விடுவாள்..!
"என்னடி நல்லா இருக்கியா உன் புருஷன் உன்னை சந்தோஷமா வச்சுக்கறாரா..!" என்று யாரேனும் கேட்டால் இரண்டு சகோதரிகளும் சொல்லும் பொதுவான ஒரே பதில்..
"ம்கூம்.. எங்க..?" என்று ஆதங்க குமுறல்கள் ஆரம்பிக்கும்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் பஞ்சு பஞ்சாய் வெடித்து சிதறும்..
இதனால் வருணுக்கு தான் அதிகபட்ச எரிச்சல் உண்டாகும்..
இருவரையுமே அவர்களது கணவர்மார்கள் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார் .. பிறகு ஏன் இந்தப் பெண்களுக்கு திருப்தி என்பதே இருப்பதில்லை..!
மொட்டை மாடியில் குழந்தைகளோடு வரிசையாக அனைவரும் படுத்துக்கொள்ள திலோத்தமா மட்டும் அறையில் தங்கி கொண்டாள்..
"என் வருணு! நீ சந்தோஷமா தான் இருக்கியா..!" பலமுறை கேட்ட கேள்வியை மீண்டும் ரீப்பிட் செய்தாள் வெண்மதி..
"ஏன் என் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்.. பார்த்தா தெரியலையா.. அம்மா நீங்களே சொல்லுங்க..!" பக்கத்தில் படுத்திருந்த அன்னையை உசுப்பினான் அவன்..
"சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல் ஆனா கடவுள் தான் இப்படி ஒரு..!" சொல்லி முடிப்பதற்குள்..
"போதும் மறுபடி ஆரம்பிச்சிடாதீங்க..! நான் சந்தோஷமா இருக்கணும்னா என் குறையை சுட்டிக்காட்டி பேசி என்னை டென்ஷனாக்கறதை என்று நிறுத்துங்க.." அவன் பேச்சில் பதறிப் போனார் சாரதா..
அதன்பிறகு எதுவும் பேசவில்லை..
ராஜேந்திரன் நிலாவை பார்த்து கதை சொல்லியபடியே வாயை பிளந்து குறட்டை விட்டு உறங்கிப் போயிருக்க.. அவரைப் பார்த்து சிரித்துக் கொண்ட பிள்ளைகள் மிச்ச கதையை சொல்லும்படி வருண்னை தொந்தரவு செய்தனர்..!
சில பல சலசலப்புகளுக்கு மத்தியில் அன்றைய நாள் நல்லபடியாகவே கழிந்தது..!
மறுநாள் தன் கிளினிகிற்க்கு புறப்பட்டான் வருண்..!
மற்றவர்கள் முன்னிலையில் அவனுக்கு உதவுவது போல் உணவு பரிமாறுவதை போல் நடித்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா..
"ப்ச்.. எதுவுமே ஒட்டல.! இந்த பொண்ணுக்கும் என் வருணுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லையே..! எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா..?" உள்ளுக்குள் முணுமுணுத்து ஏதோ பொருந்தாத உறவு போல் முகத்தை சுழித்தாள் வெண்மதி..
வருண் காரில் சென்று கொண்டிருக்கும் போது. அலைபேசியில் அழைப்பு..
திரையை பார்க்க தேம்ஸ் என்ற எழுத்துக்கள் அழைப்பை ஏற்றுக் கொள் அல்லது புறக்கணி என்ற பச்சை சிவப்பு போன் பொத்தான்களுடன் துள்ளி குதித்தது..
அந்த பெயரை கண்டதும் சட்டென்று வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்..
தேம்பாவணி என்ற மிக நீளமான பெயரை சேமிக்க சோம்பேறித்தனப் பட்டு தேம்ஸ் என்று டைப் செய்து வைத்திருக்கிறான்..
"ஹலோ.."
"டாக்டர் நான்.." அவள் முடிப்பதற்குள்..
"சொல்லு தேம்பாவணி!" என்றான் அவன்..
"எனக்கு உடனடியா உங்களை பாக்கணும்.."
"ஓகே கிளினிக் வந்துடுங்க பேசலாம்.."
"இல்ல டாக்டர் நினைச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்துக்கு என்னால வர முடியாது..! நாம ரெண்டு பேரும் வெளிய மீட் பண்ண முடியுமா..?"
இழுத்து மூச்சுவிட்டு சில கணங்கள் யோசித்தான் வருண்..
"டாக்டர்..?"
"லைன்ல இருக்கேன்.. சரி எங்க வரணும்னு சொல்லு..!"
அவள் இடத்தை சொல்ல.. "ஒகே.. கால் மணி நேரத்துல அங்க இருப்பேன்.. வந்த பிறகு மத்ததை பேசிக்கலாம் என்று அழைப்பை துண்டித்து விட்டு" அவள் சொன்ன இடத்திற்கு காரை செலுத்தினான்..
நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்கு வர முடியாது இந்த வார்த்தைகள் மட்டுமே அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன..!
"யாருமா உனக்கு கட்டுப்பாடு விதிக்கிறது.." உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கண்டறிய அவளை தேடிச் சென்றான்..
கூட்டமில்லாத அந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்த வருண் கண்களால் தேம்பாவணியை தேடினான்..
ஒரு மூலையில் புத்தகப் பையை நெஞ்சுக்கு குறுக்காக வைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்..
வழக்கம்போல் ஒரு குர்த்தியும் ஜீன்சும் அணிந்திருந்தாள்.. கூந்தலை முன்பக்கமாக விட்டு பின்னி ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள்.. நெற்றியில் பொட்டு இல்லை.. அலங்காரத்தில் சிரத்தை இல்லாமல் காதில் ஒரு பிளாஸ்டிக் கம்மல்.. சுடிதாரின் வட்ட கழுத்தில் அவள் தங்க தாலி தெளிவாக தெரிந்தது..
எதிரே வந்து அமர்ந்தான் வருண்..!
"வந்து ரொம்ப நேரமாகிடுச்சா" என்றான் புன்னகையோடு..
"இல்ல பத்து நிமிஷம் ஆச்சு..! எங்க வராம போயிடுவீங்களோனு பயந்துட்டே இருந்தேன்.."
"வர்றேன்னு சொல்லிட்டு அப்புறம் எப்படி வராம போவேன்..! சரி சொல்லு என்ன விஷயம்.. நான் சஜஸ்ட் செஞ்ச டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கிட்ட நீ போகலையாமே ஏன்..?" என்றபடியே முன் கைகட்டி கால்களை ஊன்றி வசதியாக அமர்ந்து கொண்டான்..
அதற்குள் வெயிட்டர் வந்துவிட..!
ஒரு வாட்டர் மெலன் ஒரு மொசாம்பி என தனக்கு தேவையானதை தனித்தனியே ஆர்டர் செய்து கொண்டனர் இருவரும்..
வெயிட்டர் சென்ற பிறகு மீண்டும் தேம்பாவணியை பார்த்தான்..
"இப்ப சொல்லு..!"
"ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போகணுங்குறதையே பலமுறை யோசிச்சுதான் முடிவெடுத்தேன்.. உங்ககிட்ட வர்றதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிச்சிருப்பேன்.. வந்த பிறகும் கூட திரும்பி போயிடலாமான்னு நினைச்சேன்.. மறுபடியும் இன்னொரு டாக்டரை ரெஃபர் பண்ணி.. புதுசா அவர் கிட்ட போற அளவுக்கு எனக்கு தைரியம் வரல.."
"ஏன் அப்படி? எதுக்காக பயப்படனும்..!"
"தெரியல ஜுரம் காய்ச்சல் தலைவலினா ஈஸியா டாக்டர்கிட்ட போயிடறோம்.. இந்த மாதிரி விஷயங்களுக்கு டாக்டரை கன்சல்ட் பண்றது ரொம்ப தயக்கமா இருக்கு.."
"ஆமா நான் உனக்கு போன் செஞ்சேனே..! ஏன் உன்னோட போன் சுவிட்ச் ஆஃப் ல இருந்தது.!"
"அது.. சார்ஜ்ல போட்டுருப்பேன்..! கவனிக்கலைன்னு
நினைக்கறேன்.." அவள் தடுமாற்றத்தை கவனித்தான் வருண்..
கல்லூரியிலிருந்து திரும்பி செல்லும் செல்லும் போது ஏதோ ஒரு ஞாபகத்தில் வேடிக்கை பார்த்த மேனிக்கு போனை எடுக்காமல் போன காரணத்தால் வீட்டுக்கு வந்த பிறகு சத்யா கோபத்தில் அலைபேசியை பிடுங்கி கீழே போட்டு உடைத்த விஷயத்தை சொல்ல முடியவில்லை..!
அந்த போன் அதற்கு மேல் எதற்குமே உதவாமல் போனது.. மறுநாள் காலையில் புத்தம் புதிய போன் வேலைக்காரம்மாவின் மூலம் அவளை தேடி வந்திருந்தது..!
"சரி நினைச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்துக்கு வர முடியாதுன்னு சொன்னியே..! ஏன்மா உங்க வீட்ல யாராவது உன்னை கட்டுப்படுத்துறாங்களா.." அவள் முகத்தை கூர்மையாக ஆராய்ந்தான் வருண்..
"ச்சே..! அப்படியெல்லாம் எங்க வீட்ல எனக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.. கல்யாணமான பொண்ணு ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரை பார்க்க போறான்னு யாருக்காவது தெரிஞ்சுட்டா அது அவமானம் இல்லையா..! என்னை பைத்தியம்னு நினைக்க மாட்டாங்களா..? அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார் சத்யா கேட்கவே வேண்டாம்..'
"ஓஹோ அதனாலதான் இப்படி ரகசியமா பார்க்கலாம்னு சொன்னியோ..?"
"ம்ம்..!"
"உடம்பு மாதிரிதான மனசும்..? மனசை ஆரோக்கியமா வைச்சுக்க டாக்டரை பாக்கறதுல தப்பில்லையே..! சரி இப்ப எதுக்காக என்னை வர சொன்னே..? விஷயத்தை சொல்லு.."
"என்னோட இமேஜனரி ஃபிரண்டை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுமா..!" பரிதாபமாக கேட்டவளை கண்கள் சுருக்கி கூர்ந்து பார்த்தான் வருண்..
"ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க டாக்டர்..! அவன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியல..! என் பப்லுவை ரொம்ப மிஸ் பண்றேன்.."
சொல்லிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் ஜூஸ் வந்தது..
வெயிட்டர் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் குரலை செருமிக் கொண்டு தேம்பாவணியை பார்த்தான்..
"லிசன்.. சிலபேர் இமேஜினரி பர்சனை உண்மைன்னு நம்பி தனக்கு தானே ஒரு உலகத்தை உருவாக்கிப்பாங்க.. அது ஒரு விதமான மனச்சதைவு நோய்.. ஆனா நீ அப்படி இல்லை.. உனக்கு கம்பானியனா இருக்கற அந்த நபர் ஒரு கற்பனைன்னு உனக்கே புரியுது..! சோ யூ ஆர் பர்பெக்ட்லி நார்மல்.. அப்புறம் எதுக்காக கற்பனையில ஒரு ஃபிரண்டை உனக்காக தேடுற..?"
"என் மனசுல இருக்குறதையெல்லாம் வெளிப்படையா ஷேர் பண்ணிக்கறதுக்கு..!"
"தேம்பாவணி.. உன் மைன்ட்டுக்குள்ள என்ன ஓடுது நீ ஓப்பனா பேசினாத்தான் என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்.."
"நீங்க என்னோட ஃபிரண்ட மட்டும் திருப்பி கொண்டு வாங்க.. என் மைண்டுக்குள்ள என்ன ஓடுதுன்னு நான் அவன் கிட்ட சொல்லிக்கறேன்.."
வருண் இழுத்து மூச்சு விட்டான்..
"எதுக்காக ஒரு வட்டத்துக்குள்ள சுருங்கி கற்பனையா ஒரு தோழனை தேடிக்கிட்டு இருக்க.. வெளி உலகத்துல நிறைய மனுஷங்க இருக்காங்க.. அவங்களோட பழகலாமே.. உனக்குள்ள ஏதோ ஒரு பயம் இருக்கு அது போகணும்னா கண்டிப்பா மனுஷங்களோட நீ சகஜமா பழகித்தான் ஆகணும்..!
"இனிமே எங்க வீட்டுக்கு வராதே தேம்பா.. தேவையில்லாம உங்க அப்பா இங்க வந்து கத்திட்டு போறாரு.. என் அண்ணனை உன் கூட கோர்த்துவிட்டு ஆடம்பரமாக வாழறதுக்காக நாக்க தொங்க போட்டுகிட்டு அலையுறோமாம்.. உன் அப்பா சொல்லிட்டு போறாரு.."
"ப்ளீஸ் தேம்பாவணி.. நீ நல்ல பொண்ணாதான் இருக்க.. ஆனா உன் அப்பா சரியில்ல.. வீட்டு வாசல்ல நின்னு தேவையில்லாம அசிங்கமா கத்தறார்.. என் பொண்ணையும் உன்னையும் சேர்த்து அசிங்கமா.. ச்சே.. எல்லாரும் எங்களையே பார்க்கறாங்க.. இனிமே இங்க வராதே..!"
அக்கம் பக்கத்தில்தான் இப்படி என்றால்..
அவள் பக்கத்தில் வந்தாலே விலகி போகும் தோழியர் கூட்டம்..
"தேம்பாவணி நான் சொல்றேன்னு கோவிச்சுக்காத.. எங்களுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஆனா உன்னோட அப்பா நாங்க ஏதோ ஆதாயம் எதிர்பார்த்து உன்கிட்ட பழகற மாதிரி எங்களை துருவி துருவி விசாரிக்கிறார்.. அவர் எங்களை பயமுறுத்துற மாதிரி தெரியுது.. நீங்க ரொம்ப பெரிய இடம்.. எங்களுக்கு எதுக்கு வம்பு.. ப்ளீஸ் இனிமே என்கிட்ட பேசாதே..!"
மொத்தத்தில் எல்லாரையும் விலக்கிவிட்டு அவளை தனிமை சிறைக்குள் தள்ளியிருந்தான் கேஷவ் குமார்..!
"தேம்பாவணி..!" அவள் முகத்திற்கு முன் சொடுக்கு போட்டு அழைத்தான் வருண்..
"ஹான்..?" நிமிர்ந்து பார்த்தாள் தேம்பாவணி..
"நான் கேட்டது உன் காதுல விழலையா..?"
"டாக்டர் எனக்கு மனுஷங்களோட பழகறதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல.. இங்க எல்லாரும் ஒவ்வொரு விதம். யாருமே நல்லவங்க இல்ல.. யாரையும் நம்ப முடியல.. எனக்கு யாரையும் பிடிக்கல.. எனக்கு என்னோட ஃபிரண்டு மட்டும் போதும்..!" என்றவளை வருனின் கண்கள் ஒரு சில கணங்கள் துளைத்தடுத்தன..
"உன் அப்பாவும் உன் ஹஸ்பண்ட்டும் உன்னை நல்லா பார்த்துக்கிறார்களா..?"
"நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.. என் அப்பாவ மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. சத்யா ரொம்ப ஃப்ரெண்ட்லி.. அவங்கள பத்தி குறை சொல்ல எதுவுமே இல்லை.."
"அப்போ சின்ன வயசுல உன் மனச பாதிக்கிற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்ததா..?'
"இல்லையே நான் ரொம்ப சந்தோஷமாதான் இருக்கேன்.."
"அப்புறம் எதுக்காக கற்பனையா ஒரு ஆளை தேடணும்.. தேம்பாவணி உனக்கு என்ன வேணும்னு புரியுதா..! கற்பனையா ஒரு உருவம் அது உன் மூளையை பொறுத்த வரைக்கும் நிஜமா இருக்கணும்னு எதிர்பார்க்கிற.. அதாவது உன்னை நீயே ஏமாத்திக்கணும்னு..!"
ம்ம்..! என தலையசைத்து தலை குனிந்தாள் தேம்பாவணி..
"உன் மனசுக்குள்ள ஏதோ சொல்ல முடியாத பிரச்சனை இருக்கு.. உனக்கு சொல்ல தயக்கமா இருந்தா நாம வேணா ஒரு ஹிப்னாடிக் செஷன் போகலாம்.. அதுவும் நீ விருப்பப்பட்டா மட்டும்தான்.. உன் ஆழ்மன பயத்தையெல்லாம் போக்கி தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் தெளிவும் கிடைக்கிறதுக்கு இந்த செஷன் உதவியாயிருக்கும்.."
"வேண்டாம் வேண்டாம்.. அதெல்லாம் எனக்கு தேவையில்லை..! நான் கேட்டதை மட்டும் உங்களால் கொடுக்க முடிஞ்சா குடுங்க.. இல்லனா எனக்கு எதுவும் வேண்டாம்.."
வருண் சிரித்தான்..
"நீ கேட்கற விஷயமே முன்னுக்கு பின் முரணா இருக்கே தேம்பாவணி..! எல்லாரும் தெளிவா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க ஆனா நீ குழம்பி போகணும்னு நினைக்கற..! சரி விடு இப்போ உனக்கு தேவை ஒரு நம்பிக்கையான ஃபிரண்டு தானே..!"
"ஆமா..!"
"இந்த நிமிஷத்திலிருந்து என்னை உன்னோட ஃபிரண்டா நினைச்சுக்கோ.. நீ உன்னோட இமேஜினரி பிரண்டு கிட்ட எதையெல்லாம் ஷேர் பண்ணுவியோ அதை நீ என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்..! கமான் லெட்ஸ் பி ஃபிரெண்ட்ஸ்" அவன் இரு கைகளை விரித்து நீட்ட..
இல்லை என்று தலையசைத்தாள் தேம்பாவணி..
"ஏன்..?" அவன் புருவங்களை சுருக்கினான்..
"ஏன்னா நீங்க ஒரு நிஜம்.. என்னோட அந்தரங்கமான விஷயங்களை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது.."
"பட் டாக்டர்கிட்ட எதையும் மறைக்க கூடாது தெரியுமா..?"
"இப்பதான் என்னோட ஃபிரண்டா இருப்பேன்னு சொன்னீங்க..?"
அவள் கேள்வியில் சட்டென புன்னகைத்து தாடையை நீவினான் வருண்..
"என்னையே மடக்கறே.. சரி இப்ப என்ன பண்ணலாம் நீயே சொல்லு..! என்னால உன்னோட இமேஜினரி ஃபிரண்டை திரும்ப கொண்டு வர முடியாது.. ஆனா உன் கண் முன்னாடி இருக்கற உனக்கு நம்பிக்கையான ஒருத்தரை உன் நண்பனா தேர்ந்தெடுக்கலாம்.." புருவங்களை ஏற்றி இறக்கினான் வருண்..
"நேரமாச்சு நான் கிளம்பனும்.."
"நீ என்கிட்ட எதையுமே தெளிவா சொல்லலையே தேம்பாவணி."
"சொல்ற அளவுக்கு எதுவும் இல்லையே நான் புறப்படறேன்.." என்று எழுந்தவள் மீண்டும் அமர்ந்து "ஒரு விஷயம் கேட்கணும்" என்றாள் தயக்கமாக..
'சொல்லுமா..!"
"அது நைட்ல பெட்ல..!"
"என்ன விஷயம் தயங்காம சொல்லு.."
தடுமாறிய விழிகளோடு.. "இல்ல.. ஒன்னும் இல்ல டாக்டர்.." என்று விட்டு புத்தகப் பையோடு அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றவளை குழப்பத்தோடு வெறித்தான் வருண்..
தொடரும்..
😞😞😞😞😞தோட்டத்தில் வெண்மதி அவள் குழந்தைகள் ராஜேந்திரன் வருண் என அனைவரும் வட்ட மேஜையின் நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. திலோத்தமா அனைவருக்கும் பலகார தட்டுகளை எடுத்து வந்து கொண்டிருந்தாள்..