- Joined
- Jan 10, 2023
- Messages
- 102
- Thread Author
- #1
"மேடம் தயவு செஞ்சு இங்கருந்து கிளம்புங்க..! நீங்க ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.." கொஞ்சம் தயங்கி மெதுவாய் ஆரம்பித்தான் தர்மன்..
"நியாயம் கிடைக்காம நான் இங்கிருந்து போக மாட்டேன்.." அழுத்தமாக கண்களை மூடி திறந்தாள் சுப்ரியா..
"நியாயம் என்ன கொத்து பரோட்டாவா.. ஆர்டர் செஞ்ச உடனே பத்து நிமிஷத்துல உங்க டேபிளில்ல கொண்டு வந்து வைக்கிறதுக்கு..!"
நிமிர்ந்து வெறுமையான கண்களோடு அவனைப் பார்த்தாள்.
"அதான் டாக்டர்ட்ட பேசி இருக்கீங்களே.. அவங்கதான் விசாரிச்சு சொல்றேன்னு சொன்னாங்க இல்லையா..! கண்டிப்பா நாளைக்கு உங்களுக்கு பதில் சொல்லுவாங்க..! நீங்க இப்படி பிடிவாதம் பிடிச்சு தகராறு செஞ்சா உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதிலும் நீதியும் கிடைக்காமலே கூட போகலாம்..! மேனேஜ்மென்ட் எந்த லெவலுக்கும் இறங்குவாங்க..! பேசற விதத்தில பேசி காரியத்தை சாதிச்சுக்கணும்..! நான் சொல்றேன்ல இப்போ போங்க..!"
"ஓஹோ மேனேஜ்மென்ட் சார்பா பேசுறீங்களோ..! பேச்சுவார்த்தை நடத்த சொல்லி அனுப்பி வச்சாங்களா..?" அவள் குரல் தழுதழுப்போடு கனன்றது
இடுப்பில் ஒரு கையும் நெற்றியில் ஒரு கையுமாக வைத்து கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான் தர்மன்..
"இங்க பாருங்க.. எனக்கும் உங்க விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..! அப்படியே பேச்சுவார்த்தை நடத்தணும்னு முடிவு செஞ்சாலும் என்ன மாதிரி லாஸ்ட் கிரேட் ஒர்க்கரை பேச சொல்லி அனுப்பி வைக்க மாட்டாங்க..! டாக்டர் தான் உங்களை கூப்பிட்டு பேசுவார்.. ஹாஸ்பிடல்ல வேலை செய்றவங்களாகவே இருந்தாலும் தேவையானவங்களை தவிர மத்தவங்க யாரும் இந்த நேரத்துல வளாகத்துக்குள்ள இருக்க முடியாது.. இதுக்கு மேல நீங்க இங்க இருந்தா செக்யூரிட்டி வாய்க்கு வந்தபடி பேசுவார்.. தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க.."
"நானா பிரச்சனை பண்றேன்..? உங்க ஹாஸ்பிடலால வந்த பிரச்சனையை சமாளிக்க முடியாம எல்லாத்தையும் இழந்து இங்க உக்காந்திருக்கேன்..!
"எனக்கு புரியுதுங்க.. ஆனா உங்க தரப்பு நியாயத்தை புரிய வைக்க இது நேரம் கிடையாது..! சொன்னா கேளுங்க..!" என்றதும் நீண்டதாய் பெருமூச்சுவிட்டு கையிலிருந்த கவரோடு எழுந்து கொண்டாள் சுப்ரியா..!
தளர்ந்து அடிமேல் அடி வைத்து நடந்து சென்று ஒரு மரத்தை பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட..
"எங்க போவீங்க..! யார் வீட்ல தங்குவீங்க.. உங்க சொந்தக்காரங்க யாராவது இங்க இருக்காங்களா..?" அவன் கேள்வியில் தன்னைப் பற்றிய நிறைய விஷயம் அவனுக்கு தெரிந்திருக்கிறது என்ற உண்மையில் வெறுப்புதான் மிஞ்சியது..
"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்..! உங்க வேலைய பாருங்க.." நறுக்கென உரைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்றாள் சுப்ரியா..!
அவளைத் தொடர்ந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை தாண்டி வெளியே வந்தவன் சுப்ரியா நடந்து செல்வதை பார்த்து..
"திரும்பத் திரும்ப உங்ககிட்ட வந்து பேசறேன்னு என்னை தப்பா நினைச்சுக்காதீங்க..! நீங்க எங்க போகணும்னு சொன்னா உங்கள கொண்டு போய் அங்க விட்டுட்டு.."
"தேவையில்லை சார்.. உங்க வேலைய பாருங்க..! டார்ச்சர் பண்ணாதீங்க..!" அவள் வெறுப்பும் சலிப்புமாக சொல்ல தலையசைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் தர்மன்..
எதிரே இருந்த பேருந்து நிலையத்தில் சென்று அமர்ந்தவள் கசப்பான நினைவுகளோடு பின்னோக்கி சென்றாள்..
"ராஜேஷ் உங்க கூட கொஞ்சம் பேசணும்..!"
"இந்த வீட்ல யாருக்கும் என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க..! என்னை பாத்தாலே உங்க அண்ணி அறைக்குள்ள போய் கதவை சாதிக்கறாங்க.. உங்கம்மா எதையும் என்னை தொடவிட மாட்டேங்கிறாங்க.. ரிப்போர்ட் நெகடிவ்னு வந்துடுச்சு.. இன்னமும் ஏன் இந்த ஒதுக்கம். என் குடும்பமே என்னை ஆதரிக்கலைன்னா நான் யார் கிட்ட போய் நியாயம் கேட்க முடியும்..! நீங்களே என்கிட்ட பேசி ஒரு வாரமாச்சு.." அவள் கண்ணீரை அசட்டை செய்தவனாக..
"முதல்ல நீ வா இப்படி..! நானுமே உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று அறைக்குள் இழுத்து சென்று கதவை சாத்தினான் ராஜேஷ்.. அவளைத் தொட்ட கை தீட்டுப்பட்டதாக பின்னால் இழுத்துக் கொண்டவன்..
"இந்த சேர்ல உட்காரு..!" என்று அவளை தனி இருக்கையில் அமர வைத்துவிட்டு சுவற்றோரம் சாய்ந்து கைகட்டி நின்றான்..
"வீட்ல இருக்கறவங்க எல்லாரும் ரொம்ப அன்கம்பேர்டபுளா ஃபீல் பண்றாங்க பிரியா..!"
"ஏ..ஏன்..?"
"ஏன்னு உனக்கு தெரியாத மாதிரி கேட்கற..? உனக்கு வந்த வியாதியால எங்க யாராலயும் வெளியே தலை காட்ட முடியல..!" எரிச்சலாக முகத்தை திருப்பிக் கொண்டான்..
அடிபட்ட பார்வை பார்த்தாள் சுப்ரியா.. அவன் வார்த்தைகள் பெரிய சம்மட்டியாய் தாக்கி இதயம் நொறுங்கி போனது..
"எனக்கு எந்த வியாதியும் இல்ல ராஜேஷ்.. அப்படியே இருந்தாலும் இதுல உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க.."
"ஏய் என்னை எதுக்காக இதுல சம்பந்த படுத்துற..! என் உடம்பும் ரத்தமும் சுத்தமாத்தான் இருக்கு.. அதுக்கு இந்த மெடிக்கல் ரிப்போர்ட்தான் சாட்சி.. அப்படியே எனக்கு வியாதி வந்தாலும் அது உன் மூலமாதான் வரனும்.."
"அதே மெடிக்கல் ரிப்போர்ட்லதான் எனக்கும் நெகட்டிவ் வந்திருக்கு..!"
"ஆனா அதுக்கு முன்னாடி பாசிடிவ்னு வந்திருச்சே..! அதென்ன கணக்கு.. ஒரே ரத்தம் எப்படி மாறி மாறி ரிசல்ட் வரும்..! ஹாஸ்பிடல்ல உனக்கு தெரிஞ்சவங்கள வச்சு சரிகட்டி நெகட்டிவ்ன்னு ரிப்போர்ட் வாங்கிட்டியா என்ன..?"
"வாய்க்கு வந்தபடி பேசாதீங்க ராஜேஷ்.. எனக்கந்த ஹாஸ்பிடல்ல யாரை தெரியும்..!"
"உங்க குடும்பம்தான் பெரிய ராஜ வம்சமாச்சே.. உன்ன தெரியாதவங்க இந்த உலகத்துல யாராவது இருப்பாங்களா என்ன..?"
"ஏன் இப்ப சம்பந்தமே இல்லாம என் குடும்பத்தை இழுக்கறிங்க..! சுத்தி வளச்சு பேசாம நேரடியா விஷயத்துக்கு வாங்க..!"
மூச்சை இழுத்துக் கொண்டு எச்சில் விழுங்கியவன்..
"இதுக்கு மேல உன் கூட வாழ முடியும்னு தோணல சுப்ரியா..!" என்றான் அந்நியமான குரலில்..
சுப்ரியா இருக்கையிலிருந்து எழுந்தாள்..
"என்ன.. என்ன சொன்னீங்க..!"
"நாம விவாகரத்து பண்ணிக்கலாம் பிரிஞ்சிடலாம்.. திஸ் இஸ் ஓவர்.."
"இல்ல ஒரு நிமிஷம்.. நீங்க சொல்றது எனக்கு புரியல."
நிதானமாக இருக்கத்தான் முயற்சித்தாள்.. ஆனால் முடியவில்லை..
"இங்க பாரு சுப்ரியா.. நான் சொல்றதை தெளிவா கேட்டுக்கோ..! உண்மையோ இல்லையோ ஆனா பாசிட்டிவ்னு ரிப்போர்ட் பார்த்த பிறகு என்னால உன்கிட்ட நெருங்க முடியல.. ஒரு மாதிரி அருவருப்பா இருக்கு..! உன்னை தொட்டாலே என் உடம்பெல்லாம் சொரி சிரங்கு வந்த மாதிரி கண்டபடி கற்பனை போகுது.."
சொறி சிரங்கா..? முகம் இன்னும் சிறுத்து போனது..
"எ.. என்ன பேசறீங்க..! எச்ஐவி தொட்டா ஒட்டிக்கற வியாதி ஒன்னும் இல்ல.. சொல்லப்போனா எனக்கு எந்த வியாதியும் இல்லை.. நான் நல்லாத்தான் இருக்கேன் இன்னும் எத்தனை மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கி தரணும் உங்களுக்கு..!"
"நீ எத்தனை ரிப்போர்ட் வாங்கி தந்தாலும் எனக்கு தேவையில்லை.. அக்கம் பக்கம் முழுக்க செய்தி பரவியாச்சு..! குடும்ப மானம் காத்துல பறக்குது.. அம்மா அழறாங்க.. அப்பா வெளிய காலெடுத்து வைக்க முடியலன்னு என்னை திட்டி தீர்க்கறார்..! உன்னால இத்தனை பேர் கஷ்டப்படணுமா..?"
"இது ஒன்னும் விளையாட்டு இல்ல ராஜேஷ்.. என்னை அபாண்டமா தண்டிக்கறீங்க.. அம்மா அப்பாவை விட்டுட்டு நீங்க மட்டும் தான் உலகம்னு உங்களை நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லணும்.." கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது..
"ஏய்.. என்ன சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்க..! என்னது.. நான் மட்டும் தான் உலகம்னு நம்புனியா.. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி அம்மாகூட மார்க்கெட் போகும்போது ஏதோ ஒரு ஆம்பள கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தியாமே..! அம்மா சொன்னாங்க.."
"அடப்பாவி..! அவன் என்னோட கிளாஸ்மேட்.. ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம்.. ஸ்கூல் டைம்ல நான் அவன்கிட்ட பேசினதே இல்லை.. ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததால அடையாளம் கண்டுபிடிச்சு என்கிட்ட ரெண்டு வார்த்தை பேசினது தப்பா..! இத்தனை நாள் அத மனசுல வச்சுகிட்டு எப்ப பிரச்சனை பண்ணலாம்னு காத்திருந்தீங்களா..?"
"பிரச்சனை பண்றது நாங்க இல்ல நீதான்..! இந்த மாதிரி உன் பொண்டாட்டிக்கு எத்தனை ஆம்பளைங்களோட பழக்கம் இருக்கு..! அன்னிய ஆம்பளையோட நடுத்தெருவில நின்னு ஊர் உலகம் பாக்குதுன்னு கூட தெரியாம சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த இவளுக்கெல்லாம் வியாதி வந்ததுல ஆச்சரியமே இல்லைன்னு சொல்றாங்க..! இந்த அளவுல இருக்கு உன் லட்சணம்.."
விலக்கி வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு காரணத்தை தேடுகிறார்கள் என்று புரிந்து விட்டது.. ஆனாலும் தன் ஒழுக்கத்தை குறிவைத்து குறை சொல்லுவது.. அதுவும் கட்டிய கணவனே பழி போடுவதில் நெஞ்சமெல்லாம் நெருப்பெரியும் ரணம்..
"அபாண்டமா பேசற உங்க நாக்கெல்லாம் அழுகிதான் போகும்.. அவங்க பேசினாங்களா இல்ல அவங்கள பேசவிட்டு நீ வேடிக்கை பார்த்தியா..!
"என்னடி நீ வா போன்னு மரியாதை குறையுது.. வாயை ஒடச்சிடுவேன் ஆமா..! இங்க பாரு.. நீ இந்த வீட்ல இருக்கறதுல யாருக்கும் இஷ்டம் இல்லை..! நோய் முத்தி போய் படுத்த படுக்கையானா உனக்கு பணிவிடை செய்யவும் யாரும் இங்க தயாரா இல்லை..!"
"எனக்கு எந்த நோயும் இல்லை என்று சொல்லி சொல்லி அலுத்து போனாள் சுப்ரியா.."
"சரி அப்ப வாங்க தனி குடுத்தனம் போய்டுவோம்.."
"என் அம்மா அப்பாவை விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்..! போதும் ஒருமுறை அவங்களை எதிர்த்துகிட்டு நான் செஞ்ச தப்பே போதும்..! இனி அவங்க பேச்சைக் கேட்டு நடக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..
"ஏன் முடிவு பண்ண மாட்டீங்க.. உங்க தேவை தீர்ந்து போச்சு..! என் மேல வச்சிருந்த மோகம் சலிச்சு போச்சு.. இன்னொருத்தியை சேர்த்துக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க..! அதான் தேவையில்லாத காரணத்தை சொல்லி என்னை ஒதுக்கி வைக்கணும்னு நினைக்கறீங்க.. இதுக்கு உங்க அம்மாவும் உடந்த.." ஆக்ரோஷமாக கத்தினாள் சுப்ரியா..
"ஏய் தேவையில்லாம எதுக்காக என்னை இழுக்கற..! ஆமா நான்தான் சொன்னேன்.. என் பையன் இப்படி தினம் கஷ்டப்படறத என்னால பாக்க முடியல..!" கதவை சடாரென திறந்து கொண்டு அத்து மீறி அறைக்குள் நுழைந்தாள் ராஜேஷின் தாய் சுப்ரியா..
"நோய் வந்த ஒருத்தியை சகிச்சுக்கிட்டு குடும்பம் நடத்தணும்னு அவனுக்கென்ன தலைவிதியா."
"எனக்கு எந்த நோயும் இல்லை" பற்களை கடித்தாள் சுப்ரியா..
"ரிப்போர்ட் பொய் சொல்லுமா..?"
"இந்த ரிப்போர்ட் உண்மையை சொல்லுதே.. இதுல நெகட்டிவ் தானே வந்திருக்கு.."
"மாறி மாறி வருதுனா ஏதோ கோல்மால் நடந்திருக்குன்னு தானே அர்த்தம்.. இதை கூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நாங்க ஒன்னும் முட்டாள் இல்ல.. உன் இரத்தத்தில் ஏதோ அசுத்தம் இருக்கு..! உன்ன கட்டிக்கிட்ட பாவத்துக்கு மருந்து சிகிச்சைன்னு என் புள்ள தண்டம் அழ முடியாது.. லட்ச லட்சமா நகையும் சீர்வரிசையுமா கொண்டு வர்ற பொண்ணுங்களுக்கே இந்த காலத்துல புகுந்த வீட்ல மதிப்பு இருக்கிறதில்ல..! ஒரு குண்டுமணி தங்கம் கூட கொண்டு வராத உன்னை இத்தனை நாள் வீட்டுல வச்சு கஞ்சி ஊத்துனதே பெரிய விஷயம்.. தாலி கட்டி வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரும்போதே சொன்னேன்.. இது வேண்டாம்.. கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வந்துரு.. நல்ல சொத்துள்ள பொண்ணா பாத்து உனக்கு கட்டி வைக்கிறேன்னு.. இவன் கேட்டா தானே..!"
"உங்க புள்ளைய கட்டிக்காம போயிருந்தா.. நானும் கூட இந்நேரம் நல்லா இருந்திருப்பேன்.. எனக்கும் நல்ல குணமுள்ள பையனா பார்த்து எங்க வீட்டுல கல்யாணம் பண்ணி வச்சிருந்திருப்பாங்க.. என் வாழ்க்கை இப்படி நாசமா போயிருக்காது.."
அவள் பதிலில் ஆடிப் போனவளாய் மகனை பார்த்தாள் சுகுணா..
"ஏய் என்ன சொன்ன..!" சுவற்றோடு சாய்ந்திருந்தவன் ஆக்ரோஷமாக பிரிந்து வந்தான்..
"அப்ப நான் குணங் கெட்ட நாய்னு சொல்றியா..? "
"அம்மா பேச்சை கேட்டுகிட்டு பொண்டாட்டியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைக்கிறவரை வேற எப்படி சொல்றதாம்.. ஆத்திரத்தில் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை..
அதென்ன.. எந்த நேரமும் என் பிள்ளையோட அழகுக்கும் பவுசுக்கும்.. என்று ஆரம்பித்து மனதை குத்தி குடைவது என்ன பழக்கம்.
நான் அழகில்லையா அல்லது என்னை பெண் கேட்டு மாப்பிள்ளைகள் வரிசை கட்டி நிற்கவில்லையா..?
கூடாத சேர்க்கையில் இப்படி நாசமாய் போகாமல் இருந்திருந்தால்.. இந்நேரம் வீட்டில் பார்த்த நல்லவனை மணந்து ராணியாய் வாழ்ந்திருக்கலாம்.. என்ற ஆதங்கம் அவளுக்குள்..
"அப்படியா..! நான் குணங் கெட்ட தறுதலையாகவே இருந்துட்டு போறேன்.. நீ போய் நல்ல குணவான் எவனாவது ஒருத்தனை தேடி கண்டுபிடிச்சிக்க..!"
"என்னத்த தேடி கண்டுபிடிக்கிறது..! அவதான் கைவசம் ஒருத்தன வச்சுருக்காளே..! இன்னும் எத்தனை பேரோ.. சீக்கு வந்த கழுதையை இத்தனை நாள் வீட்ல வச்சு சோறு போட்டதே பெரிய விஷயம்..! இவ சீக்கு உனக்கும் ஒட்டிக்கறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு வீட்டை விட்டு வெளியே அனுப்பு.. இவளை பார்க்கவே அருவருப்பா இருக்கு..!"
அழகு பெத்த பொண்ணு.. என்று வீட்டில் கொஞ்சி திருஷ்டி கழித்து.. அந்த அழகால் வந்த ஆபத்தாய் ராஜேஷ் திருமணம் செய்து அவனால் தினம் தினம் அனுபவிக்கப்பட்ட இந்த தோற்றம் இன்று அருவருப்பாக தருகிறதோ..!
"நான் எது பேசினாலும் சும்மா இரு ராஜேஷ்.. குறுக்க நீ ஏதாவது பரிஞ்சிகிட்டு வந்தா அதுவே அவளுக்கு வசதியா போயிடும்.. தெருவுல நாலு பேர் நாலு விதமா பேசுறத பாத்து காதை பொத்திக்கலாம் போல இருக்கு.. இங்க பாரு இவள விரட்டியடிச்சாத்தான் அடுத்ததா உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சு தர முடியும். இவளால நீ அனுபவிச்சதெல்லாம் போதும்.. இவளை விட அழகான பசையுள்ள பொண்ணா அம்மா உனக்கு பார்த்து வச்சிருக்கேன்.. கோடி பொண்ணு கொட்டிக் கிடக்குது இங்க.. ஆம்பளைக்குதான் பஞ்சம்.. சட்டப்படி விவாகரத்தோ என்ன கருமமோ குடுத்து தொலை. இல்லனா உனக்கு மறு கல்யாணம் நடக்கும்போது ஏதாவது பிரச்சனை பண்ணி தொலைய போகுது இந்த சனியன்.."
"அழகும் பணமும் சேர்ந்த பெண்.. கரும்பு தின்ன கூலியா..!" பேராசை மனதை மொய்த்துக் கொள்ள சுப்ரியாவை தன் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிடுவதென முடிவு செய்துவிட்டான்..
"நீ வீட்டை விட்டு வெளியே போ உனக்கு இனிமே இங்க இடம் இல்லை..!"
"எதுவா இருந்தாலும் சேர்ந்து சமாளிப்போம் னு சொன்னீங்களே..?" காதல் பொய்த்து விட்ட கசந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீரோடு கேட்டாள் அவள்..
"சொன்னேன் இதுவரைக்கும் அப்படித்தான் இருந்தேன்.. ஆனா இந்த மாதிரி அசிங்கமான பிரச்சனையை என்னால சமாளிக்க முடியல..! இங்க பாரு தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடு.."
"எங்க போவேன் ராஜேஷ்..! அம்மா அப்பாகிட்டையும் போக முடியாது அது உங்களுக்கு தெரியுமில்ல..!"
"எங்கேயாவது போ இல்ல செத்து தொலை..! இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அது நடக்கத்தானே போகுது.. யாருக்கும் தொல்லை இல்லாம இப்பவே அது நடந்தா கூட சந்தோஷம்தான்..! கௌரவமாவது மிஞ்சும்.. ஆனா அதுலயும் என் தலையை உருட்டி எம்பேரை இழுத்து வச்சுடாத..! உன்னால நான் அனுபவிச்ச கஷ்டமெல்லாம் போதும்.."
எதிர்காலம் உடைந்து கொண்டிருப்பதை கண் முன்னே பார்த்து சிலையாக நின்றாள் சுப்ரியா..
"ராஜேஷ் நீயா பேசுற..?"
"ஆமா நான்தான் பேசறேன்.. ஆபீஸ்க்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு உங்கிட்ட வேலை மெனக்கெட்டு பேசிட்டு நிக்கறேன்..! சாயந்திரம் நான் வரும்போது நீ இருக்க கூடாது.. முதல்ல இந்த ரூம விட்டு வெளியே போ.."
"அவ்ளோ சீக்கிரம் என்னை விலக்கி வைக்க முடியாது.. நான் நியாயம் கேட்பேன்..!"
"நல்லா கேளு.. ரோட்ல நின்னு எங்க மானத்த வாங்கு.. உன்ன கட்டிக்கிட்ட பாவத்துக்கு இன்னும் நான் என்னென்ன அனுபவிக்கனுமோ தெரியல.. இந்தா இந்த கவர நீயே வச்சுக்கோ.. எனக்கு எந்த நோயும் இல்ல.. ரிப்போர்ட் நெகடிவ்னு போஸ்டர் அடிச்சு ஒட்டு.. போடி இங்கிருந்து.." அவளை தரதரவென இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டு அறையின் கதவை பூட்டு போட்டு சாவியை தன் தாயிடம் தந்தவன்.. இவளை விரட்டி விட்டுட்டு என் ரூமை பினாயில் போட்டு கிளீன் பண்ணுங்க..! என்று அவளை சட்டை செய்யாமல் முன்னோக்கி நடக்க.. புத்தி பேதலித்தவள் போல் அவனை பார்த்துக் பார்த்தபடி நின்றாள் சுப்ரியா..
"இவ்வளவு சொல்லியும் கூட சூடு சொரணையில்லாம அப்படியே நிக்குது பாரு சனியன்..! டேய் கையை கழுவிட்டு ஆபீஸ் போ.." மாமியார் முகத்தை சுழித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட..
"ஒரு நிமிஷம்..! என் வயித்துல வளர்ற குழந்தைக்கு என்ன பதில் சொல்ல போறிங்க..!"
அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் குரலை இழுத்து பிடித்துக் கொண்டு கேட்டாள் சுப்ரியா..
"என்ன பதில் சொல்லணும்..! உனக்கு நோய் இருந்தா அதுக்கும் சேர்த்து இன்பெக்சன் ஆகத்தானே செய்யும்.. எத்தனை நாள் வயித்துல இருக்க போகுதோ..! என்னைக்காவது ஒரு நாள் பிண்டமா வெளியே எடுத்து.."
"ராஜேஷ்.." ஆக்ரோஷத்துடன் அவன் சட்டையை பிடித்திருக்க..
"ஏய்.. ச்சீ.. கையை எடு..! நீயே வேண்டாங்கறேன்.. இந்த சனியன வச்சு நான் என்ன பண்றது.. அப்படியே பொறந்தாலும் இது உயிரை காப்பாத்த நான் போராடனுமா..! ஒரு ஆம்பளையோட ஒரு துளி உயிர் நீர்ல லட்சம் விந்தணு இருக்குமாம்.. அதன் மூலமா எத்தனையோ குழந்தைங்களை உருவாக்கலாம்.. நான் ஆம்பளைடி.
எனக்கு உன் வயித்துல வளர்ற குழந்தை ஒரு பொருட்டே இல்ல.. இப்படியே நிக்காதே..! கூட்டி பெருக்க வேண்டிய குப்பையை வீட்டுக்குள்ள வச்சு அழகு பார்க்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை.. போய் தொலை..!" என்று விட்டு அவன் வாஷ்பேஷனில் கையை கழுவிக்கொண்டு வீட்டை விட்டு இறங்கி சென்றுவிட..
சில கணங்கள் பிரமை பிடித்தவள் போல் அப்படியே நின்றிருந்தவள்.. ஏதோ ஒரு வேகத்தில் நீதி கேட்கும் ஆக்ரோஷத்தில் மருத்துவமனை வரை வந்திருந்தாள்..!
கசப்பான நினைவுகள் அமிலத்துறல் விழுந்ததாக இதயத்தை பொட்டு பொட்டாய் கருக்கியது.. அடுத்த நிமிடம் அடுத்த நொடி தன் வாழ்க்கையின் நிலை தெரியாது கலங்கி போனவள் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்த நேரத்தில்.. மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்தான் ஒருவன்..
திடுக்கிட்டு போனவளாய் எழுந்து நிற்க அவனும் பக்கத்தில் வந்து நின்றான்..
அவன் கோலமும் உடையும் பரட்டை தலையும் கண்களுக்கு இதமானதாய் இல்லை..
அந்த தெருவே வெறிச்சோடி போயிருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக இரு சக்கர வாகனங்களும் ஒரு சில கார்களும் போய் வந்து கொண்டிருந்தாலும்.. யாரும் இல்லாத அந்த இடம் அத்து மீறி உரசுவதற்கு வசதியாய் போனது அந்த ஆளுக்கு..
இறங்கி நடக்க அவனும் பின் தொடர்ந்தான்..!
இந்த ஏரியாவை பற்றி சரியாக தெரியாத நிலையில் எங்கேயும் இடுக்கில் போய் மாட்டிக் கொண்டு தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்..
கடவுளுக்கு என் மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா..!
முகத்தை மூடிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழவேண்டும் போல் தோன்றியது..!
அந்நேரத்தில் அவள் முன்பு வந்து நின்றது அந்த பைக்..
தர்மன் வண்டியிலிருந்து இறங்கினான்..
தொடரும்..

Last edited: