- Joined
- Jan 10, 2023
- Messages
- 61
- Thread Author
- #1
நடுநிசி கடந்த பின் தூங்கி வழிந்து காத்திருக்கும் மனைவிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஆக்ரோஷத்தோடு உள்ளே நுழைந்தான் ஹரிச்சந்திரா..
மெல்ல கண்விழித்தவள்.. வயிற்றுக் கரு தந்த மகிழ்ச்சியில் லேசான புன்முறுவலுடன் அவன் முகம் பார்த்தாள்.. அந்த கண்களில் தீப்பற்றி எரிந்ததை உணர்ந்து கொண்டு அடுத்த கணமே விழித்தாள்..
"என்னங்க ஆச்சு?" என்ற கேள்வியை புருவச் சுருக்கங்களுடன் கூடிய அவள் பார்வையே வினவியது..
"ரோஷினி கூட பேசினியா..?" சீற்றத்தோடு அவனே கேள்வியை ஆரம்பித்தான்.. மாதவி சட்டென்று திகைத்து திணறினாள்..
"ஆ..ஆமா..!! ஆனா..!!" முடிக்கும் முன்பு பளாரென ஒரு அறை விழுந்தது கன்னத்தில்.. விதிர்த்துப் போனவளாக நிலை குத்திய பார்வையுடன் உறைந்து போனாள் மாதவி..
"அவளை கேள்வி கேட்க உனக்கென்னடி தகுதி இருக்கு.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வர நீ யாருடி..!!" பெருங்கடலின் பேரிரைச்சலாக அவன் கேள்வி நெஞ்சை தாக்க மாதவிக்கு கண்ணீர் குளம் கட்டியது..
"நா.. நான் உங்களோட மனைவி..!!"
"ஏய்.. சும்மா இதையே சொல்லாத.. அப்படின்னு நான் உனக்கு எந்த உரிமையும் கொடுக்கல.. தாலி கட்டிட்டதால நீ என் பொண்டாட்டியாக முடியாது.. உன்னை ஒரு புழுவை விட கேவலமா பாக்கறேன்.. உள்ளத்தால உணர்வால என்னைக்கும் நீ என்னோட மனைவி ஆகவே முடியாது.. ஒரு உண்மையை உன்கிட்ட சொல்லவா.. உன்கிட்ட எந்த ஃபீலிங்சும் எனக்கு தோணல தோணவும் தோணாது..!! என்னை பொறுத்தவரை நீ ஒரு சதை பிண்டம்.. அவ்வளவுதான்.. இனிமே எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீ வரனும்னு நினைச்சா.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." ஆங்காரம் கொண்டு கர்ஜித்தான் ஹரிச்சந்திரா.. மாதவிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. விழிகள் வேகமாக அலைப்புற முற்றிலுமாக துவண்டு போனாள்..
என்னென்ன வார்த்தைகள் பேசுகிறான்..!! அவன் பேசிய பேச்சில் இந்த ஒட்டுமொத்த உலகமே தன்னை ஒதுக்கி வைத்தது போல் அவமானத்தில் மரவட்டையாக சுருண்டு போனாள்.. கண்களை துடைத்துக் கொண்டு அழுகையை உள்ளிழுத்தாள்..
"சரி உங்க ரெண்டு பேரு விஷயத்துலயும் நான் இனிமே தலையிட மாட்டேன்.. ஆனா எனக்கு ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க.. என்னை பார்த்து உங்களுக்கு எந்த உணர்ச்சிகளும் வரலைனா.. அன்னைக்கு நமக்குள்ள நடந்தது..? நீங்க என்னை முழுசா எடுத்துக்கிட்டது எல்லாம் பொய்ன்னு சொல்ல வரீங்களா..?" மீண்டும் கண்ணீர் திரையிட்டது.. ஹரிச்சந்திரா கண்களை சுருக்கினான்..
"என்ன நடந்துச்சு நமக்குள்ள..? எதுவும் நடக்கல.. நான் உன் விரல் நகத்தை கூட தொட்டதில்ல.. தொட விரும்பினதும் இல்லை.. என் மனசு முழுக்க ரோஷினி நிறைஞ்சிருக்கும் போது நான் எதுக்காக உன்னை தொட போறேன்.." ஏளனமான பார்வை அவளை தீண்டி சென்றது.. எதிர்பார்த்ததுதான்.. ஆனாலும் உண்மையை தெரிய வைக்க வேண்டுமே..!!
"ஓஹோ நீங்க என்னை தொட்டு கலக்காமதான் நான் இப்ப பிரக்னண்ட்டா இருக்கேனா..!! என்னங்க தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க.. உங்க பெரிய அண்ணியோட தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த அன்னைக்கு ராத்திரி.. நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிடுச்சு.. இப்ப நான் உங்களால பிரக்னண்ட்டா இருக்கேன்.. உங்க குழந்தை என் வயித்துல வளருது.." அழகான தருணம் பார்த்து மகிழ்ச்சியோடு சொல்ல நினைத்தாள்.. உறவை நிரூபிக்க இப்படி அவசரமாக சொல்ல வேண்டிய நிலை..
"என்ன உளர்ற.. அன்னைக்கு ராத்திரி எதுவும் நடக்கல.. நடந்த மாதிரி எனக்கு ஞாபகமும் இல்லை.. என்னை உன்கிட்ட வரவழைக்க இந்த டிராமாவா பலே..!!" இகழ்ச்சியாக இதழ் வளைத்தான்..
"ஐயோ சத்தியமா நான் உண்மையைத்தான் சொல்றேன்.. நீங்க அன்னைக்கு குடிச்சிருந்தீங்க.. அதனாலதான் உங்களுக்கு எல்லாமே மறந்து போச்சு.. கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்க.. தயவு செஞ்சு தப்பா பேசி என்னையும் உங்க குழந்தையும் இழிவு படுத்தாதீங்க..!!" கதற துவங்கியிருந்தாள்.. அழக்கூடாது என்ற உறுதி உடைந்து போனது..
"குடிச்சா எல்லாத்தையும் மறக்கற அளவுக்கு.. நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்லை.. உன்னை இவ்வளவு அறுவறுப்பா பாக்கற நான் எப்படி உன் கூட இணைஞ்சிருக்க முடியும்.. இப்பதானே புரியுது.. எவன் கிட்டயோ கெட்டுப் போய் வயித்தில வாங்கின குழந்தைக்கு என்னை அப்பனாக்க பார்க்கற..!!" கோணலாக இதழ் வளைத்தான் ஹரி..
நெஞ்சுக் கூடு ஏறி இறங்க சில கணங்கள் அவனையே வெறித்திருந்தவள் "ஆஆஆஆ.." என்று பெருங்குரலெடுத்து அலறினாள்..
"என்னடா சொன்ன ராஸ்கல்..!!" காதால் கேட்ட வார்த்தைகளில் பொறுமை இழந்து பூகம்பமாக வெடித்தவள் பாய்ந்து அவன் சட்டையை பற்றியிருந்தாள்.. அவனிடம் அதே அலட்சியம்..
"ஆமாடி.. உண்மையைதான் சொல்றேன்.. நான் உன்னை தொடாதபோது இந்த குழந்தை மட்டும் எப்படி சாத்தியம்.. இங்க பாரு.. நீ எவன்கிட்ட வேணா போ.. எப்படி வேணா இரு.. ஆனா இன்னொருத்தனோட குழந்தைக்கு என்னை அப்பாவாக்க நினைக்காதே.. கண்டவனோட குழந்தைக்கு என் இனிஷியலை தானம் பண்ண நான் என்ன இளிச்சவாயனா..?"
"ஏய்ய்.." ஆக்ரோஷமாக.. அவன் மீது பாய்ந்து கண்டமேனிக்கு அடித்தாள்.. கன்னத்திலும் கழுத்திலும் மார்பிலும் அவளின் நக கீறல்கள்.. அடித்த தடங்கள் அவன் மீது அழுத்தமாக பதிந்தன..
"பாவி.. பாவி நீயெல்லாம் நல்லாருப்பியா.. எவளோ ஒருத்திக்காக சொந்த பொண்டாட்டியோட கற்பை தரம் தாழ்த்தி பேசறியே நீயெல்லாம் மனுசனா தூ.." அவள் முகத்தில் காறி உமிழ்ந்தாள்..
"உனக்கெல்லாம் நல்ல கதியே கிடைக்காதுடா.. நீயும் ஒரு பொம்பள வயித்துல தானே பொறந்த..!! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஒரு பொண்ணை எப்படிடா இந்த அளவுக்கு கேவலமா பேச முடியுது.." அவனை ஆத்திரம் தீர கன்னம் கன்னமாய் அறைந்தாள்..
"ஏய் ச்சீ.. விடு.." என்றவன் முழு பலத்தோடு அவளை பிடித்து தள்ளிவிட.. கட்டிலின் விளிம்பில் வலது கை மோதி அம்மா "ஆஆஆஆ.. அம்மா" என்ற அலறலோடு வலியில் துடித்து மெத்தையில் விழுந்தாள் மாதவி..
அவளுக்கு காயம் ஏற்பட்டதையும் வலியையும் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை..
"ஏய் இங்க பாரு.. இப்பவும் சொல்றேன்.. எவனோ ஒருத்தன்கிட்ட நீ கெட்டுப் போய் வயித்துல வாங்கின குப்பைக்கு என்னால பொறுப்பெடுத்துக்க முடியாது.."
"இந்த தாலி உன் கழுத்துல இருக்கறதுனாலதானே ஓவரா ஆடற.. இதை அறுத்து எறிஞ்சுட்டா எந்த உரிமையில்.. முறையில்லாத இந்த புள்ளைக்கு என்னை அப்பன்னு சொல்லுவ ஹான்..?" பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவள் எதிர்பார்க்காத அந்த தருணத்தில் அவள் கழுத்திலிருந்த தாலியை அறுத்திருந்தான் ஹரி.. உயிர் சிதைந்து கண்ணீருடன் அவனை வெறித்தாள் மாதவி..
"மரியாதையா இங்கிருந்து போயிடு.. இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.. இனி எப்பவும் கண்ல பட்டுடாதே.." பொங்கிய குரலில் கத்தி விட்டு சென்றான்.. இங்கு நடந்த சண்டையில் குடும்பமே எழுந்து கூடத்தில் குழுமியிருந்தது.. ஆவேசமாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்ற அரி சந்திராவின் முதுகை வெறித்தபடி அமைதியாக நின்றனர் மூவரும்..
"ஒண்ணுமே நடக்கலையா.. அப்புறம் குழந்தை எப்படி..?" ஒட்டு கேட்டதை தெளிவுபடுத்திக்கொள்ள மாமியாரின் முகம் பார்த்தாள் சரிதா.. ஜெயந்தியின் முகம் இறுகிப்போய் கிடந்தது..
"ஓஹோ இவ குணம் சரியில்லை.. அதனாலதான் என் பையன் இவகிட்ட ஒட்டாம கிடந்திருக்கான்.. அதானே பார்த்தேன்.. எப்பேர்ப்பட்ட பிடிக்காத கல்யாணமா இருந்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் புரிதல் ஏற்பட்டு.. தாம்பத்தியத்தில் புருஷனும் பொண்டாட்டியும் கலந்திருக்கணுமே.. இத்தனை நெருக்கமான அறைக்குள் ஒண்ணா இருந்தும் ஒன்னும் நடக்கலைனா.. கண்டிப்பா இவளோட நடத்தையிலதான தப்பு.. அதை மறைக்க என் பையன குத்தம் சொல்றா..!!" கழுத்தை நொடித்தாள் அவள்..
"அப்படியா அத்தை சொல்றீங்க..? அப்ப தப்பு இவ மேல தானா..? நடத்தை கெட்டவளா இவ.. விசாரிச்சு பொண்ணு எடுக்கறது இல்லையா..!! சொந்தக்காரங்க சொன்னாங்கன்னு கண்ணை மூடிக்கிட்டு உங்க பையனை பாழுங் கிணத்துல தள்ளி விட்டுட்டீங்களே அத்தை.." பரிதாபமாக உச் கொட்டினாள் சரிதா.. வதந்தி பேச்சு அத்தனை இனித்தது..
"தப்பான பொருளை தங்கம்ன்னு சொல்லி நம்ம தலையில கட்டிட்டு இவ ஆத்தா மிதப்பா உட்கார்ந்திருக்காளே..!! பொழுது விடியட்டும்.. பாத்துக்கறேன்..!! இப்ப போய் தூங்குங்க.." கோப பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தாள் ஜெயந்தி..
எலும்புகளில் என்ன பாதிப்போ தெரியவில்லை.. வலி உயிர் போனது.. அவன் அவதூறு வார்த்தைகள் தந்த காயம் மனதை தாக்கியதை விட.. தேகத்தில் பட்ட அடி அதிகமாக வலித்தது.. உச்சகட்ட வலியில் கை மரத்துப்போனது.. அழவும் திராணியின்றி கிடந்தாள் மாதவி.. நல்ல வேலையாக வயிற்றிலிருந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை.. மயக்கத்திற்கு செல்லும் கடைசி நிலையில் எப்படியோ சுதாரித்து தன் அன்னைக்கு அழைத்திருந்தாள்..
இந்த நேரத்தில் மகள் ஏன் அழைக்கிறாள்..? நெஞ்சம் பதறி.. அழைப்பை மேற்கொண்டு விஷயத்தை எதிர்முனையிலிருந்து கேட்டதில் இருதயம் நின்று துடித்ததுல அந்த தாய்க்கு ..
பக்கத்து வீட்டு பெண்ணிடம் குழந்தைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு.. தெரிந்த தெரு பையனின் வீட்டுக் கதவை தட்டி.. அவனின் சொந்த ஆட்டோவில் ஏறி மகள் வீட்டுக்கு புறப்பட்டாள்..
20 நிமிட பயணங்களுக்கு பின் ஆட்டோவை காத்திருக்க சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக மகளின் புகுந்த வீட்டுக் கதவை பலமாக தட்டிக் கொண்டிருக்க.. நிதானமாக வந்து கதவை திறந்தவன் சபரி வாசன்..
தன் தம்பியின் மாமியார் என்று மரியாதை துளி கூட இல்லாது.. "இந்த நேரத்துல எதுக்காக இங்க வந்துருக்கீங்க..?" முகச் சுழிப்போடு கேள்வி எழுப்பியபடி வழி மறித்து நின்றான் ..
கீதாவிற்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.. திணறலும் வெளிவராத வார்த்தைகளுமாக அவனை கடந்து மகளின் அறையை நோக்கி வேகமாக சென்றவர்.. கதவை திறந்து கொண்டு கட்டிலில் மயங்கி கிடந்த மகளை கண்ட கோலத்தில்.. பெருங்குரலெடுத்து கதறி அள்ளிக்கொண்டார்..
பெரிய அனர்த்தம் நிகழ்ந்திருப்பதில் இதயம் நடுங்கி "ஐயோ என்னடி ஆச்சு.. ஏன் இப்படி கிடக்கிற.. உன் புருஷன் எங்கடி..? உன் மாமியார் எல்லாத்தையும் பாத்துட்டு கண் காணாத மாதிரி அப்படியே நிக்கறாங்களே.. ச்சே.. இங்கே யாருக்குமே மனிதாபிமானமே இல்லையா.. இவங்கெல்லாம் மனுஷங்கதானா..?" கீதாவின் குரல் வெடித்தது..
வெளியிலிருந்த மூவரும் வேடிக்கை பார்த்தபடி முகத்தை சுளித்தனர்.. "உண்மை தெரிஞ்சதும் அம்மாவும் பொண்ணுமா டிராமா போடறத பார்த்தியா..? இப்ப பாரேன் என் பையன்தான் இவளை அடிச்சு கொடுமை படுத்தினதா.. இவ மேல இருக்குற தப்பை திசை மாத்த என்னவெல்லாம் கதை கட்ட போறான்னு..!!" கீதா பற்களை கடித்து முணுமுணுத்தாள்..
"ஆமா அத்தை.. நல்ல நடிப்பு.. நமக்கு இதெல்லாம் ஒன்னும் தெரிய மாட்டேங்குது.." அப்பாவியாவே வாழ்ந்து பழகிட்டோம்.. உதட்டை பிதுக்கினாள் சரிதா..
கீதாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.. யாராவது வாங்களேன் என்று உதவிக்கு அழைத்த போதும்.. மூவருமே அசையாமல் கல்லு பிள்ளையார் போல் நின்று கொண்டிருந்தனர்.. அப்பப்பா என்ன நடிப்பு.. சரிதாவிடமிருந்து கவுண்டர் வேறு..!!
வெளியே வந்து அவர்களிடம் நியாயம் கேட்கும் நிலையில் கீதா இல்லை.. மகளைக் காப்பாற்ற வேண்டியது மட்டுமே முக்கியமாகப்படுகிறது.. அனுசரித்து போ என்று மகளுக்கு அறிவுரை தந்து அவள் வாழ்க்கையை பாழாகி விட்ட குற்ற உணர்ச்சி கீதாவை பலமாக தாக்கியது..
அங்கிருந்த ஜாடியிலிருந்து தண்ணீர் தெளித்து மகளை எழுப்பி.. அரை மயக்கத்தோடு அவளை நடக்க வைத்து வெளியே அழைத்து வர.. ஆட்டோக்கார பையன் நிலைமை உணர்ந்து உள்ளே ஓடி வந்து மாதவியை தாங்கிக் கொண்டான்.. இருவருமாக அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி ஆட்டோவில் அமர வைத்து அங்கிருந்து விரைவாக கிளம்பி இருந்தனர்..
"ம்கூம்.. ரொம்பத்தான் நடிப்பு.. அம்மாக்காரி என்னமோ வீஞ்சிக்கிட்டு போறா..!! போக்கத்த பொம்பளைங்க திரும்ப இங்கதானே வரணும்.. அப்ப பாத்துக்கறேன்.." ஜெயந்தி நடந்ததை கூடுதல் மாசாலா தூவி மகளுக்கு விஷயத்தை போனில் தெரியப்படுத்திக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்..
"பேசாம அந்த கவுன்சிலர் கால்ல விழுந்து ரோஷினியை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்.. இல்ல என் தங்கையை கூட கட்டி வச்சி இருந்திருக்கலாம்.. இப்படி ஒழுக்கமில்லாத ஒருத்திய கல்யாணம் பண்ணி வச்சு அவன் வாழ்க்கையை குட்டிச்சுவரா ஆகிட்டீங்க.." பெருமூச்சு விட்டு தன் கணவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்ற சரிதாவை பின்தொடர்ந்து சென்றான் சபரி வாசன்..
தொடரும்..