- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
பொதுவான அறிவுரைகளுடன்.. ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு திருமணத்திற்காக வருகை தந்திருந்த உறவினர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றிருந்தனர்..
யாராலும் கௌதமனை தாண்டி அகலிகாவிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை..
"இது என்னோட முடிவு.. என் வாழ்க்கையை நிர்ணயிக்கிற உரிமை எனக்கிருக்கு" என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்..
ஆனாலும் புலம்பல்களும்.. அழுகை சத்தமும் ஓயவில்லை..
இந்திரஜா அழுது கொண்டே இருந்தாள்.. வீட்டு ஆட்களுக்கு இக்கட்டான சூழ்நிலை.. அவளுக்கு எப்படி சமாதானம் சொல்லித் தேற்றுவதென்று தெரியாமல் கௌதமனிடமும் பேச முடியாமல் நரேந்திரன் கார்த்திகா தேவி இருவரும் திணறினர்..
"அழாத இந்து..!! நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்.. நான்தான் சொன்னேனே.. தேவையில்லாம ஆசையை வளத்துக்காதேன்னு.. தான் வாழாத வாழ்க்கையை மத்தவங்களும் வாழ கூடாதுன்னு இந்த மூதேவி வேணும்னே வந்து உன் வாழ்க்கையை கெடுத்துட்டா.... என்ன ஒரு கேவலமான எண்ணம்.. ச்சீ.. இவளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்காது.." சிவரஞ்சனி அழுது கொண்டிருந்த இந்திரஜாவிடம் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றினாள்..
"டேய் என்னடா பண்ணி வச்சிருக்க.. அவளால எவ்வளவு அவமானம்.. எல்லாத்தையும் மறந்துட்டியா..? இவ மறுபடியும் வீட்டுக்குள்ள வந்தா நம்ம குடும்பத்தை சுத்தியிருக்கறவங்க கேவலமா பேச மாட்டாங்களா.. வீட்ல இருக்கற பொண்ணுங்க தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா.. தயவுசெஞ்சு அவளை வெளியே அனுப்பிடு கௌதமா.. நம்ம இந்து முகத்தை பாருடா.. உன்கூட கல்யாணம் நடக்க போகுதுன்னு எவ்வளவு ஆசை ஆசையா இருந்தா.. அவளை ஏமாத்தறது சரி இல்ல.. பாவம் அழுதுட்டே இருக்கா..!!" உத்தமன் கூட வந்து பேசிப் பார்த்தான்..
"இந்துவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழ்க்கை சிறக்காது.. நான் எடுத்திருக்கிற முடிவு தான் சரி.. இப்ப இந்து வருத்தப்பட்டாலும் பின்னாடி சந்தோஷமா இருப்பா.. இதுக்கு மேல என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்.." என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி தன் தமையனை மேற்கொண்டு பேசவிடாமல் செய்துவிட்டான் இளையவன்..
"நம்ப வச்சு கழுத்தறுத்திட்டியே கௌதமா.. இன்னொருத்தன் கூட ஓடிப்போன அந்த ஒழுக்கங் கெட்ட சிறுக்கியை விட.. ஒரு குழந்தையோடு இருந்தாலும் பரவாயில்லைன்னு உன்னையே நினைச்சு உன்னை கட்டிக்க தயாரா இருந்தே என் மக எந்த விதத்தில் குறைஞ்சு போனா..!!" பூங்கொடியின் ஆத்திரம்.. அழுகை புலம்பலை சமாளிக்க இயலவில்லை..
கௌதமன் பூங்கொடியின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.. "என்னை மன்னிச்சிடுங்க அத்தை.. எனக்கு வேற வழி தெரியல.. இப்ப என் முடிவு உங்களுக்கு கசப்பா தெரிஞ்சாலும் போக போக என்னை நீங்க புரிஞ்சுக்குவீங்க.. இந்திரஜாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.." என்றான் நிதானமான குரலில்..
"உனக்கென்னப்பா..? உன் பொண்டாட்டி திரும்பி வந்ததும் அவளை மன்னிச்சு ஏத்துக்கிட்ட.. அக்னி குண்டம் வரை வந்து நின்னுபோன இந்த கல்யாணத்துல பாதிக்கப்பட்டது என்னோட பொண்ணு தானே..!! இனி அவளை எவன் கட்டிக்குவான்.. இன்னொருத்தனோட வாழ்ந்துட்டு வந்த அந்தக் கேடுகெட்டவளை நீ திருப்பி சேர்த்துக்கிட்ட.. ஆனா இன்னொருத்தன் கூட மணமேடை ஏறி கல்யாணம் நின்னு போனவளை விகல்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணிக்க இங்கே எவனும் கௌதமன் இல்லையே.. ஏன் கல்யாணம் நின்னுச்சு.. பொண்ணுக்கு என்ன குறைன்னு ஆயிரம் கேள்வி கேட்பானுங்களே.. என் பொண்ணோட வாழ்க்கையே போச்சே.. நான் என்ன செய்வேன் கடவுளே..!! நீயும் என்னை கைவிட்டுட்டியா..?" என்று தூணில் சரிந்து கீழே அமர்ந்து அழுது ஒப்பாரி வைத்தாள்.. நரேந்திரன் தங்கையிடம் அமர்ந்து அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்..
அதற்குமேல் கெளதம் பூங்கொடியிடம் எதுவும் பேசவில்லை.. சமாதானப்படுத்தினாலும் அடங்கும் நிலையில் அவர் இல்லை.. பேச பேச பிரச்சினை தான் வெடிக்கும்.. சொல்லில் புரிய வைப்பதை விட செயலில் நிகழ்த்தி காட்டுவதே உத்தமம் என்ற எண்ணத்தோடு அங்கே பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..
பூங்கொடியால் ஏன் இப்படிசெய்தாய் என்று அழுது புலம்ப முடியும்.. உரிமையாக சண்டையிட இயலாது..
காரணம் அனாதரவாக நின்ற தன்னையும் தன்மகளையும் அக்குடும்பம் ஆதரிக்க அவன் பெரிதும் மெனக்கெட்டிருக்கிறான்.. இப்போதும் கூட கணக்கு பார்க்காமல் எவ்வளவோ செய்கிறான்..
இன்னொன்று கௌதமனை கத்தி முனையில் நிறுத்தி பேசி பேசியே சம்மதிக்க வைத்த பங்கு அவளுக்குண்டு.. அதனால் திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.. அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.. அவன் எகிறிவிட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை..
பூங்கொடியை விடுத்து இந்திரஜாவிடம் தன்னிலையை புரிய வைக்க முயற்சி செய்தான் கௌதமன்..
"பரவாயில்ல மாமா ஏமாற்றம் எனக்கொன்னும் புதுசு இல்ல.. ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு என்னை பிடிக்கல.. குடும்பத்தாரோட வற்புறுத்தல்.. அப்புறம் உங்க குழந்தையோட எதிர்காலம்.. இதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்க.. !!" என்று அவள் கண்ணீரோடு கேட்க.. கௌதமன் அவளை பாசத்தோடு பார்த்தான்..
"உன்னை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்ததுக்கு இத்தனை காரணங்கள் இருக்கலாம்.. ஆனா இந்த கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்ததற்கு ஒரே ஒரு காரணம்.. அது நான் உன் மேல வச்சிருந்த அக்கறை மட்டும்தான்.."
இந்திரஜா நம்பாத பார்வையோடு புன்னகைத்தாள்..
"என்னை கல்யாணம் செஞ்சிருந்தா உன் வாழ்க்கை நாசமாகி போயிருக்கும்.. என் குறையை நான் வெளிப்படையா உன் கிட்ட சொல்லி இருக்கேன் தானே..!! மத்தவங்களுக்கு தெரியாம போகலாம்.. நீ கொஞ்சம் யோசிச்சிருக்கணும்.. தெரிஞ்சே உன் வாழ்க்கையை கெடுத்துட்டு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்.."
"என் சம்மதத்தோடு தான் கல்யாணம் பேசி முடிவு செஞ்சாங்க.. நான் தான் உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் பிரச்சனை இல்லைன்னு சொன்னேனே..?"
கௌதமன் வறண்டு புன்னகைத்தான்.. அந்த சிரிப்பின் அர்த்தம் அவனுக்கு மட்டுமே தெரியும்.. இந்துவை பற்றியும் அவனுக்கு தெரியும்..
"அது உன் பெருந்தன்மை.. அதுக்காக உன்னை படுகுழியில் தள்ள என்னால முடியாது.. அகலிகா திரும்பி வந்ததை எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.. உனக்காக.. உன் வாழ்க்கையை காப்பாத்த..!!"
இந்திரஜா கௌதமனை கண்கள் விரித்து பார்த்தாள்..
"உண்மையைத்தான் சொல்றீங்களா..? இந்த கல்யாணத்தை நிறுத்த மட்டும்தான் அகலிகாவை வீட்டுல சேர்த்துக்கிட்டீங்களா..!!" இந்திரஜா ஆர்வத்தோடு கேட்க கௌதமன் பதில் சொல்லவில்லை.. அந்த கேள்வியை அவன் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்..
உண்மைதான்.. ஏதாவது ஒரு வகையில் இந்த திருமணத்தை நிறுத்தி விட முடியுமா என்று அவன் கடைசி வரைக்கும் துடித்துக் கொண்டிருந்தான்.. அகலிகா அவன் வேலையை எளிதாக்கி இருந்தாள்.. ஆனால் அவளை ஏற்றுக் கொள்ள இது மட்டும்தான் காரணமா..? ஆழமாக யோசிக்காமல் நினைவுகளை கலைய விட்டான்..
"இந்து.. எல்லா விதத்திலும் பொருத்தமான ஒரு பையனா பார்த்து நான் உனக்கு கல்யாணம் செஞ்சு வைப்பேன்.. இந்த மாமாவை நம்பு.." என்று அவள் கைப்பற்றிக் கொண்டான்..
"நான் உங்களை தான் விரும்பினேன் மாமா..!! ஸ்வேதா குட்டியையும் உங்களையும் என் உலகமா நினைச்சேன்.. அது இப்ப இல்லைன்னு ஆன பிறகு.. நீங்களாகவே என் வாழ்க்கைக்கும் சேர்த்து முடிவெடுத்திட்ட பிறகு.. நான் என்ன சொல்ல முடியும்..!! உங்க இஷ்டப்படி என்ன செய்றீங்களோ செய்யுங்க.." என்று விட்டேத்தியாகத் தான் பேசினாள்..
எந்த வகையிலும் ஒரு குறையும் வராதபடிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று அப்போதே தீர்மானித்திருந்தான் கௌதமன்..
அகலிகாவிற்கு வீட்டுக்கு வந்த முதல் ஒரு வாரம் மிக கடினமாக இருந்தது..
கட்டிலில் அவனும் குழந்தையும் படுத்துக்கொள்ள அகலிகா கீழே படுத்துக்கொண்டாள்.. கௌதமன் அதைப்பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை..
அவள் சமையலறைக்குள் வந்தால் மூன்று பெண்களும் ஒதுங்கிக் கொண்டனர்..
"மருமகளே.. சாப்டியா..? உனக்கு பிடிச்ச வாழைக்காய் பொரியல் பண்ணட்டுமா..!! ஆட்டுக்கறி உனக்கு பிடிக்காது இல்ல.. தனியா கோழி வறுத்து வச்சிருக்கேன்.."
அவள் எரிச்சல் அடைந்தாலும் பாசத்தால் தொண தொணப்பதும்..
நெருக்கி தொடுத்த குண்டுமல்லி சரத்தை அவள் அனுமதி இல்லாமல் தலையில் வைப்பதும்..
"இதை தேய்ச்சு குளிச்சா உடம்பு வழுவழுன்னு.. தங்கமா மின்னும்.." என்று நலுங்கு பொடி அரைத்து தந்து.. தன் மகனின் மனைவி என்ற ஒரே காரணத்தால் அகலிகாவை செல்லங் கொஞ்சிய அதே மாமியார்.. இப்போது அவள் முகத்தில் முழிப்பதை கூட பாவமாக எண்ணினார்..
இந்திரஜா பார்வையாலே எரித்து கொல்லுவாள்..
சிவரஞ்சனிக்கோ ஏதாவது கன்டென்ட் கிடைக்காதா? இவளை வைத்து கதை பண்ண முடியாதா என்று ஆசை..!!
"இவ்வளவு நாள் அவன் கூட தான் இருந்தியா..?"
"உன்னை நல்லா பாத்துக்கிட்டானா.."
"அப்புறம் ஏன் திரும்பி வந்த.."
"ஓஹோ கௌதமன் மாதிரி அவன் இளிச்சவாயன் இல்லையோ..?" கேள்விகளால் துளைத்து அகலியின் மனதை சீழ் பிடிக்க வைத்தாள் முதல்..
அகலிகா எதுவும் பேசுவதில்லை.. அவள் கண்ணீர் மட்டுமே பதில் சொல்லும்..
"இப்ப என்ன கேட்டுட்டேன்.. செய்றதையும் செஞ்சுட்டு யோகியவதி மாதிரி சீன் போடுறா பாரு..!!" வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு விலகிச் செல்வாள் சிவரஞ்சனி..
சோகமும் துக்கமும் குற்ற உணர்ச்சியும் பயமும் மனதை சூழ்ந்திருந்தாலும்.. பசி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாயிற்றே.. மூன்று வேளைக்கு ஒரு வேலையாவது உண்டு தானே ஆக வேண்டும்..
முன்னொரு காலங்களில் வேளா வேளைக்கு உணவு தட்டோடு அறைக்குள் வந்து ஊட்டி விடவும் ஆள் இருந்தது..
அம்மு.. அகலி.. என்று கார்த்திகா கதவை தட்டுவாள்.. இல்லையேல் இந்திரஜா.. சிவரஞ்சனி யாரையேனும் சாப்பிட வரச் சொல்லி அனுப்பி விடுவாள்..
கௌதமன் கூட நாளைக்கு ஐந்தாறு முறை சாப்பிட்டாயா.. என்றுகேட்டு அவளை எரிச்சல் படுத்தி இருக்கிறான்..
"சும்மா என்ன சாப்டியா சாப்டியான்னு.. இதைத்தவிர உங்களுக்கு வேற எதுவுமே கேட்க தெரியாதா..?" என்று ஃபோனில் இரைந்த காலம் அது..
"இல்லடா மணி இரண்டு ஆச்சு இன்னும் சாப்பிடாம இருக்கியே.. அல்சர் வந்துடும் அகலி.." அவன் அப்போதும் சிரிப்பான்..
"நான் என்ன குழந்தையா..? பசிச்சா எடுத்து போட்டு சாப்பிட்டுக்க தெரியும்.. கொஞ்சம் சீக்கிரம் வந்து சாப்பிடு.. எனக்கு ஒருவேளை முடிஞ்சிடும்னு உங்கம்மா தொந்தரவு ஒரு பக்கம்.. உங்க நச்சரிப்பு இன்னொரு பக்கம்.. தொல்லை தாங்க முடியல ஆளை விடுங்க சாமி.. வேற ஏதாவது இருந்தா பேசுங்க இல்லன்னா ஃபோனை வைங்க.." என்று மூச்சு விடாமல் பேசி இருக்கிறாள்.. அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவனின் உணர்வுகளை புரிந்து கொள்ள அந்நாளில் முயற்சி செய்ததே இல்லை..
மற்ற ஆண்கள் போல் கௌதமனுக்கு மனைவியிடம் ஸ்வீட் நத்திங்ஸ்.. கொஞ்சல் கதைகள் பேச ஆசைதான்.. ஆனால் உண்மையில் என்ன பேசுவதென்று தெரிவதில்லை..
ஆண் என்றால் மிகக் கூர்மையாக தெளிவாக ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேசி கவர வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த அகலிகாவிற்கு அவன் பாசம் நிறைந்த வெண்டைக்காய் போன்ற வழவழா கொழ கொழா பேச்சு பிடிக்காமலிந்த காலம்..
இப்போதோ அவள் எத்தனை வேலை பட்டினி கிடந்தாள் என்ற கணக்கில்லை.. சாப்பிட்டாயா என்று கேட்கவும் ஆளில்லை..
பசிக்கிறது என்ற கணவனிடம் சென்று வெட்கமின்றி சொல்ல மனம் கூசியது..
எத்தனை நாட்களுக்கு பட்டினி கிடந்து உண்ணாவிரதம் இருக்க முடியும்.. இரக்கப்பட்டு வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டான்.. தேவையானதை எடுத்து போட்டு சாப்பிட யாரும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லையே..!!
முன்பு போல் ஓசியில் உட்கார்ந்து சாப்பிட மனம் வரவில்லை..
ஏதேதோ வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாள்.. யாரும் தடுக்கவில்லை கண்டு கொள்ளவும் இல்லை.. பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத ஏதோ ஒரு அலமாரியை தூசி தட்டி துடைத்து வைத்தாள்..
அவளாகவே பாத்திரங்களை துலக்கினாள்..
வீட்டின் முற்றத்தை பெருக்கி துடைத்தாள்..
இதையெல்லாம் ஏன் செய்கிறாய் என்று யாரும் கேட்கவில்லை செய்யாதே என்று தடுக்கவும் இல்லை.. அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தது..
உழைத்து களைத்துப்போன பிறகு உரிமையோடு ஒரு தட்டு சாதம் எடுத்து போட்டு பசியோடு உண்ணும் வேளையில் தான்..
"எப்படித்தான் கொஞ்சங்கூட வெக்கமே இல்லாம சாதாரணமா நடமாட முடியுதோ.? ஏதோ இவ சொந்த வீடு மாதிரி.. சமுதாயத்துக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமா வாழற நமக்கு கூட இவ்வளவு தைரியம் வராது.. எல்லாம் இவ புருஷன் கொடுக்கற தைரியம்.." அகலியின் காது கேட்கும் படி சொல்லிவிட்டு பாத்திரங்களை கீழே போட்டு உடைத்து விட்டு சென்றாள் பூங்கொடி..
வாய்க்குள் சென்ற உணவு தொண்டைக்குள் இறங்க மறுக்கிறது.. ஒருவர் எப்படிப்பட்ட குணமுடையவராய் இருந்தாலும் சாப்பிடும் வேளையில் அவர் வயிற்றில் அடிப்பது தவறு.. ஆனால் பூங்கொடி.. அந்த வேலையை மிகச் சரியாக செய்வாள்..
மாடாக உழைத்து.. ஒருவாய் சோறு உண்ணும் நேரத்தில் ஏதேனும் குதர்க்கமாக பேசி அந்தச் சோறு மீன் முள்ளாக தொண்டையை மீறி இறங்க முடியாதபடிக்கு செய்து விடுவதில் கெட்டிக்காரி இந்த பூங்கொடி..
வந்த நாளிலிருந்து குட்டி பாப்பா அவளை கண்டால் பூச்சாண்டியை கண்டது போல் பயந்து ஒதுங்கிக் கொண்டது..
"இது யாரு..?" என்று ஸ்வேதா அப்பாவிடம் கேட்டதற்கு.. அம்மா என்று தான் சொல்லிக் கொடுத்தான்.. அப்போதும் குழந்தை அவளிடம் ஒட்டவில்லையே.. குழந்தைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறாள்.. செய்த தவறை திருத்திக் கொள்வதற்காக.. குறைந்தபட்சம் தன் குழந்தைக்கு தாய்ப்பாசத்தை தருவதற்காக..
ஸ்வேதா குட்டியை பொறுத்தவரை தாயே தேவையில்லை.. பிறகு தாய்ப்பாசம் எதற்கு..? ஐந்து வயதில் ஒரு குழந்தை இத்தனை வெறுப்பை காட்ட முடியுமா.. காட்டுகிறதே..!!
மற்றவர்கள் பாஷை புரியாத தனித்துவமான இந்த பிள்ளையை பொறுத்தவரை இந்திரஜா என்ன சொல்லிக் கொடுக்கிறாளோ அதுவே தாரக மந்திரம்..
பிற்பகல் நேரத்தில் ஒரு நாள் குழந்தை ரயில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில்.. அகலிகாவால் தன்னை கட்டுபடுத்திக் கொள்ள இயலவில்லை.. மனம் தாயன்பில் கனத்தது..
"செல்லக்குட்டி அம்மா கிட்ட வாங்களேன்.." வாஞ்சையோடு குழந்தையிடம் கைநீட்டி நெருங்க.. முறைத்த விழிகளும் அடங்காத கோபமுமாக எவர்சில்வர் டம்ளரை தூக்கி அவள் மீது அடித்திருந்தாள் ஸ்வேதா..
நெற்றியில் வெட்டுப்பட்டு உதிரம் கொட்டியது..
"அம்மாஆஆ.." என்று அவள் அலறிய அலறலில்
"என்னாச்சு.. என்னாச்சு..?" என்று ஓடிவந்து குழந்தையை தூக்கிக் கொண்டாள் இந்திரஜா.. குழந்தைதான் டம்ளரை அவள் மீது தூக்கி எறிந்திருக்கிறது என்று தெரிந்து விட்டது..
அடுத்தடுத்து பூங்கொடியும் கார்த்திகா தேவியும்.. பதட்டத்தோடு ஓடிவந்து குழந்தையை ஆராய்ந்தனர்.. உத்தமன் சிவரஞ்சனி குழந்தைகள் வீட்டில் இல்லை..
"குழந்தை டம்ளரை தூக்கி அடிக்கிற அளவுக்கு நீ என்ன செஞ்ச?" இந்திரஜாவின் குரலும் பார்வையும் அகலிகாவை நோக்கி பாய்ந்தது..
"நா.. நான் ஒன்னும் செய்யல.. குழந்தையை வான்னு கூப்பிட்டேன்.. டம்ளரை தூக்கி அடிச்சுட்டா..!! நா.. நான் ஒன்னும் செய்யல.." உதிரமும் கண்ணீருமாக நின்று கொண்டிருந்தாள் அகலிகா.. அவள் நெற்றியிலிருந்து கீற்றாக வழிந்து கொண்டிருந்த குருதியை யாரும் கருத்தில் கொண்டார் இல்லை..
நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான் கௌதமன்..
அகலிகா அங்கு நின்றிருக்க ஏதோ பிரச்சனை என்று தெரிந்து விட்டது..
அவர்களை நோக்கி வந்து நின்றவனின் பார்வை அகலிகாவின் நெற்றிக்காயத்தின் மீது கூர்மையாக படிந்தது.. கண்களில் கோபம்.. அகலி நடுங்கினாள்..
"ஏய்.. ரத்தம் வடியறது தெரியலையா..!! இல்ல எல்லாரும் பாக்கணும்னு இப்படி நிக்கறியா..!!" எரிச்சலோடு தன் கைகுட்டையை அவள் நெற்றியில் வைத்து அழுத்தியவன்.. "அழுத்திப் பிடிச்சுக்க.." என்று விட்டு.. தள்ளி நின்று இந்திரஜாவிடம் "என்ன விஷயம்..?" என்று கேட்டான்..
"குழந்தையை ஏதோ வம்புக்கு இழுத்திருக்கா.. குழந்தை பயந்து டம்ளரை தூக்கி அடிச்சிருச்சு.. கத்தக்கூட முடியாத குழந்தையை என்ன செஞ்சான்னு தெரியல..!!" இந்திரஜா அகலிகாவை குற்றம்
சுமத்த.. அவன் பார்வை வீரியம் குறையாமல் அவள் பக்கம் திரும்பியது..
"நா.. நா.. நான் ஒன்னும் செய்யல.. சத்தியமா குழந்தையை தூக்கத்தான் வந்தேன்.." என்று கதறலோடு அவள் தன் பக்க நியாயத்தை சொல்ல முயன்றாள்..
"ஆமா நாடகத்தை ஆரம்பிச்சுட்டா.. யார்கிட்ட எப்படி நடிக்கணும்னு இவளுக்கு தெரிஞ்சிருக்கு.." உதடு சுழித்தாள் பூங்கொடி..
கௌதம் "நீ உள்ள போ..!!" கடுமையான குரலில் அகலிகாவிடம் உத்தரவிட.. இயலாமையுடன் அமைதியாக உள்ளே சென்றிருந்தாள் அகலிகா..
ஸ்வேதாவை தன் கையில் வாங்கிக் கொண்டான் கௌதமன்..
அப்பாவின் அணைப்பிற்குள் வந்த ஸ்வேதா மீண்டும் இளகி புன்னகைத்தாள்..
"பாப்பாவுக்கு ஒன்னும் இல்லையே..!!" கௌதமன் புன்னகையோடு கேட்க..
"இல்ல.." என்று தலையசைத்தவள்.. அவளை எனக்கு பிடிக்கவே இல்லை.. அவளை என்கிட்ட வர வேண்டாம்னு சொல்லுங்க.. அவ என்னை கொன்னுடுவா.. எனக்கு பயமா இருக்கு..!!' என்று அவசர அவசரமாக சைகை செய்த குழந்தை கண்ணில் பயத்தை காட்ட.. கௌதமன் மகளை கவலையோடு பார்த்தான்..
"உனக்கு ஆபத்து வர அப்பா விட்டுடுவேனா..!! நீ தைரியமா இருக்கணும்.. பயப்படக்கூடாது.. எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன்.. என்னை மீறி யாரும் உன்னை ஒன்னும் செஞ்சிட முடியாது புரிஞ்சுதா..?" என்று கைகளும் கண்களுமாக பேசி குழந்தைக்கு உணர்த்தினான்..
அடுத்த கணம் ஸ்வேதா சட்டென புன்னகைத்து தந்தையை கட்டிக்கொண்டாள்.. அப்பாவின் வார்த்தைகள் கொடுத்த பலம் அது..
கார்த்திகா தேவி.. "கௌதமா.." என்று ஏதோ சொல்ல வர.. வேண்டாம் என்று தடுத்து விட்டு குழந்தையை அணைத்துக் கொண்டான் அவன்..
"நீங்க வாங்க அண்ணி.. இந்த வீட்ல நம்ம பேச்சு எடுபடாதுன்னு தெரிஞ்சு போச்சு.. கண்ணுக்கு முன்னாடி பார்த்த பிறகும் உண்மை புரியலைன்னா என்ன செய்ய முடியும்.. அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்குவோம் வேறென்ன செய்ய முடியும்.." முனுமுனுத்தபடி கார்த்திகா தேவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள் பூங்கொடி.. இந்திரஜா இருவரையும் கவலையாக பார்த்துவிட்டு அவர்கள் பின்னால் சென்றுவிட..
குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் கௌதமன்..
அரை மணி நேரத்தில் பாப்பா அவன் தோளில் சாய்ந்த படி உறங்கியிருந்தது..
குழந்தையை தன்னறைக்கு தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்..
கீழே ஒரு மூலையில் குத்து காலிட்டபடி அமர்ந்திருந்தாள் அகலிகா.. காயத்தில் ரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்தது..
கௌதம் அவளை பார்த்த பார்வை அத்தனை இனிமையானது அல்ல..
"இப்ப எதுக்காக இப்படி மூலையில உட்கார்ந்து தேவையில்லாத சிம்பதி கிரியேட் பண்ற.." அவன் கடுகடுப்பான குரலில் நிமிர்ந்தாள் அகலி..
"நீ என்ன பெர்பார்மன்ஸ் செஞ்சாலும் உன் மேல இரக்கம் வராது.." அவன் வார்த்தைகளில் எழுந்து நின்றாள்..
"என் குழந்தையை நெருங்க நினைக்காதே.. உன்னை பார்த்தாலே அவ பயப்படுறா.. உன்னால அவ மனசுல ஏதாவது பாதிப்பு உண்டாச்சுனா நான் சும்மா இருக்க மாட்டேன்.. முடிஞ்ச வரை தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடாம இரு.. நீ அதிகப்பிரசங்கித்தனமா செய்யற வேலைகள்ல உன்மேல வெறுப்பு தான் வருது..!! அலமாரியில மருந்து இருக்கு.. எடுத்து போட்டுக்க.. இல்லை எக்கெடும் கெட்டுப்போ.."
"குழந்தை தூங்குறா.. அவ எழுந்தா இந்திரஜாவை கூப்பிட்டு சொல்லு.. மறுபடியும் மகளை தொந்தரவு பண்ணாதே.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.." என்றவன் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தான்..
"ஏன்டி.. எதுக்கு உனக்கு தேவையில்லாத வேலை..!! நீ எதுக்காக அந்த ஆணியை தொட்ட.. பாரு கையில எவ்வளவு ஆழமா கீறியிருக்கு.." பதைபதைத்து அவள் காயத்தில் மருந்து போட்டுக் கொண்டிருந்த கௌதமனும்..
"அய்யே.. சின்ன காயம்.. ஓவரா சீன் கிரியேட் பண்றீங்க..!! எனக்கு ஒன்னும் இல்ல.. முதல்ல கையை விடுங்க.. ஆம்பளையா லட்சணமா நடந்துக்கோங்க.." என்று அவன் அன்பை உதறிவிட்டு நடந்த திமிர் பிடித்த அகலியும் இந்த திருந்திய அகலிகையின் நினைவடுக்குகளில் உறைந்து கண்ணீரை திரள வைத்தாள்..
தொடரும்..

Last edited: