• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 8

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
59
அகலிகா குழந்தையை நெருங்க முடியாதபடிக்கு இந்திரஜா தடுப்பு வேலியாக குறுக்கே நிற்கிறாள்..

வேலை செய்யும் போது கண்டும் காணாமலும்.. சில சமயங்களில் தூணுக்கு மறைவிலிருந்து யாருக்கும் தெரியாமலும்.. தன் மகளை ஆசை தீர பார்த்து ரசிக்க வேண்டியதாய் போகிறது.. இன்னொரு வாய்ப்பு குழந்தை உறங்கும் நேரத்தில் கிட்டும்..

அன்றொரு நாள்

பூஞ்சிட்டு கன்னங்களும் தேன்மொட்டு இதழ்களுமாய் காண காண திகட்டாத பேரழகு ஓவியமாய் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை அருகே அமர்ந்து உள்ளன்போடு அவள் பார்த்து கொண்டிருந்த வேளையில்.. கதவை திறந்து உள்ளே நுழைந்திருந்தான் கௌதமன்.. சட்டென திடுக்கிட்டு எழுந்து நின்றாள் அகலிகா.. இங்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து உரிமையாய் கட்டிலில் அமர்ந்ததில்லை..

அகலியை கண்டு அவன் கண்கள் சுருங்கியது பார்வை கூர்மையாகியது.. 'என்ன பண்றே..? குரலில் கடுமை..

"இல்ல சும்மாதான்.. பாப்பாவுக்கு துணையா உட்கார்ந்திருந்தேன்.." அகலிக்கு குரல் கமறியது..

"எதுக்காக குழந்தையை அப்படி பார்க்கற..?" கண்களை குறுக்கி கேட்டிருந்தான்..

ஆசை தீர குழந்தையை ரசிக்கிறேன்.. என்று சொல்ல முடியாதே..!!

இத்தனை வருடங்களாய் இல்லாத அன்பும் ஏக்கமும் எங்கிருந்து புதிதாய் முளைத்து வந்தது என்று குதர்க்கமான கேள்வி எழும்பும்..

ஏற்கனவே கிருஷ்ணனை கொல்ல வந்த அரக்கியை பார்ப்பது போல்.. இந்த வீட்டார் சந்தேகமாய் உளவு பார்ப்பதும்.. வார்த்தைகளால் வெட்டி தாக்குவதும் இதயத்தை அறுக்கிறது.. இதில் கௌதமனும் ஏதாவது ஏடாகூடமாக பேசிவிட்டால்..? தாங்குவதற்கு சக்தி வேண்டுமே..!! நல்ல வேளையாக அப்படி ஒன்றும் வார்த்தைகளை உதிர்த்து விடவில்லை அவன்..

"போய் படு..!!" வெறுப்பான குரலை சொல்லிவிட்டு.. குழந்தையின் அருகே அமர்ந்து அவள் தலையை தடவி கொடுத்தான்..

கீழே படுக்கையை தட்டி போட்டு அதில் அமர்ந்து கொண்டு பிள்ளையையும்.. பிள்ளையின் தந்தையையும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அகலிகா..

இனி உறங்கும் குழந்தையை கூட ஆசை தீர பார்த்து ரசிக்க இயலாது.. கௌதமனை பற்றி சொல்லவே வேண்டாம்.. கண்கள் உறங்குவது போல் தான் தெரியும்.. எந்நேரம் படக்கென்று அந்த பெரிய விழிகளை திறப்பான் என்று கணிக்கவே முடியாது..

சில நேரங்களில் உறக்கமில்லாமல் விடிய விடிய விழித்திருக்கிறான்..

சட்டென விழிப்பு தட்டும் போது கண் திறந்து பார்க்கும் அகலிகாவிற்கு விட்டத்தை பார்த்தவாறு படுத்திருக்கும் கௌதமனை காணுகையில் ஏன் இப்படி உறக்கத்தை கெடுத்துக் கொள்கிறார் என்று வேதனையாகவும் சங்கடமாகவும் இருக்கும்..

தாயன்பும் தாய்ப்பாலும் ஒன்று.. பொத்தி வைக்க முடியாமல் பீறிடுகிறது.. பெற்ற மகளை அள்ளி அணைக்கவும் வழியில்லாமல் விலகி நிற்கவும் முடியாமல் தவித்துப் போகிறாள் அகலிகா..

இது என்ன புது ஞானோதயம்.. இந்த மூன்று வருடங்கள் எங்கே போனதாம் இந்த தாய்ப்பாசம்.. என்ற கேள்வி இறைவனுக்கும் கூட எழலாம்.. ஆனால் அவள் திருந்தி விட்டாள் என்பது மட்டுமே இதற்கான ஒரே பதில்.. பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையின் மகத்துவத்தை.. தாலி கட்டிய கணவனின் அருமையை உணர்ந்த பிறகு.. கணவனின் மீதான நேசத்தை மனதுக்குள் புதைத்துக் கொள்ள முடிகிறது.. குழந்தையின் மீதான பாசத்தை மறைக்க தெரியவில்லை.. ஒவ்வொரு முறையும் அலைபாய்கிறாள்.. நெஞ்சம் துடித்து கண்ணீர் விடுகிறாள்..

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. இந்த குழந்தை வேண்டாம் என்று வெறுத்து ஓடியவள் அதற்கான பலனை அனுபவிக்கத்தான் வேண்டும்.. வேறு வழி இல்லை.. கர்ம வினை கடவுளுக்கே பொது எனும் போது இவள் எம்மாத்திரம்.. ஆனாலும் மரண தண்டனை கைதிக்கும் மறுபரிசீலனையும் மன்னிப்பும் உண்டெங்கும் போது இவள் தரப்பு நியாயங்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டு வாய்ப்பு வழங்கப்படுவதில் தவறில்லையே..!!

ஸ்வேதா விளையாடிக் கொண்டே ஓடிவந்து படியிறங்கும் நேரத்தில் கால் இடறிகீழே விழப் போக.. அவசரமாக வந்து குழந்தை கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள் அகலி.. எங்கே நின்றாலும் பிள்ளையின் மீது ஒரு கண்ணுன்டு..

அணைத்திருந்த பிள்ளையை இறக்கிவிட மனமில்லை.. அன்னை மீது கிலேசம் கொண்ட சின்னஞ்சிறு மலரோ அவளிடமிருந்து விடுபட முயன்று கை, காலை உதைத்து.. அவள் கன்னத்தில் கீறி அடித்து.. அழ ஆரம்பித்துவிட்டது..

எங்கிருந்தோ ஓடிவந்து அவளிடமிருந்து குழந்தையை பறித்துக் கொண்டாள் இந்திரஜா..

"உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா..? குழந்தைக்குதான் உன்னை பிடிக்கலையே.. அப்புறம் எதுக்காக அவளை தொந்தரவு பண்ற.. குழந்தையை வச்சு ஏதாவது திட்டம் போடுறதா இருந்தா அதை இன்னைக்கே மறந்திடு.. உன் சுயநலத்துக்காக எங்க பிள்ளைய பயன்படுத்த நினைக்காதே..!!" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. பூங்கொடி வந்து விட்டாள்..

"தன்னோட ஆசையை நிறைவேத்திக்க எந்த எல்லைக்கும் போகக் கூடியவதானே இவ..!! கவனம் இந்து.. பெத்த புள்ளைய கொன்னுட்டு கள்ளக்காதலன் கூட ஓடிப்போன எத்தனையோ திருட்டு சிறுக்கிகள பற்றி பேப்பர்ல படிக்கிறோமே..!! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.. கௌதமன் ஏமாறலாம்.. ஆனா நாம உஷாரா இருக்க வேணுமே..!!" பூங்கொடி நெருப்பை வாரி இறைக்க கருகிப் போவாள் அகலிகா..

கண்ணீரை உள்ளடக்கி அங்கிருந்து வேகமாக சென்றாலும்.. "அய்யோடா கேடுகெட்ட நாய்க்கு ரோஷத்த பாரு.. இவ பசப்புக்கு கௌதமன் மயங்கலாம்.. என்னை ஏமாத்த முடியாது.." சிலிர்த்துக் கொண்டு அப்போதும் அவள் பழிச்சொற்கள் அகலிகாவை விடாமல் பின் தொடரும்..

நாட்கள் மாதங்களாய் கடந்து போயிருக்க கொஞ்சம் முன்னேற்றமாய் அனைத்து வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறாள் அகலிகா.. சமைக்கும் போது மட்டும் அவளை உள்ளே விடுவதில்லை..

"அண்ணி.. நம்ம மேல உள்ள ஆத்திரத்துல ஏதாவது விஷத்தை கலந்துட போறா.. அவ மேல கொஞ்சம் கவனமாவே இருங்க..!!" வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொளுத்தி போடுகிறாள் பூங்கொடி..

"இப்ப எதுக்காக இவன் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்யறா.. இவ தொட்ட பொருளை தொடறது கூட பாவம்.." கார்த்திகா தேவி வெறுப்பை உமிழ்ந்து பேசினால் கூட..

"இருக்கட்டும் அண்ணி.. ஒய்யாரமா உட்கார வைச்சு சோறு போட இவன் ஒன்னும் உங்க செல்ல மருமகள் இல்லை.. அவ மனசுலயும் அந்த நினைப்பு என்னைக்குமே வந்துடக்கூடாது.. அப்புறம் மதத்து போய் கொழுப்பெடுத்து திரும்பவும் தப்பு பண்ண ஆரம்பிச்சிடுவா.." பூங்கொடி முடிப்பதற்குள்..

"இப்படி ஒரு அடங்காத கழுதைய வீட்ல சேர்த்துக்கனுமா.. கௌதமன் ஏன் இப்படி அடம் பிடிக்கிறான்.." கார்த்திகா தேவி வேதனையோடு சலித்துக் கொள்வாள்..

"அவன் சேத்துக்கட்டும்.. வாழட்டும் என்ன வேணா செய்யட்டும்.. ஆனா நாம இந்த வீட்ல அவளுக்கு எந்த உரிமையும் கொடுக்க கூடாது.. நம்மள பொறுத்தவரை அவ இந்த வீட்டுக்கு வேலைக்காரி.. அவ்வளவுதான்.. அதை தாண்டி அவளுக்கு எந்த சலுகையும் இல்ல புரிஞ்சுதா.. இதையெல்லாம் தாங்கிட்டு அந்த தறி கெட்ட நாயி இங்க இருந்தா இருக்கட்டும்.. இல்லைனா அதுவே வீட்டை விட்டு புறப்பட்டு போகட்டும்.. நமக்கு நஷ்டம் ஒன்னும் இல்ல.." பூங்கொடி இப்படி சொல்லிக் கொடுக்க.. கார்த்திகா தேவியின் கோபம்.. திரி தூண்டப்பட்டு அனல் தகிக்க பற்றியெரியும்..

அகலிகா இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் ஓடிப் போனதை.. தம்பட்டம் போட்டு ஊர்முழுக்க பரப்பியது இந்த பூங்கொடிதான்.. இல்லையேல் விஷயம் இந்தளவில் தீயாக பரவ வாய்ப்பேது..?

என் பொண்ண நிராகரிச்சுட்டு இன்னொருத்தியை கட்டிக்கிட்டியே..!! உன் அழகு பொண்டாட்டி லட்சணத்தை ஊர் தெரிஞ்சுக்க வேண்டாமா..? என்ற ஆத்திரத்தில் தன் ஆதங்கத்தை அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கொட்டி தீர்க்க.. ஒற்றை நெருப்பு பொறி காட்டை எரிப்பது போல்.. விஷயம் ஊர்முழுக்க பரவி விட்டது..

ஆரம்பத்தில் தன்மகள் நிராகரிக்கப்பட்டதற்கே வன்மத்தை உள்ளடக்கி வைத்திருந்தவள்.. இப்போது ஏற்பாடு செய்த திருமணத்தையே நிறுத்திவிட்டு மகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி.. விலகிச் சென்ற மனைவியை வீட்டுக்குள் அழைத்து வந்திருக்கும் இந்த கௌதமன் மீது.. ஆத்திரமும் வன்ம கங்குகளும் திகுதிகுவென தீப்பிடித்து எரிய பழி உணர்ச்சியை நிறையவே சேர்த்து வைத்திருக்கிறாள்..

அந்தக் கோபத்தின் விளைவாக இதுநாள் வரை வதந்தியாக பரவியிருந்த விஷயத்திற்கு ஒரு முழு உருவம் கொடுத்திருந்தாள் பூங்கொடி..

இதற்கு முன்பான காலங்களில்.. அக்கம் பக்கத்தவரிடம் அகலிக்காவை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருந்தவள்.. இப்போது தன் மகளை கௌதமன் நிராகரித்ததற்கான காரணமாக அவள் கூறியது.. இந்திரஜாவிடம் அவன் தனிப்பட்ட ரகசியமாக சொல்லி இருந்த ஆண்மையின்மை அந்தரங்க விஷயத்தை பற்றி..

ஆம்.. கௌதம் ரகசியமாக சொன்ன விஷயத்தை சூட்டோடு சூடாக தன் அன்னையிடம் வெளிப்படையாக சொல்லி இருந்தாள் இந்திரஜா..

"அம்மா.. மாமா என்னென்னமோ சொல்றாங்க.. ஏதோ ஆண்மை குறைபாடாம்.. அவரால என் கூட குடும்பம் நடத்த முடியாதாம்.. இப்ப என்ன செய்யறது.." கௌதமன் அந்த பக்கம் சொன்னதை இந்த பக்கம் அன்னையிடம் கையை பிசைந்து கொண்டு வந்து நின்றாள் இந்து..

"என்னடி சொல்ற இது எப்போதிலிருந்து..?" ஊரார் பலவிதமாக பேசிக் கொண்டாலும் கௌதமன் வாயிலிருந்து இப்படி ஒரு செய்தியை கேட்டதில் பூங்கொடிக்கு அதிர்ச்சி..

"தெரியலைமா.. அதைப்பத்தி சொல்லல..!! எனக்கும் இந்த விஷயத்தை பற்றி ஆழமா கேட்க ஒரு மாதிரி இருக்குது.." தலையை சொரிந்தாள் சின்னவள்.. பூங்கொடியில் அதிர்ச்சி சில கணங்களில் விலகியது.. முகம் தெளிவடைந்து சிரித்தாள்..

"அதெல்லாம் உண்மையில்ல.. அவன் பொய் சொல்றான் டி.. உன்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்க பார்க்கிறான்.. நீ ஏமாறாதே..!! ஆண்மை இல்லாமலா ஒரு பிள்ளையை பெத்தான்.. அது அம்மா ஜாடையில் இருந்திருந்தா கூட எவனுக்கோ பிறந்ததுன்னு நம்பியிருப்பேன்.. அச்சு அசலா அவனையே உரிச்சி வச்சிருக்கு.. பிள்ளை பாக்கியம் தந்தவனுக்கு ஆண்மை எப்படி இல்லாமல் போகும்..!!சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணிக்க.. நல்ல வாழுவ.." ஒவ்வொரு முறை கௌதமன் தன் பிரச்சினையை எடுத்து சொன்ன போது.. பரவாயில்லை என்று தாராளமானதோடு இந்திரஜா அவனை ஏற்றுக் கொண்டதற்கு அன்னை சொல்லிய இது போன்ற சமாதானங்கள் தான் காரணம்..

ஆனால்.. இப்போது அதே குறையை தன் யுக்தியாக பயன்படுத்திக் கொள்கிறாள் பூங்கொடி..

"என்ன பூங்கொடி உன் மகள் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே.!!" என்று யாராவது குறைபட்டுக் கொண்டால்..

"அட போகட்டும்.. கல்யாணம் நின்னு போனதே நல்ல விஷயம்னு நினைச்சு சந்தோஷப்பட்டு இருக்கேன்.. என் அண்ணன் பையன்.. நானே அவன பத்தி தப்பா சொல்லக்கூடாது.. இருந்தாலும் வேற வழி இல்ல.. அவனுக்கு உடம்புல குறை இருக்கு.. அதனால தான் மொத பொண்டாட்டி ஓடிப் போயிட்டா.. இது தெரியாம நாங்க ரெண்டாங் கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டோம்.. கடைசில நல்ல வேளையா உண்மை தெரிஞ்சிருச்சு.. ஓடிப் போனவளுக்கு வேற வக்கில்ல.. கூட்டிட்டு போனவன் நல்லா உபயோக படுத்திட்டு உட்டுட்டு போயிட்டான்.. வேற வழி இல்லாம திரும்பி வந்து இவன் கூட குடும்பம் நடத்துறா.. என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்.. அவளை நல்ல இடமா பார்த்து கட்டிக்கொடுத்து மகாராணி மாதிரி வாழ வைப்பேன்.." கௌதமன் மீது வெளிப்படுத்த முடியாத தன் ஆத்திரத்தை இப்படி தீர்த்துக் கொள்கிறாள்..

கௌதமன் இந்திரஜாவிற்கு நல்ல மாப்பிள்ளையாக பார்க்கச் சொல்லி தரகரை வரச் சொல்லி இருந்தான்..

"தம்பி.. நீங்க இந்திரஜாவை இரண்டாம் தாரமா கட்டிக்கறதா இருந்ததாமே..!! உங்களுக்கு ஏதோ குறைபாடு இருந்ததாகவும் உங்க மொத பொண்டாட்டி ஓடிப் போயிட்டதாகவும்.. இதையே காரணமா வச்சு இந்த கல்யாணத்தையும் நீங்க நிறுத்திட்டதாகவும் பேசிக்கிறாங்க.."

கௌதமன் மவுனமாக நிமிர்ந்து பார்த்தான்..

"அ.. அதில்ல தம்பி..மாப்பிள்ள வீட்ல பொண்ணோட பேர் சொல்லும்போதே.. உங்க குடும்பத்தோட மொத்த ஜாதகத்தையும் அவங்களே சொல்லிடறாங்க.. நான் என்ன செய்யட்டும்.." தரகர் பவ்யமாக கேட்டாலும் அவர் கண்களில் கேலி.. கூனிக்குறுகிப் போனான் கௌதமன்..

"என் மனைவி திரும்ப வந்துட்டா.. அதனால இன்னொரு கல்யாணத்துக்கு அவசியம் இல்லாம போச்சு.. என்னைப் பத்தி விடுங்க.. இந்திரஜா ரொம்ப நல்ல பொண்ணு.. அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க.. எங்க வீட்டு பொண்ணுக்கு வரன் ஏதாவது பொருத்தமாய் இருக்கிற மாதிரி உங்களுக்கு தோணுச்சுன்னா நேரடியா என்கிட்ட வந்து சொல்லுங்க.. நானே மாப்பிள்ள கிட்ட பேசுறேன்.." என்று உணர்ச்சி இல்லாத இறுகிய குரலில் சொல்ல.. சரி என்ற தலையசைத்து அங்கிருந்து கிளம்பி இருந்தார் தரகர் தணிகாசலம்..

கௌதமனுக்கு மனம் ஆறவில்லை..‌ சுற்றி இருப்பவர்கள் கண்முன்னே மரியாதையோடு நிற்பதும் முதுகுக்கு பின்னே வெட்டி துண்டாடுவதைப் போல் கேலி பேசுவதும்.. தாங்க முடிவதில்லை.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு.. இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள வேண்டும்.. ஆண்மை குறைபாடு என்று ஒவ்வொருவரும் வார்த்தை கத்தியால் குத்தி கிழிக்கும் போது..‌ உயிர் நிலையில் சம்மட்டியால் அடிப்பது போல் அப்படி ஒரு வலி.. ஒரு ஆணின் தன்மானத்தை சீண்டும் வார்த்தை..

ஒரு ஆணாக அவன் எல்லா விதத்திலும் சரியாகத்தான் நடந்து கொண்டான்..‌ ஆனால் எதற்குமே லாயக்கில்லாதவனாக சித்தரிக்கும் இந்த குறைபாடு அவன் ஆங்காரத்தை சோதிக்கிறது.. நிதானம் இழக்க செய்கிறது.. ஏற்கனவே பலவித துன்பங்களால் துவண்டு போயிருந்தவன்.. இந்த வார்த்தையில் வீறு கொண்டெழுந்து அவளைத்தான் தேடிச் சென்றான்..

குழந்தை இந்திரஜாவோடு அவளறையில் விளையாடிக் கொண்டிருந்தது.. வாசலுக்கு வெளியே கொடியில் துணி காய போட்டுக் கொண்டிருந்த அகலியை.. கைப்பற்றி தர தரவென அறைக்குள் இழுத்துச் சென்றான் கௌதமன்..

அறைக்குள் அவளை தள்ளி கதவை சாத்தினான்..

அகலிகா ஒன்று புரியாமல் திரு திருவென விழித்தாள்..

அவன் பார்வையில் நெருப்பு ஜூவாலையின் உக்கிரம்..

"உன்னால தாண்டி.. எல்லாம் உன்னால தான்.. ஆரம்பத்திலிருந்து என்னை மட்டந்தட்டி தட்டி எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பார்வையை உருவாக்கினது நீதான்.. ஒரு கட்டத்துல என்னால முடியவே முடியாதுங்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டதுக்கு காரணமும் நீதான்.." குரலில் உறுமல்..

"ஒரு மனைவியா உன்னை திருப்தி படுத்தனும்னு என் குறையை சரி பண்ணிக்க டாக்டர்கிட்ட போனேன்.. நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா..!! எனக்கு இன்டஃபீரியர் இம்போர்ட்டண்ட் சின்ட்ரமாம்(Inferior impotent syndrom கதைக்காக உருவாக்கப்பட்டது) நீ என்னை தாழ்த்தி பேசினதினால.. என்னை எதுக்குமே லாயக்கில்லாதவன் முடிவு செஞ்சதால வந்த குறை.." என்றான் கண்கள் கலங்கி வேக மூச்சுகளோடு..

அதிர்ச்சியில் உறைந்தாள் அகலி..

"எங்க தொலைச்சோமோ அங்க தான் தேட முடியும்.. இழந்த விஷயத்தை உன்கிட்ட இருந்து திருப்பி எடுக்காம நான் விட போறது இல்ல.. கர்ஜனையோடு அவளை நெருங்கி இருந்தவன்.. அகலிகா சுதாரிப்பதற்கு முன்பு அவளை படுக்கையில் சாய்த்திருந்தான்..

முதலில் பலமுறை தடுமாறினான்..‌ அவனை தனக்குள் இழுத்துக் கொண்டாள் அகலிகா..

இதுநாள் வரை அவன் பேச்சில் தென்பட்ட நிதானம் செயலில் இல்லை.. மிகுதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் முரட்டுத்தனம் உணர்த்தியது.. வன்மையால் அவள் அங்கங்கள் புண்ணாகியது..

அவனை அவனுக்கே திரும்பி தரும் கடமையோடு.. வலியை பொறுத்துக் கொண்டாள் அகலிகா.. இறுதியில் தன் குறைக்கான தீர்வை அவளிடமிருந்து எடுத்துக் கொண்டு கூடலை முடிவு செய்தான் கௌதமன்..‌

தேடல் முடிந்த பிறகும் அவளை விட்டு விலகாமல் வேர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்கியபடி அவள் முகம் பார்த்தான்.. அவன் கண்களில் திருப்தி.. ஆனால் அவள் விழிகள் கண்ணீரில் நனைந்திருந்தன ..

தொடரும்..
 
Last edited:
Joined
Jul 10, 2024
Messages
42
என்ன சொல்றதுன்னே தெரியல. 🤔🤔🤔🤔கணவன் தனக்கு ஏற்ற மாதிரி இல்லைன்னு குத்தி பேசி அதனால அவன் மனம் கசங்கி இயலாத நிலைமைக்கு ஆளாகிட்டானே. பாவம் கௌதம்.🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

கௌதம் வீட்டிற்குள் உன் மனைவியை விட மோசமான ஒரு பாம்பு உலாவிக்கிட்டு இருக்கு. உங்க யாருக்குமே அது தெரியல.

பூங்கொடி வாய் இருக்கே அது நாற வாய். 😡😡😡😡😡😡😡நல்ல வார்த்தையே வராது. அத்தனையும் விஷம் தோய்ந்த வார்த்தைகள்🫢🫢🫢🫢🫢 🙄🙄🙄🙄🙄. ஜாக்கிரதையா இரு கௌதமா.
 
Last edited:
Active member
Joined
Jan 18, 2023
Messages
104
💛🩷🩷💜❤️❤️💜💚🩷💛🩷💜❤️❤️💜🩷💛💛🩷💜❤️❤️🥳🥳🥳❤️💚🩷💛💛💚❤️🥳🥳❤️💜💚💚💚💚💚💚
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jul 31, 2024
Messages
32

🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Top