• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 8

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
70
திலோத்தமா ஒரு ஆடம்பர பிரியை.. கிட்டத்தட்ட பேராசை பிடித்தவள் என்றே சொல்லலாம்.. உலக இன்பங்களில் நாட்டம் கொண்ட அவளை சமாளிக்க முடியாமல் அவள் கணவன் விமல் திணறினான்..

அக்கம் பக்கத்து வீடுகளின் அந்தஸ்த்தோடு தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை போலவே தன் தராதரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று கணவனை படாத பாடு படுத்துபவள்..

"ஏன் இந்த டிவிக்கு என்ன..?"

"அவங்க வீட்ல 40 இன்ச் டிவி இருக்கு.. ஸ்ரேயா இங்க வந்து இந்த டிவியை கேவலமா பாத்துட்டு போறா.. எனக்கு எவ்வளவு அசிங்கமாக போயிடுச்சு தெரியுமா..?"

"மத்தவங்கள பத்தி நாம ஏன் கவலைப்படணும்.. வருமானத்துக்கு ஏத்த மாதிரிதான் செலவு செய்யணும்.."

"வருமானத்தை உயர்த்திக்கோங்க அதுக்கேத்த மாதிரி இன்னும் அதிகமாவே செலவு செய்யலாம்.."

"என்னால இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் இதெல்லாம் தெரிஞ்சிதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.."

"அதுக்காக காலம் பூரா இப்படியே இருந்திட முடியாது.. எல்லாரும் வாழ்க்கையில முன்னேறிகிட்டே போறாங்க.. ஆனா நீங்க மட்டும்தான் இருக்கறத வச்சு வாழனும் கிடைச்சதை வச்சு சந்தோஷப்படணும்னு சொல்லி என் கழுத்தறுக்கறீங்க..!"

"திலோ.. நான் கொண்டு வர்ற சம்பளத்துக்குள்ள உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும் ஆனா ஆடம்பரமா வாழனுங்கற உன்னோட பேராசை தான் எதிலயும் திருப்தி காண முடியாம உன்னை அலைபாய வைக்குது.."

"டிவி மிக்ஸி சோபா ஃபேன் எல்லாமே அத்தியாவசிய பொருள்தானே.. இதுல என்ன ஆடம்பரத்தை பாத்துட்டீங்க.." திலோத்தமா பொறுமை இழந்தாள்‌.

"கத்தாதே குழந்தை நம்மளையே பாக்கறான்.. அவன் மனசுல எதுவும் தப்பா பதிஞ்சிட கூடாது..!"

"நீங்கதான் என்னை கத்த வைக்கிறீங்க.."

"ஐயோ.. இப்ப என்னங்கற..?"

"முதல்ல பெரிய டிவி வாங்கி வீட்ல மாட்டுங்க..!"

"சரி பார்க்கறேன்.."

"பாக்கறேன் எல்லாம் கிடையாது..! இந்த மாதிரி நாலு பொருள் வாங்கி போட்டாதான் சம்பாதிக்கணும் முன்னேறனும்னு வெறி வரும்.. போதுங்கற மனசு எதுக்கும் உதவாது.."

"பணம் மரத்துல காய்க்குதோ..?"

"விருப்பப்பட்டதை வாங்க கிரெடிட் கார்டு இன்ஸ்டால்மெண்டுன்னு ஏகப்பட்ட வழி இருக்கு..! நீங்க சொல்றதெல்லாம் வெறும் சாக்கு.."

"உன் வாய்க்கும் பூட்டு கிடையாது உன் பேராசைக்கும் ஒரு அளவு கிடையாது.."

முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் திலோத்தமா..

மனைவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் கணவனுக்கு ஒன்றுமே ஓடாது..! சரிதான் போடி என்று வீராப்பாக திரிந்தாலும் மனைவியின் முகம் சுருங்கினால் ஒரு ஆணால் தெளிவாக எதையும் யோசிக்க முடிவதில்லை..

இந்த உளவியலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் திலோ..

மனைவியின் பாராமுகம் விமலை வாட்டி வதைக்க.. கடன் அட்டையின் மூலம் பெரிய டிவியை வாங்கி வீட்டில் மாட்டி வைத்து அவளை மகிழ்வித்தான்..

சில மாதங்கள் அந்த சந்தோஷம் நீடித்தது..

"ஹவுஸ் ஓனர் சரியில்ல.. கொஞ்சம் கூட அந்த பொம்பள மதிக்கவே மாட்டேங்குது.. அது சரி இந்த மாதிரி சின்ன வீட்ல இருந்தா யாரு தான் நம்மள மதிப்பா..!"

"மூணு பேருக்கு ஒரு ஹால் பெட் ரூம் கிச்சன் போதாதா..! இந்த வீட்டை கிளீன் பண்ணவே உன்னால முடியல.. எங்க பார்த்தாலும் குப்பை.." அவன் சலித்தான்..

"ஆமா என்னை குறை சொல்றதுக்கு தினம் உங்களுக்கொரு காரணம் வேணும்.. இங்க பாருங்க நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து லீசுக்கு எடுங்க.."

"நீ தெரிஞ்சுதான் பேசுறியா.. என் சம்பளத்துல இதெல்லாம் அளவுக்கு மீறின விஷயம்.."

"தெரியாம சொல்லல.. ஹவுஸ் ஓனரே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுன பிறகு தான் வீடு பார்க்க ஆரம்பிப்பீங்களா..! பெரிய வீடா பாத்து போனாதான் இந்த மாதிரி சொந்தமா வீடு கட்டணும்னு ஆசை வரும்.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.." என்றவள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி ஹவுஸ் ஓனர் வீட்டு பெண்மணியுடன் சண்டை போட்டு அவசரமாக வீடு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அவனை தள்ளினாள்..

பெரிய வீடு குடி வந்த பிறகு கூடத்தை நிறைக்க சோபா செட்.. அலங்காரப் பொருட்கள்..

"இவ்ளோ பெரிய வீட்டுக்கு ஏசி இல்லாம போனா நல்லாவா இருக்கும்..! வீட்டுக்கு வர்றவங்க ஏசி போடுங்கன்னு சொல்றாங்க.. எனக்கு மானமே போகுது.."

"ஏசி இல்லைனா மானம் போயிடுமா இது புதுசா இருக்கே.." அவன் கேலியாக சிரித்தான்..

"நீங்க வேலைக்கு போயிட்டு ராத்திரி தான் வர்றீங்க.. இந்த வீட்டுக்குள்ள அனல்ல வெந்து சாகற மரவெட்டை மாதிரி நானும் என் புள்ளையும் படுற கஷ்டம் உங்களுக்கு எங்க புரிய போகுது.."

"நான் மட்டும் என்ன..? ஏசி ரூம்ல சொகுசாவா உக்காந்த மேனிக்கு வேலை செய்யறேன்.. ஃபேக்டரியில மெஷின் சூட்டுல கால் வலிக்க நின்னு தினமும் கஷ்டப்படறேன்.. நைட்டு தூக்கம் வர மாட்டேங்குது..! மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வு தேடி ஆசையா உன்னை நெருங்கினா நீயும் ஒத்துழைக்காம எரிஞ்சு விழற.. என் கஷ்டத்தை யார்கிட்ட போய் சொல்றது..!"

"ஓஹோ மனசுல இவ்வளவு வஞ்சத்தை வச்சுக்கிட்டு தான் என்கூட குடும்பம் நடத்துனீங்களா..! அப்போ வேண்டா வெறுப்பா தான் என்கூட வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்படித்தானே.."

"ஐயோ கடவுளே.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா..? எப்பவும் மனுஷனை ரெஸ்ட் எடுக்க விடாம உன் புராணத்தை ஆரம்பிச்சிடுற..!"

"நான் எதுவும் சொல்லல.. நீங்க நல்லா சாப்பிட்டு போய் தூங்குங்க..!"

அடுத்த மாதம் தவணை முறை ஏசி வந்தது வீட்டுக்கு..

இப்படி ஒவ்வொன்றாய் செலவு அனுமதியின்றி பாக்கெட்டில் ஏறி அமர்ந்து கொள்ள.. பொருளாதார பிரச்சினைகளை தூக்கி சுமக்க முடியாமல் திணறினான் விமல்..

"வீட்ல சும்மா தானே இருக்கேன் குழந்தையை கிரஷ்ல விட்டுட்டு நானும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.." திலோத்தமா சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டான்..! பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவள் உதவுவதாய் நினைத்தான்..

ஆனால் அப்படி இல்லை.. வாங்கும் சம்பளத்தில் ஒரு பைசா கூட அவனிடம் தரவில்லை திலோ.. வீட்டுச் செலவிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை..!

"என்ன திலோ.. கடன் கழுத்தை நெரிக்குது.. மளிகை பால் கரண்ட் பில்லுனு குழந்தைக்கு டாக்டர் செலவுன்னு மாசம் செலவு எகிறிக்கிட்டே போகுது.. பணத்த கண்ணுல காட்டவே மாட்டேங்கற.. என் பிரச்சனைக்கு உதவலைன்னா நீ ஏன் வேலைக்கு போகணும்.." ஓரிரு மாதங்கள் கழித்து மனதுக்குள் வைத்து புழுங்க முடியாமல் வெளிப்படையாக கேட்டு விட்டான் விமல்

"ரெண்டு பேரும் வாங்கற சம்பளத்தை செலவழிச்சிட்டா சேமிப்புன்னு என்ன மிஞ்சும்.. நான் சமாதிக்கிற பணமாவது பத்திரமா இருக்கட்டும் ஆபத்து காலத்துல உதவும்.."

"கடனையெல்லாம் அடைச்சிட்டு அப்புறம் சேமிக்க தொடங்கினா போதும்.. இனி வாங்கற சம்பள பணத்துல பாதியை நீ என்கிட்ட தான் கொடுக்கணும்.."

"உங்ககிட்ட எல்லாத்தையும் தந்து அழறதுக்குத்தான் நான் வேலைக்கு போறேனா..! கஷ்டப்பட்டு நான் சம்பாதிக்கிறது என் எதிர்கால பாதுகாப்புக்காக.."

விமல் ஆடிப் போனான்..

"எப்போதிலிருந்து இப்படி சுயநலமா யோசிக்க ஆரம்பிச்ச திலோ..! இது நம்ம குடும்பம் நம்ம பொண்டாட்டி நம்ம குழந்தையின்னு நினைச்சு நான் உழைக்கறேன்.. ஆனால் நீ என்னவோ தனியா பிரிச்சு பேசுற..!"

"நான் ஒன்னும் தப்பா சொல்லலையே.. நான் இல்லைன்னா உங்களால வாழ முடியும்.. ஆனால் நீங்க இல்லைனா எனக்கொரு ஆதாரம் வேண்டாமா..!"

திகைத்துப் போனான் விமல்.. அதன் பிறகு அவள் பணத்தையும் கேட்கவில்லை.. அவளிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டான்.. தனியாளாக வீட்டுச் செலவு கடனை அனைத்தையும் சமாளிக்க முயன்றான்.. ஆனால் முடியவில்லை..

இந்த நிலையில் தான் மில் மூடப்பட்டு விமலுக்கு வேலை போனது.. கம்பெனியிலிருந்து வழங்கப்பட்ட சேமிப்பு நிதியில் கடனையெல்லாம் அடைத்துவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான்..

வேலை கிடைக்கவில்லை.. கிடைத்த வேலையில் நிலைக்க முடியாதபடிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்க.. திலோத்தமா அவன் இயலாமையை சுட்டிக்காட்டி மட்டந்தட்டிக் கொண்டே இருந்தாள்..

சரியாக உணவு உண்ணும் நேரத்தில் மனதை நோகடிக்கும் படி ஏதாவது பேசி உள்ளே இறங்கும் உணவை விஷமாக மாற்றி அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றாள்..

நாளுக்கு நாள் திலோத்தமாவின் பேச்சுக்களை தாங்க முடியாமல் ஒருநாள் துணிந்து வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் விமல்..!

சொந்த ஊருக்கும் செல்லவில்லை நண்பர்களுக்கும் அவனைப் பற்றிய தகவல் தெரியவில்லை எங்கு சென்றான் என்றே தெரியாத நிலையில் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளானாள் திலோத்தமா..

என்னதான் தன் கணவனை உதவாதவன் வெத்துவேட்டு.. திறமை இல்லாதவன் என்று மட்டம் தட்டி குறை கூறினாலும் அவன் தன்னோடு இருந்தது எத்தனை பெரிய பலம் என்று அவன் இல்லாத போதுதான் உணர்ந்து கொண்டாள்..

அப்படி ஒரு மன அழுத்தத்தில்தான் தன் தோழியின் சிபாரிசு படி மனநிலை மருத்துவர் டாக்டர் வருணிடம் சிகிச்சைக்காக வந்திருந்தாள்..!

அவளுக்கு நம்பிக்கையூட்டி..‌ தனியாக வாழ்வதற்கான தைரியத்தை தந்து மனநல பிரச்சினைகளிலிருந்து வெளியே கொண்டு வந்திருந்தான் வருண்..!

அந்த சுழ்நிலையில் அவனுக்கும் ஒரு உதவி தேவைப்பட.. திலோத்தமாதான் அதற்கு சரியானவள் என்று முடிவு செய்து அவளிடம் தன் பிரச்சினையை சொல்லி மனைவியாக நடிக்க கேட்டது பின்னாளில் தவறாக போனது..

அவள் மூளையோ சாமர்த்தியமாக வேறு கணக்குப் போட்டது..

பெரிய டாக்டர் ஆடம்பர வசதி..! பங்களாவில் சொகுசாக வாழலாம் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.. நடிப்பு தானே..! நிறைய பணம் தருவார்.. தன் மகன் அமரேஷ் எதிர்காலத்துக்காக பெரிதாக செய்வதாக வாக்கு தந்திருக்கிறார்.. கரும்பு தின்ன கசக்குமா என்ன..!

அவன் நிபந்தனைகளுக்ககெல்லாம் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொண்டதைப் போன்ற சோடனையுடன் இதோ மூன்று வருடங்களாய் அவன் வீட்டில் தான் வசித்துக் கொண்டிருக்கிறாள்..

அவ்வப்போது சிரித்து பேசி தலையை காட்டிவிட்டு தன் இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்தவளுக்கு நடிப்பு என்பது அத்தனை எளிதாய் இருக்கவில்லை..

அக்கா தங்கை அவர்கள் குழந்தைகள் சதா வந்து போகும் இந்த வீட்டில் மாமனார் மாமியார் வேறு இழுத்து அமர்த்தி கொண்டு பேசுவதென ஒரே தொந்தரவு.. கலகலப்பான பெரிய குடும்பம்.. அவர்களோடு பொருந்திப் போக முடியாத அளவிற்கு ஏதோ அலர்ஜி.. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறாள்..

"ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கற என்ன பிரச்சனை உனக்கு.. "

"நாங்க உயிரோடு இருக்கும்போதே உனக்கொரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறோம்.. அது நடக்குமா நடக்காதா.."

டேய் வருண் எங்க வீட்டுக்காரரோட சித்தி பொண்ணு ஒன்னு அன்னைக்கு எங்க ஓரகத்தி பையன் கல்யாணத்துக்கு வந்திருந்துச்சு.. ஆள் அம்சமா இருக்குது.. டாக்டருக்கு படிச்சிருக்கதாம்.. போட்டோ அனுப்புறேன் பாக்கறியாடா.."

"அம்மா தினமும் போன் பண்ணி அழுகுது.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு வயசு 30க்கு மேல போயிடுச்சு.. இதுக்கு மேல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம் வர்ற வரனையும் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்.. எனக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நான் ஃபோன வைக்கறதா இல்லை.."

"அண்ணா எங்க வீட்டுக்காரர் சொந்தத்துல ஒரு படிச்ச பொண்ணு இருக்குதாம்.. உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க.. முடியாதுன்னு சொல்ல எனக்கு சங்கடமா இருக்குது அம்மா கிட்ட சொன்னா உன்கிட்ட பேச சொல்றாங்க.. நான் என்ன சொல்லட்டும் நீயே சொல்லு.. நீ வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அந்த பொண்ணு கிட்ட எந்த குறையும் இல்லை ஒருவாட்டி பேசி பார்க்கறியா..?"

இப்படியே நீளும் தொல்லைகளை சமாளிக்க முடியாமல்தான் நிம்மதி பறிபோய் வேறு வழியில்லாமல் ஒருதாள் அந்த முடிவை எடுத்திருந்தான் வருண்..

ஆனால் அதிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள்..!

பேசாம சன்னியாசம் வாங்க போறேன்னு சொல்லி விஷயத்தை முடிச்சு விட்டிருக்கலாம் என்று இப்போது புலம்பி கொண்டிருக்கிறான்..

"ஹலோ..!"

"சொல்லு ராம்.."

ராம் என்பவன் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளன்

"சார் நீங்க சொன்னது உண்மைதான்..! அந்த பொண்ணு தேம்பாவணி.. அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஹஸ்பண்ட் பேரு சத்யா.. சொந்தமா பிசினஸ் பண்றார்.. தேம்பாவணியோட அப்பா கேஷவ் குமார்.. அந்த பிசினஸ்ல ஷேர் ஹோல்டர்.. மத்தபடி ப்ராபர்ட்டிஸ் எல்லாம் தேம்பாவணியோட பேருலதான் இருக்குன்னு கேள்விப்பட்டேன்..!"

"ஓஹோ..! ராம் எனக்கு தேம்பாவணியோட ஹஸ்பெண்ட் சத்யாவோட நம்பர் வேணுமே..!"

"ஓகே சார் நான் அனுப்பறேன்.. வேற ஏதாவது டீடைல் வேணுமா சார்.."

"இல்ல ராம்.. ஏதாவது வேணும்னா நான் மறுபடி கூப்பிடறேன்.." அழைப்பை துண்டித்துக் கொண்டான்..

தேம்பாவணி வெளிப்படையாக எதுவும் சொல்ல தயங்கும் நிலையில் அவள் ஆழ்மன பயங்களை களைய வேண்டும் என்றால் முறைப்படி ஹிப்னாட்டிக் செஷன் செல்ல வேண்டும்.. அதற்கு அவள் சம்மதம் வேண்டும்.. ஒருவேளை அவள் சம்மதிக்காமல் போனால் அவள் உறவினர்களோடு கலந்து பேசி மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்..!

இந்த யோசனையில்தான் தேம்பாவணியின் பின்புலம் பற்றி விசாரிக்க சொல்லியிருந்தான் வரூண்..

அலைபேசி எண் கிடைத்ததும் உடனடியாக சத்யாவிற்கு அழைத்திருந்தான்..

"ஹலோ.."

"ஹலோ திஸ் இஸ் வருண் சைக்கியாட்ரிஸ்ட் ஸ்பீக்கிங்.."

காரில் ஏறப்போன சத்யா கண்களை சுருக்கியபடி கதவை திறந்த நிலையில் அப்படியே நின்றிருந்தான்.

"எஸ் டாக்டர்.."

"உங்க வைஃப் தேம்பாவணியை பத்தி கொஞ்சம் பேசணுமே..!"

கதவை சாத்திவிட்டு பார்க்கிங் ஏரியாவில் சற்று தள்ளி வந்தவன் "சொல்லுங்க டாக்டர்" என்றான்..!

"தேம்பாவணி இப்ப பெரிய ஆபத்துல இருக்காங்க..! அவங்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் வேணும்..! .தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க மெண்டல் கண்டிஷன் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்க்கு போக வாய்ப்பு நிறையவே இருக்கு.. இதனால அவங்க உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..! நீங்க நேர்ல வந்தா இதை பத்தி தெளிவா பேசலாம்.."

"டாக்டர் என் வைஃப் உங்ககிட்ட ட்ரீட்மென்டுக்காக வந்தாங்களா..?"

"எஸ் ஒரே ஒருமுறை.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க.. ஆனா அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னா எனக்கு உங்களோட சப்போர்ட் வேணும்.. சோ ப்ளீஸ் இதை பத்தி நேர்ல உங்க கிட்ட பேசணும்.."

"ஓஓஓ.. பாக்கலாமே டாக்டர்..! நான் உங்ககிட்ட அப்புறமா பேசறேன்.." அலட்சியமான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தவனின் புருவங்கள் தீவிர யோசனையில் சுருங்கின..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
May 20, 2025
Messages
8
Paithiya karan enna panni tholaiyaporano......🙄🙄🙄🙄🙄🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50
திலோத்தமா ஒரு ஆடம்பர பிரியை கிட்டத்தட்ட பேராசை பிடித்தவள் என்றே சொல்லலாம்.. உலக இன்பங்களில் நாட்டம் கொண்ட அவளை சமாளிக்க முடியாமல் அவள் கணவன் விமல் திணறினான்..

அக்கம் பக்கத்து வீடுகளின் அந்தஸ்த்தோடு தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை போலவே தன் தராதரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று கணவனை படாத பாடு படுத்துவாள்..

"ஏன் இந்த டிவிக்கு என்ன..?"

"அவங்க வீட்ல 40 இன்ச் டிவி இருக்கு.. ஸ்ரேயா இங்க வந்து இந்த டிவியை கேவலமா பாத்துட்டு போறா.. எனக்கு எவ்வளவு அசிங்கமாக போயிடுச்சு தெரியுமா..?"

"மத்தவங்கள பத்தி நாம ஏன் கவலைப்படணும்.. வருமானத்துக்கு ஏத்த மாதிரி தான் செலவு செய்யணும்.."

"வருமானத்தை உயர்த்திக்கோங்க அதுக்கேத்த மாதிரி இன்னும் அதிகமாவே செலவு செய்யலாம்.."

"என்னால இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் இதெல்லாம் தெரிஞ்சிதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.."

"அதுக்காக வாழ்க்கை பூரா இப்படியே இருந்திட முடியாது.. எல்லாரும் வாழ்க்கையில முன்னேறிகிட்டே போறாங்க.. ஆனா நீங்க மட்டும்தான் இருக்கறத வச்சு வாழனும் கிடைச்சதை வச்சு சந்தோஷப்படணும்னு சொல்லி என் கழுத்தறுக்கிறீங்க..!"

"திலோ.. நான் கொண்டு வர சம்பளத்துக்குள்ள உன்னால தாராளமா குடும்ப நடத்த முடியும் ஆனா ஆடம்பரமா வாழனுங்கற உன்னோட பேராசை தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.."

"டிவி மிக்ஸி சோபா ஃபேன் எல்லாமே அத்தியாவசிய பொருள்தானே.. இதுல என்ன ஆடம்பரத்தை பாத்துட்டீங்க.." திலோத்தமா பொறுமை இழந்தாள்‌.

"கத்தாதே குழந்தை நம்மளையே பாக்கறான்.. அவ மனசுல எதுவும் தப்பா பதிஞ்சிட கூடாது..!"

"நீங்கதான் என்னை கத்த வைக்கிறீங்க.."

"ஐயோ.. இப்ப என்னங்கற..?"

"முதல்ல பெரிய டிவி வாங்கி இங்க மாட்டுங்க..!"

"சரி பார்க்கறேன்.."

"பாக்கறேன் எல்லாம் கிடையாது..! இந்த மாதிரி நாலு பொருள் வாங்கி போட்டாதான் சம்பாதிக்கணும் முன்னேறனும்னு வெறி வரும்.. போதுங்கற மனசு எதுக்கும் உதவாது.."

"பணம் மரத்துல காய்க்குதோ..?"

"விருப்பப்பட்டதை வாங்க கிரெடிட் கார்டு இன்ஸ்டால்மெண்டுன்னு ஏகப்பட்ட வழி இருக்கு..! நீங்க சொல்றதெல்லாம் சாக்கு.."

"உன் வாய்க்கும் பூட்டு கிடையாது உன் பேராசைக்கும் ஒரு அளவு கிடையாது.." முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் திலோத்தமா..

மனைவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் கணவனுக்கு ஒன்றுமே ஓடாது..! சரிதான் போடி என்று வீராப்பாக திரிந்தாலும் மனைவியின் முகம் சுருங்கினால் ஒரு ஆணால் தெளிவாக எதையும் யோசிக்க முடிவதில்லை..

இந்த உளவியலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் திலோ..

திலோத்தமாவின் பாராமுகம் விமலை வாட்டி வதைக்க.. கடன் அட்டையின் மூலம் பெரிய டிவியை வாங்கி வீட்டில் மாட்டி வைத்து அவளை மகிழ்வித்தான்..

சில மாதங்கள் அந்த சந்தோஷம் நீடித்தது..

"ஹவுஸ் ஓனர் சரியில்ல.. கொஞ்சம் கூட அந்த பொம்பள மதிக்கவே மாட்டேங்குது.. அது சரி இந்த மாதிரி சின்ன வீட்ல இருந்தா யாரு தான் நம்மள மதிப்பா..!"

"மூணு பேருக்கு ஒரு ஹால் பெட் ரூம் கிச்சன் போதாதா..! இந்த வீட்டை கிளீன் பண்ணவே உன்னால முடியல எங்க பார்த்தாலும் குப்பை.." அவன் சலித்தான்..

"ஆமா என்னை குறை சொல்றதுக்கு உங்களுக்கொரு காரணம் வேணும்.. இங்க பாருங்க நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து லீசுக்கு எடுங்க.."

"நீ தெரிஞ்சுதான் பேசுறியா.. என் சம்பளத்துல இதெல்லாம் அளவுக்கு மீறின விஷயம்.."

"தெரியாம சொல்லல.. ஹவுஸ் ஓனரே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுன பிறகு தான் வீடு பார்க்க ஆரம்பிப்பீங்களா..! பெரிய வீடா பாத்து போனாதான் இந்த மாதிரி சொந்தமா வீடு கட்டணும்னு ஆசை வரும்.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.." என்றவள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி ஹவுஸ் ஓனர் வீட்டு பெண்மணியுடன் சண்டை போட்டு அவசரமாக வீடு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அவனை தள்ளினாள்..

பெரிய வீடு குடி வந்த பிறகு கூடத்தை நிறைக்க சோபா செட்.. அலங்காரப் பொருட்கள்..

"இவ்ளோ பெரிய வீட்டுக்கு ஏசி இல்லாம போனா நல்லாவா இருக்கும்..! வீட்டுக்கு வர்றவங்க ஏசி போடுங்கன்னு சொல்றாங்க எனக்கு மானமே போகுது.."

"ஏசி இல்லைனா மானம் போயிடுமா இது புதுசா இருக்கே.." அவன் கேலியாக சிரித்தான்..

"நீங்க வேலைக்கு போயிட்டு ராத்திரி தான் வரீங்க.. இந்த வீட்டுக்குள்ள அனல்ல வெந்து சாகுற மரவெட்டை மாதிரி நானும் என் புள்ளையும் படுற கஷ்டம் உங்களுக்கு எங்க புரிய போகுது.."

"நான் மட்டும் என்ன..? ஏசி ரூம்ல சொகுசாவா வேலை செய்யறேன்.. ஃபேக்டரியில மெஷின் சூட்டுல நின்னு தினமும் கஷ்டப்படுறேன்.. நைட்டு தூக்கம் வர மாட்டேங்குது..! மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வு தேடி ஆசையா உன்னை நெருங்கினா நீயும் ஒத்துழைக்காம எரிஞ்சு விழற.. என் கஷ்டத்தை யார்கிட்ட போய் சொல்றது..!"

"ஓஹோ மனசுல இவ்வளவு வஞ்சத்தை வச்சுக்கிட்டு தான் என்கூட குடும்பம் நடத்துனீங்களா..! அப்போ வேண்டா வெறுப்பா தான் என்கூட வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்படித்தானே.."

"ஐயோ கடவுளே.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா..? எப்பவும் மனுஷனை ரெஸ்ட் எடுக்க விடாம உன் புராணத்தை ஆரம்பிச்சிடுற..!"

"நான் எதுவும் சொல்லல.. நீங்க நல்லா சாப்பிட்டு போய் தூங்குங்க..!"

அடுத்த மாதம் தவணை முறை ஏசி வந்தது வீட்டுக்கு..

இப்படி ஒவ்வொன்றாய் செலவு அனுமதியின்றி பாக்கெட்டில் ஏறி அமர்ந்து கொள்ள.. பொருளாதார பிரச்சினைகளை தூக்கி சுமக்க முடியாமல் திணறினான் விமல்..

"வீட்ல சும்மா தானே இருக்கேன் குழந்தையை கிரஷ்ல விட்டுட்டு நானும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.." திலோத்தமா சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டான்..! பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவள் உதவுவதாய் நினைத்தான்..

ஆனால் அப்படி இல்லை.. வாங்கும் சம்பளத்தில் ஒரு பைசா கூட அவனிடம் தரவில்லை திலோ.. வீட்டுச் செலவிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை..!

"என்ன திலோ.. கடன் கழுத்தை நெரிக்குது.. மளிகை பால் கரண்ட் பில்லுனு குழந்தைக்கு டாக்டர் செலவுன்னு மாசம் செலவு எகிறிக்கிட்டே போகுது.. பணத்த கண்ணுல காட்டவே மாட்டேங்குற.. என் பிரச்சனைக்கு உதவலைன்னா நீ ஏன் வேலைக்கு போகணும்.." ஓரிரு மாதங்கள் கழித்து மனதுக்குள் வைத்து புழுங்க முடியாமல் வெளிப்படையாக கேட்டு விட்டான் விமல்

"ரெண்டு பேரும் வாங்கற சம்பளத்தை செலவழிச்சிட்டா சேமிப்பு என்ன இருக்கும்.. நான் சமாதிக்கிற பணமாவது பத்திரமா இருக்கட்டும் ஆபத்து காலத்துல உதவும்.."

"கடனையெல்லாம் அடைச்சிட்டு அப்புறம் சேமிக்க தொடங்கினா போதும்.. இனி வாங்கற சம்பள பணத்துல பாதியை நீ என்கிட்ட தான் கொடுக்கணும்.."

"உங்ககிட்ட எல்லாத்தையும் தந்து அழறதுக்குத்தான் நான் வேலைக்கு போறேனா..! கஷ்டப்பட்டு நான் சம்பாதிக்கிறது என்னுடைய எதிர்கால பாதுகாப்புக்காக.."

விமல் ஆடிப் போனான்..

"எப்போதிலிருந்து இப்படி சுயநலமா யோசிக்க ஆரம்பிச்ச திலோ..! இது நம்ம குடும்பம் நம்ம பொண்டாட்டி நம்ம குழந்தையின்னு நினைச்சு நான் உழைக்கறேன்.. ஆனால் நீ என்னவோ தனியா பிரிச்சு பேசுற..!"

"நான் ஒன்னும் தப்பா சொல்லலையே.. நான் இல்லைன்னா உங்களால வாழ முடியும் ஆனால் நீங்க இல்லைனா எனக்கொரு ஆதாரம் வேண்டாமா..!"

திகைத்துப் போனான் விமல்.. அதன் பிறகு அவள் பணத்தையும் கேட்கவில்லை.. அவளிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டான்.. தனியாளாக வீட்டுச் செலவு கடனை அனைத்தையும் சமாளிக்க முயன்றான் முடியவில்லை..

இந்த நிலையில் தான் மில் மூடப்பட்டு விமலுக்கு வேலை போனது.. கம்பெனியிலிருந்து வழங்கப்பட்ட சேமிப்பு நிதியில் கடனையெல்லாம் அடைத்துவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான்..

வேலை கிடைக்கவில்லை.. கிடைத்த வேலையில் நிலைக்க முடியாதபடிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்க.. திலோத்தமா அவன் இயலாமையை காட்டி மட்டந்தட்டிக் கொண்டே இருந்தாள்..

சரியாக உணவு உண்ணும் நேரத்தில் மனதை நோகடிக்கும் படி ஏதாவது பேசி உள்ளே இறங்கும் உணவை விஷமாக மாற்றி அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றாள்..

நாளுக்கு நாள் திலோத்தமாவின் பேச்சுக்களை தாங்க முடியாமல் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தான் விமல்..!

சொந்த ஊருக்கு செல்லவில்லை நண்பர்களுக்கும் அவனைப் பற்றிய தகவல் தெரியவில்லை எங்கு சென்றான் என்றே தெரியாத நிலையில் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளானாள் திலோத்தமா..

என்னதான் தன் கணவனை உதவாதவன் வெத்துவேட்டு.. திறமை இல்லாதவன் என்று மட்டம் தட்டி குறை கூறினாலும் அவன் தன்னோடு இருந்தது எத்தனை பெரிய பலம் என்று அவன் இல்லாத போதுதான் உணர்ந்து கொண்டாள்..

அப்படி ஒரு மன அழுத்தத்தில்தான் தன் தோழியின் சிபாரிசு படி மனநிலை மருத்துவர் டாக்டர் வருணிடம் சிகிச்சைக்காக வந்திருந்தாள்..!

அவளுக்கு நம்பிக்கையூட்டி..‌ தனியாக வாழ்வதற்கான தைரியத்தை தந்து மனநல பிரச்சினைகளிலிருந்து வெளியே கொண்டு வந்திருந்தான் வருண்..!

அந்த சுழ்நிலையில் அவனுக்கும் ஒரு உதவி தேவைப்பட.. திலோத்தமாதான் அதற்கு சரியானவள் என்று முடிவு செய்து அவளிடம் தன் பிரச்சினையை சொல்லி மனைவியாக நடிக்க சொன்னது தவறாக போனது..

அவள் மூளையோ சாமர்த்தியமாக வேறு கணக்குப் போட்டது..

பெரிய டாக்டர் ஆடம்பர வசதி..! பங்களாவில் சொகுசாக வாழலாம் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.. நடிப்பு தானே..! நிறைய பணம் தருவார்.. அமரேஷ் தன் மகனுக்காக எதிர்காலத்துக்காக பெரிதாக செய்வதாக வாக்கு தந்திருக்கிறார்.. கரும்பு தின்ன கசக்குமா என்ன..!

அவன் நிபந்தனைகளுக்ககெல்லாம் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொண்டதைப் போன்ற சோடனையுடன் இதோ மூன்று வருடங்களாய் அவன் வீட்டில் தான் வசித்துக் கொண்டிருக்கிறாள்..

அவ்வப்போது சிரித்து பேசி தலையை காட்டிவிட்டு தன் இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்தவளுக்கு நடிப்பு என்பது அத்தனை எளிதாய் இருக்கவில்லை..

அக்கா தங்கை அவர்கள் குழந்தைகள் சதா வந்து போகும் இந்த வீட்டில் மாமனார் மாமியார் வேறு இழுத்து அமர்த்தி கொண்டு பேசுவதென ஒரே தொந்தரவு.. கலகலப்பான பெரிய குடும்பம்.. அவர்களோடு பொருந்திப் போக முடியாத அளவிற்கு ஏதோ அலர்ஜி.. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறாள்..

"ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற என்ன பிரச்சனை உனக்கு.. "

"நாங்க உயிரோடு இருக்கும்போதே உனக்கொரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறோம்.. அது நடக்குமா நடக்காதா.."

டேய் வருண் எங்க வீட்டுக்காரரோட சித்தி பொண்ணு ஒன்னு அன்னைக்கு எங்க ஓரகத்தி பையன் கல்யாணத்துக்கு வந்திருந்துச்சு.. ஆள் அம்சமா இருக்குது.. டாக்டருக்கு படிச்சிருக்கதாம்.. போட்டோ அனுப்புறேன் பாக்கறியாடா.."

"அம்மா தினமும் போன் பண்ணி அழுகுது.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு வயசு 30க்கு மேல போயிடுச்சு.. இதுக்கு மேல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம் வர்ற வரனையும் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்.. எனக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நான் ஃபோன வைக்கறதா இல்லை.."

"அண்ணா எங்க வீட்டுக்காரர் சொந்தத்துல ஒரு படிச்ச பொண்ணு இருக்குதாம்.. உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க.. முடியாதுன்னு சொல்ல எனக்கு சங்கடமா இருக்குது அம்மா கிட்ட சொன்னா உன்கிட்ட பேச சொல்றாங்க.. நான் என்ன சொல்லட்டும் நீயே சொல்லு.. நீ வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அந்த பொண்ணு கிட்ட எந்த குறையும் இல்லை குறைக்கவாட்டி பேசி பார்க்கறியா..?"

இப்படியே நீளும் தொல்லைகளை சமாளிக்க முடியாமல்தான் நிம்மதி பறிபோய் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தான் வருண்..

ஆனால் அதிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள்..!

பேசாம சன்னியாசம் வாங்க போறேன்னு சொல்லி விஷயத்தை முடிச்சு விட்டிருக்கலாம் என்று இப்போது புலம்பி கொண்டிருக்கிறான்..

"ஹலோ..!"

"சொல்லு ராம்.."

ராம் என்பவன் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளன்

"சார் நீங்க சொன்னது உண்மைதான்..! அந்த பொண்ணு தேம்பாவணி.. அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. ஹஸ்பண்ட் பேரு சத்யா.. சொந்தமா பிசினஸ் பண்றார்.. தேம்பாவணியோட அப்பா கேஷவ் குமார்.. அந்த பிசினஸ்ல ஷேர் ஹோல்டர்.. மத்தபடி ப்ராபர்ட்டிஸ் எல்லாம் தேம்பாவணியோட பேருல தான் இருக்குன்னு கேள்விப்பட்டேன்..!"

"ஓஹோ..! ராம் எனக்கு தேம்பாவணியோட ஹஸ்பெண்ட் சத்யாவோட நம்பர் வேணுமே..!"

"ஓகே சார் நான் அனுப்பறேன்.. வேற ஏதாவது டீடைல் வேணுமா சார்.."

"இல்ல ராம்.. ஏதாவது வேணும்னா நான் மறுபடி கூப்பிடறேன்.." அழைப்பை துண்டித்துக் கொண்டான்..

தேம்பாவணி வெளிப்படையாக எதுவும் சொல்ல தயங்கும் நிலையில் அவள் ஆழ்மன பயங்களை களைய வேண்டும் என்றால் முறைப்படி ஹிப்னாட்டிக் செஷன் செல்ல வேண்டும்.. அதற்கு அவள் சம்மதம் வேண்டும்.. ஒருவேளை அவள் சம்மதிக்காமல் போனால் அவள் உறவினர்களோடு கலந்து பேசி மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்..!

இந்த யோசனையில் தான் தேம்பாவணியின் பின்புலம் பற்றி விசாரிக்க சொல்லியிருந்தான் வரூண்..

அலைபேசி எண் கிடைத்ததும் உடனடியாக சத்யாவிற்கு அழைத்திருந்தான்..

"ஹலோ.."

"ஹலோ திஸ் இஸ் வருண் சைக்கியாட்ரிஸ்ட் ஸ்பீக்கிங்.."

காரில் ஏறப்போன சத்யா கண்களை சுருக்கியபடி கதவை திறந்த நிலையில் அப்படியே நின்றிருந்தான்.

"எஸ் டாக்டர்.."

"உங்க மனைவி தேம்பாவணியை பத்தி கொஞ்சம் பேசணுமே..!"

கதவை சாத்திவிட்டு பார்க்கிங் ஏரியாவில் சற்று தள்ளி வந்தவன் "சொல்லுங்க டாக்டர்" என்றான்..!

"தேம்பாவணி இப்ப பெரிய ஆபத்துல இருக்காங்க..! அவங்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் வேணும்..! .தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க மெண்டல் கண்டிஷன் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்க்கு போக வாய்ப்பு நிறையவே இருக்கு.. இதனால அவங்க உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..! நீங்க நேர்ல வந்தா இதை பத்தி தெளிவா பேசலாம்.."

"டாக்டர் என் வைஃப் உங்ககிட்ட ட்ரீட்மென்ட் காக வந்தாங்களா..?"

"எஸ் ஒரே ஒருமுறை.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க.. ஆனா அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னா எனக்கு உங்களோட சப்போர்ட் வேணும்.. சோ ப்ளீஸ் இதை பத்தி நேர்ல உங்க கிட்ட பேசணும்.."

"ஓஓஓ.. பாக்கலாமே டாக்டர்..! நான் உங்ககிட்ட அப்புறமா பேசறேன்.." அலட்சியமான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தவனின் புருவங்கள் தீவிர யோசனையில் சுருங்கின..

தொடரும்..
அய்யோ போச்சு போச்சு எல்லாம் போச்சு டாக்டரே இப்படி ராங் நம்பருக்கு போன போட்டு மொத்தமாக கவுத்துட்டியே 🤦🤦🤦அய்யோ அந்த அரக்கன் தேம்ஸ் ஆ என்ன பண்ண போறானோ 😱😱😱
அம்மாடி திலோ உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா வீடு விளங்கிடும் 😡😡😡
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
அய்யய்யோ வருணு யாருக்கு சொலக்கூடாதோ அவன் கிட்டேயே சொல்லி வெச்சுடையே...

பாவம் தேனு இனி இந்த sadist sathya என்ன பண்ணி தொலையுரனோ...அவ அப்பங்காரன் அதுக்கு மேல பணுவனே...

அடியே திலோ... இப்படியா படுத்துவ ஒரு மனுஷனா... உன்கூட வாழ்றதுக்கு அவன் ஓடிப்போறதே better... என்ன கொஞ்ச முன்னாடியே அவன் இத பண்ணி இருக்கனும்....

மொத்தத்துல நம்ம தேனு தூங்கினாலோ இல்லையோ??
 
Member
Joined
Feb 15, 2025
Messages
40
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Joined
Mar 25, 2025
Messages
6
அடேய் வருணு இப்படி சொதப்பிட்டியே🤦🤦🤦

இனி உன்கிட்ட வர மாட்டா பாரு😥அவளை மறுபடியும் தேடி அலைய போறே டாக்டரே🤦🤦

சரி நீயும் என்ன பண்ணுவே ஒரு டாக்டரா அவளை பத்தி அவ புருஷன் கிட்ட சொல்றது உன் கடமை. ஆனா அந்த சத்யா சனியன் தேனு பாப்பாவை என்ன பாடு படுத்த போறானோ அதை நினைச்சா தான் கொஞ்சம் கவலையா இருக்கு😰

திலோ பத்தி ஒரே வரியில் சொல்லணும்ன்னா நோ கமெண்ட்ஸ சிம்ப்ளி வேஸ்ட்😷😷😷😷
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
33
திலோத்தமா ஒரு ஆடம்பர பிரியை.. கிட்டத்தட்ட பேராசை பிடித்தவள் என்றே சொல்லலாம்.. உலக இன்பங்களில் நாட்டம் கொண்ட அவளை சமாளிக்க முடியாமல் அவள் கணவன் விமல் திணறினான்..

அக்கம் பக்கத்து வீடுகளின் அந்தஸ்த்தோடு தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை போலவே தன் தராதரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று கணவனை படாத பாடு படுத்துபவள்..

"ஏன் இந்த டிவிக்கு என்ன..?"

"அவங்க வீட்ல 40 இன்ச் டிவி இருக்கு.. ஸ்ரேயா இங்க வந்து இந்த டிவியை கேவலமா பாத்துட்டு போறா.. எனக்கு எவ்வளவு அசிங்கமாக போயிடுச்சு தெரியுமா..?"

"மத்தவங்கள பத்தி நாம ஏன் கவலைப்படணும்.. வருமானத்துக்கு ஏத்த மாதிரிதான் செலவு செய்யணும்.."

"வருமானத்தை உயர்த்திக்கோங்க அதுக்கேத்த மாதிரி இன்னும் அதிகமாவே செலவு செய்யலாம்.."

"என்னால இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் இதெல்லாம் தெரிஞ்சிதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.."

"அதுக்காக காலம் பூரா இப்படியே இருந்திட முடியாது.. எல்லாரும் வாழ்க்கையில முன்னேறிகிட்டே போறாங்க.. ஆனா நீங்க மட்டும்தான் இருக்கறத வச்சு வாழனும் கிடைச்சதை வச்சு சந்தோஷப்படணும்னு சொல்லி என் கழுத்தறுக்கறீங்க..!"

"திலோ.. நான் கொண்டு வர்ற சம்பளத்துக்குள்ள உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும் ஆனா ஆடம்பரமா வாழனுங்கற உன்னோட பேராசை தான் எதிலயும் திருப்தி காண முடியாம உன்னை அலைபாய வைக்குது.."

"டிவி மிக்ஸி சோபா ஃபேன் எல்லாமே அத்தியாவசிய பொருள்தானே.. இதுல என்ன ஆடம்பரத்தை பாத்துட்டீங்க.." திலோத்தமா பொறுமை இழந்தாள்‌.

"கத்தாதே குழந்தை நம்மளையே பாக்கறான்.. அவன் மனசுல எதுவும் தப்பா பதிஞ்சிட கூடாது..!"

"நீங்கதான் என்னை கத்த வைக்கிறீங்க.."

"ஐயோ.. இப்ப என்னங்கற..?"

"முதல்ல பெரிய டிவி வாங்கி வீட்ல மாட்டுங்க..!"

"சரி பார்க்கறேன்.."

"பாக்கறேன் எல்லாம் கிடையாது..! இந்த மாதிரி நாலு பொருள் வாங்கி போட்டாதான் சம்பாதிக்கணும் முன்னேறனும்னு வெறி வரும்.. போதுங்கற மனசு எதுக்கும் உதவாது.."

"பணம் மரத்துல காய்க்குதோ..?"

"விருப்பப்பட்டதை வாங்க கிரெடிட் கார்டு இன்ஸ்டால்மெண்டுன்னு ஏகப்பட்ட வழி இருக்கு..! நீங்க சொல்றதெல்லாம் வெறும் சாக்கு.."

"உன் வாய்க்கும் பூட்டு கிடையாது உன் பேராசைக்கும் ஒரு அளவு கிடையாது.."

முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் திலோத்தமா..

மனைவி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் கணவனுக்கு ஒன்றுமே ஓடாது..! சரிதான் போடி என்று வீராப்பாக திரிந்தாலும் மனைவியின் முகம் சுருங்கினால் ஒரு ஆணால் தெளிவாக எதையும் யோசிக்க முடிவதில்லை..

இந்த உளவியலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் திலோ..

மனைவியின் பாராமுகம் விமலை வாட்டி வதைக்க.. கடன் அட்டையின் மூலம் பெரிய டிவியை வாங்கி வீட்டில் மாட்டி வைத்து அவளை மகிழ்வித்தான்..

சில மாதங்கள் அந்த சந்தோஷம் நீடித்தது..

"ஹவுஸ் ஓனர் சரியில்ல.. கொஞ்சம் கூட அந்த பொம்பள மதிக்கவே மாட்டேங்குது.. அது சரி இந்த மாதிரி சின்ன வீட்ல இருந்தா யாரு தான் நம்மள மதிப்பா..!"

"மூணு பேருக்கு ஒரு ஹால் பெட் ரூம் கிச்சன் போதாதா..! இந்த வீட்டை கிளீன் பண்ணவே உன்னால முடியல.. எங்க பார்த்தாலும் குப்பை.." அவன் சலித்தான்..

"ஆமா என்னை குறை சொல்றதுக்கு தினம் உங்களுக்கொரு காரணம் வேணும்.. இங்க பாருங்க நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து லீசுக்கு எடுங்க.."

"நீ தெரிஞ்சுதான் பேசுறியா.. என் சம்பளத்துல இதெல்லாம் அளவுக்கு மீறின விஷயம்.."

"தெரியாம சொல்லல.. ஹவுஸ் ஓனரே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுன பிறகு தான் வீடு பார்க்க ஆரம்பிப்பீங்களா..! பெரிய வீடா பாத்து போனாதான் இந்த மாதிரி சொந்தமா வீடு கட்டணும்னு ஆசை வரும்.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.." என்றவள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி ஹவுஸ் ஓனர் வீட்டு பெண்மணியுடன் சண்டை போட்டு அவசரமாக வீடு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அவனை தள்ளினாள்..

பெரிய வீடு குடி வந்த பிறகு கூடத்தை நிறைக்க சோபா செட்.. அலங்காரப் பொருட்கள்..

"இவ்ளோ பெரிய வீட்டுக்கு ஏசி இல்லாம போனா நல்லாவா இருக்கும்..! வீட்டுக்கு வர்றவங்க ஏசி போடுங்கன்னு சொல்றாங்க.. எனக்கு மானமே போகுது.."

"ஏசி இல்லைனா மானம் போயிடுமா இது புதுசா இருக்கே.." அவன் கேலியாக சிரித்தான்..

"நீங்க வேலைக்கு போயிட்டு ராத்திரி தான் வர்றீங்க.. இந்த வீட்டுக்குள்ள அனல்ல வெந்து சாகற மரவெட்டை மாதிரி நானும் என் புள்ளையும் படுற கஷ்டம் உங்களுக்கு எங்க புரிய போகுது.."

"நான் மட்டும் என்ன..? ஏசி ரூம்ல சொகுசாவா உக்காந்த மேனிக்கு வேலை செய்யறேன்.. ஃபேக்டரியில மெஷின் சூட்டுல கால் வலிக்க நின்னு தினமும் கஷ்டப்படறேன்.. நைட்டு தூக்கம் வர மாட்டேங்குது..! மனசுக்கும் உடம்புக்கும் ஓய்வு தேடி ஆசையா உன்னை நெருங்கினா நீயும் ஒத்துழைக்காம எரிஞ்சு விழற.. என் கஷ்டத்தை யார்கிட்ட போய் சொல்றது..!"

"ஓஹோ மனசுல இவ்வளவு வஞ்சத்தை வச்சுக்கிட்டு தான் என்கூட குடும்பம் நடத்துனீங்களா..! அப்போ வேண்டா வெறுப்பா தான் என்கூட வாழ்ந்துட்டு இருக்கீங்க அப்படித்தானே.."

"ஐயோ கடவுளே.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க முடியுதா..? எப்பவும் மனுஷனை ரெஸ்ட் எடுக்க விடாம உன் புராணத்தை ஆரம்பிச்சிடுற..!"

"நான் எதுவும் சொல்லல.. நீங்க நல்லா சாப்பிட்டு போய் தூங்குங்க..!"

அடுத்த மாதம் தவணை முறை ஏசி வந்தது வீட்டுக்கு..

இப்படி ஒவ்வொன்றாய் செலவு அனுமதியின்றி பாக்கெட்டில் ஏறி அமர்ந்து கொள்ள.. பொருளாதார பிரச்சினைகளை தூக்கி சுமக்க முடியாமல் திணறினான் விமல்..

"வீட்ல சும்மா தானே இருக்கேன் குழந்தையை கிரஷ்ல விட்டுட்டு நானும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.." திலோத்தமா சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டான்..! பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவள் உதவுவதாய் நினைத்தான்..

ஆனால் அப்படி இல்லை.. வாங்கும் சம்பளத்தில் ஒரு பைசா கூட அவனிடம் தரவில்லை திலோ.. வீட்டுச் செலவிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை..!

"என்ன திலோ.. கடன் கழுத்தை நெரிக்குது.. மளிகை பால் கரண்ட் பில்லுனு குழந்தைக்கு டாக்டர் செலவுன்னு மாசம் செலவு எகிறிக்கிட்டே போகுது.. பணத்த கண்ணுல காட்டவே மாட்டேங்கற.. என் பிரச்சனைக்கு உதவலைன்னா நீ ஏன் வேலைக்கு போகணும்.." ஓரிரு மாதங்கள் கழித்து மனதுக்குள் வைத்து புழுங்க முடியாமல் வெளிப்படையாக கேட்டு விட்டான் விமல்

"ரெண்டு பேரும் வாங்கற சம்பளத்தை செலவழிச்சிட்டா சேமிப்புன்னு என்ன மிஞ்சும்.. நான் சமாதிக்கிற பணமாவது பத்திரமா இருக்கட்டும் ஆபத்து காலத்துல உதவும்.."

"கடனையெல்லாம் அடைச்சிட்டு அப்புறம் சேமிக்க தொடங்கினா போதும்.. இனி வாங்கற சம்பள பணத்துல பாதியை நீ என்கிட்ட தான் கொடுக்கணும்.."

"உங்ககிட்ட எல்லாத்தையும் தந்து அழறதுக்குத்தான் நான் வேலைக்கு போறேனா..! கஷ்டப்பட்டு நான் சம்பாதிக்கிறது என் எதிர்கால பாதுகாப்புக்காக.."

விமல் ஆடிப் போனான்..

"எப்போதிலிருந்து இப்படி சுயநலமா யோசிக்க ஆரம்பிச்ச திலோ..! இது நம்ம குடும்பம் நம்ம பொண்டாட்டி நம்ம குழந்தையின்னு நினைச்சு நான் உழைக்கறேன்.. ஆனால் நீ என்னவோ தனியா பிரிச்சு பேசுற..!"

"நான் ஒன்னும் தப்பா சொல்லலையே.. நான் இல்லைன்னா உங்களால வாழ முடியும்.. ஆனால் நீங்க இல்லைனா எனக்கொரு ஆதாரம் வேண்டாமா..!"

திகைத்துப் போனான் விமல்.. அதன் பிறகு அவள் பணத்தையும் கேட்கவில்லை.. அவளிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டான்.. தனியாளாக வீட்டுச் செலவு கடனை அனைத்தையும் சமாளிக்க முயன்றான்.. ஆனால் முடியவில்லை..

இந்த நிலையில் தான் மில் மூடப்பட்டு விமலுக்கு வேலை போனது.. கம்பெனியிலிருந்து வழங்கப்பட்ட சேமிப்பு நிதியில் கடனையெல்லாம் அடைத்துவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தான்..

வேலை கிடைக்கவில்லை.. கிடைத்த வேலையில் நிலைக்க முடியாதபடிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்க.. திலோத்தமா அவன் இயலாமையை சுட்டிக்காட்டி மட்டந்தட்டிக் கொண்டே இருந்தாள்..

சரியாக உணவு உண்ணும் நேரத்தில் மனதை நோகடிக்கும் படி ஏதாவது பேசி உள்ளே இறங்கும் உணவை விஷமாக மாற்றி அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றாள்..

நாளுக்கு நாள் திலோத்தமாவின் பேச்சுக்களை தாங்க முடியாமல் ஒருநாள் துணிந்து வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் விமல்..!

சொந்த ஊருக்கும் செல்லவில்லை நண்பர்களுக்கும் அவனைப் பற்றிய தகவல் தெரியவில்லை எங்கு சென்றான் என்றே தெரியாத நிலையில் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளானாள் திலோத்தமா..

என்னதான் தன் கணவனை உதவாதவன் வெத்துவேட்டு.. திறமை இல்லாதவன் என்று மட்டம் தட்டி குறை கூறினாலும் அவன் தன்னோடு இருந்தது எத்தனை பெரிய பலம் என்று அவன் இல்லாத போதுதான் உணர்ந்து கொண்டாள்..

அப்படி ஒரு மன அழுத்தத்தில்தான் தன் தோழியின் சிபாரிசு படி மனநிலை மருத்துவர் டாக்டர் வருணிடம் சிகிச்சைக்காக வந்திருந்தாள்..!

அவளுக்கு நம்பிக்கையூட்டி..‌ தனியாக வாழ்வதற்கான தைரியத்தை தந்து மனநல பிரச்சினைகளிலிருந்து வெளியே கொண்டு வந்திருந்தான் வருண்..!

அந்த சுழ்நிலையில் அவனுக்கும் ஒரு உதவி தேவைப்பட.. திலோத்தமாதான் அதற்கு சரியானவள் என்று முடிவு செய்து அவளிடம் தன் பிரச்சினையை சொல்லி மனைவியாக நடிக்க கேட்டது பின்னாளில் தவறாக போனது..

அவள் மூளையோ சாமர்த்தியமாக வேறு கணக்குப் போட்டது..

பெரிய டாக்டர் ஆடம்பர வசதி..! பங்களாவில் சொகுசாக வாழலாம் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.. நடிப்பு தானே..! நிறைய பணம் தருவார்.. தன் மகன் அமரேஷ் எதிர்காலத்துக்காக பெரிதாக செய்வதாக வாக்கு தந்திருக்கிறார்.. கரும்பு தின்ன கசக்குமா என்ன..!

அவன் நிபந்தனைகளுக்ககெல்லாம் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொண்டதைப் போன்ற சோடனையுடன் இதோ மூன்று வருடங்களாய் அவன் வீட்டில் தான் வசித்துக் கொண்டிருக்கிறாள்..

அவ்வப்போது சிரித்து பேசி தலையை காட்டிவிட்டு தன் இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்தவளுக்கு நடிப்பு என்பது அத்தனை எளிதாய் இருக்கவில்லை..

அக்கா தங்கை அவர்கள் குழந்தைகள் சதா வந்து போகும் இந்த வீட்டில் மாமனார் மாமியார் வேறு இழுத்து அமர்த்தி கொண்டு பேசுவதென ஒரே தொந்தரவு.. கலகலப்பான பெரிய குடும்பம்.. அவர்களோடு பொருந்திப் போக முடியாத அளவிற்கு ஏதோ அலர்ஜி.. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறாள்..

"ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கற என்ன பிரச்சனை உனக்கு.. "

"நாங்க உயிரோடு இருக்கும்போதே உனக்கொரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறோம்.. அது நடக்குமா நடக்காதா.."

டேய் வருண் எங்க வீட்டுக்காரரோட சித்தி பொண்ணு ஒன்னு அன்னைக்கு எங்க ஓரகத்தி பையன் கல்யாணத்துக்கு வந்திருந்துச்சு.. ஆள் அம்சமா இருக்குது.. டாக்டருக்கு படிச்சிருக்கதாம்.. போட்டோ அனுப்புறேன் பாக்கறியாடா.."

"அம்மா தினமும் போன் பண்ணி அழுகுது.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு வயசு 30க்கு மேல போயிடுச்சு.. இதுக்கு மேல பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம் வர்ற வரனையும் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்.. எனக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நான் ஃபோன வைக்கறதா இல்லை.."

"அண்ணா எங்க வீட்டுக்காரர் சொந்தத்துல ஒரு படிச்ச பொண்ணு இருக்குதாம்.. உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க.. முடியாதுன்னு சொல்ல எனக்கு சங்கடமா இருக்குது அம்மா கிட்ட சொன்னா உன்கிட்ட பேச சொல்றாங்க.. நான் என்ன சொல்லட்டும் நீயே சொல்லு.. நீ வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அந்த பொண்ணு கிட்ட எந்த குறையும் இல்லை ஒருவாட்டி பேசி பார்க்கறியா..?"

இப்படியே நீளும் தொல்லைகளை சமாளிக்க முடியாமல்தான் நிம்மதி பறிபோய் வேறு வழியில்லாமல் ஒருதாள் அந்த முடிவை எடுத்திருந்தான் வருண்..

ஆனால் அதிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள்..!

பேசாம சன்னியாசம் வாங்க போறேன்னு சொல்லி விஷயத்தை முடிச்சு விட்டிருக்கலாம் என்று இப்போது புலம்பி கொண்டிருக்கிறான்..

"ஹலோ..!"

"சொல்லு ராம்.."

ராம் என்பவன் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளன்

"சார் நீங்க சொன்னது உண்மைதான்..! அந்த பொண்ணு தேம்பாவணி.. அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஹஸ்பண்ட் பேரு சத்யா.. சொந்தமா பிசினஸ் பண்றார்.. தேம்பாவணியோட அப்பா கேஷவ் குமார்.. அந்த பிசினஸ்ல ஷேர் ஹோல்டர்.. மத்தபடி ப்ராபர்ட்டிஸ் எல்லாம் தேம்பாவணியோட பேருலதான் இருக்குன்னு கேள்விப்பட்டேன்..!"

"ஓஹோ..! ராம் எனக்கு தேம்பாவணியோட ஹஸ்பெண்ட் சத்யாவோட நம்பர் வேணுமே..!"

"ஓகே சார் நான் அனுப்பறேன்.. வேற ஏதாவது டீடைல் வேணுமா சார்.."

"இல்ல ராம்.. ஏதாவது வேணும்னா நான் மறுபடி கூப்பிடறேன்.." அழைப்பை துண்டித்துக் கொண்டான்..

தேம்பாவணி வெளிப்படையாக எதுவும் சொல்ல தயங்கும் நிலையில் அவள் ஆழ்மன பயங்களை களைய வேண்டும் என்றால் முறைப்படி ஹிப்னாட்டிக் செஷன் செல்ல வேண்டும்.. அதற்கு அவள் சம்மதம் வேண்டும்.. ஒருவேளை அவள் சம்மதிக்காமல் போனால் அவள் உறவினர்களோடு கலந்து பேசி மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்..!

இந்த யோசனையில்தான் தேம்பாவணியின் பின்புலம் பற்றி விசாரிக்க சொல்லியிருந்தான் வரூண்..

அலைபேசி எண் கிடைத்ததும் உடனடியாக சத்யாவிற்கு அழைத்திருந்தான்..

"ஹலோ.."

"ஹலோ திஸ் இஸ் வருண் சைக்கியாட்ரிஸ்ட் ஸ்பீக்கிங்.."

காரில் ஏறப்போன சத்யா கண்களை சுருக்கியபடி கதவை திறந்த நிலையில் அப்படியே நின்றிருந்தான்.

"எஸ் டாக்டர்.."

"உங்க வைஃப் தேம்பாவணியை பத்தி கொஞ்சம் பேசணுமே..!"

கதவை சாத்திவிட்டு பார்க்கிங் ஏரியாவில் சற்று தள்ளி வந்தவன் "சொல்லுங்க டாக்டர்" என்றான்..!

"தேம்பாவணி இப்ப பெரிய ஆபத்துல இருக்காங்க..! அவங்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் வேணும்..! .தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க மெண்டல் கண்டிஷன் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்க்கு போக வாய்ப்பு நிறையவே இருக்கு.. இதனால அவங்க உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..! நீங்க நேர்ல வந்தா இதை பத்தி தெளிவா பேசலாம்.."

"டாக்டர் என் வைஃப் உங்ககிட்ட ட்ரீட்மென்டுக்காக வந்தாங்களா..?"

"எஸ் ஒரே ஒருமுறை.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க.. ஆனா அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னா எனக்கு உங்களோட சப்போர்ட் வேணும்.. சோ ப்ளீஸ் இதை பத்தி நேர்ல உங்க கிட்ட பேசணும்.."

"ஓஓஓ.. பாக்கலாமே டாக்டர்..! நான் உங்ககிட்ட அப்புறமா பேசறேன்.." அலட்சியமான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தவனின் புருவங்கள் தீவிர யோசனையில் சுருங்கின..

தொடரும்..
போச்சு... என்னமோ பிடிக்க போய் அது குரங்கா மாறின கதை மாறி ஆகிடுசு வருண் வாழ்க்கை. இப்போ வேற சத்யா கிட்ட சொல்லிட்டான், இனி அவளை என்ன பண்ண போறானோ?.. atleast varun sathya pathi innum தெளிவா therinjindu pesi irukkalaam.
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
33
அய்யோ போச்சு போச்சு எல்லாம் போச்சு டாக்டரே இப்படி ராங் நம்பருக்கு போன போட்டு மொத்தமாக கவுத்துட்டியே 🤦🤦🤦அய்யோ அந்த அரக்கன் தேம்ஸ் ஆ என்ன பண்ண போறானோ 😱😱😱
அம்மாடி திலோ உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா வீடு விளங்கிடும் 😡😡😡
Hmm amaam. Detective vachavan thaan vera ethum venumaanu kettaane, ivan fulla kettu irukkalaam .
 
Member
Joined
Apr 7, 2023
Messages
45
👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Feb 26, 2025
Messages
51
அடப்பாவி வருண் நீ இன்னும் தேம்பா வை சிக்கலைந்தமாட்டி விட்டு இருக்கீயே
 
Member
Joined
Apr 30, 2025
Messages
23

Iyoo ... 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️...... Enna ya panni irruka varun nee .... Thera illuthu theruvhula vitta mathiri.... Pochi pochi..... Satya oru villa paya..... Enna think pannitu irrukano........ Themba unna god than save pannanum...., adyai thilo nee oru 420ya irrupa pola.... Ud 👌👌👌👌👌.... Sana sis💜💜💜💜
 
Top