• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 9

Joined
Jul 10, 2024
Messages
52
டாக்டர ஹிட்லர்ன்னு நினைச்சேன். பாவம் அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.

ஒன்னும் பயமில்லை டாக்டரே. இப்படியே இருக்காம கமலிகூட வீட்டில் சண்டை போட ஆரம்பிச்சுருங்க.

ஆட்டோமேட்டிக்கா பேச்சு வளரும். அதனால உங்க மனநிலை மாறுபடும். கமலிதான் டாக்டர் உங்களுடைய மனகுழப்பங்களுக்கு தீர்வு.
 
Last edited:
New member
Joined
Mar 17, 2024
Messages
3
சூர்யதேவ்க்கு தீர்வு அவனாலயே தேட முடியும்🥰 இவ்ளோ அறிவா இருக்கவனுக்கு தனக்கு தேவை ஒரு நல்ல தோழினு கூட தெரியாம இருக்கதுக்கு அவன் அப்பா தான் காரணம்😌 இதுக்கு தான் ஊரோட ஒத்து வாழ்னு சொல்றது அப்ப இந்த மாதிரி மனநிலை வந்தா கூட வேற எதுலயாச்சும் கவனத்த திசைதிருப்பி நம்மள காப்பாத்திக்கலாம்☺️ பாவம் பயபுள்ள டீனேஜ்ல சரியான வழிக்காட்டுதல் இல்லாதனால இந்த வயசுல மனவுளைச்சல் வந்துருக்கு🙁
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
138
Ippadiyellaam பிரச்சனை இருக்குமா.....சூர்யா உன் நிலை கஷ்டம் தான்....😔😔😔
But சூர்யவுக்கான தீர்வு கமலி தான் அண்ட்
கமலிக்கான தீர்வு சூர்யா தான்.....
இரண்டு பேரும் தங்கள் depressionil இருந்து வெளிவர இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தீர்வாக இருப்பார்கள்......😍😍😍😍😍😍😍
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
126
"இப்ப எதுக்காக இப்படி சிரிக்கற? என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா..?" சலிப்பும் கடுப்புமாக கேட்டான் சூர்யதேவ்..

"இல்ல சூர்யா.. எத்தனை பேர் கண்ணுல நீ விரல விட்டு ஆட்டியிருப்ப..? ஆனா உன் கண்ணுல ஒரு பொண்ணு விரலை விட்டு ஆட்றதை நினைச்சாதான் சிரிப்பு வருது.." உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்கள் மின்ன அவனைப் பார்த்தான் வருண் பிரசாத்..

"டேய் ராஸ்கல் உன்ன கொன்னுடுவேன்..!!" சூரிய தேவ் பற்களை கடித்தான்..

சூர்ய தேவ் சற்று இளக்கமாக நெகிழ்ந்து கொடுக்கும் இடமென்றால் அது வருண் பிரசாத்திடம் மட்டும்தான்.. இருவரும் மருத்துவ கல்லூரியிலிருந்து சிநேகிதர்கள்..‌

"சரி சொல்லு.. தூங்கி எத்தனை நாளாச்சு.." கோவை பழமாக சிவந்திருந்த அவன் கண்களை பார்த்து விட்டு கேட்டான் வருண் பிரசாத்..

கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் தன் கண்களை தேய்த்துக் கொண்டே "ஐ டோன்ட் நோ..‌ தலை மேல வந்து ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டுகிட்டே இருக்கு.." என்றான் அவன் சோம்பலான விழிகளோடு..

"ஏன்.. சந்திரமுகி மாதிரி ராத்திரி பூரா தூங்காம டான்ஸ் ஆடறாளா அந்த பொண்ணு..?" சிரிப்பை அடக்கிக் கொண்டு உதடுகளை இறுக்கமாக வைத்திருந்தாலும் அவன் பேச்சில் கேலி தெரியவே.. சூர்ய தேவ் முறைத்தான்..

"முறைக்காதடா..!! உனக்கே தெரியுது இல்ல.. அது உன் மன பிரமைன்னு அப்புறம் என்ன..? ரிலாக்ஸா இரு சூர்யா.." வருண் பேச்சை காது கொடுத்து கேட்காதவன் போல் சூர்யா அமைதியாக மேஜையை வெறித்திருந்தான்..

நீண்ட பெருமூச்செடுத்து இரு முழங்கைகளை மேஜையில் ஊன்றி விரல்களை கோர்த்தான் வருண்..

"நீ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்குற விஷயம் உன்னையே கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டு இருக்கு.. உனக்கு தெரியலையா..?" என்றவனை விழிகளை நிமிர்த்தி ஏறிட்டு பார்த்தான்..

"சூர்யா நான் இப்படி கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத.. அந்த பொண்ணு மேல உனக்கு ஏதாவது இன்ட்ரஸ்ட் இருக்கா..?" அவன் தயங்கி அந்த கேள்வியை முன்வைக்க..

நீண்ட பெருமூச்சோடு அவனைப் போலவே இரு முழங் கைகளை மேஜையின் மீது ஊன்றி இரு கரங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டு இல்லை தலையசைத்தான் சூர்யா..

"அந்த மாதிரியான எண்ணங்கள் என் மனசுல வந்திருந்தா நான் எதுக்காக உன் முன்னாடி உட்கார்ந்து இருக்கணும்..?"

"அப்புறம் என்னதான்டா உன் பிரச்சனை? அவளை இக்னோர் பண்ணிட்டு நீ பாட்டுக்கு உன் வேலையை பாரேன்..!!"

கரங்களை விலக்கிவிட்டு நண்பனை ஆழ்ந்து பார்த்தான் சூர்ய தேவ்..

"உனக்கு என் பிரச்சனை தெரியும்தானே..?" என்றவனின் கண்களில் தன் குறைகளுக்கான தீர்வைத் தேடிக் கொண்டிருக்கும் தவிப்பு..‌

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் வருண்..

தன்னோடு படித்த நண்பன் சூர்யதேவ் இவன் இல்லை.. இவன் புதியவன்.. தனக்கு பயந்து தன்னையே ஒளித்துக் கொண்டிருப்பவன்..

அப்படியானால் தொலைந்து போன அந்த பழையவன்..?

ஒருகாலத்தில் சூர்ய தேவ் மற்ற ஆண்களைப் போல் இயல்பானவன்.. தன்னை சுற்றி இருப்பவர்களிடம் சகஜமாக பழகக் கூடியவன்.. இசை பிடிக்காத உயிர்கள் இவ்வுலகத்தில் உண்டோ..!! அவனுக்கும் பாட்டு பிடிக்கும்.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று நண்பர்களோடு நேரம் செலவிட பிடிக்கும்.. ஆனாலும் அதற்கும் வரைமுறைகள் உண்டு..

சூர்யதேவ் பெற்றவள் அவன் சிறு வயதிலேயே மரித்துப் போய்விட்ட காரணத்தால் அவன் தந்தை ஜெயமோகன் அம்மா இல்லாத பிள்ளை தப்பான வழியில் சென்று விட்டான் என்ற இழி சொல்லுக்கு தன் மகன் ஆளாகி விடக்கூடாது என்ற பயத்தோடு அவனை கண்டிப்போடு வளர்த்தார்..

சின்னஞ்சிறு வயதில் அப்பாவின் முதுகில் தொற்றிக் கொண்டு அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்களை அனுபவித்தாலும் மீசை முளைத்த பருவத்தில்.. படிப்பும் பட்டமும் அதன் மூலம் கிடைக்கும் புகழ் மட்டுமே உனக்கு அந்தஸ்தை தேடி தரும் என்று அவன் மனதில் ஆழ பதிய வைத்து.. அவன் தனிப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து பிரித்து இலட்சியத்தை நோக்கி நடக்க கற்றுக் கொடுத்தார் அவன் தகப்பன்..

பள்ளி காலங்களில் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக இடைவிடாத முயற்சியோடு முழுமூச்சாக படிப்பையே சுவாசித்தவனுக்கு அந்த வயதிற்கு உரிய சந்தோஷங்கள் விடுபட்டுப் போயின.. 10.. 12 ஆம் வகுப்புகளில் இந்த முதல் மார்க் வாங்கும் குழந்தைகளைப் பெற்றோர்கள் தனிமைப்படுத்துவதைப் போல்..‌ விளையாடுவது மற்றவர்களோடு அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் பேசுவதும் பழகுவதும் கூட மகா பாவம் என்று அவர்களை அடக்கி வைப்பது போல்.. இவனும் தனக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கருமமே கண்ணாக முழு ஈடுபாட்டோடு படித்து பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேர்ந்தான்..

கல்லூரியிலும் பெரிதாக நண்பர்கள் வட்டம் கிடையாது எனினும் தன் வகுப்பு மாணவர்களிடம் இயல்பாக பழகக் கூடியவன்தான் இந்த சூர்யதேவ்.. பெண்களிடம் கூட கலகலப்பாக பேசி பழகியிருக்கிறான்.. இருந்தபோதிலும் எதிலும் ஒரு வரைமுறை உண்டு.

அந்த வயதிற்கே உரிய ஹார்மோன் சுரப்பு அவனுக்கும் உண்டு.. அவன் ஆளுமையான தோற்றத்திலும் அழகிலும் கவரப்பட்டு காதலிக்கிறேன் என்று வந்து நிற்கும் பெண்களை நாசுக்காக நிராகரித்தாலும்.. அவர்கள் அணுகிய விதத்தில் உள்ளூர கர்வம் கொண்டு மகிழக்கூடிய இயல்பான ஆண்மகன்களுள் இவனும் ஒருவன்..

பிறகு உலகின் இன்பங்களை வெறுத்து சன்னியாசி போல் தனக்குள் ஒடுங்கிக் கொள்ள காரணம் என்னவோ..!!

தன் பலவீனத்தை மறைக்கத்தான்.. இது ஒரு கைதேர்ந்த யுக்தி..‌

மகப்பேறு மருத்துவத்தில் தனி பிரிவில் சேர்ந்து படித்தபோதுகூட பெரிதாக அவனிடம் எந்த மாற்றங்களும் இல்லை..

விருப்பப்பட்டு சுவாரஸ்யத்தோடு படித்து.. அனைத்தும் கற்றறிந்து தன் மேற்படிப்பை முடித்தான்..

ஆரம்ப காலகட்டங்களில் தளிராய் ஒரு ஒரு புத்தம் புதிய உயிரை இவ்வுலகில் பூக்க வைப்பதில் தன் பங்களிப்பை எண்ணி பெருமையுற்று மார்தட்டி கொண்டவனுக்கு ஒரு கட்டத்தில் சேவை மனப்பான்மையோடு செய்த பணி ஏன் சலித்து போனதாம்..?

காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை.. மனதை புரட்டி போடும் அளவிற்கு பின்னூட்டம் எதுவும் இல்லை..

ஒரே காரணம்.. பெண்களின் அந்தரங்க கூறுகளை ஆராய்ந்து படித்து.. அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருப்பவனுக்கு.. எந்தப் பெண்ணின் மீதும் கிளர்ச்சி ஏற்படுவதில்லை..

அவன் தந்தை ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் வாழ்க்கையில் வந்த முதல் பெண்ணான திவ்ய பிரபாவின் மூலம் இந்த உண்மையை கண்டு கொண்டான்..

பொம்மை கடையில் வேலை செய்பவனுக்கு பொம்மையின் மீது ஆர்வமற்று போவதை போல்..

பிரியாணி கடையில் தினமும் மசாலா வாசனையை நுகர்பவனுக்கு.. பிரியாணி சலித்து போவதை போல்..

புனிதமான இந்த தொழிலில் தன்னை முழு முற்றாக ஈடுபடுத்திக் கொண்டு தெய்வத்தன்மையோடு பணியாற்றிக் கொண்டிருந்தவனுக்கு தனக்கான பெண்ணிடம் கூட எந்த சிலிர்ப்பும் ஏற்படவில்லை..

நட்பு என்ற கோட்டிலேயே பயணித்துக் கொண்டிருந்த இருவரின் உறவு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு.. அடுத்த கட்டத்தை தாண்டி போக முயற்சித்த போதுதான்.. செயலற்று உறைந்திருந்த தன் மாறுபாடுகளை உணர்ந்து கொள்ள முடிந்தது சூர்ய தேவ்வால்..

நட்பு என்ற ரீதியில் இயல்பாக ஒரு பெண்ணோடு பழக முடிந்த அவனால் காதலி என்ற உறவோடு அவளை அணுக முடியவில்லை..

பரிசளிப்புகள் இயல்பான விசாரிப்புகள்.. அதைத் தாண்டி காதலுக்கான கிளர்ச்சியூட்டும் சிறப்பம்சங்கள் அவனிடம் மிஸ்ஸிங்..

ஒரு மழை நாளில் தனிமை நேரத்தில்.. தனக்கானவனின் அழகினில் தன்னவன் என்ற உரிமையில் ஆர்ப்பரித்த அவள் உணர்ச்சிகளை.. இயந்திர பொம்மையாக சுட்டு பொசுக்கினான் சூர்ய தேவ்..

இத்தனை நாட்களாக சின்ன தொடுதலுமின்றி தள்ளி நின்று தன்னை நோகடித்த சூர்ய தேவ் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஏமாந்து போயிருந்தவள்..

"சூர்யா வாட்ஸ் ராங் வித் யூ..?
இதுவரைக்கும் நீ என்கிட்ட ரொமான்டிக்கா ஒரு வார்த்தை பேசினதில்ல..!! என் கைய புடிச்சுக்கிட்டதில்ல.. என் கண்ணுக்குள்ள மூழ்கினதில்லை.."

"வெட்கம் விட்டு நானே உன்னை அப்ரோச் பண்ணியும் கூட உன்கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.. சரி இதையெல்லாம் கூட ஒரு விதத்தில் என்னால் ஏத்துக்க முடிஞ்சது.. ஆனா இன்னைக்கு..? ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..‌ ஓ மை காட்.. இது சரிப்பட்டு வரும்னு தோணல.. ஐ அம் டன் வித் யூ..!! இதோட முடிச்சுக்கலாம்.." திவ்ய பிரபா சென்று விட்டாள்..

ஒரு ஆத்மார்த்தமான தோழியாக திவ்ய பிரபாவின் பிரிவு அவனை பாதித்த போதிலும் தனக்குள் என்ன நடக்கிறது என்ற குழப்பம் வேறெதையும் யோசிக்க விட வில்லை..

அடுத்த சில மணி நேரங்களில் நெஞ்சம் முழுக்க குழப்பத்தோடு தன் நண்பன் வருண் பிரசாத் முன்பு அமர்ந்திருந்தான்..

பல பரிசோதனைகள்.. கவுன்சிலிங் மாத்திரை மருந்துகள் என இறுதியில் அவன் தெரிந்து கொண்டது.. சூர்ய தேவ் ஒரு ஏசெக்சுவல்‌ (asexual)..

அதாவது பாலியல் ஈர்ப்பு இல்லாதவன்.. இம்மாதிரியான நிலை ஏற்பட நிறைய காரணங்கள் உண்டு.. மரபியல் காரணங்கள் உளவியல் காரணங்கள்.. சமூக கட்டமைப்பு காரணங்கள்.. அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் பாதிப்புகள்..

உடல்ரீதியான பாதிப்பு என்றால் பாலியல் மருத்துவரை அணுகலாம்..

இதில் சூரிய தேவ் உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்து கொண்டான் வருண்..

எத்தனையோ கவுன்சிலிங் பிறகும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை..

ஆண் பெண்ணுக்காக படைக்கப்பட்டவள் பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவன் என்பதை தாண்டி மூன்றாம் நான்காம் விதிகளில் தன் நண்பனுக்கு எந்தவித உடன்பாடும் இல்லை என்பதை வருண் நன்றாகவே அறிவான்..

காதல் கொள்ள முடியும்.. ஆனால் ஒரு பெண்ணை தாம்பத்தியத்தில் திருப்தி படுத்த முடியாது என்றால் அது உடல் ரீதியான கோளாறு..

காதல் கொள்வதில் சிக்கல்..‌ அதைத் தாண்டி அடுத்த கட்டத்தை யோசிக்க முடியாத நிலை.. ஒரு பெண்ணை ரசிக்க முடியாத இயலாமை.. அவள் கண்களை பார்த்து பேச முடியாத கூச்சம்.. இதெல்லாம் மனரீதியான சிக்கல்..

ஆண் மகப்பேறு மருத்துவர்கள் எல்லோரும் இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதில்லை..

சூர்ய தேவ் வீட்டில் அக்காவோ தங்கையோ அல்லது அவன் தாயோ இருந்திருந்தால் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கும், தன் குடும்பத்து பெண்களுக்குமான வித்தியாசத்தை உணர அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.. அன்பு பாசம்.. சந்தோஷத்தோடு குடும்பமாக வாழும் சூழ்நிலையில் அவன் மனம் வேறு மாதிரியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்குமோ என்னவோ..!!

அப்பாவும் மகனுக்குமிடையே பிரியத்தில் எந்த குறையும் இல்லை.. ஒன்றாக உணவு அரட்டை பேச்சு சிரிப்பு சத்தம் எல்லாம் இருவருக்கிடையே உண்டு..

டாக்டரோட அப்பா.. என்ற பெருமையை ஈட்டி தந்த சூர்ய தேவ்விடம் சிரிக்க சிரிக்க பேசுவார் ஜெயமோகன்.. இரவில் அந்த வராண்டாவில் இரண்டு இருக்கைகளில் அமர்ந்து கொண்டு பொதுவான விஷயங்களோடு சினிமா பாட்டு.. அரசியல் என்று அரட்டைக் கச்சேரி களை கட்டும்..

அந்த வீட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான்.. இருவருக்குமான உலகம் அது.. சமையல் தொடங்கி வீட்டை துடைப்பது வரை அத்தனை வேலைகளையும் பம்பரமாக சுழன்று செய்வார் ஜெயமோகன்.. விடுமுறை நாட்களில் மகன் தந்தைக்கு ஆற்றுவான் உதவி..

27 வயதை கடந்த தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து திவ்ய பிரபாவை தேர்ந்தெடுத்திருந்தார்..

முதல் கோணம் முற்றும் கோணலாகி போனதில் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் சூர்யதேவ்..

திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக மறுக்கும் மகனிடம் கட்டாயப்படுத்தி காரணம் கேட்க.. தகப்பனிடம் மறைக்காது உண்மையை சொல்லியிருந்தான்..

ஜெயமோகனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

"சரி வா செக்ஸாலஜிஸ்ட் பார்க்கலாம் கண்டிப்பா தீர்வு கிடைக்கும்.."

"பயனில்லை இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு சொல்லிட்டாங்க..!! மருந்து மாத்திரைகளால் எந்த பிரயோஜனமும் இல்லை.." என்றான் அவன்..

"அப்ப பிரச்சனை நீதான்.." என்றார் அவர்..

தொண்டை இறுகிப்போக "ஆமாம்" என்றான்..

"மனசு சம்பந்தப்பட்ட கோளாறுன்னு சொல்லும்போது அதுக்கு நிச்சயமா தீர்வுன்னு ஒன்னு இருக்கும் இல்லையா.. யார் கண்டா..? வரப்போற பொண்ணு மூலமாக உன் குறை தீர்ந்து போகலாம்.. மத்தவங்க மாதிரி நீயும் இயல்பா ஒரு வாழ்க்கை வாய்ப்புண்டு.. எதையும் பரிசோதித்து பார்த்தால்தானே தெரியும்..!!" ஜெயமோகனின் மனதை மாற்றும் முயற்சி வேலைக்காக வில்லை..

"பரிசோதிச்சு பார்க்க ஒரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கணுமா..?" என்று வேறு பக்கம் திரும்பிக்கொண்டவன்..

"ஏற்கனவே பரிசோதித்து பார்த்தாச்சு ரிசல்ட் ஃபெயிலியர்" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.. எல்லா ரகசியங்களையும் தந்தையிடம் வெளிப்படையாக கொட்டித் தீர்க்க முடியாதே..!!

மூளை சலவை என்ற பெயரில் பல விதங்களில் அவன் மனதை மாற்ற முயன்றார் ஜெயமோகன்..

அழகு சிற்பமாய் சகல விதங்களிலும் மகனுக்கு பொருத்தமான பெண்ணை தேர்ந்தெடுத்து இருவரும் சந்திக்க ஏற்பாடுகள் செய்தார்.. முயற்சிகள் தோல்வியடைந்ததுதான் மிச்சம்..

தன் முடிவில் உறுதியாக நின்றான் சூர்ய தேவ்..

ஒரு கட்டத்தில் மகனுக்கு நல்ல வாழ்க்கை தேடித் தர முடியாத சோகத்தில்.. நெஞ்சுவலி கண்டு ஜெயமோகன் மரித்துப் போக..

தன் பிரச்சினையை துணையாக கொண்டு தனியாக நின்றான் சூர்யதேவ்..

அதன்பிறகான நாட்களில் ஒருநாளின் இருபத்து நான்கு மணி நேரம் அவனை பொறுத்தவரை நெட்டித் தள்ள முடியாத பகாசூரனாக தெரிய.. முழுமூச்சாக மருத்துவமனையில் மட்டுமே நேரங் கடத்தினான்..

எந்த பெண்ணும் தன்னை நெருங்கி விடக்கூடாது.. தன் குறை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது.. என்று தன்னை சுற்றி ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதற்குள் நின்று கொண்டான்..

சகஜமாக பழகினால் தானே ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி வரும்.. அக்கறை எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என்று அந்தரங்கத்தை கிளற முயலும் ஆட்களை தள்ளி நிறுத்துவதற்காகவே மற்றவர்களுடன் நட்பாக பழகுவதை நிறுத்திக் கொண்டான்..

மனதில் ஆழ படிந்த தாழ்வு மனப்பான்மை.. சந்தோஷமின்மை.. மருத்துவமனை.. கர்ப்பிணி பெண்கள்.. மாலையில் வீடு.. விளக்கை கூட உயிர்பிக்க தோன்றாத தனிமை.. சலிப்பு.. சூர்ய தேவ்வை தூக்கமின்மை ஆன்சைட்டிக்குள்(anxiety) தள்ளியது..

அதற்கும் சிகிச்சை மாத்திரை மருந்து..

உதாரணம் சொல்லப்போனால் மனிதனுக்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று..

ஒரு மூன்று நாட்களுக்கு தூங்க முடியவில்லை அதாவது தூக்கம் வரவில்லை என்றால் அடுத்தடுத்த நாட்களில் நம் மனநிலையில் மிக மோசமான மாறுபாடுகள் தோன்றும்..

அப்படித்தான் இவனும்..

பெரியவர்கள் சரியான வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதன் நோக்கம் நீண்ட வாழ்க்கைக்கான துணை.. சந்ததி விருத்தி.. சிநேகிதம்.. என்று பல காரணங்கள் இருந்தாலும்.. முக்கிய காரணம் இயற்கையாகவே தங்களுக்குள் பிரவாகமெடுக்கும் தேவைகளை தனித்துக்கொள்ள ஒரு துணை தேவை..

வெளியேற்றாமல் பதுக்கி வைத்திருக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் நஞ்சாகிப் போகும்..

அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் தான் சூரியதேவ் இருந்தான்..

மற்ற ஆண்களால் சாதாரணமாக முடியக்கூடிய ஒரு விஷயம் தன்னால் முடிவதில்லை இயலாமையில் உள்ளுக்குள் அடி வாங்கினான்..

இந்த உலகில் நமக்கு மிகப்பெரிய எதிரி.. வேறு யாருமல்ல.. நாம்தான்..

ஆரம்ப காலகட்டத்தில் தன்மூலமாக சிசுக்கள் ஜனிப்பதில் புலகாங்கிதமடைந்து தனக்குள் ஆத்ம திருப்தியை கொண்டிருந்தவன்.. இப்போதெல்லாம் வயிறு மேடிட்டு தன்னிடம் வரும் பெண்களை பார்க்கையில் மனதுக்குள் வெறுத்துப் போகிறான்.. ஆனாலும் தன் தொழிலுக்கு என்றுமே துரோகம் செய்ததில்லை.. கடமையை செம்மையாக ஆற்றக்கூடியவன் சூர்ய தேவ்.. இதுவரை அவன் பார்த்த பிரசவங்களில் எதுவும் தவறாய் போனதில்லை..

குழந்தை இல்லாத பெண்கள்.. கருவுற்ற பெண்களை பார்க்கும்போது ஏக்கம் கொள்வதை போல்.. இதுவும் ஒரு மெல்லிய ஏக்கம்.. இயலாமை.. ஏதோ ஒன்று அவனை ரணமாக்கி முடங்க செய்கிறது..

வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் தேக்கி வைத்த வெறுப்பும் விஷமும்..‌ மற்றவர்களிடம் கடுமையை காட்டச் சொல்கிறது..

தன்னை நேசிப்பவன் உலகை நேசிப்பான்.. தன்னை வெறுப்பவன் மற்றவர்களையும் வெறுப்பான்..

சோகத்தில் ஆழ்ந்து போனவன் இன்னொருவன் சிரிப்பதை விரும்புவதில்லை..

அமைதியும் தனிமையும் மட்டுமே அவன் பாஷையாகிப் போனது..

அண்டமும் பிண்டமும் ஒன்று என்பதை போல்..

அவன் உள்ளத்துக்குள் உயிர்ப்பற்று கிடக்கும் உணர்வுகளும்.. அந்தக் கடுமையும் மருத்துவமனை முழுக்க பிரதிபலிக்கிறது..!!

உயர்ந்து சிகரத்தில் நிற்கும் டாக்டருக்கு தனக்குள் இப்படி ஒரு குறை உண்டு என்று ஒப்புக்கொள்ள பயம்.. அந்த பயம் மட்டுமே அனைவரிடமிருந்தும் அவனை தள்ளி நிறுத்துகிறது..

தன்னை சுற்றி போட்டுக் கொண்ட வளையத்தை உடைத்துக் கொண்டு ஒருத்தி உள்ளே வந்து தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள்..

அவளை என்னதான் செய்வது..?

ஒரு பெண்ணை கையாள தெரியாமல் மனநல மருத்துவர் முன்பு மகப்பேறு மருத்துவர் சூர்யதேவ்..

தொடரும்..
Ippadilam lama irukum..
 
Member
Joined
Oct 26, 2024
Messages
31

Next ud Sana ma?.
Today varuma?..
 
Top