• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 19

Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111
கல்யாணியின் இரண்டாவது கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு தாய்.. தங்கைகளினால் புறகணிக்கப்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்ட ஹரிஷ் மாணிக்கம் மதுபாட்டில் வாங்கி வர கொடுத்த காசை வைத்து வீட்டைவிட்டு ஓடி சென்னைக்கு ரயில் ஏறிவிட்டான்..

ரயிலில் போக்கிடம் தெரியாமல் அவன் திருதிருவென விழிப்பதையும்.. அழுது கொண்டிருப்பதையும் கண்ட நல்லுள்ளம் படைத்த ஒரு பெரிய மனிதர்.. அருகே அழைத்து அமர வைத்து பரிவுடன் அவனை பற்றி விசாரிக்க தன்னை பற்றிய உண்மைகளை ஒன்றுவிடாமல் அவரிடம் கூறினான் ஹரிஷ்.. அவன் சொன்ன கதையை கேட்டு அவன் மீது இரக்கம் கொண்டவரோ.. சென்னையில் ஒரு அனாதை இல்லத்தில் அவனை சேர்த்து விட்டு தன் கடமை முடிந்ததென வேலையை பார்க்க கிளம்பி விட்டார்.. அதன் பிறகு ஹரிஷ் அவரை பார்க்கவே இல்லை..

அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த அனாதை இல்லத்தில் ஹரிஷ் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.. ஃபண்ட் டொனேஷன் எதுவுமே வராத நிலையில்.. ஓரளவு வளர்ந்த குழந்தைகள்.. கட்டிட வேலை.. ஹோட்டல்.. காய்கறி மார்க்கெட் கறிக்கடை.. டீக்கடை.. என ஏஜென்ட் சேர்த்து விடும் இடங்களில் கூலி வேலைக்கு சென்று வந்து கொடுக்கும் பணத்தில் தான் ஆசிரமக் குழந்தைகளுக்கு உணவும் மற்ற அத்தியாவசியத் தேவைகளும் கிடைத்தன.. வேலைக்கு சென்ற இடத்தில்.. யாரும் மனிதர்களாக நடந்து கொண்டதே இல்லை.. சிறு தவறுகள் செய்தாலும் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.. பெற்றவர் முதல் மற்றவர் வரை அனைவராலும் கடும் இன்னல்களுக்கு ஆளான ஹரிஷ் மனிதர்களின் முகம் காணவே பயந்தான் .. சிறுவயதில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை மொத்தமாக இழந்து போனவன் யாரிடமும் பேசி பழகாமல் சிறிய கூட்டுக்குள் தன்னை சுருக்கி கொண்டான்..

அந்த ஆசிரமத்தினால் அவனுக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம் கல்வி.. அரசாங்க பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.. படிப்பு நேரம் போக மிச்ச நேரங்களில் கண்டிப்பாக வேலைக்கு போக வேண்டும்.. அன்பு பாசம் நேசம் எதுவும் இல்லாத வாழ்க்கையில் பசி பட்டினி வெறுமை மட்டுமே நிறைந்திருக்க.. கற்பனையில் கனவுகளில் இனிமையாக நினைத்துக் கொள்ள தனக்காக ஒரு ஜீவனை தேடியவனின் விழிகளில் மலராக விரிந்து நின்றவள் சாரு.. தன் சொந்த ஊரில் காயம்பட்ட நேரங்களில் அவனுக்கு மருந்தானவள்.. சென்னை வந்தும் கூட அவள் நினைவுகளில் மூழ்கி.. உறங்கும் வேளையில் அவள் தலைக்கோதி விடுவதாக கற்பனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. இருபத்தி நான்கு மணி நேர இயந்திர வாழ்க்கையில்.. ஒரு சில நிமிடங்கள் கனவினில் வந்து போகும் அவள் பிஞ்சு முகம்தான் அவனை உயிரிப்புடன் வைத்திருந்தது..

இங்கே அவன் வேலைக்கு செல்லும் ஹோட்டலின் எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்திருந்தனர் சாருவின் குடும்பத்தினர்.. சாருவின் தந்தை செல்வமுருகன் வேலை செய்த வங்கியில் அவர் செய்த தில்லுமுல்லு காரணமாக இடமாற்றம் செய்யவே அந்த சிறிய ஊரிலிருந்து மீண்டும் இடம்பெயர்ந்து மீண்டும் பட்டணம் வந்து குடியேறினர்..

தினமும் காலையிலும் மாலையிலும் பால்கனியில்.. நடை பயின்றவாறே பாடம் படிக்கும் அவளை ஒரு நாள் எதேச்சையாக காண நேர்ந்தது.. அவன் இதயத்தில் நீக்கமற நிறைந்த குட்டி தேவதை ஆயிற்றே.. நெஞ்சம் எங்கும் நிறைந்த மகிழ்ச்சியுடன் "சாரு.. சாரு".. என்று உற்சாகத்துடன் குதித்து குதித்து அழைத்துப் பார்த்தான் ஹரிஷ்.. அவள் கண்டு கொள்ளவே வில்லை.. முதலாளியிடம் அடி வாங்கி கன்னம் பழுத்துப் போனதுதான் மிச்சம்.. சாரு தன்னை பார்த்திருக்க வில்லை என்று மனதை தேற்றிக் கொண்டான்.. ஆனால் அவள் பார்த்தும் பார்க்காதவள் போல் திரும்பிக்கொண்டதை அவன் அறியவில்லை.. கள்ளங்கபடம் இல்லாத சிறுவயதில் கூட.. கல்யாணியிடம் தின்பண்டத்திற்காக காசு வாங்கிக்கொண்டு.. அவனுக்கு அன்பை காட்டியவள் சாரு.. அவன் உடலில் ரத்த காயங்களை கண்டு அருவருத்து பயந்து அழுதவள்.. என்று சாரு வின் மறுபக்கம் அறியாத ஹரிஷ் மனதில் அவளை தேவதையாக பூஜித்து ஆசையை வளர்த்துக் கொண்டான்.. அவளைப் பற்றி தெரியாது போனதே நல்லதோ என்னவோ. இல்லையெனில் இன்னும் மனமுடைந்து போயிருப்பான்.. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எடுத்து வைக்க பிடிமானம் இல்லாமல் சரிந்து விழுந்திருப்பான்..

ஹோட்டலில் வேலை செய்த நாட்களில் சாருவை தொந்தரவு செய்யாமல் தூர நின்று ரசிக்கலானான் ஹரிஷ்.. என்னென்னவோ கற்பனைகள்.. ஆசைகள்.. எதிர்கால கனவுகள்.. என அவன் எண்ணங்களில் நிரம்பி வழிந்தாள் சாரு..

சிறு வயதில் துளிர்த்த அன்பு பதின் பருவத்தில் நேசமாக உருமாறி.. காதலாக வலுப் பெற்றது.. பதினோராம் வகுப்பு பயிலுகையில் நல்ல உயரமாகவும்.. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் ஆண்மகன் போலவும் தோற்றமளித்ததால் எடுபிடி வேலைகளிலிருந்து முன்னேறி அந்த ஓட்டலில் சர்வராக வேலை செய்தான்..

பால்கனியில் அவள் படிக்கும் பொழுது காலையில் பள்ளி செல்லும் பொழுது மாலையில் திரும்பி வரும் பொழுது விடுமுறை நாட்களில் மாடியில் நின்று தோழிகளுடன் அரட்டை அடிக்கும் பொழுது என்று தினம் தினம் அவள் தரிசனம் காணுவதற்காகவே தவம் இருந்தான்..

"என்னடி.. அந்த பையன் உன்னையே பார்க்கிறான்.. செம ஸ்மார்ட்டா இருக்கான்.. அவன் கலரும்.. கண்ணும்.. இந்த ஊர் பையன் மாதிரியே தெரியலியே".. என்று தோழிகள் ரசித்துச் சொல்லும் பொழுது.. முகத்தை சுழித்து "ப்ச்.. ஸ்மார்ட்டா இருந்து என்ன பண்ணுறது.. ஹி இஸ் ஜஸ்ட் அ ஹோட்டல் சர்வர்.. நம்ம ஸ்கூல் சீனியர் எம்பி வீட்டு பையன் அகிலேஷ் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்கான்.. அவனுக்கே நான் இன்னும் ஓகே சொல்லல.. போயும் போயும் அவனை விட்டுட்டு இவனை பார்ப்பேனா என்ன.. நீங்களும் அந்த பக்கம் பாக்காதீங்க.. அப்புறம் அதையே சாக்கா வச்சுக்கிட்டு என்கிட்ட பேச ட்ரை பண்ணுவான்".. என்று சாரு அலட்சியமாக மொழிந்த ஆணவச் சொற்கள் எதுவும் ஹரீஷ் காதுகளில் விழவில்லை.. எப்போதும் போல் தெய்வ தரிசனமாய் அவளை ரசித்திருந்தான் அவன்..

பன்னிரண்டாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் ஒருபெரிய ஆண்கள் கல்லூரியில் B.Tech food technology படிக்க சீட் கிடைக்கவே.. அனாதை இல்லத்திலிருந்து வெளியே வந்து ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்தவன்.. தன் இதர செலவுகளுக்காக ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு ஒரு கால் சென்டரில் சேர்ந்து பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டிருந்தான்.. பெரிய வீட்டு பிள்ளைகள் படிக்கும் கல்லூரி.. ஏழ்மையின் காரணமாக வகுப்பு மாணவர்களால் ஓரங்கட்டப்பட்டான்.. ஆஸ்டலிலும் ஒதுக்கப்பட்டான்.. கேலி கிண்டல்களுக்கு ஆளானான்.. தனிமை.. தனிமை.. தனிமை.. கேவலம் பணம்தான் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதா.. உண்மையான அன்புக்கு பஞ்சமாகிப் போனதா.. இவ்வளவு பெரிய உலகத்தில் உண்மையான அன்பைக் காட்ட ஒருவர் கூடவா இல்லை.. மனிதர்கள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது.. மிகுந்த மன அழுத்தத்தில் அவன் மனதுக்கு மயிலிறகின் இதத்தை கொடுப்பவள் அவன் தேவதை மட்டுமே..

தன் பரபரப்பான வாழ்க்கையிலும் காலை மாலை அவளுக்காக நேரம் ஒதுக்கி.. அவள் வீட்டின் எதிரே நின்று பெண்ணவளின் தரிசனம் காண தவறுவதில்லை.. பதினெட்டு வயதின் தொடக்கத்தில் இன்னும் மெருகேறி ஆண்மையாக ஆறடியில் நின்ற ஆண்மகனை கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவளால்..

அதிசயமாக அவள் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது.. உள்ளுக்குள் பனிமழை பரவியது போல் சில்லென உணர்ந்தான் ஹரிஷ்.. சில நாட்களில் சிரிக்க ஆரம்பித்தாள்.. அம்மாடி.. என்ன இது.. நம்பவே முடியவில்லை.. மூச்சடைத்துப் போனான்.. என் தேவதை என்னைப் பார்த்து சிரிக்கிறாளா.. நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.. உலகமே அவன் கைவசப்பட்டது போல் உணர்வு..

அடுத்த சில நாட்களில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது.. அலைபேசி எண் பரிமாறிக் கொள்வது.. என நட்பாக ஆரம்பித்து உள்ளுக்குள் பொங்கி வழிந்த காதலை மெல்ல மெல்ல அவளிடம் வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தான் ஹரிஷ்.. அவளும் மறுக்க வில்லை.. ரகசியமாக அவர்கள் காதல் வளர்ந்து கொண்டிருக்க.. மறுபக்கம் கல்வி.. வேலை என்று பிசியாக இருந்தான் அவன்.. நாட்கள் இனிமையாகவே கழிந்தன..

இந்நிலையில் படிப்பு முடிந்து ஒரு பழஜுஸ் தயாரிக்கும் இன்டர்நேஷனல் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜராக வேலைக்கு சேர்ந்தான் ஹரிஷ்.. வேலை பார்த்துக் கொண்டேன் எம்பிஏ படித்து முடித்தான்.. அவன் அசாத்திய திறமையும் சுறுசுறுப்பும் அந்த கம்பெனியின் முதலாளியின் கருத்தைக் கவரவே நல்ல சம்பளத்துடன் புத்திசாலி ஊழியனை வேறெந்த கம்பெனிக்கும் தாவ விடாது இறுகப் பிடித்து வைத்திருந்தார்.. பல கம்பெனிகளில் இருந்து நல்ல நல்ல ஆஃபர்கள் அவன் திறமையின் பொருட்டு வந்த வண்ணம் இருக்க.. முழுமையாக தொழில் கற்று கொண்டவனோ புதிதாக தானே தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருந்தான்.. இடையில் சாரு ஹரிஷ் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது..

அதற்காக அவன் அணுகிய தொழில் ஆலோசகர்தான் விகாஷ்.. தெரிந்தவர் மூலம் பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து தொழில் தொடங்க அவன் தான் உதவினான்.. சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட பேக்டரி ஹரிஷ் திறமை.. உழைப்பு .. தொழில் நேர்த்தி.. வித்தியாசமான ப்ராடக்ட் லான்ச்.. கஸ்டமர் காலை கையாளும் விதம் என அசுர வேகத்தில் வளர்ந்தது.. உள்ளூர் தவிர வெளிநாடுகளிலும் அவன் குளிர் பானங்கள் பிரபலமடைய.. காம்படிட்டர்கள் இடையே கடும் போட்டியும் அவர்களால் அவனுக்கு பலவித பிரச்சனைகளும் உருவானது.. அனைத்தையும் தூசி போல் தட்டி தூக்கி எறிந்தான் ஹரிஷ்.. சாரு அவனுக்கு கொடுத்த ஊக்கமும் தைரியமும் மட்டுமே அவனை மென்மேலும் முன்னேறும் பொருட்டு வழி நடத்திச் சென்றது.. தனக்கு வந்த லாபத்தில் பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்கி இருந்தான் ஹரீஷ்.. மாலை வேளைகள் அவளோடு மட்டுமே.. சில நேரங்களில் இரவு தூக்கமும் அவளோடு.. கண்ணியமாக காதல் வளர்த்தனர்.. தாயின் மறு உருவமாக.. தோழியாக.. காதலியாக அவன் தனிமை போக்கினாள் சாரு.. எதிர்காலம் குறித்து நிறைய பேசி அவனை வெறித்தனமாக உழைக்க வைத்தாள்.. அவனுக்காகவே அவள்.. அவள் மீதான நேசம்.. நாளுக்கு நாள் பெருகியது..

விகாஷ்.. ஹரிஷ் இருவர் இடையே நட்பின் நெருக்கம் கூடி போக ஹரிஷ் தன் காதலி சாருவை பற்றி அவனிடம் சொன்னான்..

தினம் தினம் அவன் போனில் கொஞ்சி பேசுவது.. அடிக்கடி.. தன் காதலியை தேடிப் போவது.. என அனைத்தையும் கண்டு கொண்ட விகாஷ் யார்.. என்னவென்று உரிமையாக விசாரிக்க சாரு பற்றி அனைத்தும் பகிர்ந்து கொண்டான் அவன்..

கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்று வரை அவனுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பவள் அவள்தான்.. அவன் தனிமையை போக்கி காதலை கொடுத்துக் கொண்டிருப்பவள்.. என்று தனக்கு எந்த அளவில் சாருமதி உறுதுணையாக நிற்கிறாள் என்பதை வெளிப்படையாக விகாஷுடன் பகிர்ந்து கொள்ள.. சாருவின் மீது மென்மேலும் மதிப்பு மரியாதையும் பெருகி அவளை பார்க்க விரும்பினான் விகாஷ்..

"இன்னிக்கு ஈவினிங் என் பிளாட்டுக்கு சாரு வருவா.. நீ என் பிளாட்டுக்கு வா.. உன்னை அவளுக்கு இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்".. என்று அழைக்க.. சரி என்றான் அவன்..

அன்று மாலை வேளையில்.. ஃபிளாட்டில் அவன் சமைத்துக் கொண்டிருக்க.. சாரு அந்த மேடையில் அமர்ந்து அவனை சமைக்க விடாமல் குறும்புகள் செய்து கொண்டிருந்தாள்..

"பேபி.. விகாஷ் வர்றதுக்கு முன்னாடி நான் சமைச்சு முடிக்கனும்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு".. அவன் அதட்ட..

"எதுக்கு நம்ம பிரைவேட் ஸ்பேஸ்குள்ளே கண்டவனையெல்லாம் இன்வைட் பண்றே.. காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை வேலைன்னு சுத்துற.. எனக்காக ஸ்பென்ட் பண்றது இந்த நைட் டைம் தான்.. அதையும் ஃபிரெண்டுனு இன்னொருத்தனுக்கு விட்டுக்கொடுத்தா எப்படி?" என்று முகத்தை சுழித்தாள் அவள்..

வாடிய முகம் கண்டு ஆழ்ந்த மூச்செடுத்து அவள் அருகே வந்து நின்றவன்.. "ஏய் சாரும்மா.. அவன் உன்னை பார்க்கணும் ரொம்ப ஆசைப்பட்டான் அதான் வர சொன்னேன்.. என தன் வெற்றிக்கு காரணமான காதல் இளவரசியை அறிமுகப்படுத்துறது எனக்கும் பெருமைதானே".. என்று அவள் நெற்றி முட்ட.. வேண்டா வெறுப்பாக சரி என்று தலையசைத்தாள் அவள்..

காலிங் பெல் அடிக்கும் ஓசை.. விகாஷ் வந்துட்டான்.. என்று சமையல் மேடையில் இருந்து அவளை தூக்கி கீழே இறக்கி விட்டவன் வாசலை நோக்கி செல்ல.. அவளும் அவனை பின் தொடர்ந்தாள்..

கதவைத் திறந்து விகாஷை வரவேற்றான் ஹரிஷ்.. சோபாவில் அமர வைத்து பழ ரசம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு எதிரே இருந்த ஒற்றை இருக்கையில் அவன் அமர்ந்து கொள்ள.. ஹரிஷ் இருக்கையின் விளிம்பில் நெருக்கமாக அமர்ந்தாள் சாரு.. விகாஷ் ஹரிஷிடம் மட்டுமே சிரித்துப் பேசியபடி பழரசத்தைக் குடித்துக் கொண்டிருக்க..

"என்ன.. உன் பிரண்டு அவ்வளவு திமிரு புடிச்சவனா.. வந்ததுல இருந்து என்னை கண்டுக்க கூட மாட்டேங்குறான்.. ரொம்பத்தான் திமிரு" என்று அவன் காதை கடித்தாள் சாருமதி..

அதேநேரத்தில் "என்னடா.. உன் கேர்ள் ஃப்ரெண்ட்டை இண்ட்ரடியூஸ் பண்றேன்னு கூட்டிட்டு வந்துட்டு.. அவளை கண்ல கூட காட்ட மாட்டேங்குறே".. என்று விகாஷ் சிரிக்க.. ஹரிஷ் விளங்கா பார்வையுடன் புருவங்களை சுருக்கினான்..

"ஹேய்.. என்ன.. விளையாடுறியா.. இதோ உக்காந்து இருக்காளே சாரு".. என்று அருகே இருந்தவளை ஹரிஷ் அணைத்துக் கொள்ள.. விகாஷ் முகத்தினில் மரண பீதி..

ஹரிஷ்.. இவள்தான் சாரு என்று அணைத்துக் கொண்டு சிரித்துப் பேசிய இடத்தில் யாருமே இல்லை..

தொடரும்..
போச்சு போச்சு என்னமோ நடக்குது 🤯🤯🤯
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
114
ஏதேய் அங்க சாரு இல்லையா. 🥺🥺🥺🥺🥺 டேய் நல்லவனே இத்தன நாள் யார்கிட்ட டா பேசின🤔🤔🤔🤔🤔

டேய் பக்கி நீயா கற்பனை பண்ணி வச்சிருக்கிற உருவமா அவ. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

அப்ப யாருகிட்ட போன்ல பேசின இத்தன நாளா. ஒரு வேளை அது தான் மதியா. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 😇😇😇😇😇😇

ஒன்னும் புரியலையே. இப்படி ட்விஸ்ட் வச்சிருக்கீங்க சனா டியர்.
 
Member
Joined
Apr 30, 2025
Messages
87

Enna sollran......
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
அய்யய்யோ என்ன இது புது குழப்பம்.... அப்போ அது illusions ah....

5 years ah காதலிக்கற charu நிஜம் இல்லையா....

விகாஷ் சொன்னதா தெரியும்....
 
Top