• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 20

Active member
Joined
Jan 18, 2023
Messages
164
enga ma enga mathi...sema intersting story....seekaram athudtha ud update pannunga....eagerly waiting for your story.........super super super super super suepr super super super super super super super super
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
170
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌..,.... Harishkku eppo ellamae purinchu pochu..... inni mathi enga sisy..... avangala kattunga sisy...
 
Member
Joined
Jan 26, 2024
Messages
107
அருமையான பதிவு
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97
விகாஷ் முகம் இருண்டு போனவன் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு. "ஹரிஷ் விளையாதே .. உன் கேர்ள் பிரெண்டுக்கு என்னை பார்க்க விருப்பம் இல்லைன்னா விருப்பமில்லைன்னு சொல்லு.. அதுக்காக இப்படி.. விபரீதமா பேசி என்னை பயமுறுத்தாதே".. அச்சத்தை உள்ளே மறைத்து வெளியே சிரித்தபடி கூற.. அவனை ஏகத்துக்கும் முறைத்தான் ஹரிஷ்.. "யாரு நான் விளையாடுறேனா.. நீதான் என்கிட்டே விளையாடறே.. இங்கே பக்கத்துல உட்கார்ந்து நீ அவளை பார்க்கலைன்னு உன்னை முறைச்சுட்டு இருக்கா.. நீ என்னடான்னா நேரங்கெட்ட நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு இருக்கே.. இதெல்லாம் அவளுக்கு பிடிக்காது.. இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்.. நீ வரும்போது குடிச்சிட்டு வந்துட்டியா".. என்று சற்றே காட்டமான குரலில் கேட்க.. அந்தரத்தில் ஹரிஷின் கரம் வெற்றிடத்தை சுற்றி வளைத்திருக்க.. அவன் பொய் சொல்லவில்லை.. வேறு ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டான் விகாஷ்.. தொழில்துறையில் புத்திசாலித்தனமாக நிறைய விஷயங்களை சாதித்தவன்.. புத்தி பேதலித்தவன் போல் நடந்து கொள்வது விகாஷிற்கு குழப்பத்தையும் பயத்தையும் தோற்றுவிக்க..

"டேய்ய்..அங்கே யாருமே இல்ல!!.. உனக்கென்னடா ஆச்சு.. ஐ திங்க் நீ மெண்டலி அன்ஸ்டேபிளா இருக்கேன்னு நினைக்கிறேன்".. என்றான் விகாஷ் பீதியுடன் ஹரிஷையும் வெற்றிடத்தையும் பார்த்துக் கொண்டே..

தன்னை மனநோயாளி என்று சொன்னதும் கோபம் உச்சி மண்டைக்கு ஏற.. சட்டென எழுந்து தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன் .. "சோ என்னை பைத்தியம்னு சொல்றியா".. என்று விழிகள் சிவக்க கர்ஜித்தான்..

விகாஷ் திடுக்கிட்டு எழுந்தவன் .. "மச்சான் நான் சொல்றதை கேளு ஏதோ தப்பா இருக்கு.. நாம ஹாஸ்பிடல் போகலாம்".. என்று அமைதிப்படுத்தும் விதமாக அவன் தோளைத் தொட.. கோபம் குறையாமல் அவன் கையைத் தட்டிவிட்டு விலகியவன்.. "வேண்டாம் நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நீ சரியில்ல.. என் சாருவை தப்பா பேசுற யாரையும் எனக்கு பிடிக்காது".. என்று அழுவது போல் நின்றிருந்த சாருவை வாஞ்சையோடு நோக்கி தோளோடு அணைத்து கொள்ள.. "யாரை இப்படி கட்டிப்பிடிக்கிறான்" என்ற கலவரத்துடன்.. "டேய்.. உன் சாரு எவன் கூடயாவது ஓடிப் போயிட்டாளா இல்ல செத்துப் போயிட்டாளா.. அதான் இப்படி மெண்டல் மாதிரி பிஹேவ் பண்றியா".. என்று விகாஷ் பொறுமையிழந்து கத்த.. அடுத்த கணமே வெண்ணிற முகம்.. குருதியில் தோய்த்தார் போல் கோபத்தில் சிவந்து போக.. "என்ன சொன்னே.. எவ்ளோ தைரியம் இருந்தா என் சாருவையே தப்பா பேசுவே".. என்று சீற்றத்துடன் பற்களை கடித்தவன்.. ஓங்கி அறைந்து விட்டான் விகாஷை..

விகாஷ் அந்த நீள்விருக்கையில் சுருண்டு விழ.. "இன்னையோட நம்ம பிசினஸ் டீலிங் எல்லாமே கேன்சல்.. இனி உன் முகத்தை நான் எங்கேயுமே பார்க்க கூடாது மரியாதையா வெளியில போ.. என்று சொடக்கிட்டு பற்களை கடித்து உறுமினான்..

உதட்டோரம் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே அடிபட்ட கோபத்துடன்.. "உனக்கு உண்மையை புரிய வைக்க நினைச்சேன்.. என்னையே அடிச்சிட்டேல.. கூடிய சீக்கிரம் நீ டிரஸை கிழிச்சுகிட்டு ரோட்டுல அலைய போறது உறுதி.. எக்கேடும் கெட்டுப் போ.. உனக்கெல்லாம் பட்டாதான் புத்தி வரும்".. என்று விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி விட்டான்.. அதன் பிறகு விகாஸ் ஹரிஷை சந்திக்கவே இல்லை..

சரியாக இரண்டு வருடங்களுக்கு பிறகு இதோ இப்போதுதான் தான் ஆபத்தில் இருப்பதாகவும் வந்து காப்பாற்றும்படியும் அழைத்திருக்கிறான்.. ஹரிஷ் தாமதிக்காது ஜிபிஎஸ் ட்ராக்கிங் மூலம் விகாஷ் இருப்பிடத்தை கண்டறிந்து அங்கே விரைந்து சென்றவன் எதிரே தெரிந்த பழைய இரும்பு குடோன் முன் வண்டியை நிறுத்தினான்.. யோசனையுடன் விகாஷ் அழைத்த அந்த மொபைல் எண்ணுக்கு அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய.. வட்டமான மேஜையை சுற்றி
பத்து அடியாட்கள் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.. எதிரே இரும்பு தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் விகாஷ்..

இந்த அடியாட்களால் சிறைபிடிக்கப்பட்டு பல நாட்களாக அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விகாஷ் எப்படியோ வெளியே அறையைவிட்டு வெளியே வந்து ஓரமாக சார்ஜில் போடப்பட்டிருந்த ஒருவனின் போனை எடுத்துதான் ஹரிஷிற்கு பேசினான்.. ஆனால் நான்கு மூலைகளிலும் ஆட்கள் காவலுக்கு நிற்க அங்கிருந்து தப்பிப்பதுதான் கடினமாகி போனது.. வாசல் வரை வந்தவனை மிக எளிதாக வளைத்து பிடித்து விட்டனர் அடியாட்கள்..

மீண்டும் அவனை கட்டி வைத்துவிட்டு கூலாக சீட்டு விளையாடிக் கொண்டிருக்க.. இதோ ஹரிஷ் வந்துவிட்டான்..

"டேய்.. இவன் யாருடா புது பீசு வான்டடா வந்து மாட்டிக்கிறான்".. ஒருவன் நக்கலடிக்க.. இன்னொருவனோ.. "டேய் இவனை பார்த்தா அந்தச் சாருமதி பொண்ணு போன்ல ஒரு போட்டோவை காட்டி அவங்க அப்பா கிட்ட பேசிட்டு இருந்துச்சே.. அவனை மாதிரியே இல்ல?".. என்று சொல்லவும் ஹரிஷ் விழிகள் கேள்வியாக சுருங்கின.. "நான் கூட செல்வமுருகன் சாரோட இவரை இரண்டு மூணு இடத்துல பார்த்து இருக்கேன்".. என்று வேறொருவன் சொல்லவும்
அவனை நோக்கி எழுந்து வந்தனர் அனைவரும்..

"என்ன சாரே.. உங்களைப் பார்த்தா அந்த மேடம்க்கும் சாருக்கும் வேண்டப் பட்டவரு மாதிரி தெரியுது.. மரியாதையா இங்கிருந்து போயிருங்க.. இவனை கடத்தி வைக்க சொல்லி செல்வமுருகன் சார் தான் சொல்லி இருக்காரு.. எதுவானாலும் நீங்க அவர்கிட்டயே பேசிக்கோங்க".. என்றான் ஒருவன் மரியாதையான குரலில்..

"எதுக்காக அவனை கடத்தி வச்சிருக்கீங்க".. ஹரிஷ் இரும்புக் குரலில் கேட்க.. "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது காசு கொடுத்தாங்க.. கடத்தி வச்சிருக்கோம்" என்றான் இன்னொருவன் எகத்தாளமாக..

ஹரிஷ் முன்னேறி விகாஷ் பக்கம் செல்ல.. வழிமறித்து நின்று தடுத்தனர் அவர்கள்.. "சொல்லிக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்".. என்று ஒருவன் தாக்கமுற்பட.. நேக்காக அவன் அடியிலிருந்து தப்பி.. அவன் கரங்கள் அவனையே அடிக்கும்படி செய்தான் ஹரிஷ்.. கீழே சரிந்து விழுந்தவனை கண்டு அனைவரும் விழிக்க..
என்னடா நடந்துச்சு.. என்ற ரீதியில் மற்றவர்கள் அவன் மீது திமுதிமுவென பாய அசால்டாக அனைவரையும் அடித்து போட்டு.. விகாஷை விடுவித்தான் ஹரிஷ்..

"என்னடா ஆச்சு.. ஏன் இவங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்ட".. ஹரிஷ் அவனிடம் கேட்க.. பற்களை கடித்த விகாஷ்.. "மாட்டிக்கிட்டது நான் இல்லடா நீ தான்டா ஃபூல்.. அவங்க ட்ராப் செட் பண்ணது உனக்குத்தான்".. என்று அவனுக்கு புரிய வைக்க முயற்சித்தான் விகாஷ்..

யோசனையாக கண்கள் இடுங்கியவன்.. "என்னடா சொல்றே.. எனக்கு ஒண்ணுமே புரியல.. சாரு எதுக்கு எனக்கு ட்ராப் செட் பண்ணனும்.. உன்னை எதுக்கு கடத்திட்டு வந்து வைக்கணும்.. அன்னைக்கும் இப்படித்தான் சாருன்னு ஒருத்தி இல்லைன்னு ஏதோ உளறினே.. இன்னைக்கும் ஏடாகூடமா ஏதேதோ பேசிட்டு இருக்கே".. ஹரிஷ் குழம்ப.. கார்ல போய்கிட்டே பேசலாம்.. எனக்கும் நிறைய குழப்பம் இருக்கு".. அவனை இழுத்துக் கொண்டு நடந்தான் விகாஷ்..

காரில் ஹரிஷ் விகாஷின் வேண்டுகோளுக்கிணங்க.. சிறுவயதில் சாரு அவன் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள்.. எங்கே காதல் தொடங்கிற்று? எப்படி காதலித்தனர்.. அவள் எப்படி இறந்தாள்.. எப்படி உயிருடன் வந்தாள்.. இடையில் மதி எப்படி அவன் வாழ்க்கையுடன் இணைந்தாள்.. ஏன் அவனை விட்டு பிரிந்தாள் என அனைத்தையும் தன் கண்ணோட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சொல்ல.. விகாஷிற்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது.. இப்போது அவனோடு வசிக்கும் சாரு உண்மை.. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் அவனை உருகி உருகி காதலித்ததாக இவன் நினைத்துக் கொண்டிருக்கும் சாரு கற்பனை.. அவனாக உருவாக்கிய இல்யூஷன்.. அந்த இல்யூஷன் சாருவை இறந்ததாக இவனே கற்பனை செய்து கொண்டிருக்கிறான்.. இதை எப்படி இவனுக்கு புரியவைப்பது.. என மண்டையை போட்டு குழப்பிக் கொண்டவன்.. சட்டென மூளையில் மின்னல் வெட்ட..

"ஹரிஷ்.. நீ சாரு இறந்த உடனே ஒரு டாக்டர்கிட்டே கவுன்சிலிங் பண்ணதா சொன்னேல.. நாம இப்போ உடனே அவர்கிட்டே போயாகணும்.. அவரால மட்டும் தான் உன் பிரச்சனையை தீர்க்க முடியும்.. சீக்கிரமா அவர்கிட்ட போ".. என்றான் அவசரமாக..

நல்லவேளையாக பாஸ்கர் ஊரிலிருந்து வந்து விட்டார்.. இருவரும் பாஸ்கரை சந்தித்து தன் பக்க உண்மைகள் என நம்பும் விஷயங்களை விளக்கமாக சொல்லி உதவி கேட்க.. நெற்றியில் கைவைத்து ஆழ்ந்து யோசித்தவர் ஹரிஷிடம் ஒரு கேள்வி கேட்டார்..

"ஹரிஷ் நீங்க சாரு சம்பந்தப்பட்ட விஷயம் எதையாவது இடையில மறந்துட்டீங்களா.. அதாவது உங்க இதயத்தை பாதிக்கிற மாதிரியான ஏதாவது ஒரு விஷயம்.. நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க".. என்று பார்வையால் அவனை கூர்ந்தபடி கேட்க.. மூளையை கசக்கி முடிந்தவரை யோசித்துப் பார்த்தான் ஹரிஷ்.. எந்த விஷயமும் நினைவிற்கு வரவில்லை.. அவனைப் பொறுத்தவரை சாரு விஷயத்தில் அனைத்துமே உண்மை.. அவளைப் பார்த்தது காதலித்தது இப்போது அவளோடு வாழ்ந்து கொண்டிருப்பது என எதுவுமே பொய்யில்லை..

"இல்ல டாக்டர்.. அப்படி எந்த விஷயத்தையும் நான் மறக்கல எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு".. என்று அவன் அடித்து சொல்லவும்..

"ஹரிஷ் சில விஷயங்கள்.. நமக்குள்ள ஏற்பட்ட பாதிப்புகளால் மறந்து போயிருக்கலாம் அது உங்க ஆழ்மனசுல கண்டிப்பா தேங்கி நிற்கும்.. ஹிப்னோடைஸ் பண்றது மூலமா அந்த விஷயங்களை வெளியே கொண்டு வர முடியும் ஆனா அதுக்கு உங்க ஒத்துழைப்பு வேணும்".. என்றார் மருத்துவர்..

சில கணங்கள் யோசித்தவன்.. பின் சரி என்று சம்மதம் தெரிவித்தான் சிகிச்சை முறைக்கு..

அடுத்த சில நிமிடங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாஸ்கரால் ஹிப்னோசிஸ் சிகிச்சையின் மூலம் ஹரிஷ் ஆழ் மயக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.. கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான் ஹரிஷ்.. கண்ணாடி அறையின் வெளியே நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான் விகாஷ்..

"ஹரிஷ்"..

"ம்ம்"..

"நான் பேசறது உங்களால புரிஞ்சுக்க முடியுதா"..

முடியுது.. கண்கள் மூடியபடியே பதிலளித்தான்..

"சாருவை பத்தி ஒவ்வொரு ஸ்டேஜா சொல்ல முடியுமா"..

"ம்ம்.. எனக்கு பன்னிரண்டு வயசு இருக்கும் போது.. சாரு என் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டா.. எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டா"..

"அப்புறம்"..

"எனக்கு 15 வயசு இருக்கும் போது நான் ஹோட்டல்ல வேலை பார்த்தப்போ.. சாருவை அந்த மாடி வீட்ல பார்த்தேன்.. காலையில சாயந்திரம் தினமும் அவளை பார்க்காமல் போனால் அந்த நாள் எனக்கு முழுமை அடையாது"..

"சரி அப்புறம்?"..

"18 வயசுல அவ மேல எனக்கு காதல் வந்துச்சு"..

"சரி?"..

"இருபது வயசுல அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணினேன்"..

"அவ ஓகே சொல்லிட்டாளா?"..

"ம்ம்"..

"நாங்க ரெண்டு பேரும் உருகி உருகி காதலிச்சோம்.. போன்ல பேசினோம்"..

"அப்புறம்.. என்ன ஆச்சு.. அந்த காதல் தொடர்ந்து நீடிச்சுதா"..

"இல்ல"..

"ஏன்?"..

"அவ என்னை ஏமாத்திட்டு போய்ட்டா.. என்னை விட பெட்டரா இன்னொருத்தன் கிடைச்சதும் என்னை உதறி தள்ளிட்டு போய்ட்டா..

"மேலே சொல்லுங்க"..

ஹரிஷ் மேற்கொண்டு பேசலானான்..

அன்று..

"இங்கே பாரு.. ஹரிஷ்.. சும்மா என்னை தொந்தரவு பண்ணாதே.. நீ அழகா மேன்லியா இருக்கே.. என் பிரண்ட்ஸை ஜெலஸ் பண்றதுக்காக ஏதோ டைம் பாஸுக்கு உன்கூட பழகினேன் அவ்ளோதான்.. இப்படி சொல்றதுக்காக என்னை மன்னிச்சிடு என்னை லவ் பண்றதுக்கு ஒரு தகுதி வேணும்.. அது உன்கிட்ட இல்ல.. நான் ஜோதிஷை லவ் பண்றேன்.. ஸ்டடிஸ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஃபாரின்ல போய் செட்டிலாக போறோம்.. இனி என்னை என்னை டிஸ்டர்ப் பண்ணாதே.. குட்பை".. என்று விலகி நடக்க.. இதயம் சுக்கு நூறாக உடைந்த வலி கண்டான் ஹரிஷ்.. அவள் சென்ற பிறகும் அவள் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தவன்.. சில நிமிடங்களில் சுதாரித்து அவள் பின்னே ஓடினான்.. காரில் ஏறப் போனவளை தன்பக்கம் இழுத்து

அவள் சொன்னது பொய்யாக தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் முகத்தில் புன்னகை வரவழைத்து "சாரு விளையாடாதே.. இது பொய்தானே" என்று தவிப்புடன் கேட்க.. "இல்ல.. உண்மையைதான் சொல்றேன்.. என்னை விட்டு போயிடு ப்ளீஸ்".. என்றாள் அவள்..

"தயவு செஞ்சு அப்படி சொல்லாதடி.. என்னால தாங்க முடியல.. உன்னை விட்டு எப்படி இருப்பேன்.. உன்னை உயிருக்குயிரா லவ் பண்றேன் சாரு .. நீ இல்லாத வாழ்க்கையை என்.. என்னால நினைச்சு கூட பாக்க முடியாது.. புரிஞ்சுக்கோடி".. என்று அடுத்து பேச முடியாமல் குரல் கம்மி போனவன்.. மிடறு விழுங்கிக் கொண்டு..

"இப்ப என்ன.. என் தகுதி தானே உனக்கு பிரச்சனை.. இன்னும் ரெண்டு மூணு வருஷம் பொறுத்துக்கோ.. கண்டிப்பா நான் லைஃப்ல செட்டில் ஆயிடுவேன்.. உன்னை சந்தோஷமா வச்சுக்குவேன்.. நான் கண்டிப்பா முன்னேறுவேன் சாரு.. என்னை நம்பு".. என்றான் கண்களில் தவிப்போடு கெஞ்சல் மொழியில்..

அவளோ.. ஏளன பார்வையுடன் எதுவும் பேசாமல் மீண்டும் காரில் ஏற முற்பட.. அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவன் தன் உலகம் அவள்மட்டுமே என்று நினைத்து வாழ்ந்த அந்த ஒருத்தியாலும் உதாசீனப்படுத்தப்பட.. அதன் வலி உயிர் வரை சென்று தாக்கியது.. அவள் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதல் ரீங்காரமிட்டு உலகமே இருண்டு போன மாயையை தோற்றுவித்தது..

தன் இத்தனை வருட நேசம் கருகிப்போன கோபத்தில் அவளை காரில் ஏற விடாமல் முரட்டுத்தனமாக பிடித்து தன் பக்கம் இழுத்தான்..

"சாரு இப்படி பண்ணாதே.. நீ.. நீ.. இல்லைனா நான் செத்துருவேன்டி.. உனக்கு என் வேதனை புரியலையா.. என் காதல் புரியலையா.. சின்ன வயசில இருந்து உன்னை ரொம்ப பிடிக்கும்.. உ.. உ.. உன்னை இங்கே சுமக்கிறேன்டி".. என்று இதயத்தை காட்டினான்..

"எனக்கு உன்னை விட்டா வேற யாருமே இல்லை சாரு.. நீயும் என்னை விட்டு போயிடாத ப்ளீஸ்".. ஆறடி அவளிடம் கெஞ்சி நிற்க..

"என் கையை விடுடா.. நீ என்ன சொன்னாலும் உன்கூட என்னால வாழ முடியாது.. என்னை விட்டுடு".. என்று தன் கையை விடுவித்துக் கொள்ள முயல அவன் பிடி இன்னும் இறுகியது..

அந்நேரம் அந்த பக்கம் இரண்டு காவலதிகாரிகள் வரவும்.. "சார் இந்த பையன் என்னை ஹராஸ் பண்றான் என்னன்னு கேளுங்க".. என்று அவர்களிடம் புகார் செய்ய.. அந்த கணமே மரணித்தான் ஹரிஷ்... "சாருஉஉ".. அவன் குரல் உடைய..

"டேய்.. என்னடா பிரச்சனை பண்றியா .. அந்த பொண்ணு கையை விடுடா".. என்று அவனை மிரட்டினர் காவலதிகாரிகள்.. அவன் பிடி தளரவில்லை.. உன்னை எப்போதும் விடமாட்டேன் என்பது போல்.. அவள் கரத்தை இறுக்க பிடித்திருந்தவன் பார்வை.. "நீ சொன்னதெல்லாம் பொய் தானே என்பதை போல் இன்னும் கூட பெண்ணகளின் விழிகளை வெறித்திருக்க..

"சொல்லிக்கிட்டே இருக்கேன்.. விட்றா அவளை".. என்று லத்தியால் அடிக்க ஆரம்பித்து விட்டனர் அவனை.. அப்போதும் கரத்தை விடவில்லை அவன்..

"என்ன திமிரு".. கோபத்தில் ஒரு அதிகாரி.. அவன் பின்மண்டையில் அடித்து விட.. அடுத்தகணமே கண்கள் சொருக பின் தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு.. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.. கண்முன்னே ஏதேதோ பிம்பங்கள் சுழல.. போதையில் மூழ்கியவன் போல்.. ஒரு நிலையாக இல்லாமல் தலை சுற்றிக் கொண்டு வரவும்.. எப்போது ஹாஸ்டல் வந்து சேர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை..

பல மணி நேரங்களாக சிந்தை கலங்கியவன் போல் தன் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தவன் எப்போது தூங்கினானோ மறுநாள் காலையில் எழுந்திருக்கையில் வழக்கம்போல தன் பணிகளை தொடரலானான்..

சாரு தன் எண்ணை பிளாக் செய்து விட்டு வெளிநாடு சென்று விட.. தொடர்ந்து அந்த எண்ணுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான் ஹரிஷ்.. நம்பர் நாட் அவைலபிள் என்றே வர.. பைத்தியம் பிடித்தவன் போல் திரும்பத் திரும்ப அதே எண்ணை அழைத்துக் கொண்டே இருக்க..

ஒரு நாள் அதிசயமாக அழைப்பு ஏற்கப் பட்டது..

"சாரு.. சாரு.. ஏன்டி போன் எடுக்கல என்ன ஆச்சு உன் நம்பருக்கு".. எதுவுமே நடக்காதது போல் இயல்பாக கேட்டான்.. சாரு தன்னை புறக்கணித்து விட்டாள் என்ற விரும்பத்தகாத விஷயத்தை அவன் ஆழ்மனம் மறந்து போனது..

எதிர்முனையில் "சாரி ராங் நம்பர்" என்று போன் வைக்கப்பட..

மீண்டும் மீண்டும் அழைத்து பேசினான்.. அவன் குழைவும் காதலும் எதிர்முனையை கவர்ந்திருக்க வேண்டும்.. ஒரு கட்டத்தில் எதிர்முனையிலிருந்த பெண்ணும் அவனோடு அன்போடு பேசி பழக ஆரம்பித்தாள்.. அன்றிலிருந்துதான் சாருவின் கற்பனை உருவம் அவன் கண்முன்னே தோன்ற ஆரம்பித்தது.. போனில் பேசிய பெண்ணின் அன்பான அக்கறையான வாய் மொழிகளை அவனிடம் பேசி அவன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டது அவனால் அவனுக்கே தெரியாமல் உருவாக்கப்பட்ட அந்த இல்யூஷன் உருவம்..

ஹரிஷ் ஆழ் மயக்கத்தில் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க.. விகாஷ் அவசர அவசரமாக ஹரிஷ் போனை சோதனை செய்து அந்த எண் சாருவிற்கு அடுத்து யாரிடம் இருந்தது என்ற தகவல்களை தேடினான்..

சம்பந்தப்பட்ட பிரிவில் வேலை செய்யும் தன் நண்பனிடம் தகவலை கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருக்க.. "அந்த நம்பரை விண்மதின்னு ஒருத்தங்க வாங்கியிருக்காங்க.. இப்போ அந்த நம்பரை அவங்களும் டிஆக்டிவேட் பண்ணிட்டாங்க".. என்று எதிர்முனை சொல்லி முடிக்க விகாஷிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது

தொடரும்..
ஹேய் சூப்பரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அடியே சாரு இரு உன்ன சாறு பிழிய போறான் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
111

அடப்பாவி பயலே உண்மை காதலுக்கு இத்தனை நாள் பொய்யான பெயர் வச்சு உன்னையே ஏமாத்திட்டு இருந்திருக்க 😳😳😳
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
115
அடப்பாவமே இப்படியாடா உன் மூளையும், மனமும் வேலை செய்திருக்கு.

நீ போன்ல பேசினதும், உனக்கு ஆதரவாவும், அன்பாகவும், பேசி உன்னை ஊக்கப்படுத்தியது விண்மதி. ஆனா அதுக்கு நீ கற்பனை பண்ணிகிட்ட உருவம் உன்னை விட்டுட்டு போன சாருமதி. 🤔🤔🤔🤔🤔🤔🤔

ஷ்ஷ்யப்பா கண்ணை கட்டிருச்சு. லூசுப்பயலே உன் ஆழ்மன காதலால் தான் மதிகிட்ட உன்னை அறியாம பழகி இருக்க. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாருமதி இனி நீயும், உங்க வீணாப் போன அப்பனும் காலி. 😡😡😡😡😡😡😡
 
Active member
Joined
May 3, 2025
Messages
97
அடப்பாவமே அந்த சாரு இவளோ பண்ணிருக்கால....
எவ்ளோ திமிரு.....
இப்படிதான் இருக்காங்க என்னன்னு விசாரிக்காம அடிக்க வேண்டியது.....

ஒரு கேடு கெட்டவள போய் தெரியாம உருகி உருகி லவ் பண்ணிருக்க ....
இல்லை இல்லை லவ் நிஜம்,பட் உருவம் பொய்....
 
Top