சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌எதிர்பாராத இன்னொரு அதிர்ச்சியான தகவலில் திகைத்து அமர்ந்திருந்தான் ஹரீஷ்.. கையிலிருந்த மழலை அரைகுறை உறக்கத்தில் சிணுங்க சட்டென கட்டுக்குள் வந்து.. பிள்ளையை தட்டிக் கொடுத்தவனுக்கு.. ஒரு சதவீதம் கூட தன் வாழ்க்கையிலோ முன்னேற்றத்திலோ.. நிம்மதியிலோ சந்தோஷத்திலோ எந்தவித பங்களிப்பும் வழங்காத சாருமதிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்து இத்தனை நாளாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்தோம் என்பது ஓங்கி அறைந்தது போல் விளங்க.. வித விதமாக கற்பனைகளை சேகரித்து வைத்திருக்கும் தன் கூறுகெட்ட மூளையின் மீது பெருங்கோபம் கொண்டான்..
அது எப்படி சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணால்.. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது காதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு.. ஒரு கார்டியன் ஏஞ்சல் போல் தன்னை காத்து வழிநடத்த முடிந்தது.. காரணம் கேட்டால் தன் மேல் வைத்திருந்த அதீத காதல் என்று கூறுவாளா?.. அப்படி என்ன செய்து அவளை ஈர்த்து விட்டேன்.. அந்தக் காதலுக்கு எந்த விதத்தில் தகுதியானவன் நான்.. எந்த கோணத்தில் சிந்தித்தாலும் பதில் கிடைக்கவில்லை.. தேடிவந்த தேவதையே அவமானப்படுத்தி காயப்படுத்தி.. அவளை உபயோகித்துக் கொண்டு.. அய்யோ கடவுளே.. தலைவலிக்க ஆரம்பித்துவிட்டது.. காயப்படுபவனை விட காயப்படுத்துபவனுக்கு வலிகள் அதிகம்.. அவன் செய்த தவறை உணர்ந்து கொண்டு விட்டால்.. இங்கே ஹரிஷுக்கும் அப்படித்தான்.. அவள் சொர்க்கத்தை காட்டினாள்.. இவன் நரகத்திற்கு அல்லவா வழி காட்டி இருக்கிறான்.. குற்ற குறுகுறுப்பில்.. தினம் தினம் ஏதோ ஒரு புதிய நினைவுகளில் இதயம் ரணப்பட்டு போகிறது.. மூச்சு முட்ட முட்ட இப்படி காதலித்துக் கொண்டே போனால் வாங்கி வைப்பதற்கு இதயம் ஒன்றும் வெற்றிடமாக இல்லையே.. மேற்கொண்டு அவள் நினைவுகளால் நிரம்பி வழிந்த இதயத்திற்கு அதீத காதலை தாங்கும் சக்தி இல்லையோ என்னவோ.. காற்றுக்கு தவித்துப் போனான்.. வேக மூச்சுகளை எடுத்துக் கொண்டே.. "கேன் ஐ ஹேவ் சம் வாட்டர் ப்ளீஸ்".. இன்று நெற்றியை தேய்த்துக் கொண்டவாறு கேட்க.. நளினி அவனருகே மேஜையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி குவளையை கண்ணால் காட்டினார்.. அடுத்த கணம்.. குவளையின் நீரை மளமளவென பருகினான் அவன்..
மதி விபத்தில் காப்பாற்றிய சம்பவத்தை மூளைக்குள் அசை போட்டு காட்சிகளாக உருவகப்படுத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்..
காரில் சாருவின் கற்பனை உருவத்தோடு பேசிவிட்டு.. சற்று தள்ளி நின்று போனில் தொழில் விஷயமாக பேசிக் கொண்டிருந்த வேளையில்தான் மதி தன்னை காப்பாற்றி இருக்கிறாள்.. ஆனால் மதி என்ற ஒருத்தி என் எண்ணங்களில் பதியாது.. என்னை நிராகரித்துப் போன சாருதான் என்னை வந்து காப்பாற்றியதாக நானே கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போனது.. கற்பனை சாருமதிக்கு அன்றோடு ஒரு முடிவு கட்டியாயிற்று.. இல்லையேல்.. அந்த பொய்.. இல்லை பேய்.. பிம்பத்தோடு இன்னும் கூட காதலோடு கசிந்துருகி வாழ்ந்திருப்பேன் போலிருக்கிறதே.. பிறகு மதி என்ற ஒருத்தி என் வாழ்வில் வந்திருக்கவே மாட்டாள் அல்லவா..
நளினி அவன் இதயத்தை ஆட்கொண்டிருந்த உணர்வுகளின் தாக்கம் புரியாமல் மேற்கொண்டு தொடர்ந்தார்..
மூன்று மாதங்கள் அவன் கோமாவில் இருந்த பொழுதினில்.. தினமும் மதி.. அவனை வெளியிலிருந்து ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்பி செல்வாள்.. ஹரிஷின் உதவியாளர்களும் மருத்துவ ஊழியர்களும் அவளை உள்ளே அனுமதிப்பதே இல்லை.. சில தருணங்களில் மட்டும் காவலுக்கு நிற்கும் மருத்துவமனை ஊழியருக்கு ஏதேனும் லஞ்சம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள்.. மதியாக.. தன் காதலை அவனுக்கு உணர்த்தினாள்.. நூறு முறை ஐ லைவ் யூ சொன்னாள்.. நெற்றியில் இதழ் ஒற்றினாள்.. ஆழமாக பதிந்து போன அவள் காதலும்.. ஸ்பரிசமும்.. ஒட்டிக்கொண்ட சாயமாக ஆழ் மனதில் பதிந்து பின்னாளில் அவள் மீது பித்து பிடிக்க காரணமாகிப் போனது ஏன் என்று இப்போதுதானே புரிகின்றது..
ஹரிஷ் நொந்து போனான்..
"சே.. முட்டாள் முட்டாள்".. பற்களை கடித்து தன்னையே திட்டிக் கொண்டான்.. பாவம் அவனும் என்னதான் செய்வான்.. அவனை அறியாமல் அவன் ஆழ்மனம் செய்த குளறுபடி வேலை.. கம்பர்ட்டபில் சோன்(comfortable zone) என்று ஒன்று உண்டு.. அதைத் தாண்டி வெளியே வந்தால் எங்கே தனிமை சித்திரவதை செய்யுமோ என்ற பயம்.. சாரு என்ற கற்பனையான கம்ஃபர்டபில் சோனுக்குள் பழகி விட்டவனுக்கு மதி என்ற நிஜத்தை ஏற்றுக் கொள்ள ஏக பயம்.. இருபதுநாட்கள் பத்து மணி வரை குறட்டை விட்டு தூங்கியவர்களை.. இருபத்தி ஒன்றாவது வது நாள்.. விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டால் அவர் மனநிலை என்னவாக இருக்கும்.. பத்து மணி வரை தூங்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.. காலை நான்கு மணிக்கு எழுவது.. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நல்ல பழக்கம்.. என்ற ஈர வெங்காயமெல்லாம்.. மூளைக்குத் தெரிந்தாலும்.. சடுதியில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை.. அதுபோலத்தான் இதுவும்.. அனைத்துமே உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தான்..
மூன்று மாதங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் மதி.. கடவுளிடம் மிரட்டலாக அவள் வைத்த வேண்டுதலும்.. அளவில்லாத காதலும்.. அவன் ஆழ்மனதோடு அவள் பின்னிப்பிணைந்திருந்த விதமும் மட்டுமே அவனை கோமாவிலிருந்து குணப்படுத்த உதவியது.. மருந்து மாத்திரைகளால் நிகழாத மேஜிக் ஏதோ ஒண்ணு.. என வாய்தவறி மருத்துவர் உளறியதை இந்நாளில் நினைவு கூர்ந்தான்..
பின்னாளில் அவன் டிஸ்சார்ஜ் ஆகி சென்ற பிறகு.. ஆடவனைக் காண வாய்ப்பு கிட்டாமல் தவித்துப் போனாள் மதி.. சாரு என்னும் முகமூடியில் கூட அவனிடம் பேசி பழகவும் வழியில்லை.. மொபைல் எண்ணை மாற்றி இருந்தான்.. அசிஸ்டன்டுகளை மீறி அவனை தொடர்பு கொள்வதே சிம்ம சொப்பனமாகிப் போனது..
இந்நிலையில் ஒரு நாள் தடைகளை தாண்டி அவனை அழைத்திருந்த நேரத்திலே.. ஹரிஷின் ஆண் அசிஸ்டன்ட் சதானந்த் அழைப்பை ஏற்று யார் என்று கேட்க..
"சாரு.. சாரு..வை பத்தி பேசணும் ஹரிஷ் கிட்ட குடுங்க" என்றாள் தவிப்பாக..
"ஒன் மினிட்" என்றவன்.. அலுவலகத்தின் இருக்கையில் சாய்ந்து.. காசோலைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த ஹரிஷிடம்.. "யாரோ ஒரு பொண்ணு.. சாருவை பத்தி ஏதோ கேட்கணுமாம்.. லைன்ல இருக்காங்க.. பேசறீங்களா சார்".. என்று கேட்கவும்..
"சாரு இறந்துட்டா.. எனக்கு யார்கிட்டயும் பேச வேண்டாம்".. என்றான் விட்டேத்தியாக.. எதிர்முனையில் அதிர்ந்து போனாள் மதி..
"சா.. சாரு இறந்து போயிட்டாளா.. இனிமே அவள் பெயர்ல..நான் பேசவே முடியாதா.. இறந்து போன சாருவுக்காக இரக்கப்படுவதா.. இல்லை எனக்காக கவலைப் படுவதா.. மதி என்கிற பேர்ல என்னை அறிமுகப்படுத்திக்கிட்டா அவருக்கு தெரியுமா?.. பைத்தியக்காரத்தனமா காதலிக்கிற இந்த மதி யாருன்னு கூட அவருக்கு தெரியாதே".. சோர்ந்து போனாள்.. "ஏன் அழறே மதி.. இது தற்காலிக உறவென உன்னை தயார்படுத்திக்கிட்டுதானே பேசவே ஆரம்பிச்சே.. அப்புறம் ஏன் இப்படி கலங்குறே.. ஏன் உன் இதயத்தை காயப்படுத்துக்கிறே.. நார்மலா இரும்மா.. ரிலாக்ஸ்" என்று தனக்குள் ஆயிரம் சமாதானங்களை சொல்லிக் கொண்டாலும்.. அவனிடம் பேசாமல் பழகாமல் உயிருள்ள பிணமாகதான் நடமாடிக் கொண்டிருந்தாள் மதி..
அந்நேரம் மதியின் அண்ணி கார்த்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்த சமயம் .. அண்ணனின் கட்டளையின் பெயரில் வீட்டில் அண்ணிக்கு பத்திய உணவு.. அவரைப் பார்த்துக் கொள்ளும் அவர் அன்னைக்கும் தங்கைக்கும் தனியாக சாதாரண உணவு என தனித்தனியாக சமைத்து.. மருத்துவமனை கொண்டு போய் கொடுத்துவிட்டு.. அவர்கள் உடுத்தியிருந்த அழுக்கு துணிகளை ஒரு பையில் அள்ளிக்கொண்டு வீடு வரும் வேளையிலே ஆறடுக்கு மாடி கட்டிடத்தின் வாயிலிலிருந்து வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டிருந்தான் ஹரிஷ்..
சூடித் தந்த சுடர் கொடிக்கு காட்சியளித்த திருவரங்கனை போல் நெடு நாளைக்கு பிறகு.. காதலனின் கம்பீர உருவம் கண்டு.. இதயம் நழுவி ஓடுவது போல் பரவசம் கொண்டு.. கண்களில் கண்ணீர் பெருகி வழிய.. தன்னை மறந்து.. இதழ்கள் துடிக்க.. "ஹ.. ஹரி".. என்று கத்தி விட்டாள் அவள்..
பழக்கப்பட்ட பெயரில்.. உயிர் அதிர்ந்து திரும்பியவனின் விழிகளுக்கோ யாருமே புலப்படாமல் போக.. ஆழ்ந்த மூச்செடுத்தவன் சோகமாக.. "சாரு".. என்று அவள் பெயரை உச்சரித்து தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டான்.. உதட்டை பிதுக்கியவாறு அவனை ஏமாற்றமாய் நோக்கியது நேசம் கொண்ட மனது..
அடுத்த முறை அவனைப் பின் தொடர்ந்து கட்டிடத்தில் உள்ளே சென்றவள்.. ஒரு பிரைவேட் கிளினிக்கினுள் அவன் நுழைவதை கண்டு.. யோசனையாக புருவம் சுருக்கினாள்.. அங்கு உதவியாளராக வேலை பார்த்த மகேஷின் கால்களில் விழுந்து லஞ்சம் கொடுத்து.. அவன் அங்கே வருவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டாள்.. சாருவின் இறப்பு.. அவளை மறக்க முடியாமல் இன்சோமேனியாவில் தவிப்பது.. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தன் மனநிலையை மீட்டுக் கொள்ளாது போனால்.. அவன் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பாஸ்கரனின் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டவளுக்கு தூக்கி வாரி போட்டது.. உயிர் கலங்கிப் போனாள் தன் மன்னவனுக்காக..
அவனை காப்பாற்றிய ஆக வேண்டும்.. ஏதேனும் செய்ய வேண்டும்.. என்ன செய்வது புத்திக்கு உரைக்கவில்லை.. என்ன செய்வது ஏது செய்வது என பிறகு யோசித்துக் கொள்ளலாம் முதலில் அவனருகில் தான் இருக்க வேண்டும்.. அவன் நடவடிக்கைகளை உள்வாங்கி.. சோர்வு நேரங்களில் மறைமுகமாகவாவது தோள் கொடுக்க வேண்டும் என்று தவித்தவளுக்கு ஒரே வழி மட்டுமே மனதில் தோன்றியது..
இளங்கலை கல்வி முடிந்திருந்த சமயம் அது.. அவன் கம்பெனியில் டிசைனர் போஸ்ட்க்கு விண்ணப்பித்து.. வேலையில் சேர்ந்து கொண்டாள்.. காரியம் கச்சிதமாக முடிய.. பக்கமிருந்து அவனை கவனித்துக் கொண்டாள்.. துயர் நீக்கினாள்.. கானல் நீரை அடையாளம் காட்டி பாலைவன சோலைக்கும் வழிகாட்டினாள்..
மருத்துவர் நளினி மதி பற்றிய அனைத்து விபரங்களையும் ஹரிஷிடம் சொல்லி முடித்தவர்.. "ஒருமுறை நான் என் சொந்த விஷயமா சென்னைக்கு வரும்போதுதான் ரோட்ல பைத்தியக்காரி மாதிரி வாகனங்களுக்கு இடையே வெறிச்ச பார்வையோட போய்கிட்டு இருந்த மதியை பார்த்தேன்.. பதறிப் போய் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்ன விவரம்ன்னு கேட்டப்போ.. அவ வாயை திறக்கவே இல்ல.. எனக்கு இந்த ஊரை விட்டு போகணும் எங்கேயாவது போகணும்.. அவர் கண்ணுல படாம எங்கேயாவது மறைஞ்சு போகணும்.. இதை மட்டும்தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தா.. அவளுக்கும் ஒரு மனமாற்றம் தேவைங்கிறதுனால.. என்னோட மிசோரம் அழைச்சிட்டு வந்துட்டேன்.. இங்க வந்த பிறகுதான் அவ கர்ப்பமாய் இருக்கிற விஷயமே எனக்கு தெரிஞ்சது"..
"காரணம் யாரு.. என்ன நடந்தது என்று கொஞ்சம் கடுமையா கேட்ட பிறகு.. உங்களைப் பத்தின எல்லா விவரங்களையும் சொன்னா.. இந்த குழந்தையை பெற்று வளர்க்க போறதாகவும்.. ஒருவேளை அவ கர்ப்பமாய் இருக்கிற செய்தி உங்களுக்கு தெரிஞ்சா.. நீங்க தேடி வந்து குழந்தையை அழிக்க என்ன வேணா செய்வீங்கன்னும்.. அதனால அவளைப் பற்றிய எந்த தகவல்களையும் உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னும் ஸ்டிரிக்டா சொல்லிட்டா".. அன்னையிலிருந்து அவளை என் மகளா பாதுகாத்துட்டு வரேன்"..
"இங்கே பாருங்க.. மிஸ்டர் ஹரிஷ்.. அவ குழந்தையை வயித்துல சுமந்த நாளிலிருந்து டெலிவரி ஆன வரைக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா.. அவளுக்கு நீங்க வேணும்.. ஆனா உங்களை பார்த்தா பயம். எங்கே குழந்தையை அழிச்சிடுவீங்களோனு பயம்.. ரெண்டுங்கட்டான் மனநிலையில.. உடல் பாதிக்கப்பட்டு பலவீனமாகி.. சரியா சாப்பிடாம சத்து இல்லாமல் எடை குறைஞ்சு.. உயிர்க்கு ஆபத்தான நிலைமையில்தான் இந்த குழந்தையை பெத்தேடுத்தா.. ஏன் சார் இப்படியெல்லாம் பண்ணுனீங்க.. படிச்சவர் தானே நீங்க.. உங்க காதலியோட நினைவுகளை மறக்கறதுக்கு ஒரு அப்பாவி பொண்ணை உபயோகப்படுத்திக்கிட்டு அவ வயித்துல குழந்தையை கொடுத்து.. எங்க குழந்தையை கொன்னுடுவீங்களோனு அவ இந்த அளவுக்கு பயப்பட காரணமா இருந்திருக்கீங்க.. மனுஷனா சார் நீங்களாம்".. நளினியின் வெறுப்பான வார்த்தைகளில் கன்னத்தில் அறை வாங்கியதைப் போல் உணர்ந்தான் ஹரிஷ்..
பொறுமையாக தன் பக்கமிருந்த நியாயங்களை தெளிவாக அவளிடம் எடுத்துச் சொன்னான்.. அவன் பக்கமிருந்த நியாயங்கள் என்று சொல்ல முடியாது.. அவன் சுயநல பக்கத்திற்கான ஓரளவிற்கு ஒப்புக் கொள்ளக்கூடிய காரணங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்..
பொறுமையாக அனைத்தையும் கேட்டு முடித்த நளினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. இதில் யாரை குறை சொல்வது.. இருவருமே தனிமையினால் பாதிக்கப்பட்டவர்கள்.. ஒருவரை ஒருவர் துணையாக தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள்.. ஆனால் நடுவில் சாருவினால் ஏற்பட்ட விபரீதம்.. காதல் கொண்ட மனங்களை நிலைகுலைய வைத்து விட்டது.. மதியின் காதல் எந்த அளவிற்கு ஆழமானதோ.. அதேபோல் ஹரிஷின் காதலும் ஒன்றும் குறைந்ததில்லையே.. அவனும் அவளைத்தானே விரும்புகிறான்.. மெய்யாக வந்த சாருவிடம் பைத்தியம் என்று பரிதாபம் கொண்டான்.. ஆனால் காதல் கொள்ள முடியவில்லையே.. அவன் அடைந்த மனரீதியான துன்பங்களும் கொஞ்சநஞ்சமில்லையே.. முதலில் சாருவை நினைத்து. பின் மதியை நினைத்து.. பரிதாபப்பட்டார் அவனுக்காக..
ஆழ்ந்த மூச்சேடுத்துக் கொண்டே.. "நீங்க ரெண்டு பேருமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவங்க.. உங்களையும் என்னால குறை சொல்ல முடியல.. உங்க ஈகோவை கொஞ்சம் ஓரம் தள்ளி வச்சிட்டு.. கொஞ்சம் யோசிச்சு பார்த்திருந்தா மதி மீதான காதல் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.. சரி விடுங்க.. இப்ப என்ன முடிவு பண்ணி இருக்கீங்க"..
"நா.. நான் மதியையும் என் குழந்தையும் சென்னைக்கு கூட்டிட்டு போறேன்" என்றான் உறுதியான குரலில்..
"அதுக்கு அவ சம்மதிக்கணுமே".. என்றவரின் குரலில் கவலை மேலிட்டது.. அந்நேரம் வீல் என்று ஒரு அலறல்..
தொடரும்..
ஹரி நீங்க ரெண்டு பேரும் அன்புக்காக ஏங்கி தவிக்கும் உள்ளங்கள் தான் நடந்தவை எல்லாம் போகட்டுமே இனிமேல் ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் மதி ஐ நீயே கூட்டிட்டு போறது தான் நல்லது ஆனா டாக்டர் சொல்ற மாதிரி அதுக்கு மதி ஒத்துக்கனுமே 😔😔😔எதிர்பாராத இன்னொரு அதிர்ச்சியான தகவலில் திகைத்து அமர்ந்திருந்தான் ஹரீஷ்.. கையிலிருந்த மழலை அரைகுறை உறக்கத்தில் சிணுங்க சட்டென கட்டுக்குள் வந்து.. பிள்ளையை தட்டிக் கொடுத்தவனுக்கு.. ஒரு சதவீதம் கூட தன் வாழ்க்கையிலோ முன்னேற்றத்திலோ.. நிம்மதியிலோ சந்தோஷத்திலோ எந்தவித பங்களிப்பும் வழங்காத சாருமதிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்து இத்தனை நாளாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்தோம் என்பது ஓங்கி அறைந்தது போல் விளங்க.. வித விதமாக கற்பனைகளை சேகரித்து வைத்திருக்கும் தன் கூறுகெட்ட மூளையின் மீது பெருங்கோபம் கொண்டான்..