• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 32

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
129
"நான் ஹரிஷ் சாரை பாக்கணும்".. அலுவலக நுழைவாயிலில் குழந்தையுடன் சாப்பாட்டு பையை தூக்கி கொண்டு நின்றிருந்தாள் மதி.. செக்யூரிட்டி மதிக்கு பழக்கமானவர் என்றாலும் அவளை உள்ளே விட முடியாத சூழ்நிலை.. அதிலும் கை குழந்தையுடன் நின்றிருப்பவளை கண்டதும் தர்ம சங்கடமாகிப் போனார் அவர். கழுத்தில் வேறு தாலி இல்லையே.. அழகிதான் என்றாலும் அவளின் நலிந்த தோற்றம் வேறொரு கதை சொல்ல.. அவரையும் அறியாமல் பார்வையில் ஒரு வித ஏளனம்..

"ஒரு நிமிஷம் மேடம்.. நான் ரிசப்ஷன்ல பேசிட்டு சொல்றேன்".. என்றவர் உள்ளே வரவேற்பில் அழைக்க "சார் மீட்டிங்கில் பிஸி.. யாரா இருந்தாலும் வெயிட் பண்ண சொல்லுங்க" என்று கறாராக சொல்லப் பட்டுவிட்டது..

"மேடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சார் மீட்டிங்ல பிஸியா இருக்காரு.. இங்கே உக்காருங்க".. என்று தன் இருக்கையை கொடுத்து அவளை அமர செய்திருந்தார் அவர்.. மதியும் ஹரிஷிற்கு அழைத்து பார்த்து விட்டாள்.. முக்கியமான பையருடன் ஆன்லைன் மீட்டிங்கில் இருப்பதால் அலைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருந்தான் அவன்..

"என்ன விஷயமா வந்தீங்க மேடம்.. செட்டில்மென்ட்.. P. F மாதிரியா".. என்று கேட்க.. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு..

"இல்ல.. சார் கிட்டே பேசணும்" என்று மென்று விழுங்கினாள்..

"காலை மதியம்.. தன்னுடன் சேர்த்து எப்படியாவது சாப்பிட வைத்து விடுகிறாள்.. மதிய சாப்பாடு தவறி மூன்று மணி ஆகிவிடுவதாக அன்று அவனே பேச்சுவாக்கில் சொல்லிவிட.. மனது தாங்க வில்லை.. வேளைக்கு போன் எடுத்து.. "சாப்பிடுங்க".. என்று அன்பு கட்டளை இட்டாலும்.. வீடியோகாலில் அவளை வைத்துக் கொண்டு அரைகுறையாக கொறித்து உண்ணுவதில் திருப்தி காணாதவள்.. இப்போது நேரிலேயே வந்து விட்டாள்..

அவள் கரம் பற்றிக் கொண்டு அவளை பரிமாற வைத்து.. நெருக்கத்தில் முகம் பார்த்துக் கொண்டு நடுநடுவே அவளை ஊட்ட வைத்து உண்டால்தான் சோறு உள்ளே இரங்குவேன் என்கிறதாம்..
வயிற்றுப் பசியுடன் மனமும் நிறைந்து சிறு குழந்தை போல் அவன் புன்னகை முகம் கண்டால்தான் அவள் உள்ளமும் திருப்தி கொள்ளும்.. உள்ளுக்குள் முரண் படும் ஆயிரம் பிணக்குகளை தாண்டி அவன் உடல்நலமும் மன நலமும் அவளுக்கு முக்கியம்.. எந்த விதத்திலும் தான் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் ஒதுங்கி நிற்கிறாளே தவிர அவன் மனதை நோகடித்து பழி வாங்கும் எண்ணம் இல்லை.. அவ்வாறு பழி வாங்கினால் அது காதல் இல்லை.. ஆரம்பகால கட்டத்தில் அவன் கொடுத்த அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு அவன் தனிமைக்கு தோள் கொடுத்தவள் மதி.. சாருவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமே தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு தொலை தூரம் போனாளே தவிர்த்து அவனை தவிக்க விடுவதற்காக அல்ல..

இப்போதும் நழுவி அவன் பால் ஓடும் மனதை இழுத்துப் பிடித்து வைக்க காரணம் அவள் தேடும் ஏதோ ஒன்றை அவன் கொடுக்க வில்லையோ.. என்ன அது?.. அவளுக்கே வெளிச்சம்..

"அண்ணா.. என்னை உள்ளே போக விடுங்க.. சார் எதுவும் சொல்ல மாட்டாங்க".. மதி எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள்..

"இல்லைம்மா.. நீங்க சாதாரண ஸ்டாப்.. அனுமதி கேக்காம உங்களை உள்ளே விட்டா.. என் வேலை போய்டும்.. உள்ளே போய் ரிஷப்ஷன்ல உக்காரவே ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்கு உங்களுக்குதான் தெரியுமே.. உங்களுக்குதான் தெரியுமே!!".. என்று தன்மையாக கேட்கவே.. அலுவலக சட்ட திட்டங்களை நன்கு புரிந்தவள்.. அப்போ.. "திரும்ப ஒருவாட்டி போன் பண்ணி பாருங்களேன்".. என்றாள் சங்கடத்துடன்..

செக்யூரிட்டி மீண்டும் வரவேற்புக்கு அழைக்க இந்த முறை அழைப்பை ஏற்றது ஹரிஜா.. மதிக்கு பதில் புதிதாக வந்த டிசைனர்..

"சொல்லுங்க".. என்றதும்.. "விண்மதி.. சாரை பார்க்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. உள்ளே அனுப்பட்டுமா.. என்று கேட்கப்பட.. மதி என்றதுமே பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.. வார்த்தைக்கு வார்த்தை மதியுடன் ஒப்பிட்டு தன்னை மட்டம் தட்டிய அவன் ஏளன சொற்கள் அனைத்தும் வன்மமாய் உருமாறியிருக்க..

"ஒரு நிமிஷம்" .. என்று போனை காதில் இரண்டு மூன்று நிமிடங்கள் அமைதியாக வைத்திருந்தவள் பின்பு.. "சார் அவங்களை பார்க்க விரும்பலையாம்.. திருப்பி அனுப்பிடுங்க".. என்றிட.. "பாவம்" மதியின் நிலை கண்டு செக்யூரிட்டி இரு தலை கொல்லி எறும்பாக தவித்தார்..

"மேடம் பாவம் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க.. பேசி பாருங்களேன்".. என்று கெஞ்சும் குரலில் கேட்டுவிட கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஹரிஜாவிற்கு..

"உங்க வேலையை பாருங்க.. உங்க அன்பு பாசம் இரக்கத்தை வெளியே வைச்சுக்கோங்க,.. இது ஆபீஸ்.. சார் என்ன சொல்றாரோ அதைத்தான் என்னால செய்ய முடியும்".. என்று போனை வைத்து விட்டாள்..

"என்ன ஆச்சு அண்ணா.. மீட்டிங் முடிஞ்சு போச்சா.. உள்ளே போகட்டுமா.. சாரோட செக்ரெட்டரி கூட போனை எடுக்கலையே".. என்றாள் சலிப்புடன்.. வெயிலின் தாக்கம் வேறு.. குழந்தை வேறு சிணுங்க ஆரம்பித்து விட்டான்.. எரிச்சலாகிப் போனாள்..

அவரோ எப்படி சொல்வதென தயங்கி.. தலையை சொரிந்து கொண்டே "உங்களை பார்க்க விரும்பலையாம்.. கிளம்பி போக சொல்லிட்டாங்க".. என்று சங்கடத்துடன் உரைக்க.. மதி முகத்தில் குழப்பம்.. அப்படி நடக்க வாய்ப்பே இல்லையே.. வீட்டில் தேவியின் கடைக்கண் பார்வை தன்மீது படாதோ என தவமிருப்பவன்.. இங்கே எப்படி பாராமுகமாய்?.. ஒருவேளை அவன் இயல்பான தேள் கொடுக்கு குணம் வெளிப்பட ஆரம்பித்து விட்டதா என்ன.. ஒன்றுமே புரிய வில்லை.. இப்போது இங்கிருந்து கிளம்புவதுதான் சரி என போனை பைக்குள் போட்டுக் கொண்டு சோர்வுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..

வந்த ஆட்டோவை திருப்பி அனுப்பியாயிற்று.. இனி வேறு ஆட்டோ பிடிக்க வேண்டும் என்ற கடுப்பு வேறு..

மீட்டிங் முடிந்து வந்த பையர்ஸ்சை திருப்பி அனுப்பிய பிறகுதான் போனை பார்த்தான் ஹரிஷ்.. ஆறு மிஸ்டு கால்கள்.. அதுவும் மதியிடமிருந்து..

"எதுக்கு இத்தனை முறை கால் பண்ணி இருக்கா.. ஏதாவது அவசரமோ".. என்று பதட்டத்துடன் போன் எடுத்தவன் கர்டைன் திறந்து விட்டு ஜன்னல் பக்கம் நின்று அழைப்பை மேற்கொள்ள.. சாலையில் மதி நடந்து சென்று கொண்டிருக்கும் காட்சி கண்ணில் விழுந்நது.. சட்டென அதிர்ந்தவன்.. மீண்டும் கண்ணை கசக்கி விட்டு பார்த்தான்.. "மதியேதான்.. இவ எங்கே எப்படி?. ஏன் திரும்பி போறா?.. என்று கலவையான உணர்வுகளுடன் யோசித்தவன்.. மறுகணமே தாமதிக்காது.. புயலாக பாய்ந்து மின் தூக்கியை வழியாக கீழிறங்கி இருந்தான்..

"மதி.. மதி.. செக்யூரிட்டி.. என்ன பாக்கறீங்க.. ஸ்டாப் ஹர்".. என்று முதலாளி கத்திக் கொண்டே ஓடிவரவும்.. பதறி போனவரோ தன்னை மறந்து சல்யூட் அடிக்க
"முட்டாள்.. நிப்பாட்டு மேன் அவளை".. மீண்டும் கத்தினான் அவன்.. அவர் தொப்பை வயிற்றைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்குள் அவனே மதியை அடைந்து விட்டான்..

"மதி.. மதி".. என்ற குரலில் அவள் அப்படியே நின்றுவிட.. அருகே வந்து நின்றவன் இடுப்பில் கைவைத்து மூச்சு வாங்கினான் வேகமாக.. திகைத்து விழித்தாள் அவள்..

"என்னடி.. வந்துட்டு திரும்பி போறே.. நேரா உள்ளே வர வேண்டியதுதானே".. அவன் மேல் மூச்சு வாங்கியபடி விட்டு விட்டு பேச.. "நீங்கதான் என்னை உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களாமே.. சுள்ளென கோபப்பட்டாள் அவள்..

விழிகள் சுருங்கியவன் "நானா?.. எப்ப'டி சொன்னேன்.. என்றபடி குழந்தையை வாங்கிக் கொண்டான்.. பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி வாயை பிளந்தார்.. ஏதோ பய உருண்டை தொண்டையில் அடைத்துக் கொள்ள விழி பிதுங்கினார்..

"குழந்தையை கொடுங்க.. நான் கிளம்பறேன்.. சாப்பிடாம இருப்பீங்களே.. சாப்பாடு கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.. காத்துக்கிடந்து கால் புண்ணா போனதுதான் மிச்சம்.. இந்தாங்க நான் கிளம்பறேன்.. என் தகுதி தெரிஞ்சும் நான் இங்கே வந்தது என் தப்புதான்.. என்னை மன்னிச்சிருங்க.. இனிமே இப்படி நடக்காது.. மறக்காம சாப்பிட்டுருங்க".. என்று படபடத்துவிட்டு சாப்பாட்டு கூடையை அவன் கையில் திணித்துவிட்டு குழந்தையை வாங்க முற்பட அவனுக்குதான் ஒன்றுமே புரியவில்லை..

"என்னடி உளறிக்கிட்டு இருக்கே.. முதல்ல நீ வா பேசிக்கலாம்".. என்று அடுத்தகணம் கண்ணால் அழைத்து சாப்பாட்டு கூடையை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு.. மதியின் தோள் பற்றி வலுக்கட்டாயமாக அழைத்து சென்றான் அவன்..

மதி கோபத்தில் சிணுங்கினாலும் முரண்டு பிடிக்காமல் அவனோடு நடந்தாள்.. தான் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக குழந்தையை தூக்கி வந்திருக்கிறாள் என்பதே களைத்து போன மனதிற்கு வெண்சாமரம் வீசிய உணர்வு.. தோளில் போட்ட கரத்தில் அவள் கன்னத்தை வருடி கொஞ்சிக் கொண்டே நடந்தவன் நுழைவாயிலை கடக்கையில் உக்கிரமாக முறைத்து காவலாளியின் அடிவயிற்றில் அமிலத்தை தூண்ட தவற வில்லை..

ஒரு கையில் குழந்தை.. மறு கைவளைவில் மதி என அழைத்து சென்ற ஹரீஷை கண்டு ஒட்டு மொத்த அலுவலகமும் என்னங்கடா நடக்குது என்பதை போல் அதிர்ச்சியில் மூழ்கியது..

"மதிஇஇ".. என்று தோழியை கண்ட உற்சாக மிகுதியில் ஜோதி கத்தியே விட்டாள்.. திரும்பி பார்த்து புன்னகைத்த மதியை விடாது அணைத்து அழைத்து சென்றான் அவன்.. போதும்.. அவமானப்படுத்தி விட்டு இப்போ என்ன மதி.. என்ற கோபம்.. ஹரிஜாவிற்கோ வேர்த்து கொட்டியது.. இவ்வளவு நெருக்கத்தை எதிர் பார்த்திருக்க வில்லை அவள்..

அறைக்குள் நுழைந்தவுடன் "முதல்ல குழந்தைக்கு பால் கொடு.. மத்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம்".. என்று வசதியாக அவளை அமரவைத்து குழந்தையை அவளிடம் ஒப்படைத்தவன்.. ஒரே போன் காலில் மதியின் நீண்ட காத்திருப்புக்கான மொத்த விஷயங்களையும்க் கேட்டு தெரிந்து கொண்டவனுக்கு முகம் இறுகிப் போய் கிடந்தது..

முதலில் அழைத்தது கிரிஜா.. பிரிண்டரிலிருந்து வந்த லெட்டரில் கையெழுத்திட்டு "யூ ர் பையர்ட்" என பேப்பரை வீசியெறிந்தான் அவன்..

திடுக்கிட்டு விழித்தாள் அவள்.. "சார்..நான்.. நான் என்ன பண்ணினேன்".. எதிர்பாராத அதிர்ச்சியில் திணறினாள்..

"எனக்கு ரொம்ப வேண்டியவங்களை அவமானப் படுத்தினதுக்காக மட்டுமில்ல.. நேத்து டோட்டல் டிசைன் மாத்தி அனுப்பினதுக்காகவும்.. அதனால ஏற்பட்ட நஷ்டத்துக்காகவும் இந்த பனிஷ்மென்ட்.. நியாயமா நீங்க இதுக்காக நஷ்ட ஈடு கொடுக்கணும்.. ஆனா.. போனா போகுதுன்னு வேலையிலிருந்து மட்டும் நீக்கறேன்.. நீங்க போகலாம்".. என்றான் துளி கோபம் குறையாது.. ஏற்கனவே விஸ்வாமித்திரன்.. இப்போது இன்னும் மோசம்..

முகம் கருத்துப் போனவளின் பார்வை மதியின் மீது படிந்தது.. ஹரிஷ் பக்கத்தில் வசதியான இருக்கையில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அமந்திருந்தவளை தேவையில்லாமல் பகைத்திருக்க வேண்டாமோ என்று காலம் கடந்து வருத்தப்பட்டவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறியிருந்தாள்..

அடுத்த கணம் சீற்றமாக ஹரிஷ் பார்வை மதியின் மீது படிய ஒருகணம் நடுங்கிதான் போனாள் அவள்..

"எல்லாம் உன்னாலதான்.. அப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேனே கேட்டியா?.. தொங்க தொங்க தாலி கட்டிக்கிட்டு என் பொண்டாட்டியா உரிமையா வர வேண்டியவ.. இப்படி தயங்கி தயங்கி வரவேண்டிய அவசியம் என்ன.. ஹான்?.. என்று குரலை உயர்த்தி கத்தவும் மதி மிரட்சியுடன் நோக்கினாள் அவனை..

அவள் விழிகள் கொண்ட அச்சத்தில் சில கணங்கள் மவுனமானவன்.. தலையை கோதி தன்னை சமன்படுத்திக் கொண்டு.. அவள் பின் கழுத்தை தன் கரத்தால் வளைத்து தன் பக்கம் இழுத்தான்..

"நாளைக்கு உனக்கும் எனக்கும் எளிமையான முறையில கோவில்ல கல்யாணம்.. புரிஞ்சிதா" என்று பாஸ்(bossy) மோடில் அதிகாரமாக அழுத்தமாக சொல்லவும்.. அதிர்ந்து போனவளோ..
"இல்லை.. வேண்டாம்".. என வேகமாக மறுத்து.. தலையசைக்க தாடையைப் பற்றியவன்.. "சரி.. சரின்னு".. இப்படிதான் தலையை ஆட்டணும்.. "புரிஞ்சிதா".. என இதழில் இச் என முத்தமிட்டான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 7, 2023
Messages
76
👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Jan 16, 2023

Appada ippachum thonuchae....
 
Active member
Joined
Mar 8, 2023
Messages
149
Mathi en இன்னும் யோசிக்கிரால்.hairs மேல் உள்ள பயம் இன்னும் விலகவில்லையா
 
New member
Joined
Jan 21, 2023
Messages
18
இன்னும் இந்த பய லவ் panrenu அவக்கிட்ட சொல்லல
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
166
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Member
Joined
Feb 20, 2023
Messages
36
மதி எதுக்கு கல்யாணம் பண்ணிக்க தயங்குறா தாலி இல்லாததால் தானே எல்லாரும் மரியாதையில்லாமல் பண்றாங்க மதிபுரிந்து கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்.
 
Member
Joined
May 10, 2023
Messages
60

Super siss
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
172
Thirumbavum palayapadi mathi mathitalae.... ithuvum nallathukku than.....👌👌👌👌👌
 
Top