சபாஷ் சரியான முடிவு👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌குறுக்கே புகுந்து செல்வ முருகனை அடித்து வீழ்த்த சில நொடிகள் போதும்.. ஆனால் குழந்தையின் அருகே நின்றிருந்த பாம்பாட்டி.. அவன் கண்ணசைவுக்காக காத்திருக்கும் கருநாகம்.. இரண்டையும் கவனித்து விட்டவனுக்கு.. மதியோடு குழந்தையின் உயிரையும் காப்பாற்ற வேண்டுவதே பிரதானமாக தோன்றியது.. கடைசி நிமிடம் வரை எதையும் யோசிக்க வில்லை.. ஆனால் செல்வ முருகன் முழு வீச்சில் கத்தியை ஓங்க இடையில் புகுந்து தடுப்பதை தவிர வேறு வழி தோன்றவில்லை அந்நேரத்தில்..
கத்தியின் உந்துதலில் முழுவதுமாக மதியின் மீது சாய்ந்து விட மூச்சே நின்று போனது அவளுக்கு.. "ஆஆஆ.. அய்யோ ஹரிஷ்.. ஏன் இப்படி செஞ்சீங்க.. உங்க உயிரை கொடுத்துதான் என்னை காப்பாத்தணுமா.. அப்படி நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்".. என்று கத்தி அழக் கூட முடியாத நிலையில் அவள் தோளினில் முகம் புதைத்து கதறினாள் அவள்..
செல்வ முருகனோ சத்தம் போட்டு சிரித்தான் அவள் கதறலில்.."ஓஹோ.. குறுக்கே வந்து பொண்டாட்டிக்காக உயிர் தியாகம் பண்றீங்களோ.. அப்போ சரி.. நீ முதல்ல சாவு".. என்று மீண்டும் கத்தியால் ஓங்கி குத்தியவன்.. யோசனையுடன் கண்கள் சுருக்கியவாறு கூர்மையாக ஹரிஷை நோக்கினான்.. ஏதோ தவறாக தோன்றியது..
ஹரிஷ் முகத்தில் வலிக்கான சுவடுகள் தெரிய வில்லை.. கத்தி குத்துப் பட்ட இடத்தில் ஒரு துளி உதிரம் எட்டி பார்க்க வில்லை..
எப்படி இது சாத்தியம் என்று ஒன்றும் புரியாத நிலையில் குழப்பத்துடன் ஹரிஷ் முகம் பார்க்க.. அவனோ உன் வேலை என்னிடம் செல்லாது என்பதை போல்.. நக்கலாக இதழ் வளைத்து சிரித்தான்..
கத்தி ஹரிஷ் வயிற்றினுள் ஊடுருவ வில்லை.. மெல்ல கத்தியை கண் முன்னே கொண்டு வந்து பார்த்தவன் அதில் அழுத்தம் கொடுக்க.. நீள் கத்தி சட்டென உள்ளிழுத்து கொண்டது..
"ஆஆஆ..
டம்மி கத்தி".. பற்களை கடித்தான் செல்வ முருகன்..
"டம்மி கத்தியா".. வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்ட மதிக்கு முதலில் ஒன்றுமே புரிய வில்லை.. "எனக்கு ஒண்ணும் இல்லடி.. நான் நல்லாதான் இருக்கேன்".. என்று பின்னால் சாய்ந்து அவள் காதினுள் சொன்ன பிறகே போன உயிர் திரும்பி வந்தது அவளுக்கு.. இதயக்கூடு ஏறி இறங்க நிம்மதியுடன் விழிகள் மூடி கண்ணீர் சிந்தியவள்.. அவன் முதுகில் முத்தமிட்டாள் உணர்ச்சி பெருக்குடன்.. அடுத்த கணம் மதியின் தாய்மை விழித்துக் கொள்ள ஹரி.. ஹரி.. ஆரு.. ஆரு.. என்றாள் உயிர் உருகும் தவிப்புடன்..
அங்கே நிலவும் சூழ்நிலையினால் எழும் சத்தத்தில் குழந்தைக்கு நாகத்தினால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என இருவருமே குழந்தை இருந்த பக்கம் தடதடக்கும் இதயத்துடன் நோக்க.. அதுவோ அதிர்வுகேற்றார் போல் உஷ் உஷ் என சீறிக் கொண்டிருந்தது..
ஹரிஷ் அவள் கட்டுகளை வேகமாக அவிழ்த்து விட்டிருந்தான்.. இருவரின் நெஞ்சமும் குழந்தையை எப்படி காப்பாற்றலாம் என்று பதைபதைத்து கொண்டிருந்தனர்..
"யாரு.. யாரு.. இப்படி ஒரு வேலையை பார்த்தது".. செல்வ முருகன் தொடையில் ஓங்கி குத்திக் கொள்ள..
"நான்தான்பா".. பின்னிருந்து குரல் வந்தது.. சாருதான் பேசினாள்.. அதிர்ந்து போனான் செல்வ முருகன்.. ஹரிஷ் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை.. ஆனால் மதி இப்படி ஒரு திருப்பு முனையை எதிர்பார்க்க வில்லை..
"சாரு.. நீயா".. உனக்கென்ன பைத்தியமா.. கோபத்தில் கத்தினான் செல்வமுருகன்..
"இல்லைப்பா. இப்போதான் பைத்தியம் தெளிஞ்சிருக்கு.. அதனாலதான் உங்க திட்டதுக்கு சம்மதிக்கிற மாதிரி நடிச்சு அதை முறியடிக்க நினைச்சேன்.. ஏன்னா நான் ஒத்துக்கலைன்னாலும் நீங்க ஹரிஷ் மதியை பழி வாங்க எந்த எல்லைக்கும் போவீங்கன்னு எனக்கு தெரியும். அதான் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிற மாதிரி இங்கே வந்து.. உங்க திட்டத்தை தெரிஞ்சிக்கிட்டு நாம இருக்குற இடத்தை பத்தி ஹரிஷ்க்கு தகவல் கொடுத்தேன்.. அதுவும் திருட்டு தனமா உங்க போன் எடுக்கறதுக்குள்ளே ஒரு வழி ஆகிட்டேன்"..
"நல்ல வேலையா ஹாஸ்பிடல்ல ஒரு நோயாளிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வச்சிருந்த டம்மி கத்தியை கொண்டு வந்தேன்.. கடைசி நேரத்துல உங்க பிளான் தெரிஞ்சதால கத்தியைமாத்தி வச்சேன்".. சாரு அமைதியான குரலில் விளக்கிக் கொண்டிருக்க.. திக் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான் செல்வமுருகன்.. மலை போல் நம்பிய மகள் இப்படி ஒரு துரோகம் செய்வாள் என எதிர் பார்க்கவில்லை..
டம்மி கத்தியில் விழுந்து விழுந்து தடவிய விஷ மூலிகையும் வீண்தான்.. கத்தி உடலுக்குள் ஊடுருவி இருந்தால் தானே விஷம் வேலை செய்யும்.. தன் முட்டாள்தனத்தை எண்ணி ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டான்..
உடலுக்குள் பரவிய கொந்தளிப்பு தாங்காது.. தன்னையே வெற்றி சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற மகள் மீது பெருகோபம் கொண்டவன்..
"ஏய்.. என்ன காரியம் பண்ணி வச்சிருக்கே.. உனக்காகதானே இத்தனை நாள் பிளான் போட்டு இவங்களை அழிக்க முயற்சி பண்ணினேன்.. எல்லாத்தையும் கெடுத்துட்டியே.. ஜெயில்ல நான் பட்ட கஷ்டம்.. மெண்டல் ஹாஸ்பிடல்ல நீ அனுபவிச்ச சித்ரவதை எல்லாம் மறந்து போச்சா".. செல்வ முருகன் விஷ நாகத்தை விட வேகமாக சீறியெழ..
"அது சித்ரவதை இல்லைப்பா.. சிகிச்சை.. என் மனசுல படிஞ்சிருந்த கசடுகளை நீக்குவதற்கான சிகிச்சை.. அந்த சிகிச்சையும்.. மன நல காப்பகத்தின் சூழ்நிலையும்தான் என்னை மாத்துச்சு"..
"ஏய்.. அப்பனுக்கே பாடம் சொல்றியா.. உன்னை".. என்று ஆவேசமாக சாருவை நெருங்கியவனை சத்தம் வராமல் கழுத்தில் ஒரு அடி வைத்தான் ஹரிஷ்.. அவ்வளவுதான் செல்வமுருகன் சுருண்டு விட்டான்..
அடுத்தகணமே மூவரின் பார்வையும் குழந்தை பக்கம் தாவியது.. "மதி நீ இங்கேயே இரு.. நான் பாத்துக்கிறேன்".. என்று அவளை அங்கேயே நிறுத்தி விட்டு அவன் குழந்தையின் பக்கம் செல்ல..
"அய்யோ என் குழந்தை".. என்று கதறியவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் சாரு.. "அழாதே மதி.. ஹரிஷ் குழந்தையை காப்பாத்திடுவாரு".. என்று அவள் தோளை தட்டிக் கொடுத்தாள்..
ஹரிஷ் அருகே வருவது தெரிந்தவுடன் பாம்பாட்டி மெல்ல பின்னால் இரண்டடிகள் எடுத்து வைத்தவன் அவன் விழிகளின் உக்கிரம் கண்டு பயந்து பின்வாங்கி ஓடி விட்டான்..
அவன் சொல்லுக்கு மட்டுமே அந்த விஷ நாகம் கட்டுப்படும் என்ற நிலையில் அந்த ஆள் பயந்து ஓடிவிட.. செய்வதறியாது நிலை குலைந்து போனான் ஹரிஷ்..
"ஆரு.. ஆரு".. என அழுது திமிறிக் கொண்டிருந்தவளை நகர விடாது இறுக்கி பிடித்துக் கொண்டாள் சாரு..
"அவசரப்படாதே மதி.. நீ கிட்டே போனா காரியமே கெட்டுப் போய்டும்.. எல்லாத்தையும் ஹரி பாத்துக்குவாரு.. அமைதியா நில்லு".. என அதட்டினாள்..
சீறிக் கொண்டிருந்த கருநாகத்தை கண்டவனுக்கு குழந்தை ஒருவனே கருத்தில் நிற்க.. மெல்ல கீழே அமர்ந்தவன்.. குழந்தையை தொட முயற்சிக்க.. பாம்பு அவனை பார்த்துதான் சீறியதே தவிர குழந்தையை எதுவுமே செய்ய வில்லை.. ஒரு விஷயம் புரிந்தது.. ஐந்தறிவு ஜீவராசி அதுவும் கொடிய விஷ ஜந்து கூட குழந்தையை காப்பாற்ற முயலுகின்றது.. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள்.. எவ்வளவு எளிதாக ஒரு உயிரை எடுக்க துணிகின்றனர்.. கேவலம்..
குழந்தையை கையில் தூக்கவும்.. வேகமாக சப்தம் எழுப்பிய நாகம் என்ன நினைத்ததோ மெதுவாக அங்கிருந்து ஊர்ந்து சென்று விட்டது.. அதன்பிறகே இழுத்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியேறினான் ஹரிஷ்.. இதை முன்பே செய்திருக்கலாமோ என்று நினைத்தவனுக்கு.. அப்போதைய சூழ்நாலையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றியது..
மதியும்.. குழந்தை காப்பாற்றப் பட்டதில் தளர்ந்து நிம்மதியுடன் நின்றவள்.. அடுத்த கணம் வேகமாக ஓடி சென்று குழந்தையை அவனிடமிருந்து கண்ணீருடன் வாங்கிக் கொண்டாள்..
"ஆரு.. என் கண்ணா.. அம்மா பயந்துட்டேன்டா".. என்று அழுதவளோ. குழந்தைக்கு முத்தங்கள் வைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..
"எனக்கு?".. ஏக்கத்துடன் இன்னொரு குரல் அருகினில் கேட்க.. நிமிர்ந்து பார்த்தவள் ஆழ்ந்த பார்வையுடன் ஹரிஷ் தன்னை அள்ளி விழுங்குவதை கண்டு குழந்தையுடன் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.. முத்தங்களுக்கும் குறை வைக்க வில்லை.. "ரொம்ப.. ரொம்ப.. பயந்துட்டேன்.. உயிரே போய்டுச்சு.. ஏன்.. ஏன்டா இப்படி செஞ்சே.. நீ இல்லாம நான் எப்படி?.. அறிவிருக்கா".. என விம்மி விம்மி அழ..
அவள் அன்பிலும் அணைப்பிலும்.. முத்தங்களிலும் திக்கு முக்காடி போனவனோ.. "ஹேய் பேபி.. அழாதே ப்ளீஸ்.. இதுதான் ரொம்ப வலிக்குது".. என்று விடாபிடியாக அவள் கன்னம் ஏந்திக் கொள்ள இன்னும் கூட அழுதாள் அவள்.. செல்வமுருகன் வயிற்றில் குத்திய நிகழ்வு கண்முன்னே வந்து போக.. ஜீரணிக்கவே முடியவில்லை.. உயிர் வரை வலித்தது..
அழும் விழிகளில் முத்தமிட்டவன்.. "நான் சொன்னேன்ல.. கண்டிப்பா என் உயிரை கொடுத்து நிரூபிப்பேன்ன்னு.. உன்னை விட இந்த உலகத்துல எதுவுமே பெருசு இல்லைடி.. என் உயிரும் கூட".. கலங்கிய விழிகளுடன் அவள் கருவிழிகளுக்குள் கலந்தவனை பிதுங்கிய உதடுகளுடன் பொய் கோபத்துடன் நோக்கியவள்.. "மண்ணாங்கட்டி" என்று அவன் நெஞ்சில் முட்டினாள் கன்றாக.. அன்பினால் வெளிப்படும் கோபம் அது.. "ஹாஹா".. என்று அழகாக சிரித்தவன்..இந்த 'மண்ணாங்கட்டியை அழகான சிலையா மாத்தினது இந்த தேவதைதான்".. என்று குனிந்து அவள் காதோரம் சொன்னவன் இறுக அணைத்துக் கொண்டான் அவளை..
"வரலாமா".. என்று சாருவின் குரலில் இருவரும் விலகினர்..
"வா சாரு.. கடைசி நிமிஷத்துல நீ செஞ்ச உதவிதான் என் மதியையும் மகனையும் காப்பாத்தி இருக்கு.. உனக்கு ரொம்ப நன்றிகடன் பட்டிருக்கேன்".. என்றான் ஹரிஷ் உணர்ச்சி பெருக்கான குரலில் ..
மெலிதாக சிரித்துக் கொண்டு "உங்களுக்குதான் நன்றி சொல்லணும்.. இதோ இந்த மதி.. உண்மையான எதிர்பார்ப்பில்லாத காதல்ன்னா என்னனு எனக்கு புரிய வைச்சுட்டா.. எனக்கும் இப்போ நிறைய நிறைய காதலிக்கணும் போல இருக்கு" என்றாள் ஏதோ நினைவில் விகசித்து.. அவள் வார்த்தையில் திகைத்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள..
"ஹேய்.. நான் என் கணவரை பத்தி பேசிட்டு இருக்கேன்.. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அருமை புரியாம அவர் அன்பை நான் இழந்துட்டேன்.. பட் பரவாயில்லை.. அவன் என்னை மன்னிக்கலைன்னாலும் நான் அவரை காதலிச்சிகிட்டே இருப்பேன்..
நமக்கு பிடிச்சவங்களுக்காக காத்திருக்கிறதும்.. அவங்களை காதலிக்கிறதும் கூட சுகம் தான்னு ஹோம்ல இருந்தப்போ தெரிஞ்சிகிட்டேன்".. என்று கசந்த புன்னகையுடன் நிதானமாக பேசியவளை ஆச்சர்யமாக பார்த்தனர் இருவரும்..
"வாவ்.. நிறைய மாறி இருக்கே சாரு" என்றான் ஹரி..
"ஹ்ம்ம்.. சூழ்நிலையும் சுற்றியிருக்கிற மனிதர்களும் இதுக்கு காரணம்.. இந்த சமூகம் ஒருத்தனை குற்றவாளியாகவும் மாத்தும்.. குற்றவாளியை நல்லவனாகவும் மாத்தும்.. நான் இதுல இரண்டாவது.. அப்பா என்னை ஜெயில்ல இருந்து தப்பிக்க ஏற்பாடு பண்ணினப்போ.. நான் இங்கே வந்ததே உங்க ரெண்டு பேரையும் காப்பாத்ததான்.. கடைசி வரை அவர் திட்டம் என்னனு என்கிட்டே சொல்லவே இல்லை.. இல்லைனா முன்னாடியே உங்களை வார்ன் பண்ணியிருப்பேன்.. ஐம் சாரி".. என்று மன்னிப்பு கேட்க..
"என்ன சாரு.. எங்களுக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கே.. நீ இல்லைனா நாங்க என்ன ஆகியிருப்போமோ.. உனக்குதான் நாங்க நன்றி சொல்லணும்".. என்றாள் மதி..
"ஹரி.. தெரிஞ்சோ தெரியாமலோ உன் வாழ்க்கையில நிறைய ட்ரபுள் கொடுத்துட்டேன்.. என்னை மன்னிச்சிரு ப்ளீஸ்.. வேணும்னா எனக்கு அடி வேணுனாலும் கோடு.. வாங்கிக்கிறேன்" என்றாள் மதி கண்ணீருடன்..
"சாரு. அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்.. நீ செஞ்ச தப்புனாலயும்.. நான் செஞ்ச முட்டாள்தனத்துலயும்தான் மதி எனக்கு கிடைச்சா.. சோ இப்போதைக்கு மதியோட நினைவுகள் மட்டும்தான் என் மனசுல நிறைஞ்சிருக்கு.. வேற எதையும் யோசிக்க விரும்பல".. என்று தன்னவளை தோளோடு அணைத்துக் கொண்டான்..
"ஹரிஷ்.. அப்பா?".. என்று சாரு தந்தையை கைகாட்ட.. திரும்பி மயங்கி கிடந்த செல்வமுருகனை பார்த்தவன்.. "அவரை கூட்டிட்டு போக போலீஸ் வருது.. நாம இங்கிருந்து போகலாம்".. என்றவன் இருவரையும் அழைத்துக் கொண்டு அக்காட்டை விட்டு வெளியேறினான்..
ஆனால் மயங்கி கிடந்த செல்வ முருகன் மீது என்ன துவேஷமோ.. எங்கிருதோ வந்த நாகம்.. பொட்டென அவர் காலில் கொத்தி விட்டு செல்ல.. சில கணங்கள் துடித்து வாயில் நுரை தள்ளி தன் இறுதி மூச்சை விட்டிருந்தான் அவன்..
தொடரும்..
பரவாயில்லை சாரு நீ இப்போதாவது திருந்தி மதி ஹரி க்கு நல்லது பண்ணி இருக்க 🙋🙋🙋குறுக்கே புகுந்து செல்வ முருகனை அடித்து வீழ்த்த சில நொடிகள் போதும்.. ஆனால் குழந்தையின் அருகே நின்றிருந்த பாம்பாட்டி.. அவன் கண்ணசைவுக்காக காத்திருக்கும் கருநாகம்.. இரண்டையும் கவனித்து விட்டவனுக்கு.. மதியோடு குழந்தையின் உயிரையும் காப்பாற்ற வேண்டுவதே பிரதானமாக தோன்றியது.. கடைசி நிமிடம் வரை எதையும் யோசிக்க வில்லை.. ஆனால் செல்வ முருகன் முழு வீச்சில் கத்தியை ஓங்க இடையில் புகுந்து தடுப்பதை தவிர வேறு வழி தோன்றவில்லை அந்நேரத்தில்..