• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 4

Well-known member
Joined
Nov 20, 2024
Messages
114
"சார்.. நீங்க சொன்ன டிசைன்ஸ் முடிச்சிட்டேன்.. அப்ரூவல் பண்ணிட்டா புரொடக்ஷன்க்கு மெயில் அனுப்பிடலாம்".. பைலை கொண்டு வந்து வைத்துவிட்டு நகரப் போக..

"வச்சுட்டு போனா எப்படி.. கரெக்ஷன் இருந்தா திரும்ப ஒருவாட்டி உன்னை கூப்பிடனுமா".. என்று எரிச்சலோடு எதிரொலித்த குரலில் அப்படியே நின்றாள் மதி..

விருட்டென எழுந்தவன் அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்து மேஜை மீது அமர்ந்தான்.. அவன் எதிரே அவள்.. ஒரு காலை தொங்க போட்டு.. மறு காலை தரையில் அழுத்தமாக பதிந்திருந்தவன்.. ஓரக்கண்ணால் அவளை அளந்தபடியே.. டிசைனில் சில மாற்றங்களை சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தான்.. "எவரிதிங் ஓகே.. இது மட்டும் மாத்திடு".. என்று பைலை அவளிடம் ஒப்படைக்க.. வாங்கிக் கொண்டு திரும்பி நடந்த பெண்ணவள் புயலாக அவன் பக்கம் இழுக்கப்பட்டாள்..

அவன்தான் தன் கைப்பற்றி இழுத்திருக்கிறான் என்று யூகிப்பதற்குள் இதழைக்கவ்வி முத்தமிட ஆரம்பித்திருந்தான்.. இடையோடு வளைத்து இறுக அணைத்துக்கொள்ள பாவப்பட்ட கோப்பு.. இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு நசுங்கியது.. நின்று நிதானமாக மென்று தின்றான் செவ்விதழை..

இரவின் தாக்கத்தில் விடாமல் சுவைக்கப்பட்ட இதழ்.. மீண்டும் மீண்டும் காயப்பட்டு வலிக்க.. நெஞ்சில் கை வைத்து அவனை தள்ள முயன்றவள்.. அவன் நிம்மதியின் நலன் கருதி.. கரங்களை மெதுவாக கீழிறக்க முயன்றாள்..

சத்தத்துடன் அவள் இதழை விடுவித்தவன்.. "சாரி".. என்றான் மீண்டும் ஒரு இச் வைத்து.. குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொள்ள.. தாடைப் பிடித்து நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன் "வேலை விஷயத்துல நான் எப்பவுமே இப்படித்தான்".. என்று தன் நிலையை புரிய வைக்க முயன்றான்.. மெலிதாக சிரித்துக் கொண்டு "பரவாயில்லை சார்" என்றாள் அவள்..

பத்து நிமிடங்கள் கழித்துதான் வெளியே அனுப்பினான் அவளை.. அவசரமாக இதழைத் துடைத்துக் கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் எடுக்க மறந்து மூச்சுகளை வேகமாக வாங்கிக் கொண்டிருக்க.. "என்னடி எம்டி ரொம்ப திட்டிட்டாரா".. என்று ஜோதி கேட்கவும் தான்.. சுற்றம் உணர்ந்தாள்..

"ஹான்.. ஆமாம்".. என்று அவள் அறியாத வண்ணம் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொள்ள.. அவன் முத்தங்களின் வாயிலாகவும்.. வன்மையான ஸ்பரிசங்கள் மூலமாகவும் வெளிவந்த கண்ணீரை வேறு விதமாக புரிந்து கொண்டாள் ஜோதி..

"சரி விடு.. இதெல்லாம் சகஜம் தானே.. இன்னைக்கு நேத்தா நாமெல்லாம் திட்டு வாங்குறோம்".. என்று சுழல் நாற்காலியின் மூலம் அருகே வந்து முதுகை தட்டிக் கொடுக்கப் போனவள்.. சட்டென கரங்களை அப்படியே நிறுத்தி யோசனையுடன் அவள் பின்பக்கத்தை பார்த்தாள்..

"ஏய்.. என்னடி சுடிதார் சிப் கழண்டுருக்கு.. இப்படியேவா உள்ள போனே? .. ஜோதி திகைத்த விழிகளுடன் கேட்க..

"ஹான்".. என விழித்தவளுக்கு அவசரத்தில் பின் பக்க நீள் இணைப்பை சரியாக மாட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தது நினைவுக்கு வர.. பதட்டத்துடன்.. கைகளை எட்டி முதுகில் சிப் போட முயன்றவளால் அது முடியவில்லை..

"இரு நான் போட்டு விடுறேன்".. என்று அவளை திருப்பி விட்டவள்.. "ஏய்.. மதி.. பிரேசியர் ஸ்ட்ராப் கூட கழண்டு இருக்குடி".. என்றாள் பதட்டமான குரலில்..

"அச்சோ".. என மதி தலையில் அடித்துக் கொள்ள.. "ஹாஸ்டல்ல அத்தனை பொம்பளைங்க இருக்காங்களே.. ஒருத்தி கூடவா சொல்லல".. என்று படபடத்த கோபத்துடன் ஆடையை சரி செய்து விட்டவள்.. "ஏன்டி உன் ஆள் ஞாபகத்துல உலகத்தையே மறந்துடுவியா.. இப்படித்தான் திறந்து போட்டுகிட்டு ரோட்ல நடந்து வந்தியா.. ஆபீஸ்ல எத்தனை ஆம்பளைங்க பார்த்தார்களோ.. உன் ஆள் கூட பார்த்திருப்பாரு".. ஜோதி தலையிலடித்துக் கொண்டு கோபமாக கடிந்து கொள்ள.. காரண கர்த்தா யாரென தெரிந்தவளுக்கு அந்த அளவுக்கு பதட்டமில்லை.. ஆனாலும் உடையை சரி செய்து கொள்ளாமல் எப்படி வெளியே வந்தோம்.. இந்த அளவுக்கு மூளை மழுங்கி போய் விட்டதா.. என்று தன்னையே கடிந்து கொண்டாள்..

ஜோதி அவள் பாட்டுக்கு புலம்பி கொண்டே இருக்க.. மதியின் இன்டர்காம் ஒலித்தது..

எடுத்து காதில் வைத்தாள்.. அவன்தான்.. "சார்".. என்றாள் அவள்..

"பேக்ல சிப் போடல".. ரொம்ப சீக்கிரம் சொல்லி விட்டான்.. தலையில் கை வைத்துக் கொண்டு அவள் ஜோதியை பார்க்க.. அவளோ மீண்டும் MD போன் செய்து திட்டுகிறார் போல.. என்று பரிதாபமாக மதியைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

"நான் சொல்றதுக்குள்ள நீ வேகமா வெளியில போயிட்டே.. உள்ளே வர்றியா போட்டுவிடறேன்".. என்று நிறுத்திவிட்டு அவள் பதிலுக்காக காத்திருக்க.. "நான் பாத்துக்குறேன் சார்".. என்ற ஜோதியை பார்த்தவாறு திக்கி திணறி பதில் சொன்னாள் அவள்.. தோழியை ஏமாற்றும் குற்ற குறுகுறுப்பு அவள் பார்வையில்..

"ம்ம்.. ஜாக்கிரதையா இரு.. நம்ம விஷயம் வெளியே தெரியக்கூடாது.. எனக்கு அது பிடிக்காது".. என்று கடுமை தெறிக்க சொன்னவன்.. அழைப்பை துண்டித்து விட்டான்.. அவன் பேசும் தோரணையும் பாவனையும்.. ஏதோ கெஞ்சி கூத்தாடி அவன் காலில் விழுந்து சரணடைந்து அவனோடு வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது அவளுக்கு.. அளவற்ற காதலின் தாக்கத்தில் அவன் நலன் கருதி.. அவனோடு வசிக்க சம்மதித்திருந்தாலும் சில நேரங்களில் அவன் தேளாக கொட்டுவது அவள் தன்மானத்தை அதிகமாக பாதிப்பதாக இதயத்தை காயப்படுத்தியது..

மாலை வீட்டுக்கு வந்த பிறகு.. "உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மதி".. என்று அவளை அமரச் சொல்ல.. இப்போது புதிதாக என்ன குண்டை தூக்கி போட போகிறானோ.. என்ற திக் திக் உணர்வுடன் எதிரே அமர்ந்தாள் அவள்..

"ஏன் பணம் கொடுத்தா வாங்காம என்னை டார்ச்சர் பண்றே.. உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்.. உனக்காக இல்ல என் திருப்திக்காக.. எனக்கு மன நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுக்கிறவ நீ.. உரிமை இல்லாத உன்கிட்ட ஓசில வாங்க நான் தயாரா இல்லை".. என்று அவன் வெட்டுருணியாக சொல்லவும் சுருக்கென முள் தைத்தது இதயத்தில்..

"உங்க நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் விலை நிர்ணயிக்கப் போறீங்களா சார்".. அவள் வெற்று புன்னகையுடன் கேட்க..

"ஆப்கோர்ஸ்.. நோயை குணப்படுத்தற டாக்டருக்கு ஃபீஸ் கொடுக்கறது இல்லையா என்ன.. அதுபோலதான் இதுவும்.. நிச்சயம் நீ ஏதாவது வாங்கிக்கணும்.. இல்லைனா இத்தோட இந்த உறவை முடிச்சுக்கலாம்".. அழுத்தமான பார்வையுடன் உறுதியான குரலில் உரைக்கவும்.. ஒப்புக் கொள்வதை தவிர அந்த நேரத்தில் வேறு வழி இருக்கவில்லை அவளுக்கு..

அவனுக்குள் ஒரு விதமான இன்செக்யூரிட்டி காம்ப்ளக்ஸ்.. எங்கே தன்னை சொந்தம் கொண்டாடுவாளோ என்று.. அழிக்க முடியாத பந்தம் ஏற்பட்டு நிரந்தரமாக அவளிடம் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்று.. அதற்காக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறான்.. சிரிப்புதான் வந்தது..

வெறும் உடல் ரீதியான உறவாக மட்டும் இருந்திருந்தால்.. மதி மற்ற பெண்களைப் போல் அவன் அழகிலும் பணத்திலும் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால்.. மிக சாதாரணமாக அலட்சிய மனப்பான்மையுடன் அவளை கடந்து போயிருப்பான்.. ஆனால் அதையும் தாண்டி அவளுள் ஒரு தேடல் கொள்ள வைக்கும் ஏதோ ஒன்று.. அளவுக்கு அதிகமாய் அவனை கோபப்படுத்துகிறது..

சாருவின் தாக்கத்திலிருந்து வெளியே வரத்தான் மதியை நாடுகிறான்.. ஆனால் இப்போது மதி கொடுக்கும் மயக்கத்திலிருந்து வெளிவர அளவுக்கு அதிகமாக சாருவை நினைக்கின்றான்..

நான் சொன்னதுக்கு பதில் வரலையே.. ஒற்றைப் பருவம் உயர்த்தி அவள் முகத்தை ஆழமாக ஊடுருவ..

"எனக்கு பணம் கொடுத்து நிம்மதியை தேடுவதுதான் உங்களுக்கு திருப்தியை கொடுக்கும்னா இதுக்கு மேல நான் மறுக்க என்ன இருக்கு".. அப்படியே பண்ணிடுங்க.. என்றாள் உணர்ச்சி இல்லாத குரலில்..

"என்ன சொன்னாலும் கேக்குற.. உன் மனசை கஷ்டப்படுத்திகிட்டு எதுக்காக எனக்காக இவ்வளவு செய்யணும்.. என்மேல அவ்வளவு பைத்தியமா இருக்கியோ?".. என்றதோடு முடித்துக் கொள்ளாமல்.. "இந்த மாதிரி நிறைய பேரை பார்த்துட்டேன்".. என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்து நக்கலாக முறுவலித்தான் அவன்.. பார்த்த ஆயிரம் பேரில் அவள் தனித்துவமானவள்.. அவன் மனதில் நீங்காது நிலை கொண்டிருக்கும் சாருவை விட இனிமையானவள் என்று புரிந்தும்.. அவளை தள்ளி நிறுத்துவதற்காக.. வேண்டுமென்றே காயப்படுத்தினான் அவன்..

மதி எதுவும் பேசவில்லை.. எழுந்து சென்று விட்டாள்..

அன்று இரவு ஹரிஷை "சாப்பிட வாங்க".. அவள் அழைக்க..

ஒரு கையில் மடிக்கணினியின் கீபோர்டை தட்டிக் கொண்டே.. மறுக்கரத்தில் போனில் பேசிக் கொண்டிருந்தவன்.. "நான் வேலையா இருக்கேன்.. அப்புறம் சாப்பிட்டுகிறேன்".. என்றான் அவசர தன்மையுடன்.. இதற்கு மேல் வற்புறுத்தினால் வள்ளென்று விழுவான் என்பதால் அமைதியாக சென்று விட்டாள் மதி..

மேனேஜர் ரகுநாதனை காச் மூச்சென என கத்திக்கொண்டே.. கணினியை டப் டப்பென்று தட்டிக் கொண்டிருந்தவன்.. பேசி முடித்துவிட்டு போனை கட்டிலினோரம் கோபமாக தூக்கி போட்டான்..

சிவந்த கண்களுடன் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க.. தட்டில் இட்லியும் மணக்கும் வெங்காய சாம்பாருமாக ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள் மதி..

ஒரு விள்ளல் இட்லியை பிட்டு சாம்பாரில் தோய்த்து அவன் வாய்க்கு நேரே எடுத்துப் போக.. கண்கள் கங்குகளாய் மாற.. அவளை ஒரு பார்வை பார்த்தான் ஹரிஷ்..

"தேவையில்லாம உரிமை எடுத்துக்காதேன்னு உனக்கெல்லாம் ஒருவாட்டி சொன்னா புரியாதா.. பசிச்சா எனக்கு சாப்பிட தெரியாதா.. நான் என்ன குழந்தையா.. இப்படி ஊட்டறது மூலமா உனக்கு என் மேல அன்பும் அக்கறையும் இருக்குன்னு புரிய வைக்க டிரை பண்றியா.. மரியாதையா எடுத்துட்டு போ".. என்று ரகுநாதன் மீதிருந்த கோபத்தையும் சேர்த்து அவள் மீது காட்ட..

"டென்ஷன் ஆகாதீங்க ஹரிஷ்.. இப்படி சாப்பாடு ஊட்டி உங்களையோ உங்க சொத்துக்களையோ ஏமாற்றி எழுதி வாங்கிட மாட்டேன்.. உடல்ரீதியான நம்ம உறவு முறைக்கு எப்படி எந்த விளக்கமும் தர முடியாதோ அதே மாதிரிதான் இதுவும்.. நீங்கதான் காசு தர போறீங்களே.. உங்க நிம்மதியும் சந்தோஷமும் அந்த பணத்துக்குள்ள அடங்குற மாதிரி என் அன்பையும் அக்கறையும் சேர்த்து கூட அந்த பணத்துக்குள்ளேயே அடக்கி வச்சிடுங்க.. இல்ல எக்ஸ்ட்ராவா பணம் கொடுத்துருங்க".. அவள் இயல்பாக புன்முறுவலுடன் சொல்ல..

"ஓஹ்.. பணத்துக்காக வந்த அக்கறையா".. அவன் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன..

அவன் எகத்தாளமான பேச்சில்.. மதியின் மதியின் முகம் கன்றிப் போக.. இதயமோ வெகுவாக காயப்பட்டு போனது.. பணம் கொடுக்கிறேன் என்று இன்றுதானே சொன்னான்.. அவன் திருப்திக்காகவும்.. வாங்கிக் கொள்ளாது போனால் அவனோடு இருக்க சம்மதிக்க மாட்டான் என்ற ஒரே காரணத்துக்காகவும் தானே பணம் வாங்க ஒப்புக்கொண்டேன்.. இங்கு வந்த நாள் முதல் இப்படித்தானே அக்கறையாக அன்பாக பார்த்துக் கொள்கிறேன்.. எல்லாம் பணத்துக்காக மட்டுமே என்று என் இதயத்தை இப்படி குத்தி கிழிக்க வேண்டுமா.. விழியோரம் கண்ணீர் எட்டிப் பார்த்தாலும்.. ஆழ்ந்த மூச்சோடு அதை அதை உள்ளிழுத்துக்கொண்டாள் மதி.. பின்பு அதற்கும் திட்டுவாங்க நேரிடுமே.. அன்புக்கு அடிபணியாத அவன் மனதை இந்தக் கண்ணீர் மட்டும் கரைத்து விடுமா என்ன?..

அப்போதும் உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட.. அவள் அன்பை அக்கறையை ஏளனப்படுத்தி விட்ட திருப்தியுடன் உணவை வாங்கிக் கொண்டான் அவன்..

"இனி நீ வீட்லயும் சார்ன்னு கூப்பிடுறது பெட்டர்".. என்றான் பாரமுகமாய்..

"அய்யோ.. இன்னும் என்னென்ன சட்ட திட்டங்கள் உண்டோ" என்ற சலிப்புடன் "சரி" என்றாள் அவள்..

சாம்பாரில் தோய்த்த மிருதுவான இட்லி தொண்டையில் கரைய.. ருசியில் இன்னும் அதிகமாகவே பசித்தது.. பாஸ்தா.. நூடுல்ஸ்.. மக்ரோனி.. பீட்சா.. பிரைடு ரைஸ்.. என்று எத்தனை மேற்கத்திய உணவுகள் உண்டாலும் இந்த இட்லி சாம்பாருக்கு ஈடு இணை ஏது.. அதுவும் மதியின் இட்லி சம்திங் ஸ்பெஷல் தான்.. வயிறு முட்ட சாப்பிட்டு முடித்துவிட்டும் டென்ஷனாக இருந்தவனை அப்படியே விட்டு செல்ல மதிக்கு மனமில்லை..

"என்னாச்சு.. ஏன் டென்சன்".. கையை துடைத்துக் கொண்டு அருகே வந்து அமர்ந்தாள்..

"தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்.. பொண்டாட்டி மாதிரி கேள்வி கேட்கிற வேலையெல்லாம் வேண்டாம்.. கெட் லாஸ்ட்" என்று உறுமினான் அவன்..

தொடரும்..
எல்லாத்துக்கும் பணம் தீர்வாகாது தம்பி 🙎🙎🙎 கண்டிப்பாக ஒரு நாள் உனக்கு தெரிய வரும் அளவிற்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்தாலும் மதி யோட அன்புகாகாக நீ ஏங்கி தவிக்க போவதை 🤨🤨🤨
 
Active member
Joined
May 3, 2025
Messages
102
என்ன design டா நீ.... உனக்கே பயம் வந்துருச்சு மதி சைட் சஞ்சுறுவாயோண்ணு அதனாலதான இதெல்லாம்.....🤨🤨🤨🤨🤨🤨

ஜோதி கிட்ட இருந்து எத்தனை நாள் தப்பிக்க முடியும் மதி....
உன்னோட காதல் புரிஞ்சா கூட சொல்ல மாட்டான் போல.....

ஹரிஷ் ஒரு நாள் அவ காதல் உனக்கு புரியும்....அப்போ தெரியும் அவ வலி என்னனு....
 
Member
Joined
Feb 15, 2025
Messages
83
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
118
அடேய் எனக்கு நல்லா வருது வாயில. எதுக்கு எடுத்தாலும் பணம் தானா. 😡😡😡😡😡😡😡

மதியை ரொம்ப பேசற. மொத்தமா அவளோட காதலை உணரும் போது சுக்கு நூறா உடைஞ்சு போயிடுவ.
 
Top