- Joined
- Jan 10, 2023
- Messages
- 109
- Thread Author
- #1
அவன் கடின வார்த்தைகள் வலியை கொடுத்தாலும் இது போல் நிறைய முறை வாங்கி கட்டிக் கொள்வதால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் "இல்ல உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் கேட்டேன்".. என்றாள் சற்றே தடுமாற்றத்துடன்..
"நீ ஒரு லேபிள் டிசைனர்.. எனக்கு என்ன ஹெல்ப் பண்ண போறே?".. என்று ஏளனமாக உதட்டை சுழித்து அசட்டையாக கேட்டவன் மீண்டும் டென்ஷனுடன் கணினியில் கண் பதிக்க.. அவன் உதவி வேண்டாம் என்று சொல்லவில்லை.. தன்னால் உதவ இயலாது என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதை குறித்துக் கொண்டவள்.. "நீங்க சொல்லி கொடுத்தீங்கன்னா செய்வேன்.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா பரவாயில்லை.. வேண்டாம்".. என்று எழுந்திருக்க..
"ஒரு நிமிஷம்".. என்றவன் ஆழ்ந்த மூச்சுடன் அவளை ஏறிட்டுப் பார்த்து "இது மோஸ்ட் கான்ஃபிடென்ஷியல் வொர்க்.. பையர் ஆன்லைன்ல கோட் பண்ற ரேட்டை பார்த்து இங்கே ஃபீட் பண்ணி டோட்டல் கண்டெய்னருக்கு எவ்வளவு அமௌன்ட்னு கால்குலேட் பண்ணி.. இந்த டாக்குமெண்ட் ஷீட்டை அவங்களுக்கு மெயில் பண்ணனும்.. ஜெனரலி இந்த வொர்க் நான் மட்டும் தான் பண்ணுவேன்.. வேற யாரையும் நம்பி ஒப்படைக்கிறது இல்ல"..
"ஆனா இப்போ சிலோன் போற கண்டைனர்ல ஏதோ பிராப்ளம்.. காட்டன் பாக்ஸ் ஏதோ டேமேஜ் ஆகி இருக்காம்.. கஸ்டம்ஸ்ல வர சொல்றாங்க.. நான் தான் போய் பேசணும்.. மீன்வைல் இந்த கொட்டேஷன் வேற அனுப்பியாகணும்.. சோ உன்னால முடிஞ்சா நீ இந்த வேலையை பண்ணி கொடு.. நான் ஹார்பர் போயிட்டு வந்துடறேன்".. என்று முடித்தவன் பதிலுக்காக கூர்மையாக அவள் முகத்தை உற்று நோக்கினான்..
"சரி சொல்லிக் கொடுங்க சார்".. என்றவளோ.. சார் என்ற வார்த்தையை அழுத்தி கூற.. அவனும் அதை குறித்துக் கொண்டான்.. ஆனால் கண்டுகொள்ளாதவன் போல்..
"இங்கே உட்காரு" என்று கட்டிலில் சற்று தள்ளி அமர்ந்தவன் அவளை அருகே அமர வைத்துக் கொண்டு அந்த எக்ஸெல் சீட்டில் மொத்த கண்டெய்னருக்கான தொகையை எப்படி நிரப்புவது என்று பொறுமையாக விளக்கி சொல்லிக் கொடுத்தான்.. அவளும் கவனமாக கற்றுக்கொண்டு பேப்பரில் சில குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டாள்.. "கவனம்.. ஒரு டிஜிட் தப்பா மாறினாலும் டோட்டல் கண்டைனர் வேல்யூவே மாறிடும்.. நான் கிளம்புறேன் நீ பாத்துக்கோ.. முடிச்சுட்டு கஸ்டமருக்கு மெயில் அனுப்பிட்டு எனக்கு போன் பண்ணு".. என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்தான்..
மதி அவன் கொடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்க.. குளித்து முடித்து வெளியே வந்தவன்.. ஏதோ உரிமையான கணவன் போல் அங்கேயே அறையில் உடைமாற்றிவிட்டு அவள் முகத்தை திருப்பி இதழில் அழுத்தமாக முத்தமிட்டு கிளம்பிச் சென்றான்..
வேலையை நேர்த்தியாக முடித்து கஸ்டமர்க்கு மெயில் செய்து விட்டு அவனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தாள் மதி.. தானும் ஒரு முறை அந்த மெயிலை சரி பார்த்து டாக்குமெண்டை வெரிஃபை செய்தவனுக்கு மனதில் ஒரு திருப்தி பரவ.. ஹார்பர் சென்ற வேலையை தடையில்லாமல் நிதானமாக எளிதாக முடிக்க முடிந்தது.. இடைவிடாத வேலைகளுக்கு நடுவே இரவு உணவு எடுத்துக் கொள்வது என்பது நடக்காத காரியம்.. மதி கட்டாயப்படுத்தி உணவு கொடுத்தது நல்லதாகி போயிற்று.. தன்னையறியாது மனம் மதிக்கு நன்றி சொல்லவே.. மதியின் நினைவுகளால் விளைந்த பனிப்பூக்கள் அவனை குளிர்விப்பதாய்.. ஹரிஷின் அசாத்திய பேச்சு திறமையால் வேலைகள் நினைத்ததை விட எளிதாக முடிந்து போனது.. ரகுநாதனிடம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்ட அதிகாரிகள் ஹரிஷின் ஆளுமையான பேச்சிலும் கம்பீரத்திலும் அடிபணிந்து அடுத்த பத்து நிமிடங்களில் கண்டெயினரை ரிலீஸ் செய்து விட்டனர்..
அவன் வீடு திரும்பிய வேளையிலே.. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மதி.. வெண்ணிறத்தில் வில்லாக வளைந்திருக்கும் பிறை நிலா போல க்ரீம் நிற சாட்டின் உடையில் வெண்ணெய் போல் வழுக்கும் சருமத்துடன்.. அழகான சில்கி பூனைக்குட்டியாய் உறங்கிக் கொண்டிருந்தவளை ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தவன் சட்டையை கழட்டி வீசி எறிந்து விட்டு அடுத்த கணமே அவள் மீது படர்ந்திருந்தான்..
எதிர்பாராத நேரத்தில் அதீத எடை தன் மேலே அழுத்த மூச்சு முட்டவே.. பதறி எழுந்தவளின் சிறிதாக பிளந்த இதழ்கள் வேகமாக விழுங்கப்பட்டது.. பட்டாம்பூச்சியின் சிறகை போல் மெதுவாக மூடி திறந்த இமைகளை கண்டு கொண்டே இதழை மூர்க்கத்தனமாக முற்றுகையிட்டிருந்தான் அவன்..
சில நிமிடங்கள் வரை நீடித்த மோக முத்தம் முடிவுற்ற வேளையில்.. "தாங்க் யூ.. நீ பாதி வேலையை முடிச்சு கொடுத்ததால இன்னைக்கு ரிலாக்ஸா வேலை பார்த்தேன்.. போன காரியம் சக்சஸ்.. நீ இல்லைனாலும் வேலை முடிஞ்சிருக்கும்தான்.. ஆனா இப்போ டென்ஷன் மிச்சம்.. நிச்சயம் இதுக்கும் உனக்கு பேமெண்ட் உண்டு".. என்றபடி இரவு உடையின் கயிறுகளை அவிழ்த்தவன் ஆடையிலிருந்து அவளை மட்டும் தனியே பிரித்து எடுத்துக்கொண்டு கட்டிலில் புரண்டான்.. முத்தமிட்டு அங்கம் சுவைத்து மோக பயணத்தின் இறுதியில்.. "சாரு" என உரக்க கூவி.. பெண்ணின் உயிரை வதைத்து தன் உயிர் நீரை அவளுள் இறக்கினான் ஹரிஷ்..
உண்மையில் அவனால் சாருவை மறக்கவே முடியாது.. அவன் ஒவ்வொரு அணுவிலும் அவள் நீக்கமற நிறைந்து வழிகிறாள்.. சாருவை உருகி உருகி காதலித்தவன் ஹரிஷ்.. இந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஏன் இந்த படுக்கையிலும் கூட அவளின் வாசங்களும் சுவாசங்களும் நினைவுகளும் கலந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.. இருவருக்கும் இடையில் உடல் ரீதியான தொடர்பு இல்லை என்றாலும்.. அளவிட முடியாத ஆத்மார்த்தமான அன்பு அலைகடல் போல் உண்டு..
அவள் வாழ்ந்த இந்த வீட்டில் இப்போது மதி.. சாருவை மறக்கவே முடியவில்லை.. மதியிடம் மனம் தடுமாறுவதை தடுக்கவும் முடியவில்லை.. இதோ இந்த கட்டிலில் சாருவை கட்டிப்பிடித்து அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு ஆயிரம் கதைகள் பேசிய நினைவுகள் உண்டு.. அவளிலிருந்து மதியை வேறுபடுத்தி காட்டவும் .. சாருவும் மதியும் ஒன்றில்லை என்று தனக்குள் நிரூபிக்கவும் தினம் தினம் அவளை உடலால் வதைக்கிறான்.. தன்னை வெட்டி வீழ்த்துபவர்களுக்கும் ஆயிரம் பயன் தரும் வாழைமரம் போல வதைத்தாலும் அணைத்தாலும்.. அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்த மதி.. அவன் வாழ்க்கையின் வரமா சாபமா அவனுக்கே தெரியவில்லை.. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை அவன்..
பொழுது புலர்ந்து விட்டது என்ற செய்தியை தாங்கி பொன்னிற கதிர்களால் உலகை அணைத்திருந்தான் ஆதவன்.. எப்போதும் போல ஆறு மணிக்கு விழிப்பு தட்ட.. ஹரிஷின் இறுகிய அணைப்புக்குள் அடங்கியிருந்த மதி.. அவனை விட்டு மெல்ல விலகினாள்..
"சாருமா.. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம்".. என்று கிறங்கிய குரலுடன் அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ள.. இதயத்தில் வின்னென்று தெறித்த வலியில் சுவாசிக்க கூட முடியாத அளவிற்கு பலவீனமாகிப் போனாள் மதி..
"நான் உங்க சாரு இல்ல.. மதி".. என்று ஸ்ருதி இல்லாத குரலில் சொன்னவள் அவன் அணைப்பிலிருந்து முள் குத்திய இலவம்பஞ்சாய் நெளிந்தாள்.. மதி என்ற வார்த்தையை கேட்டதும் கண்களை நன்றாக விழித்துப் பார்த்தவன்.. மிக நெருக்கமாக தெரிந்த அழகு முழுமதியை கண்டு என்ன நினைத்தானோ.. நெற்றியில் மூக்கில் இதழில் முத்தமிட்டு விட்டு விலகி திரும்பி படுத்து கொண்டான்..
தனித்துவிடப்பட்ட அன்றில் பறவையாய்.. வெறுமையான மனதுடன் கட்டிலின் விளிம்பிற்கு நகர்ந்து வந்தவள்.. தன் உடையை தேடிட.. அதுவோ ஹரிஷ் முதுகின் அடியில்.. மெதுவாக இழுக்க முயன்றவள் அவன் சாரு என.. சிணுங்குவதை கண்டு அப்படியே விட்டுவிட்டாள்.. உறக்கத்திலிருந்து எழுப்பி அவன் இன்னொரு முகத்தை காண தயாராக இல்லை அவள்.. ஏற்கனவே நிறைய முறை விடியற்காலையில் சுப்ரபாதம் கேட்ட அனுபவம் உண்டு..
துவைத்து கப்போர்ட்டில் அடுக்கி வைத்திருக்கும் உடையில் ஏதேனும் ஒன்றினை எடுத்து போட்டுக்கொள்ள நினைத்தவள்.. போர்வையில் உடலில் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கும் வேளையில் கட்டிலின் கீழே அவன் ஷர்ட் இருப்பதை கண்டு.. சிறு புன்முறுவலுடன் எதையும் யோசிக்காமல் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டாள்..
உடலிலும் அவன் வாசனை உடையிலும் அவன் வாசனை.. ஆளை மயக்கியது.. இனம் புரியாத ஏதோ வருத்தத்தை தாண்டியும் அவள் தேகத்தை தொட்டுக் கொண்டிருந்த அவன் உடை நாணப் பூக்களை மலரச் செய்ய.. அந்த ஏகாந்த நிலையில் நடந்து சென்று ஜன்னலை பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தாள்.. காதல் அலைகள் நெஞ்சை தொட்டுச்செல்ல உடலோடு ஒன்றிய ஆடை அவளுடன் சரசம் புரிவதாய் உணர்ந்தாள்..
எதேச்சையாக அவள் விழிகள் அந்த வட்ட மேஜையில் பதிய.. அங்கே அவன் வாலட்.. "இப்படியே எங்கேயாவது வச்சுட்டு அப்புறம் போகும்போது மறந்து போயிட வேண்டியது.. ஆபீஸ் வந்ததும் என்கிட்ட மல்லுக்கு நிக்க வேண்டியது".. என்று ஆசை கொண்ட மனைவி போல் அலுத்து கொண்டவள் அந்த வாலட்டை எடுத்து பிரித்துப் பார்க்க.. உள்ளே அவனும் ஒரு பெண்ணும் ஜோடியாக.. அவள் தோள் மீது கை போட்டு கன்னத்தோடு கன்னம் இழைந்து செல்ஃபி எடுத்திருந்தனர் இருவரும்.. இருதயத்தில் அரளிப்பூவை அரைத்து பூசியதைப் போல துடித்துப் போனவள்.. புகைப் படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் முகத்தை கட்டை விரலால் மென்மையாக வருடினாள்..
"சாருமதி".. என்று முணுமுணுத்து விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள் இதயம் கொண்ட வலியுடன்..
"ஹாய் பேபி".. என்று கிறக்கத்துடன் கொஞ்சி வந்த வந்த குரலில்.. சட்டென நிமிர்ந்தாள் அவள்.. ஹரிஷ் எழுந்து அமர்ந்திருந்தான்..
பெண் மேனியை தழுவியிருந்த அவன் சட்டை தொடையோடு நின்று போயிருக்க.. வழவழப்பான வாழை தண்டு கால்களும்.. அங்கே அவனால் கன்றி சிவந்து போயிருந்த இடங்களும் மீண்டும் அவனை ஆசை உறவுக்கு அழைப்பதாய்..
தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அவளை ரசித்தவனின் விழிகள் மோகத்தின் பிரதிபலிப்பாய் பளபளக்க.. இதழில் அழகான புன்முறுவல்.. கண்சிமிட்ட மறந்தாள் பேதை..
அடுத்த கணமே.. கண் முன் விரிந்தது அந்த காட்சி.. அன்று அடை மழையில் சாருவின் உடைகள் நனைந்த நிலையில் அவன் சட்டையை எடுத்து அவள் அணிந்து கொண்டதும்.. மோகம் கூட்டும் தேகம் கண்டு தன்னிலை தடுமாறி விழிகளால் ஆசையாய் அவளை அள்ளிப் பருகியவன்.. "என் சட்டையை திருப்பி கொடுடி".. என்று அவளை வம்பு செய்து சட்டையை கழட்ட முயன்றதும்.. அவள் ஓடியதும் அவன் துரத்தியதும்.. வேண்டுமென்றே அவன் கைகளில் அகப்பட்டுக் கொண்டு.. முகமெங்கும் முத்தமிட்டு "கல்யாணம் வரை கொஞ்சம் பொறு கண்ணா.. எல்லாமே உனக்குத்தானே.. ம்ம்?".. என்று இறுதியாக நெற்றியில் முத்தமிட்டு அவனை கட்டுக்குள் கொண்டு வந்ததும்.. மழை ஓய்ந்தும் கூட இருவரும் இறுக அணைத்தபடி அதோ அந்தக் கூடத்தின் நீள்விருக்கையில் தேன் சிட்டுக்களாக உறங்கியதும் மாலையிலிருந்து அறுந்து விழுந்த முத்துமணிகளாக அவன் நெஞ்சுக்குள் உருள.. பெரும் வேதனை கொண்டவனுக்கு அதே சட்டையில் மதியை காண காண கண்கள் சிவப்பேறி கோபம் பொங்கியது..
"ஏய்.. யாரை கேட்டுடி.. என் சட்டையை எடுத்து போட்டிருக்கே.. என் பொருளைத் தொடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா".. என்று கர்ஜித்தவன் டிராக் பேண்ட் மட்டும் அணிந்து வெற்றுடலுடன் தன் மீது கிடந்த போர்வையை தூக்கி வீசிவிட்டு தன் உயரத்திற்கு அரக்கனாய் எழுந்து நின்றவன் வேகமாக அவளை நெருங்கவே.. ஆடவனின் சீற்றம் கண்டு பயந்து போனவளோ பின்னால் நகர்ந்து சுவற்றில் இடித்துக் கொண்டாள்..
சாருவின் நினைவுகளை அழித்து அந்த இடத்தில் மதியின் அழகான தருணங்கள் பொருத்திப் பார்க்க அவன் விரும்பவில்லை.. விரும்பவில்லை என்பதை காட்டிலும் இனம் புரியாத பயம் ஏதோ ஒன்று அவன் இதயத்தை ஆட்கொள்ள.. வெறி கொண்டவன் போல் சட்டையை கழட்டினான் அவள் மேனி வலிக்க வலிக்க.. இதேபோல் அன்று சாருவிடம் நடந்து கொண்டது குறும்பு.. அதிலும் அதீத மென்மையுடன்.. இவளிடமோ வன்மையாக.. மூர்கத்தனத்துடன் அல்லவா நடந்து கொள்கிறான்.. தாங்காத பெண்மை கதறியது..
அவன் வலிமை பொருந்திய கரங்களில் அகப்பட்டுக் கொண்டு.. "சார்.. விடுங்க".. என்று அவள் விலகுவதற்குள் மேல் சட்டையை கழட்டி அவளை நிராயுதபாணி ஆக்கியிருந்தான் ஹரிஷ்.. "அம்மாஆஆ"..என தேகத்தை இரு கரங்களால் மூடிக் கொண்டு அழுதவளை சட்டை செய்யாதவன்..
அத்தோடு நில்லாமல்.. அவள் தாடையை வலிக்கும்படி இறுகப் பற்றி.. "இனிமே இந்த மாதிரி வேலை வச்சுக்காதே தொலைச்சுருவேன்".. என்றவன் அவள் நடுங்கும் கரத்திலிருந்த வாலட்டை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு அழுது கொண்டிருக்கும் பெண்ணவளை கருத்தில் கொள்ளாது.. வாலட்டை திறந்து சாருவை ஏக்கத்துடன் பார்த்தபடியே கட்டிலில் சென்று அமர்ந்தான்..
நாற்காலியில் மடித்து போடப்பட்டிருந்த பூந்துவாலையை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டவளுக்கோ அவன் நடந்து கொண்ட விதத்தில் இதயம் ரணமாய் அடிபட்டு கண்ணீர் பெருகியது.. உடலை பரிமாறிக் கொள்ள உரிமை உண்டு.. உடையை பகிர்ந்து கொள்ளக் கூடாதா.. என்ன நியாயம் இது.. அவளுக்கே புரியவில்லை.. அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்.. கை கால்கள் இன்னும் கூட வெடவெடத்துக் கொண்டிருக்க.. அந்த இருக்கையில் பொத்தென அமர்ந்து வெறித்த பார்வையுடன் அழுது கொண்டிருந்தாள் அவள்..
எச்சில் விழுங்கி கண்களை மூடி திறந்தவன்.. "சாரும்மா.. ரொம்ப மிஸ் பண்றேன்டி.. உன்னை".. என்று கட்டிலில் ஓங்கி குத்தினான்..
கண்ணீர் கோடுகள் படிந்திருந்த அவன் விழிகளை கண்டு .. தன்னை காயப்படுத்தியதையும் மறந்து பதறித் துடித்த பைத்தியக்கார பெண்மை.. "சார்".. என ஓடி வந்து அணைத்துக் கொண்டது அவனை..
ஆதரவாக தோள் கிடைத்ததும்.. அனைத்தும் மறந்து அவள் நெஞ்சோடு சாய்ந்து கொண்டவன்.. கதறி அழ ஆரம்பித்து விட்டான்.. "சார்.. காம் டவுன்.. அழாதீங்க".. நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனை தேற்ற முயன்றாள் மதி..
"என்னால என் சாருவை மறக்கவே முடியலடி.. எனக்கு மட்டும் சக்தி இருந்தா அவளை எப்படியாவது உயிரோட திரும்பிக் கொண்டு வந்துருவேன்.. அவ இல்லாம இந்த வாழ்க்கையே நரகமாய் இருக்கு.. என் சாரு வேணும் மதி.. அவ எனக்கு வேணும்.. அம்மாவா.. தோழியா.. காதலியா.. அவ எனக்கு வேணும்.. என்னை எப்படி பாத்துக்குவா தெரியுமா.. அவ இடத்தை யாராலயும் ரீப்லேஸ் பண்ணவே முடியாது.. அவ இல்லாம செத்துரலாம் போல இருக்குடி".. என்று சின்ன குழந்தை போல் விசும்பிய காதலனை தேற்ற வழி தெரியாது சிலையாக சமைந்தாள் மதி..
"நான் இருக்கிறேன்.. அவளுக்கும் சேர்த்து நான் உன்னை காதல் செய்வேன்" என்று கூற முடியாதே.. "சீ.. அவ இடத்துல நீயா.. அவளும் நீயும் ஒண்ணா".. என்று எட்டி உதைப்பான்.. இன்னும் காயப்படுத்துவான்..
சொற்களால் புரிய வைக்க முடியாத காதலை.. நேசத்தை செயலில்தான் உணர்த்த வேண்டும்..
கேட்டவுடன் லிவிங்இன் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த மதி அவனைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்று.. அப்படித்தான் உருவகப்படுத்தி படுக்கையறையில் மட்டும் இடம் கொடுத்து மனதிலிருந்து வெளியேற்ற முயன்று கொண்டிருக்கிறான்.. எந்த நிலையிலும் சாருவின் இடத்தில் இன்னொருத்தி வந்து விடவே கூடாது என்று பிடிவாதமாக மதியை காயப்படுத்தும் ஹரிஷை எப்படி சமாளித்து தன் காதலை புரிய வைக்கப் போகிறாள் விண்மதி..
தனக்காக இன்னுயிரை பறி கொடுத்து தன்னுயிரைக் காப்பாற்றிய சாருமதிக்காக மட்டுமே வாழ்வது.. அவளுக்காக மட்டுமே இந்த பிறவி என முடிவெடுத்தவன்.. அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு ஏற்ப தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு.. மதியை பலிகடாவாக்கி விட்டான்..
எந்த அளவிற்கு மதியால் ஈர்க்கப்படுகிறானோ.. அதே அளவில் வெறுப்பை உமிழும் ஹரிஷ்.. மதியின் உணர்வு பூர்வமான உயிர் காதலை புரிந்து கொள்வானா..
புரிந்து கொண்டாலும் அவளை ஏற்றுக் கொள்வானா?..
தொடரும்..

Last edited: