• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

ஓ தென்றல் பெண்ணே! 8

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
130
"சார் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்".. அவன் கருவிழிகளுக்குள் கலந்து அவள் பேசிய விதம் ஹரிஷின் சீற்றம் கொண்ட நெஞ்சினை அமைதிப்படுத்தியிருக்கவே.. கோபம் கொள்ள முயன்று தோற்றது ஆண்மை..

ஆனாலும் தனக்கு எப்பேர்பட்ட அநீதிகளை இழைத்து விட்டு எதுவும் அறியாதவர் போல் கண்முன்
நிற்பவர்களை காண காண ஜீரணிக்கவே முடியவில்லை.. "நான் எங்கேயும் வரல.. அவங்களை முதல்ல வெளியே போக சொல்லு.. அவங்க முகத்தை பார்க்க கூட நான் விரும்பல".. பற்களை கடித்து.. ஆக்ரோஷமாக கத்தினான் ஹரிஷ்..

அவன் ஆங்காரத்திலும் கோபத்திலும்.. மூன்று பெண்களும் அச்சத்துடன் நடுங்க.. "வேண்டாம்மா நாங்க போயிடறோம்".. என்று கல்யாணி முன்னெடுத்து வைத்த குரலில் தன்னிச்சையாக அவன் பார்வை தாயின் மீது உணர்ச்சியின்றி படிந்து மீண்டது..

மதி ஒரு முறை அவர்களைப் பார்த்தவள்.. "ஹரிஷ் ப்ளீஸ் என்கூட வாங்க".. என்று அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் தங்கள் அறைக்கு..

"ஏய்.. என்ன பண்றே.. என் கையை விடு" என்று.. கோபத்தில் காச் மூச்சென கத்தினாலும்.. அவள் இழுவிசைக்குட்பட்டு பின்னால் சென்றான் ஆறடி ஆடவன்.. அவள் கையை உதறிவிட்டு சென்றிருக்கலாம்.. அல்லது அவளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிருக்கலாம்.. சாவி கொடுத்த பொம்மையாக ஐந்தடி சிலையின் பின்னால் அமைதியாக சென்ற காரணங்கள் அவனே அறியான்.. ஒரு சில நேரங்களில் நாம் பிடிவாதமாக இழுத்து வைத்திருக்கும் விஷயங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின் வேண்டுகோளில் நம்மையறியாமல் தளர்ந்து போகும்..

உள்ளே அழைத்து வந்து கதவை சாத்தியவள்.. "ஹரிஷ் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க".. அவன் கோபத்தின் உக்கிரம் அறிந்து பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடத்த குரலோடு ஆரம்பித்தாள்..

புருவங்களை உயர்த்தி பார்வையால் அவளை ஊடுருவியவனோ.. "சொல்லு" என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டி நிதானமாக..

படபடப்பு.. கோபத்தை விட இந்த நிதானம் கொஞ்சம் ஆபத்து தான்.. மிக கவனமாக கையாள வேண்டும்.. என்று அச்சத்துடன் எண்ணியபடியே தொண்டையை செருமிக் கொண்டவள்..

"சொல்ல உரிமை இருக்கான்னு தெரியல.. ஆ.. ஆனா அவங்களை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு இருப்பாங்க போல இருக்கு.. இந்த மாதிரி நிலைமையில அவங்கள வெளியே போக சொல்றது தப்பு இல்லையா?.. என்ன இருந்தாலும் உங்களைப் பெத்து வளர்த்த தாய் அவங்க.. அம்மாவை அனாதரவா விடுறது ரொம்ப தப்பு சார்.. என்று மதி குரல் தழைத்து இறைஞ்சவே.. ஓஹோ.. அப்புறம்.. என்றான் நக்கலாக..

அவனுடைய இந்த பாவனை.. உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்த ஆழ மூச்செடுத்தவள்..மேற்கொண்டு தொடர்ந்தாள்..

"தப்போ சரியோ.. அம்மான்னு நீங்க அடையாளம் காட்டவும்.. மகனேனு உரிமையா கூப்பிடவும் உங்களுக்கு பெத்த தாய்ன்னு ஒருத்தங்க இருக்காங்க.. இன்னிக்கு இல்லனாலும்.. என்னைக்காவது ஒரு நாள் உங்க ரெண்டு பேருக்கு இடையே உள்ள கசப்புகள் தீர்ந்திடும்.. ஆனா இந்த உலகத்துல அம்மாவே இல்லாம அன்புக்கு ஏங்கிறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்க கிட்ட போய் கேட்டு பாருங்க சார்.. தாயோட அருமை அப்போ புரியும்".. அதற்குமேல் பேச முடியாமல் நிறுத்தியவளை.. அவன் விழிகள் கூர்மையாக அளவிட்டன.. அன்பிற்கு ஏங்கும் அந்த வலி நிறைந்த விழிகளில் எதையோ தேடினான் ஹரீஷ்.. ஆனாலும் அவனை சுற்றி பிடிவாதமாக போட்டுக் கொண்ட வளையம் வெளியே வரவிடாமல் தடுக்கவே..

"ஓஹ்.. பிளடி சென்டிமென்ட்ஸ் பத்தி சொல்லி என் மனசை மாற்றலாம்னு பாக்குறியா".. ஒற்றைப் புருவம் உயர்த்தி இகழ்ச்சியாக இதழ் வளைத்தான்..

"இல்ல சார்.. உங்களுக்கும் சென்டிமெண்ட்ஸ் உண்டு.. நீங்க ஒண்ணும் கல் இல்லை.. சாருமதியை கொஞ்சம் கூட மறக்காத நீங்க.. நிச்சயம் உங்க அம்மாவை முழுசா வெறுத்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு சொல்லுது".. என்றாள் உறுதியாக..

"ஹேய்.. என் சாருவை அவங்க கூட ஒப்பிடாதே.. அவளைப் பற்றி பேச உனக்கு கூட எந்த தகுதியும் இல்லை".. செக்கசிவந்த உலைக்கலனாய் கொதித்தான் அவன்..

"நான் எதுவும் தப்பா சொல்லல சார்.. ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது அவங்க அருமை தெரியறதில்ல.. அவங்களோட அன்பும் பாசமும் நமக்கு புரியறதே இல்லை.. அவங்களை மன்னிக்க தயங்குறோம்.. அவங்க அன்பை புரிஞ்சுக்க மறுக்குறோம்.. அதை அவங்க உயிரோடு இல்லனா.. அவங்களையே நினைச்சு ஏங்கி மறுகுகிறதுதான் மனித வாழ்க்கை.. சாருவை இழந்த உங்களுக்கு உறவுகளின் முக்கியத்துவம் நல்லா தெரிஞ்சிருக்கும்.. அடைக்கலம் தேடி வந்தவங்கள இப்படி எட்டி உதைக்கிறது சரியில்ல சார்.. எல்லாம் தெரிஞ்சவர் நீங்க.. நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.. பெத்த அம்மாவை கலங்க விடறது சரியா சொல்லுங்க".. அவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கேட்க..

"ஓஹோ.. அப்போ பெத்த மகனை கதற விடலாமா.. தனிமையில தவிக்க விடலாமா".. இதழ்கள் துடிக்க தொண்டை விடைக்க கேட்டவனை விழிவிரித்து பார்த்தாள் மதி..

"என்ன கேட்டே.. அம்மாவை அனாதரவா விடுறது தப்பா?.. அம்மான்னா என்ன அர்த்தம் தெரியுமா.. பெத்த குழந்தைய ஈ எறும்பு கூட கடிக்காம பாதுகாக்குறவதான் தாய்.. அவன் கண்ணில் தூசி பட்டாலும் துடிக்கிறவதான் தாய்.. அடுத்தவனை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறவளை.. ரத்த காயங்களோட மகன் துடிதுடிச்சு கெடக்கறதை தூர நின்னு ரசிச்சு பார்க்கிறவளை எப்படி தாயின்னு சொல்ல முடியும் ஹான்?" .. சிவந்து நின்ற கண்களுடன் கேட்டவனை... பதிலற்று வெறித்தாள் மதி..

"நீ அடிக்கடி கேட்பியே இந்த தழும்புகள் உங்க முதுகில் எப்படி வந்ததுன்னு.. இதெல்லாம் எங்க அம்மாவோட புருஷன் எனக்கு பரிசா கொடுத்தது".. என்று ஹரிஷ் விரக்தியுடன் சொல்லவும் திகைத்துப் போனாள் மதி..

"எங்க அப்பா இறந்த ஒரு மாசத்துல.. எங்க அம்மா ஆசைப்பட்டவனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க"..

"அவன் சரியான ரவுடி.. எங்க அம்மாவை அவனுக்கு பிடிக்கும் ஆனால் இன்னொருத்தனுக்கு பிறந்த என்னை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. நேரம் காலம் இல்லாம அந்த ஆளும் எங்க அம்மாவும் கொஞ்சுறதை பார்க்க பார்க்க எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா.. ஒரு சின்ன பையன் அந்த வயசுல எதையெல்லாம் பார்க்க கூடாதோ அதையெல்லாம் நான் பார்த்திருக்கேன் மதி.. என்றான் வலி நிறைந்த விரக்தி புன்னகையுடன்..

"ஒயின் ஷாப்ல சரக்கு வாங்கிட்டு வர சொல்லுவான்.. நான் மறுத்தா பெல்ட்டால என்னை அடிப்பான்.. சிகரெட் வாங்கிட்டு வர சொல்லுவான்.. முடியாதுன்னு சொன்னா அந்த சிகரெட்டால எனக்கு சூடு வைப்பான்.. நான் படிக்கிறதை பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது.. தினம் தினம் அடி உதை.. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரவே பயமா இருக்கும் மதி.. நான் வீட்டுக்கு வர ஒரே காரணம் எங்க அம்மா மட்டும்தான்.. ஆனா எங்க அப்பா இறந்த பிறகு அவங்க கூட என் மேல பாசமா நடந்துக்கிட்டதே இல்லை.. அவங்களும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. எந்த தப்பும் செய்யாம ஏன் இப்படி அம்மா என்னை வெறுக்கிறாங்கன்னு தெரியாம தினம் தினம் அழுவேன்"..

"அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க பிறந்தபிறகு என் அம்மாவுக்கு நான் அன்னியமாகிட்டேன்.. என் அப்பாவை பெத்தவங்களும் சரி.. அம்மாவை பெத்தவங்களும் சரி.. என் அம்மா செஞ்ச காரியத்தால என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க"..

"தனிமையில அழுவேன்.. பயப்படுவேன்.. அம்மாவை தேடுவேன்.. என் அழுகை கூட அவங்க சந்தோஷத்துக்கு தொந்தரவாம்.. மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பான்.. அவன் முன்னாடி நான் சாப்பிட கூட முடியாது.. தட்டை காலால எட்டி உதைச்சிட்டு போவான்.. மண்ல விழுந்த சாப்பாட்டை சாப்பிட சொல்லுவான்.. எத்தனை நாள் பசியில அந்த மண் சோத்தை தின்னுருக்கேன் தெரியுமா.. பாத்து ரசிச்சாடி என்னை பெத்தவ.. அவனுக்கு பிறந்த அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் கூட எங்கம்மா என்கிட்டே பேசவிடாது".. அவன் சொல்ல சொல்ல நெஞ்சம் கனத்து மூச்சுக்கு திணறினாள் மதி..

"அப்படி ஒரு கொடுமையான நேரத்துல என் வாழ்க்கையில வந்தவதான் என் சாருமதி.. என் பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு.. இடிஞ்சு விழப்போற கட்டிடமா இருந்த என் வாழ்க்கையில கிடைச்ச ஒரே பிடிமானம்".. சொல்லும்போதே அவன் அழுத விழிகளில் அப்படி ஒரு பிரகாசத்தை கண்டு கொண்டாள் அவள்..

"வீட்டுக்கு தெரியாம எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தருவா.. என் காயங்களுக்கு மருந்து போடுவா.. எனக்காக அழுவா.. அவ்ளோ பிடிக்கும் அவளை.. எனக்காக துடிக்கிற ஒரே ஜீவன்".. என்றவன் அவள் நினைவுகளில் விகசித்தான்.. "யாருமே இல்லாத எனக்கு அவளே சகலமும் ஆகிப் போனா மதி.. எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. ஆனா அவ.. என்னை ஏத்துக்கிட்டா.. அன்பு காட்டினா.. அரவணைச்சா.. காதலிச்சா.. இப்போ மொத்தமா விட்டுட்டு போய்ட்டா".. குரல் கமற.. தொண்டைக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவன் இரு கைகளால் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.. கீழுதட்டால் வறண்ட நாவை வருட.. அவன் விழிகளோ செக்கச் சிவந்து இரத்த பந்துகளாய் உருண்டது..

மதி அவன் கடந்த கால கசப்புகளில் இதயம் கசங்கி மிகுந்த வேதனை கொண்டாள்.. நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்கள்.. மாற்றாந்தகப்பனால் அவன் அடைந்த கொடுமைகளை ஜீரணிக்கவே முடியாதவளுக்கோ அவனை அள்ளி அணைத்து மடி மீது சாய்த்துக் கொள்ளத்தான் நெஞ்சம் துடித்தது.. ஆனால் எங்கே சுற்றினாலும் சாருவிடம் வந்து முடிக்கும் அவன் காதல் கொண்ட மனம் அவளை இந்நேரம் பயமுறுத்தியது..

மீண்டும் சாருவின் இழப்பில் மூழ்கி மூர்க்கனாகி விட்டால் அவனை தேற்றுவது கடினம்.. இப்போதைக்கு அவனை திசைதிருப்பி வந்தவர்களை வாழ வைக்கத்தான் ஒரு வழியை கண்டு பிடிக்க வேண்டும்..

பழைய நூல் சேலையும் கசங்கிய தலையும் வாழ்க்கையில் அடிபட்டு போராடிக் களைத்த அவர்களின் முகம் பார்க்க.. ஹரிஷ் சொன்ன கசப்பான சம்பவங்களுடன் அந்த பாவப்பட்ட ஏழைத் தாயை பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.. இதயத்தினுள் ஏதோ இனம்புரியாத இரக்கம் பிறந்தது அவர்கள் மேல்.. ஆனாலும் ஹரிஷ் நிலையிலிருந்து யோசித்தால் அவன் வெறுப்பது சரிதானே.. அவன் மனதை இளக்கி.. அவர்களுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் உறுதியாக முடிவெடுத்தாள்..

அவன் எண்ணங்கள் சாருவை நோக்கி செல்வதற்கு முன்.. மெல்ல நெருங்கி நெஞ்சோடு சாய்ந்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிட்டதும் கண்கள் நிறம் மாறி கனிந்ததை காரிகை ஏனோ உணரவில்லை.. "என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது.. அதுக்காக வாழ வழி இல்லாம உங்க கிட்ட வந்தவங்களை அப்படியே திரும்பி அனுப்பினா உங்களால நிம்மதியா இருக்க முடியும்னு தோணுதா?.. அவங்க செஞ்சதை நீங்க அவங்களுக்கு திருப்பி செய்ய போறீங்களா.. இதுக்கு மேல உங்களை வற்புறுத்த விரும்பல.. நீங்களே முடிவு பண்ணுங்க".. என்று சாமர்த்தியமாக பந்தை அவன் புறம் தள்ள விடாக்கண்டன் அல்லவா அவன்.. பணத்தோடு சேர்த்து ஈகோவும் அதிகமாக அவனிடம்..

"நீ வற்புறுத்தினாலும் அவங்களுக்காக நான் எதுவும் செய்யப் போறதில்லை.. போக்கிடம் இல்லாத பட்சத்துல அவங்க இங்க தங்கிக்கட்டும்.. ஆனா என் கண்ணுல படக்கூடாது.. சீக்கிரம் அவங்க தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிட்டு வா.. ஐ நீட் யூ ரைட் நவ்.. அப்புறம்.. தேவையில்லாம என் பர்சனல்ல இன்டர்ஃபியர் ஆகுற வேலையெல்லாம் வேண்டாம்.. இதோ இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனமும் இனிமே ட்ரை பண்ணாதே.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. உன் லிமிட்ல நின்னுக்கோ.. என் படுக்கையை தவிர எந்த இடத்திலும் உனக்கு உரிமை கிடையாது.. புரிஞ்சுதா".. என்று அவள் தாடையை வலிக்கப் பற்றி முரட்டுத்தனமாக இதழில் முத்தமிட்டான் ஹரிஷ்..

இதுவரை அவள் வார்த்தைகளை அமைதியாக கேட்டு.. அவள் வேண்டுதல்களுக்கு அடிபணிந்து.. அவள் விருப்பத்தை நிறைவேற்றிய அவன் மனதிற்கு பூசிக்கொள்ளும் மருந்து இந்த சுடுச் சொற்கள்.. ஆனால் பாவம் மதிதான் ரணப்பட்டு போனாள்..

"நீ அறுவையா அறிவுரை சொன்னதால நான் ஓகே சொல்லல.. எனக்கும் மனசு இருக்கு.. நான் இந்த உலகத்துக்கு வர காரணமானவங்க அவங்க.. அவங்களுக்கு எந்த கடமைகளையும் செய்ய எனக்கு விருப்பமில்லைனாலும்.. அப்படியே விடவும் என் மனசு இடம் தரல.. அதுக்காக மட்டுமே ஒத்துக்கிறேன்".. என்று கரடுமுரடாக சொல்லவும் அவள் இதழோரம் ஒரு புன்முறுவல்.. அவன் நினைத்திருந்தால் அன்னையையும் தங்கைகளையும்.. அவனுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பங்களா வீடு அல்லது கெஸ்ட் ஹவுஸில் கண்ணுக்கு மறைவாக தங்க வைத்திருக்கலாம்.. இலை மறை காயாக அவனுள் ஒளிந்திருக்கும் பாசம்தான் அவர்களை தன் கண்பார்வையில் தங்க வைக்க காரணம்.. இவர்களின் நடுவே உள்ள பிணக்குகள் மறைந்து ஹரிஷ் சீக்கிரம் அவன் சொந்தங்களுடன் சேர வேண்டும் என்று சுயநலமில்லா பேராசை கொண்டாள் மதி.. அதேநேரம் நீ இவ்வளவுதான் என்று அவன் தள்ளி நிறுத்திய விதமும்.. பேசிய வார்த்தைகளும் அவை நெஞ்சத்தை நெருஞ்சி முள்ளாய் வதைத்தது..

காதலியாக தான் மீட்டுக் கொடுக்காத தன்னவனின் சந்தோஷத்தை தாய்ப்பாசமும் சகோதரப் பாசமும் கொடுக்கும் என நம்பினாள் மதி..

ஆனால் அவளே அவன் ஜீவநாதம் என்பதையும் அவளின்றி அவன் உலகத்தில் அணுவும் அசையாது என்பதையும் இருவரும் உணராது போனதே பரிதாபம்.. வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தி தான் அனுபவித்த தனிமையை மன அழுத்தத்தை அவளுக்கு கடத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

சாருவின் இடத்தில் மதியை பொருத்திப் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்..

கட்டில் சுகம் மட்டுமே மன அமைதிக்கான மருந்து என்றால் அவன் தேவை விலைமகளிடம் தீர்ந்து போயிருக்கும்.. தேடிப்பிடித்து மதியின் மடியின் தேட வேண்டிய அவசியம் என்னவோ.. அவன் உள்ளத்தில் மதியின் மீது கொண்ட காதலை உணரும் முன் மதி உள்ளம் சிதைந்து போவாள் என்பது உண்மை..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
May 26, 2023
Messages
11
"சார் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்".. அவன் கருவிழிகளுக்குள் கலந்து அவள் பேசிய விதம் ஹரிஷின் சீற்றம் கொண்ட நெஞ்சினை அமைதிப்படுத்துவதாய்.. கோபம் கொள்ள முயன்று தோற்றது ஆண்மை..

ஆனாலும் தனக்கு எப்பேர்பட்ட அநீதிகளை இழைத்து விட்டு எதுவும் அறியாதவர் போல் கண்முன்
நிற்பவர்களை காண காண ஜீரணிக்கவே முடியவில்லை.. "நான் எங்கேயும் வரல.. அவங்களை முதல்ல வெளியே போக சொல்லு.. அவங்க முகத்தை பார்க்க கூட நான் விரும்பல".. பற்களை கடித்து.. ஆக்ரோஷமாக கத்தினான் ஹரிஷ்..

அவன் ஆங்காரத்திலும் கோபத்திலும்.. மூன்று பெண்களும் அச்சத்துடன் நடுங்க.. "வேண்டாம்மா நாங்க போயிடறோம்".. என்று கல்யாணி முன்னெடுத்து வைத்த குரலில் தன்னிச்சையாக அவன் பார்வை தாயின் மீது உணர்ச்சியின்றி படிந்து மீண்டது..

மதி ஒரு முறை அவர்களைப் பார்த்தவள்.. "ஹரிஷ் ப்ளீஸ் என்கூட வாங்க".. என்று அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் தங்கள் அறைக்கு..

"ஏய்.. என்ன பண்றே.. என் கையை விடு" என்று.. கோபத்தில் காச் மூச்சென கத்தினாலும்.. அவள் இழுவிசைக்குட்பட்டு பின்னால் சென்றான் ஆறடி ஆடவன்.. அவள் கையை உதறிவிட்டு சென்றிருக்கலாம்.. அல்லது அவளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிருக்கலாம்.. சாவி கொடுத்த பொம்மையாக ஐந்தடி சிலையின் பின்னால் சென்ற காரணங்கள் அவனே அறியான்.. ஒரு சில நேரங்களில் நாம் பிடிவாதமாக இழுத்து வைத்திருக்கும் விஷயங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின் நம்மையறியாமல் வேண்டுகோளில் தளர்ந்து போகும்..

உள்ளே அழைத்து வந்து கதவை சாத்தியவள்.. "ஹரிஷ் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க".. அவன் கோபத்தின் உக்ரம் அறிந்து பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடத்த குரலோடு பேச..

புருவங்களை உயர்த்தி பார்வையால் அவளை ஊடுருவியவனோ.. "சொல்லு" என்றான் மார்நின் குறுக்கே கைகளை கட்டி நிதானமாக..

படபடப்பு கோபத்தை விட இந்த நிதானம் கொஞ்சம் ஆபத்து தான்.. மிக கவனமாக கையாள வேண்டும்.. என்று அச்சத்துடன் எண்ணியபடியே தொண்டையை செருமிக் கொண்டவள்..

"சொல்ல உரிமை இருக்கான்னு தெரியல.. ஆ.. ஆனா அவங்களை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு இருப்பாங்க போல இருக்கு.. இந்த மாதிரி நிலைமையில அவங்கள வெளியே போக சொல்றது தப்பு இல்லையா?.. என்னை இருந்தாலும் உங்களைப் பெத்து வளர்த்த தாய் அவங்க.. அம்மாவை அனாதரவா விடுறது ரொம்ப தப்பு சார்.. தப்போ சரியோ.. அம்மான்னு நீங்க அடையாளம் காட்டவும்.. மகனேனு உரிமையா கூப்பிடவும் உங்களுக்கு பெத்த தாய்ன்னு ஒருத்தங்க இருக்காங்க.. இன்னிக்கு இல்லனாலும்.. என்னைக்காவது ஒரு நாள் உங்க ரெண்டு பேருக்கு இடையே உள்ள கசப்புகள் தீர்ந்திடும்.. ஆனா இந்த உலகத்துல அம்மாவே இல்லாம அன்புக்கு ஏங்கிறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்க கிட்ட போய் கேட்டு பாருங்க சார்.. தாயோட அருமை".. என்று வலி நிறைந்த குரலில் சொல்லவே.. அவன் விழிகள் கூர்மையாக அளவிட்டது அவளை.. அன்பிற்கு ஏங்கும் அந்த விழிகளில் எதையோ தேடினான் ஹரீஷ்.. ஆனாலும் அவனை சுற்றி பிடிவாதமாக போட்டுக் கொண்ட வளையம் வெளியே வரவிடாமல் தடுக்கவே..

"ஓஹ்.. பிளடி சென்டிமென்ட்ஸ் பத்தி சொல்லி என் மனசை மாற்றலாம்னு பாக்குறியா".. ஒற்றைப் புருவம் உயர்த்தி இகழ்ச்சியாக இதழ் வளைத்தான்..

"இல்ல சார்.. உங்களுக்கும் சென்டிமெண்ட்ஸ் உண்டு.. நீங்க ஒண்ணும் கல் இல்லை.. சாருமதியை கொஞ்சம் கூட மறக்காத நீங்க.. நிச்சயம் உங்க அம்மாவை முழுசா வெறுத்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு சொல்லுது".. என்றாள் உறுதியாக..

"ஹேய்.. என் சாருவை அவங்க கூட ஒப்பிடாதே.. அவளைப் பற்றி பேச உனக்கு கூட எந்த தகுதியும் இல்லை".. உலைக்கலனாய் கொதித்தான் அவன்..

"நான் எதுவும் தப்பா சொல்லல சார்.. ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது அவங்க அருமை தெரியறதில்ல.. அவங்களோட அன்பும் பாசமும் நமக்கு புரியறதே இல்லை.. அவங்களை மன்னிக்க தயங்குறோம்.. அவங்க அன்பை புரிஞ்சுக்க மறுக்குறோம்.. அதை அவங்க உயிரோடு இல்லனா.. அவங்களையே நினைச்சு ஏங்கி மறுகுகிறதுதான் மனித வாழ்க்கை.. சாருவை இழந்த உங்களுக்கு உறவுகளின் முக்கியத்துவம் நல்லா தெரிஞ்சிருக்கும்.. அடைக்கலம் தேடி வந்தவங்கள இப்படி எட்டி உதைக்கிறது சரியில்ல சார்.. எல்லாம் தெரிஞ்சவர் நீங்க.. நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.. பெத்த அம்மாவை கலந்து விடுவது சரியா சொல்லுங்க".. அவள் கேட்க..

"ஓஹோ.. அப்போ பெத்த மகனை கதற விடலாமா.. தனிமையில தவிக்க விடலாமா".. இதழ்கள் துடிக்க தொண்டை விடைக்க கேட்டவனை விழிவிரித்து பார்த்தாள் மதி..

"என்ன கேட்டே.. அம்மாவை அனாதரவா விடுறது தப்பா?.. அம்மான்னா என்ன அர்த்தம் தெரியுமா.. பெத்த குழந்தைய ஈ எறும்பு கூட கடிக்காம பாதுகாக்குறவதான் தாய்.. அவன் கண்ணில் தூசி பட்டாலும் துடிக்கிறவதான் தாய்.. அடுத்தவனை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறவளை.. ரத்த காயங்களோட மகன் துடிதுடிச்சு கெடக்கறதை தூர நின்னு ரசிச்சு பார்க்கிறவளை எப்படி தாயின்னு சொல்ல முடியும் ஹான்" .. சிவந்து நின்ற கண்கள் கலங்கி துடிக்க கேட்டவனை... பதிலற்று வெறித்தாள் மதி..

"நீ அடிக்கடி கேட்பியே இந்த தழும்புகள் உங்க முதுகில் எப்படி வந்ததுன்னு.. இதெல்லாம் எங்க அம்மாவோட புருஷன் எனக்கு பரிசா கொடுத்தது".. என்று ஹரிஷ் விரக்தியுடன் சொல்லவும் திகைத்துப் போனாள் மதி..

"எங்க அப்பா இறந்த ஒரு மாசத்துல.. எங்க அம்மா ஆசைப்பட்டவனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க"..

"அவன் சரியான ரவுடி.. எங்க அம்மாவை அவனுக்கு பிடிக்கும் ஆனால் இன்னொருத்தனுக்கு பிறந்த என்னை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. நேரம் காலம் இல்லாம அந்த ஆளும் எங்க அம்மாவும் கொஞ்சுறதை பார்க்க பார்க்க எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா.. ஒரு சின்ன பையன் அந்த வயசுல எதையெல்லாம் பார்க்க கூடாதோ அதையெல்லாம் நான் பார்த்திருக்கேன் மதி.. என்றான் வலி நிறைந்த விழிகளுடன்..

"ஒயின் ஷாப்ல சரக்கு வாங்கிட்டு வர சொல்லுவான்.. நான் மறுத்தா பெல்ட்டால என்னை அடிப்பான்.. சிகரெட் வாங்கிட்டு வர சொல்லுவான்.. முடியாதுன்னு சொன்னா அந்த சிகரெட்டால எனக்கு சூடு வைப்பான்.. நான் படிக்கிறதை பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது.. தினம் தினம் அடி உதை.. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரவே பயமா இருக்கும் மதி.. நான் வீட்டுக்கு வர ஒரே காரணம் எங்க அம்மா மட்டும்தான்.. ஆனா எங்க அப்பா இறந்த பிறகு அவங்க கூட என் மேல பாசமா நடந்துக்கிட்டதே இல்லை.. அவங்களும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. எந்த தப்பும் செய்யாம ஏன் இப்படி அம்மா என்னை வெறுக்கிறாங்கன்னு தெரியாம தினம் தினம் அழுவேன்"..

"அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க பிறந்தபிறகு என் அம்மாவுக்கு நான் அன்னியமாகிட்டேன்.. என் அப்பாவை பெத்தவங்களும் சரி.. அம்மாவை பெத்தவங்களும் சரி.. என் அம்மா செஞ்ச காரியத்தால என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க"..

"தனிமையில அழுவேன்.. பயப்படுவேன்.. அம்மாவை தேடுவேன்.. என் அழுகை கூட அவங்க சந்தோஷத்துக்கு தொந்தரவாம்.. மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பான்.. அவன் முன்னாடி நான் சாப்பிட கூட முடியாது.. தட்டை காலால எட்டி உதைச்சிட்டு போவான்.. மண்ல விழுந்த சாப்பாட்டை சாப்பிட சொல்லுவான்.. எத்தனை நாள் பசியில அந்த மண் சோத்தை தின்னுருக்கேன் தெரியுமா.. பாத்து ரசிச்சாடி என்னை பெத்தவ.. அவனுக்கு பிறந்த அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் கூட எங்கம்மா என்கிட்டே பேசவிடாது".. அவன் சொல்ல சொல்ல நெஞ்சம் கனத்து மூச்சுக்கு திணறினாள் மதி..

"அப்படி ஒரு கொடுமையான நேரத்துல என் வாழ்க்கையில வந்தவதான் என் சாருமதி.. என் பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு.. இடிஞ்சு விழப்போற கட்டிடமா இருந்த என் வாழ்க்கையில கிடைச்ச ஒரே பிடிமானம்".. சொல்லும்போதே அவன் அழுத விழிகளில் அப்படி ஒரு பிரகாசத்தை கண்டு கொண்டாள் மதி..

"வீட்டுக்கு தெரியாம எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தருவா.. என் காயங்களுக்கு மருந்து போடுவா.. எனக்காக அழுவா.. அவ்ளோ பிடிக்கும் அவளை.. எனக்காக துடிக்கிற ஒரே ஜீவன்".. என்றவன் அவள் நினைவுகளில் விகசித்தான்.. "யாருமே இல்லாத எனக்கு அவளே சகலமும் ஆகிப் போனா மதி.. எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. ஆனா அவ.. என்னை ஏத்துக்கிட்டா.. அன்பு காட்டினா.. அரவணைச்சா.. காதலிச்சா.. இப்போ மொத்தமா விட்டுட்டு போய்ட்டா".. குரல் கமற.. தொண்டைக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவன் இரு கைகளால் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.. கீழுதட்டால் வறண்ட நாவை வருட.. அவன் விழிகளோ செக்கச் சிவந்து இரத்த பந்துகளாய் உருண்டது..

மதி அவன் கடந்த கால கசப்புகளில் இதயம் கசங்கி மிகுந்த வேதனை கொண்டாள்.. நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்கள்.. மாற்றாந்தகப்பனால் அவன் அடைந்த கொடுமைகளை ஜீரணிக்கவே முடியாவளுக்கோ அவனை அள்ளி அணைத்து மடி மீது சாய்த்துக் கொள்ளத்தான் தோன்றியது.. ஆனால் எங்கே சுற்றினாலும் சாருவிடம் வந்து முடிக்கும் அவன் காதல் கொண்ட மனம் அவளை சற்று பயமுறுத்தியது..

மீண்டும் சாருவின் இழப்பில் மூழ்கி மூர்க்கனாகி விட்டால் அவனை தேற்றுவது கடினம்.. இப்போதைக்கு அவனை திசைதிருப்பி வந்தவர்களை வாழ வைக்கத்தான் ஒரு வழியை கண்டு பிடிக்க வேண்டும்..

பழைய நூல் சேலையும் கசங்கிய தலையும் வாழ்க்கையில் அடிபட்டு போராடிக் களைத்த அவர்களின் முகம் பார்க்க.. ஹரிஷ் சொன்ன கசப்பான சம்பவங்களுடன் அந்த பாவப்பட்ட ஏழைத் தாயை பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.. இதயத்தினுள் ஏதோ இனம்புரியாத இரக்கம் பிறந்தது அவர்கள் மேல்.. ஆனாலும் ஹரிஷ் நிலையிலாருந்து யோசித்தால் அவன் வெறுப்பது சரிதானே.. அவன் மனதை இளக்கி.. அவர்களுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் உறுதியாக முடிவெடுத்தாள்..

அவன் எண்ணங்கள் சாருவை நோக்கி செல்வதற்கு முன்.. மெல்ல நெருங்கி நெஞ்சோடு சாய்ந்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிட்டவள்.. "என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது.. அதுக்காக வாழ வழி இல்லாம உங்க கிட்ட வந்தவங்களை அப்படியே திரும்பி அனுப்பினா உங்களால நிம்மதியா இருக்க முடியும்னு தோணுதா?.. அவங்க செஞ்சதை நீங்க அவங்களுக்கு திருப்பி செய்ய போறீங்களா.. இதுக்கு மேல உங்களை வற்புறுத்த விரும்பல.. நீங்களே முடிவு பண்ணுங்க".. என்று சாமர்த்தியமாக பந்தை அவன் புறம் தள்ள விடாக்கண்டன் அல்லவா அவன்....

"நீ வற்புறுத்தினாலும் அவங்களுக்காக நான் எதுவும் செய்யப் போறதில்லை.. போக்கிடம் இல்லாத பட்சத்துல அவங்க இங்க தங்கிக்கட்டும்.. ஆனா என் கண்ணுல படக்கூடாது.. சீக்கிரம் அவங்க தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிட்டு வா.. ஐ நீட் யூ ரைட் நவ்.. அப்புறம்.. தேவையில்லாம என் பர்சனல் இன்டர்ஃபியர் ஆகுற வேலையெல்லாம் வேண்டாம்.. இதோ இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனமும் இனிமே ட்ரை பண்ணாதே.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. உன் லிமிட்ல நின்னுக்கோ.. என் படுக்கையை தவிர எந்த இடத்திலும் உனக்கு உரிமை கிடையாது.. புரிஞ்சுதா".. என்று அவள் தாடையை வலிக்கப் பற்றி முரட்டுத்தனமாக முத்தமிட்டான் ஹரிஷ்..

இதுவரை அவள் வார்த்தைகளை அமைதியாக கேட்டு.. அவள் வேண்டுதல்களுக்கு அடிபணிந்து.. அவள் விருப்பத்தை நிறைவேற்றிய அவன் மனதிற்கு பூசிக்கொள்ளும் மருந்து இந்த சுடுச் சொற்கள்.. ஆனால் பாவம் மதிதான் ரணப்பட்டு போனாள்..

"நீ சொன்னதுனால நான் ஓகே சொல்லல.. எனக்கும் மனசு இருக்கு.. நான் இந்த உலகத்துக்கு வர காரணமானவங்க அவங்க.. அவங்களுக்கு எந்த கடமைகளையும் செய்ய எனக்கு விருப்பமில்லைனாலும்.. அப்படியே விடவும் என் மனசு இடம் தரல".. என்று கரடுமுரடாக சொல்லவும் அவள் இதழோரம் ஒரு புன்முறுவல்.. அவன் நினைத்திருந்தால் அன்னையையும் தங்கைகளையும்.. அவனுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பங்களா வீடு அல்லது கெஸ்ட் ஹவுஸில் கண்ணுக்கு மறைவாக தங்க வைத்திருக்கலாம்.. இலை மறை காயாக அவனுள் ஒளிந்திருக்கும் பாசம்தான் அவர்களை தன் கண்பார்வையில் தங்க வைக்க காரணம்.. இவர்களின் நடுவே உள்ள பிணக்குகள் மறைந்து ஹரிஷ் சீக்கிரம் அவன் சொந்தங்களுடன் சேர வேண்டும் என்று சுயநலமில்லா பேராசை கொண்டாள் மதி.. அதேநேரம் நீ இவ்வளவுதான் என்று அவன் தள்ளி நிறுத்திய விதமும்.. பேசிய வார்த்தைகளும் அவை நெஞ்சத்தை வதைத்தது..

காதலியாக தான் மீட்டுக் கொடுக்காத தன்னவனின் சந்தோஷத்தை தாய்ப்பாசமும் சகோதரப் பாசமும் கொடுக்கும் என நம்பினாள் மதி..

ஆனால் அவளே அவன் ஜீவநாதம் என்பதையும் அவளின்றி அவன் உலகத்தில் அணுவும் அசையாது என்பதை இருவரும் உணராது போனதே பரிதாபம்.. வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தி தான் அனுபவித்த தனிமையை மன அழுத்தத்தை அவளுக்கு கடத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

சாருவின் இடத்தில் மதியை பொருத்திப் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்..

கட்டில் மட்டுமே மன அமைதி போக்கும் என்றால் அவன் தேவை விலைமகளிடம் தீர்ந்து போயிருக்கும்.. தேடிப்பிடித்து மதியின் மடி தேட வேண்டிய அவசியம் என்னவோ.. அவன் உள்ளத்தில் மதியின் மீது கொண்ட காதலை உணரும் முன் மதி உள்ளம் சிதைந்து போவாள்..

தொடரும்..
Nice semma super
 
New member
Joined
Mar 25, 2023
Messages
14
Dai mango seed nee avala love panra da butter... Epo tha puriya poguthu... Un mara mandaikku purium pothu writter unga rendu perukkum naduvula oru china wall katti vachirum... Nee Ava loveu kaga emmbi emmbi kuthikka pora
 
  • Like
Reactions: SSV
Member
Joined
Feb 20, 2023
Messages
36
மதியை வார்த்தையாலேயே கொல்லுறான். அவ உயிருக்குயிரான காதல புரிஞ்சுக்கல ஹரிஷ்
 
New member
Joined
Jul 4, 2023
Messages
5
Не могу поменять пароль ??
Может мне создать новый логин и пароль?
Прошу помочь.
Спасибо.
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
129
"சார் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்".. அவன் கருவிழிகளுக்குள் கலந்து அவள் பேசிய விதம் ஹரிஷின் சீற்றம் கொண்ட நெஞ்சினை அமைதிப்படுத்தியிருக்கவே.. கோபம் கொள்ள முயன்று தோற்றது ஆண்மை..

ஆனாலும் தனக்கு எப்பேர்பட்ட அநீதிகளை இழைத்து விட்டு எதுவும் அறியாதவர் போல் கண்முன்
நிற்பவர்களை காண காண ஜீரணிக்கவே முடியவில்லை.. "நான் எங்கேயும் வரல.. அவங்களை முதல்ல வெளியே போக சொல்லு.. அவங்க முகத்தை பார்க்க கூட நான் விரும்பல".. பற்களை கடித்து.. ஆக்ரோஷமாக கத்தினான் ஹரிஷ்..

அவன் ஆங்காரத்திலும் கோபத்திலும்.. மூன்று பெண்களும் அச்சத்துடன் நடுங்க.. "வேண்டாம்மா நாங்க போயிடறோம்".. என்று கல்யாணி முன்னெடுத்து வைத்த குரலில் தன்னிச்சையாக அவன் பார்வை தாயின் மீது உணர்ச்சியின்றி படிந்து மீண்டது..

மதி ஒரு முறை அவர்களைப் பார்த்தவள்.. "ஹரிஷ் ப்ளீஸ் என்கூட வாங்க".. என்று அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் தங்கள் அறைக்கு..

"ஏய்.. என்ன பண்றே.. என் கையை விடு" என்று.. கோபத்தில் காச் மூச்சென கத்தினாலும்.. அவள் இழுவிசைக்குட்பட்டு பின்னால் சென்றான் ஆறடி ஆடவன்.. அவள் கையை உதறிவிட்டு சென்றிருக்கலாம்.. அல்லது அவளையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிருக்கலாம்.. சாவி கொடுத்த பொம்மையாக ஐந்தடி சிலையின் பின்னால் அமைதியாக சென்ற காரணங்கள் அவனே அறியான்.. ஒரு சில நேரங்களில் நாம் பிடிவாதமாக இழுத்து வைத்திருக்கும் விஷயங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின் வேண்டுகோளில் நம்மையறியாமல் தளர்ந்து போகும்..

உள்ளே அழைத்து வந்து கதவை சாத்தியவள்.. "ஹரிஷ் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க".. அவன் கோபத்தின் உக்கிரம் அறிந்து பயந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடத்த குரலோடு ஆரம்பித்தாள்..

புருவங்களை உயர்த்தி பார்வையால் அவளை ஊடுருவியவனோ.. "சொல்லு" என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டி நிதானமாக..

படபடப்பு.. கோபத்தை விட இந்த நிதானம் கொஞ்சம் ஆபத்து தான்.. மிக கவனமாக கையாள வேண்டும்.. என்று அச்சத்துடன் எண்ணியபடியே தொண்டையை செருமிக் கொண்டவள்..

"சொல்ல உரிமை இருக்கான்னு தெரியல.. ஆ.. ஆனா அவங்களை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.. வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு இருப்பாங்க போல இருக்கு.. இந்த மாதிரி நிலைமையில அவங்கள வெளியே போக சொல்றது தப்பு இல்லையா?.. என்ன இருந்தாலும் உங்களைப் பெத்து வளர்த்த தாய் அவங்க.. அம்மாவை அனாதரவா விடுறது ரொம்ப தப்பு சார்.. என்று மதி குரல் தழைத்து இறைஞ்சவே.. ஓஹோ.. அப்புறம்.. என்றான் நக்கலாக..

அவனுடைய இந்த பாவனை.. உள்ளுக்குள் கலவரத்தை ஏற்படுத்த ஆழ மூச்செடுத்தவள்..மேற்கொண்டு தொடர்ந்தாள்..

"தப்போ சரியோ.. அம்மான்னு நீங்க அடையாளம் காட்டவும்.. மகனேனு உரிமையா கூப்பிடவும் உங்களுக்கு பெத்த தாய்ன்னு ஒருத்தங்க இருக்காங்க.. இன்னிக்கு இல்லனாலும்.. என்னைக்காவது ஒரு நாள் உங்க ரெண்டு பேருக்கு இடையே உள்ள கசப்புகள் தீர்ந்திடும்.. ஆனா இந்த உலகத்துல அம்மாவே இல்லாம அன்புக்கு ஏங்கிறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்க கிட்ட போய் கேட்டு பாருங்க சார்.. தாயோட அருமை அப்போ புரியும்".. அதற்குமேல் பேச முடியாமல் நிறுத்தியவளை.. அவன் விழிகள் கூர்மையாக அளவிட்டன.. அன்பிற்கு ஏங்கும் அந்த வலி நிறைந்த விழிகளில் எதையோ தேடினான் ஹரீஷ்.. ஆனாலும் அவனை சுற்றி பிடிவாதமாக போட்டுக் கொண்ட வளையம் வெளியே வரவிடாமல் தடுக்கவே..

"ஓஹ்.. பிளடி சென்டிமென்ட்ஸ் பத்தி சொல்லி என் மனசை மாற்றலாம்னு பாக்குறியா".. ஒற்றைப் புருவம் உயர்த்தி இகழ்ச்சியாக இதழ் வளைத்தான்..

"இல்ல சார்.. உங்களுக்கும் சென்டிமெண்ட்ஸ் உண்டு.. நீங்க ஒண்ணும் கல் இல்லை.. சாருமதியை கொஞ்சம் கூட மறக்காத நீங்க.. நிச்சயம் உங்க அம்மாவை முழுசா வெறுத்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு சொல்லுது".. என்றாள் உறுதியாக..

"ஹேய்.. என் சாருவை அவங்க கூட ஒப்பிடாதே.. அவளைப் பற்றி பேச உனக்கு கூட எந்த தகுதியும் இல்லை".. செக்கசிவந்த உலைக்கலனாய் கொதித்தான் அவன்..

"நான் எதுவும் தப்பா சொல்லல சார்.. ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது அவங்க அருமை தெரியறதில்ல.. அவங்களோட அன்பும் பாசமும் நமக்கு புரியறதே இல்லை.. அவங்களை மன்னிக்க தயங்குறோம்.. அவங்க அன்பை புரிஞ்சுக்க மறுக்குறோம்.. அதை அவங்க உயிரோடு இல்லனா.. அவங்களையே நினைச்சு ஏங்கி மறுகுகிறதுதான் மனித வாழ்க்கை.. சாருவை இழந்த உங்களுக்கு உறவுகளின் முக்கியத்துவம் நல்லா தெரிஞ்சிருக்கும்.. அடைக்கலம் தேடி வந்தவங்கள இப்படி எட்டி உதைக்கிறது சரியில்ல சார்.. எல்லாம் தெரிஞ்சவர் நீங்க.. நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.. பெத்த அம்மாவை கலங்க விடறது சரியா சொல்லுங்க".. அவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கேட்க..

"ஓஹோ.. அப்போ பெத்த மகனை கதற விடலாமா.. தனிமையில தவிக்க விடலாமா".. இதழ்கள் துடிக்க தொண்டை விடைக்க கேட்டவனை விழிவிரித்து பார்த்தாள் மதி..

"என்ன கேட்டே.. அம்மாவை அனாதரவா விடுறது தப்பா?.. அம்மான்னா என்ன அர்த்தம் தெரியுமா.. பெத்த குழந்தைய ஈ எறும்பு கூட கடிக்காம பாதுகாக்குறவதான் தாய்.. அவன் கண்ணில் தூசி பட்டாலும் துடிக்கிறவதான் தாய்.. அடுத்தவனை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறவளை.. ரத்த காயங்களோட மகன் துடிதுடிச்சு கெடக்கறதை தூர நின்னு ரசிச்சு பார்க்கிறவளை எப்படி தாயின்னு சொல்ல முடியும் ஹான்?" .. சிவந்து நின்ற கண்களுடன் கேட்டவனை... பதிலற்று வெறித்தாள் மதி..

"நீ அடிக்கடி கேட்பியே இந்த தழும்புகள் உங்க முதுகில் எப்படி வந்ததுன்னு.. இதெல்லாம் எங்க அம்மாவோட புருஷன் எனக்கு பரிசா கொடுத்தது".. என்று ஹரிஷ் விரக்தியுடன் சொல்லவும் திகைத்துப் போனாள் மதி..

"எங்க அப்பா இறந்த ஒரு மாசத்துல.. எங்க அம்மா ஆசைப்பட்டவனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க"..

"அவன் சரியான ரவுடி.. எங்க அம்மாவை அவனுக்கு பிடிக்கும் ஆனால் இன்னொருத்தனுக்கு பிறந்த என்னை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. நேரம் காலம் இல்லாம அந்த ஆளும் எங்க அம்மாவும் கொஞ்சுறதை பார்க்க பார்க்க எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா.. ஒரு சின்ன பையன் அந்த வயசுல எதையெல்லாம் பார்க்க கூடாதோ அதையெல்லாம் நான் பார்த்திருக்கேன் மதி.. என்றான் வலி நிறைந்த விரக்தி புன்னகையுடன்..

"ஒயின் ஷாப்ல சரக்கு வாங்கிட்டு வர சொல்லுவான்.. நான் மறுத்தா பெல்ட்டால என்னை அடிப்பான்.. சிகரெட் வாங்கிட்டு வர சொல்லுவான்.. முடியாதுன்னு சொன்னா அந்த சிகரெட்டால எனக்கு சூடு வைப்பான்.. நான் படிக்கிறதை பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது.. தினம் தினம் அடி உதை.. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரவே பயமா இருக்கும் மதி.. நான் வீட்டுக்கு வர ஒரே காரணம் எங்க அம்மா மட்டும்தான்.. ஆனா எங்க அப்பா இறந்த பிறகு அவங்க கூட என் மேல பாசமா நடந்துக்கிட்டதே இல்லை.. அவங்களும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. எந்த தப்பும் செய்யாம ஏன் இப்படி அம்மா என்னை வெறுக்கிறாங்கன்னு தெரியாம தினம் தினம் அழுவேன்"..

"அவங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க பிறந்தபிறகு என் அம்மாவுக்கு நான் அன்னியமாகிட்டேன்.. என் அப்பாவை பெத்தவங்களும் சரி.. அம்மாவை பெத்தவங்களும் சரி.. என் அம்மா செஞ்ச காரியத்தால என்னை வெறுத்து ஒதுக்கிட்டாங்க"..

"தனிமையில அழுவேன்.. பயப்படுவேன்.. அம்மாவை தேடுவேன்.. என் அழுகை கூட அவங்க சந்தோஷத்துக்கு தொந்தரவாம்.. மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பான்.. அவன் முன்னாடி நான் சாப்பிட கூட முடியாது.. தட்டை காலால எட்டி உதைச்சிட்டு போவான்.. மண்ல விழுந்த சாப்பாட்டை சாப்பிட சொல்லுவான்.. எத்தனை நாள் பசியில அந்த மண் சோத்தை தின்னுருக்கேன் தெரியுமா.. பாத்து ரசிச்சாடி என்னை பெத்தவ.. அவனுக்கு பிறந்த அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் கூட எங்கம்மா என்கிட்டே பேசவிடாது".. அவன் சொல்ல சொல்ல நெஞ்சம் கனத்து மூச்சுக்கு திணறினாள் மதி..

"அப்படி ஒரு கொடுமையான நேரத்துல என் வாழ்க்கையில வந்தவதான் என் சாருமதி.. என் பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு.. இடிஞ்சு விழப்போற கட்டிடமா இருந்த என் வாழ்க்கையில கிடைச்ச ஒரே பிடிமானம்".. சொல்லும்போதே அவன் அழுத விழிகளில் அப்படி ஒரு பிரகாசத்தை கண்டு கொண்டாள் அவள்..

"வீட்டுக்கு தெரியாம எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தருவா.. என் காயங்களுக்கு மருந்து போடுவா.. எனக்காக அழுவா.. அவ்ளோ பிடிக்கும் அவளை.. எனக்காக துடிக்கிற ஒரே ஜீவன்".. என்றவன் அவள் நினைவுகளில் விகசித்தான்.. "யாருமே இல்லாத எனக்கு அவளே சகலமும் ஆகிப் போனா மதி.. எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.. ஆனா அவ.. என்னை ஏத்துக்கிட்டா.. அன்பு காட்டினா.. அரவணைச்சா.. காதலிச்சா.. இப்போ மொத்தமா விட்டுட்டு போய்ட்டா".. குரல் கமற.. தொண்டைக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டவன் இரு கைகளால் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.. கீழுதட்டால் வறண்ட நாவை வருட.. அவன் விழிகளோ செக்கச் சிவந்து இரத்த பந்துகளாய் உருண்டது..

மதி அவன் கடந்த கால கசப்புகளில் இதயம் கசங்கி மிகுந்த வேதனை கொண்டாள்.. நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்கள்.. மாற்றாந்தகப்பனால் அவன் அடைந்த கொடுமைகளை ஜீரணிக்கவே முடியாதவளுக்கோ அவனை அள்ளி அணைத்து மடி மீது சாய்த்துக் கொள்ளத்தான் நெஞ்சம் துடித்தது.. ஆனால் எங்கே சுற்றினாலும் சாருவிடம் வந்து முடிக்கும் அவன் காதல் கொண்ட மனம் அவளை இந்நேரம் பயமுறுத்தியது..

மீண்டும் சாருவின் இழப்பில் மூழ்கி மூர்க்கனாகி விட்டால் அவனை தேற்றுவது கடினம்.. இப்போதைக்கு அவனை திசைதிருப்பி வந்தவர்களை வாழ வைக்கத்தான் ஒரு வழியை கண்டு பிடிக்க வேண்டும்..

பழைய நூல் சேலையும் கசங்கிய தலையும் வாழ்க்கையில் அடிபட்டு போராடிக் களைத்த அவர்களின் முகம் பார்க்க.. ஹரிஷ் சொன்ன கசப்பான சம்பவங்களுடன் அந்த பாவப்பட்ட ஏழைத் தாயை பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.. இதயத்தினுள் ஏதோ இனம்புரியாத இரக்கம் பிறந்தது அவர்கள் மேல்.. ஆனாலும் ஹரிஷ் நிலையிலிருந்து யோசித்தால் அவன் வெறுப்பது சரிதானே.. அவன் மனதை இளக்கி.. அவர்களுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் உறுதியாக முடிவெடுத்தாள்..

அவன் எண்ணங்கள் சாருவை நோக்கி செல்வதற்கு முன்.. மெல்ல நெருங்கி நெஞ்சோடு சாய்ந்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிட்டதும் கண்கள் நிறம் மாறி கனிந்ததை காரிகை ஏனோ உணரவில்லை.. "என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது.. அதுக்காக வாழ வழி இல்லாம உங்க கிட்ட வந்தவங்களை அப்படியே திரும்பி அனுப்பினா உங்களால நிம்மதியா இருக்க முடியும்னு தோணுதா?.. அவங்க செஞ்சதை நீங்க அவங்களுக்கு திருப்பி செய்ய போறீங்களா.. இதுக்கு மேல உங்களை வற்புறுத்த விரும்பல.. நீங்களே முடிவு பண்ணுங்க".. என்று சாமர்த்தியமாக பந்தை அவன் புறம் தள்ள விடாக்கண்டன் அல்லவா அவன்.. பணத்தோடு சேர்த்து ஈகோவும் அதிகமாக அவனிடம்..

"நீ வற்புறுத்தினாலும் அவங்களுக்காக நான் எதுவும் செய்யப் போறதில்லை.. போக்கிடம் இல்லாத பட்சத்துல அவங்க இங்க தங்கிக்கட்டும்.. ஆனா என் கண்ணுல படக்கூடாது.. சீக்கிரம் அவங்க தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிட்டு வா.. ஐ நீட் யூ ரைட் நவ்.. அப்புறம்.. தேவையில்லாம என் பர்சனல்ல இன்டர்ஃபியர் ஆகுற வேலையெல்லாம் வேண்டாம்.. இதோ இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனமும் இனிமே ட்ரை பண்ணாதே.. எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. உன் லிமிட்ல நின்னுக்கோ.. என் படுக்கையை தவிர எந்த இடத்திலும் உனக்கு உரிமை கிடையாது.. புரிஞ்சுதா".. என்று அவள் தாடையை வலிக்கப் பற்றி முரட்டுத்தனமாக இதழில் முத்தமிட்டான் ஹரிஷ்..

இதுவரை அவள் வார்த்தைகளை அமைதியாக கேட்டு.. அவள் வேண்டுதல்களுக்கு அடிபணிந்து.. அவள் விருப்பத்தை நிறைவேற்றிய அவன் மனதிற்கு பூசிக்கொள்ளும் மருந்து இந்த சுடுச் சொற்கள்.. ஆனால் பாவம் மதிதான் ரணப்பட்டு போனாள்..

"நீ அறுவையா அறிவுரை சொன்னதால நான் ஓகே சொல்லல.. எனக்கும் மனசு இருக்கு.. நான் இந்த உலகத்துக்கு வர காரணமானவங்க அவங்க.. அவங்களுக்கு எந்த கடமைகளையும் செய்ய எனக்கு விருப்பமில்லைனாலும்.. அப்படியே விடவும் என் மனசு இடம் தரல.. அதுக்காக மட்டுமே ஒத்துக்கிறேன்".. என்று கரடுமுரடாக சொல்லவும் அவள் இதழோரம் ஒரு புன்முறுவல்.. அவன் நினைத்திருந்தால் அன்னையையும் தங்கைகளையும்.. அவனுக்கு சொந்தமான ஏதேனும் ஒரு பங்களா வீடு அல்லது கெஸ்ட் ஹவுஸில் கண்ணுக்கு மறைவாக தங்க வைத்திருக்கலாம்.. இலை மறை காயாக அவனுள் ஒளிந்திருக்கும் பாசம்தான் அவர்களை தன் கண்பார்வையில் தங்க வைக்க காரணம்.. இவர்களின் நடுவே உள்ள பிணக்குகள் மறைந்து ஹரிஷ் சீக்கிரம் அவன் சொந்தங்களுடன் சேர வேண்டும் என்று சுயநலமில்லா பேராசை கொண்டாள் மதி.. அதேநேரம் நீ இவ்வளவுதான் என்று அவன் தள்ளி நிறுத்திய விதமும்.. பேசிய வார்த்தைகளும் அவை நெஞ்சத்தை நெருஞ்சி முள்ளாய் வதைத்தது..

காதலியாக தான் மீட்டுக் கொடுக்காத தன்னவனின் சந்தோஷத்தை தாய்ப்பாசமும் சகோதரப் பாசமும் கொடுக்கும் என நம்பினாள் மதி..

ஆனால் அவளே அவன் ஜீவநாதம் என்பதையும் அவளின்றி அவன் உலகத்தில் அணுவும் அசையாது என்பதையும் இருவரும் உணராது போனதே பரிதாபம்.. வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தி தான் அனுபவித்த தனிமையை மன அழுத்தத்தை அவளுக்கு கடத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்..

சாருவின் இடத்தில் மதியை பொருத்திப் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்..

கட்டில் சுகம் மட்டுமே மன அமைதிக்கான மருந்து என்றால் அவன் தேவை விலைமகளிடம் தீர்ந்து போயிருக்கும்.. தேடிப்பிடித்து மதியின் மடியின் தேட வேண்டிய அவசியம் என்னவோ.. அவன் உள்ளத்தில் மதியின் மீது கொண்ட காதலை உணரும் முன் மதி உள்ளம் சிதைந்து போவாள் என்பது உண்மை..

தொடரும்..
❤❤❤❤
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
170
👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Member
Joined
May 10, 2023
Messages
60

pavam
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
172
👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
99

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top