Arjun over speed la pora pa Nee...ஹிருதயாவின் கோலம் கண்டு வெலவெலத்துப் போனவன் "தயாஆஆ".. என்று அலறி வேகமாக சென்று அசைவற்றுக் கிடந்தவளை தொட்டியிலிருந்து தூக்கினான்.. பெண்ணவளின் உடலிலிருந்தும் ஆடையிலிருந்தும் நீர் சொட்ட சொட்ட வெளியே தூக்கி வந்தவன் அவளை கட்டிலில் கிடத்தி கன்னம் தட்டி உலுக்கினான்..
"தயா.. தயா".. அர்ஜுன் சத்தமாக அழைக்க அவளிடமிருந்து எந்த விதமான எதிர்வினையும் இல்லை.. சற்று நிதானித்து அவளை உற்று நோக்கினான்.. மூச்சு விடுவது போல் தெரியவில்லையே.. இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது அவனுக்கு.. என்ன முட்டாள் தனம் இது.. ஏன் இந்த விபரீத முடிவு.. பைத்தியமா இவள்.. மனதுக்குள் வசைபாடிக் கொண்டே தலையைக் கோதியபடி வேகமாக மூச்சை இழுத்து விட்டு அவளைப் பார்த்தான்.. சட்டென மூளையில் தோன்றிய யோசனையுடன் அறையை விட்டு வெளியே வேகமாக சென்றவன் விழிகளால் அவசரமாகத் துலாவி சகுந்தலாவை தேடினான்.. சமையல் கட்டினருகில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.. வேக எட்டுகளை எடுத்து வைத்து ஒரு நொடிக்குள்ளாக அவளை நெருங்கியிருந்தவன் "சகுந்தலா என் கூட வா" என்று அவள் கை பிடித்து உரிமையாக இழுத்துச் செல்ல அவளோடு பேசிக் கொண்டிருந்த வேலைக்கார பெண்ணோ ஆங் என வாயில் கை வைத்து அதிசயமாக பார்த்து நின்றாள் இருவரையும்..
"சார் என்ன ஆச்சு? ஏன் இப்படி இழுத்துட்டு போறீங்க.. என்னை விடுங்க".. அவன் அழுத்தமான பிடிக்குள் சிக்கியிருந்த தன் கரத்தை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள் அவள்.. அவன் எங்கே அதையெல்லாம் கண்டு கொண்டான்.. அறைக்குள் கொண்டு வந்து நிறுத்தி கட்டிலில் கிடந்த ஹிருதயா முன்னே அவளை தள்ளிவிட்டு "என்னன்னு பாரு".. என்றால் அதிகார குரலில்.. ஹிருதயா கிடந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து தான் போனாள் சகுந்தலா.. "என்னாச்சு சார் இவங்களுக்கு".. என்றபடியே அவளை நெருங்கியவள் சற்றும் தாமதிக்காமல் அவள் கரத்தைப் பிடித்து நாடியை பரிசோதித்தாள்.. நெஞ்சினில் தலை வைத்து இதய துடிப்பின் ஓசையை கேட்டாள்..
அர்ஜுன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "என்னாச்சு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையே".. என்றான் பதட்டத்துடன்.. அவள் மீது பிடித்தமில்லை.. அவளோடு வாழ ஆசை இல்லை என்றாலும் சக மனுஷியாக அவளுக்கான அனுதாபம் இது.. ஹிருதயாவின் ஈர உடையும் அவள் கிடந்த கோலமும் அவசரப்பட்டு விபரீதமாக ஏதோ முடிவு எடுத்திருக்கிறாள் என்பதை சகுந்தலாவிற்கு உணர்த்த..
"சார் வாயோட வாய் வச்சு ஊதி அவங்களுக்கு சுவாசம் கொடுங்க".. அவள் உள்ளங்கரத்தை தேய்த்துக் கொண்டே சகுந்தலா சொல்லவும்.. "வாட்".. என்றான் சொன்ன விஷயம் சரியாக காதில் விழாதவன் போல்.. "சார் பேசிட்டு இருக்க நேரமில்லை.. சீக்கிரம் ஃபர்ஸ்ட் ஏட் பண்ணுங்க.. அவங்க ஆபத்துல இருக்காங்க".. அவசரப் படுத்தினாள்.. "என்னால அதெல்லாம் பண்ண முடியாது வேணும்னா நீயே பண்ணு".. என்றான் அவன்..
மனைவி உயிருக்கு போராடும் நேரத்திலும் கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறானே.. என்ன மனிதன் இவன்.. இதற்கு மேல் இவனுடன் தர்க்கம் பண்ண நேரம் இல்லை என்று அவளே ஹிருதயாவின் வாயுடன் வாய் வைத்து தன் சுவாசத்தை வழங்கலானாள்.. உயிரை காப்பாற்றும் முதலுதவி.. ஆதலால் வேறு வழியில்லாமல் பல்லை கடித்து நின்று கொண்டிருந்தான் அர்ஜுன்.. சகுந்தலாவின் இதழ்கள் வேறு இதழுடன் பொருந்துவதில் கொஞ்சமும் விருப்பமில்லை.. பாக்கெட்டில் கை நுழைத்து மூன்றாம் மனிதன் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டு ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.. "சார் அவங்க கை, காலையாவது தேச்சு விடுங்க".. சிடுசிடுத்தாள்.. அருகே வந்து அமர்ந்து ஹிருதயாவில் உள்ளங்கையை சூடு பறக்க தேய்த்து விட்டான் அர்ஜுன்.. காற்றிலிருந்த ஆக்சிஜனை தன் வாயினுள் இழுத்து சேகரித்து மூன்றாவது முறையாக ஹிருதயாவின் இதழுக்குள் செலுத்தும் வேளையிலே இருமியபடியே தன் அசைவை காட்டினாள் அவள்.. சகுந்தலா மூச்சை இழுத்து விட்டு அப்பாடா என்பது போல் விலக.. அர்ஜுனும் பதட்டம் நீங்கி நிம்மதியாக உணர்ந்தான்..
தலையைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்தவளோ அருகே அமர்ந்திருந்த அர்ஜுனை கண்டு.. "அர்ஜுன்ன்ன்" எனக் கதறி அவனை அணைத்துக் கொண்டாள் இறுக்கமாக.. அர்ஜுனால் பட்டென விலக முடியவில்லை.. சங்கடத்துடன் சகுந்தலாவை நோக்க.. அவளும் விழிகளில் பிரதிபலித்த வலியுடன் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. உரிமையானவள் அணைத்து கொள்கிறாள் உனக்கேன் வலிக்கிறது.. என தனக்குள் எழும்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்களைப் பார்க்க இயலாமல் தலையை குனிந்து கொண்டாள் பெண்ணவள்.. அர்ஜுன் அவள் வலியை கண்டு கொண்டான்.. ஹிருதயாவினால் இருவருக்கும் நெருப்பின் மேல் நிற்கும் உணர்வு..
"அர்ஜுன் அர்ஜுன் என்னை விவாகரத்து பண்ணாதீங்க அர்ஜுன்.. எனக்கு நீங்க வேணும்.. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது.. நீங்க இல்லன்னா நான் செத்துருவேன்" என்று கதறி அழுதாள் ஹிருதயா.. அறையில் தாய் தந்தையுடன் பேசியதை கேட்டிருக்கிறாள் என்று யூகித்துக் கொண்டான் அர்ஜுன்.. சகுந்தலாவிற்கோ பேரதிர்ச்சி.. "விவாகரத்தா.. இது என்ன புது கதை.. என்ன நடக்கிறது இவர்களுக்குள்".. என ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் ஹிருதயாவின் அழுகை அவள் மனதை பிசைந்தது.. இவ்வளவு அன்பு கொண்ட மனைவியை விவாகரத்து செய்ய எப்படி தான் மனசு வருகிறதோ.. அர்ஜுன் மேல் தேவையில்லாமல் கோபம் பொங்கியது.. ஹிருதயா அர்ஜுனை கட்டிக் கொண்டதும் துடித்து வேதனை கொண்ட அதே இதயம் தான் இப்போது அவளுக்காக வருத்தப்பட்டது.. அவனுக்கும் அதே நிலை தானே.. ஹிருதயாதான் உன் மனைவி உனக்கு உரிமையானவள் என்று அடித்துப் பேசும் அதே மனம் தானே அவளுடன் இணைய விடாமல் தடுக்கிறது.. ஒரே இதயத்தினுள் இரு வேறு விதமான உணர்வுகள்.. ஒன்று செய் என்று கட்டளை இடுகின்றது.. இன்னொன்று வேண்டாம் என்று தடுக்கிறது..
அர்ஜுன் இப்பொழுது தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.. ஹிருதயா எந்த பக்கமும் நகர விடாதபடிக்கு அவனுக்கு செக் வைத்திருந்தாள்..
ஹிருதயாவின் செயல்கள் ஒருபுறம் கோபத்தை வரவழைத்தாலும் மறுபுறம் அவளை பார்க்க பாவமாகவும் இருந்தது.. தனக்காக உயிரை விட துணிந்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அதற்காக பொய்யான வாக்குறுதியை அளித்து மீண்டும் அவள் மனதில் தேவையில்லாத ஆசையை வளர்க்க முடியாது.. ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம்.. இது காதல் இல்லை.. அப்செஷன்.. அர்ஜுனுக்கு அப்படிதான் தோன்றியது.. அதுதான் உண்மையும் கூட.. காலை சுற்றும் பாம்பை போல இம்சிக்கிறாளே.. என்ன வாழ்க்கை இது.. பிடித்தவளுடன் வாழவும் முடியவில்லை பிடிக்காதவளை விட்டு விலகவும் முடியவில்லை.. நொந்து போனான்..
"அ.. அர்ஜுன்.. என்னை விட்டுட மாட்டீங்கதானே.. எனக்கு டிவோர்ஸ் கொடுக்க மாட்டீங்கதானே".. விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவளை பரிதாபமாக பார்த்தாள் சகுந்தலா.. இதற்கு மேல் அங்கே இருப்பது சரியில்லை என்று யோசித்தவள் அடுத்த கணமே அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.. அர்ஜுன் விழிகள் வெளியே சென்றவளை பின்தொடர..
"அர்ஜுன்.. ஐ லவ் யூ அர்ஜுன்.. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்.. ஏன் என்னை உங்களுக்கு பிடிக்கல.. என்னை வெறுத்துடாதீங்க அர்ஜுன்".. அவன் சட்டை காலரைப் பிடித்து கதறி அவன் கவனத்தை தன்பக்கம் திருப்பினாள் ஹிருதயா..
"தயா.. தயா".. என்று அழுத்தமான குரலில் அழைத்தான்.. அப்போதும் விடாது உளறிக் கொண்டிருந்தாள் அவள்.. "தயா".. மூன்றாம் முறை குரலுயர்த்தி அதட்டலுடன் அழைக்க.. மறுகணம் அமைதியானாள் அவள்..
"தயா.. எல்லாமே உன்னோட நல்லதுக்காகதான் பண்றேன்.. புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.. நான் உனக்கு வேணாம்".. நிதானமாக எடுத்துரைத்தான்...
"எது நல்லது எனக்கு விவாகரத்து கொடுக்கிறதா.. அதுக்கு பேசாம என்னை கொன்னு போட்டுடுங்க".. அவள் பெருங்குரலெடுத்து அழ.. ஹிருதயாவை எப்படி கையாளுவதென்றே தெரியவில்லை..
"சரி சரி அழாதே இதை பத்தி பேசுவோம்.. நீ கொஞ்சம் அமைதியா இரு".. அவன் தேற்ற முயன்றான்..
"என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லுங்க அர்ஜுன்.. எனக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க".. அவள் கையை நீடடி சத்தியம் கேட்க.. நீட்டியிருந்த கரத்தையும் முகத்தையும் மாறி மாறி பார்த்தவன் "நான்தான் சொல்றேன்ல.. இதைப் பத்தி பேசுவோம்னு.. அதுக்கு முன்னாடி என்கிட்ட எந்த வாக்குறுதியும் எதிர்பார்க்காதே.. உன்னோட அன்பும் காதலும் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்.. இப்படி என் மனநிம்மதியை பறிக்கக் கூடாது.. இன்னொரு வாட்டி இந்த மாதிரி முட்டாள்த்தனமா முடிவெடுத்தே நேரா கூட்டிட்டு போய் உங்க அம்மா வீட்டுல விட்டுருவேன்.. மறுபடி இந்த வீட்ல நீ காலெடுத்து வைக்கவே முடியாது".. அவன் பலமான குரலில் மிரட்ட.. இருதயம் ஆட்டம் கண்டது அவளுக்கு.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் காரியமே கெட்டுவிடும் அல்லவா.. இப்போதைக்கு இது போதும்.. பேசுவோம் என்று சொல்லியிருக்கிறானே.. பார்ப்போம்.. விவாகரத்து விவகாரத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.. ஆனாலும் அந்த சகுந்தலாவின் முன் அர்ஜுனிடம் கெஞ்சுவது போல் ஆகிவிட்டதே.. போயும் போயும் முதலுதவி செய்ய அவளையா அழைத்து வர வேண்டும் இந்த அர்ஜுன்.. இருந்தாலும் பரவாயில்லை.. இதுவும் நல்லதுக்கு தான்.. என்னுடைய நடிப்பை முழுமையாக நம்பியிருப்பாள்.. அர்ஜுனை நான் எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை என் தற்கொலை முயற்சி மூலம் தெரிந்து கொண்டிருப்பாள்.. அர்ஜுன் எனக்கானவன் என்பதை உணர்ந்து கொண்டிருப்பாள்.. இனி தெரியாமல் கூட எனக்கும் அர்ஜுனுக்கும் இடையில் வர மாட்டாள்..
"தயா.. என்ன யோசிச்சிட்டு இருக்க நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல".. அவன் அடிக்குரலில் சீறினான்..
"ஹான்".. என்னை விழித்தவள்.. "நீங்க என்னை விட்டு போகாத வரைக்கும் நான் இந்த மாதிரி முடிவெல்லாம் எடுக்க மாட்டேன் அர்ஜுன்".. வார்த்தைகளை கவனமாக கையாண்டாள்.. இடுப்பில் கை வைத்து உதட்டை குவித்து உஃப் என ஊதியவன் தலையை உலுக்கியபடி அங்கிருந்து சென்று விட்டான்..
வெளியே வந்தவனை "சார்ர்".. என அழைத்தாள் சகுந்தலா.. அவள் குரலில் நின்றவன் அடுத்தது நீயா? என்ன விஷயம் என்பது போல் பார்க்க.. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் தயக்கத்துடன்..
"பேசு"..
"சார்.. அவங்க பாவம்.. ஏன் அவர்களை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. எவ்வளவு அன்பு வச்சிருந்தா உங்களுக்காக உயிரையே தியாகம் பண்ண துணிஞ்சிருப்பாங்க.. இந்த மாதிரி ஒரு மனைவி கிடைக்கிறது வரம் சார்.. அவங்கள போய் விவாகரத்து பண்ண நினைக்கிறீங்களே.. இதெல்லாம் ரொம்ப தப்பு சார்.. தேவையில்லாத குப்பைகளை மனசுல இருந்து தூக்கி போட்டுட்டு உங்க மனைவி கூட சந்தோஷமா வாழற வழிய பாருங்க".. சொல்ல வந்த விஷயங்களை மனப்பாடம் செய்தது போல் படபடவென ஒப்பிக்க அவனோ மார்பின் குறுக்கே கையைக் கட்டி அழுத்தமாக பார்த்திருந்தான் அவளை.. தைரியமாக பேசி முடித்தவளுக்கு அவன் பார்வையை எதிர்கொள்ள திராணி இல்லை.. விழிகள் படபடக்க முகத்தை பக்கவாட்டில் திருப்பிக் கொள்ள அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்தவன்.. "குழந்தைக்கு ரொம்ப நேரமா பீட் பண்ணலயா".. என்றான் சம்பந்தமே இல்லாமல்..
"ஆங்" அவள் விழிக்க.. அவனும் கண்களை சற்று தாழ்த்தி மையத்தில் பார்வையை பதித்து என்னவென்று காட்டினான்.. சேலை விலகியிருக்க ஜாக்கெட் நனைந்திருந்தது.. சட்டென திகைத்தவள் சேலையை இழுத்து மாராப்பை மூடி விட்டுக் கொள்ள.. அவனோ புன்முறுவலுடன் தலைசாய்த்து குறுகுறுவென பார்த்திருந்தான் அவளை..
"சார் நீங்க இப்படி எல்லாம் பேசுறது சரியில்ல".. அவள் முகம் இறுகியது..
" நீ என் பர்சனல் விஷயங்கள்ல தலையிடும் போது.. நானும் உன்கிட்ட இப்படி பேசறது தப்பில்லையே.. சரிதானே" அவன் புருவம் உயர்த்தினான்.. தெரியாமல் இவனை நிறுத்தி பேசிவிட்டோமே.. தாமதமாக யோசித்தாள்..
"அவ என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டா".. என்றவன் சுற்றும் மற்றும் பார்த்து ஆட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவள் இதழில் இச் என முத்தம் வைத்தான்.. இரண்டு நொடிகளுக்கும் குறைவான முத்தம் தான்.. ஆனால் அழுத்தமான முத்தம்.. பெண்ணவள் அவன் கொடுத்த எதிர்பாராத முத்தத்தில் அதிர்ந்து போய் நின்றிருக்க.. ஒரு மாதிரியான பார்வையுடன் நாவால் இதழை ஈரப்படுத்திக் கொண்டவன் "நவ் ஐ பீல் பெட்டர்.. போ.. போய் குழந்தைக்கு பால் கொடு".. என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்..
தொடரும்..
Dhaya unnoda Nadippu Vera Levela irukku..athaiyum antha ponnu namputhe...❤️❤️❤️❤️