- Joined
- Jan 10, 2023
- Messages
- 47
- Thread Author
- #1
ஏன்மா.. நீயும் உக்காந்து சாப்பிடேன்.. சைலஜா வின் அன்பான கோரிக்கையை மறுத்த ஹிருதயா.. "இல்லைத்தே.. அவர் சாப்பிட்டு முடிஞ்சதும் நான் சாப்பிட்டுக்கிறேன்".. என்று அர்ஜுனை ஓரக் கண்ணால் பார்க்க.. அவனோ மொபைலில் பார்வையை பதித்து மறுகரத்தால் தோசையைப் பிட்டு விழுங்கிக் கொண்டிருந்தான்.. சலிப்புடன் ஆழ்ந்த மூச்செடுத்தவள் அடுத்த தோசையை அவன் தட்டில் வைத்தாள்..
எப்படிப்பட்ட கருங்கல் மனம் கொண்ட ஆடவனாய் இருந்தாலும் மனைவியின் கவனிப்பும் அளவு கடந்த அன்பும் அவன் மனதை அசைத்துப் பார்க்காமல் போய்விடுமா என்ன?.. எறும்பு ஊற கல் தேயாதா.. விழுந்து விழுந்து கவனிக்கும் மனைவியின் அருகாமையிலும் கூட வெப்பத்தில் தகித்திருக்கும் கடின பாறை போல கனியாத முகம் கொண்டவனை காணுகையில் சைலஜாவிற்கும் சுந்தரத்திற்கும் வியப்பே மிஞ்சுகிறது.. அர்ஜுன் என மனைவி அழைக்கையில் சட்டென முகம் நிமிர்த்தி என்னம்மா.. என உடனடி பதில் தரும் அவன் முகத்தில் தோன்றும் ஏதோ ஒன்று அன்பு பாசம் காதல் கனிவு இது போன்ற எந்த வகையறாக்களிலும் சேராது..
பெற்றோர் இதுபற்றி அவனிடம் பேசாமல் இல்லை..
"அர்ஜுன் அந்தப் பொண்ணு பாவம்டா.. உன் மேல உயிரையே வச்சிருக்கா.. உனக்காக எவ்வளவு மெனக்கெடறா.. உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு பாத்து பாத்து கவனிச்சுக்கறா.. இந்தகாலத்தில மாமனார் மாமியாரை மதிக்க தெரிஞ்சு புருஷனை புரிஞ்சி நடந்துக்கிற பொண்ணு கிடைக்கிறதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. அருமை தெரியாம நடந்துக்கிறியேப்பா.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை கண்ணா.. நாங்க ஒன்னும் இந்த பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உன்னை வற்புறுத்தலையே.. நீதான் இந்த பொண்ணுதான் வேணும்னு விரும்பி அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டே.. இப்போ புடிக்காத மாதிரி நடந்துக்கிறது எந்த விதத்தில் நியாயம் பா".. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து காரிலிருந்து இறங்கிய மகனை வாசலோடு வழிமறித்து நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள் சைலஜா..
சில கணங்கள் அன்னையை ஆழ்ந்து பார்த்தவன் "அவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா".. என்றான் சீரான குரலில்..
"அவ எதுவும் சொல்லல.. சொல்லவும் மாட்டா.. ஆனா அவ ஒன்னும் ஜடமில்லை.. உணர்ச்சியுள்ள ஒரு பொண்ணு.. வெளியே சிரிச்ச மாதிரி காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள மருகித் தவிக்கிறதையும் யாரும் இல்லாதப்ப கண்ணீர் விட்டு அழறதையும் நான் பாத்துட்டுதான் இருக்கேன்.. பெண்பாவம் பொல்லாதது அர்ஜுன்.. அவளை கலங்க விடாதடா".. சைலஜா கண்ணைக் கசக்க.. அன்னையின் கண்ணீரில் முகத்தின் கடுமை சற்றே மாறியது அவனுக்கு..
"அம்மா.. அவகிட்டே சொன்னதுதான் உங்களுக்கும்.. தயவுசெஞ்சு எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க.. என்னால தெளிவா எதையும் யோசிக்க முடியல.. ரொம்ப கன்ஃபியூஸ்டா இருக்கேன்.. நீங்களாவது என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. திரும்பத் திரும்ப இதைப்பத்தி பேசி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க.. இது எங்க வாழ்க்கை நாங்க பார்த்துக்கிறோம்".. என்று கூறிவிட்டு சென்றவனின் முதுகையே வெறித்தாள் சைலஜா.. பிடிக்காத வகுப்பை புறக்கணிக்கும் மாணவன் போல ஹிருதயாவைப் பற்றி பேசுகையில் அவன் முகம் ஒரு அசவுகர்ய நிலையை அடைவதை குறித்துக்கொண்டாள் சைலஜா.. நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.. பேசிப் பேசி களைத்துப் போனதுதான் மிச்சம்.. ஒரு பெண்ணின் கண்ணீரை பார்த்து மனமிறங்காதவன் அறிவுரைகளை கேட்டு மாறிவிடுவானா என்ன..
அறைக்குள் நுழையவும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் கையிலிருந்த லாப்டாப் பையை வாங்கினாள் ஹிருதயா.. தழும்பிய கண்ணீரை மறைக்க அவள் திரும்பிக் கொண்டாலும் அவன் விழிகளிலிருந்து தப்பவில்லை அவள் சோகம்.. ஆயினும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் சட்டையை கழட்டிப் போட்டவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொண்டான்..
வழக்கம்போல இரவு உணவை முடித்துக் கொண்டு தட்டை அவள் கையில் தராமல் படுகவனமாக எடுத்துச் சென்று கழுவி வைத்தான்.. இல்லையேல் அதே தட்டில் அவள் உணவு உண்ணும் பரிதாபம் நிகழும்.. முதல் முறை இதைக் கண்டவன் அடுத்த முறை தட்டையே மாற்றிவிட்டான்.. மாற்றிய தட்டை சாப்பிட்டு முடித்து கையோடு எடுத்துச் சென்று கழுவி விட..
"ஏன் அர்ஜுன்".. என முகம் கறுத்து அவள் வினவினாள்.. "எந்த காலத்தில இருக்கே தயா.. நான் சாப்பிட்ட எச்சில் தட்டிலதான் நீ சாப்பிட்டு உன் அன்பை நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. அனுபவிக்க முடியாத உன் அதிகப்படியான அன்பு எனக்கு எரிச்சலைதான் கொடுக்குது.. என்னை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு பிளீஸ்".. என கொஞ்சம் கடுமையாக கத்திவிட அன்றிலிருந்து அவன் சாப்பிட்ட தட்டில் உணவருந்துவதில்லை.. அதற்கு அவன் அனுமதிப்பதுமில்லை.. ஷுமுதற்கொண்டு மாட்டிவிட முயலும் மனைவியைக் கண்டு உறுத்தல் மேலோங்கியதே தவிர்த்து ஏன் காதலோ பாசமோ வரவில்லை?.. ஏன் என்னால் அவளை நெருங்க முடியவில்லை.. பால்வண்ண அப்சரஸ் ஹிருதயா.. மையல் கொள்ள வைக்கும் அழகு.. பொதுப்படையான ரசனையுடன் கண்டிருக்கிறான்.. அந்தரங்க வேட்கையுடன் ரசித்ததே இல்லை.. அழகிலும் சரி குணத்திலும் சரி ஒரு சதவீதம் கூட எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு அக்மார்க் மனைவியாக அவன் வாழ்வோடு கலந்தவளை ஏன் பிடிக்காமல் போகிறது.. பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது.. பிடித்ததால்தானே திருமணம் செய்தேன்.. ஆனால் ஏன் அவளை மனைவியாக பார்க்க முடியவில்லை..
அதற்காக ஆண்மையற்றவன் என்றும் சொல்ல முடியாது.. தினம் தினம் இரவு.. சிலநேரங்களில் பகலிலும்.. அந்தி மாலையிலும் உள்ளிருந்து கடல் போல் பொங்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அவன் படும் பாட்டை அவனே அறிவான்.. வீறுகொண்டெழும் ஆண்மை ஹிருதயாவை கண்டு கொள்வதே இல்லை.. அவளை மனுஷியாக மதிப்பதே இல்லை.. அதுதானே பிரச்சினை..
"அர்ஜுன் பால்".. வெள்ளிக் கோப்பையை அவனிடம் நீட்டினாள் ஹிரு.. மல்லிச்சரம் சூடி மஞ்சள் புடவையில் அழகுச் சிலையாய் கண்முன் நிற்கும் மனைவியை கண்டு கொள்ளாது கணிணியில் முக்கிய வேலையை செய்து கொண்டும் ஒருபக்கம் ஃபோனில் பேசிக் கொண்டும் பாலை கையில் வாங்கிக் கொண்டான் அவன்..
அர்ஜுன் சொந்தமாக காரின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கிறான்.. சிறியதாக அவன் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் என்று பெரியதாக பல கிளைகளுடன் வளர்ந்து நிற்பது அவனால் மட்டுமே.. பல போட்டி கம்பெனிகளுக்கிடையே முன்னேறி வந்து கொண்டிருக்கும் துடிப்பான இளைஞன் அவன்..
நன்றாகப் படித்தான்.. அப்பாவின் தொழிலை கையில் எடுத்து வெற்றி கரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்.. அவன் வாழ்க்கையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது இந்த திருமணத்தை தவிர.. ஏன் சரியில்லை.. அவனுக்கே அது விடை தெரியாத கேள்வி.. மற்ற ஆண்களைப் போன்று திருமணமே வேண்டாம் என்று மறுக்கவில்லையே நான்.. சரியான வயதில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறோம் என்று அப்பா அம்மா கூறியபோதும் சரி என சம்மதம் சொல்லி நான்தானே ஹிருதயாவை முழு மனதுடன் தேர்ந்தெடுத்தேன்.. திருமணத்திற்கு முன்பு அவளுடன் பேசி பழகி சிரித்த காலங்களை மறக்க முடியுமா.. சில நேரங்களில் அந்தரங்கம் பற்றியும் பேசி சிரித்து சிவந்தது உண்டே.. அப்போது இனித்த விஷயம் இப்போது ஏன் பிடிக்கவில்லை.. இவளோடா நான் அந்தரங்கம் பேசினேன்.. நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா.. என்றுகூட குழம்பினான்..
ஹிருதயா எப்போதும் போல எதையோ எதிர்பார்த்து அவன் முகம் பார்த்தபடி படுத்திருந்தாள்.. பிறகு உறங்கியும் விட்டாள்..
அர்ஜுன் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.. இருவருக்கும் இடையில் சீன பெருஞ்சுவரே எழுப்பி விடலாம் அப்படி ஒரு இடைவெளி..
இதோ அவனை முழுமையாக கொன்று தின்னும் இரவு பொழுது வந்து விட்டது.. இருளின் கொடிய வாசனையைத் தவிர்க்க முழுக்கவனத்துடன் வேலையில் மூழ்கிப் போக நினைத்தான்.. முடியவில்லை.. நேரம் ஆக ஆக வாம்பயர் உருமாறுவது போன்று தேகம் தாபத்தில் கொதித்து உடல் முறுக்கேறியது.. முழு வேகத்தில் ஆண்மை வெடித்து நின்று விளையாட இடம் தேடியது.. அதிக அளவு வயாகராவைக் கொடுத்து ஒருவனை தனியறைக்குள் அடைத்துப் போட்டால் அவன் நிலமை என்னவாக இருக்கும்.. அப்படியாகிப்போனது அவன் நிலை.. கை நடுக்கமெடுக்க.. கட்டிலின் விளிம்பை இறுகப் பற்றிக் கொண்டான்.. கட்டில் உடைந்து விடும் நிலை.. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. இறுகியிருந்த முகம் வேர்த்துக் கொட்ட தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றான்.. உணர்வுகள் அலைகடலாய் ஆர்ப்பரித்தும் அழகு பதுமையாய் பக்கத்தில் கிடந்த மனைவியை திரும்பி கூட பார்க்கவில்லை அவன்..
மனைவி அருகிலிருக்க மயக்கம் தீர்க்க யாரைத் தேடுகிறான்.. காம வாடை இரத்தம் முழுக்க பரவியிருக்க எப்பேற்பட்ட ஆடவனும் தாலிகட்டிய மனைவியிடம் தடுமாறிப் போகும் இந்நேரத்தில் அவன் கண்களுக்கு ஏன் அவள் தெரியாமல் போனாள்.. எழுந்து வெளியே சென்றான்.. வழக்கம்போல கால்கடுக்க நடந்தான்.. பொல்லாக் காமம் அவனை மிச்சமின்றி கொன்று தின்றது.. உணர்ச்சிகளை அடக்க அவன் ஒன்றும் முனி இல்லையே.. அந் நேரத்தில் உரிமையானவளிடம் ஏன் விலகி நிற்கிறான்..
நாகம் சேமிக்கும் விஷம் போல ஒட்டுமொத்த உணர்வுகளை உள்ளே அடக்கி வைத்திருக்கிறான்..
"ஆஆஆ.. என்னால முடியல".. தொண்டை கிழிய கத்தினான்.. சுவற்றில் முஷ்டியால் ஓங்கி குத்தினான்..
"அர்ஜுன்".. மெல்லிய பெண்ணவளின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.. உணர்வுகள் அடங்கி நின்றது.. கண்மண் தெரியாத காமம்தான்.. ஆனாலும் இவளிடம் நிதானிக்க முடிகிறதே..
"என்ன ஆச்சு'.. தேனூறிய இதழை வளைத்தாள்..
"ஒ..ஒண்ணுமில்ல.. நீ போய் தூங்கும்மா".. அபரிமிதமாக வளர்ந்து நின்ற அடங்காப் பிடாரனை மறைக்க முதுகு காட்டி நின்று கொண்டான்..
"அர்ஜுன் ஆர் யூ ஒகே".. அவன் தோள்மீது கைவைத்தாள்..
"போய் தூங்கு தயா"..
"ச.. சரி.. நீங்களும் சீக்கிரம் வந்து தூங்குங்க".. அவள் சென்றுவிட்டாள்.. பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டவன் சோர்வாக அமர்ந்தான்..
நோய்க்கும் பேய்க்கும் இரவில் கொண்டாட்டம் என்பார்கள்.. காமம் எனும் கொடிய பேய் இரவானால் போதும்.. இரக்கமின்றி அவனை பிச்சு தின்கிறதே.. சில நேரங்களில் பகலிலும் எட்டிப் பார்க்கும்.. பெண் மாமிசம் கேட்கும்.. தேகத்துடன் அவள் மனதும் வேண்டும்.. எந்தப் பெண்.. அதுதானே தெரியவில்லை..
காமம் மட்டுல்ல.. ஏகப்பட்ட காதலும் அவன் உள்ளத்தில் கொட்டி கிடக்கின்றது.. சொல்ல முடியாத உணர்வு.. மூளைக்கு அப்பாற்பட்ட சக்தி.. யாரையோ எதிர்பார்த்து ராட்க மிருகமாய் காத்திருக்கும் அவன் காதல் காம உணர்வுகள் ஹிருதயாவை ஏற்றுக் கொள்ள மறுப்பதேன்..
தன்னிலை மறத்தல் காதல்.. சுயம் இழத்தல் காமம்.. இரண்டுமே ஹிருதயாவிடம் வேலைக்காகாது போனது ஏனோ.. காட்டாறு போல அலைகழிக்கும் இந்த உணர்வுகளை வேறு ஆண்மகன் கொண்டிருந்தால் இந்நேரம் மிருகமாய் மாறி எதிரே நிற்கும் பெண்ணை இரக்கமின்றி சிதைத்திருப்பான்.. புசித்திருப்பான்..
நீரும் செம்புலச் சேறும் போல காதலுடன் கலந்த காமம் அவனை நிதானிக்க வைக்கிறது ..
அவனுக்கே அவன் புரியாத புதிர்தான்..
யாரையோ எதிர்பார்த்து அந்த ஒருத்திக்காக அவன் தன் உணர்வுகளை பொத்திப் பாதுகாக்க வில்லை.. ஆனால் காட்டாற்று வெள்ளம் போல அணையை உடைத்துக் கொண்டு பீறிட்டு எழும்பும் ஆசையுடன் கூடிய ஆண்மையை ஹிருதயாவிடம் காண்பிக்க பிடிக்கவில்லை..
அவன் நிலையை வாய்விட்டு விளக்கவும் தெரியாமல் தவித்து நின்றான்.. எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை.. கண்கள் மூடி சோபாவில் சரிந்தான்.. உணவெடுக்காமல் பசியை அடக்குவதை விட கொடுமை உணர்வுகளை அடக்குவது.. அடக்கி வைக்கும் எரிமலை அழுத்தம் தாங்காமல் வெடிக்கும்.. அதுபோலத்தான் அவன் காதல் காம உணர்வுகளும்.. அவனுக்கான உயிரோவியத்தை கண்டு கொள்ளும் வேளையில் மிருகம் விழிக்கும்.. சுயம் இழக்கும்.. சேர்த்து வைத்த பசியை தீர்க்க இரையை வதைக்கும்..
அவன் அறியாத அகம் நிரம்பி வழியும் அளைவில்லாத ஆசைக்கு சொந்தக்காரி யார்?.. ஹிருதயாவா.. அல்லது?..
தொடரும்..

Last edited: