Active member
- Joined
- Nov 20, 2024
- Messages
- 40
அடியே ராட்சசி என்னடி பன்னி வச்சு இருக்க ஆனா நீ மாட்டுன உனக்கு கஞ்சி தான் டி 🙎♀️🙎♀️🙎♀️மதியநேரம் தாண்டி விட்டதால் அந்த உயர்தர ரெஸ்டாரண்டில் அதிக கூட்டம் இல்லை.. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருக்க மூலையில் மறைவாக போடப்பட்டிருந்த டேபிளில் எதிரெதிராக அமர்ந்து பேருக்காக ஆர்டர் செய்திருந்த தேநீரை ஆர்வமே இல்லாமல் சுவைத்துக் கொண்டிருந்தனர் ஆர்னவ்வும் ஹிருதயாவும்..
"இப்ப சொல்லு எதுக்காக என்னை வர சொன்னே" குடித்து முடித்த தேநீர் கோப்பையை கீழே வைத்து விட்டு கேட்டான் ஆர்னவ்..
"அண்ணா அந்த டேப்லெட் என்ன ஆச்சு? வீட்ல இதை பத்தி பேச முடியாது.. அதனால தான் இங்கே வர சொன்னேன்".. என்றாள் அவள் மெல்லிய குரலில்..
"நான் தான் ஒரு வாரம் ஆகும்னு சொன்னேனே அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்" என்று கோபப்பட்டான் ரகசியமான குரலில்..
ஏனெனில் LANSON மருந்துகள் இன்னும் ஆராய்ச்சியின் தொடக்க கட்டத்தில் தான் இருக்கிறது.. இன்னும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்.. அதற்கு முன்னதாக நிர்வாகத்திற்கே தெரியாமல் ஆர்னவ் அதை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்த்தது தெரிய வந்தால் அவன் வேலையை விட்டு தூக்கப்படுவதோடு இனி எங்கேயும் வேலை செய்ய முடியாதபடிக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி போகும்.. சிறை தண்டனையும் நிச்சயம்.. பலருக்கு பணத்திற்காகவும் சோதித்துப் பார்க்கவும் அந்த மருந்துகளை விற்றவன் தங்கைக்கு கொடுத்ததோ பாசத்திற்காக...
"அண்ணா அவசரம் மட்டும் இல்ல அவசியமும் கூட" தயா படபடத்தாள்..
"அப்படி என்ன அவசரம்" புருவம் சுருக்கினான் ஆர்னவ்..
ஆழ்ந்த மூச்செடுத்தவள் அண்ணனை ஏறெடுத்து பார்த்து "அவ வந்துட்டா" என்றாள் இறுகிய குரலில்..
"எவ" என்றவனுக்கோ ஹிருதயா யாரைப் பற்றி பேசுகிறாள் என்றே புரியவில்லை..
"ப்ச்.. சகுந்தலா".. அவள் பெயரை அழுத்தமாக உச்சரித்தாள்..
தூக்கி வாரி போட்டது அவனுக்கு "சகுந்தலாவா".. பதட்டத்தில் தேநீர் கோப்பையை கைதவறி தட்டி விட்டான்..
"எப்படி இது சாத்தியம்" அவன் முகத்தில் கலவரம்..
"எனக்கும் தெரியல.. அத்தையை பார்த்துக்க அர்ஜுனன் அவளை அப்பாயிண்ட் பண்ணியிருக்காரு"..
"அப்ப அர்ஜுனுக்கு?" என்று அவன் இழுக்க..
"இல்லை" என்று தலையசைத்தாள் அவள்..
"மை குட்னஸ்".. பெருமூச்செடுத்து இருக்கையில் தளர்வாக சாய்ந்தான் அவன்..
"உன் மாமனார் அவளை பார்த்தாரா? என்ன சொன்னாரு".. அடுத்த கேள்விதனில் ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தான்..
"அவருக்கும் ஷாக்தான்" தோளை குலுக்கினாள் அவள்..
"சரி இப்ப என்ன பண்ணலாம்.. இந்த மாஸ்டர் டெக்னிக்ஸ் எதுவும் வேண்டாம்.. பேசாம அவளை".. என்று முடிப்பதற்குள் "வேண்டாம்" என அவசரமாக இடைமறித்தாள் அவள்.. "ஏற்கனவே பண்ண வரைக்கும் போதும்.. அந்த பிரச்சனையே இன்னும் தீரல.. புதுசா எதுவும் பண்ணி தேவையில்லாத பிரச்சினையை இழுத்துக்க வேண்டாம்".. என்றாள் நிதானமாக.. அவள் சொல்வதும் சரியாகவே பட்டது ஆரனவ்க்கு.. தேவையில்லாமல் குத்தி கிளறினால் உண்மை வெளிப்பட நிறைய வாய்ப்புண்டு...
"சகுந்தலா ஆக்டிவிட்டீஸ் எப்படி இருக்கு".. ஆர்னவ் கேட்டான்..
"அவன் நார்மலா தான் இருக்கா.. அவளை தெரியாத மாதிரி காட்டிக்க நான் தான் ரொம்ப சிரமப்பட்டேன்".. ஹிருதயா சலித்துக் கொண்டாள்..
"இப்ப எப்படி அவளை சமாளிக்க போற" ஆர்னவ் பதட்டத்துடன் கேட்க அலட்சியமாக சிரித்தாள் அவன் தங்கை.. "அவ ஒரு ஆளு.. அவளை சமாளிக்கிறது என்ன அவ்வளவு கஷ்டமா.. ஆனா அவ திரும்பி வந்ததும் நல்லதா போச்சு.. அவ முன்னாடி அர்ஜுனோட நல்லா வாழ்ந்து காட்டணும்.. அவ தோக்கணும் நான் ஜெயிக்கணும்".. என்றாள் ஒருவித தீவிரத்துடன்..
"ஆனா அர்ஜுனோட நீ வாழ்றதுனால அவளுக்கு என்ன நஷ்டம்.. அவதான் இப்ப பழைய சகுந்தலா இல்லையே.. அவளைப் பொறுத்தவரை நீயும் அர்ஜுனும் யாரோ தானே".. ஆர்னவ் தனது சந்தேகத்தை கேட்க பொருள் விளங்கா புன்னகையொன்றை சிந்தினாள் ஹிருதயா..
"என்னோட லட்சியமே அர்ஜுன் என்னை பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணனும்.. தயா தயான்னு என் பின்னாடி சுத்தணும்.. அவனுக்கு எல்லாமுமா நான் மட்டும்தான் இருக்கணும்.. நானும் அவனும் நிறைய குழந்தைகளை பெத்து சரித்திரத்தில கூட இல்லாத அதீத காதலோட சந்தோஷமா வாழனும்.. இதெல்லாம் நடந்த பிறகு சகுந்தலா பழைய சகுந்தலாவா மாறுவா.. மாத்துவேன்"..
"அப்ப காட்டுவேன் அவளுக்கு நரகத்தை.. அவளோட காதல் எப்பவோ அவ கைய விட்டு போயிடுச்சுன்னு கண்முன்னாடி காட்டுவேன்.. அவளோட உயிர் எனக்கு சொந்தம் ஆயிடுச்சுன்னு கை கொட்டி சிரிப்பேன்.. அர்ஜுன் என்னை உயிருக்கு உயிரா லவ் பண்றதையும் என்னோட ரொமான்ஸ் பண்றதையும் என் குழந்தைகளுக்கு அப்பா ஆனதையும் பார்த்து அவ துடிக்கணும் அழனும்.. மனசு உடைஞ்சு சாகணும்".. வெஞ்சனத்துடன் கழுத்து நரம்புகள் விடைக்க கூறினாள் தயா..
"இதெல்லாம் நடக்கணும்னா அந்த மாத்திரை எனக்கு வேணும்"..
"ஹிரூ நான் சொல்றேன்னு கோபப்படாத.. கிட்டத்தட்ட ஒரு வருஷமா அந்த மருந்தை அவனுக்கு கொடுத்துட்டு இருக்கே.. கண்டிப்பா அந்த மாத்திரை அவன் மூளைக்குள்ளேயும் ஹார்மோன்கள்லையும் பலவித வேதியல் மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கும்.. அப்படியிருந்தும் ஒரு பையன் தன்கூட இருக்கிற பொண்ணுகிட்ட அதுவும் மனைவியா உரிமையா இருக்கறவகிட்ட கட்டுப்பாடாய் இருக்கானா அதுதான் உலக அதிசயம்"..
"அர்ஜுன் இடத்தில வேற எவனாவது இருந்திருந்தா நாம கொடுத்த மருந்தோட அளவுக்கு கண்ல மாட்டற பொண்ணுங்க எல்லாத்தையும் கேனிபல் மாதிரி பிச்சு தின்னுருப்பான்.. ஆனா இவன்?" என்று இழுத்தவன்.. "சம்திங் ராங்" என்று குழப்பத்துடன் யோசனையாக நெற்றியை தேய்த்தான்..
"அப்படியெல்லாம் நீ குழம்பற அளவுக்கு ஒண்ணுமே இல்ல.. நீ எப்படியாவது மருந்தை எடுத்து எனக்கு கொடுத்திடு.. மத்ததை நான் பார்த்துக்கிறேன் இந்த வாட்டி அவன் என்கிட்டேருந்து தப்பிக்கவே முடியாது".. என்றான் திடமாக..
"இன்னும் டூ டேஸ்ல உன் கையில் அந்த மருந்து இருக்கும்.. பீ கேர்ஃபுல் ஹிருதயா.. அவன் ஓவர் டோஸ் எடுத்துக்க ஆரம்பிச்சா.. அது உனக்குதான் ஆபத்து.. அவன் காட்டற காதல் எந்த அளவுக்கு அதிகமாக இருக்குமோ அதை விட காமம் ஒரு பங்கு ஜாஸ்தியாவே இருக்கும்.. அந்த நேரத்துல அவன் ஆக்ரோஷமா இருப்பான்.. அவன் வேகத்தை உன்னால சமாளிக்க முடியாது.. சில சமயங்களில் உன்னை போர்ஸ் பண்ணவும் செய்வான்.. இதெல்லாம் ஒரு தங்கச்சி கிட்ட பேசும் விஷயம் இல்ல.. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்" என்று சங்கடத்துடன் உரைக்க அவளோ புன்னகைத்தாள்..
அவன் ஆண்மையின் ஆக்ரோஷப் பிடியில் மாட்டிக் கொண்டு நசுங்கி மயங்கி காமத்தில் செத்துப் பிழைக்கத்தானே இத்தனை நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறாள்..
அவன் முரட்டு வேகம் வேண்டும்.. ராட்சசன் கைப்பிடியில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டியாய் படுக்கையில் வதைபட்டு கிறங்கி கிடக்க வேண்டும்.. நினைக்கும் போதே சொர்க்கமாய் இனித்தது.. பொது இடம் என்பதையும் மறந்து கண்சொக்கிப் போனாள்..
"ஹிரு ஹிரு" என்று டேபிளில் தட்டினான் ஆர் நவ்..
அவள் விழிக்க.. "சரி நீ கெளம்பு.. நேரமாச்சு அர்ஜுன் வந்து உன்னை தேட போறான்".. என்று அவளை அவசரப்படுத்த.. "ஆமா அப்படியே தேடிட்டாலும்".. என்று சலித்துக் கொண்டவள் கைப்பையை எடுத்துக் கொண்டு "சரி நான் கிளம்புறேன் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்".. என்று மறுமுறை மாத்திரையை பற்றி நினைவுபடுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..
சகுந்தலா அன்றைய நாளில் சைலஜாவுடன் ஓரளவு பொருந்தி விட்டாள்.. கொடுக்கப்பட்ட வேலைகளுடன் நடு நடுவே தன் மகன் அபிமன்யுவையும் கவனித்துக் கொண்டாள்.. சைலஜாவிற்கும் இதற்கு முன்பு வந்த நான்கு பேரை காட்டிலும் இவளிடம் பூரண திருப்தி.. நேர அட்டவணை உணவு அட்டவணையின்படி உணவு மற்றும்
மாத்திரை மருந்துகளை கொடுத்தாள்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை சரியாக செய்தாள்.. முகம் சுளிக்காமல் பெட்பேன் வைத்தாள்.. பொறுமையாக உடலை சுத்தம் செய்து உடைமாற்றி விட்டாள்.. தனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் இப்படித்தான் தன்னை கவனித்திருப்பாளோ நெகிழ்ந்து மெய்யுருகிப் போனாள் சைலஜா.. பிணியுற்ற நேரத்தில்தான் கவனிப்பு தேவை.. அர்ஜுன் அந்த பக்கம் சென்ற பிறகு ஹிருதயா இந்த பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை..
என்னதான் சகுந்தலா சம்பளத்திற்கு வேலைக்கு வந்திருந்தாலும் அவள் சேவையின் ஒரு உயிரோட்டம் தெரிவதை சைலஜா உணர்ந்து கொண்டாள்.. ஒரே நாளில் அவளை பிடித்துப் போனாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.. அதற்குக் காரணம் அர்ஜுனின் நடவடிக்கை.. தன் மகன் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக இன்று ஆயிரம் சூரியன் பிரகாசித்ததை பார்த்துக் கொண்டுதானே இருந்தாள்.. அந்த மாற்றம் நல்லதுதான்.. ஆனால் அது சகுந்தலாவிற்காக என்றால் ஊக்குவிக்க முடியாதல்லவா.. அவனுக்கு மனைவி இருக்கிறாள்.. இந்தப் பெண்ணுக்கும் கணவனும் குழந்தையும் இருக்கிறார்கள்.. கொஞ்சம் இடறினாலும் கள்ள உறவாகி விடுமே.. மனதோடு ஏதோ ஒரு நெருடல்.. அந்த நெருடலை ஆரம்பித்து வைத்தது அர்ஜுன்.. விளக்கங்களையும் அவன் தான் கொடுக்க வேண்டும்.. அவனுக்கே ஆதிஅந்தம் தெரியாதபோது என்ன பதில் கொடுக்க முடியும்.. முடிச்சிடப்பட்ட ரகசியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாய் அவிழும்.. காதல் என்ற பெயரில்..
அலுவலகத்தில் அர்ஜுன் ஊக்க மருந்து எடுத்தவனை போல மடமடவென்று வேலைகளை முடித்திருந்தான்.. அதீத தெளிவு அவன் முகத்தில்.. சில நேரங்களில் நாம் பிரகாசமாக இருப்போம்.. யாரேனும் என்ன விஷயம்.. இன்னைக்கு ரொம்ப பிரைட்டா இருக்கே.. என்று கேட்டால் நமக்கே காரணம் தெரியாது.. ஆனாலும் அன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் கழியுமல்லவா.. அதுபோலத்தான் அவனுக்கும்..
திரைச்சிலையை விலக்கி சாளரத்தின் வழியே வந்த காற்றை ஆழ்ந்த சுவாசித்தான்.. நகரத்தின் மையப்பகுதியில் வாகனப் புகையின் நடுவே ஊடுருவி வந்த மாசுபட்ட காற்றுதான்.. ஆனாலும் வடிகட்டப்பட்டு வந்த ஆக்சிஜனை போல் இனிய உணர்வினை கொடுத்து சில்லென முகத்தில் மோதி
விளையாடியது அந்த மாயக்காற்று..
தீண்டிய காற்று தேகத்தை தூண்டிவிட வேறு ஏதெதோ உணர்வுகள் அவனை அலைகழித்தது.. காலையில் தொலைக்காட்சியில் பார்த்த முத்தக்காட்சி.. அலுவலகத்திற்கு வரும் வழியில் காதல் ஜோடிகள் பைக்கில் ஒட்டி உரசி கொஞ்சி கொண்ட காட்சி.. இதோ இப்போது கூட சாலையில் ஆண் பெண் இருவரும் கை கோர்த்து செல்லும் காட்சி.. உடலுக்குள் ஒருவித குறுகுறுப்பை உண்டு பண்ணியது.. கண்களை மூடினான்.. விழிகளை உருளவிட்டு சகுந்தலா வந்து நின்றாள் இமைகளுக்கிடையே.. திடுக்கிடலுடன் விழிகளை திறந்தான்.. இது என்ன அபத்தம்.. தப்பு.. தப்பு.. தலையில் தட்டிக் கொண்டான்.. தன்னையே கடிந்து கொண்டான்.. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அங்குமிங்குமாக நடந்தான்..
அவளை நினைக்கவே கூடாது.. என்று தவிர்க்க தவிர்க்க.. அவள் கண்கள்.. செதுக்கிய நாசி.. அதில் கர்வமாய் அமர்ந்திருக்கும் வெள்ளைக்கல் மூக்குத்தி.. சித்திரவதை செய்தது.. சோதனையின் அளவை கூட்ட சிவந்த இதழ்களை வம்படியாக அவன் கண்முன் கொண்டு வந்து வைத்தது சாத்தான் மனது.. செத்தே விட்டான்.. எச்சில் ஊறியது.. பசி கிளம்பியது.. சாதாரண பசியில்லை.. இரக்கமில்லாமல் மிச்சம் வைக்காமல் மென்று விழுங்கும் அகோர பசி.. ஒரு பெண்ணின் நினைவுகள் இப்படி கொல்லுமா.. புதிதாக உணர்ந்தான் தன்னை.. புதியவளா அவள்.. இல்லை.. இல்லவே இல்லை.. ஜென்ம ஜென்மமாய் பழகிய உணர்வு..
"வேண்டாம் அர்ஜூன் இது தவறு.. அவள் திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. மனதை கட்டுப்படுத்து.. இவ்வளவு கேவலமானவனா நீ".. மது போத்தலை கையில் வைத்துக் கொண்டு மொடாகுடிகாரன் குடிக்கக் கூடாது என திணறி நிற்பதை போல அவை நினைவுகளிலிருந்து வெளியே வர படாத பாடுபட்டான்.. ஒரே நாளில் என்னை இவ்வளவு ஆக்கிரமித்து விட்டாளே.. கோபமும் கொண்டான்.. வியப்பும் கொண்டான்..
அலுவலகத்தில் வேலையை ஓடவில்லை.. குழப்பமான நேரங்களில் ஆண் பிள்ளைகள் தேடுவது அன்னையைதான்.. சைலஜா முகம் பார்த்தால் சற்று மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது.. ஒருவேளை அன்னையை பார்த்து சற்று நேரம் பேசினால் கெட்ட எண்ணங்கள் தன்னை விட்டு நீங்க வாய்ப்புண்டு என்று கருதினான்.. மின்னலாய் புறப்பட்டு வீட்டுக்கு சென்றான்..
நேராக அவன் சென்றதோ அன்னையின் அறைக்குத்தான்.. சைலஜா உறங்கிக் கொண்டிருந்தாள்.. அம்மாவின் முகம் பார்த்ததும் மனம் சற்று அமைதிபட்டது.. சைலஜாவின் கரம் பற்றும் வேளையிலே டேபிளின் மீதிருந்த மருந்து டப்பா கீழே விழப் போக அதைப் பிடிக்க அவனும் பாய்ந்தான்.. கண்ணாடி பாட்டில் உடையாமல் சத்தம் வராமல் அன்னையின் உறக்கம் கலையாமல் கீழே விழும் முன் அந்த மருந்து டப்பாவை லாவகமாக பிடித்து விட்டான்..
ஆனால் கட்டிலின் பின்னே மறைவாக தன் ஆறு மாத குழந்தைக்கு பசி தீர்த்துக் கொண்டிருந்தவளின் சேலை குழந்தையின் சேஷ்டையில் முற்றிலுமாக விலகியிருக்க அதை கவனிக்காமல் அவளும் கண்ணயர்ந்து போயிருக்க எதிர்பாராமல் அதை பார்க்க நேர்ந்தவனுக்கோ மூச்சடைத்தது.. சில நேரங்களில் ஆபத்தான கனவுகளில் இருந்து எழ முயல்வோம் ஆனால் முடியாதல்லவா.. அதைப் போன்று "இது தாய்மையின் அடையாளம்.. உன்னை நீயே கேவலப்படுத்திக் கொள்ளாதே திரும்பி நட".. என்று மூளை இட்ட கட்டளைகள் எதுவும் விழிகளுக்கு கடத்தப்படவில்லை போலும்.. வம்படியாக அவள் அழகில் பதிந்த விழிகள் மீள முடியாமல் தவித்தது.. சாத்தானுக்கு மறுபடி கொம்பு முளைத்தது.. மோகம் கட்டவிழ்ந்தது..
தொடரும்..
அடடா இவன் சகு மேல பாஞ்சிடுவான்போலயே 😁😁😁