Active member
- Joined
- Jul 10, 2024
- Messages
- 47
என்னடா பண்ணி தொலைச்ச. உன் லவ் டார்ச்சர் ஓவரோ ஓவர் தங்கம்.
👌👌👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர்சாலையில் கவனம் செலுத்தினாலும் நொடிக்கொரு முறை மான்வியை திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் ஜீவா.. அனிச்சை செயலாக அவளை திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை..
விழிகளை துடைத்துக் கொண்டு அவனை பார்ப்பதை தவிர்த்து எதிர்ப் பக்கம் திரும்பி இருந்தவளை "இப்போ எதுக்கு இந்த அழுகை.. நான் ஒண்ணும் உன்னை ரேப் பண்ணிடலையே!!".. என்றான் சற்றே கோபமான குரலில்..
பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மான்வி.. என்ன பேசி புரிய வைக்க முடியும்.. நமக்குள் தப்பு சரி எதுவும் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டானே.. முத்தங்கள் பழகுவதற்குள்.. தேகம் முழுக்க மையம் கொண்ட அவன் பார்வையும்.. விரல் தீண்டி அத்துமீறிய இடங்களும்.. இப்போது நினைத்தாலும் மூச்சடைத்து இதயம் நின்று போனது போல் உணர்ந்தாள் மான்வி..
அங்கே நிலவிய மவுனத்தை விரும்பாதவன் போல்.. "உன் அம்மா.. அப்பா.. தம்பி.. தங்கச்சி எல்லார்கிட்டயும் நெருங்கி பழகற நீ.. என்னை மட்டும் ஏதோ அலர்ஜிக் கன்டென்ட் மாதிரி தள்ளி வைக்கிறதுதான் எனக்கு பிடிக்கல. மான்வி.. நான் உங்க வீட்டுக்கு வரும்போது உன் தங்கச்சி கிட்டே விளையாடிக்கிட்டு இருந்தியே".. என்று சொல்லும்போதே அவன் முகத்தினில் ஒரு பொலிவு.. எந்த அளவில் அவளை ரசித்திருக்கிறான் என்பதை அந்த ஒளிர்ந்த விழிகள் படம் பிடித்துக் காட்டின..
"அந்த மாதிரி என்கிட்டே நீ விளையாடனும்.. சண்டை போடனும்.. முழுக்க முழுக்க உன்னோட அன்பு.. நேசம் எல்லாம் எனக்கு மட்டுமே வேணும் மானு.. நான் தொட்டாலே நீ இப்படி பயப்படறதும் அழறதும் யூ நோ ஹவ் மச் ஹர்டிங் மீ.. கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டு என்னோட அதிகப்படியான அன்பை ஏத்துக்க பழகிக்கோடி.. திரும்ப திரும்ப என்னால இதை சொல்லிக்கிட்டு இருக்க முடியாது மானு.. ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்" என்று அழுத்தம் திருத்தமாக உரைத்திருந்தான் ஜீவா.. அவன் சொன்ன வார்த்தைகளை தெளிவாக செவிகளில் உள் வாங்கியிருந்த போதும் எந்த பதிலும் அளித்திருக்க வில்லை மான்வி..
தெரிந்த விஷயம்தான்.. என் இஷ்டப்படி நீ வளைய வேண்டும்.. அதைதானே இதனை நிமிடங்களாக விளக்கிகே கொண்டிருந்தான்.. ஆனால் நடுவில் ஒரு வார்த்தை சொன்னானே காதல்.. அது எங்கிருந்து வந்தது.. அதற்கான சரியான விளக்கம்தான் அவளுக்கு கிடைக்க வில்லை.. அவன் வேகமும் அழுத்தமும் மான்வியை தவறான கோணத்திலேயே சிந்திக்க வைத்தன..
"ஆக்சுவல்லி இந்த ட்ரெஸ் கூட என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணுது மான்வி.. ஒரு மாதிரி உடம்பெல்லாம் சூடாகுது.. இந்த மாதிரி நான் பீல் செஞ்சதே இல்லை".. என்றவனின் மூச்சுக்காற்று கூட அனலாக தகிப்பதை அவன் தோளில் வைத்த சூடான முத்தம் உணர்த்தியது..
"வேற ஏதாவது பேசுங்களேன்".. என்று சொல்ல ஆசைதான்.. ஏன் இந்த பேச்சுக்கு என்ன.. என்று அதற்கும் ஒரு விளக்கம் கேட்பானே.. சலிப்போடு வார்த்தைகளை தொண்டைக்குழிக்குள் பத்திரப் படுத்திக் கொண்டாள்..
"நான் ஒண்ணு கேட்கட்டுமா மானு".. அவன் அரம்பிக்கும்போதே இதயத் துடிப்பு எகிறியது.. நிச்சயம் நீலச் சாயம் பூசிய வார்த்தைகள்தான்.. நெஞ்சம் உறுதிப்படுத்தியது..
"என்ன" எச்சில் விழுங்கினாள் அவள்..
"அது.. உன்னோட வலது மார்பு.. இடது மார்பை விட கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி தெரியுதே".. ஏன்.. அவன் முடிக்கும் முன்னே காதுகள் கூசிப்போக "அய்யோ கடவுளே" காதை மூடிக் கொண்டாள் மான்வி .. பொதுவாக மார்பு.. பிறப்புறுப்பை பற்றி பேசுவதெல்லாம் அசிங்கம்.. அறுவறுப்பு அவளைப் பொறுத்தவரை.. அதில் இவன் வேறு வெளிப்படையாக அவன் கேட்டிருந்த விதம் ஒவ்வாமையை ஏற்படுத்தியது..
அவள் அதிர்வும் கூச்சமும் உணர்ந்து.. "ஹேய்.. நான் தப்பா எதுவும் கேட்கல.. வேற ஏதும் பிரச்சினையா இருந்துற கூடாதே.. அதான் டாக்டர்கிட்டே ஒருவாட்டி செக் பன்னிக்கலாமான்னு கேக்கறேன்".. அவன் முடிக்குமுன்னே..
"இல்ல ஆரம்பத்துல இருந்தே இப்படித்தான் இருக்கு".. என்றாள் விழிகளை தாழ்த்திக் கொண்டு.. அதை சொல்வற்குள் முத்து முத்தாக வியர்த்து விட்டது..
சிறிது நேரம் மவுனமும் ஆழ்ந்த பார்வையுமாக செல்ல.. திடீரென.. ஆழ்ந்த மூச்சுடன் ஜீவா அவள் வலக்கரம் எடுத்து தன் தொடையில் வைத்து வருடியதில்.. உடல் சிலிர்த்து.. தனது கரத்தை உருவ முயன்றாள் மான்வி பதட்டத்தோடு..
கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டவன் "மானு ப்ளீஸ் நான் பேயோ பூதமோ இல்லை.. டோன்ட் அவாய்ட் மீ.. எனக்கு உனக்கும் இடையில் ஒரு ஸ்ட்ராங் கனக்டிவிட்டி இருந்துட்டே இருக்கணும்".. என்றிருந்தான் அழுத்தமாக..
என்ன சொல்கிறான்.. புரியவில்லையே.. என்ற பாவனையுடன்.. "கனெக்ட்டிவிட்டியா? என்று கேட்டிருந்தாள் அவள்..
"ம்ம்.. ஒன்னு உன்னை பாத்துகிட்டே இருக்கணும்.. இல்லை.. கிஸ் பண்ணனும்.. அதுவும் இல்லைனா டச் பண்ணனும்.. இப்போ டிரைவ் பண்றதால என்னால உன்னை பார்த்து ரசிக்க முடியல.. சோ ஐ வாண்ட் பிஸிக்கல் டச்.. இந்தமாதிரி".. என்றவன் அவள் கரம் எடுத்து இதழில் முத்தமிட்டிருக்கவே.. சட்டென அதிர்ந்து தன கரத்தை இழுத்துக் கொள்ள முயன்றதில் அவன் கூர்மையான விழிகள் அழுத்தமாக அவள் மீது பதிந்தன.. "இப்போதானே சொன்னேன்.. என்னை ஒரு நிமிஷம் கூட எங்க வைக்காதே மானு அது உனக்குதான் டேஞ்சர்".. என்றான் கண்சிமிட்டி கல்மிஷப் புன்னகையுடன்..
போகும் வழியெங்கும் அவள் தளிர்கரமதை வருடி முத்தமிட்டவன்.."உன் கை ரொம்பசாப்ட்.. பொதுவா இந்த மாதிரி கை மிருதுவா இருந்தா பொண்ணுங்க வேலையே செய்ய மாட்டாங்கன்னு சொல்லுவாங்க".. அவன் முடிப்பதற்குள் "அப்படியெல்லாம் இல்ல.. எங்க வீட்ல நான் எல்லா வேலையும் செய்வேன்.. காலையிலே கூட நான்தான் வாசல் பெருக்கி கோலம் போட்டேன்.. துணி வாஷ் செஞ்சேன்.. அம்மா இட்லி செஞ்சாங்க.. நான் சாம்பார் வச்சேன்".. என்று மளமளவென்று தன் மார்னிங் ரொட்டின்களை ஒப்பித்திருந்தாள் மான்வி..
வாய் திறந்து முழுதாக இரண்டு வார்த்தை கூட பேசாதவள்.. மூச்சு விடாமல் பேசியதில் இமைக்க மறந்து போனான் ஜீவா..
"வாவ்.. பேபி.. இந்த சகஜமான மனநிலையைதான் உன்கிட்டே இருந்து எதிர்பாக்கறேன்.. எவ்வளவு அழகா பேசறே.. கிட்டத்தட்ட ஒரு பாட்டு பாடின மாதிரி".. அவன் விழிகளில் அத்தனை உற்சாகம்..
உன் கை ரொம்ப சாஃப்ட்.. நீயும் வேலை செய்ய மாட்டியோ என்று கேட்டுவிடுவானோ என்ற அவசரத்தில் தான் அளவுக்கு மீறி பேசிவிட்டதாக உணர்ந்தாள் மான்வி.. தேவையில்லாத பேச்சுதானே இது.. எதற்காக இப்படி இழைகிறாய்.. அடக்கி வாசி என்று கடிந்து கொண்டது அடிமனம்.. காரணங்களே இல்லாமல் தனக்குள் ஒரு வட்டத்தை போட்டுகே கொள்வது மான்வியின் இயல்பு..
"நான் அப்படி சொல்ல வரல மானு.. நமக்கு கல்யாணம் ஆன பிறகு.. நீ என்னை மட்டும் பாத்துக்கிட்டா போதும்.. வேறெந்த வேலையும் செய்ய வேண்டாம்னு சொல்ல வந்தேன்".. விளக்கத்தோடு அவளை பார்த்து வசீகரமாக புன்னகைத்தவனிடம்.. "நான் ஏன் உங்களை பாத்துக்கனும்.. நீங்க என்ன சின்ன குழந்தையா".. என்று கேட்க உதடுகள் துடித்தன..
"கல்யாணம் அனதுல இருந்து புருஷனையே சுத்தி வருது இந்த பொண்ணு.. அசிங்கம்.. அசிங்கம்".. அம்மா யாரோ ஒருத்தியை கரித்து கொட்டியது நினைவில் வந்து போக.. அவன் சொன்னதன் இனிமையை.. அந்த வார்த்தைகளின் பின்புறம் மறைந்திருந்த ஏக்கத்தை காதலை.. கண்டு உணராது போனாள் மான்வி..
"என் தோள்ல சாஞ்சிக்கிறியா.. இன்னும் ஹாப்பியா பீல் பண்ணுவேன்" என்றான் ஒரு கட்டத்தில்..
"இல்ல வேண்டாம்" என்றவளுக்கு எப்போது இந்த பயணம் முடியும் என்றிருந்தது..
ஒரு நகைக்கடையில் காரை நிறுத்தி இருந்தான் ஜீவா.. "இங்கே எதுக்கு? "அவள் புரியாமல் விழிக்க..
"காலைல வரும்போது.. உன் செயினை உன் தங்கச்சி போட்ருந்தா.. நீயும் அவ கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தே.. அதான்.. அதே மாதிரி ஒரு செயின் வாங்கலாம்னு தோணுச்சு.. இறங்கி வா".. என்று அவன் கார்க் கதவை திறக்கும் வேளையில்.. "இல்ல எனக்கு செயின் எல்லாம் வேண்டாம்".. அவசரமாக மறுத்தாள் அவள்.. திறந்த கதவை ஒரு கையால் பிடித்துக் கொண்டே.. ஆழ்ந்த பார்வையுடன் "உனக்காக இல்ல.. எனக்காக.. அந்த குட்டி செயின் உனக்கு பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு.. பாத்து பாத்து ரசிக்கனும்.. ரொம்ப பிளசன்ட்டா ஃபீல் பண்ணுவேன்.. வா". என்று இறங்கியிருந்தவன் மறுபக்கம் வந்து அவளுக்காக கதவை திறந்துவிட்டிருந்தான்.. வேறு வழியில்லாமல் இறங்கி அவனுடன் கடைக்குள் சென்றாள் மான்வி..
"வீட்ல பெண்கள் இல்லாததால அவருக்கு சில விஷயங்கள் புரியல.. ஆனா நீ பார்த்து நடந்துக்கோ மான்வி.. கல்யாணம் முடியற வரைக்கும் ரொம்ப சலுகை எடுத்துக்காத.. ஏதாவது பரிசு புடவை.. நகைன்னு கொடுத்தா நாசூக்கா மறுத்துறு.. முக்கியமா உ.. உங்க பழக்கம் எல்லை மீறாம பாத்துக்கோ.. ரொம்ப உரிமை எடுத்துக்காதே மான்வி".. என்று பலமுறை சொல்லிதான் அனுப்பினாள் ரமா.. நகை வாங்கிக் கொடுத்தால் மறைத்தா வைக்க முடியும்.. அம்மாவும் அப்பாவும் ஏன் வாங்கினாய்.. அவ்வளவு சொன்னேனே.. என்று கடிந்து கொண்டால் என்ன செய்வது யோசனை சூழ பரிதவித்துப் போனவள் சங்கடத்துடன் அவனை பின் தொடர்ந்து கடைக்குள் நுழைந்து அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்..
மிகுந்த சிரத்தை எடுத்து பொறுமையாக ஒவ்வொரு நகையாக பார்த்து பார்த்து.. அதில் சிலதை அவள் கழுத்தில் வைத்து.. விரல்களால் வருடி.. பெண்ணவளை அவஸ்தைக்குள்ளாக்கி இறுதியாக ஒரு சங்கிலியை தேர்தெடுத்தான் ஜீவா..
"வாவ்.. லவ்லி".. என்று அவள் வழுவழுத்த கழுத்தில் அணிந்திருந்த செயினை ரசித்தவன்.. "இதை பில் போட்ருங்க".. என்றான் அந்த சங்கிலியை அவர்களிடம் கொடுத்து..
அவன் தேர்வு அழகாகதான் இருந்தது.. அவளுக்கும் பிடித்துப் போனது.. மெல்லிய தங்க செயின்.. குட்டியாய் வெண்ணிற கற்கள் பதிக்கப் பட்ட ஒரு பென்டென்ட்..
எவ்வளவு?.. அவன் காதுக்குள் ரகசியமாக கேட்க.. திடீரென்று அவள் மூச்சுக்காற்று செவி மடலில் உரசியதில் தன்னிலை மறந்து கண்கள் மூடி திறந்தவன்.. "என்ன கேட்டே".. என்றான் விழிகள் விரிய..
"எவ்வளவுன்னு கேட்டேன்".. மீண்டும் அழுத்தி கேட்டிருந்தாள் அவள்..
6.25 லேக்ஸ் என்றான் வெகு இயல்பாக..
"அச்சோ?.. என்று திகைப்போடு விழிகளை விரித்தவள்.. "இவ்வளவு காஸ்ட்லியா?" என்றாள் சிறிதாக பிளந்த உதடுகளுடன்..
"அந்த பென்டென்ட் அமெரிக்கன் டைமென்ட்.. சோ கொஞ்சம் ஸ்பெஷல் என்றான் அந்த உதடுகளில் விழி பதித்து.. அவள் தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதே மதுரமாக இனித்தது.. அவள் பேசும் நொடிகள் நீளவேண்டும் என்றே பேச்சை வளர்த்தான்..
"டைமண்ட் ஆஹ்".. மீண்டும் அதிர்ச்சியானாள்..
"ஆமா.. ஏன் இவ்வளவு ஷாக்.. உனக்கு".. சுருங்கிய புருவங்களும்.. குறுகுறுப்பான விழிகளுமாய் சற்றே தலையை தாழ்த்தி அடர்ந்த கேசம் அவள் பிறை நெற்றியில் மோத கிசுகிசுப்பாக கேட்டிருக்கவும்.. பேச்சு நின்று போனது அவளிடம்.. தன்னை மீறி அவன் பாவனையை ரசித்த மனதை கண்டு திடுக்கிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் மான்வி..
பணம் செலுத்த வாலட்டிலிருந்து தன் கார்டை எடுத்துக் கொடுத்தான் ஜீவா..
"வேண்டாமே.. ரொம்ப விலை ஜாஸ்தி".. அந்த இடத்திலும் அவள் மறுத்துப் பார்க்க.. "ஷட் அப்" என்றான் அவன்.. அது கடுமையா.. மென்மையா.. பிரித்தறிய தெரியவில்லை.. மென்மையாக யாரேனும்.. ஷட் அப்.. சொல்லுவாங்களா.. தேவையில்லாத ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது மனம்..
நகைப் பெட்டியில் வைத்துக் கொடுக்கப்பட்ட செயினை அப்போதே எடுத்து அவள் கழுத்தில் அணிவித்து விட்டான் ஜீவா.. அவள் அணிந்திருந்த இமிடேஷன் செயினை கழட்டி தன் பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டதை கவனித்திருந்தவள்.. அது எதற்கு உங்களுக்கு என்பதை போல் கேள்வியாக அவனை பார்த்திருக்க.. அவள் எண்ணியதை அறியாதவனாய் என்ன என்பது போல் புருவங்கள் உயர்த்தி கண்கள் சிமிட்டினான் அவன்..
அல்பம்.. மாதிரி அந்த பழைய செயினை கேட்டு தொலைக்காதே.. அதை வைச்சு அவர் ஒண்ணும் கோட்டை கட்ட முடியாது.. வெளியே போய் குப்பையிலதான் போடப் போறார்.. மனசாட்சி கேவலமாக இடிந்துரைக்க.. "ஒன்னும் இல்ல.". என்று தலையசைத்து வாயை மூடிக் கொண்டாள் மான்வி..
"ரொம்ப அழகா இருக்கு மான்வி.. இப்போவே இந்த செயினோட உன் கழுத்துல கிஸ் பண்ணனும் போல இருக்கு.. ரியல்லி ஐம் தர்ஸ்டி.. கண்டிப்பா இன்னைக்கு வாம்பயர் கிஸ் கொடுத்தே ஆகணும்".. என்று போதை கொண்ட விழிகளுடன் வறண்ட நாவை ஈரப்படுத்திக் கொள்ள மிரண்டு போனாள் அவள்..
விடாத காதல் உரையாடல்களும் .. அழகான சீண்டல்களுமாய் பரத் வீட்டை வந்தடைந்திருந்தனர் மான்வியும் ஜீவாவும்..
நெருடல்கள் இருப்பினும்.. அளவில்லாத காதலின் தாக்கத்தில் அழகாக சென்று கொண்டிருந்த ஜீவாவின் ஜீவன் மிக்க காதல்.. வேறுமாதிரியாக தவறாகிப் போனது இந்த இடத்தில்தான்..
தொடரும்..