- Joined
- Jan 10, 2023
- Messages
- 96
- Thread Author
- #1
மல்லியின் நிலை கண்டுமொத்தமாய் கதிகலங்கிப் போய் நின்றிருந்தான் ரிஷி.. நெருங்கவிடாமல் மூலையில் சரிந்து அமர்ந்தவளை பார்க்கையில் உயிரே நடுங்கியது.. "மல்லி.. என்னை உன்கிட்டே வர விடும்மா.. இப்போ உன்னை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்.. மத்த எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.. புரிஞ்சிக்கோ மல்லி".. என்று கண்ணீர்மல்க கெஞ்சினான்.. ம்ஹூம் எந்த பலனுமில்லை.. "தள்ளிப் போறீயா.. இல்லை இங்கேயே செத்துப் போகவா".. என்று கண்கள் சிவந்து ஆவேசமாக கத்தினாள் அந்நிலையிலும்.. அவனால் அதற்குமேல் பொறுமை காக்க முடியவில்லை.. "என்ன வேணா பண்ணிக்கோடி.. நான் உன்னை தூக்கியே தீருவேன்.. வேணும்னா ஆத்திரம் தீரும்வரை என்னை அடிச்சிக்கோ".. என்று அடுத்த நொடியே அவளை நெருங்கி கையிலேந்திக் கொண்டான்.. "என்னை விடு".. என்றவள் திமிறியவளின் எதிர்ப்பை பொருட்படுத்தாது நேராக கொண்டு போய் காரில் அமர வைத்தான் அவன்.. அவள் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மாமி காம்பவுண்டு சுவர் வழியே என்ன ஏதென்று எட்டிப்பார்க்க அழுது கொண்டிருந்த மல்லியை வலுக்கட்டாயமாக ரிஷி காரில் ஏற்றிக் கொண்டிருக்கவும் பதறிப் போனாள் ..
அவன் கார்முன் வந்து நின்றவள் "என்ன.. என்னாச்சு அம்பி".. வலியில் கதறும் மல்லியின் நிலையும் ரிஷியின் பதட்டமும் பார்த்தபடியே வினவ.. "மாமி மல்லிக்கு பிளீடிங் ஆகுது.. கொஞ்சம் கூட வர்றீங்களா .. எனக்கு பயமாயிருக்கு.. என்ன செய்யறதுன்னே தெரியல.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ்".. என்று கண்கலங்கி குரல் கம்ம வினவிய ரிஷியை அதிசயமாக பார்த்து நின்றாள் மாமி..
"வரேன்.. வரேன்".. என்றவள் தலைக்கு மேல் இருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டு காரில் ஏறி மல்லி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் .. "மாமி வலிக்குது".. என வலியில் பிதற்றிய மல்லியின் மல்லியின் அழுகை மாமியின் இதயத்தை கசக்கிப் பிழிய ஆதரவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டவள் "ஒண்ணும் ஆகாது குழந்தே.. சீக்கிரம் ஆஸ்பிடல் போய்டலாம்.. என்றவள் கொஞ்சம் சீக்கிரம் போங்கோ".. என ரிஷியைத் தூரிதப்படுத்தினாள்..
மல்லியின் அழுகையும் ரிஷியின் பதட்டமும் அவன் மல்லியை குற்ற உணர்வோடு பார்த்த பார்வையும் ரிஷி மீதான மல்லியின் வெறுப்பை உமிழும் பார்வையும் மாமிக்கு வேறேதோ ஒன்றை தெளிவாக உணர்த்த "சண்டாளபாவி என்ன பண்ணி வைச்சான் தெரியலயே.. இந்த நேரத்துலயாவது பொண்டாட்டியாண்ட கொஞ்சம் அனுசரனையா இருக்கப்படாதா? புள்ளத்தாச்சி பொண்ணுகிட்டேயா இவன் வீரத்தைக் காட்டனும்.. கடன்காரப்பாவி".. என ரிஷியை மனதுக்குள் திட்டித் தீர்த்தாள் மாமி..
மல்லிக்கு நேரம் கடக்க கடக்க வலி கூடிக்கோண்டே போறது.. இடுப்பெலும்பு உடையும் வலியில் தாங்க முடியாமல் கதறினாள்.. அவள் வலி தனக்குள்ளும் கடத்தப்பட்டது போல உயிரின் ஆழம்வரை வேதனை கொண்டு திரும்பி திரும்பி அவளையே பார்த்தபடி வண்டி ஓட்டினான் ரிஷி.. தன் முட்டாள்த் தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.. வேதனைப்பட்டான்.. கோபத்தில் மதியிழந்ததை எண்ணி தன்னையே வெறுத்தான்.. கண்ணீர் திரையாக விழிகளை மறைக்க வண்டி ஓட்டுவதே சிரமமாய்ப் போனது அவனுக்கு..
மருத்துவமனை வந்ததும் காரை நிறுத்தி தாமதிக்காது மல்லியைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.. மருத்துவமனையே அவனை மட்டும்தான் பார்த்திருந்தது.. அந்த நிலையிலும் அவன் கைகளில் நில்லாது துள்ளினாள் மல்லி.. "என்னை விடுங்க".. என்று வலியுடன் கைகாலை உதறினாள்.. "அமைதியா இருடி".. ஒரு அதட்டலைப் போட்டு ஸ்டிரக்சரில் படுக்கவைத்தான்..
செவிலியர் முக்கிய விவரங்களை வாங்கிக் கொண்டு பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல பின்னால் வேகமாக சென்ற ரிஷி தடுத்து நிறுத்தப் பட்டான் மருத்துவமனை ஊழியர்களால்.. அவன் தோழி சாராதான் பிரசவம் பார்க்கப்போகிறாள்.. அவள் வேலைசெய்யும் மருத்துவமனை அது.. முகம்வெளிறி பைத்தியக்காரன் போல நின்றிருந்த அவன் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்து விட்டு பிரசவ அறைக்குள் நுழைந்தாள் அவள்.. அறையை நிறைத்து அதைத் தாண்டியும் வெளியே கேட்டது மல்லியின் அலறல்..
வெளியே புத்தி பேதலித்தவன் போல அமர்ந்திருந்தான் ரிஷி.. மல்லியின் ஒவ்வொரு அலறலும் ஆணவன் நெஞ்சுக்குள் பூகம்பத்தை ஏற்டுத்தி சாகடித்தது.. தொடைமேல் கைகளை கோர்த்து நிலைகுத்திய விழிகளுடன் உயிருள்ள ஜடமாக அமர்ந்திருந்தவனை "அம்பி.. சட்டை பூரா இரத்தக்கறையா இருக்கு.. கொஞ்சம் கழுவிண்டு வாங்கோ".. என்ற மாமியின் குரல் அவன் காதில் விழவே இல்லை.. கேட்டதெல்லாம் வலியில் கதறிக் கொண்டிருந்த மல்லியின் அலறல் சத்தம் மட்டுமே..
வெளியே வந்தாள் சாரா.. அவள் நிழலாடவும் உயிர்பெற்ற பொம்மைபோல விருட்டென எழுந்து நின்றான் ரிஷி.. அப்பட்டமான பயம் பதட்டத்தை பிரதிபலித்த அவன் முகத்தை கண்டு சாராவிற்கு பாவமாக இருந்தாலும் மல்லியின் நிலை கண்டு அவன் மேல் கோபப்படாமல் இருக்க முடியவில்லை அவளால்..
"என்ன ரிஷி.. எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னேன்.. இரண்டு பிள்ளையை சுமக்கிறா.. ஸ்டிரெஸ் ஆக விடாதே.. டென்ஷன் ஏத்திவிடாதே.. கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோன்னு.. இப்போ பிரஷர் ஜாஸ்தியா இருக்கு.. கிரிட்டிக்கல் கண்டிஷன்".. என்றதும் உயிரே போனது ரிஷிக்கு.. நிலையில்லாமல் இருகைகளால் தலையைப் பிடித்தபடி நின்றிருந்தான்..
"என்ன சொல்றே சாரா.. மல்லிக்கு ஒண்ணும் பிரச்சினை ஆகாதுல.. அவ ஏன் கத்தறா.. எனக்கு அவளை பார்க்கனும்.. எனக்கு நெஞ்செல்லாம் நடுங்குது.. பிளீஸ்.. ஒருமுறை அவகிட்டே பேசிடறேன்"...என்று கரகரத்த குரலில் கெஞ்சியவனை முறைத்தாள் சாரா..
"ஏன் இன்னும் அவளை கடுப்பேத்தி சாகடிக்கப் போறியா".. என்று கோபத்தில் வலித்துக் கொண்டிருந்த இதயத்தை மறுபடி குத்தி காயப்படுத்தினாள்..
"அதெல்லாம் இப்போ பார்க்க முடியாது.. டெலிவரி முடியட்டும்".. என்று கூறிவிட்டு செல்ல.. மாமி குறுக்கே வந்தாள்..
"பிரசவத்துல எதுவும் பிரச்சினை இல்லையே.. குழந்தைகள் நல்லா இருக்காங்களா".. மாமி திரும்பவும் தன் திருப்திக்காக பதைபதைப்புடன் கேட்க.. பெருமூச்சுவிட்டாள் சாரா.. "இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாதும்மா.. எங்களால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கோம்.. மல்லிக்கு மூச்சுத்திணறுது.. கோ ஆப்ரேட் பண்ண முடியல.. குழந்தை பொசிஷன் மாறியிருக்கு".. என்று சொல்லிக் கொண்டிருக்கையில் "டாக்டர் ஒருநிமிஷம்".. என்று அவசரமாக வந்து அழைத்துப் போனார் செவிலி ஒருவர்..
ரிஷி அப்படியே அமர்ந்துவிட்டான்.. மல்லியைப் பார்க்காமல் மூச்சுவிடுவதே சிரமம் போலிருக்க கண்களை மூடி கண்ணீர் வடித்த வண்ணம் மனதார மல்லியிடம் மன்னிப்புப் கேட்டுக் கொண்டிருந்தான் ஆணவன்.. அவள் இரத்தம் வழிந்தோட நின்றிருந்த நிலையும் அவள் தலையில் அடித்துக் கொண்டு கதறிய நிலையும் நினைக்க நினைக்க ஈரக்குலை நடுங்கியது.. வெளியே வந்தாள் சாரா.. "நார்மல் பாசிபிள் இல்லை.. சிசேரியன் பண்ணனும் ரிஷி.. ஃபார்மாலிட்டிஸ் பார்த்துட்டு சைன் பண்ணிடு".. என்றவள் "சீக்கிரம் அரேன்ஜ் பண்ணுங்க.. குயிக்" அங்கு நின்றிருந்த நர்சை அவசரப்படுத்த உள்ளிருந்து வீல் என சத்தம்.. அதிர்ந்து வேகமாக உள்ளே ஓடினாள் சாரா.. பின்னால் ஒடப் போன ரிஷியை தடுத்து நிறுத்துவற்குள் ஒருவழியானாள் அந்த நர்ஸ்..
அடுத்த அரைமணி நேரம் மல்லியை படாதபாடு படுத்தியெடுத்து பூமியில் தன் குட்டிப் பாதம் பதித்தனர் ரிஷியின் இரட்டை மகன்கள்.. குழந்தைகளின் அழுகுரலில் விழிகளை நிமிர்த்தினான் ரிஷி.. அப்போதும் அவன் எண்ணம் முழுவதும் ஆக்ரமித்திருந்தவள் மல்லி மட்டுமே.. அவள் முகம் ஒருமுறையாவது கண்டுவிட மனம் துடியாய் துடித்தது..
சிறிது நேரத்தில் பூந்துவாலையில் சுற்றப்பட்டு குட்டி இளவரசர்களை தூக்கிவந்து கொடுத்தனர் அவன் கையில்.. வாங்கும்முன்னே கைகள் நடுங்க.. அவன் கைநடுக்கம் கண்டு செவிலி அவனிடம் குழந்தைகளை கொடுக்கத் தயங்கி நிற்க.. "குழந்தையை வாங்குங்கோ.. பயப்படாதேள்".. என பக்கத்தில் வந்து நின்று அவனுக்கு உதவி புரிந்தாள் மாமி..
மிகமிக கவனமாக கிடைத்தற்கரிய பொக்கிஷம் போல பிள்ளைகளை பெற்றுக் கொண்டவன் விழிகளில் தந்தையாக பெருமிதம்.. இதழ்களில் சிறிய புன்னகை.. பிங்க் நிறத்தில் கொட்ட கொட்ட விழித்து வாயில் கைவைத்து மிருதுவான் கைகளால் ரிஷியை ஸ்பரித்த பன்னீர் ரோஜா மொட்டுக்கள் இரண்டும் அத்தனை அழகு.. இரு பாலகர்களும் அவன் கரத்தினுள் அழகாக அடங்கிவிட குட்டிகளின் முகத்தை காண காணத் தெவிட்டவில்லை அவனுக்கு.. நாள் முழுக்க அன்னம் தண்ணீர் பருகாமல் பார்த்துக் கொண்டே இருந்தாலும் சலிக்காது குட்டி மழலைகளை..
மாமி "என்னடா குட்டிகளா.. அம்மாவை ரொம்ப படுத்திட்டீங்க.. என் செல்லக்குட்டி சிரிக்கிறீங்களா.. அய்யோ அழகு ராஜா இரண்டும்" என்று ஆசையாக கொஞ்ச அம்மா என்றதும் மல்லியின் நினைவு வந்தவனுக்கு இத்தனை நேரம் பொங்கியிருந்த கர்வம் சரியத் தொடங்கி.. ஒரு இனம்புரியா வருத்தம் பிறந்தது.. ஒரு தந்தையாக தன் பிள்ளைகளை கண்டு அகமகிழ்ந்தாலும் மல்லியை காயப்படுத்தியது இருதயத்தில் உறுத்தலாக அவனை கொன்று தின்றது..
"குழந்தைகளை கொடுங்க".. நர்ஸ் கேட்கவும் கண்களை தன் பிள்ளைகள் மேலிருந்து அகட்டாது மனமே இல்லாமல் ரிஷி குழந்தைகளை ஒப்படைத்தான் அவரிடம்..
சாரா வெளியே வர.. "மல்லி எப்படி இருக்கா".. என்று படபடப்புடன் கேட்டவனை புன்சிரிப்புடன் நோக்கினாள் அவள்.. "அவ நல்லா இருக்கா.. ஒரு பத்துநிமிஷம் கழிச்சு போய் பாரு.. கஷ்டப்பட்டாலும் நல்லபடியா குழந்தையை பெத்தெடுத்துட்டா.. இனிமேலாவது உன் கோபம் அகம்பாவம் ஆணவம் அகம்பாவம் அவசரபுத்தி எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சிட்டு நல்லபடியா குடும்பம் நடத்தப் பாரு.. இரண்டு புள்ளைக்கு அப்பனாகிட்டே.. இனியாவது திருந்துடா".. என முதுகில் ஒரு அடிபோட்டு செல்ல.. "சாரா".. என்றழைத்தான் அவன்..
சாரா.. நின்று என்ன என்பது போல அவள்முகம் பார்க்க.. "தாங்க்ஸ்" என்று மென்மையாக உரைத்து அவள் கையைப் பிடித்து நன்றியை மொழிந்தான் ரிஷி.. மனம் நெகிழ்ந்தவள் "பார்றா.. உனக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா".. என சிரித்து "இது என் கடமை.. நீ நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்ல.. வேணும்னா கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் நார்மலான பிறகு உன் பொண்டாட்டிகிட்டே சொல்லி எனக்கு சூப்பர் லன்ச் ரெடிபண்ண சொல்லு" என்றாள் கண்சிமிட்டி.. "உனக்கில்லாமையா".. என சிரித்தான் அவன்.. இறக்கை இல்லாத பறவை போல கால் தரையில் நிற்காமல் பறந்தான் ரிஷி.. மனம் முழுக்க அவ்வளவு மகிழ்ச்சி.. இரட்டிப்பு சந்தோஷம்.. இப்போதைக்கு அவன் மனதில் நிறைந்த ஒரே விஷயம் மல்லியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. காதலை சொல்ல வேண்டும்.. அதுமட்டுமே..
இங்கே பிரசவ அறையில் குழந்தைகளை கையில் வாங்கி முத்தமிட்டு செவிலியரிடம் கொடுத்தபிறகு கண்ணீர் வழிய வெறித்த பார்வையுடன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் மல்லி.
"அனாதைக் கழுதை.. வெறும் உடல் சுகத்துக்காகதான் உன்னை வைச்சிருக்கேன்.. இந்த பிள்ளை என்னோடதா.. இல்ல வேற எவனுக்காவது.. காதலா உன்மேலயா.. பட்டுக்காட்டு நாயே.. தண்டசோறு".. ரிஷியின் கேவலப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சை இரக்கமில்லாமல் குத்திக் கிழித்துக் கொண்டிருக்க இதுவரை அர்த்தமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பதாய் உணர்ந்தாள் அவள்..
"என்னைப் போல அனாதைகள் ஏன் பிறக்கனும்.. இப்படி ஏன் கஷ்டப்படனும்.. உண்மையான அன்பு கூட என் வாழ்க்கையில கானல்நீர்தான் இல்ல.. வெறும் உடல்சுகத்துக்காக மட்டுமே என்கூட வாழ்ந்த கணவன்.. நாக்கில நரம்பில்லாம என்ன வார்த்தை கேட்டுட்டான்".. என்றவளுக்கு குழந்தைகளை பார்த்தபோது கூட அந்த வார்த்தைகள்தானே நினைவில் வந்தது.. உளமார மகிழ முடியவில்லை தன் செல்வங்களைக் கண்டு..
"ஏன் மா.. அழாதே.. இப்படியே அழுதுட்டே இருந்தா ஜன்னி வந்திரப் போகுது".. தாதி அதட்டி சொல்லிவிட்டு செல்ல எதுவும் அவள் காதில் விழவில்லை.. தன் கணவனின் மனதில் தான் ஒரு தாசியாக மட்டுமே இருந்திருக்கிறேன்.. அதனால்தான் எளிதில் கேவலப்படுத்திவிட்டான் என்ற எண்ணமே அவளை எதிலும் லயிக்க விடாமல் இறுக்கிப் பிடித்திருக்க.. நிற்காமல் வழிந்தது கண்ணீர்..
சட்டென்று உடலில் ஏதோ ஒரு மாற்றம்.. நரம்புகள் உடல்முழுக்க இழுப்பது போல உணர்ந்தவளுக்கு கைகால்களை அசைக்க முடியவில்லை.. கண்கள் மட்டும் ரங்கராட்டினம் போல சுற்ற.. வெட்டி இழுத்தது உடல்.. அவ்வளவுதான் நிலைகுத்திய பார்வையுடன் கைகால்கள் தொடர்ந்து வெட்டி வெட்டி இழுக்க.. "டாக்டர்ர்ர்" எனக் கத்தினார் அந்த செவிலி.. அந்த இடமே களேபரமானது.. வாயில் எச்சில் வடிய ஜன்னி கண்ட மல்லியின் கைகால்களை பிடித்து சூடுபறக்க தேய்த்துவிட்டனர் தாதிகள்.. "ஓ மைகாட்.. ஃபிட்ஸ் வந்திடுச்சே.. நல்லாத்தானே இருந்தா".. என நெஞ்சம் பதற ஓடிவந்தாள் சாரா..
கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கண்கள் சொருகி மயக்கத்திற்கு சென்றிருந்தாள் மல்லி.. "பல்ஸ் ரொம்ப குறையுது.. எமர்ஜென்சி".. எனக் கத்தினாள் சாரா.. மல்லியைக் காப்பாற்றும் முயற்சியில் வாசலில் நின்ற ஒரு ஜீவனை மறந்து போயிருந்தனர் அனைவரும்.. உயிர் கூட்டை விட்டு பிரிந்து சென்றது போல முகம் வெளிறி ஏன் அழுகிறோம் என தெரியாமல் நகரவும் முடியாமல் உடலை இருபாதியாக வெட்டிய மரண வேதனையுடன் நின்றிருந்தான் ஒருவன்..
இங்கே ஏதோ சரியில்லை.. என அன்று முழுவதும் மனக்கலக்கமாக உணர்ந்த சிவகாமி பூஜையறையில் நுழைந்து அனைத்துக் கடவுளர்களையும் மனதுருகி வேண்டினாள்.. கடவுளே யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது.. வேண்டியவங்க எல்லாரையும் காப்பாத்து முருகா.. என வேண்டிக் கொண்டிருக்க.. அவளுக்கு வேண்டியவர் பட்டியலில் அந்த ஒருத்தி இல்லையோ என்னவோ முருகர் படத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த ரிஷியின் ஜாதகம் அவளைப் பார்த்து சிரித்தது ஏளனமாக.. விதியின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று..
தொடரும்..