- Joined
- Jan 10, 2023
- Messages
- 127
- Thread Author
- #1
எதிரே நின்றிருந்த ராஜேஷை கண்டதும் கண்கள் விதிர்ப்புற்று அதிர்ச்சியில் உறைந்தன.. ஆனால் எந்த நோயும் இல்லை என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டிருந்த கையிலிருந்த ரிப்போர்ட் அவளுக்கொரு புது தைரியத்தை தந்திருந்தது..
பழைய பாசமோ உணர்ச்சிகளோ எதுவுமில்லாமல் நேருக்கு நேராக அவனை எதிர் கொண்டாள்..
"என்ன சுப்ரியா.. எப்படி இருக்க..? உன்னை பிடிக்கிறதுக்குள்ள போதும்னு போதும்னு ஆகிடுச்சு..! நல்ல வேலை இங்த வேலை செய்யற ஒரு ஆயாம்மாகிட்ட நீ வந்தா சொல்லணும்னு ஃபோன் நம்பரும் கொஞ்சம் பணத்தையும் தந்து வச்சிருந்தேன்.. இல்லைனா இன்னைக்கு கூட உன்னை பார்த்திருக்க முடியுமா என்னவோ..!"
"என்ன விஷயமா என்னை பார்க்கணும்..?"
என்னவோ அவன் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை.. நேரடியாக பேச வேண்டிய விஷயத்தை முடித்துக் கொண்டு அவனை அங்கிருந்து அனுப்பி விடநினைத்தாள்..
"வேறென்ன விஷயம்.. உன்கிட்ட கொஞ்சி குலாவறதுக்காகவோ இல்ல பழைய உறவை புதுப்பிக்கறதுக்காகவோ நான் இங்க வரல..! ஒரு முக்கியமான விஷயமா பேசத்தான் வந்தேன்.."
"அதுதான் என்ன விஷயம்ன்னு கேட்கறேன்.. நேரத்தை வீணாக்காம கொஞ்சம் சீக்கிரம் விஷயத்தை சொல்றீங்களா..? நான் வீட்டுக்கு போகணும்..!"
சுப்ரியாவின் சுருக்கென்ற பதில் ராஜேஷுக்கு சற்று அதிர்ச்சியை தந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாது..
"இந்த விவாகரத்து பத்திரத்தில் ஒரு கையெழுத்து போடு.." என அந்த சிமெண்ட் இருக்கையில் விவாகரத்து பத்திரத்தை தூக்கி போட்டவன்..
"மனமொத்த பிரிவு.. தேவையில்லாம நமக்குள்ள எந்த ரசாபாசமும் வேண்டாம்.. கையெழுத்து போட்டு விவாகரத்து வந்ததும் நீ உன் வழிய பார்த்து போயிட்டே இரு.. நான் என் வழிய பாத்துக்கறேன்.. அம்மா எனக்காக பொண்ணு பாத்தாச்சு.. 40 லட்ச ரூபா பெருமானமுள்ள வீட்டை வரதட்சணையா தர தயாராக இருக்காங்களாம்.. இதுல அண்ணிக்குமே கொஞ்சம் வயித்தெரிச்சல் தான்.. இந்த காலத்துல இரண்டாங் கல்யாணமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல போலிருக்கு.. பொண்ணு வீட்ல எவ்வளவு போட்டி.. எந்த காலத்திலும் ஆம்பளைங்களுக்கு ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்யுது.." அவன் ஆணவச் சிரிப்பில் சுப்ரியாவின் மனம் திகுதிகுவென பற்றி எரிந்தது..
அவசரமாக அந்த விவாகரத்து விண்ணப்பத்தை எடுத்து கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டினாள்..
"பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் உன்கிட்ட இருந்து கையெழுத்து கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை..! பிராண நாதா.. கண் கண்ட கணவான்னு கால பிடிச்சுக்கிட்டு கெஞ்சுவேன்னு நினைச்சேன்.. இப்படி கையெழுத்து போட்டு நீட்டுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்குனா நிச்சயமா உன் பின்னாடி யாரோ இல்லை எதுவோ இருக்கணும்.."
"என்ன ஏதாவது தொழில் பண்றியா..?" தாடையை சொரிந்தபடி அவளை குரூரமாய் ஏறிட்டான்..
சுப்ரியா விலுக்கென நிமிர்ந்து அவனை நெருப்பாய் முறைக்க..
"ஐயோ நான் ஒன்னும் தப்பா கேட்கலைமா.. சுயதொழில் ஏதாவது பண்றியா..? சாப்பாட்டுக்கு என்ன பண்றேன்னு கேட்க வந்தேன்.. ஏன்னா இந்த நோயை வச்சுக்கிட்டு வேற எதுவும் பண்ண முடியாதே..!" பட்டவர்த்தனமாக அவனது இன்னொரு வக்கிர முகம் தெளிவாக புலப்பட இப்படி ஒருத்தனையா காதலித்தேன் என்று நொந்து போனாள் சுப்ரியா..
"என்ன ஆனாலும் சரி எப்பவும் உன் கூட நான் இருப்பேன்..!" கையைப் பிடித்துக் கொண்டு அன்று சொன்ன அக்மார்க் பொய்கள் நினைவில் வந்து போயின..
"கையெழுத்து போட்டு கொடுத்தாச்சு நீங்க கிளம்பலாம்.." என விண்ணப்பத்தை அவனிடம் நீட்டினாள்..
அதை விரல் நுனியால் வாங்கி ஒரு கவரில் போட்டுக் கொண்டான்..
"இருமா ஏன் விரட்டுற.. இது ஒன்னும் உன் வீடு இல்ல.. ஹாஸ்பிடல்.. பப்ளிக் ப்ராப்பர்ட்டி.. இங்கே யார் வேணாலும் நிக்கலாம்.. இதோ அங்க உட்காரக் கூட செய்யலாம்.. ஆனா உன் பக்கத்துல உட்கார எனக்கு விரும்பல.. நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே.. இப்ப நீ எங்க தங்கி இருக்க..? ஏதோ ஒரு ஆம்பளை கூட ஒண்ணா இருக்கிறதா கேள்விப்பட்டேன்..?
"நான் எங்க தங்கி இருக்கேன். என்ன செய்யறேன் இதெல்லாம் உங்களுக்கு அனாவசிய கேள்வி..! நான் வேண்டாம்னு முடிவு செஞ்ச பிறகு பெருசா என் மேல என்ன அக்கறை உங்களுக்கு..?"
"அடடா உன் மேல எனக்கென்ன அக்கறை..? இந்த பக்கம் நான் வேண்டாம்னு சொன்னதும் அந்த பக்கம் வசதியா ஒருத்தனை பிடிச்சிட்டியே அதைத்தான் எப்படின்னு கேக்கறேன்.. ஆனா உன்னை சொல்லியும் குத்தமில்ல.. கொஞ்சம் அழகா இருந்தா போதும் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு வந்துடுறானுங்க..!"
"எல்லாரும் உங்கள மாதிரி இல்ல.. தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்புறீங்களா ப்ளீஸ்..!" சுப்ரியா உச்சஸ்தானியில் கத்தினாள்..
"இதோ போயிடறேன்மா..! ஆனா பாவம் உன்கிட்ட புதுசா சிக்கி இருக்கிறவன கொஞ்சம் பாதுகாப்பா இருக்க சொல்லு.. கண்ட நோயும் வந்து அல்பாயுசுல போயிடப் போறான்.."
முன்பை போல் அழுகை வெடிக்கவில்லை.. தன்னை காயப்படுத்துவதற்காகவே இப்படி பேசுகிறான் என தெரிகிறது..
அவனை கன்னங் கன்னமாய் அறைய கைகள் பரபரத்தாலும்.. தன் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சுப்ரியா அங்கிருந்து எழுந்து நடக்க..
"ஒரு நிமிஷம்..! கோர்ட்ல ஜீவனாம்சம் வேணுமான்னு கேப்பாங்க என்ன சொல்ல போற..?" அவன் கேள்வியில் திரும்பி நின்றாள்..
"இந்த காலத்துலதான் பொம்பளைங்களுக்கு விவாகரத்து ஆனாலும் வாழ்க்கை முழுக்க வசதியா வாழ கவர்மெண்ட்டே ஒரு வழி பண்ணி தந்துடுதே..! அதான் புருஷன் ரத்தத்தை அப்படியே உறிஞ்சி பொம்பளைங்களுக்கு தாரை வாக்கறது.. கஷ்டப்பட்டு சம்பாதிக்கறதெல்லாம் ஜீவனாம்சம்ங்கற பேர்ல உங்க தலையில வந்து கொட்டனுங்கிறது விதி.. நீ மட்டும் என்ன விதி விலக்கா..? எப்படித்தான் எந்த கஷ்டமும் இல்லாம உக்காந்து திங்க தோணுதோ..! கல்யாணமானதிலிருந்து எனக்கு பாரமா இருந்த.. இப்ப விவாகரத்துக்கு அப்புறமும் எனக்குத்தான் பாரமா இருக்க போறியா.. காலம் முழுக்க உன்னை நான் தூக்கி சுமக்கணுமா.. இதுல எழவு நோய் வேற..! அதுக்கு வேற எவ்வளவு தண்டம் அழனுமோ.. விவாகரத்து செய்துவிட்டாலும் பீடை விட்டு வெளியே மாட்டேங்குதே..!"
"ச்சீ.. போதும் நிறுத்து.. வாய்க்கு வந்தபடி பேசாதே..! நீயே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. அப்புறம் உன் ஜீவனாம்சம் மண்ணாங்கட்டி மட்டும் எனக்கெதுக்கு.. கடவுள் கொடுத்த கை கால் எனக்கு நல்லாத்தான் இருக்கு.. எனக்கு தேவையானதை என்னால் உழைச்சு சம்பாதிச்சுக்க முடியும்..! உன் கூட இருந்த வரைக்கும் தான் அடிமை வாழ்க்கையெல்லாம்.. இனி சுதந்திரமா சந்தோஷமா இருக்க போறேன்.. சொல்லப்போனா இந்த விவாகரத்து தந்ததுக்கு நான்தான் உனக்கு நன்றி தான் சொல்லணும்..!"
"என்னடி ஓவரா பேசிகிட்டு இருக்க..?"
"செருப்பு பிஞ்சிடும்.. தேவையில்லாம பிரச்சனை பண்ணி நீயே உன்னை அசிங்கப்படுத்திக்காத..! என்கிட்ட வம்பு பண்றதா சொல்லி ஊர ஒன்னா கூட்டிடுவேன்.. அப்புறம் லாக்கப்ல கம்பி தான் எண்ணனும்.. நீ வந்த வேலை முடிஞ்சது இல்ல.. மரியாதையா இங்கிருந்து போயிடு.. பொண்டாட்டிய வச்சு வாழ வக்கில்லாத நீயெல்லாம் ஒரு ஆம்பள.. உன் மூஞ்சிய பாத்தாலே குமட்டிக்கிட்டு வருது.."
"ஏய்.. நீயே சீக்கு வந்த கழுதை..!"
"ஏய்.. ச்சீ..போடா..!"
சுப்ரியா இவ்வளவு பேசுவாள் என்று எதிர்பாராத ராஜேஷ் கண்கள் கனன்று கொதித்து போய் நின்றிருக்க.. வெகு அலட்சியமாய் அவனை கடந்து போய் இன்னொரு பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டாள் அவள்..
ஆங்காரத்துடன் அவளை முறைத்தபடி அங்கே நின்றிருந்தவன் மீண்டும் அவளிடம் வந்தான்..
"அதான் என்னை வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டியே.. அப்புறம் நான் கழுத்துல கட்டுன தாலி மட்டும் எதுக்குடி உனக்கு..! மொத்தமா கொடி குண்டு மணின்னு சேர்த்து அஞ்சு பவுன்.. அப்படியே அபேஸ் பண்ணி அடகு கடையில் கொண்டு போய் வித்து சொகுசா செலவு பண்ணலாம்னு பாத்தியோ..! என் கௌரவத்துக்காக காசு செலவழிச்சு பண்ணி போட்ட தாலி.. வெக்கம் மானம் சூடு, சொரணை இருக்கிறவளா இருந்தா மரியாதையா அதை கழட்டி கொடு.." என்று நின்றவனை அருவருப்பாக ஒரு பார்வை பார்த்தாள் சுப்ரியா..
"நீ என்னடா கேட்கறது.. நீயே வேண்டாம்ன்னு முடிவெடுத்த பிறகு இது மட்டும் எனக்கெதுக்கு.. தங்கமா இழைச்சு போட்டாலும் என்னை பொறுத்த வரைக்கும் இது கழுத்தை சுத்தின பாம்பு தான்.. இந்தா பொறுக்கிட்டு போ..!" தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசினாள்..
தாலி சென்டிமென்ட் கொஞ்சம் வேலைக்காகும்.. அவளை அழ வைக்கலாமென நினைத்திருந்த ராஜேஷுக்கு மீண்டும் ஏமாற்றம்.. முகத்தில் சடாரென மோதி கையில் விழுந்த தாலியை அதிர்ச்சியாக பார்த்தவன் பற்களை கடித்து சுப்ரியாவின் மீது ஒரு ஆவேச பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்..
அவன் சென்ற பிறகு கண்களுக்குள் ஒளித்து வைத்திருந்த கண்ணீர் துளி துளியாய் சிதறியது..
தன் மீது அக்கறையில்லை பாசம் இல்லை சரி தன் வயிற்றில் வளரும் குழந்தை.. அவன் உதிரமல்லவா.. ஒரு வார்த்தை கூட அந்த குழந்தையை பற்றி விசாரிக்கவில்லையே..!
அது சரி.. சராசரி மனுஷ ஜென்மமாய் இருந்திருந்தால் ஒருவேளை அந்த பாசம் இருந்திருக்குமோ என்னவோ.. கர்ப்பமாய் இருப்பதை சொன்னதும் அவசரமாக ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து முதல் மாதம் முதல் பிரசவ கால செலவு வரை கணக்கு எழுதி வைத்தவன் அல்லவா இவன்..
"சீமந்தம் பிரசவம் பேறுகாலம்.. நியாயமா இதையெல்லாம் உங்க அம்மா வீட்ல தான் பார்க்கணும்.. ஒருமுறை ஃபோன் எடுத்து பேசி பார்க்கறியா.. யார் கண்டது பொண்ணு மாசமாய் இருக்கிற சந்தோஷத்துல உன்னை அவங்க ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் எடுத்து செய்ய வாய்ப்பிருக்குதே.. பேரனோ பேத்தியோ வரப்போற சந்தோஷத்துல எல்லாத்தையும் மறந்துட்டு ஓடி வந்தாலும் வரலாம் இல்லையா..! ஃபோன் பண்ணி பாரேன்டி" என்று தினமும் அவன் உந்தி தள்ளியதில்.. அழைப்பெடுக்க பயந்து..
"ஃபோன் பண்ணி பாத்துட்டேன் அவங்க இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காங்க.." என்று சொல்ல அன்று முழுதும் அவளை கரித்துக் கொட்டினான்..
"சரியான பிச்சைக்கார குடும்பத்துல பொண்ணு எடுத்துட்டு நான் படுற பாடு இருக்கே.. எனக்கொன்னும் இல்ல.. ஆம்பளையா எல்லாத்தையும் முன்ன நின்னு என்னால குறையில்லாம செய்ய முடியும்.. ஆனா சொந்தக்காரங்களும் அக்கம் பக்கத்து ஆளுங்களும் கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல..! அம்மா பாவம் தினமும் இதையே நினைச்சு நினைச்சு உருகறாங்க.. எல்லாம் சேர்த்து லட்ச ரூபாய்க்கு மேல செலவாகிடும் போலிருக்கே.. குடும்ப செலவையும் பார்க்கணுமே.. வட்டிக்கு கடன் வாங்க முடியாது.. நீ ஒன்னு பண்ணு.. காதுல இருக்குற கம்மலையும் கையில இருக்கற நாலு வளையலையும் கழட்டி கொடு.. குறைந்தபட்சம் உன் பொறந்த வீட்டு சீரா அதையாவது பயன்படுத்திக்கலாம்..!"
"என்ன பாக்கற..! கம்பெனியில லோன் அப்ளை பண்ணி இருக்கேன் வந்ததும் எல்லாத்தையும் மீட்டு தந்துடுவேன்.. அதான் அஞ்சு பவுன்ல கழுத்துல தொங்க தொங்க தாலி பண்ணி போட்டிருக்கேனே..! அது ஏன் காசுதானே.. உன் வீட்டு நகைய கழட்டி தர மட்டும் இப்படி யோசிக்கற.. நாளைக்கு 500 ரூபா தரேன் போய் கவரிங் வளையும் கம்மலும் வாங்கி போட்டுக்க..! தங்கம் மாதிரியே இருக்கட்டும் இல்லன்னா மானம் போகும்.."
எங்கேயோ ஆரம்பித்த நினைவுகள் ஏதேதோ எண்ணங்களோடு முடிச்சிட்டு சம்பந்தமில்லாத இடத்தில் முட்டி மோதி நிற்க..
"என்னங்க..?" ஏங்க.. குரலில் தெளிந்து அவனைப் பார்த்தாள்.
அடடா அடிக்கடி கனவுலகத்திற்கு போயிடறீங்க.. என்றபடி அவள் அமர்ந்திருந்த இருக்கையில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான் தர்மன்..
"நான் ஒன்னு கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க..! இப்ப வந்து உங்க கிட்ட பேசினது உங்க ஹஸ்பண்ட் தானே..?"
எச்சில் விழுங்கிக் கொண்டு அவனை ஏறிட்டாள்..
"எக்ஸ் ஹஸ்பண்ட்.. இனி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.."
தர்மனின் முகம் மாறியது..
"விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டு போயிட்டார்.. தாலிய கழட்டி அவர் மூஞ்சில வீசியெறிஞ்சிட்டேன்.."
தர்மனின் உள்ளம் அவளுக்காக பரிதாபப்பட்டது..
"ஆனா ஏன்ங்க..? அந்த தப்பான ரிப்போர்ட்னால வந்து விளைவா இதெல்லாம்..!"
"எனக்கு எச்ஐவி இருக்குதாம்.. என்னை சகிச்சுக்கிட்டு அவரால வாழ முடியாதாம் அருவருப்பா இருக்குதாம்.. சமூகம் அவங்க குடும்பத்தையே தப்பா பேசுமாம்.. கௌரவம் பாதிக்கப்படுமாம்.."
"ஆனா உங்களுக்கு தான் நெகட்டிவ் வந்துருச்சே.. இந்த ரிபோர்ட்டை அவர் கிட்ட காட்டி இருக்கலாமே..?"
சுப்ரியா விரக்தியாக சிரித்தாள்..
"இந்த நோயெல்லாம் ஒரு சாக்குதாங்க.. அவர் என்னை தள்ளி வைக்கனும்னு ஏற்கனவே முடிவு பண்ணிட்டார் போலிருக்கு.. அதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்திருக்கார்.. காரணம் கிடைச்சிருச்சு.. மறுபடியும் டெஸ்ட் எடுத்தது என்னோட திருப்திக்காக தானே தவிர அவர் கூட சேர்ந்து வாழ இல்லை..! புருஷன் பொண்டாட்டிகுள்ள நம்பிக்கை மனசுல இருக்கணும்.. இந்த காகிதத்தில் என்னங்க இருக்கு..! சரி அப்படியே ஏதோ ஒரு வழியில் எனக்கு ஹச் ஐ வி தோற்று ஏற்பட்டுருந்தா கூட என் மேல் அவருக்கு உண்மையான அன்பு இருந்திருந்தா ஒரு கணவனா அவர் என்னை தாங்கி பிடிச்சிருக்கணும்.. உடைஞ்சு போயிருக்கிற இந்த நேரத்துல தைரியம் கொடுத்து என் கூடவே இருந்திருக்கணும்.. இப்படி பழி சுமத்தி தள்ளி வச்சிருக்க கூடாது.. அப்படிப்பட்ட ஆள்கிட்ட இந்த ரிப்போர்ட்டை காட்டி எனக்கு எந்த நோயும் இல்லைன்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்னங்க இருக்கு.."
"நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான்.. இந்த மாதிரியான நேரத்துல தான் மனுஷங்களோட உண்மையான முகம் என்னென்னு கடவுள் காட்டிக் கொடுக்கறார்.. சொல்லப்போனா இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உங்க கணவரைப் பற்றி முழுசா தெரிஞ்சதுக்காக நீங்க கடவுளுக்கு நன்றி தான் சொல்லணும்.."
மீண்டும் அவளிடம் கசந்த சிரிப்பு..
"அந்த ஆளோட உண்மை முகம் கல்யாணமான அடுத்த நாளே எனக்கு தெரிஞ்சு போச்சு.. என்னால முடிஞ்ச அளவுக்கு அனுசரிச்சு வாழ முயற்சி பண்ணினேன்.. இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.. அடிச்சு கொடுமை படுத்துற ஆம்பளைங்களுக்கு மத்தியில அவர் எவ்வளவோ தேவலாம்னு என் மனச தேத்திக்கிட்டேன். கடைசில அவனால உருவான இந்த குழந்தை மேலயே ஒரு பொட்டு பாசம் இல்லாம போனதுதான் என்னால ஜீரணிக்கவே முடியல.. கேட்டா ஒரு ஆம்பளையால லட்சம் குழந்தைகளை உருவாக்க முடியுமாம்.. அவனை நிரந்தரமா பிரியறதுக்கு எப்படி ஒரு சந்தர்ப்பத்தை அமைச்சு கொடுத்ததுக்காக வேணும்னா கடவுளுக்கு நன்றி சொல்லலாம்..!" கண்ணீரைத் துடைத்துக் கொள்ள..
தர்மன் முகம் இறுகி அமைதியாக அமர்ந்திருந்தான்..
சில கணங்கள் மௌனத்திற்கு பின்..
"தர்மா ஆஆ.. ரூம் நம்பர் 22 பேஷன்ட் உன்னை கூப்பிடுறாங்க.." என்றொரு குரல் பின்னிருந்து ஒலிக்க..
"இதோ வந்துட்டேன்" என்றவன்..
"சரி வீட்டுக்கு போறீங்களா..! வாங்க ஆட்டோ பிடிச்சு தரேன்.." தர்மன் முன்னால் நடக்க அவனை பின் தொடர்ந்தாள் சுப்ரியா..
"பரவாயில்லை இருக்கட்டும் நானே ஆட்டோ பிடிச்சிக்கறேன்.. உங்களுக்கு வேலை வந்துட்டது போலிருக்கே நீங்க போங்க..! நான் பாத்துக்கறேன்.."
"அட இருங்க ஒரு அஞ்சு நிமிஷத்துல ஒன்னும் ஆகிடாது.." என்றவன் வேகமாக முன்னே சென்று அந்த ஆட்டோ ஸ்டாண்டில்.. "டேய் முத்து.." என்றதும்..
"தர்மா" என வேகமாக வந்தான் ஒருவன்..
"இவங்கள வீட்ல இறக்கி விட்டுடு..!" என்று தன் பையிலிருந்து ரூபாயை எடுத்து அவன் பாக்கெட்டில் வைக்க.. அந்த ஆட்டோக்காரர் ஏதோ கேட்க இவன் அவர் கன்னத்தில் செல்லமாக அடித்து.. சிரித்தபடி ஏதோ சொல்ல.. சற்று தொலைவில் நின்றிருந்த சுப்ரியாவின் காதுகளில் எதுவும் விழவில்லை..
தர்மனிடம் பேசிவிட்டு ஆட்டோவை நோக்கி வந்தார் முத்து..
"ஏறுங்கக்கா..!" என்று ஆட்டோவை உயிர்பிக்க.. சுப்ரியாவின் பக்கத்தில் வந்தான் தர்மன்..
"ஹவுஸ் ஓனர் அக்காகிட்ட பெருசா பேச்சு கொடுக்காதீங்க.. அப்படியே ஏதாவது கேட்டா சிரிச்சுக்கிட்டே மேல போயிடுங்க.. அவங்க கிட்ட நான் பேசிக்கறேன்.." என்றதும் சரி என தலையசைத்துவிட்டு அவள் ஆட்டோவில் ஏற போக..
ஒரு நிமிஷம் என்றதும்.. மீண்டும் அதே நிலையில் நின்று அவனை ஏறிட்டாள் சுப்ரியா..
தலையை கோதியபடி ஏதோ சொல்ல தயங்கி நின்றவன்..
"இ.. இங்க பாருங்க.. நடந்ததையே நினைச்சு வருத்தப்படாதீங்க.. நீங்க கண்ணீர் விட்டு அழற அளவுக்கு அந்த ஆள் அவ்வளவு வொர்த் இல்லை.. சனியன் போய் தொலைஞ்சதுன்னு நிம்மதியா இருங்க.. உங்க வயித்துல இருக்கும் குழந்தையை நினைச்சு பாருங்க.. குழந்தை பாக்கியம் இல்லாத எத்தனையோ பேருக்கு மத்தியில் கடவுள் உங்களுக்கு அருமையான பிள்ளை செல்வத்தை கொடுத்திருக்கார்.. அதை நினைச்சு சந்தோஷப்படுங்க.. சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன்..! இப்போ ஏறுங்க.." என்று ஆட்டோவை காட்ட.. தர்மனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக ஆட்டோவில் ஏறிக்கொண்டாள் சுப்ரியா..
வர்றேன்.. என்ற தலையசைக்க அவனும் லேசாக சிரித்து தள்ளி நின்றான்..
ஆட்டோ புறப்பட்டது.. ஏதோ ஒரு உந்துதலில் ஆட்டோவிலிருந்து தலையை நீட்டி தர்மனை பார்க்க.. அவனும் கூட அங்கிருந்து நகராமல் நின்றிருந்தான்.. அவள் முகம் கண்டதும் மலர்ந்து சிரித்தான்..
தொடரும்..

Last edited: